68

Thiru MoozhikkaLam

திருமூழிக்களம்

Thiru MoozhikkaLam

ஸ்ரீ மதுரவேணீ ஸமேத ஸ்ரீ திருமூழிக்களத்தான் ஸ்வாமிநே நமஹ

### Thirumoozhikkulam - About this Place

Thirumoozhikkulam is located about 25 kilometers from Ernakulam and is accessible by numerous buses from Aluva, Angamaly railway station, and Ernakulam. Situated in a serene and picturesque environment, the place is growing into a small town while maintaining its tranquil ambiance. The temple is historically + Read more
கேரளாவில் உள்ள ஆலவாயிலிருந்து இத்தலத்திற்கு எண்ணற்ற பேருந்துகள் செல்கின்றன. எர்ணாகுளத்திலிருந்தும் அங்கமாலி ரயில் நிலையத்திலில் இருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதியுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த இத்தலம் தற்போது ஒரு சிறிய நகருக்கு ஓப்பாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. + Read more
Thayar: Sri MadhuravEni Nāchiyār
Moolavar: Thiru Moozhikkalathān, Sri Sookthi Nātha Perumāl, Appan
Utsavar: Thiru Moozhikkalathān, Lakshmanan
Vimaanam: Soundarya
Pushkarani: Perungulam, Sanga Theertham, Chitrāru
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:00 p.m. to 7:00 p.m.
Search Keyword: Thirumuzhikkalam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 7.1.6

1553 பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! *
முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! *
இனியாய்தொண்டரோம் பருகுஇன்னமுதாய
கனியே! * உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
1553 பனி ஏய் பரங் குன்றின் * பவளத் திரளே *
முனியே * திருமூழிக்களத்து விளக்கே **
இனியாய் தொண்டரோம் * பருகும் இன் அமுது ஆய
கனியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே-6
1553
paNiyEy parangunRin * pavaLath thiraLE *
muniyE * thirumoozhikkaLaththu viLakkE *
iniyāya thondarOm * parugu innamuthAya kaniyE *
unnaikkaNdu kondu uynNdhozhindhEnE * . 7.1.6

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1553. You are a treasure of coral, a sage, you are the light of Thirumuzhikkalam and you stay in the divine hills of Thirpuprithi surrounded with snow. You are a fruit sweet as nectar, and a sweet drink for your devotees. I found you my Lord of Naraiyur and I am saved.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணி ஏய் பனி நிறைந்த; பரங் குன்றின் பெரிய மலையிலிருக்கும்; பவளத் திரளே! பவளத் திரள் போன்றவனே!; முனியே! முனியே!; திருமூழிக்களத்து திருமூழிக்களம் என்னுமிடத்து; விளக்கே! இனியாய்! விளக்கே! இனியவனே!; தொண்டரோம் தொண்டர்களான நாங்கள்; பருகு பருகும்படி; இன் அமுதாய இனிமையான அம்ருதம் போன்ற; கனியே! கனியே!; உன்னை உன்னை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; உய்ந்தொழிந்தேனே உய்ந்து போனேனே

TNT 1.10

2061 பொன்னானாய்! பொழிலேழும்காவல்பூண்ட
புகழானாய்! இகழ்வாயதொண்டனேன்நான் *
என்னானாய்! என்னானாய்! என்னலல்லால்
என்னறிவன்ஏழையேன் * உலகமேத்தும்
தென்னானாய்! வடவானாய்! குடபாலானாய்!
குணபாலமதயானாய்! இமையோர்க்குஎன்றும்
முன்னானாய்! * பின்னானார்வணங்கும்சோதி!
திருமூழிக்களத்தானாய்! முதலானாயே! (2)
2061 பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட *
புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் *
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் *
என் அறிவன்-ஏழையேன்? ** உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய் *
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் * பின் ஆனார் வணங்கும் சோதி! *
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!-10
2061
ponnānāy! pozhilEzum kāval pooNda-
pugazhānāy! * igazhvāya thoNdanEn n^ān, *
'ennānāy? ennānāy?' ennal allāl *
ennaRivan EzhaiyEn, ** ulagam Etthum-
thennānāy vadavānāy kudapāl ānāy *
guNapālamathāyināy imaiyOrkku enRum-
munnānāy * pinnānār vaNangum sOthi! *
thirumoozhik kaLatthānāy mudhalāNnāyE! 10

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2061. You, the famous one, guarded the seven worlds and I am your poor devotee. What can I do except prattle on, saying, “What are you? Who are you?” You are the god of the southern, northern, eastern and western lands praised by the whole world, the first among the gods, a bright light worshiped by all. You are the past and the future. You, the origin of all, stay in Thirumuzhikkalam.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகம் ஏத்தும் உலகத்திலுள்ளோர் வணங்கும்; தென் தென் திருமாலிருஞ்சோலையில்; ஆனாய்! ஆனை போல் இருப்பவனே!; வட ஆனாய்! வட திருவேங்கடத்தில் ஆனை போல் இருப்பவனே!; குட பால் ஆனாய்! மேற்கில் ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே!; குணபால கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; மத யானாய்! மதயானை போன்றவவனே!; என்றும் எக்காலத்திலும்; இமையோர்க்கு நித்யஸூரிகளுக்கு; முன் ஆனாய்! காட்சியளிப்பவனே!; பின் ஆனார் அவதாரத்திற்கு பின் வந்தவர்; வணங்கும் சோதி! வணங்க சோதியாக; திருமூழிக்களத்து திருமூழிக்களம் போன்ற; ஆனாய்! கோயில்களில் உள்ளவனே!; முதல் ஆனாயே! முழுமுதற் கடவுளே!; பொன் ஆனாய்! பொன் போன்றவனே!; பொழில் ஏழும் ஸப்தலோகங்களையும்; காவல் பூண்ட காப்பதால் வந்த; புகழ் ஆனாய்! புகழ் உடையவனே!; இகழ்வாய இகழ்ச்சியையே உடைய; தொண்டனேன் தொண்டனான; என் ஆனாய்? என்னுடையவனே!; என்னல் அல்லால் என்று துதிப்பதைத் தவிர; ஏழையேன்? நான் எளியவனான நான்; என் அறிவன் வேறு எதுவும் அறியேன்
then AnAy Oh One who is like an elephant that stands in the beautiful thirumAlirunchOlai mountain; ulagam Eththum which is worthy of praise by one and all in the world!; vada AnAy Oh One who is like an elephant that stands in the thiruvEnkatam in the north!; kuda pAl AnAy Oh One who is like an elephant in the westerly (in sleeping pose in thiruvarangam)!; guNapAla madham yAnAy Oh One who is like a proud elephant (in thirukkaNNapuram)!; imaiyOrkku mun AnAy Oh One who stands in front of nithyasUris (for them to see and enjoy You); enRum at all times!; thirumUzhik kaLaththAnAy Oh One living in thirumUzhikkaLam; pin AnAr vaNangum sOdhi like a luminous entity who could be surrendered to by those living after your incarnations!; mudhal AnAy Oh the cause of the world!; pon AnAy Oh One who is like the gold!; pozhil Ezhum kAval pUNda Oh Onewho is having the fame due to giving divine protection to all the seven worlds!; igazhvu Aya thoNdanEn EzhaiyEn nAn I who am a devotee who is lowliness/scorn personified and who am of unsteady mind (chapalan),; en AnAy en AnAy ennal allAl Other than saying ‘Oh my elephant! Oh my elephant!’ (calling emperumAn so),; en aRivan what else do I know to say?  (Akinchanyam).

