46

Thiru vElukkai

திருவேளுக்கை

Thiru vElukkai

ஸ்ரீ வேளுக்கைவல்லீ ஸமேத ஸ்ரீ முகுந்தநாயகாய நமஹ

Thayar: Sri Velukkai Valli (Amrudhavalli)
Moolavar: Azhgiyasingar, Aalari, Sri Mukunda Nāyakan
Utsavar: Azhgiyasingar
Vimaanam: Kanaga
Pushkarani: Kanaga saras, Hema saras
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Thondai Nādu
Area: Kanchipuram
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Search Keyword: Velukkai
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

MUT 26

2307 சிறந்தவென்சிந்தையும் செங்கணரவும் *
நிறைந்தசீர்நீள்கச்சியுள்ளும் * - உறைந்ததும்
வேங்கடமும்வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே *
தாங்கடவார்தண்துழாயார்.
2307 சிறந்த என் சிந்தையும் * செங்கண் அரவும் *
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் ** - உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் * வேளுக்கைப் பாடியுமே *
தாம் கடவார் தண் துழாயார் -26
2307
siRantha en sinthaiyum sengaN aravum, *
niRainthaseer neeLkacci uLLum, * - uRainthathuvum,
vEngadamum veqkāvum * vELukkaip pādiyumE, *
thāmkadavār thaN dhuzāyār. 26

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2307. The lord, adorned with a cool thulasi garland and resting on beautiful-eyed Adisesha, stays in my devoted heart and in famous Thirukkachi, Thiruvenkatam, Thiruvekkā, and Thiruvelukkaippādi.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தண் குளிர்ந்த; துழாயார் துளசி மாலை அணிந்துள்ள; தாம் பெருமான் ஒரு நாளும்; கடவார் இந்த இடங்களிலிருந்து நீங்காமல்; உறைந்ததுவும் நித்யவாஸம் பண்ணுமிடங்கள்; சிறந்த அனைத்திலும் சிறந்ததான; என் சிந்தையும் என் சிந்தையும்; செங் கண் சிவந்த கண்களையுடைய; அரவும் ஆதிசேஷனும்; நிறைந்த நிறைந்த; சீர் செல்வத்தையுடைய; நீள் பெரிய; கச்சியுள்ளும் காஞ்சீபுரமும்; வேங்கடமும் திருமலையும்; வெஃகாவும் திருவெக்காவும்; வேளுக்கை திருவேளுக்கையும்; பாடியுமே ஆகிய ஸ்தலங்களாகும்
thaN thuzhAyAr thAm emperumAn who is adorning the cool, thuLasi garland; kadavAr not leaving for even one day; uRaindhadhuvum the places where he took permanent residence; siRandha en sindhaiyum my heart which is the greatest (amongst all); sem kaN aravum thiruvananthAzhwAn (AdhiSEshan) who has reddish eyes; niRaindha sIr having abundant wealth; nIL expansive; kachchiyuLLum the divine town of kachchi (present day kAnchIpuram); vEngadamum the divine abode of thirumalai; vehkAvum the divine abode of thiruvhkA; vELukkaip pAdiyumE the divine abode of thiruvELukkai

MUT 34

2315 அன்றிவ்வுலகம் அளந்தவசைவேகொல்? *
நின்றிருந்துவேளுக்கைநீள்நகர்வாய் * - அன்று
கிடந்தானைக்கேடில்சீரானை * முன்கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண்.
2315 அன்று இவ் உலகம் * அளந்த அசைவே கொல்? *
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் ** - அன்று
கிடந்தானைக் * கேடு இல் சீரானை * முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண் -34
2315
anRu ivvulakam * aLantha asaivEkol, *
ninRirunthu vELukkai neeL_nakarvāy, * - anRu
kidanthānaik * kEdilseerānai, * mun kancaik
kadanthānai * nencamE! kāN. 34

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2315. Is he exhausted because he measured the world at Mahābali’s sacrifice? O heart, see! The faultless lord who killed the Asuran Kamsan sitting in Thiruvelukkai, and recline- on Adisesha on the ocean.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! மனமே; அன்று முன்பு; இவ்வுலகம் இவ்வுலகங்களை; அளந்த அளந்த; அசைவே கொல்? களைப்போ?; வேளுக்கை வேளுக்கையிலே; நின்று இருந்து வீற்றிருந்தும்; நீள் நகர்வாய் திருவெக்காவில்; அன்று அன்று; கிடந்தானை பள்ளிகொண்டவனும்; கேடில் ஒரு நாளும் குற்றமில்லாத; சீரானை கல்யாண குணங்களுடையவனும்; முன் கஞ்சை முன்பு கம்சனை; கடந்தானை அழித்த பெருமானை; காண் கண்டு வணங்கவும்
nenjamE Oh heart!; anRu once upon a time; ninRu standing; ivvulagam all these worlds; aLandha of measuring; asavE kol is it due to exhaustion; vELukkai at thiruvELukkai (a divine abode in kAnchIpuram); irundhu in sitting posture; nIL nagar vAy in the great divine abode (of thiruvehkA, another divine abode in kAnchIpuram); anRu once upon a time; kidandhAnai one who took reclining posture; kEdu il sIrAnai one who has auspicious qualities which will never get destroyed; mun once upon a time; kanjan kamsan; kadandhAnai emperumAn who killed; kAN keep meditating

