Chapter 1

Āzhvār laments from being imprisoned by sensory organs - (உள் நிலாவிய)

இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்
It makes Āzhvār shiver with great apprehension when he ponders on what more suffering he would incur and face if he continues to stay alive in this world.
இவ்வுலகில் இருந்தால் இன்னும் என்னென்ன துன்பம் விளையுமோ என்று அஞ்சி நடுங்கி ஓலமிடுகிறார் ஆழ்வார்.
Verses: 3453 to 3463
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழம்பஞ்சுரம்
Timing: AFTERNOON
Recital benefits: will have no results of their karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.1.1

3453 உண்ணிலாவியஐவரால்குமைதீற்றி என்னைஉன்பாதபங்கயம் *
நண்ணிலாவகையே நலிவான்இன்னுமெண்ணுகின்றாய் *
எண்ணிலாப்பெருமாயனே! இமையோர்களேத்தும்உலகம் மூன்றுடை *
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னையாள்வானே. (2)
3453 ## உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி * என்னை உன் பாதபங்கயம் *
நண்ணிலாவகையே * நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் **
எண் இலாப் பெரு மாயனே! இமையோர்கள் ஏத்தும் * உலகம் மூன்று உடை *
அண்ணலே அமுதே அப்பனே * என்னை ஆள்வானே (1)
3453 ## ul̤ nilāviya aivarāl kumaitīṟṟi * ĕṉṉai uṉ pātapaṅkayam *
naṇṇilāvakaiye * nalivāṉ iṉṉum ĕṇṇukiṉṟāy **
ĕṇ ilāp pĕru māyaṉe! imaiyorkal̤ ettum * ulakam mūṉṟu uṭai *
aṇṇale amute appaṉe * ĕṉṉai āl̤vāṉe (1)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, my nectarean Lord, great Benefactor, adored by Nithyasuris, you control Māyā of unlimited dimensions. My Father, Master of all worlds, do You intend for me, Your servant, to be tormented by the five senses within, preventing me from attaining Your lovely lotus feet?

Explanatory Notes

(i) The Āzhvār questions the propriety of his being made a prey to the senses haunting him from within, by being kept still in this body by the Lord. Unlike the external enemies who are quite visible and inflict injuries through weapons etc., the five senses, constituting the hidden enemies, torment the individual souls in ever so many ways, a very pathetic and intolerable + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
எண்ணிலா அளவிடமுடியாத ப்ரக்ருதி தத்வத்தை; பெரு மாயனே! உபகரணமாக உடையவனே!; இமையோர்கள் தேவர்களாலே; ஏத்தும் துதிக்கப்படுபவனும்; உலகம் மூன்று உடை மூவுலகங்களையும் உடைய; அண்ணலே! ஸ்வாமியே!; அமுதே! அமுதம் போன்றவனே!; அப்பனே! என் அப்பனே!; என்னை ஆள்வானே! என்னை ஆள்பவனே!; உள் நிலாவிய என் உள்ளே வாழும்; ஐவரால் ஐந்து இந்திரியங்களால்; குமை தீற்றி என்னை துயரப்படுத்தி என்னை; உன் பாத பங்கயம் உன் திருவடித் தாமரைகளை; நண்ணிலா வகையே நான் அணுக முடியாதபடி; இன்னம் இன்னமும்; நலிவான் துன்பப் படுத்த; எண்ணுகின்றாய் எண்ணுகின்றாயோ?
aivarāl with the senses; kumai thīṝi torture; ennai me (who surrendered unto you fearing them); un you who are apt, enjoyable; pādha pangayam divine feet; naṇṇilā vagaiyĕ to not reach; innam even after having acquired the urge (as said in thiruvāimozhi 6.9.9 “kāttip paduppāyŏ” (are you planning to finish me by revealing varieties of pleasures?)); nalivān torment (by placing in samsāram); eṇṇuginṛāy you are thinking;; eṇṇilā countless; peru unlimited; māyanĕ having the amaśing prakruthi thathvam (matter) as prakāram (form); imaiyŏrgal̤ by nithyasūris (who are untouched by samsāram and have unfailing knowledge); ĕththum praised; mūnṛu ulagam three types of chĕthanas (sentient beings) and achĕthanas (insentient entities); udai having them as subservient entities; aṇṇalĕ being the lord; amudhĕ naturally having eternal enjoyability; appanĕ being a benefactor right from the beginning; ennai me; āl̤vānĕ one who controls in all of these aspects!; kannalĕ having complete sweetness; amudhĕ not just that, but being the sustainer, and with enjoyability

TVM 7.1.2

3454 என்னையாளும்வன்கோவோரைந்திவைபெய்து இராப்பகல்மோதுவித்திட்டு *
உன்னைநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *
கன்னலே! அமுதே! கார்முகில்வண்ணனே! கடல்ஞாலம் காக்கின்ற *
மின்னுநேமியினாய்! வினையேனுடை வேதியனே!
3454 என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து * இராப்பகல் மோதுவித்திட்டு *
உன்னை நான் அணுகாவகை * செய்து போதிகண்டாய் **
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே! * கடல் ஞாலம் காக்கின்ற *
மின்னு நேமியினாய் * வினையேனுடை வேதியனே (2)
3454 ĕṉṉai āl̤um vaṉ ko or aintu ivai pĕytu * irāppakal motuvittiṭṭu *
uṉṉai nāṉ aṇukāvakai * cĕytu potikaṇṭāy **
kaṉṉale! amute! kār mukil vaṇṇaṉe! * kaṭal ñālam kākkiṉṟa *
miṉṉu nemiyiṉāy * viṉaiyeṉuṭai vetiyaṉe (2)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My most delicious Nectar, cloud-hued Lord, You wield the radiant discus that shields the ocean-bound worlds. You are understood through the Vedas, far beyond the reach of a sinner like me. Yet, You have left me to the cruel control of the five senses, keeping me away from You day and night.

