Chapter 1

Āndāl waking up her friends, the Lord's associates and Him asking for eternal service - (மார்கழித் திங்கள்)

ஆண்டாள் தோழிகளை எழுப்புதல் பின்பு பெருமாளை எழுப்பி பறை வேண்டுதல்
Āndāl waking up her friends, the Lord's associates and Him asking for eternal service - (மார்கழித் திங்கள்)
Periyāzhvār's daughter is Andal. Periyāzhvār had immense love for Krishna, but Andal's love surpassed even that. She desired to have Krishna as her husband and wished to perform intimate services for Him. Serving the Lord is the highest purpose and the greatest wealth. The desire and the act of serving Him come from His grace. Andal firmly assures that + Read more
பெரியாழ்வார் திருமகளார் ஆண்டாள். பெரியாழ்வாருக்குக் கண்ணன்மீது ஆசை. அதைவிட மிகுதியான ஆசை ஆண்டாளுக்கு. கண்ணனையே மணாளனாகப் பெற ஆசைப்பட்டாள். அவனுக்குக் குற்றேவல் அந்தரங்கக் கைங்கர்யம் செய்ய விரும்பினாள். கைங்கர்யமே சிறந்த புருஷார்த்தம். அதுவே நீங்காத செல்வம். அவனுக்குக் கைங்கர்யம் செய்ய + Read more
Verses: 474 to 503
Grammar: Eṭṭadi Nārsīrovi Karppaka Kocchakakkalippā / எட்டடி நார்சீரொவி கற்பக கொச்சகக் கலிப்பா
Recital benefits: Will receive the grace of the Lord and live happy
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TP 1.1

474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! *
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! *
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *
நாராயணனே நமக்கேபறைதருவான் *
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)
474 ## மார்கழித் திங்கள் * மதி நிறைந்த நன்னாளால் *
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர் ! *
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! *
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் **
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் *
கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் *
நாராயணனே நமக்கே பறை தருவான் *
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் (1)
474 ## mārkazhit tiṅkal̤ * mati niṟainta naṉṉāl̤āl *
nīrāṭap potuvīr! potumiṉo nerizhaiyīr ! *
cīr malkum āyppāṭic cĕlvac ciṟumīrkāl̤! *
kūr vel kŏṭuntŏzhilaṉ nantakopaṉ kumaraṉ **
er ārnta kaṇṇi yacotai il̤añciṅkam *
kār meṉic cĕṅkaṇ katirmatiyam pol mukattāṉ *
nārāyaṇaṉe namakke paṟai taruvāṉ *
pāror pukazhap paṭintu-elor ĕmpāvāy (1)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-10, 16-19

Divya Desam

Simple Translation

474. On this the auspicious full moon day in the month of Markazhi, Come! let us go and bathe. O young girls adorned with beautiful ornaments, we are the beloved of the flourishing cowherd village. Only Nārāyanan, the son of Nandagopan, who looks after the cows holding a sharp spear, the lovely-eyed Yashodā's young lion with a dark body, beautiful eyes and a face bright as the shining moon will give us the Parai. (the fruits of pāvai nonbu, which is eternal service). Come and let us join the world in His praise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர்மல்கும் சீர்மைநிறைந்துள்ள; ஆய்ப்பாடி ஆய்ப்பாடியில்; செல்வ கைங்கர்யமாகிற செல்வத்தையுடைய; சிறுமீர்காள்! சிறுமிகளே!; நேரிழையீர்! சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!; மார்கழி திங்கள் மாதங்களிற் சிறந்த மார்கழி மாதம்; மதி நிறைந்த பூர்ண மதியுடைய; நன் நாளால் நல்ல நாளில்; கூர்வேல் கூர்மையான வேலையுடையவனும்; கொடும் காவலாகிய கடுமையான; தொழிலன் தொழிலைப் புரியும்; நந்தகோபன் நந்தகோபனுடைய; குமரன் குமாரன்; ஏரார்ந்த அழகு நிறைந்த; கண்ணி கண்களையுடையவளான; யசோதை யசோதையின்; இளம் சிங்கம் சிங்கக்குட்டியானவன்; கார்மேனி மேகவண்ண மேனியையும்; செங்கண் சிவந்த கண்களையும்; கதிர் சூரியனையும்; மதியம் போல் சந்திரனையும் போன்ற; முகத்தான் முகமுடையவனுமான; நாராயணனே ஸ்ரீமந் நாராயணனே; நமக்கே நமக்கே; பறை பறையை (பிராப்பியமான புருஷாகாரம்); தருவான் கொடுப்பான் ஆதலால் (ப்ராபகம்); பாரோர் இவ்வுலகினர்; புகழப் படிந்து புகழும்படி நன்றாக; நீராட நீராட; போதுவீர்! விருப்பமுடையவர்களே!; போதுமின் வாருங்கள்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
sīr malgum āyppādi (From the) wealthy place of āyppādi,; selvach chirumīrgāl̤ ŏ, the young gŏpikās who have got the best wealth (which is association with, and kainkaryam to, krishṇan),; nĕr izhaiyīr who are wearing wonderful ornaments (keeping krishṇan in mind),; mārgazhi thingal̤ we got the best of all months the mārgazhi month, and the good full moon day for doing the nŏnbu (ceremony to pray for the rains)).; kūr vĕl (ṣtanding with a) sharp spear,; kodum thozhilan if any enemies come near his dear krishṇan he would be a person doing cruel deeds (to those enemies) that person is; nandhagŏpan nandhagŏpan, whose; kumaran dear son is krishṇan;; ĕr ārndha kaṇṇi yasŏdhai the one who has got beautiful eyes,; il̤am singam her young lion-cub is krishṇan,; kār mĕni, sengaṇ (his) body is the color of dark (kind) clouds, he has got eyes lotus-like,; kadhir madhiyam pŏl mugaththān and his face is the bright light of the moon,; nārāyaṇanĕ and who is none other than srīman nārāyaṇan,; namakkĕ paṛai tharuvān onlysrīman nārāyaṇan can give us (us who depend only on him) the opportunity to do kainkaryam to ḥim.; āl ṣo; padindhĕlŏr those who want to take a good (padindhu) bath (enjoyment with krishṇan), please go with us,; pārŏr pugazha and the people of this world would celebrate that.

TP 1.2

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *
செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி *
நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி *
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் *
செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் *
ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.
475 வையத்து வாழ்வீர்காள்! * நாமும் நம் பாவைக்கு *
செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி *
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி **
மையிட்டு எழுதோம் * மலர் இட்டு நாம் முடியோம் *
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் *
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி *
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் (2)
475 vaiyattu vāzhvīrkāl̤ ! * nāmum nam pāvaikku *
cĕyyum kiricaikal̤ kel̤īro * pāṟkaṭalul̤
paiyiṟ tuyiṉṟa paramaṉ aṭi pāṭi *
nĕy uṇṇom pāl uṇṇom nāṭkāle nīrāṭi **
maiyiṭṭu ĕzhutom * malar iṭṭu nām muṭiyom *
cĕyyātaṉa cĕyyom tīkkuṟal̤ai cĕṉṟu otom *
aiyamum piccaiyum āmtaṉaiyum kaikāṭṭi *
uyyumāṟu ĕṇṇi ukantu-elor ĕmpāvāy (2)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-2, BG. 10-9

Divya Desam

Simple Translation

475. O people of the world! Do listen to how we worship our pāvai. Singing in praise of the feet of the supreme lord resting on the milky ocean, we don't eat ghee, don't drink milk. We bathe early in the morning, We don't put kohl to darken our eyes, We don't decorate our hair with flowers, We don't do anything forbidden, we don't speak harsh words. We give alms to the needy and the sages generously. We think of lofty things and salvation and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வையத்து இவ்வுலகத்தில்; வாழ்வீர்காள்! வாழ்பவர்களே!; நாமும் நாமும்; உய்யுமாறு உய்வதற்கு; எண்ணி வழியை ஆராய்ந்து; உகந்து உகந்து; நம் பாவைக்கு நம் நோன்பிற்கு; செய்யும் செய்ய வேண்டிய; கிரிசைகள் காரியங்களை; கேளீரோ! கேளுங்கள்; பாற் கடலுள் திருப்பாற்கடலில்; பையத் துயின்ற கள்ள நித்திரை கொள்ளும்; பரமன் பரமனுடைய; அடி பாடி திருவடியை புகழ்ந்து பாடி; ஐயமும் பிச்சையும் தானமும் தர்மமும்; ஆந்தனையும் முடிந்தளவு; கை காட்டி கொடுத்து; நெய் உண்ணோம் நெய் புசிக்கமாட்டோம்; பால் உண்ணோம் பால் குடிக்கமாட்டோம்; நாட்காலே நீராடி விடியற்காலையில் நீராடி; மையிட்டு மையிட்டு; எழுதோம் அலங்கரித்துக் கொள்ளோம்; மலர் இட்டு நாம் தலையில் பூ சூட; முடியோம் மாட்டோம்; செய்யாதன செய்யக்கூடாதவற்றை; செய்யோம் செய்ய மாட்டோம்; தீக்குறளை கொடிய கோள்சொற்களை; சென்று ஓதோம் பிரானிடம் சென்று கூறோம்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
vāzhvīrgāl̤ ŏ you who are born to have fulfilling life; vaiyaththu in this world;; nāmum we, who live thinking that we achieve our destiny because of ḥim;; uyyum āṛu eṇṇi we realiśe the means for achieving the destiny;; ugandhu so with happiness; kĕl̤īrŏ listen (to us about); seyyum kirisaigal̤ the tasks that we do; nam pāvaikku for our nŏnbu;; adi pādi we sing praises of the lotus feet of; paiya thuyinṛa paraman the almighty who is lying down with scheming thoughts; pāṛkadalul̤ in the milky ocean;; aiyamum we give things to appropriate persons, and; pichchaiyum give biksha (alms) which are given to brahmachāris and sanyāsis; āndhanaiyum till the level they are able to receive,; kai kātti we give that much;; nei uṇṇŏm we would not eat ghee;; pāl uṇṇŏm would not consume milk;; nīrādi will bathe; nāt kālĕ early in the morning;; mai ittu ezhudhŏm we wont decorate our eyes;; malar ittu nām mudiyŏm wont decorate our hair with flowers;; seyyādhana seyyŏm would not do what our pūrvāchāryas did not do;; senṛu ŏdhŏm would not go and tell emperumān; thīkkural̤ai any gossip that creates problems for others.

