50

Thiru Ooragam

திருஊரகம்

Thiru Ooragam

ஸ்ரீ அமுதவல்லீ ஸமேத ஸ்ரீ உலகளந்தான் ஸ்வாமிநே நமஹ

Thayar: Sri Amudha Valli Nāchiyār (Amrudhavalli)
Moolavar: Sri TriVikraman, Ulagalandha Perumāl
Utsavar: Peragathān
Vimaanam: Nāga (Sesha) Theertham
Pushkarani: Sārasrikara
Thirukolam: Nadandha (Walking)
Direction: West
Mandalam: Thondai Nādu
Area: Kanchipuram
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Search Keyword: Thiruvuragam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TCV 64

815 நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தைபாடகத்து *
அன்றுவெஃக ணைக்கிடந்தது என்னிலாதமுன்னெலாம் *
அன்றுநான்பிறந்திலேன் பிறந்தபின்மறந்திலேன் *
நின்றதும்இருந்ததும் கிடந்ததும்என்நெஞ்சுளே.
815 நின்றது எந்தை ஊரகத்து * இருந்தது எந்தை பாடகத்து *
அன்று வெஃகணைக் கிடந்தது * என் இலாத முன்னெலாம் **
அன்று நான் பிறந்திலேன் * பிறந்த பின் மறந்திலேன் *
நின்றதும் இருந்ததும் * கிடந்ததும் என் நெஞ்சுளே (64)
815
ninRadhu endhai oorahaththu * irundhadhu endhai pādahaththu, *
anRu veqkaNai kidandhadhu * ennilātha munnelām, *
anRu n^ān piRandhilEn * piRantha pin maRandhilEn, *
ninRadhum irundhadhum * kidandhadhum en neNYchuLE. (64)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

815. O father, you are stand in Thiruvuragam, in Padagam you are seated and you recline in Thiruvekka. When you took those forms, I was not born, and since I was born I have not forgotten any of your forms because you really stand, sit and rest in my heart.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தை எம்பெருமான்; ஊரகத்து திருவூரகத்திலே; நின்றது நின்றதும்; எந்தை பாடகத்து திருப்பாடகத்திலே; இருந்தது வீற்றிருந்ததும்; அன்று வெஃகணைக் திருவெஃகாவில்; கிடந்தது சயனித்திருந்ததும்; என் இலாத நான் பிறப்பதற்கு; முன்னெலாம் முன்பு; அன்று நான் அன்று நான்; பிறந்திலேன் ஞானம் பெற்றிருக்கவில்லை; பிறந்த பின் அறிவு பெற்ற பின்பு; மறந்திலேன் எம்பெருமானை நான் மறக்கவில்லை; நின்றதும் இருந்ததும் நின்றதும் இருந்ததும்; கிடந்ததும் கிடந்ததுமான எல்லாச் செயல்களையும்; என் நெஞ்சுள்ளே! எனக்கு அருளினான்

TNT 1.8

2059 நீரகத்தாய் நெடுவரையி னுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி
ஊரகத்தாய்! * ஒண்துரைநீர்வெஃகாவுள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு
பேரகத்தாய்! * பேராதுஎன்நெஞ்சினுள்ளாய்!
பெருமான்உன்திருவடியேபேணினேனே. (2)
2059 ## நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் *
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் * ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் *
உள்ளுவார் உள்ளத்தாய் ** உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா *
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் * பேராது என் நெஞ்சின் உள்ளாய் *
பெருமான் உன் திருவடியே பேணினேனே-8
2059. ##
neeragatthāy! neduvaraiyin ucchi mElāy! *
nilātthingaL thuNdatthāy! niRaindha kacchi-
ooragatthāy, * oNthuRain^eer veqhā uLLāy! *
uLLuvār uLLatthāy, ** ulagam Etthum-
kāragatthāy! kārvānath thuLLāy! kaLvā! *
kāmarupooNG kāviriyin thenpāl mannu-
pEragatthāy, * pErāthu en nencin uLLāy! *
perumān_un thiruvadiyE pENiNnEnE. (2) 8