Explanatory Notes

(i) Āzhvār to the Lord: My Lord, why should You at all endow me with the refractory senses, which upset the natural order of things and hold me in their cruel grip, day and night? You are so far away that I can’t even cry out my woes to you. The natural order of things would be: The individual soul is the vassal of the Lord, the mind is subordinate to the individual and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கன்னலே! கரும்பைப் போன்ற இனியவனே!; அமுதே! அமுதம் போன்றவனே!; கார் முகில் வண்ணனே! காளமேக நிறமுடையவனே!; கடல் ஞாலம் கடல் சூழந்த உலகங்களை; காக்கின்ற காக்கும்; மின்னு ஒளி பொருந்திய; நேமியினாய்! சக்கரத்தை உடையவனே!; உடை வேதியனே! வேதங்களால் அறியப்படுபவனே!; என்னை ஆளும் என்னை ஆளும்; வன் கோ ஓர் கொடிய இந்த; ஐந்து ஐந்து இந்திரியங்களையும்; இவை பெய்து ஏவி விட்டு; மோதுவித்திட்டு என் மீது மோத விட்டு; வினையேன் பாவியேனான நான்; இராப் பகல் இரவு பகல்; உன்னை நான் உன்னை நான்; அணுகா அணுக; வகை செய்து முடியாதபடி செய்து; போதிகண்டாய் தடுக்கின்றாய்!
kār mugil vaṇṇanĕ having the generosity without any restriction like dark clouds which help everyone; kadal surrounded by ocean; gyālam world; minnu radiant; nĕmiyināy having divine chakra; kākkinṛa being the protector, nourisher; vinayĕnudai to be heard by me who is having the sin which stops me from attaining you; vĕdhiyanĕ oh one who is revealed by vĕdham only!; ennai me (who is your servitor); āl̤um to be ruled over by them to be obedient; van very strong; having independence; ŏr distinguished; ivai these; aindhu five senses; peydhu using them against me to harm me; irāp pagal continuously throughout day and night; mŏdhuviththittu to be affected; unnai you who are apt and enjoyable; nān ī (who know your greatness); aṇugāvagai to not reach; seydhu do; pŏdhi kaṇdāy gone away from me; ādhi the root cause; āgi being

TVM 7.1.3

3455 வேதியாநிற்குமைவரால் வினையேனைமோதுவித்து * உன்திருவடிச்
சாதியாவகை நீ தடுத்தென்பெறுதி? அந்தோ! *
ஆதியாகியகலிடம்படைத்து உண்டுமிழந்து கடந்திடந்திட்ட *
சோதிநீள்முடியாய்! தொண்டனேன்மதுசூதனனே!
3455 வேதியாநிற்கும் ஐவரால் * வினையேனை மோதுவித்து * உன் திருவடிச்
சாதியாவகை * நீ தடுத்து என் பெறுதி? அந்தோ! **
ஆதி ஆகி அகல் இடம் படைத்து * உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட *
சோதி நீள் முடியாய் * தொண்டனேன் மதுசூதனனே (3)
3455 vetiyāniṟkum aivarāl * viṉaiyeṉai motuvittu * uṉ tiruvaṭic
cātiyāvakai * nī taṭuttu ĕṉ pĕṟuti? anto! **
āti āki akal iṭam paṭaittu * uṇṭu umizhntu kaṭantu iṭantiṭṭa *
coti nīl̤ muṭiyāy * tŏṇṭaṉeṉ matucūtaṉaṉe (3)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh Lord, with Your radiant long crown, You created the worlds, swallowed them during the deluge, and later brought them back. You spanned the worlds and pulled them from the deep waters. Oh, Slayer of Matu, you once captivated me, but now You shut me out from Your lovely feet, leaving me to struggle against the senses without rest. Alas, I do not understand how this benefits You, as I am just a sinner.