TP 1.3

476 ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து *
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப் *
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்பத் *
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் *
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)
476 ## ஓங்கி உலகு அளந்த * உத்தமன் பேர் பாடி *
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் *
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து *
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப் **
பூங்குவளைப் போதில் * பொறிவண்டு கண்படுப்பத் *
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் *
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் (3)
476 ## oṅki ulaku al̤anta * uttamaṉ per pāṭi *
nāṅkal̤ nam pāvaikkuc cāṟṟi nīr āṭiṉāl *
tīṅku iṉṟi nāṭu ĕllām tiṅkal̤ mummāri pĕytu *
ŏṅku pĕruñ cĕnnĕlūṭu kayal ukal̤a **
pūṅkuval̤aip potil * pŏṟivaṇṭu kaṇpaṭuppa *
teṅkāte pukku iruntu cīrtta mulai paṟṟi
vāṅkak * kuṭam niṟaikkum val̤l̤aṟ pĕrum pacukkal̤ *
nīṅkāta cĕlvam niṟaintu-elor ĕmpāvāy (3)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-1

Simple Translation

476. Dear friends! When we sing and praise the name of the virtuous lord, who rose and measured the world in His tall form (ThrivikRāman) and when we bathe and start our intense prayers, there will be rain thrice a month on earth, paddy will grow and flourish. Fish will frolic in the fields, bees will sleep on the buds of the kuvalai blossoms. The cows' udders will overflow benevolently with milk that fill the pots when the cowherds milk them. Abundant riches will be everlasting. Come and let us bathe and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓங்கி நெடுதோங்கி வளர்ந்து; உலகு மூவுலகங்களையும்; அளந்த அளந்த; உத்தமன் உத்தமனுடைய; பேர் பாடி திருநாமங்களைப் பாடி; நாங்கள் நாங்கள்; நம் பாவைக்கு நம் நோன்புக்கென்று; சாற்றி சங்கற்பித்துக்கொண்டு; நீர் ஆடினால் நீராடினால்; நாடு எல்லாம் நாடெங்கும்; தீங்கு இன்றி தீங்கு ஏதுமில்லாமல்; திங்கள் மாதம் தோறும்; மும்மாரி மூன்று முறை; பெய்து மழை பெய்து; ஓங்கு பெறும் உயரமாக வளர்ந்துள்ள; செந்நெல் செந்நெற் பயிர்களின்; ஊடு கயல் உகள நடுவே மீன்கள் துள்ள; பூங்குவளை அழகிய நெய்தல்; போதில் மலரில்; பொறி வண்டு அழகிய வண்டுகள்; கண் படுப்ப உறங்க; வள்ளல் வள்ளல் போன்ற; பெரும் பசுக்கள் பெரும் பசுக்கள்; தேங்காதே சலிக்காமல் நின்று; புக்கு இருந்து பசுக்களின்; சீர்த்த முலை பருத்த மடிகளை; பற்றி அணைத்து; வாங்க கறக்க; குடம் நிறைக்கும் குடங்களைபாலாலே நிறைக்கும்; நீங்காத செல்வம் நீங்காத செல்வம்; நிறைந்து நிறைந்திடும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
nāngal̤ pādi (if) we sing, (we who cannot live without singing ḥis names); pĕr the names; uththaman of purushŏthaman; ŏngi the one who grew tall; al̤andha and measured (with ḥis lotus feet); ulagu all the three worlds,; nīradināl if we bathed; nam pāvaikku chāṝi with the front/pretense of a nŏnbu; nādu ellām the whole country; thīngu inṛi without any bad; mummāri peidhu would properly rain; thingal̤ every month, and; kayal ugal̤a fish would jump around; (so) ŏngu perum sennel ūdu between the tall and healthy grass,; poṛi vaṇdu and beautiful bees; kaṇ paduppa would sleep; pūm-kuval̤ai pŏdhil in beautiful flowers,; thĕngadhĕ without hesitation; pukku irundhu get to and try to; vānga pull; sīrtha mulai paṝi by holding with both the hands the big nipples of; perum pasukkal̤ healthily grown cows; kudam niṛaikkum they would fill the containers; val̤l̤al with generosity; nīngādha selvam (such is the ) wealth that can be sustained; niṛaindhu and stay complete.

TP 1.4

477 ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் *
ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி *
ஊழிமுதல்வனுருவம்போல்மெய்கறுத்துப் *
பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில் *
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து *
தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல் *
வாழவுலகினில்பெய்திடாய் * நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
477 ஆழி மழைக் கண்ணா! * ஒன்று நீ கை கரவேல் *
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி *
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் *
பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில் **
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து *
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் *
வாழ உலகினில் பெய்திடாய் * நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (4)
477 āzhi mazhaik kaṇṇā! * ŏṉṟu nī kai karavel *
āzhiyul̤ pukku mukantukŏṭu ārttu eṟi *
ūzhi mutalvaṉ uruvampol mĕy kaṟuttu *
pāzhiyan tol̤ uṭaip paṟpanāpaṉ kaiyil **
āzhipol miṉṉi valampuripol niṉṟu atirntu *
tāzhāte cārṅkam utaitta cara mazhai pol *
vāzha ulakiṉil pĕytiṭāy * nāṅkal̤um
mārkazhi nīr āṭa makizhntu-elor ĕmpāvāy (4)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

477. O Varunā, lord of rains, shower plentifully without holding. O cloud, you plunge into the ocean, scoop up water and rise, looking like the dark form of the lord of the eon, with lightning like the discus that shines in the hands of Lord Padmanābhān, roaring thunderously like the sound of his conch, and pouring rain like the arrows from the Sārangam bow. Shower rain abundantly for us to live happily. O girls, come let us bathe and rejoice in this month of Markazhi and go to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி மழை மழைக்குத் தலைவனான; கண்ணா! வருணதேவனே!; ஒன்று நீ ஒன்றையும் நீ; கை கரவேல் ஒளிக்கக்கூடாது; ஆழியுள் புக்கு கடலினுள் புகுந்து; முகந்து கொடு மொண்டு கொண்டு; ஆர்த்து இடி இடித்தபடியே; ஏறி ஆகாசத்தில் ஏறி; ஊழி காலம் போன்ற அனைத்துக்கும்; முதல்வன் காரணமான எம்பெருமானுடைய; உருவம் போல் திருமேனி போல்; மெய் கறுத்து உடம்பு கறுத்து; பாழியம் பெருமையும் அழகுமுடைய; தோளுடை தோள்களையுடைய; பற்பநாபன் நாபீகமல பெருமானின்; கையில் வலக்கையில் உள்ள; ஆழி போல் திருச்சக்கரத்தைப்போல்; மின்னி மின்னி; வலம்புரி போல் வலம்புரி சங்கு போல்; நின்று அதிர்ந்து நிலை நின்று முழங்கி; தாழாதே காலம் தாழ்த்தாது; சார்ங்கம் உதைத்த சார்ங்க வில் பொழிந்த; சரமழை போல் அம்பு மழை போல்; வாழ உலகினில் உலகோர் வாழும்படியாகவும்; நாங்களும் நோன்பு நோற்கிற நாங்களும்; மகிழ்ந்து மகிழ்ந்து; மார்கழி நீராட மார்கழி நீராடும்படியாகவும்; பெய்திடாய்! மழை பெய்வாயாக; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
mazhaik kaṇṇā ŏ varuṇa dhĕvā the head of rain gods; āzhi who is majestic like the ocean; kai karavĕl without holding back; onṛu(m) anything,; you; āzhiyul̤ pukku enter the ocean; mugandhu kodu drink entire water,; ĕri rise in the sky; ārthu with thunders,; mei karuthu become dark; uruvam pŏl like the divine body of; ūzhi mudhalvan emperumān who is the root cause of time and everything,; āzhi pŏl minni do lightning like the discus (in the right hand),; ninṛu adhirndhu stay and be thunderous; valam-puri pŏl like the conch (in the left hand),; pāzhi-am-thŏl̤-udai of the one with great and beautiful shoulders,; paṛpanābhan kaiyil of the one with beautiful navel;; thāzhadhĕ without any delay; sārngam udhaitha sara mazhai pŏl like how the arrows poured from the bow (of srī rāma); peidhidāi pour the rain; vāzha for all to live; nāngal̤um so that we too (we who are doing nŏnbu); mārgazhi nīrāda pleasantly bathe as part of mārgazhi; magizhndhu with happiness

TP 1.5

478 மாயனை மன்னுவடமதுரைமைந்தனைத் *
தூயபெருநீர் யமுனைத்துறைவனை *
ஆயர்குலத்தினில்தோன்றும் அணிவிளக்கைத் *
தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனைத் *
தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது *
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்கப் *
போயபிழையும் புகுதருவான்நின்றனவும் *
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.
478 மாயனை * மன்னு வடமதுரை மைந்தனைத் *
தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் *
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் **
தூயோமாய் வந்து நாம் * தூமலர் தூவித் தொழுது *
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் *
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் *
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் (5)
478 māyaṉai * maṉṉu vaṭamaturai maintaṉai *
tūya pĕrunīr yamuṉait tuṟaivaṉai *
āyar kulattiṉil toṉṟum aṇi-vil̤akkai *
tāyaik kuṭal vil̤akkam cĕyta tāmotaraṉai **
tūyomāy vantu nām * tūmalar tūvit tŏzhutu *
vāyiṉāl pāṭi maṉattiṉāl cintikka *
poya pizhaiyum pukutaruvāṉ niṉṟaṉavum *
tīyiṉil tūcu ākum cĕppu elor ĕmpāvāy (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-26, 30

Simple Translation

478. He is the miraculous One, the celebrated boy of Northern Mathura. He resides on the banks of the Yamuna river that is pure and abundant. He is the bright light of cowherd clan, Damodaran who made his mother's womb divine. When we come with purity at heart, offer flowers, worship him, sing his praises and think only of him in our minds, all our sins of the past and future will disappear like dust in fire. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயனை மாயச் செயல்களையுடையவனும்; மன்னு வட மதுரை வடமதுரைக்கு; மைந்தனை தலைவனும்; தூய பரிசுத்தமானதும்; பெருநீர் ஆழமானதுமான தீர்த்தத்தையுடைய; யமுனை யமுனை ஆற்றங்கரையில்; துறைவனை விளையாடுபவனும்; ஆயர் குலத்தினில் ஆயர் குலத்தில்; தோன்றும் அவதரித்த; அணி அணிகல; விளக்கை விளக்கைப் போன்றவனும்; தாயைக் தாய் யசோதையின்; குடல் வயிற்றை; விளக்கம் செய்த விளங்க செய்த; தாமோதரனை தாமோதரனை; தூயோமாய் பரிசுத்தமாக; வந்து நாம் வந்து நாம்; தூ மலர் நல்ல தூய மலர்களை; தூவி தூவி; தொழுது வணங்கி; வாயினால் பாடி வாயாரப் பாடி; மனத்தினால் நெஞ்சார; சிந்திக்க தியானத்திட; போய முன்பு செய்த; பிழையும் பாவங்களும்; புகுதருவான் பின்பு வரக்கூடியவைகளான; நின்றனவும் பாவங்களும்; தீயினில் நெருப்பிலிட்ட பஞ்சு போலே; தூசாகும் உருவழிந்து போகும்; செப்பு ஆகையால் அவனைப் பாடு; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
māyanai one who performs wonderful deeds; mannu vada-madhurai maindhanai king of vadamadhurai that is having ever present bhagavath sambandham; thūya peru nīr one having divine and ever deep water; yamunai thuraivanai who plays in the bank of river yamunā; āyar kulaththinil thŏnṛum who was born in the cowherd group; aṇi vil̤akkai who is like a divine dheepam (lamp),; thāyaik kudal vil̤akkam seidha who made his mother yasodhā’s womb meaningful; dhāmŏdharanai emperumān who let himself be tied by a small rope,; nām we who are open to ḥim approaching us; thūyŏmāi vandhu [to such emperumān] (we) came with purity; thū malar thūvi submit good flowers,; thozhudhu and prostrate,; vāyināl pādi sing his names to our mouth’s content,; manaththināl sindhikka meditate in our mind;; pŏya pizhaiyum and the pāpams that we committed (before getting bhagavath sambandham); pugu-tharuvān ninṛanavum (after such sambandham, the) pāpams that we commit without realiśing; thīyinil thūsāgum will all burn away like the cotton placed in fire; seppu so, sing ḥis names.