MUT 62

2343 விண்ணகரம்வெஃகா விரிதிரைநீர்வேங்கடம் *
மண்ணகரம்மாமாடவேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார்திருவரங்கம்தென்கோட்டி *
தன்குடங்கைநீரேற்றான்தாழ்வு.
2343 விண்ணகரம் வெஃகா * விரி திரை நீர் வேங்கடம் *
மண் நகரம் மா மாட வேளுக்கை ** - மண்ணகத்த
தென் குடந்தை * தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி *
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
2343
viNNagaram veqkā * virithirain^eer vEngadam, *
maNNakaram māmāda vELukkai, * - maNNakattha
then_kudanthai * thEnār thiruvarangam then_kOtti, *
than_kudangai neerERRān thāzvu. 62

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2343. The lord who took three feet of land from Mahābali and measured the world after receiving a promise from him with water poured on his hands stays in Thiruvinnagaram, in Thiruvekka surrounded by ocean with rolling waves, in Thiruvenkatam, in Mannakaram, in Thiruvelukkai filled with beautiful palaces, in Thirukkudandai in the south, in sweet Thiruvarangam surrounded with groves dripping with honey and in southern Thirukkottiyur.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணகரம் திருவிண்ணகரம்; வெஃகா திருவெக்கா; விரி திரை விரிந்து அலைகளோடு கூடின; நீர் வேங்கடம் நீர்வளமுள்ள திருமலை; மண் பூமியில் இதுவே; நகரம் நகரமெனத்தக்க; மா மாட பெரிய மாடங்களையுடைய; வேளுக்கை திருவேளுக்கை; மண்ணகத்த பூமிக்கு நடுநாயகமான; தென் குடந்தை அழகிய திருக்குடந்தை; தேனார் தேன்வெள்ளம் பாயும்; திருவரங்கம் திருவரங்கம்; தென்கோட்டி தென் திருக்கோட்டியூர்; தன் ஆகியவைகளை தன்; குடங்கை உள்ளங்கையால்; நீர் தான நீர்; ஏற்றான் பெற்ற பெருமான்; தாழ்வு தங்குமிடங்களாம்
viNNagaram thiruviNNagaram (a divine abode in kumbakONam); vehkA thiruvehkA (a divine abode in kAnchIpuram); viri thirai nIr vEngadam thirumalai where there is plenty of water resource with splashing waves; maNNagaram only this is a city on earth; mA mAdam vELukkai thiruvELukkai (a divine abode in kAnchIpuram) which has huge mansions; maN agaththa then kudandhai the beautiful thirukkudandhai (kumbakONam) which is at the centre of earth; thEn Ar thiruvarangam the divine thiruvarangam town which has flood of honey (inside the surrounding gardens); then kOtti the divine thirukkOttiyUr on the southern side; than kudangai in his palm; nIr ERRAn emperumAn who took water (from mahAbali as symbolic of accepting alms); thAzhvu are the places of residence where emperumAn stays with modesty

PTM 17.67

2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -
2779 கோட்டியூர் அன்ன உருவின் அரியை * திருமெய்யத்து
இன் அமுதவெள்ளத்தை இந்தளூர் அந்தணனை *
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை *
மன்னிய பாடகத்து எம் மைந்தனை * 69
kOttiyoor-anna vuruvin ariyai, * thirumeyyatthu-
innamudha veLLatthai inthaLoor andhaNanai, *
mannum madhitkacchi vELukkai āLariyai, *
manniya pādakatthu em maindhanai, * (69)

Ragam

நாதநாமக்ரியை

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2779. He has the form of a man-lion in Thirukkottiyur, a flood of sweet nectar and the god of Thirumeyyam, the good Andanan of Thiruvindalur, the man-lion of Thiruvelukkai in Thirukkachi surrounded with strong forts. He is the young god of Thiruppādagam, (69)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோட்டியூர் திருக்கோட்டியூரில்; அன்ன உருவில் விலக்ஷணமாக இருக்கும்; அரியை நரசிம்ம மூர்த்தியை; திருமெய்யத்து திருமெய்யத்திலிருக்கும்; இன் அமுத இனிய அமுத; வெள்ளத்தை வெள்ளத்தை; இந்தளூர் திருவிந்தளூரிலிருக்கும்; அந்தணனை அந்தணனை; மன்னு அழகிய; மதிள் மதிள்களையுடைய; கச்சி காஞ்சீபுரத்தில்; வேளுக்கை திருவேளுக்கை என்னும் இடத்திலிருக்கும்; ஆள் அரியை நரசிம்ம மூர்த்தியை; பாடகத்து திருப்பாடகத்தில்; மன்னிய வாஸம் செய்யும்; எம் மைந்தனை எம் மைந்தனை
kOttiyUr at thirukkOttiyUr; anna uruvil ariyai as narasimhamUrththy (emperumAn’s divine form with lion face and human body) who has such (distinguished) divine form; thiru meyyaththu in thirumeyyam; in amudham veLLaththai being greatly enjoyable as a sweet ocean of nectar; indhaLUr at thiruvindhaLUr; andhaNanai being supremely merciful; kachchi in the town of kAnchIpuram; vELukkai ALariyai as narasimha in the divine abode of thiruvELukkai; pAdagaththu manniya em maindhanai as our youthful entity at thiruppAdagam where he has taken permanent residence