Explanatory Notes

(i) The Scriptures enjoin that the Brahmins should tend the ritualistic (sacramental) fire throughout life and stipulate the morning and the evening as the periods during which it should be done. The Āzhvār, however, yearned to serve the Lord all his life without any intermission whatever. But what is happening? He is cruelly dominated by the wayward senses without break. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஆதி ஆகி உலகத்துக்கு எல்லாம் காரணமானவனும்; அகல் இடம் அகன்ற இந்த உலகத்தை; படைத்து உண்டு படைத்து உண்டு காத்து; உமிழ்ந்து பின்பு ஸ்ருஷ்டித்தவனும்; கடந்து வாமனனாய் உலகத்தை அளந்தவனும்; இடந்திட்ட வராகமாய் உலகத்தைக் குத்தி எடுத்தவனும்; சோதி ஒளிமயமான; நீள் முடியாய்! நீண்ட முடியை உடையவனே!; தொண்டனேன் என்னை ஆட்கொண்ட; மதுசூதனனே! மதுசூதனனே!; ஐவரால் ஐந்து இந்திரியங்களால்; வேதியா நிற்கும் இடைவிடாதே நலியும்; வினையேனை பாவியான என்னை; உன் திருவடி உன் திருவடிகளை; சாதியாவகை அணுகவிடாதபடி; மோதுவித்து மோத விட்டு; நீ தடுத்து நீ தடை செய்து; என் பெறுதி? என்ன பயன் அடைந்தாய்?; அந்தோ! அந்தோ!
agal very expansive; idam universe; padaiththu create; uṇdu protect by placing in stomach (during deluge); umizhndhu spit out (subsequently); kadandhu measured (to eliminate others- claim of ownership); idandhu dig out (as varāha during intermediary deluge); sŏdhi radiance (revealing his supremacy over all); nīl̤ having tallness; mudiyāy one who is wearing the crown; thoṇdanĕn to me who is desirous of enjoying you; madhusūdhananĕ oh one who is capable of eliminating my hurdles like you eliminated [the demon] madhu!; vĕdhiyā niṛkum those who pierce through me to torment me; aivarāl with the five senses; vinaiyĕnai me who is sinner (in being unable to be protected by you); mŏdhuviththu to be affected; un you (who is protector of all); thiruvadi divine foot; sādhiyā vagai to not attain; you; thaduththu stopping; en what benefit; peṛudhi you get?; andhŏ alas! īmplying -the saviour has turned to be the tormentor-; yādhum all achĕthanas (insentient entities); yāvarum all chĕthanas (sentient beings)

TVM 7.1.4

3456 சூதுநானறியாவகை சுழற்றியோரைவரைக்காட்டி * உன்னடிப்
போதுநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *
யாதும்யாவருமின்றிநின்னகம்பாலொடுக்கி ஓராலின் நீளிலை *
மீதுசேர்குழவி! வினையேன்வினைதீர்மருந்தே!
3456 சூது நான் அறியாவகை * சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி * உன் அடிப்
போது நான் அணுகாவகை * செய்து போதிகண்டாய் **
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி * ஓர் ஆலின் நீள் இலை *
மீது சேர் குழவி * வினையேன் வினைதீர் மருந்தே (4)
3456 cūtu nāṉ aṟiyāvakai * cuzhaṟṟi or aivaraik kāṭṭi * uṉ aṭip
potu nāṉ aṇukāvakai * cĕytu potikaṇṭāy **
yātum yāvarum iṉṟi niṉ akampāl ŏṭukki * or āliṉ nīl̤ ilai *
mītu cer kuzhavi * viṉaiyeṉ viṉaitīr marunte (4)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

As a mere baby, You lay on a tender fig leaf, oh Lord, holding all things and beings within a corner of your stomach. You are the cure for this sinner's ills, yet You have confounded me and placed me in the snare of the five senses. By doing so, You have kept me far from Your lotus feet, which remain invisible and distant.

Explanatory Notes

The Āzhvār bitterly complains that:

(i) The Lord, who had weaned him away from the mischief of the senses and cured him of all his sins, has now exposed him to the serious risk of slipping back to his old ways;

(ii) The Lord has bewildered the Āzhvār who was looking upon His feet as the Sole Refuge, by bringing him once again under the cruel spell of the five senses + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
யாதும் சேதநப் பொருட்கள்; யாவரும் அசேதந பொருட்கள்; இன்றி நின் ஒன்றும் விடாமல் அனைத்தையும் உன்; அகம்பால் ஒடுக்கி வயிற்றில் வைத்துக் காத்து; ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் ஒரு ஆலிலை மீது; குழவி! கண்வளர்ந்த குழந்தையே!; வினையேன் பாவியான என்; வினைதீர் பாவங்களைப் போக்கும்; மருந்தே! மருந்து போன்றவனே!; ஓர் ஐவரை ஐந்து இந்திரியங்களை; காட்டி காட்டி; சூது நான் சூதினை நான்; அறியாவகை அறியாதபடி; சுழற்றி என்னை சுழலச் செய்து; உன் அடிப்போது நான் உன் திருவடிகளை நான்; அணுகாவகை செய்து அணுகமுடியாதபடி செய்து; போதிகண்டாய் என்னிடமிருந்து மறையலாமா?
inṛi without leaving anything behind; nin your; agampāl inside your divine stomach; odukki placing them in a corner; ŏr a (one which cannot be traced to a location where it sprouted from); ālin peepal tree-s; nīl̤ stretched out (due to having blossomed); ilai the leaf; mīdhu on top of; sĕr reclining (without realising that he is in the dangerous deluge); kuzhavi having childishness; vinaiyĕn my, who is embodiment of sin; vinai sin; thīr eliminating; marundhĕ oh one who is the medicine!; ŏr having distinguished strength; aivarai the five senses; kātti showing; nān ī (who am having the qualification for the ultimate goal); sūdhu apt goal; aṛiyāvagai to not know; suzhaṝi to bewilder in the worldly pleasures; un your (you, the companion in dangerous times); adip pŏdhu infinitely enjoyable divine foot which is like a lotus; nān ī (who has no other refuge); aṇugā vagai to not reach; seydhu do; pŏdhi kaṇdāy moved away from my vision; adal being set out to fight (to destroy the enemies of devotees); āzhi thiruvāzhi (divine chakra)