TP 1.6

479 புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலின் *
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ? *
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு *
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி *
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை *
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும் *
மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம் *
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.
479 புள்ளும் சிலம்பின காண் * புள் அரையன் கோயிலின் *
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ? *
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு *
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி **
வெள்ளத்து அரவில் * துயில் அமர்ந்த வித்தினை *
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் *
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் *
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் (6)
479 pul̤l̤um cilampiṉa kāṇ * pul̤-araiyaṉ koyiliṉ *
vĕl̤l̤ai vil̤i caṅkiṉ per-aravam keṭṭilaiyo? *
pil̤l̤āy ĕḻuntirāy peymulai nañcu uṇṭu *
kal̤l̤ac cakaṭam kalakku aḻiyak kāl occi **
vĕl̤l̤attu araviṟ * tuyil amarnta vittiṉai *
ul̤l̤attuk kŏṇṭu muṉivarkal̤um yokikal̤um *
mĕl̤l̤a ĕḻuntu ari ĕṉṟa per-aravam *
ul̤l̤am pukuntu kul̤irntu-elor ĕmpāvāy (6)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

479. See, the birds are chirping. Don't you hear the loud blowing of the white conch from the temple of the God who rides on Garudā? O friend, wake up. He drank the poison from Putanā's breasts and destroyed the cheating Sakatāsuran, He is the primordial force who gently rests on the ocean on the snake Adishesha. Sages and yogis rise and praise him saying, “Hari, Hari!” Listen to their praise. Let the chant enter and cool your hearts Come, let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளும் பறவைகளும்; சிலம்பின ஆரவாரங்கள்; காண் செய்யநின்றன காண்!; புள்ளரையன் பறவைத் தலைவனான கருடனுக்கு; கோயில் எம்பெருமானின் ஸந்நிதியிலே; வெள்ளை வெண்மையான; விளிசங்கின் விளித்து அழைக்கும் சங்கினுடைய; பேரரவம் பேரொலியையும்; கேட்டிலையோ? கேட்கவில்லையோ?; பிள்ளாய்! பெண்ணே!; எழுந்திராய் சீக்கிரமாக எழுந்திரு; பேய்முலை பூதனையிடம்; நஞ்சுண்டு விஷத்தை உண்டு; கள்ளச் வஞ்சனை பொருந்திய; சகடம் சகடாசுரனை; கலக்கு அழிய கட்டுக் குலைந்திட; கால் ஓச்சி காலால் உதைத்திட்ட; வெள்ளத்து திருப்பாற்கடலில்; அரவில் ஆதிசேஷன் மீது; துயில் அமர்ந்த நித்திரை கொள்ளும்; வித்தினை பெருமானை; முனிவர்களும் ரிஷிகளும்; யோகிகளும் யோகிகளும்; உள்ளத்து மனதில்; கொண்டு தியானித்துக் கொண்டு; மெள்ள எழுந்து மெள்ள எழுந்து; அரி என்ற ஹரி என்ற; பேர் அரவம் பேரொலி; உள்ளம் புகுந்து நெஞ்சில் புகுந்து; குளிர்ந்து குளிர்ந்தது; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
pul̤l̤um silambina-kāṇ birds are calling while going (after waking up), and; kĕttilaiyŏ are you not hearing; pĕr-aravam the big sound; vel̤l̤ai vil̤i-sangin of white conch which is doing thirupal̤l̤i-ezhuchchi (waking up emperumān); pul̤l̤araiyan koyilil in the temple of perumān who is garudans leader, [garudan who is the head of birds]; pil̤l̤āi you young gŏpikā who is new to bhagavath vishayam,; ezhundhirāi get rid of sleep and get up;; munivargal̤um adiyārs who meditate him; yŏgigal̤um and adiyārs who do yogābhyāsam; mel̤l̤a ezhundhu (they) get up slowly without disturbing the emperumān in their hearts; ul̤l̤aththu koṇdu they have placed in their hearts through thoughts about; pĕi mulai nanju-uṇdu perumān who drank phūthanais poisonous milk from her nipples, (and killed her),; kal̤l̤ach chakatam (who made the) the cunning cart; kalakku azhiya go out of shape and get destroyed; kāl ŏchchi by kicking with thiruvadi (and finish it),; thuyil amarndha (who is) gracefully lying down; vel̤l̤aththu in the liquid of milky ocean; aravil on thiruvananthāzhvān (ādhi ṣĕshan); viththinai one who is root of the world; ari enṛa pĕr aravam (munis and yŏgis are thinking about such emperumān and) making big sound, chanting hari;; ul̤l̤am pugundhu kul̤irndhu (please get up so that) we get that sound into our minds and become happy.

TP 1.7

480 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! *
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து *
வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? *
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *
கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ? *
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
480 கீசு கீசு என்று எங்கும் * ஆனைச்சாத்தன் * கலந்து
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே ! *
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து *
வாச நறுங் குழல் ஆய்ச்சியர் ** மத்தினால்
ஓசை படுத்த * தயிர் அரவம் கேட்டிலையோ? *
நாயகப் பெண்பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி *
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? *
தேசம் உடையாய் ! திற ஏலோர் எம்பாவாய் (7)
480 kīcu kīcu ĕṉṟu ĕṅkum * āṉaiccāttaṉ * kalantu
peciṉa peccu-aravam keṭṭilaiyo? peyp pĕṇṇe ! *
kācum piṟappum kalakalappak kaiperttu *
vāca naṟuṅ kuḻal āycciyar ** mattiṉāl
ocai paṭutta * tayir-aravam keṭṭilaiyo? *
nāyakap pĕṇpil̤l̤āy ! nārāyaṇaṉ mūrtti *
kecavaṉaip pāṭavum nī keṭṭe kiṭattiyo? *
tecam uṭaiyāy ! tiṟa-elor ĕmpāvāy (7)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

480. O crazy one, don't you hear the sound of the sparrows flocking together and screeching everywhere? Don't you hear the sound of the cowherd women with fragrant hair and bangled hands and ornaments, churning the curd? You are the head of the cowherd women. How can you sleep when you hear people singing the praise of Kesavan? O, radiant one! Open the door. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய்ப் பெண்ணே மதிகெட்ட பெண்ணே!; எங்கும் எல்லா இடங்களிலும்; கீசு கீசு என்று கீச்சு கீச்சு என்று; ஆனைச்சாத்தன் பரத்வாஜ பட்சிகள் (வலியன் குருவி); கலந்து ஒன்றோடொன்று கலந்து; பேசின பேச்சு அரவம் பேசிய பேச்சின் ஆரவாரத்தை; கேட்டிலையோ? இன்னும் நீ கேட்கவில்லையோ?; வாச நறுங்குழல் மணமுடைய கூந்தலையுடைய; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; காசும் அணிந்துள்ள தாலியும்; பிறப்பும் ஆரங்களும்; கலகலப்ப கலகலவென்று சப்திக்கும்; கைபேர்த்து கைகளை அசைத்து; மத்தினால் ஓசை மத்தாலே ஓசை; படுத்த படுத்தும்; தயிர் தயிர் கடையும்; அரவம் ஒலியையும்; கேட்டிலையோ? கேட்கவில்லையோ?; பெண்பிள்ளாய் பெண்களுக்கெல்லாம்; நாயக தலைமையானவளே!; நாராயணன் மூர்த்தி ஸ்ரீமந் நாராயணனான; கேசவனை கண்ணபிரானை; பாடவும் பாடுவதை; நீ கேட்டே நீ கேட்டும்; கிடத்தியோ? இப்படி உறங்கலாமோ?; தேசம் உடையாய் மிக்க தேஜஸ்ஸையுடையவளே!; திற நீயே வந்து கதவைத் திற; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
pĕi peṇṇĕ! you, the one without proper mind (even though you know the taste of bhagavath vishayam); ānai-ch-chāththan bharathvāja birds named valiyan (king crows); kīchu kīchu enṛu (birds) making kīch sounds; engum in all the directions; kalandhu pĕsina and are talking among themselves; kĕttilaiyŏ did you not hear that; pĕchchu aravam sound of their talking?; āychchiar (also) gŏpikās; vāsam narum kuzhal (with) hair in their head with very good fragrance, (and with their); kāsum garland made with the shapes of kāsu (round coins-like) (அச்சுத்தாலி); piṛappum and long garland made with the shapes of flower buds (முளைத்தாலி); kalakalappa these are making sound touching each other; kai pĕrthu (as the gŏpikās) move their hands,; ŏsai padutha and also noise is made; maththināl when using the churn stick,; thayir aravam and the sound of curd; kĕttilaiyŏ did you not hear (them)?; nāyaga peṇ pil̤l̤āi ẏou who is the head of us gŏpikās!; pādavum as we sing; nārāyaṇan mūrthy kĕsavanai about kaṇṇan who is the avathāram of nārāyānan; nī kĕttĕ kidaththiyŏ are you still lying down?; thĕsam udaiyāy ŏh the one with great thĕjas,; thiṛa open your door.

TP 1.8

481 கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு *
மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும் *
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து * உன்னைக்
கூவுவான்வந்துநின்றோம் * கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு *
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய *
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால் *
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.
481 கீழ்வானம் வெள்ளென்று * எருமை சிறு வீடு *
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் *
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து * உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் ** கோதுகலம் உடைய
பாவாய் ! எழுந்திராய் * பாடிப் பறை கொண்டு *
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய *
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் *
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் (8)
481 kīzhvāṉam vĕl̤l̤ĕṉṟu * ĕrumai ciṟu vīṭu *
meyvāṉ parantaṉa kāṇ mikku ul̤l̤a pil̤l̤aikal̤um *
povāṉ pokiṉṟāraip pokāmal kāttu * uṉṉaik
kūvuvāṉ vantu niṉṟom ** kotukalam uṭaiya
pāvāy ! ĕzhuntirāy * pāṭip paṟai kŏṇṭu *
mā vāy pil̤antāṉai mallarai māṭṭiya *
tevāti tevaṉaic cĕṉṟu nām cevittāl *
āvā ĕṉṟu ārāyntu arul̤-elor ĕmpāvāy (8)