Simple Translation

2059. You are in the hearts of your devotees and in Thiruneeragam, on the top of Thiruneermalai, Nilāthingalthundam in Thiruppadi, Thiruvuragam in flourishing Thirukkachi, and Thiruvekka surrounded with flourishing water. The whole world worships you Thirukkalvā, the god of Thirukkāragam and Thirukkārvanam. O thief, you stay in the sky and in Thirupper (Koiladi) where on the southern bank of the Kāviri beautiful flowers bloom in the groves. You, the highest one, stay in my heart and you will not leave me. I worship only your divine feet.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீரகத்தாய்! திருநீரகத்தில் உள்ளவனே!; நெடுவரையின் திருவேங்கட மலையின்; உச்சி மேலாய்! உச்சியிலிருப்பவனே!; நிலாத்திங்கள் சந்திரனைப் போல் தாபம் போக்கும்; துண்டத்தாய்! பூமியின் ஒரு பாகத்தில் இருப்பவனே!; நிறைந்த கச்சி செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில்; ஊரகத்தாய்! திருவூரகத்தில் இருப்பவனே!; ஒண் துரை நீர் அழகிய நீர்த்துறையின் கரையில்; வெஃகா உள்ளாய்! திருவெஃகாவில் உள்ளவனே!; உள்ளுவார் சிந்திப்பவரின்; உள்ளத்தாய்! உள்ளத்தில் உள்ளவனே!; உலகம் ஏத்தும் உலகமெல்லாம் துதிக்கும்படி; காரகத்தாய்! திருக்காரகத்தில் உள்ளவனே!; கார்வானத்து உள்ளாய்! திருக்கார்வானத்திலுள்ளவனே!; கள்வா! கள்வனே!; காமரு பூங் விரும்பத்தக்க அழகிய; காவிரியின் காவேரியின்; தென்பால் தென் புறமுள்ளவனே!; மன்னு பேரகத்தாய்! திருப்பேர்நகரில் உறைபவனே!; என் நெஞ்சில் என் நெஞ்சிலிருந்து; பேராது உள்ளாய்! நீங்காமல் இருப்பவனே!!; பெருமான்! பெருமானே!; உன் திருவடியே உன் திருவடிகளையே; பேணினேனே காண விரும்பினேனே
neeragaththAy Oh One who is giving divine presence in thiruneeragam dhivya dhEsam!; nedu varaiyin uchchi mElAy Oh One who stood at the top of tall and great thirumalai!; nilAththingaL thuNdaththAy Oh One who is giving divine presence in the divine place called nilAththingaL thuNdam!; niRaindha kachchi UragaththAy Oh One who is giving divine presence in the divine place called Uragam by pervading the whole of kachchi (by your qualities)!; oNthuRai neer vekhAvuLLAy Oh One who is in sleeping posture at the beautiful shore of water tank that is in thiruvehkA!; uLLuvAr uLLaththAy Oh One who is present in the hearts of those who think of you (as their leader)! (that is also a temple for Him);; ulagam Eththum kAragaththAy Oh One who stood in the divine place called ‘thirukkAragam’ for the whole world to worship!; kAr vAnaththuLLAy Oh One who lives in the divine place called kArvAnam!; kaLvA Oh the thief (who hid the divine form and not showing it to the devotees)! (there is a dhivya dhEsam called kaLvanUr);; kAmaru pUm kAviriyin then pAl mannu pEragaththAy well set in the town of thiruppEr (of appakkudaththAn) that is on the south shore of very beautiful kAvEri!; en nenjil pEradhu uLLAy Oh One who is showing Himself to my mind without break or going away!; perumAn Oh One having many many divine places!; un thiruvadiyE pENinEnE I am calling for your divine feet (wishing to see it).

TNT 2.13

2064 கல்லெடுத்துக்கல்மாரிகாத்தாய்! என்றும்
காமருபூங்கச்சியூரகத்தாய் என்றும் *
வில்லிறுத்துமெல்லியல்தோள்தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில்துயிலமர்ந்தவேந்தே! என்றும் *
மல்லடர்த்துமல்லரைஅன்றுஅட்டாய்! என்றும் *
மாகீண்டகைத்தலத்துஎன்மைந்தா! என்றும் *
சொல்லெடுத்துத்தன்கிளியைச்சொல்லேயென்று
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே.
2064 கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும் *
காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும் *
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் *
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் **
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் *
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் *
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று *
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே-13
2064
'kalledutthuk kalmāri kātthāy!' enRum *
'kāmaru pooNGkacchi ooragatthāy!' enRum, *
'villiRutthu melliyalthOL thOynthāy!' enRum *
'veqhāvil thuyilamarntha vEndhE!' enRum, *
'malladartthu mallarai anRu_attāy!' enRum, *
'mākeeNda kaitthalatthu en maindhā!' enRum, *
solledutthuth than_kiLiyaich sollE enRu *
thuNaimulaimEl thuLisOrach sOr_kinRāLE! 13