PTM 17.69

2781 மூழிக்களத்துவிளக்கினை *
அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை *
நென்னலையின்றினை நாளையை * - நீர்மலைமேல் முன்னவனை
2781 மூழிக்களத்து விளக்கினை *
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை *
நென்னலை இன்றினை நாளையை * நீர்மலைமேல் முன்னவனை 71
moozhik_kaLatthu viLakkinai, *
annavanai āthanoor āNdaLakkum aiyanai, *
nennalai inRinai nāLaiyai, * (71)-neermalaimEl-
munnavanai

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2782. He, the god of the gods, is the light of Thirumuzhikkalam and the god of Thiruvādanur (ādanoor) giving food to all. He is past, present and future, (71) the god of Thiruneermalai.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூழிக்களத்து திருமூழிக்களத்திலிருக்கும்; விளக்கினை விளக்கைப் போன்றவனை; அன்னவனை இப்படிப்பட்டவன் என்று சொல்ல முடியாதவனை; ஆதனூர் திரு ஆதனூரில்; ஆண்டு அளக்கும் சகல காலங்களுக்கும்; ஐயனை நிர்வாஹனனான ஐயனை; நென்னலை இன்றினை நேற்று இன்று; நாளையை நாளை என்னும் முக்காலத்துக்கும் தலைவனான; நீர் மலை மேல் முன்னவனை திருநீர்மலையில் இருப்பவனை
mUzhikkaLaththu viLakkinai one who is shining at thirumUzhikkaLam [a divine abode in kEraLa]; annavanai one who cannot be defined that he is like this; AdhanUr at thiruvAdhanUr; ANdu aLakkum aiyanai one who controls passing of time; nennalai inRinai nALaiyai one who is the controller of yesterday, today and tomorrow; nIrmalai mEl munnavanai one who has taken residence at thirunIrmalai

TVM 9.7.1

3739 எங்கானலகங்கழிவாய் இரைத்தேர்ந்திங்கினிதமரும் *
செங்காலமடநாராய்! திருமூழிக்களத்துறையும் *
கொங்கார்பூந்துழாய்முடி எங்குடக்கூத்தர்க்கு என் தூதாய் *
நுங்கால்கள்என்தலைமேல் கெழுமீரோநுமரோடே. (2)
3739 ## எம் கானல் அகம் கழிவாய் * இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் *
செங்கால மட நாராய்! * திருமூழிக்களத்து உறையும் **
கொங்கு ஆர் பூந் துழாய் முடி * எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் *
நும் கால்கள் என் தலைமேல் * கெழுமீரோ நுமரோடே (1)
3739. ##
engānal akangazivāy * irai thErndhiNGku inithamarum *
chengāla matanNārāy! * thirumoozikkaLaththu uRaiyum *
kongār poonNthuzāymuti * en_kutakkooththarku en_dhoothāy *
nungālkaL en_dhalaimEl * kezumeerO numarOtE. (2) 9.7.1

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh red-legged stork, who gracefully wanders in our garden canal in search of food, I ask you to undertake an errand. Travel to Tirumūḻikkaḷam where my Lord, the majestic pot-dancer, resides. He wears a crown adorned with a garland of honey-studded tuḻaci flowers. Upon your return journey, please adorn my head with your weary legs and those of your companions.