TVM 7.1.5

3457 தீர்மருந்தின்றியைந்துநோயடும் செக்கிலிட்டுத் திரிக்குமைவரை *
நேர்மருங்குடைத்தாவடைத்து நெகிழ்ப்பா னொக்கின்றாய் *
ஆர்மருந்தினியாகுவார்? அடலாழியேந்தியசுரர்வன்குலம் *
வேர்மருங்கறுத்தாய்! விண்ணுளார்பெருமானேயோ!
3457 தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் * செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை *
நேர் மருங்கு உடைத்தா அடைத்து * நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் **
ஆர் மருந்து இனி ஆகுவார் * அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் *
வேர் மருங்கு அறுத்தாய் * விண்ணுளார் பெருமானே ஓ! (5)
3457 tīr maruntu iṉṟi aintu noy aṭum * cĕkkil iṭṭut tirikkum aivarai *
ner maruṅku uṭaittā aṭaittu * nĕkizhppāṉ ŏkkiṉṟāy **
ār maruntu iṉi ākuvār * aṭal āzhi enti acurar vaṉ kulam *
ver maruṅku aṟuttāy * viṇṇul̤ār pĕrumāṉe o! (5)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord of Nithyasuris, You have destroyed the mighty hordes of Acurar with Your radiant discus. It feels like You have pushed me into the grinding mill of the five senses, where I am crushed with no escape. It seems You are loosening Your hold on me. Who then will be my source of life and strength?

Explanatory Notes

(i) The grinding mill is the human body where the five senses are ever active with the relative activities and their ramifications leaving no chance for the soul to thrive, crushing it beyond recognition and making redemption impossible, even by the omnipotent Lord. By putting it down as an incurable state of affairs, the Āzhvār only stresses the severity of the impact + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அடல் ஆழி தாக்கவல்ல சக்கரத்தை; ஏந்தி கையில் ஏந்தி; அசுரர் அசுரர்களின்; வன் குலம் பிரபலமான குலத்தை; வேர் மருங்கு பக்க வேரோடு; அறுத்தாய்! அறுத்தவனே!; விண்ணுலார் நித்யஸூரிகளின்; பெருமானே ஓ! ஓ! பெருமானே; தீர் மருந்து இன்றி மாற்று மருந்தில்லாதபடி; ஐந்து ஐந்து இந்திரியங்களாகிய; நோய் அடும் நோயால் முடிக்கும்படி; செக்கில் இட்டு செக்கில் இட்டு; திரிக்கும் மயங்கச் செய்யும்; ஐவரை ஐந்து இந்திரியங்களையும்; நேர் மருங்கு எதிரும் புதிரும் பக்கமுமாய்; உடைத்தா அடைத்து அடைத்து நிறுத்தி; நெகிழ்ப்பான் நெகிழ விடுவான் போல்; ஒக்கின்றாய் இருக்கின்றாயே; இனி மருந்து இனி மருந்தாக இருந்து உதவுபவர்; ஆகுவார் ஆர்? யார் ஆவார்? யார் உளர்?
ĕndhi holding; asurar asuras (demons) who are unfavourable; van very strong; kulam groups; marungu vĕr with the roots in sideways; aṛuththāy being the one who severed; viṇṇul̤ār for the residents of paramapadham; perumānĕ ŏh leader who is infinitely enjoyable!; thīr pacifier; marundhu remedial medicine; inṛi to not have; aindhu five types of; nŏy by diseases (subtle elements such as ṣabdha (sound), sparṣa (touch), rūpa (form), rasa (taste) and gandha (smell)); adum which can finish; sekkil in the mortar of body, which can cause bewilderment; ittu placing; thirukkum bewildering; aivarai five senses; nĕr in front of me; marungu in the side; udaiththā to have; adaiththu placing; negizhppān okkinṛāy you are breaking me;; ini now (after you who are the eliminator of hurdles, are nurturing the hurdles); marundhu medicine; āguvār be; ār who?; viṇ ul̤ār being residents of paramapadham; perumāṛku to you who are greater than all

TVM 7.1.6

3458 விண்ணுளார்பெருமாற்கடிமைசெய்வாரையும்செறும் ஐம்புலனிவை *
மண்ணுளென்னைப்பெற்றால் என்செய்யாமற்றுநீயும் விட்டால்? *
பண்ணுளாய்! கவிதன்னுளாய்! பத்தியினுள்ளாய்! பரமீசனே! * வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.
3458 விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் * ஐம்புலன் இவை *
மண்ணுள் என்னைப் பெற்றால் * என் செய்யா மற்று நீயும் விட்டால்? **
பண்ணுளாய் கவி தன்னுளாய் * பத்தியின் உள்ளாய்! பரமீசனே * வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய்! * சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே (6)
3458 viṇṇul̤ār pĕrumāṟku aṭimai cĕyvāraiyum cĕṟum * aimpulaṉ ivai *
maṇṇul̤ ĕṉṉaip pĕṟṟāl * ĕṉ cĕyyā maṟṟu nīyum viṭṭāl? **
paṇṇul̤āy kavi taṉṉul̤āy * pattiyiṉ ul̤l̤āy! paramīcaṉe * vantu ĕṉ
kaṇṇul̤āy nĕñcul̤āy! * cŏllul̤āy! ŏṉṟu cŏllāye (6)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Supreme Lord, You know the depth and voice of my yearning. You reside in my eyes, mind, and the words I speak. Can’t you come to me and offer a word of comfort? The five senses can taint even the Nithyasuris devoted to You if they come to this earthly soil. What won't they do to me if you abandon me?