Ragam

Būpāḷa / பூபாள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

481. It is dawn, the horizon is bright and the buffaloes leave their small sheds and go to graze. We have stopped the girls so that they will wait for you and we have come to wake you up. Get up, cheerful one! If we sing His praise and worship the God of gods who split open Asuran Kesi's mouth, when he came as a horse and fought with the wrestlers and defeated them, if we went (to Him) and give our respects to ḥim, He would inquire (our needs) and He will say ŏ!, and He would help us. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோதுகலம் கண்ணனிடம் விருப்பத்தை; உடைய பாவாய்! உடைய பெண்ணே!; கீழ்வானம் கிழக்கு திசையில்; வெள்ளென்று ஆகாயம் வெளுத்தது; எருமை எருமைகள்; மேய்வான் பனிப்புல் மேய்வதற்காக; சிறு சிறிது நேரம்; வீடு அவிழ்த்து விடப்பட்டுள்ளதால்; பரந்தன வயல்வெளிகளில்; காண் அவை பரவின; போவான் போகும் நோக்குடன்; போகின்றாரை போகிறவர்களையும்; மிக்குள்ள மற்றுமுள்ள; பிள்ளைகளும் பெண்பிள்ளைகளையும்; போகாமல் காத்து போக ஒட்டாமல் தடுத்து; உன்னை உன்னை; கூவுவான் அழைக்கும் பொருட்டு; வந்து உன் வீட்டின் முன்னே வந்து; நின்றோம் நின்றோம்; எழுந்திராய் எழுந்திரு; பாடி கண்ணனின் குணங்களைப் பாடி; பறை கொண்டு பறை பெற்றுக் கொண்டு; மாவாய் குதிரை வடிவில் வந்த கேசியின் வாய்; பிளந்தானை பிளந்து அழித்தவனை; மல்லரை மல்லர்களை; மாட்டிய மாளச் செய்தவனை; தேவாதி தேவனை தேவாதி தேவனை; சென்று நாம் அணுகி; சேவித்தால் நாம் பணிந்தால்; ஆவாவென்று நம் குறைகளை கண்டு இரங்கி; ஆராய்ந்து விசாரித்து; அருள் நமக்கு அருள் புரிவான்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
kŏdhukalam udaiya pāvai ŏ the girl who is of interest (to krishṇan); kīzh vānam the sky on the east side; vel̤l̤enṛu has dawned (became white),; erumai buffaloes; siṛuvīdu released out for some time (in the early morning); parandhana kāṇ spread out (in the fields); mĕivān to grace (the grass with early morning dews),; mikkul̤l̤a pil̤l̤aigal̤um (regarding) all other girls; pŏgāmal kāththu (we) stopped them from going; pŏvān pŏginṛārai (who were) going, with going itself as the goal,; vandhu ninṛŏm and came and stood steadily (by your door step); unnaik kūvuvān to call you;; ezhundhirāi please get up; pādi (and) sing (kaṇṇans guṇās); paṛai koṇdu and get paṛai (instrument/mŏksham) (from ḥim); mā vāi pil̤andhānai who killed horse shaped kĕsi; mallarai māttiya and who destroyed the wrestlers (chāṇūra-mushtika); dhĕvādhi dhĕvanai and who is the head of nithya-sūris; nām chenṛu sĕviththāl if we went (to ḥim) and give our respects to ḥim; ārāyndhu (ḥe would) inquire (our needs); ā ā enṛu arul̤ and ḥe will say ŏ!, and he would help us.

TP 1.9

482 தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரியத் *
தூபம்கமழத் துயிலணைமேல்கண்வளரும் *
மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய் *
மாமீர்! அவளையெழுப்பீரோ? * உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ? *
ஏமப்பெருந் துயில் மந்திரப்பட்டாளோ? *
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று *
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய்.
482 தூமணி மாடத்துச் * சுற்றும் விளக்கு எரியத் *
தூபம் கமழத் துயில் அணைமேல் கண்வளரும் *
மாமான் மகளே ! மணிக் கதவம் தாள் திறவாய் *
மாமீர் ! அவளை எழுப்பீரோ? ** உன் மகள் தான்
ஊமையோ? * அன்றிச் செவிடோ? அனந்தலோ? *
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? *
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று *
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் (9)
482 tūmaṇi māṭattuc * cuṟṟum vil̤akku ĕriya *
tūpam kamaḻat tuyil-aṇaimel kaṇval̤arum *
māmāṉ makal̤e ! maṇik katavam tāl̤ tiṟavāy *
māmīr ! aval̤ai ĕḻuppīro? ** uṉ makal̤ tāṉ
ūmaiyo? * aṉṟic cĕviṭo? aṉantalo? *
emap pĕruntuyil mantirap paṭṭāl̤o? *
mā māyaṉ mātavaṉ vaikuntaṉ ĕṉṟu ĕṉṟu *
nāmam palavum naviṉṟu-elor ĕmpāvāy (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

482. O my uncle’s daughter, it is morning You are still sleeping on the bed in your room where the incense fragrance spreads around and the lamps on all sides of the palace studded with pure jewels shine. Open your beautiful door. O aunt, won't you wake her up? Can't your daughter speak? Can't she hear? Is she not well? Is she put into deep sleep by any spell? Let us praise the God singing his many names, saying ‘You are the Mā Māyan, Mādhavan, Vaikuntan!’ Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூமணி தூய்மையான ரத்தினங்களினால்; மாடத்து இழைக்கப்பட்ட மாளிகையில்; சுற்றும் நாற்புறமும்; விளக்கெரிய தீபம் எரியவும்; தூபம் கமழ அகிற்புகைகள் மணம் வீசவும்; துயிலணைமேல் மென்மையான படுக்கையில்; கண்வளரும் உறங்கும்; மாமான் மகளே! மாமான் மகளே!; மணிக்கதவம் மாணிக்கக் கதவின்; தாள் தாழ்ப்பளை; திறவாய் திறந்துவிடவும்; மாமீர்! அவளை மாமியே அவளை; எழுப்பீரோ? எழுப்பமாட்டீரோ?; உன் மகள் தான் உன் மகள்; ஊமையோ? ஊமையோ?; அன்றிச் செவிடோ? அல்லது செவிடோ?; அனந்தலோ? பேருறக்கமோ?; ஏமப் பெருந்துயில் காவலில் உள்ளாளோ?; மந்திர மந்திரத்தால்; பட்டாளோ? கட்டுப்பட்டாளோ?; மாமாயன் மாயம் செய்யும் பிரான்; மாதவன் மாதவன்; வைகுந்தன் என்று என்று வைகுந்த நாதனே என்று; நாமம் பலவும் திரு நாமங்கள் பலவற்றை; நவின்று சொல்கிறோம் உம் மகள் எழவில்லையே; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
thū maṇi mādaththu īn the house with naturally good ornamental stones embedded in them; vil̤akku eriya with sacred lamps glowing; chuṝum in all the places,; dhūpam kamazha and with scented smoke spreading around,; māmān magal̤ĕ ŏ daughter of (my) uncle; kaṇ val̤arum who is sleeping; thuyil aṇai mĕl on the bed (that makes one who lies down on it to sleep),; thiṛavāi please do open; maṇik kadhavam thāl̤ the bolt of the door that is made of ornamental stones;; māmīr ŏ aunt!; aval̤ai ezhuppīrŏ please wake her up;; un magal̤ thān is your daughter; ūmaiyŏ dumb so cannot speak?; anṛi or,; sevidŏ deaf so cannot hear?; ananthalŏ (or) just sleeping (due to tiredness)?; ĕmap pattāl̤ŏ (or) is she being restricted/prevented (to come out); perum thuyil mandhirap pattāl̤ŏ (or) under control of a spell that makes her sleep for a long time?; māmāyan ḥe who possesses unfathomable abilities; mādhavan nāthan (husband) of lakshmī; vaikunthan enṛu enṛu srī vaikunta nāthan, and similar and more; nāmam palavum navinṛu we chanted several of such divine names; (still your daughter is not waking up!?)

TP 1.10

483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்! *
மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் *
நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால் *
போற்றப்பறைதரும் புண்ணியனால் * பண்டொருநாள்
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் *
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? *
ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.
483 நோற்றுச் சுவர்க்கம் * புகுகின்ற அம்மனாய் ! *
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? *
நாற்றத் துழாய் முடி நாராயணன் * நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் ** பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் *
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? *
ஆற்ற அனந்தல் உடையாய் ! அருங்கலமே ! *
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் (10)
483 noṟṟuc cuvarkkam * pukukiṉṟa ammaṉāy ! *
māṟṟamum tārāro vācal tiṟavātār? *
nāṟṟat tuzhāy muṭi nārāyaṇaṉ * nammāl
poṟṟap paṟai tarum puṇṇiyaṉāl ** paṇṭu ŏrunāl̤
kūṟṟattiṉ vāyvīzhnta kumpakaraṇaṉum *
toṟṟum uṉakke pĕruntuyiltāṉ tantāṉo? *
āṟṟa aṉantal uṭaiyāy ! aruṅkalame ! *
teṟṟamāy vantu tiṟa-elor ĕmpāvāy (10)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

483. O dear! Have you attained the bliss of your fasting?(nonbu) Why don't you speak? Why don't you answer? The virtuous Nārāyanan, adorned with a thulasi garland, will give us bliss (Parai), if we sing His glory. Did Kumbakarnan, who fell into Yama's mouth in battle gift you this deep sleep? Dear, who is in deep slumber! You are a precious ornament! Wake up and open the door. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நோற்று நோன்பு நோற்று; சுவர்க்கம் சொர்க்கத்தை; புகுகின்ற அனுபவிக்கும்; அம்மனாய்! அம்மனாய்!; வாசல் வாசற்கதவு; திறவாதார் திறக்காதவர்; மாற்றமும் ஒரு பதில் கூட; தாராரோ? பேசமாட்டாரோ?; நாற்ற மணம் மிக்க; துழாய் துளசி மாலை; முடி முடியில் அணிந்துள்ள; நாராயணன் நாராயணனும்; நம்மால் நம்மால்; போற்ற போற்றப் பெற்று; பறை நமக்கு பறை என்னும் கைங்கரியத்தை; தரும் கொடுப்பவனும்; புண்ணியனால் புண்ணிய பிரானால்; பண்டு ஒருநாள் முன் ஒரு காலத்தில்; கூற்றத்தின் வாய் யமன் வாயில்; வீழ்ந்த விழுந்தெழுந்த; கும்பகர்ணனும் கும்பகர்ணனும்; தோற்றும் உன்னிடம் தோல்வியடைந்து; உனக்கே உனக்கே தனது; பெருந்துயில் தான் பேருறக்கத்தை; தந்தானோ? கொடுத்துவிட்டானோ?; ஆற்ற ஆழ்ந்த அழகான; அனந்தலுடையா ய்! உறக்கத்தில் இருப்பவளே!; அருங்கலமே! அரிய ஆபரணம் போன்றவளே!; தேற்றமாய் உறக்கம் தெளிந்து வந்து; வந்து திற கதவைத் திறந்துவிடு; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
nŏṝu (you) did nŏnbu; suvarggam puguginṛa (and now) enjoying the heaven without any break,; ammanāi dear!; vāsal thiṛavādhār you are not opening the door; māṝamum thārārŏ would you not answer us at least?; nāṝaththuzhāi mudi ŏne who is wearing fragrant thiruththuzhāy; nārāyaṇan one having the unparalleled name of nārāyaṇan; nammāl pŏṝap paṛai tharum one who is sung pallāṇdu by us; one who gives us our goal that is doing kainkaryam; puṇṇiyanāl by (such) emperumān who is dharmam,; kumbakaraṇanum that kumbakaraṇan; paṇdu oru nāl̤ once upon a time; kūṝaththin vāi vīzhndha fell on yamas way; unakkĕ thŏṝu (did he) lose to you; thandhānŏ (and) went away giving you; perum thuyil thān (his) big sleepiness?; āṝa ananthal udaiyāy you who is having a nice sleep!; arum kalamĕ you who is like a rare jewel; thĕṝamāi vandhu thiṛa get yourself together, and open (the door)

TP 1.11

484 கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து *
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் *
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! *
புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *
சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து * நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட *
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! * நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்.
484 கற்றுக் கறவைக் * கணங்கள் பல கறந்து *
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் *
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே *
புற்றரவு அல்குல் புனமயிலே ! போதராய் **
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து * நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட *
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி ! * நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய் (11)
484 kaṟṟuk kaṟavaik * kaṇaṅkal̤ pala kaṟantu *
cĕṟṟār tiṟal aḻiyac cĕṉṟu cĕruc cĕyyum *
kuṟṟam ŏṉṟu illāta kovalartam pŏṟkŏṭiye *
puṟṟaravu-alkuṟ puṉamayile ! potarāy **
cuṟṟattut toḻimār ĕllārum vantu * niṉ
muṟṟam pukuntu mukilvaṇṇaṉ per pāṭa *
ciṟṟāte pecāte cĕlvap pĕṇṭāṭṭi ! * nī
ĕṟṟukku uṟaṅkum pŏrul̤?-elor ĕmpāvāy (11)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-30