Ragam

பந்துவராளி

Thalam

அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2064. “My daughter says, ‘You carried Govardhanā mountain and protected the cows and the cowherds from the storm and you stay in Thiruvuragam in beautiful Kachi. You, the king resting on Adisesha in Thiruvekka broke the bow and married Sita and embraced her soft arms, and you fought with the wrestlers and killed them. You are young and strong and you killed the Asuran Kesi when he came as a horse. ’ She teaches her parrot to say his names, shedding tears and they drip on her breasts and she is tired. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் மாரி கல் மழையை; கல் எடுத்து ஒரு மலையை எடுத்து; காத்தாய்! என்றும் காத்தாய்! என்றும்; காமரு பூங் கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; ஊரகத்தாய்! என்றும் திருவூரகத்திலிருப்பவனே! என்றும்; வில் இறுத்து வில்லை முறித்து; மெல் இயல் மென்மையான இயல்புடையவளான; தோள் ஸீதையின் தோள்களை; தோய்ந்தாய்! என்றும் அணைத்தவனே! என்றும்; வெஃகாவில் திருவெக்காவில்; துயில் அமர்ந்த துயில் அமர்ந்த; வேந்தே! என்றும் வேந்தே! என்றும்; மல் அடர்த்து மல்லர்களின் வலிமையை அடக்கி; மல்லரை அன்று அன்று மல்லர்களை; அட்டாய்! என்றும் ஒழித்தாய் என்றும்; மா குதிரையாக வந்த கேசியின் வாயை; கீண்ட பிளக்க வல்ல; கைத்தலத்து வல்லமை உடைய; என் மைந்தா! என்றும் எம்பெருமானே! என்றும்; சொல் எடுத்து சொல் எடுத்து கற்பிக்கும்; தன் கிளியை தன் கிளியை சொல் என்று சொல்ல; சொல்லே என்று சொன்னவுடன் அப்படியே உருகிப்போன இப்பெண்; துணை முலைமேல் அவள் ஸ்தனங்களின் மேல்; துளி சோர கண்ணீர் பெருக; சோர்கின்றாளே சோர்ந்து போகிறாள்
kAththAy (This little girl is saying these -) Oh You who protected; kalmAri from the rain that is hail (which was set to be poured by indhra); kal eduththu as you lifted and held a mountain; enRum and,; kAmaru pU kachchi UrakaththAy enRum Oh You who is having divine presence in thiru Uragam of kAncheepuram which is loveable and beautiful!, and,; vil iRuththu melliyal thOL thOyndhAy enRum Oh You who broke the bow and got the hand of seethA pirAtti!, and,; vehkAvil thuyil amarndha vEndhE enRum Oh You the King who is reclining in thiru vehkA!, and; anRu that day (when you incarnated as kaNNan),; mal adarththu restraining their strength; attAy you destroyed; mallarai the wrestlers,; enRum and; en myndhA Oh! my lord; kaiththalaththu having beautiful divine hands that; mA keeNda destroyed by tearing kEsi who came as a horse!; enRum and; than kiLiyai looking at her parrot; sol eduththu and prompting it so with the first word of divine name,; sol enRu ‘you say (the rest of the name) yourself’, saying so, (and after it started saying the divine name),; thuLi sOra with tears rolling down; thuNai mulai mEl upon both the divine breasts,; sOrginRAL she is suffering.

STM 34

2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)
2706 ## கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே * மதிள் கச்சி
ஊரகமே பேரகமே *
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே *
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *
ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை-34
## kārār thirumEni kāNum aLavumpOy *
cheerār thiruvENGkadamE thirukkOva-

lUrE * --mathitkacchi ooragamE pEragamE *
pErā maruthiRuththān veLLaRaiyE veqkāvE *

pErāli thaNgāl naraiyoor thiruppuliyuur *
ārāmam choozhntha araNGkam * (37)--kaNamaNGkai

Simple Translation

2706. “I have decided to go to temples to see the dark one. I will go to beautiful Thiruvenkatam, Thirukkovalur, strong-walled Kachi, Thiruvuragam, Thirupperagam (Koiladi), Vellarai, temple of the god who walked through the large marudam trees and destroyed the Asurans, Thiruvekka, Thiruvāli, Thiruthangāl, Thirunaraiyur surrounded with water, Thirupuliyur, Srirangam surrounded with groves, Thirukkannamangai, beautiful jewel-like Thirukkannanur, Thiruvinnagaram, famous Thirukkannapuram, Thiruthancherai, Thiruvazhundur, Thirukkudandai, Thirukkadigai, Thirukkadalmallai, Thiruvidaventhai, Thiruneermalai, the famous Thirumālirunjolai, Thirumogur, Thiruvadari (Badrinath) praised by all, northern Madhura and all other places of the god without missing any. I prattle on saying the thousand names of the famous, lotus-eyed god adorned with thulasi garlands dripping with honey who broke the tusk of the elephant and saved Gajendra from the crocodile, Even if the villagers say nasty things about me I will surely continue to write letters, made of palm leaves. 34 - 40