Explanatory Notes

Even exalted persons, in the upper regions, including SriVaikuntam are not above the mischief of the senses. That being so, the Āzhvār’s fears are indeed well-founded, the more so, when he stays in this physical body and in this land of dark nescience. To cite but a few instances of the havoc played by the senses on noted personages, let us take first, Indra, the Chief + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
விண்ணுலார் விண்ணுலகில் உள்ளவர்களின்; பெருமாற்கு தலைவனான உனக்கு; அடிமை செய்வாரையும் அடிமை செய்வாரையும்; மண்ணுள் இந்த லோகத்தில் இருப்பவரையும்; செறும் துன்புறுத்தும்; ஐம்புலன் இவை இந்த ஐந்து இந்திரியங்கள்; என்னைப் பெற்றால் என்னிடம் வந்து சேர்ந்தால்; என் செய்யா இவை என்னதான் செய்ய மாட்டா?; மற்று நீயும் மேலும் நீயும்; விட்டால் கைவிட்டால் எனக்கு உதவுபவர் யார் உளர்?; பண்ணுளாய்! என் இசையில் இருப்பவனே!; கவி தன்னுளாய்! என் கவிதையில் இருப்பவனே!; பத்தியின் உள்ளாய்! என் பக்தியில் இருப்பவனே!; பரமீசனே பரம ஈசனே!; கண்ணுளாய்! என் கண்களில் இருப்பவனே!; நெஞ்சுளாய்! என் மனதில் இருப்பவனே!; சொல்லுளாய்! என் சொல்லில் இருப்பவனே!; வந்து என் நீ வந்து எனக்கு; ஒன்று ஆறுதலாக ஒரு வார்த்தை; சொல்லாயே கூறி அருளவேண்டும்
adimai seyvāraiyum those who serve, like vainadhĕya (garudāzhwān); maṇ ul̤ this world, which is a natural habitat [for the senses]; seṛum overcome and torment; ivai these; aimpulan five senses; ennai me who lacks strength to overcome them; peṝāl when they find; maṝum further; nīyum you (who are the controller); vittāl if abandon me; en what; seyyā will not do?; en my (who is calling you with involvement); paṇ the tune of my wailing; ul̤ āy being inside; kavi than the poem which is the placeholder for the tune; ul̤ āy being inside; paththiyin of the desire (which is the cause for such poem); ul̤l̤āy being the object; param being supreme (so that everything is at your disposal); īsanĕ being the controller (lord); kaṇ eye; ul̤āy being inside; nenju heart; ul̤āy being inside; sol speech; ul̤āy being present inside; vandhu arriving here; onṛu a word; sollāy mercifully speak.; anṛu on that day (when he surrendered unto you having faith in your nithyathva (eternity)); dhĕvar dhĕvas

TVM 7.1.7

3459 ஒன்றுசொல்லிஒருத்தினில்நிற்கிலாத ஒரைவர்வன்கயவரை *
என்றுயான்வெல்கிற்பன் உன்திருவருளில்லையேல்? *
அன்றுதேவரசுரர்வாங்க அலைகடலரவமளாவி * ஓர்
குன்றம்வைத்தஎந்தாய்! கொடியேன்பருகின்னமுதே.
3459 ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத * ஓர் ஐவர் வன் கயவரை *
என்று யான் வெல்கிற்பன் * உன் திருவருள் இல்லையேல்? **
அன்று தேவர் அசுரர் வாங்க * அலைகடல் அரவம் அளாவி * ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! * கொடியேன் பருகு இன் அமுதே! (7)
3459 ŏṉṟu cŏlli ŏruttiṉil niṟkilāta * or aivar vaṉ kayavarai *
ĕṉṟu yāṉ vĕlkiṟpaṉ * uṉ tiruvarul̤ illaiyel? **
aṉṟu tevar acurar vāṅka * alaikaṭal aravam al̤āvi * or
kuṉṟam vaitta ĕntāy! * kŏṭiyeṉ paruku iṉ amute! (7)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My Lord, You are the grand Nectar drunk by sinners like me. You once planted a huge mountain in surging waters and made the Devas and Asuras churn it with a serpent. Without Your sweet grace, how can I conquer the senses, which are notoriously fickle and do not stick to one thing or another?

Explanatory Notes

(i) The churning episode reveals the extent? to which the Lord would go to help His devotees in multifarious roles, and yet, if He does not go to the rescue of the Āzhvār, how can he at all get the better of the notoriously fickle senses?

(ii) The Nectar grand, drunk by this sinner: Far from being satisfied with the interior bliss with which the Lord has endowed him + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அன்று தேவர் முன்பு தேவர்களும்; அசுரர் வாங்க அசுரர்களும் பின் வாங்க; அலைகடல் அலை கடலை; அரவம் வாசுகி என்னும் பாம்பை; அளாவி கயிறாகச் சுற்றி; ஓர் குன்றம் மந்தர மலையை; வைத்த மத்தாக நாட்டி; எந்தாய்! கடைந்த பெருமானே!; கொடியேன் பாவியேனான நானும்; பருகு பருகும்படியான; இன் அமுதே! இனிய அமுதமாய் இருப்பவனே!; ஓர் ஐவர் ஒப்பற்ற இந்த ஐந்து இந்திரியங்கள்; ஒன்று சொல்லி ஒரு விஷயத்தைச் சொல்லி; ஒருத்தினில் அதிலேயே நிலைத்து நில்லாது; நிற்கிலாத மற்றொன்றில் இழுத்துச் செல்லும்; வன் குறும்புகள் செய்யும் வலிய; கயவரை கயவர்களை; உன் திரு அருள் உன் திரு அருள்; இல்லையேல் இல்லையாகில்; என்று யான் என்றைக்கு நான்; வெல்கிற்பன் வெல்ல வல்லவனாவேன்?
asurar asuras (who united with them for the nectar); vānga to pull; alai having rising waves; kadal in the ocean; aravam snake named vāsuki; al̤āvi coiled around; ŏr distinguished; kunṛam manthara mountain; vaiththa manifesting the magnanimity of how you anchored it firmly; endhāy being my master; kodiyĕn having the anguish (of desiring to enjoy you only) unlike them who were satisfied with getting the nectar; parugu to drink; in amudhĕ ŏh one who is eternally enjoyable!; un your; thiruvarul̤ infinite mercy; illaiyĕl if not present; onṛu find something and give; solli saying; oruththinil in a steady manner; niṛkilādha without being focussed; ŏr individually independent and not matching together; aivar five senses; van very strong; kayavarai though being together [with me], the unknown evil entities; yān ī who am weak; enṛu when; velgiṛpan will win over?; en for me; ammā being the natural lord