Simple Translation

484. You are as beautiful as a golden vine, the daughter of the faultless cowherds, owners of many cows, who fight their enemies bravely and destroy their valor. You are as beautiful as a forest peacock, with a slender waist like a snake's hood. Get up. Your friends in the neighborhood have come. They are in your front yard praising the fame of the dark cloud-colored Kannan. O rich girl! you have neither stirred from bed nor uttered a word. Why are you sleeping like this? Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கற்று கன்று போலே இருக்கும்; கறவை பசுக்கள்; கணங்கள் பல பலவற்றை; கறந்து கறப்பவர்கள்; செற்றார் திறலழிய பகைவர் பலம் அழியும்படி; சென்று படையெடுத்துச் சென்று; செருச் செய்யும் போர் செய்யும்; குற்றம் ஒருவகைக் குற்றம்; ஒன்று இல்லாத இல்லாத குணத்தினரான; கோவலர் தம் ஆயர்களின் குடியில் பிறந்த; பொற்கொடியே! பொன்கொடி போன்றவளே!; புற்றரவு புற்றிலிருக்கும் பாம்பு போன்ற; அல்குல் இடையுடைய; புனமயிலே! மயில் போன்றவளே!; போதராய் எழுந்து வருவாயாக; சுற்றத்து உறவினர்களான; தோழிமார் தோழிகள்; எல்லாரும் அனைவரும்; வந்து வந்து சேர்ந்து; நின் உனது இல்லத்தின்; முற்றம் புகுந்து முற்றத்தில் புகுந்து; முகில் வண்ணன் கார்மேக வண்ண பிரானின்; பேர் பாட நாமங்களைப் பாடியும்; சிற்றாதே பேசாதே சலியாமலும் பேசாமலும்; செல்வ செல்வம் போன்ற; பெண்டாட்டி! பெண் பிள்ளாய்!; எற்றுக்கு உறங்கும் உறங்குவது ஏன்; பொருள் எதற்கு; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
gaṇangal̤ pala kaṛandhu draws milk from several groups; kanṛu (kaṝu) kaṛavai of young cows, and; chenṛu goes to the enemies places; cheruch cheyyum and fights with them; cheṝār thiral azhiya such that the strength of enemies get destroyed; kuṝam onṛillādha (but) not having faults like hitting an enemy who is showing his back while running away, etc.,; kŏvalar tham ŏ (sister) of (such) gŏpālars; poṛkodiyĕ who looks like a slim (and beautiful) vine made of gold; puṝu aravu algul and having the back curved like the shape of head of a snake living in its hole; puna mayilĕ and like the peacock living in its place; pŏdharāi please get up and come here;; chuṝaththuth thŏzhimār ellārum all of your friends who are relatives; vandhu have come (together); nin muṝam pugundhu into your thirumāligais verandah; mugil vaṇṇan pĕr pāda to sing the names of kaṇṇan who is of the color of dark blue clouds; selvappeṇdātti nī you who is all the treasure (for us); chiṝādhĕ pĕsādhĕ not moving, and not talking; uṛangum porul̤ eṝukku what could be there to sleep?

TP 1.12

485 கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி *
நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர *
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! *
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச் *
சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற *
மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய் *
இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்? *
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.
485 கனைத்து இளங்கற்று எருமை * கன்றுக்கு இரங்கி *
நினைத்து முலை வழியே நின்று பால் சோர *
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற்செல்வன் தங்காய் ! *
பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றிச் **
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற *
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் *
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் ! *
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் (12)
485 kaṉaittu il̤aṅ kaṟṟu-ĕrumai * kaṉṟukku iraṅki *
niṉaittu mulai vazhiye niṉṟu pāl cora *
naṉaittu illam ceṟu ākkum naṟcĕlvaṉ taṅkāy ! *
paṉit talai vīzha niṉ vācal kaṭai paṟṟi **
ciṉattiṉāl tĕṉ ilaṅkaik komāṉaic cĕṟṟa *
maṉattukku iṉiyāṉaip pāṭavum nī vāy tiṟavāy *
iṉit tāṉ ĕzhuntirāy ītu ĕṉṉa per uṟakkam ! *
aṉaittu illattārum aṟintu-elor ĕmpāvāy (12)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-1

Simple Translation

485. The buffaloes that just gave birth drip milk from their udders lovingly, thinking of their calves, and the front yard of your house is wet with their milk. O dear sister of such a wealthy man! We stand on your threshold unmindful of the falling dew We sing praising the names of Rāma dear to our heart, who angrily destroyed the king of southern Lankā But you haven’t opened your mouth. Wake up. What does this slumber mean? All the people around know that you are still asleep. Come, let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இளங் கற்று இளங்கன்றுகளையுடைய; எருமை எருமைகள்; கனைத்து கறப்பார் இல்லாததால் குரலெழுப்பி; கன்றுக்கு தன் கன்றின் மீது; இரங்கி இரக்கம் கொண்டு; நினைத்து கன்றை நினைத்து; முலை வழியே மடி வழியே; நின்று பால் பாலைப் இடைவிடாமல்; சோர பெருக விட்டதால்; இல்லம் வீடு முழுவதும்; நனைத்து ஈரமாக்கி; சேறாக்கும் சேறாக்கும் வீட்டு; நற் செல்வன் செல்வனுடைய; தங்காய்! தங்கையே!; பனித் தலை பனியானது எங்கள் தலை; வீழ மீது விழ; நின் வாசல் உன் வாசல்; கடை பற்றி கடையை பற்றிக் கொண்டு; சினத்தினால் பிராட்டியைப் பிரித்த கோபத்தினால்; தென் தென் திசையிலுள்ள; இலங்கை இலங்கைக்கு; கோமானை அரசன் இராவணனை; செற்ற கொன்ற; மனத்துக்கு மனதுக்கு; இனியானை இனிமையூட்டும் பிரானை; பாடவும் நாங்கள் பாடச் செய்தேயும்; நீ வாய் நீ பேசாமல்; திறவாய் இருக்கிறாயே; இனித்தான் இனியாவது; எழுந்திராய் எழுந்திருப்பாயாக; ஈதென்ன இதென்ன; பேருறக்கம்! பெரும் தூக்கம்?; அனைத்து ஆய்ப்பாடியிலுள்ள அனைத்து; இல்லத்தாரும் இல்லத்தாரும்; அறிந்து உன் தூக்கத்தை அறிந்து விட்டனர்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
il̤am kaṝu erumai buffaloes having young ones; kanaiththu are making desperate calls (because no one is there to draw out the milk); kanṛukku irangi and being kind to (its) little ones; ninaiththu they think of the little ones,; mulai vazhiyĕ ninṛu pāl sŏra (and because of such deep thinking , they automatically) pour out milk continuously from their nipples; illam nanaiththu making the whole house wet (with milk); sĕṛu ākkum and (due to mixing up) become slushy;; naṛchelvan (gŏpan of such a buffalo; that gŏpan is having ) the best wealth that is krishṇa-kainkaryam; thangāi (and you are) his sister!; nin vāsal kadai paṝi (we are) holding the entrance beam of your (house); thalai pani vīzha and the mist/snow is falling on our head;; pādavum even though (we) sang about; manaththukku iniyānai srī rāma pirān who is sweet to our hearts; sinaththināl cheṝa who killed (rāvaṇan) due to anger (that he separated pirātti); then ilangaik kŏmānai (that is) rāvaṇan the wealthy king of lankai,; nī vāi thiṛavāi you are not opening your mouth and talking;; iniththān at least now; ezhundhirāi please get up;; īdhu enna pĕr uṛakkam what is this great sleep?; anaiththu illaththārum all the people (of āyppādi); aṛindhu have known (about your big sleep).

TP 1.13

486 புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாவரக்கனை *
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய் *
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார் *
வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று *
புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! *
குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே *
பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்னாளால் *
கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.
486 புள்ளின் வாய் கீண்டானைப் * பொல்லா அரக்கனை *
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் *
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் *
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று **
புள்ளும் சிலம்பின காண் * போது அரிக் கண்ணினாய் ! *
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே *
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால் *
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய் (13)
486 pul̤l̤iṉ vāy kīṇṭāṉaip * pŏllā arakkaṉai *
kil̤l̤ik kal̤aintāṉaik kīrttimai pāṭip poy *
pil̤l̤aikal̤ ĕllārum pāvaik-kal̤am pukkār *
vĕl̤l̤i ĕzhuntu viyāzham uṟaṅkiṟṟu **
pul̤l̤um cilampiṉa kāṇ * potu-arik kaṇṇiṉāy ! *
kul̤l̤ak kul̤irak kuṭaintu nīrāṭāte *
pal̤l̤ik kiṭattiyo? pāvāy nī naṉṉāl̤āl *
kal̤l̤am tavirntu kalantu-elor ĕmpāvāy (13)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

486. All other girls, sing and praise Him who killed the evil Rakshasā Rāvana, and split open the mouth of the Asuran when he came as a bird They have gone to worship the Pāvai. The evening star (Guru) has faded and the morning star (Sukran) has risen. See, the birds are awake and chatter. Why are you, with eyes like blossoms, sleeping, without joining us to bathe and play in the cool water? Today is an auspicious day. Don’t pretend to be asleep. Come and join us. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளின் பறவையுருவத்தில் வந்த; வாய் பகாசுரனின் வாயை; கீண்டானைப் கிழித்தவனும்; பொல்லா கொடியனான; அரக்கனை இராவணனின்; கிள்ளி உயிரைக் கிள்ளி; களைந்தானை அழித்தவனின்; கீர்த்திமை கீர்த்திகளை; பாடிப் போய் பாடியபடி சென்று; எல்லாரும் எல்லா; பிள்ளைகள் பெண்பிள்ளைகளும்; பாவை நோன்பு நோற்கும்; களம் இடத்தில்; புக்கார் கூடினர்; வெள்ளி வெள்ளிக்கிழமை; எழுந்து உதயமாகியது; வியாழம் வியாழன்; உறங்கிற்று அஸ்தமித்தது; புள்ளும் பறவைகளும்; சிலம்பின இரை தேடப்போய் ஆரவாரம் செய்தன; காண் பார்; போதரி தாமரையையும் மானையும் ஒத்த; கண்ணினாய்! கண்களையுடையவளே!; பாவாய்! நீ பெண்ணே! நீ; நன்னாளால் இந்த நல்ல நாளில்; கள்ளம் தவிர்ந்து கபடத்தை விட்டு; கலந்து எங்களுடன் சேர்வாய்; குள்ளக் குளிர மிகக் குளிர்ச்சியாக இருக்கும்; குடைந்து நீரில் நன்றாக; நீராடாதே நீராடாமல்; பள்ளி படுக்கையில்; கிடத்தியோ? கிடக்கிறாயோ?; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
pul̤l̤in vāi kīndānai (empirān who) tore and threw away the mouth of bakāsuran who came in the form of a bird,; pollā arakkanaik kil̤l̤ik kal̤aindhānai who very easily/casually destroyed rāvaṇan who was bad deeds personified,; kīrthimai pādip pŏi (we) go while singing of (such empirān’s) brave deeds;; pil̤l̤aigal̤ ellārum all the gŏpikās; pukkār entered; pāvaikkal̤am (to) the place marked by krishṇan and us for nŏnbu;; vel̤l̤i ezhundhu sukran has risen, and; vyāzham uṛangiṝu guru has set; pul̤l̤um silambina kāṇ (and) birds are spreading out (to look for prey);; you,; pŏdhu arik kaṇṇināi with the eyes like flower and deer,; pāvāi (and) naturally having women’s greatness,; nal nāl̤ (we are going to be together with krishṇan) in this good day,; kal̤l̤am thavirndhu (so) avoid the ill will (of being alone with krishṇan); kalandhu (and) join (us);; kul̤l̤a kul̤ira kudaindhu nīrādādhĕ (you,) without taking bath well in the cold water (enjoying krishṇan); pal̤l̤ik kidaththiyŏ sleeping in the bed (instead)?; āl surprised (that we got such a good day)!