Explanatory Notes

(i) The birds, ostensibly employed by the Āzhvār to convey his message to the Lord at Tirumūḻikkaḷam, symbolise the great preceptors. This has been clearly brought out in this opening song where the Āzhvār wants the birds to place their legs on his head, which, if taken literally, would not make much sense. The invocation is, therefore, to the illustrious Ācāryas to shed + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் கானல் எங்கள் நெய்தல் நில; அகம் கழிவாய் உப்பங்கழிகளில்; இரைதேர்ந்து இரைதேடி; இங்கு இனிது அமரும் இங்கே பொருந்தி இருக்கும்; செங்கால மட சிவந்த கால்களை உடைய; நாராய்! நாரைகளே!; திருமூழிக்களத்து திருமூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; கொங்கார் தேன் பெருகும்; பூந் துழாய் முடி துளசி மாலை அணிந்தவனான; எம் குடக்கூத்தர்க்கு குடக்கூத்தர்க்கு; என் தூதாய் என் தூதாய்ச் சென்று திரும்பி வந்த; நுமரோடே உன்னைச் சேர்ந்தவர்களோடுங்கூட; நும் எனக்காக வழிநடந்த உங்களுடைய; கால்கள் கால்களை; என் தலைமேல் என் தலை மேல்; கெழுமீரோ சூட்டுங்கள்
ingu in my presence; inidhu with romantic love; amarum residing; sem being reddish as if a decoration for my head; kAl having feet; madam having humility to be ordered to fulfil our desire; nArAy Oh cranes!; thirumUzhikkaLaththu in thirumUzhikkaLam; uRaiyum eternally residing there as ASritha sulabha (easily approachable for devotees); kongu Ar with abundance of honey; pU attractive; thuzhAy mudi wearing divine crown which is decorated with thiruththuzhAy (thuLasi); em kudak kUththarkku one who is greatly enjoyable for us due to his heart-captivating activity of kudak kUththu (dancing with pots); en thUdhAy going as my messenger; numarOdE with your wife and children (who are related to you, as said in -guruvadh guruvargaScha dhrastavya:-); num kAlgaL your divine feet which walked for my sake; en thalai mEl on my head, which is the top most limb, which is the apt target for them; kezhumIr should unite.; numarOdum with those who are related to you and who follow your heart; piriyAdhE without separating

TVM 9.7.2

3740 நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய் *
அமர்காதல்குருகி னங்காள்! அணிமூழிக்களத்துறையும் *
எமராலும்பழிப்புண்டு இங்கென்? தம்மாலிழிப்புண்டு *
தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே.
3740 நுமரோடும் பிரியாதே * நீரும் நும் சேவலுமாய் *
அமர் காதல் குருகு இனங்காள்! * அணி மூழிக்களத்து உறையும் **
எமராலும் பழிப்புண்டு * இங்கு என் தம்மால் இழிப்புண்டு? *
தமரோடு அங்கு உறைவார்க்குத் * தக்கிலமே? கேளீரே (2)
3740
numarOtum piriyāthE * neerum num chEvalumāy *
amar_kādhal kurukinangāL! aNi moozikkaLaththu uRaiyum *
emarālum pazippundu * iNGku en_thammāl izippundu *
thamarOtaNGku uRaivārkkuth * thakkilamE!kELeerE. 9.7.2

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh herds of herons, moving gracefully with your inseparable mates, I urge you to go and seek counsel from the Lord residing in Tirumūḻikkajam. Inquire whether I am despised by Him, and thus accused by my own kin. If I am deemed unworthy of companionship with His devotees, then let my life end, for there is no purpose in prolonging my agony.

Explanatory Notes

(i) The Lord stays in Tirumūḻikkaḷam, attended upon by a large number of devotees and it is but natural that the Nāyakī also longs to be in such good company. Her emissaries, the birds, are also merry, enjoying connubial bliss, and moving about in their flocks and it is only appropriate that the Nāyakī invokes their aid to cure her of her solitude and restore her to the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நுமரோடும் உங்களினத்தார்களை விட்டு; பிரியாதே பிரியாமல்; நீரும் நும் சேவலுமாய் நீங்கள் இருவருமாய்; அமர் காதல் கூடிக் களித்து வாழும்; குருகு இனங்காள்! குருகு இனங்களே!; அணி மூழிக்களத்து அழகிய திருமூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; எமராலும் எம்மைச் சேர்ந்தவர்களாலும்; பழிப்புண்டு பழிக்கப்பட்டு; இங்கு என் தம்மால் இங்கு இப்படி; இழிப்புண்டு இகழப்பட்டு இருப்பதில் என்ன பயன்?; தமரோடு தம்முடைய உறவினர்களுடன்; அங்கு உறைவார்க்கு அங்கு வாழ்வதற்கு; தக்கிலமே! அவருடைய அநுபவம் நமக்குத் தகாதா; கேளீரே என்று கேளுங்கள்
nIrum you (who are obedient towards your spouses); num sEvalum your spouses who are obedient towards you; amar kAdhal having love to live together; kurugu inangAL Oh groups of herons!; aNi attractive; mUzhikkaLaththu in thirumUzhikkaLam; uRaiyum eternally residing; thammAl by him; izhippuNdu being abandoned after momentary union; emarAlum by those who are related to me; pazhippuNdu being insulted; ingen what is the use of the presence here!; thamarOdu with the distinguished associates; angu there; uRaivArkku for him who is eternally residing; thakkilamE would we not be acceptable?; kELIrE You ask him.; thada vast; punalvAy in the pond

TVM 9.7.3

3741 தக்கிலமே? கேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும் *
கொக்கினங்காள்! குருகினங்காள்! குளிர்மூழிக்களத்துறையும் *
செக்கமலத்தலர்போலும் கண்கைகால்செங்கனிவாய் *
அக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே.
3741 தக்கிலமே கேளீர்கள்! * தடம் புனல்வாய் இரை தேரும் *
கொக்கு இனங்காள்! குருகு இனங்காள்! * குளிர்மூழிக்களத்து உறையும் **
செக்கமலத்து அலர் போலும் * கண் கை கால் செங்கனி வாய் *
அக் கமலத்து இலை போலும் * திருமேனி அடிகளுக்கே (3)
3741
thakkilamE kELeergaL * thatampunalvāy iraithErum *
kokkinangāL!kurukinangāL! * kuLir moozikkaLaththu uRaiyum *
chekkamalaththalar pOlum * kaNkaikāl chenganivāy *
akkamalaththilaipOlum * thirumEni adigaLukkE. 9.7.3

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh flocks of cranes and herons, seeking your food in these big ponds, better go to cool Mūḻikkaḷam. Ask the Lord, whose eyes, hands, and feet are like the red lotus, whose lips resemble a red fruit, and whose complexion matches the lotus leaf, whether I won't be a suitable match for Him.