TVM 7.1.8

3460 இன்னமுதெனத்தோன்றி ஓரைவர்யாவரையும்மயக்க * நீவைத்த
முன்னமாயமெல்லால் முழுவேரரிந்து * என்னையுன்
சின்னமும்திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக்கைதொழவே யருளெனக்கு *
என்னம்மா! என்கண்ணா! இமையோர்தம்குலமுதலே!
3460 இன் அமுது எனத் தோன்றி * ஓர் ஐவர் யாவரையும் மயக்க * நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் * முழு வேர் அரிந்து ** என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் * சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு *
என் அம்மா என் கண்ணா * இமையோர் தம் குலமுதலே (8)
3460 iṉ amutu ĕṉat toṉṟi * or aivar yāvaraiyum mayakka * nī vaitta
muṉṉam māyam ĕllām * muzhu ver arintu ** ĕṉṉai uṉ
ciṉṉamum tiru mūrttiyum * cintittu ettik kaitŏzhave arul̤ ĕṉakku *
ĕṉ ammā ĕṉ kaṇṇā * imaiyor tam kulamutale (8)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, Chief of Nithyasuris, I invoke your grace to cut out, root, and branch, my age-long Saṃsāra. The five senses, disguised as nectarous pleasures, cast their spell on everyone, being Your creation. Please fix my mind on Your insignia—the conch and discus—and Your exquisite form. I will sing Your glory and worship You all the time.

Explanatory Notes

The sensual pleasures of sound, sight, smell, touch and taste, assume the garb of happiness, to begin with and eventually throw the participants into the abyss of endless miseries. Hence, the request of the Āzhvār that he be studiously kept beyond their mischief so that he may constantly meditate on the Lord’s exquisite Form, wondrous weapons etc, sing His glory and worship Him, thus involving himself in such exclusive participation, by word, deed and thought.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
என் அம்மா! என் ஸ்வாமியே!; என் கண்ணா! என் கண்ணனே!; இமையோர் தம் நித்யஸூரிகளின்; குலமுதலே! குலத்துக்குத் தலைவனே!; ஓர் ஐவர் ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களால்; இன் அமுது என இனிய அமிருதம் போல்; தோன்றி தோன்றி; யாவரையும் அனைவரையும்; மயக்க மயக்கும் படியாக; முன்னம் நீ வைத்த நீ உண்டாக்கி வைத்த; மாயம் அநாதியான ஸம்ஸாரம் என்னும்; எல்லாம் மாயம் எல்லாம்; முழுவேர் அரிந்து அடியோடு வேருடன் அறுத்து; என்னை உன் நான் உன்னுடைய; சின்னமும் சின்னங்களான சங்கு சக்கரத்தையும்; திரு மூர்த்தியும் உன் அழகிய மூர்த்தியையும்; சிந்தித்து நெஞ்சார நினைத்து; ஏத்தி வாழ்த்தி வணங்கித் துதித்து; கைதொழவே கைகளால் தொழும்படியாகவும்; அருள் எனக்கு எனக்கு அருள் புரிய வேண்டும்
en kaṇṇā manifesting your simplicity to me; imaiyŏr tham kulam for the group of nithyasūris; mudhalĕ ŏh one who is the cause for the sustenance etc!; ŏr distinguished; aivar by the five senses; in sweet; amudhu nectar; ena appear to be enjoyable like; thŏnṛi manifesting; yāvaraiyuum even brahmā et al who are very knowledgeable; mayakka to cause bewilderment; you (who are omnipotent); vaiththa (created and) placed; munnam since time immemorial; māyam matters known by the term māyā, since they cause ignorance; ellām all; muzhu fully; vĕr root; arindhu sever; ennai me who is fearful of samsāram; un your; chinnamum distinguished symbols such as ṣanka, chakra etc; thiru decorated by them; mūrththiyum the divine form; sindhiththu think with my mind; ĕththi praise with my speech; kai with the hand; thozha to worship; enakkĕ specially for me; arul̤ bestow your mercy.; nilam earth; mudhal starting with