TP 1.14

487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் *
செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் *
செங்கற்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் *
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும் *
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் *
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.
487 உங்கள் புழைக்கடைத் * தோட்டத்து வாவியுள் *
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் *
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் *
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் **
எங்களை முன்னம் * எழுப்புவான் வாய் பேசும் *
நங்காய் ! எழுந்திராய் நாணாதாய் ! நாவுடையாய் ! *
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் *
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய் (14)
487 uṅkal̤ puḻaikkaṭait * toṭṭattu vāviyul̤ *
cĕṅkaḻunīr vāy nĕkiḻntu āmpal vāy kūmpiṉa kāṇ *
cĕṅkaṟpŏṭik kūṟai vĕṇpaṟ tavattavar *
taṅkal̤ tirukkoyil caṅkiṭuvāṉ potantār **
ĕṅkal̤ai muṉṉam * ĕḻuppuvāṉ vāy pecum *
naṅkāy ! ĕḻuntirāy nāṇātāy ! nāvuṭaiyāy ! *
caṅkŏṭu cakkaram entum taṭakkaiyaṉ *
paṅkayak kaṇṇāṉaip pāṭu-elor ĕmpāvāy (14)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-14

Simple Translation

487. The girls who come to wake up their friend say, “See, in the pond in your backyard garden, red lilies open and water lilies close. Sages, wearing saffron clothes like powdered brick, with their shining white teeth, go to His divine abode to blow their conches. O shameless, young girl, who promised to wake us up! You have failed to do so, Get up! Come, let us sing and praise the lotus-eyed God who holds the conch and discus(chakra) in his strong hands. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்களை எங்களை; முன்னம் முந்தி வந்து; எழுப்புவான் எழுப்புவதாக; வாய் பேசும் சொல்லிப் போன; நங்காய்! நங்கையே!; எழுந்திராய் எழுந்திரு; நாணாதாய் உனக்கு வெட்கமில்லையா?; நாவுடையாய்! இனிமையாகப் பேசுபவளே!; உங்கள் உங்கள் வீட்டு; புழைக்கடை புழைக்கடை; தோட்டத்து தோட்டத்தில் உள்ள; வாவியுள் தடாகத்தில்; செங்கழுநீர் செங்கழுநீர்ப் பூக்கள்; வாய்நெகிழ்ந்து மலர்ந்து; ஆம்பல் வாய் கருநெய்தல் மலர்கள்; கூம்பின காண் குவிந்துகொண்டன; செங்கல் செங்கல் நிறகாஷாயம்; பொடிக்கூறை அணிந்தவரும்; வெண் வெண்மையான; பல் பற்களையுடையவரும்; தவத்தவர் தவ முனிவர்களும்; தங்கள் தமது; திருக்கோயில் திருக்கோயிலில்; சங்கிடுவான் சங்கு ஊதிட; போதந்தார் போகின்றார்கள்; சங்கோடு சங்கையும்; சக்கரம் ஏந்தும் சக்கரத்தையும் தரிக்கும்; தடக்கையன் பெரிய கைகளையுடைய; பங்கய தாமரையொத்தக் கண்களையுடைய; கண்ணானை பிரானை; பாட துதித்திட எழுந்திராய்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
engal̤ai munnam ezhuppuvān would wake us (who are your friends) up first; vāi pĕsum mentioned so with your mouth (in passing); nangāi who is full of good qualities; nāṇādhāi not feeling guilty (that you did not wake us up as promised); nā udaiyāi having a tongue (that says sweet words); ungal̤ puzhaik kadai thŏttaththu vāviyul̤ in the pond that is in the back of your house; sengazhunīr vāi negizhndhu lotus flowers have blossomed; āmbal vāi kūmbina kāṇ āmbal flowers have closed down; see!; sengal podik kūṛai (also) one with clothes brick in color; veṇ pal and having white teeth; thavaththavar having the get up of sanyāsis who do thapas; pŏginṛār are going,; sangu iduvān to sound the konch; thangal̤ thirukkŏyil in their temples;; pangayak kaṇṇānai sarvĕsvaran having lotus eyes; sangodu chakkaram and conch and the wheel (sudharsanar); ĕndhum (which he) easily holds in both the hands; thadak kaiyan (he) having big hands,; ezhundhirāi please get up; pāda to sing (about him, as a conduit of our love)

TP 1.15

488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ? *
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றேன் *
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும் *
வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக *
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை *
எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் *
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க
வல்லானை * மாயனைப் பாடேலோரெம்பாவாய்.
488 எல்லே ! இளங்கிளியே ! * இன்னம் உறங்குதியோ *
சில் என்று அழையேன்மின் ! நங்கைமீர் ! போதருகின்றேன் *
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் *
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ! **
ஒல்லை நீ போதாய் * உனக்கு என்ன வேறு உடையை? *
எல்லாரும் போந்தாரோ ? போந்தார் போந்து எண்ணிக்கொள் *
வல் ஆனை * கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை *
மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய் (15)
488 ĕlle ! il̤aṅkil̤iye ! * iṉṉam uṟaṅkutiyo *
cil ĕṉṟu azhaiyeṉmiṉ ! naṅkaimīr ! potarukiṉṟeṉ *
vallai uṉ kaṭṭuraikal̤ paṇṭe uṉ vāy aṟitum *
vallīrkal̤ nīṅkal̤e nāṉe tāṉ āyiṭuka ! **
ŏllai nī potāy * uṉakku ĕṉṉa veṟu uṭaiyai? *
ĕllārum pontāro ? pontār pontu ĕṇṇikkŏl̤ *
val āṉai * kŏṉṟāṉai māṟṟārai māṟṟu azhikka vallāṉai *
māyaṉaip pāṭu-elor ĕmpāvāy (15)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

488. The girls address her: “Oh! sweet-tongued, beautiful one like a young parrot! What is this? Are you still asleep? Wake up.!” She answers, “Don’t shout and wake me up. I am a poor girl and you are as bright as lightning. I’m coming.” They say, “We know your tricks. You always say this.” She answers, “You are the clever ones. Let me be what I am.” They say, “Come quickly. We can’t wait for you. ” She asks, “Have all our friends arrived?” They say, “Yes, They’re all here. If you want, come and count them. Come and sing the praise of the Māyan, who killed the mighty elephant, vanquished the enemies and made them surrender. Let us go and worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இளங்கிளியே! இளமையான கிளியே!; எல்லே! இனிமையான பேச்சையுடையவளே!; இன்னம் இன்னுமா; உறங்குதியோ! உறங்குகிறாய்?; சில்லென்று சள் சள் என்று; அழையேன்மின் அழைக்காதீர்கள்; நங்கைமீர்! தோழிகளே!; போதருகின்றேன் இதோ வருகிறேன்; வல்லை உன் நீ பேசுவதில்; கட்டுரைகள் திறமை படைத்தவள்; பண்டே உன் வெகு நாட்களாகவே; வாய் உன் வாக்குத் திறமையை; அறிதும் அறிவோம்; நீங்கள் நீங்கள்தான்; வல்லீர்கள் வல்லவர்கள்; நானே தான் நானே வல்லவளாக; ஆயிடுக! இருந்துவிட்டுப் போகிறேன்; ஒல்லை சீக்கிரமாக; நீ போதாய் நீ எழுந்து வா; உனக்கென்ன உனக்கென்று; வேறு உடையை? தனி உடைமை உண்டா?; எல்லாரும் எல்லாரும்; போந்தாரோ வந்துவிட்டார்களா; போந்தார் வந்துவிட்டார்கள்; போந்து வந்து; எண்ணிக்கொள் எண்ணிக்கொள்; வல் வலிய குவலயாபீட; ஆனை யானையை; கொன்றானை அழித்தவனை; மாற்றாரை சத்ருக்களை; மாற்று அழிக்க வலிமையற்றவர்களாக; வல்லானை செய்பவனை; மாயனைப் பாடு மாயனைப் பாட வருவாய்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
il̤am kil̤iyĕ ŏ gŏpikā, who looks like a young parrot (in speech and looks); ellĕ wow! (how sweet is your speech!); innam even after everyone has come and stood here; uṛangudhiyŏ you are still sleeping? (and so they try to wake her up); nangaimīr (gŏpikā from inside says) dear girls!; sil enṛu azhaiyĕnmin please talk without fighting (with me);; pŏdharginrĕn ī will start (now itself);; vallai (from outside:) you are smart (in talks); paṇdĕ aṛidhum we know for quite long; un katturaigal̤ about your strong words; un vāi and about your taking in length (but no action);; nīngal̤ĕ valleergal̤ (from inside:) it is you who can talk strongly/rudely (as you are arguing with me); nānĕ thān āyiduga (then truly accepts the fault as hers) ok, ī shall be the one who is talking strongly/rudely; (what do you want me to do?); .; nee (from outside:) you; ollai pŏdhāi get up quickly.; unakku enna vĕṛu udaiyai what separate goals/plans are you having?; ellārum pŏndhārŏ (from inside:) has everyone come (who are supposed to come)?; pŏndhār (from outside:) they have come,; pŏndhu eṇṇikkol̤ you come out and count them; (from inside:) what do ī need to do after coming out? .; pāda (from outside:) to sing about; konṛānai the one who destroyed; vallānai the strong elephant (kuvalayāpīdam); māṝārai māṝu azhikka vallānai and who can destroy the strength of enemies; māyanai that is, kaṇṇan, who does wonderful actions.; (so please get up). .