Explanatory Notes

(i) In each of the four decads, where the Nāyakī despatched messages to her Lord, there is one song, considered to be the very cream of that decad. And now, here is the topical song of this decad. Apprehending that the Lord is totally absorbed in the sweet company of the devotees surrounding Him at Tirumūḻikkaḷam. forgetting all about the Nāyakī, she now wants these birds + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடம் புனல்வாய் பெரிய தடாகத்திலே; இரை தேரும் இரை தேடும்; கொக்கினங்காள்! கொக்கினங்களே!; குருகுஇனங்காள்! குருகு இனங்களே!; குளிர் குளிர்ந்த; மூழிக்களத்து திருமூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; செக்கமலத்து சிவந்த தாமரை; அலர் போலும் மலர் போன்ற; கண் கை கால் கண்கள் கைகள் கால்கள்; செங் கனி வாய் சிவந்த கனி போன்ற அதரம்; அக்கமலத்து அந்தத் தாமரையின்; இலை போலும் இலையை ஒத்த; திருமேனி திருமேனியையும் உடையவரான; அடிகளுக்கே எம்பெருமானுக்கு; தக்கிலமே? நாங்கள் தகுந்தவர்கள் இல்லயா? என்று; கேளீர்கள் கேளுங்கள்
iraithErum seeking your prey; kokku inangAL kurugu inangAL Oh groups of cranes and herons!; kuLir invigorating; mUzhikkaLaththu in thirumUzhikkaLam; uRaiyum eternally residing; sem reddish; kamalaththu lotus-; alarpOlum like a blossomed flower; kaN eyes (which make one say -jithanthE-); kai hands (which embrace as prayed by -apyEsha prushtE mama hasthapadhmam karishyathi #); kAl divine feet (which are surrendered unto as said in -charaNadhvandhvam vrajAmi #); sem kani vAy divine lips (which pacify by saying -mASucha:-) which are like reddish fruit; akkamalaththu contrasting [the complexion of] such lotus flower; ilai pOlum dark like a dense leaf; thirumEni having divine form; adiugaLukku the one who became my lord by showing such beautiful form; thakkilamE are we not qualified (to enjoy that beauty); kELIrgaL you ask.; aNi having an attractive form; mugilgAL Oh clouds!

TVM 9.7.4

3742 திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய் *
திருமூழிக்களமென்னும் செழுநகர்வாயணிமுகில்காள்! *
திருமேனியவட்கருளீர் என்றக்கால் * உம்மைத்தன்
திருமேனியொளியகற்றித் தெளிவிசும்புகடியுமே?
3742 திருமேனி அடிகளுக்குத் * தீவினையேன் விடு தூதாய் *
திருமூழிக்களம் என்னும் * செழு நகர்வாய் அணி முகில்காள் **
திருமேனி அவட்கு அருளீர் * என்றக்கால் உம்மைத் தன் *
திருமேனி ஒளி அகற்றித் * தெளி விசும்பு கடியுமே? (4)
3742
thirumEni adigaLukku * theevinaiyEn vituthoothāy *
thirumoozikkaLam ennum * chezunNakarvāy aNimukilkāL *
thirumEni avatkaruLeer * enRakkāl ummaiththan *
thirumEni oLiyakaRRith * theLivichumpu kadiyumE? 9.7.4

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh pretty clouds, if you were to run an errand for this sinner and speak to my Master of grand form, who dwells in holy Tirumūḻikkaḷam, telling Him to graciously offer His presence to me, do you fear He would punish you, put you off color, and push you out of the clear sky?

Explanatory Notes

(i) My Master of form grand: His auspicious traits and wondrous deeds apart, the Lord’s enchanting Form is such as to enthral one and all, including the ungodly. Duryodhan [Duryodhana] and his men were studiously determined not to get up from their seats and extend any courtesy whatsoever to Lord Kṛṣṇa when He arrived at the royal court, as the errand boy of the Pāṇḍavās. + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அணி முகில்காள்! அழகிய மேகங்களே!; திரு மூழிக்களம் என்னும் திரு மூழிக்களம் என்னும்; செழு நகர் வாய் புகழ் பெற்ற நகரத்தில் இருக்கும்; திருமேனி சிறந்த திருமேனியை உடைய; அடிகளுக்கு ஸ்வாமிக்கு; தீவினையேன் பாவியான அடியேன்; விடு தூதாய் விடுகிற தூதாய்ச் சென்று; அவட்கு பராங்குச நாயகிக்கு; திருமேனி உமது திரு மேனியை; அருளீர் கொடுத்தருள்வீர் என்று; என்றக்கால் ஒரு வார்த்தை சொன்னால்; உம்மைத் தன் இவ்வுபகாரம் செய்கிற உங்களை; திருமேனி உங்கள் திருமேனியிலுள்ள; ஒளி அகற்றி ஒளியை நீக்கி; தெளி விசும்பு ஆகாசத்திலிருந்து உங்களை; கடியுமே அகற்றுவானோ என்று எண்ணாதீர்
thirumUzhikkaLam ennum thirumUzhikkaLam which is popularly known as said in thirunedundhANdagam 10 -pinnAnAr vaNangum sOdhi #; sezhu nagarvAy residing in distinguished abode; thirumEni adigaLukku one whose form reveals his lordship over everyone as said in -rUpamEva asya EthanmahimAnam vyAchashtE-; thIvinaiyEn I who am having cruel sin (to have a relationship with him, yet being unable to enjoy him); vidu sending; thUdhAy going as messenger; -avatku for her; thirumEni your perfectly enjoyable divine form; aruLIr mercifully grant her-; enRakkAl when you make a statement; ummai all of you (who spoke for my sake); than thirumEni oLi radiance of his divine form (which he previously gave); agaRRi eliminating it; theLi visumbu kadiyumE will he reject your stay in the distinguished sky [paramapadham]?; theLi visumbu in the pure sky; kadidhu Odi quickly running (as if walking quickly on the ground, showing urge for my sake)