TVM 7.1.9

3461 குலமுதலடுந்தீவினைக் கொடுவன்குழியினில்வீழ்க்கு மைவரை *
வலமுதல்கெடுக்கும் வரமேதந்தருள்கண்டாய் *
நிலமுதலினியெவ்வுலகுக்கும் நிற்பனசெல்வனவென * பொருள்
பலமுதல்படைத்தாய்! என்கண்ணா! என்பரஞ்சுடரே!
3461 குலம் முதல் அடும் தீவினைக் * கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை *
வலம் முதல் கெடுக்கும் * வரமே தந்தருள்கண்டாய் **
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் * நிற்பன செல்வன என * பொருள்
பல முதல் படைத்தாய் * என் கண்ணா என் பரஞ்சுடரே (9)
3461 kulam mutal aṭum tīviṉaik * kŏṭu vaṉ kuzhiyiṉil vīzhkkum aivarai *
valam mutal kĕṭukkum * varame tantarul̤kaṇṭāy **
nilam mutal iṉi ĕv ulakukkum * niṟpaṉa cĕlvaṉa ĕṉa * pŏrul̤
pala mutal paṭaittāy * ĕṉ kaṇṇā ĕṉ parañcuṭare (9)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Kaṇṇā of supreme splendor, you created the worlds and everything in them, both still and moving. I pray to You to grant me strong strength. Help me eliminate the five senses that breed sins, which can destroy an entire clan.

Explanatory Notes

The sins committed by the sense-buried affect generations, back and forth, c.f. Hanumān’s advice to Rāvaṇa, that one of the latter’s calibre and wisdom should desist from committing sins which shall destroy the entire race. The Āzhvār wants the Lord to dower on him the strength which will make him tougher than this tough fountain-source of all sins, so as to demolish it effectively.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நிலம் முதல் பூமி முதலாக; இனி எவ்வுலகுக்கும் அனைத்து உலகங்களுக்கும்; நிற்பன செல்வன என ஸ்தாவர ஜங்கம ரூபமான; பல பொருள் பொருள்கள் பலவற்றையும்; முதல் படைத்தாய்! முதலில் படைத்தவனே!; என் கண்ணா! என் கண்ணனே!; என் பரஞ்சுடரே! என் பரஞ்சுடரே!; ஐவரை ஐந்து இந்திரியங்களின்; குலம் குலத்தை; முதல் அடும் வேரோடே முடிக்கவல்ல; தீவினைக் கொடு பாபங்களை விளைக்கவல்ல; வன் குழியினில் படுகுழியில்; வீழ்க்கும் தள்ளக்கூடிய; வலம் முதல் மிகுந்த பலத்தோடே; கெடுக்கும் வரமே முடிக்கும் படியான மிடுக்கை; தந்து அருள் கண்டாய் தந்தருள வேண்டும்
ini further; evvulagukkum for all worlds; niṛpana selvana ena immovable and movable; porul̤ objects; pala many; mudhal in the beginning; padaiththāy being the creator; en kaṇṇā manifesting simplicity of appearing as krishṇa (for the protection of the world) to me; en being enjoyable to me; param sudarĕ oh one who is having infinitely radiant form!; kulam clan; mudhal with the primary ancestor; adum capable of destroying fully; thī burning; vinai nurturing sins; kodu cruel; van strong sensual pleasures; kuzhiyinil deep pit; vīzhkkum able to push; aivarai five senses; vala mudhal with the evil inclination which is the cause for one-s strength; kedukkum finishing; valamĕ strength only; thandhu arul̤ kaṇdāy kindly bestow; mun previously; paravai the expansive ocean

TVM 7.1.10

3462 என்பரஞ்சுடரே! என்றுஉன்னையலற்றி உன்னிணைத் தாமரைகட்கு *
அன்புருகிநிற்குமதுநிற்கச் சுமடுதந்தாய் *
வன்பரங்களெடுத்து ஐவர்திசைதிசை வலித்தெற்றுகின்றனர்
முன்பரவைகடைந்து அமுதங்கொண்டமூர்த்தியோ!
3462 என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி * உன் இணைத் தாமரைகட்கு *
அன்பு உருகி நிற்கும் * அது நிற்கச் சுமடு தந்தாய் **
வன் பரங்கள் எடுத்து ஐவர் * திசை திசை வலித்து எற்றுகின்றனர் *
முன் பரவை கடைந்து * அமுதம் கொண்ட மூர்த்தி ஓ (10)
3462 ĕṉ parañcuṭare ĕṉṟu uṉṉai alaṟṟi * uṉ iṇait tāmaraikaṭku *
aṉpu uruki niṟkum * atu niṟkac cumaṭu tantāy **
vaṉ paraṅkal̤ ĕṭuttu aivar * ticai ticai valittu ĕṟṟukiṉṟaṉar *
muṉ paravai kaṭaintu * amutam kŏṇṭa mūrtti o (10)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Oh, Lord, You churned the ocean once and delivered the nectar. Bound to utter Your sweet names, oh Splendour Supreme, steeped in love unto Your lotus feet. Yet, You bestowed this burden of a body upon me, causing me to groan under its weight and shattering the five senses. Alas, I can hardly bear their indifferent pulls in different directions.