TP 1.16

489 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! * கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! * மணிக்கதவம்தாள்திறவாய் *
ஆயர்சிறுமியரோமுக்கு * அறைபறை
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் *
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் *
வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! * நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2)
489 ## நாயகனாய் நின்ற * நந்தகோபனுடைய
கோயில் காப்பானே ! * கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! * மணிக்கதவம் தாள் திறவாய் *
ஆயர் சிறுமியரோமுக்கு ** அறை பறை
மாயன் மணிவண்ணன் * நென்னலே வாய்நேர்ந்தான் *
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் *
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா ! *
நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் (16)
489 ## nāyakaṉāy niṉṟa * nantakopaṉuṭaiya
koyil kāppāṉe ! * kŏṭit toṉṟum toraṇa
vāyil kāppāṉe! * maṇikkatavam tāl̤ tiṟavāy *
āyar ciṟumiyaromukku ** aṟai paṟai
māyaṉ maṇivaṇṇaṉ * nĕṉṉale vāynerntāṉ *
tūyomāy vantom tuyilĕzhap pāṭuvāṉ *
vāyāl muṉṉamuṉṉam māṟṟāte ammā ! *
nī neya nilaik katavam nīkku-elor ĕmpāvāy (16)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

489. The girls' address to the guards of Nandagopan's palace. “Oh! guards of the palace of the lord Nandagopan; those who protect the doors that are decorated with flags and festoons! Open the door. The jewel-colored, dark Māyavan promised us the cowherd girls yesterday that He would give the eternal service opportunity(Parai) We have taken bath and have come pure to sing and wake Him up. O guard! Don’t offer excuses. Open the front door of this palace! We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாயகனாய் நின்ற ஸ்வாமியாயிருக்கிற; நந்தகோபனுடைய நந்தகோபனுடைய; கோயில் மாளிகையை; காப்பானே! காப்பவனே!; கொடித் தோன்றும் த்வஜங்கள் இருக்கும்; தோரண தோரண; வாயில் வாசலை; காப்பானே! காப்பவனே!; மணி ரத்தினங்கள்; கதவம் பொருந்திய கதவின்; தாள் தாழ்ப்பாளை; திறவாய் திறந்திடு; ஆயர் சிறுமியரோ ஆயர் சிறுமியரான; உமக்கு எமக்கு; அறை பறை சப்திக்கும் பறை தருவதாக; மாயன் மாயனான; மணிவண்ணன் கண்ணபிரான்; நென்னலே நேற்றே; வாய் நேர்ந்தான் வாக்களித்தான்; துயிலெழ துயிலிலிருந்து எழுந்திருக்கும்படி; பாடுவான் பாடுவதற்காக; தூயோமாய் பரிசுத்தர்களாய்; வந்தோம் வந்துள்ளோம்; முன்னமுன்னம் முதல் முதலிலே; வாயால் உம் வாயால்; மாற்றாதே மறப்பு கூறாதே; அம்மா! நேய நிலை அம்மா! வாயில்; கதவம் நீக்கு கதவை நீக்கிவிடு; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
kāppānĕ ẏou the protector of; kŏyil thirumāl̤igai; nāyaganāi ninṛa nandhagŏpanudaiya of nandhagŏpar who is (our) swāmi; thiṛavāi open; thāl̤ the bolt; kadhavam (of the) door; maṇi having gem stones embedded,; āyar siṛumiyarŏmukku for us small gŏpikās;; māyan kaṇṇapirān with admirable deeds; maṇivaṇṇan whose color is like that of blue diamond; aṛai paṛai nennalĕ vāi nĕrndhān promised yesterday itself that ḥe would give paṛai instrument that makes sound;; thūyŏmāi vandhŏm we came with the pure mind; thuyil ezhap pāduvān to sing so that ḥe would wake up from ḥis sleep;; ammā swāmi!; vāyāl munnam munnam māṝādhĕ do not refuse with your first words; only you; nīkku (should) open the; nĕya nilaik kadhavam door which has got the disposition of having love for kaṇṇan.

TP 1.17

490 அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும் *
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் *
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! *
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் *
அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த *
உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய் *
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! *
உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.
490 அம்பரமே தண்ணீரே * சோறே அறம் செய்யும் *
எம்பெருமான் ! நந்தகோபாலா ! எழுந்திராய் *
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குல விளக்கே ! *
எம்பெருமாட்டி ! யசோதாய் ! அறிவுறாய் **
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த *
உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய் *
செம்பொன் கழலடிச் செல்வா! பலதேவா! *
உம்பியும் நீயும் உறங்கு ஏலோர் எம்பாவாய் (17)
490 amparame taṇṇīre * coṟe aṟam cĕyyum *
ĕmpĕrumāṉ ! nantakopālā ! ĕzhuntirāy *
kŏmpaṉārkku ĕllām kŏzhunte ! kula vil̤akke ! *
ĕmpĕrumāṭṭi ! yacotāy ! aṟivuṟāy **
amparam ūṭu aṟuttu oṅki ulaku al̤anta *
umpar komāṉe ! uṟaṅkātu ĕzhuntirāy *
cĕmpŏn kazhalaṭic cĕlvā! palatevā! *
umpiyum nīyum uṟaṅku-elor ĕmpāvāy (17)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

490. The girls who come to wake up people in the house (Nandagopan, Yashodā, Baladeva and the gods), say, “Dear lord of the cowherds, Nanda Gopālā, who gives clothes, water and food to all, get up! O Yashodā, tender shoot among all the women who are soft as vines, the bright light of your family, and our dear one, get up. O king of the gods, You grew tall, split the sky and measured the world. Dear one, do not sleep. Get up. O Baladevā, with feet adorned with pure golden anklets, don't sleep with your little brother. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம்பரமே வஸ்திரங்களையும்; தண்ணீரே தண்ணீரையும்; சோறே உணவையும்; அறஞ்செய்யும் தர்மம் செய்யும்; எம்பெருமான் எமக்கு ஸ்வாமியான; நந்தகோபாலா! நந்தகோபரே!; எழுந்திராய் எழுந்திருக்கவேணும்; கொம்பனார்க்கு வஞ்சிக்கொடி போன்ற; எல்லாம் பெண்களுக்கெல்லாம்; கொழுந்தே! கொழுந்து போன்றவளே!; குலவிளக்கே! ஆயர்குலத்துக்கு தீபமே!!; எம்பெருமாட்டி! எம் தலைவியே!; யசோதாய்! யசோதாய்!; அறிவுறாய் உணர்ந்து எழுந்திடுவாய்!; அம்பரம் ஆகாசத்தை; ஊடு அறுத்து துளைத்துக்கொண்டு; ஓங்கி உயரந்து வளர்ந்து; உலகு அளந்த உலகை அளந்த; உம்பர் கோமானே தேவாதி தேவனே!; உறங்காது இனி தூங்காமல்; எழுந்திராய் எழுந்திடுவாய்; செம் பொன் சிவந்த பொன்னாற் செய்த; கழல் கழல்களை அணிந்துள்ள; அடி திருவடிகளை உடையவனே!; செல்வா! செல்வனே!; பலதேவா! பலராமனே!; உம்பியும் உன் தம்பியாகிய கண்ணனும்; நீயும் நீயும்; உறங்கேல் உறங்காமல் எழுந்திருப்பீர்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
emperumān nandhagŏpālā ŏ nandhagŏpa who is our swāmi!; aṛam who donates; ambaramĕ clothes; thaṇṇirĕ water; sŏṛĕ and food (all the time, all of it),; ezhundhirāi please wake up;; asodhāi dear yasŏdhai pirātti!; kozhundhĕ fine one among us; kombu anārkkellām women who are like vanji tree that is full of flowers; kula vil̤akkĕ who is a bright lamp for the cowherds; aṛivuṛāi please wake up!; umbar kŏmānĕ ŏ dhĕva dhĕva!; ambaram ūdu aṛuththu who pierced the ākāsam (space); ŏngi raised; ulagu al̤andha and kindly spanned/measured all the worlds,; uṛangādhu without sleeping,; ezhundhirāi please get up;; selvā ŏ srīmān!; baladhĕvā ŏ baladhĕvā!; sem pon kazhal adi (who is) having reddish gold thiruvadi (of wealth),; umbiyum nīyum your brother kaṇṇan and you; uṛangĕl please do not sleep.

TP 1.18

491 உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன் *
நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்! *
கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய் *
வந்தெங்குங் கோழியழைத்தனகாண் * மாதவிப்
பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண் *
பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட *
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப *
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2)
491 ## உந்து மத களிற்றன் * ஓடாத தோள் வலியன் *
நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் ! *
கந்தம் கமழும் குழலீ ! கடை திறவாய் *
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் ** மாதவிப்
பந்தர்மேல் * பல்கால் குயில் இனங்கள் கூவின காண் *
பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாடச் *
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப *
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (18)
491 ## untu mata kal̤iṟṟaṉ * oṭāta tol̤-valiyaṉ *
nanta kopālaṉ marumakal̤e ! nappiṉṉāy ! *
kantam kamaḻum kuḻalī ! kaṭai tiṟavāy *
vantu ĕṅkum koḻi aḻaittaṉa kāṇ ** mātavip
pantarmel * palkāl kuyil-iṉaṅkal̤ kūviṉa kāṇ *
pantār virali ! uṉ maittuṉaṉ per pāṭac *
cĕntāmaraik kaiyāl cīr ār val̤ai ŏlippa *
vantu tiṟavāy makiḻntu-elor ĕmpāvāy (18)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

491. The girls coming to wake up Nappinnai say, “O, Nappinnai, daughter-in-law of the strong-armed Nandagopan, who is valiant like an elephant, open the door. O! the fragrant haired one! Listen! The roosters are calling to wake everyone and the flock of cuckoo birds sitting on the vines blooming with mādhavi flowers call out. Come, you hold flower balls in your beautiful and soft fingers! Come and join us to sing and praise the name of your husband. Open the door as the lovely bracelets on your beautiful lotus hands jingle. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உந்து மத மதநீர் பெருகும்; களிற்றன் யானை போன்ற; ஓடாத யுத்த களத்தில் பின்வாங்கி ஓடாதவனும்; தோள் வலியன் புஜபலத்தை உடையவனுமான; நந்த கோபாலன் நந்த கோபாலனுக்கு; மருமகளே! மருமகளான; நப்பின்னாய்! நப்பின்னையே!; கந்தம் கமழும் மணம் கமழும்; குழலி கூந்தலை உடையவளே!; கடை தாழ்ப்பாளை; திறவாய் திறந்து விடு; கோழி கோழிகள்; எங்கும் எல்லாவிடங்களிலும்; வந்து வந்து; அழைத்தன காண் கூவுகின்றன பார்; மாதவி குருக்கத்திக் கொடி; பந்தல் மேல் பந்தல் மேல்; குயில் இனங்கள் குயில் கூட்டங்கள்; பல்கால் பலமுறை; கூவின காண் கூவுகின்றன; பந்தார் பந்தைக் கையில்; விரலி! வைத்திருப்பவளே!; உன் மைத்துனன் கண்ணனின்; பேர் பாட நாமங்களைப் பாடியபடி; செந்தாமரை செந்தாமரை போன்ற; கையால் உன் கையினால்; சீர் ஆர் சீர்மையான உன்; வளை கைவளையல்கள்; ஒலிப்ப ஒலிக்கும் படி; வந்து மகிழ்ந்து வந்து; திறவாய் திறப்பாயாக; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
madham undhu kal̤iṝan strong like an elephant that is driven by fury producing water in eyes,; ŏdādha thŏl̤ valiyan with strong shoulders so he does not run away from the battle field,; nandhagŏpālan marumagal̤ĕ ŏ daughter-in-law of such nandhagŏpar!; nappinnāi who possesses the name of nappinnai!; gandham kamazhum kuzhalee ŏ who has got her hair/tresses emitting fragrance all around!; kadai thiṛavāi please open the door;; vandhengum kŏzhi azhaiththana kāṇ spreading in all four directions, the cocks are yelping please see.; kuyil inangal̤ (also) groups of cuckoos; mādhavi pandhal mĕl (sleeping) on the pandhal (structure for giving shade) having plants of kurukkaththi; kūvina pal kāl kāṇ calling many times, please see.; pandhu ār virali ŏ you having fingers holding the (flower) ball (which gets kaṇṇan to lose to you),; un maiththunan pĕr pāda (for us) to sing the names of your nāthan (husband) krishṇan,; vandhu come walking; sīr ār val̤ai olippa with your sweet bangles making jingling sounds; sem thāmaraik kaiyāl and with your hands that are reddish like a lotus; magizhndhu thiṛavāi open the door happily.