TVM 9.7.5

3743 தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் *
ஒளிமுகில்காள்! திருமூழிக்களத்துறையுமொண்சுடர்க்கு *
தெளிவிசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும் *
துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல்செப்புமினே.
3743 தெளி விசும்பு கடிது ஓடித் தீ * வளைத்து மின் இலகும் *
ஒளி முகில்காள்! * திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு **
தெளி விசும்பு திருநாடாத் * தீவினையேன் மனத்து உறையும் *
துளி வார் கள் குழலார்க்கு * என் தூது உரைத்தல் செப்புமினே (5)
3743
theLivichumpu kadithOtith * theevaLaiththu minnilagum *
oLimukilkāL! * thirumoozikkaLaththuRaiyum oNchutarkku *
theLivichumpu thirunNātāth * theevinaiyEn manaththuRaiyum *
thuLivārgatkuzalārku * en_thoothuraiththal cheppuminE. 9.7.5

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh lovely clouds, racing across the flawless sky, carrying lightning like fiery arcs in your embrace! Will you deliver my message to the resplendent Lord who resides in Tirumūḻikkaḷam? His locks drip with abundant honey, and He dwells in the heart of this sinner, showering affection akin to that bestowed upon the impeccable SriVaikuntam.

Explanatory Notes

(i) Seeing that the clouds were rather diffident of being heard by the Lord, the Nāyakī assures them of positive response by the Lord. The Nāyakī’s confidence stemmed from the fact that the Lord got Himself lodged in her heart with all the affection He bestows on His transcendent abode, called spiritual world.

(ii) The lightning appears in the clouds only when they + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெளி விசும்பு நிர்மலமான ஆகாசத்தில்; கடிது ஓடி விரைந்து பறந்து ஓடிச் சென்று; தீ வளைத்து சக்கரம் போல் வளைந்த அழகிய; மின் இலகும் மின்னல் போல் விளங்கும்; திருமூழிக்களத்து திருமூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; ஒண்சுடைர்க்கு அழகிய ஒளிமயமானவரும்; தெளி விசும்பு பரமபதத்தை; திரு நாடா இருப்பிடமாகக் கொண்டவரும்; தீ வினையேன் பாபியான என்னுடைய; மனத்து மனத்திலே; உறையும் முகம் தோன்றாமல் இருக்கும்; துளி வார் துளிர்த்துப் பெருகும்; கள் குழலார்க்கு தேனின் முடி உடையவர்க்கு; என் தூது உரைத்தல் எனது தூது மொழியை; செப்புமினே சொல்லுங்கள்
thI vaLaiththu like a ring of fire carried around; min ilagum oLi mugilgAL Oh clouds which are having increased beauty due to the presence of lightning which is shining!; thirumUzhikkaLaththu in thirumUzhikkaLam; uRaiyum oNsudarkku due to the eternal presence there, one who is having distinguished radiance of qualities such as sauSeelyam, saulabhyam etc; theLi visumbu pure divine sky; thirunAdA as one who is having perfect wealth; thIvinaiyEn manaththu in my heart; I who am having the sin of being pained after union [due to the separation]; uRaiyum residing in a concealed manner; thuLi sprouted; vAr and flowing; kaL having honey; kuzhalArkku for the one who is manifesting his beautiful hair; en thUdhuraiththal the message saying -You, being kESava, are to eliminate my klESa (sorrow)-; seppumin please convey!; thU mozhi vAy having faultless speech; vaNdinangAL Oh groups of beetles!

TVM 9.7.6

3744 தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய் வண்டினங்காள்! *
போதிரைத்துமதுநுகரும் பொழில்மூழிக்களத்துறையும் *
மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்க்கென்வாய்மாற்றம் *
தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும்கலையுமே.
3744 தூது உரைத்தல் செப்புமின்கள் * தூ மொழி வாய் வண்டு இனங்காள் *
போது இரைத்து மது நுகரும் * பொழில் மூழிக்களத்து உறையும் **
மாதரைத் தம் மார்வகத்தே * வைத்தார்க்கு என் வாய் மாற்றம் *
தூது உரைத்தல் செப்புதிரேல்! * சுடர் வளையும் கலையுமே (6)
3744
thoothuraiththal cheppumin_gaL * thoomoziyāy vandinangāL *
pOthiraiththu madhunNukarum * pozil moozikkaLaththuRaiyum *
mādharaiththam mārvakaththE * vaiththārku envāymāRRam *
thoothuraiththal chepputhirEl * chutarvaLaiyum kalaiyumE. 9.7.6

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh flocks of cranes and herons, seeking your food in these big ponds, better go to cool Mūḻikkaḷam. Ask the Lord, whose eyes, hands, and feet are like the red lotus, whose lips resemble a red fruit, and whose complexion matches the lotus leaf, whether I won't be a suitable match for Him.

Explanatory Notes

(i) The Sweet-sounding bees typify the Ācāryas who can win over the Lord through their persuasive eloquence.

(ii) The Nāyakī does not even want the bees to come back and tell her what the Lord has to say in reply to her message. It would indeed be sufficient if they just conveyed her message to the Lord who is her avowed Saviour, pledged to protect her. What is even + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூமொழி வாய் இனிமையாகப் பேசும்; வண்டு இனங்காள்! வண்டினங்களே!; போது மலர்கள் மலரும் போது; இரைத்து நீங்கள் கோலாகலமாய்க் கூடி; மது நுகரும் தேன் பருகும்; பொழில் சோலைகளை உடைய; மூழிக்களத்து திருமூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; மாதரை தம் திருமகளைத் தம்; மார்வகத்தே மார்பில்; வைத்தார்க்கு வைத்திருப்பவர்க்கு; என் வாய் மாற்றம் நான் சொல்லிக் கொடுத்த; தூது என் தூது வார்த்தையை; சுடர் வளையும் அழகிய என் வளையல்களும்; கலையுமே ஆடைகளும் கழலும்படி மெலிந்தாள் என்று; தூது உரைத்தல் நான் சொன்னதாக; செப்புமின்கள் சொல்லுங்கள்
pOdhu iraiththu celebrating due to the bliss while the flowers are blossoming; madhu nugarum for you to drink the honey; pozhil having garden; mUzhikkaLaththu in thirumUzhikkaLam; uRaiyum one who resides; mAdharai lakshmi who is the best among women; tham mArbagaththE vaiththArkku one who made her eternally reside in his enjoyable, divine chest saying -agalagillEn-; en vAy mARRam words of my speech; thUdhu uraiththal message; seppudhirEl if you set out to speak; sudar radiant; vaLaiyum bangles; kalaiyum clothes; thUdhuraiththal as the matter of my message; seppumingaL please tell.; padar spread out; pozhilvAy residing in the garden

