Chapter 1

Āzhvār laments from being imprisoned by sensory organs - (உள் நிலாவிய)

இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்
It makes Āzhvār shiver with great apprehension when he ponders on what more suffering he would incur and face if he continues to stay alive in this world.
இவ்வுலகில் இருந்தால் இன்னும் என்னென்ன துன்பம் விளையுமோ என்று அஞ்சி நடுங்கி ஓலமிடுகிறார் ஆழ்வார்.

ஏழாம் பத்து -முதல் திருவாய்மொழி – ‘உண்ணிலாவிய’-பிரவேசம்

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்; மூன்றாம் + Read more
Verses: 3453 to 3463
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழம்பஞ்சுரம்
Timing: AFTERNOON
Recital benefits: will have no results of their karma
  • TVM 7.1.1
    3453 ## உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி * என்னை உன் பாதபங்கயம் *
    நண்ணிலாவகையே * நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் **
    எண் இலாப் பெரு மாயனே! இமையோர்கள் ஏத்தும் * உலகம் மூன்று உடை *
    அண்ணலே அமுதே அப்பனே * என்னை ஆள்வானே (1)
  • TVM 7.1.2
    3454 என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து * இராப்பகல் மோதுவித்திட்டு *
    உன்னை நான் அணுகாவகை * செய்து போதிகண்டாய் **
    கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே! * கடல் ஞாலம் காக்கின்ற *
    மின்னு நேமியினாய் * வினையேனுடை வேதியனே (2)
  • TVM 7.1.3
    3455 வேதியாநிற்கும் ஐவரால் * வினையேனை மோதுவித்து * உன் திருவடிச்
    சாதியாவகை * நீ தடுத்து என் பெறுதி? அந்தோ! **
    ஆதி ஆகி அகல் இடம் படைத்து * உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட *
    சோதி நீள் முடியாய் * தொண்டனேன் மதுசூதனனே (3)
  • TVM 7.1.4
    3456 சூது நான் அறியாவகை * சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி * உன் அடிப்
    போது நான் அணுகாவகை * செய்து போதிகண்டாய் **
    யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி * ஓர் ஆலின் நீள் இலை *
    மீது சேர் குழவி * வினையேன் வினைதீர் மருந்தே (4)
  • TVM 7.1.5
    3457 தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் * செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை *
    நேர் மருங்கு உடைத்தா அடைத்து * நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் **
    ஆர் மருந்து இனி ஆகுவார் * அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் *
    வேர் மருங்கு அறுத்தாய் * விண்ணுளார் பெருமானே ஓ! (5)
  • TVM 7.1.6
    3458 விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் * ஐம்புலன் இவை *
    மண்ணுள் என்னைப் பெற்றால் * என் செய்யா மற்று நீயும் விட்டால்? **
    பண்ணுளாய் கவி தன்னுளாய் * பத்தியின் உள்ளாய்! பரமீசனே * வந்து என்
    கண்ணுளாய் நெஞ்சுளாய்! * சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே (6)
  • TVM 7.1.7
    3459 ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத * ஓர் ஐவர் வன் கயவரை *
    என்று யான் வெல்கிற்பன் * உன் திருவருள் இல்லையேல்? **
    அன்று தேவர் அசுரர் வாங்க * அலைகடல் அரவம் அளாவி * ஓர்
    குன்றம் வைத்த எந்தாய்! * கொடியேன் பருகு இன் அமுதே! (7)
  • TVM 7.1.8
    3460 இன் அமுது எனத் தோன்றி * ஓர் ஐவர் யாவரையும் மயக்க * நீ வைத்த
    முன்னம் மாயம் எல்லாம் * முழு வேர் அரிந்து ** என்னை உன்
    சின்னமும் திரு மூர்த்தியும் * சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு *
    என் அம்மா என் கண்ணா * இமையோர் தம் குலமுதலே (8)
  • TVM 7.1.9
    3461 குலம் முதல் அடும் தீவினைக் * கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை *
    வலம் முதல் கெடுக்கும் * வரமே தந்தருள்கண்டாய் **
    நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் * நிற்பன செல்வன என * பொருள்
    பல முதல் படைத்தாய் * என் கண்ணா என் பரஞ்சுடரே (9)
  • TVM 7.1.10
    3462 என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி * உன் இணைத் தாமரைகட்கு *
    அன்பு உருகி நிற்கும் * அது நிற்கச் சுமடு தந்தாய் **
    வன் பரங்கள் எடுத்து ஐவர் * திசை திசை வலித்து எற்றுகின்றனர் *
    முன் பரவை கடைந்து * அமுதம் கொண்ட மூர்த்தி ஓ (10)
  • TVM 7.1.11
    3463 ## கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் * குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் * அப்
    புண்டரீகக் கொப்பூழ்ப் * புனல் பள்ளி அப்பனுக்கே **
    தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் * சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும் *
    கண்டு பாட வல்லார் * வினை போம் கங்குலும் பகலே (11)