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் திருமேனி காளமேகத் திருவுருவை; காணும் அளவும் கண்டு களிக்கும் வரையில்; போய் ஊர் ஊராகப் போய்; சீர் ஆர் சீர்மைமிக்க; திருவேங்கடமே திருவேங்கடமலை; திருக்கோவல் ஊரே திருக்கோவலூர் என்ற நகரமே; மதிள் கச்சி மதிள் சூழ்ந்த காஞ்சியிலுள்ள; ஊரகமே பேரகமே ஊரகம் மற்றும் திருப்பேரகம்; பேரா சலியாமற் கிடந்த; மருது மருத மரங்களை; இறுத்தான் முறித்த பெருமாள்; வெள்ளறையே இருக்கும் திருவெள்ளறை; வெஃகாவே திருவெஃகா; பேர் ஆலி பெயர் பெற்ற திருவாலி; தண் கால் திருத்தண்கால்; நறையூர் திருநரையூர்; திருப்புலியூர் குட்டநாட்டுத் திருப்புலியூர்; ஆராமம் சூழ்ந்த அழகிய தோட்டங்கள் சூழ்ந்த; அரங்கம் திருவரங்கம்; கணமங்கை திருக்கண்ணமங்கை
nAn avanai I will, his [emperumAn’s]; kAr Ar thirumEni kANum aLavum pOy going from place to place [one divine abode to another] until I see his divine form which is like a dark cloud; sIr Ar thiruvEngadamE thirukkOvalUrE the eminent thiruvEngadam and thirukkOvalUr; madhiL kachchi UragamE Uragam, which is within the fortified kAnchi; pEragamE the sannidhi in appakkudaththAn, thiruppEr; pErA maRudhu iRuththAn veLLaRaiyE thiruveLLaRai where kaNNa, who broke through the two marudha trees which were erect, has taken residence; vehkAvE thiruvehkA; pErAli thaNkAl naRaiyUr thiruppuliyUr The famous divine abode of thiruvAli nagar, thiruththaNkAl, thirunaRaiyUr, kutta nAttu thiruppuliyUr; ArAmam sUzhndha arangam kaNamangai thiruvarangam, which is surrounded by beautiful gardens, thirukkaNNamangai

PTM 17.68

2780 வெஃகாவில் *
உன்னியயோகத்துறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை *
என்னைமனங்கவர்ந்தஈசனை * -
வானவர்தம் முன்னவனை
2780 வெஃகாவில்
உன்னிய யோகத்து உறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை *
என்னை மனம் கவர்ந்த ஈசனை *
வானவர் தம் முன்னவனை 70
veqgāvil,-
unniya yOgaththu uRakkatthai, * UragatthuL-
annavanai atta puyagaratthu emmān ERRai, *
ennai manangavarndha Isanai, * (70)
vānavar_tham-munnavanai

Ragam

நாதநாமக்ரியை

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2780. the god of Thiruvekkā sunk in deep yoga. He is the god of Thiruvuragam, the strong bull of Thiruvattapuyaharam and the Esan, the lord of lords, who stays in my heart. (70)"

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெஃகாவில் திருவெஃகாவிலிருக்கும்; உன்னிய யோகத்து யோக; உறக்கத்தை நித்திரையில் இருப்பவனை; ஊரகத்துள் அன்னவனை திருவூரகத்தில் இருப்பவனை; அட்ட புயகரத்து அட்டபுயகர தலத்திலுள்ள; எம்மான் ஏற்றை எம்பெருமானை; என்னை மனம் என் மனம்; கவர்ந்த ஈசனை கவர்ந்த ஈசனை; வானவர் தம் நித்யஸூரிகளின்; முன்னவனை தலைவனை
vehkAvil at thiruvehkA; unniya yOgaththu uRakkaththai one who is sleeping in yOga [body and mind joined together] while being fully aware; UragaththuL annavanai being very distinguished in thiruvUragam [a divine abode in kAnchIpuram]; atta buya karaththu emmAn ERRai being our lord at [the divine abode] attabuyakaram; ennai manam kavarndha Isanai the entity complete [in all aspects] who stole my heart; vAnavar tham munnavanai being the leader of celestial entities