TVM 9.7.7

3745 சுடர்வளையும்கலையுங்கொண்டு அருவினையேன்தோள் துறந்த *
படர்புகழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண் *
சுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம் *
படர்பொழில்வாய்க்குருகினங்காள்! எனக்கொன்று பணியீரே.
3745 சுடர் வளையும் கலையும் கொண்டு * அருவினையேன் தோள் துறந்த *
படர் புகழான் * திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண் **
சுடர் பவள வாயனைக் கண்டு * ஒருநாள் ஓர் தூய் மாற்றம் *
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள்! * எனக்கு ஒன்று பணியீரே. (7)
3745
chutarvaLaiyum kalaiyumgondu * aruvinaiyEn thOLthuRandha *
patar_pukazān * thirumoozikkaLaththuRaiyum pangayakkaN *
chutar_pavaLa vāyanaikkaNdu * orunNāL OrthooymāRRam *
patar_pozilvāyk kurukinangāL! * enakku onRu paNiyeerE. 9.7.7

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh Koel birds that dwell in this spacious garden, I implore you to one day convey a kind word on my behalf to my lotus-eyed Lord. He resides in Tirumūḻikkaḷam, famed far and wide, with lips as lovely as coral red. He who abandoned this wretched sinner's shoulders, taking away my radiant bangles and saree.

Explanatory Notes

The Nāyakī, in her present state of separation after the erstwhile union with her Lord, is literally denuded of her feminity which the bangles and saree denote. She wants these birds to go and tell the enchanting Lord at Tirumūḻikkaḷam that it was next to impossible for her to be apart from Him, of exquisite beauty, having tasted the bliss earlier.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படர் பரந்த; பொழில் வாய் சோலைகளிருக்கும் இடத்தில்; குருகினங்காள்! வாழ்கிற குயிலினங்களே!; சுடர்வளையும் அழகிய கைவளையையும்; கலையும் சேலையையும்; கொண்டு கைக்கொண்டு; அருவினையேன் பாவஞ்செய்த; தோள்துறந்த என்னை விட்டுப்பிரிந்த; படர் புகழான் பரந்த புகழையுடையவனும்; பங்கயக்கண் செந்தாமரைக் கண்ணனும்; சுடர் பவள அழகிய பவழம் போன்ற; வாயனை வாயையுடையவனுமான; திரு மூழிக்களத்து திரு மூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; கண்டு எம்பெருமானைக் கண்டு; ஒரு நாள் ஒரு நாளாவது; எனக்கு எனக்கு; ஓர் தூய் மாற்றம் ஒரு நல்ல தூய வார்த்தை; ஒன்று பணியீரே ஒன்று சொல்ல வேண்டும்
kurugu inangAL Oh groups of herons!; sudar radiant; vaLaiyum bangles; kalaiyum garment; koNdu taking; aruvinaiyEn me who is having sins which are difficult to overcome, my; thOL thuRandha one who very lovingly embraced my shoulders, and abandoned them subsequently; padar spread in the world; pugazhAna as greatness; thirumUzhikkaLaththu uRaiyum eternally residing in thirumUzhikkaLam (to increase my sorrow by remaining in close proximity); pangayak kaN having lotus like divine eyes (which remain fresh during union and separation); sudar radiant; pavaLam coral like; vAyanai one who is having divine lips; kaNdu see; enakku for me (who is manifesting my sorrow in my body); oru nAL one day (unlike nithya agnihOthram which is to be done everyday); Or distinguished (due to being for protection of suffering ones); thUy mARRam best words due to the clarity; onRu to remain crisp (without wavering); paNiyIrE you should tell.; iru vast; pozhilvAy in the garden

TVM 9.7.8

3746 எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழில்வாயிரை தேர்ந்து *
மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்! தும்பிகாள்! *
கனக்கொள்திண்மதிள்புடைசூழ் திருமூழிக்களத்துறையும் *
புனக்கொள்காயாமேனிப் பூந்துழாய்முடியார்க்கே.
3746 எனக்கு ஒன்று பணியீர்கள் * இரும் பொழில்வாய் இரை தேர்ந்து *
மனக்கு இன்பம் பட மேவும் * வண்டு இனங்காள் தும்பிகாள் **
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் * திருமூழிக்களத்து உறையும் *
புனக்கொள் காயா மேனிப் * பூந் துழாய் முடியார்க்கே (8)
3746
enakkonRu paNiyeergaL * irumpozilvāy iraithErndhu *
manakkinbam patamEvum * vandinangāL!thumpikāL *
kanakkoL thiNmathiLputaichooz * thirumoozik kaLaththuRaiyum *
punalkoL kāyāmEnip * poondhuzāy mutiyārkkE. 9.7.8

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh bees and beetles, moving in pleasant company in these spacious gardens in search of honey, for me, put in a word to my Lord. He sports lovely tuḷaci on His crown, has the complexion of the blue lily, and dwells in Tirumūḻikkaḷam, surrounded by walls, tough and tall.