Explanatory Notes

The Āzhvār is puzzled how the Lord gives nectar to some and the sense-bound body to some, like unto a deadly poison. The very body, dowered by Him for God-enjoyment, has deteriorated into a facile field for the foul play of the domineering senses, each pulling in a different direction; oh, what a tragic picture, like unto a Prince standing on the road-side, wearing a head-gear for carrying load, iṅ place of his regal crown, being forced by strangers to carry their loads!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
முன் பரவை கடைந்து முன்பு கடலைக் கடைந்து; அமுதம் கொண்ட அமுதத்தை எடுத்து; மூர்த்தி! உதவிய ஸ்வாமியே!; என் பரஞ்சுடரே! என் ஒளிப்பிழம்பானவனே!; என்று உன்னை அலற்றி என்று உன்னை அழைத்து; உன் இணைத் தாமரைகட்கு உன் திருவடிகளுக்கு; அன்பு உருகி அன்புருகி நெகிழ்ந்து; நிற்கும் நிற்பதே இயல்பாக இருக்க வேண்டும்; அது நிற்க இதற்கு மாறாக; சுமடு சரீரமாகிற சும்மாட்டை; தந்தாய் தந்தாயே; ஐவர் ஐந்து இந்திரியங்களும்; வன் பரங்கள் விஷயபாரங்களை; எடுத்து சுமத்தி; திசை திசை திசைகள் தோறும்; வலித்து இழுத்து; எற்றுகின்றனர் ஓ! செல்கின்றன அந்தோ!
kadaindhu churned; amudham nectar (which is the essence of that ocean); koṇda accepting and offering it (to dhĕvas); mūrththi ŏh one who is having lordship!; en for me; param sudarĕ ŏh infinitely radiant enjoyable entity!; enṛu saying so; unnai seeing you; alaṝi calling you incohesively due to [my] attachment; un your; iṇai mutually fitting; thāmaraigatku for the pair of divine feet; anbu out of love; urugi becoming fluid; niṛkum remaining; adhu that state of perfect essence; niṛka while that is the nature; sumadu body which is a baggage [burden]; thandhāy you gave;; van very strong; parangal̤ sensual pleasures; eduththu using; aivar five senses; thisai thisai the directions of their liking; valiththu pulling; eṝuginṛanar tormenting.; ŏ what a disaster!; guṇangal̤ qualities (in the form of sathva (goodness), rajas (passion) and thamas (ignorance)); koṇda having

TVM 7.1.11

3463 கொண்டமூர்த்தியோர்மூவராய்க் குணங்கள்படைத்தளித்துக்கெடுக்கும் * அப்
புண்டரீகக்கொப்பூழ்ப் புனற்பள்ளியப்பனுக்கே *
தொண்டர்தொண்டர்தொண்டர்தொண்டன்சடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும் *
கண்டுபாடவல்லார் வினைபோம்கங்குலும்பகலே. (2)
3463 ## கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் * குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் * அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் * புனல் பள்ளி அப்பனுக்கே **
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் * சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும் *
கண்டு பாட வல்லார் * வினை போம் கங்குலும் பகலே (11)
3463 ## kŏṇṭa mūrtti or mūvarāyk * kuṇaṅkal̤ paṭaittu al̤ittu kĕṭukkum * ap
puṇṭarīkak kŏppūzhp * puṉal pal̤l̤i appaṉukke **
tŏṇṭar tŏṇṭar tŏṇṭar tŏṇṭaṉ * caṭakopaṉ cŏl āyirattul̤ ip pattum *
kaṇṭu pāṭa vallār * viṉai pom kaṅkulum pakale (11)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The sins of those who sing day and night these ten songs out of the thousand songs , composed by Catakopan, the vassal of Lord Padmanabhan, with fine understanding, are gone. Lord Padmanabhan, as the Trinity, carries out the functions of creation, preservation, and dissolution. During the deluge, He reclined on the vast expanse of water.

Explanatory Notes

(i) Lord Narayana, on whose navel emerged the lotus flower on which Brahma appeared, carries out the triple functions of creation, sustentation and dissolution, the
middle one by Himself and the other two as the Internal Controller of Brahmé. and Siva.

(ii) The Alvér seeks to assuage his mental agony in talking about the Senses and sensuality, by going the whole hog out in the service of the devout, like unto a parched-up
soul diving fast into the deep pockets of water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
குணங்கள் கொண்ட குணங்களைக் கொண்ட; மூர்த்தி ஓர் மூவராய் மூன்று மூர்த்திகளாய்; படைத்து அளித்து படைத்து காத்து; கெடுக்கும் அழிக்கும்; அப்புண்டரீக தாமரையை; கொப்பூழ் நாபியில் உடைய; அந்த புனல் அந்தக் கடலை; பள்ளி படுக்கையாகக் கொண்ட; அப்பனுக்கே எம்பெருமானுக்கே; தொண்டர் தொண்டரான; தொண்டர் தொண்டருக்குத் தொண்டர்; தொண்டர் அந்த தொண்டருக்கும்; தொண்டன் தொண்டனான; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; கங்குலும் பகலே இரவும் பகலும் எப்பொழுதும்; கண்டு பாட அர்த்தங்களை அறிந்து பாட; வல்லார் வல்லவர்களுடைய; வினை போம் பாபங்கள் நீங்கிவிடும்
mūrththi having forms (of brahmā, vishṇu and rudhra); ŏr distinguished; mūvar three (causal) individuals; āy being; padaiththu creates (as antharyāmi of brahmā); al̤iththu protects (as vishnū who is an incarnation of ṣrīman nārāyaṇa); kedukkum one who annihilates (as antharyāmi of rudhra); a being the root for all of these, as known in scriptures; puṇdarīgam having puṇdarīka (lotus); koppūzh having divine navel; punal in the causal ocean; pal̤l̤i resting; appanukku for the great benefactor; thoṇdar those who became related; thoṇdar those who got related; thoṇdar those who related; thoṇdan servitor; satakŏpan nammāzhvār; sol mercifully spoke; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; kaṇdu seeing the meanings; pāda vallār those who can sing being triggered by love; kangulum pagal at all times whether day or night; vinai sin which puts hurdle for experiencing bhagavān; pŏm will be freed.; kangulum night (when worldly people sleep); pagalum day (when those who are in love sleep)