PTM 17.61

மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்

2773 மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி *
என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை *
கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை *
மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற்
பொன்னை * மரதகத்தைப் புட்குழியெம்போரேற்றை *
மன்னுமரங்கத்துஎம்மாமணியை * -
2773 mā malarmel aṉṉam tuyilum aṇi nīr vayal āli *
ĕṉṉuṭaiya iṉ amutai ĕvvul̤ pĕru malaiyai *
kaṉṉi matil̤ cūzh kaṇamaṅkaik kaṟpakattai *
miṉṉai, iru cuṭarai, vĕl̤l̤aṟaiyul̤ kal aṟaimel
pŏṉṉai * maratakattai puṭkuzhi ĕm por eṟṟai *
maṉṉum araṅkattu ĕm mā maṇiyai * 63

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2773. my sweet nectar and the god of Thiruvayalāli (Thiruvāli) surrounded with beautiful water where swans sleep. Strong as a mountain, he is the god of Thiruyevvul, and generous as the karpagam tree, and the god of Thirukkannamangai surrounded with strong forts. He is lightning, the bright sun and moon and the god of Thiruvellarai. As precious as gold, he is the god of Thirukkallarai. Gold and emerald, a fighting bull, he is the god of Thiruputkuzhi. He, the god of everlasting Srirangam shines like a precious diamond. (63)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மலர் மேல் சிறந்த தாமரைப் பூக்களின் மேல்; அன்னம் துயிலும் அன்னப்பறவைகள் உறங்கும்; அணி நீர் அழகிய நீர் நிறைந்த; வயல் வயல்களை உடைய; ஆலி திருவாலியில் இருக்கும்; என்னுடைய என்னுடைய; இன் அமுதை இனிய அமுதம் போன்றவனும்; எவ்வுள் பெரு திருவெவ்வுளுரில் பெரிய; மலையை மலை போன்றவனும்; கன்னி மதிள் சூழ் மதில்களாலே சூழப்பட்ட; கணமங்கை திருக்கண்ணமங்கையில்; கற்பகத்தை கற்பக விருக்ஷம் போல் இருப்பவனும்; மின்னை மின்னலைஒத்த ஒளியுள்ளவனாயிருப்பவனும்; இரு சூரிய சந்திரன் போன்ற ஒளியுள்ள; சுடரை சக்கரத்தை உடையவனும்; வெள்ளறையுள் திருவெள்ளறையில்; கல் அறைமேல் கருங்கல் மயமான ஸந்நிதியில்; பொன்னை பொன் போன்ற ஒளியுடனும்; மரதகத்தை மரகத பச்சை போன்ற வடிவுடன் இருப்பவனும்; புட்குழி திருப்புட் குழியிலே இருக்கும்; எம் போர் ஏற்றை போர் வேந்தன் போன்றவனும்; அரங்கத்து திருவரங்கத்தில்; மன்னும் இருப்பவனான எம்பெருமான்; எம் மா நீலமணிபோன்று; மணியை விளங்குகிறவனை
māmalar mĕl annam thuyilum swans sleeping on distinguished lotus flowers; aṇi nīr vayal āli thiruvāli, the divine abode, which has (agricultural) fields, full of water; ennudaiya innamudhai the supreme enjoyer, who is giving me dharṣan (for me to worship); evvul̤ perumalaiyai one who is reclining at thiruvevvul̤ (present day thiruval̤l̤ūr) as if a huge mountain were reclining; kanni madhil̤ sūzh kaṇamangai kaṛpagaththai one who is dwelling mercifully like a kalpaka vruksham (wish-fulfilling divine tree) at thirukkaṇṇamangai which is surrounded by newly built compound wall; minnai one who has periya pirātti (ṣrī mahālakshmi) who is resplendent like lightning; iru sudarai divine disc and divine conch which appear like sūrya (sun) and chandhra (moon); vel̤l̤aṛaiyul̤ at thiruvel̤l̤aṛai; kal aṛai mĕl inside the sannidhi (sanctum sanctorum) made of stones; ponnai shining like gold; maradhagaththai having a greenish form matching emerald; putkuzhi em pŏr ĕṝai dwelling in [the divine abode of] thirupputkuzhi, as my lord and as a bull ready to wage a war; arangaththu mannum residing permanently at thiruvarangam; em māmaṇiyai one who we can handle, like a blue gem