Explanatory Notes

The Nāyakī says, there is no use of these bees and beetles making merry in the company of their mates, gathering honey, without making her also happy. She, therefore, beckons them to go and tell the Lord in that holy centre, well fortified, how she longs to behold His exquisite Form. Here, at this end, the Nāyakī is in a precarious condition, while, at the other end, the Lord stands pledged to redeem the devout seeking His protection.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரும் பொழில்வாய் பெரிய சோலைகளிலே; இரை தேர்ந்து இரை தேடும்; மனக்கு இன்பம் மனதுக்கு இன்பம் உண்டாம்படி; பட மேவும் கலந்து சேர்ந்து வாழும்; வண்டு இனங்காள்! வண்டு இனங்களே!; தும்பிகாள்! தும்பிகளே!; கனக்கொள் திண் கனத்த திண்ணிய; மதிள் மதிள்களாலே; புடை சூழ் சுற்றும் சூழப்பட்ட; திரு மூழிக்களத்து திரு மூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; புனக் கொள் தன்னிலத்தில் வளருகிற; காயா காயாம்பூப் போன்ற; மேனி மேனி நிறத்தை உடைய; பூந் துழாய் துளசி மாலை அணிந்த; முடியார்க்கே முடியை உடையவர்க்கு; எனக்கு ஒன்று எனக்காக ஒரு வார்த்தை; பணியீர்கள் சொல்ல வேண்டும்
irai thErndhu seeking the enjoyable honey; manakkku for the mind; inbam pada to cause joy; mEvum uniting and residing; vaNdu inangAL thumbigAL Oh groups of beetles and dragonflies!; kanam koL heavy; thiN firm; madhiL fort; pudai surrounding; sUzh surrounded; thirumUzhikkaLaththu in thirumUzhikkaLam; uRaiyum one who is eternally residing; punam koL staying in its own habitat; kAyA mEni having the complexion of kAyAm pU (a purple coloured flower); pU thuzhAy mudiyArkku one whose divine crown is decorated with attractive thiruththuzhAy (thuLasi); enakku for me; onRu a word; paNiyIr should tell.; Endhu nIr not being feared by water, sustaining the water; iLa being youthful (which is required for ability to travel)

TVM 9.7.9

3747 பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு *
ஏந்துநீரிளங்குருகே! திருமூழிக்களத்தாருக்கு *
ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்க்கண்நீர்ததும்ப *
தாம்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே.
3747 பூந் துழாய் முடியார்க்குப் * பொன் ஆழிக் கையாருக்கு *
ஏந்து நீர் இளம் குருகே! * திருமூழிக் களத்தாருக்கு **
ஏந்து பூண் முலை பயந்து * என் இணை மலர்க் கண் நீர் ததும்ப *
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் * தகவு அன்று என்று உரையீரே (9)
3747
poondhuzāy mutiyārkkup * ponnāzi kaiyārukku *
EndhunNeer iLangurukE! * thirumoozikkaLaththārkku *
EndhupooN mulaippayandhu * enni_NaimalarkkaN neer_thadhumpa *
thāmthammaik kondakalthal * thakavanRenRu uraiyeerE. 9.7.9

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh tiny heron, joyfully strutting in the waters, please go and convey to my Lord who dwells in Tirumūḻikkaḷam. He holds the lovely discus and wears tuḷaci flowers on His crown. It hardly seems fair that He has departed from me, taking His radiant form, causing my tearful eyes to flow and making my adorned breasts lose their luster.

Explanatory Notes

The Nāyakī is so much obsessed with the Lord’s exquisite charm that she feels, it was hardly fair of Him to have got away from her, after their erstwhile union, without leaving His body behind! Ludicrous it might seem but it goes to convey that the Nāyakī just cannot bear being apart from the Lord, even for a split second.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏந்து நீர் நீர் நிலைகளில் வாழும்; இளம் குருகே! இளம் பறவைகளே!; பூந் துழாய் துளசி மாலையை; முடியார்க்கு முடியிலே அணிந்துள்ளவரும்; பொன் ஆழி அழகிய தங்க மோதிரம்; கையாருக்கு கையில் உடையவரும்; திரு மூழிக்களத்தார்க்கு திருமூழிக்களத்திலுள்ள பெருமானுக்கு; ஏந்து பூண் ஆபரணம் அணிந்த; முலை பயந்து மார்பகங்கள் பசலை படர்ந்து; என் இணை மலர்க் கண் மலர் போன்ற கண்கள்; நீர்ததும்ப நீர்மல்கும்படி; தாம் தம்மை அவர் தாம் தம்முடைய; கொண்டு திருமேனியைக் கொண்டு; அகல்தல் அகன்று போவதானது; தகவு அன்று தருமமன்று என்று; என்று உரையீரே சொல்லுங்கள்
kurugE Oh heron!; pU thuzhAy mudiyArkku having attractive thiruththuzhAy (thuLasi) on his crown (to highlight his supremacy over everyone); pon attractive; Azhi thiruvAzhi (divine chakra); kaiyArkku having in in his hand; thirumUzhikkaLaththArkku one who is present nearby in thirumUzhikkaLam; pUN ornament; Endhu holding; mulai bosom; payandhu having paleness; en iNai malar kaN my eyes which are like a pair of flowers (which blossom on seeing him); nIr thadhumba filled with sad tears (due to separation); thAm he (who is having subservience, enjoyability and simplicity); thammaik koNdu knowing him; agaldhal moving away; thagavu anRu enRu that it does not match his mercy; uraiyIrE tell- she says in respectable way.; thada vast; pozhilvAy in the garden

TVM 9.7.10

3748 தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து *
மிகவின்பம்படமேவும் மென்னடையஅன்னங்காள் *
மிகமேனிமெலிவெய்தி மேகலையும்ஈடழிந்து * என்
அகமேனியொழியாமே திருமூழிக்களத்தார்க்கே.
3748 தகவு அன்று என்று உரையீர்கள் * தடம் புனல்வாய் இரை தேர்ந்து *
மிக இன்பம் பட மேவும் * மென் நடைய அன்னங்காள் **
மிக மேனி மெலிவு எய்தி * மேகலையும் ஈடு அழிந்து * என்
அகமேனி ஒழியாமே * திருமூழிக்களத்தார்க்கே (10)
3748
thakavanRenRu uraiyeergaL * thatampunalvāy iraithErndhu *
mikavinbam patamEvum * mennataiya annangāL *
mikamEni meliveythi * mEkalaiyum eetazindhu *
en_akamEni oziyāmE * thirumoozik kaLaththārkkE. 9.7.10

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh swans of gentle gait, moving merrily in fertile fields in search of food, go to the Lord in Tirumūḻikkaḷam and tell Him it is hardly fair that He should despise me. Only then can I retain my body, the saree upon it, and my inner soul.

Explanatory Notes

The great Ācāryas, who go about delving and gathering the most delicious meanings, the scriptural texts can possibly yield, are referred to here, as the swans, endowed with the special faculty of picking up milk from a mixture of milk and water. The Nāyakī’s appeal to the Lord’s special trait of mercy is bound to go home to Him, as He cannot afford to risk His reputation, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடம்புனல் வாய் விசாலமான நீர்நிலங்களிலே; இரை தேர்ந்து இரை தேடும்; மிக இன்பம் பேரானந்தமாக; படமேவும் சேர்ந்து வாழும்; மெல் நடைய மெல்லிய நடையையுடைய; அன்னங்காள்! அன்னங்களே!; மிக மேனி சரீரம் மிகவும்; மெலிவு எய்தி மெலிவடைந்து; மேகலையும் ஈடு மேகலையும்; அழிந்து தங்காதபடியாகி; என் அகமேனி என் ஆத்மாவும் குலைந்து; ஒழியாமே நான் முடியும்படி ஆகிவிடும் என்று; திருமூழிக்களத்தார்க்கே திருமூழிக்களத்திலிருப்பவரிடம்; தகவு அன்று என்று இது நியாயம் அன்று என்று; உரையீர்கள் சொல்லுங்கள்
irai food; thErndhu acquired; miga great; inbam bliss; pada to attain; mEvum living together; mel nadaiya having gentle gait; annangAL Oh swans!; mEni body; miga greatly; melivu eydhi weakened; mEgalaiyum garment; Idazhindhu losing its tightness; en agamEni my inherent nature; ozhiyAmE to not lose; thirumUzhikkaLaththArkku for the one who is standing in thirumUzhikkaLam to bless his devotees; thagavu anRu enRu this is not the effect of your mercy since the purpose of standing there is not attained; uraiyIrgaL inform him- says parAnguSa nAyaki.; ozhivu inRi to not separate (ever); thirumUzhikkaLaththu in thirumUzhikkaLam

TVM 9.7.11

3749 ஒழிவின்றித்திருமூழிக்களத்துறையும் ஒண்சுடரை *
ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாளலற்றியசொல் *
வழுவில்லாவண்குருகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த *
அழிவில்லாவாயிரத்து இப்பத்தும்நோயறுக்குமே. (2)
3749 ## ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் * ஒண்சுடரை *
ஒழிவு இல்லா அணி மழலைக் * கிளிமொழியாள் அலற்றிய சொல் **
வழு இல்லா வண் குருகூர்ச் * சடகோபன் வாய்ந்து உரைத்த *
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் * நோய் அறுக்குமே (11)
3749. ##
ozivinRi thirumoozikkaLaththuRaiyum * oNchutarai *
ozivillā aNimazalaik * kiLimoziyāL alaRRiyachol *
vazuvillā vaNkurukoor * chatakOpan vāyndhuraiththa *
azivillā āyiraththu ippaththum * nOy aRukkumE. (2) 9.7.11

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

These ten songs, among the eternal thousand, were spoken by Caṭakōpaṉ of Kurukūr, steeped in impeccable love for God. They express the sweet-tongued Nāyakī's anguish of separation from the resplendent Lord who forever resides in Tirumūḻikkaḷam. Will they dispel the dire malady, the bondage of saṃsāra?

Explanatory Notes

This decad will cut out the bondage of its chanters, the worldly ties, which operate as an impediment to the attainment of God-head. In other words, this decad cures the malady of separation from the Lord and the resultant state of desolation.

The resplendent Lord, in His iconic manifestation in Tirumūḻikkaḷam, is the Doctor who stays on permanently in our midst, determined to cure the malady of ‘saṃsāra’ of the devout seekers.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒழிவு இன்றி ஓய்வில்லாதபடி; திரு மூழிக்களத்து திரு மூழிக்களத்தில்; உறையும் இருக்கும்; ஒண் சுடரை ஒளிமயமான எம்பெருமானை; ஒழிவு இல்லா பிரிந்து தரிக்கமாட்டாத; அணி மழலை அழகிய மழலையோடு கூடின; கிளிமொழியாள் கிளிமொழி தலைவி சொன்ன; அலற்றிய சொல் ஒரு சொல்லாக வைத்து; வழு இல்லா அன்பில் குறைவில்லாத; சடகோபன் நம்மாழ்வார்; வண் குருகூர் வன்மை மிகுந்த திருக்குருகூரில்; வாய்ந்து ஆழ்ந்து அநுபவித்து; உரைத்த அருளிச் செய்த; அழிவு இல்லா மனதை விட்டு நீங்காத; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும்; நோய் ஸம்ஸார வியாதியை; அறுக்குமே போக்கிவிடும்
uRaiyum due to eternally residing; oN sudarai one who is having distinguished radiance; ozhivillA unable to sustain in separation; aNi beautiful; mazhalai gibberish [childish speech]; kiLi mozhiyAL one whose speech matches a parrot-s; alaRRiya spoke incoherently due to her sorrow; sol pAsuram; vazhu illA without any shortcoming (in that love); vaN kurugUr leader of the distinguished AzhwArthirunagari; satakOpan nammAzhwAr; vAyndhu uraiththa spoken after approaching and enjoying (emperumAn-s qualities); azhivu illA not leaving the hearts of the enjoyers; Ayiraththu ippaththum this decad among the thousand pAsurams; nOy the disease of samsAra (which is the cause for separation from bhagavAn); aRukkum will eradicate.; Agaththu in (their) heart; avanai sarvESvara (who is the eliminator of all hurdles and who is perfectly enjoyable)