TP 1.19

492 குத்துவிளக்கெரிய கோட்டுக்கால்கட்டில்மேல் *
மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி *
கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல் *
வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் *
மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை *
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண் *
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் *
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.
492 குத்து விளக்கு எரியக் * கோட்டுக்கால் கட்டில் மேல் *
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி *
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் *
வைத்துக் கிடந்த மலர் மார்பா ! வாய்திறவாய் **
மைத் தடங்கண்ணினாய் * நீ உன் மணாளனை *
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் *
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால் *
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் (19)
492 kuttu vil̤akku ĕriyak * koṭṭukkāṟ kaṭṭil mel *
mĕttĕṉṟa pañca-cayaṉattiṉ mel eṟi *
kŏttu alar pūṅkuḻal nappiṉṉai kŏṅkai mel *
vaittuk kiṭanta malar mārpā ! vāytiṟavāy **
mait taṭaṅkaṇṇiṉāy * nī uṉ maṇāl̤aṉai *
ĕttaṉai potum tuyil ĕḻa ŏṭṭāy kāṇ *
ĕttaṉai yelum pirivu āṟṟakillāyāl *
tattuvam aṉṟu takavu-elor ĕmpāvāy (19)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

492. The girls coming to wake up the God and Nappinnai say, “O Thirumāl adorned with garlands! in a room decorated with beautiful lamps, you sleep on an ivory cot that has a soft bed, resting peacefully on the chest of Nappinnai, whose hair is adorned with beautiful flowers that spread fragrance. Arise and speak. O Nappinnai with kohl-darkened eyes, you don't want to wake your dear husband as you can't tolerate even a moment's separation from him. This doesn't suit your behavior. Come, we are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குத்து விளக்கு நிலை விளக்குகள்; எரிய எரிய; கோட்டு தந்தத்தால் செய்த; கால் கால்களையுடைய; கட்டில் மேல் கட்டிலின் மேல்; மெத்தென்ற மெத்தென்ற; பஞ்ச பஞ்சினாலான; சயனத்தின் படுக்கையின்; மேல் ஏறி மீதேறி; கொத்து கொத்து கொத்தாக; அலர் மலர்கின்ற பூக்களை யணிந்த; பூங்குழல் கூந்தலை யுடையளான; நப்பின்னை நப்பின்னை; கொங்கை மேல் மார்பின் மேல்; வைத்துக் கிடந்த அகன்ற மார்பை வைத்து; மலர் மார்பா! கிடப்பவனே!; வாய் திறவாய் வாய் திறந்து சொல்வாய்; மைத் தடம் மையிட்ட பெரிய; கண்ணினாய்! கண்களையுடையவளே!; நீ உன் மணாளனை நீ உன் நாதனை; எத்தனை எத்தனை; போதும் பொழுதானலும்; துயில் எழ எழுந்திருக்க; ஒட்டாய் காண் விடமாட்டாய் போலும்!; எத்தனை யேலும் க்ஷண காலமும்; பிரிவு பிரிந்திருப்பதை; ஆற்றகில்லாயால் பொறுக்கமாட்டாய் போலும்; தத்துவம் அன்று இது உன் குணத்திற்கு; தகவு அன்று தகுதியானது அன்று; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
kuththu vil̤akku (with bright) lamp; eriya lit up; pancha sayanaththin mĕl ĕṛi climbing on to the mattress made of cotton; kŏdu kāl kattil mĕl on the bed with legs made of elephant tusks,; meththenṛa and very soft,; vaiththuk kidandha malar mārbhā ŏ (krishṇā) you have placed your broad chest; kongai mĕl on the divine chest; nappinnai of nappinnai; koththu alar pū kuzhal who is having hair that holds bunches of flowers,; vāi thiṛavāi open the mouth and talk;; mai thadam kaṇṇināi ŏh (nappinnai) who is having broad eyes decorated with mai (kājal); you are; ottāi kāṇ not agreeing; thuyil ezha to wake up; un maṇāl̤anai your husband kaṇṇan; eththanai pŏdhum even for a second;; pirivu āṝagillāyāl you are not able to tolerate separation from ḥim; eththanaiyĕlum even for a short time;; thaththuvam anṛu (this) is not according to your svarūpam (your true nature); thagavu anṛu and it is not matching your true behavior.

TP 1.20

493 முப்பத்துமூவ ரமரர்க்குமுன்சென்று *
கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய் *
செப்பமுடையாய்! திறலுடையாய்! * செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய் *
செப்பென்னமென்முலைச் செவ்வாய்ச்சிறுமருங்குல் *
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய் *
உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை *
இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய்.
493 முப்பத்து மூவர் * அமரர்க்கு முன் சென்று *
கப்பம் தவிர்க்கும் கலியே ! துயில் எழாய் *
செப்பம் உடையாய்! திறல் உடையாய் ! * செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயில் எழாய் **
செப்பு அன்ன மென் முலைச் * செவ்வாய்ச் சிறு மருங்குல் *
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயில் எழாய் *
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை *
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் (20)
493 muppattu mūvar * amararkku muṉ cĕṉṟu *
kappam tavirkkum kaliye ! tuyil ĕḻāy *
cĕppam uṭaiyāy! tiṟal uṭaiyāy ! * cĕṟṟārkku
vĕppam kŏṭukkum vimalā ! tuyil ĕḻāy **
cĕppu aṉṉa mĕṉ mulaic * cĕvvāyc ciṟu maruṅkul *
nappiṉṉai naṅkāy ! tiruve ! tuyil ĕḻāy *
ukkamum taṭṭŏl̤iyum tantu uṉ maṇāl̤aṉai *
ippote ĕmmai nīr āṭṭu-elor ĕmpāvāy (20)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

493. The girls coming to wake up the Lord and Nappinnai say, "O dear God, you hasten to allay the worries of the thirty three crores of Devās. You faultless and omnipotent! Get up. You vex your enemies and take care of your devotees. O beautiful young Nappinnai with soft tiny breasts a red mouth and a slender waist, get up! Give us fans and mirrors and send your beloved with us so that we can praise him and let us bathe. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முப்பத்து மூவர் முப்பத்து முக்கோடி; அமரர்க்கு தேவர்களுக்க்கு; முன் தானாகவே; சென்று முன்னமே எழுந்தருளி; கப்பம் அவர்களின் மன நடுக்கத்தை; தவிர்க்கும் நீக்கும்; கலியே! பகவானே!; துயிலெழாய் எழுந்திராய்; செப்பம் உடையாய்! நேர்மை மிக்கவனே!; திறல் உடையாய்! திறன் உடையவனே!; செற்றார்க்கு பகைவர்களுக்கு; வெப்பம் அனலானவனே!; விமலா! தூய்மயானவனே!; துயிலெழாய் எழுத்திடுவாய்!; செப்பு அன்ன பொற்செப்பு போன்ற; மென்முலை மார்பகங்களையும்; செவ்வாய் சிவந்த வாயும்; சிறுமருங்குல் சிறிய இடையும் உடைய; நங்காய் நங்காய்; நப்பின்னை நப்பின்னை பிராட்டியே!; திருவே பெரிய பிராட்டியை போன்றவளே!; துயிலெழாய் எழுந்திரு; உக்கமும் நோன்புக்கு தேவையான விசிறியையும்; தட்டொளியும் தந்து கண்ணாடியையும் தந்து; உன் மணாளனை உன் மணாளனையும்; இப்போதே இப்பொழுதே எழுப்பி; எம்மை நீராட்டு எங்களையும் நீராட்டுவாயாக; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
kaliyĕ ŏ the strong kaṇṇa!; mun chenṛu who goes voluntarily/early (before any problem comes); muppaththu mūvar amararkku for all the dhĕvas (muppaththu mukkŏti dhĕvas 33 crore); thavirkkum and remove; kappam (their) fear,; thuyil ezhāi please wake up;; vimalā ŏh the pure one!; seppam udaiyāy (who is) honest (in protecting the devotees); thiṛal udaiyāy (and) strong (to destroy the enemies of devotees); kodukkum (and who) can give; veppam hardship; seṝārkku to the enemies,; thuyil ezhāi get up from your bed;; nappinnai nangāi ŏ nappinnai pirātti!; thiruvĕ who can equal periya pirātti!; men mulai (who has got) soft breasts; seppu anna like a golden pot,; sevvāi (and) reddish mouth/lips; siru marungul (and) tiny waist,; thuyil ezhāi get up from the bed;; thandhu give (us); ukkamum fan (āla vattam, required as part of nŏnbu); thattu ol̤iyum and mirror; un maṇāl̤anai and (give) ḥim too who is your nāthan,; nīrāttu (and) bathe (i.e., krishṇā anubhavam); emmai us; ippŏdhĕ right away

TP 1.21

494 ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப *
மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் *
ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய் *
ஊற்றமுடையாய்! பெரியாய்! * உலகினில்
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய் *
மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் *
ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே *
போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.
494 ஏற்ற கலங்கள் * எதிர் பொங்கி மீது அளிப்ப *
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் *
ஆற்றப் படைத்தான் மகனே ! அறிவுறாய் *
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! ** உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் *
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் *
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே *
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் (21)
494 eṟṟa kalaṅkal̤ * ĕtir pŏṅki mītu al̤ippa *
māṟṟāte pāl cŏriyum val̤l̤aṟ pĕrum pacukkal̤ *
āṟṟap paṭaittāṉ makaṉe ! aṟivuṟāy *
ūṟṟam uṭaiyāy ! pĕriyāy ! ** ulakiṉil
toṟṟamāy niṉṟa cuṭare! tuyil ĕḻāy *
māṟṟār uṉakku vali tŏlaintu uṉ vācaṟkaṇ *
āṟṟātu vantu uṉ aṭipaṇiyumā pole *
poṟṟi yām vantom pukaḻntu-elor ĕmpāvāy (21)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-11, BG. 10-1

Simple Translation

494. The girls coming to wake up the God say, “O son of Nandagopan, Lord of fine cows that yield milk generously, making the pots overflow! You are wise, a bright light and our refuge. Get up. Just as the enemies who are unable to fight with you fall at your doorstep in total surrender, we come and worship your feet, praising You whose fame is abundant. Let us worship worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏற்ற கலங்கள் பாலை ஏற்கும் கலங்கள்; எதிர் பொங்கி பொங்கி மேலே; மீது அளிப்ப வழியும்படியாக; மாற்றாதே தொடர்ந்து; பால்சொரியும் பாலைப் பொழியும்; வள்ளல் பெரும் வள்ளல் போன்ற பெரிய; பசுக்கள் பசுக்களை; ஆற்ற படைத்தான் கொண்ட நந்தகோபன்; மகனே! மகனான கண்ணனே!; அறிவுறாய் எழுந்திருப்பாயாக!; ஊற்றம் அடியாரைக் காப்பதில்; உடையாய்! சிரத்தையுடையவனே!; பெரியாய்! பெருமை பொருந்தியவனே!; உலகினில் இவ்வுலகத்திலே; தோற்றமாய் நின்ற! ஆவிர்பவித்த; சுடரே தேஜஸ் மிக்கவனே!; துயிலெழாய் எழுந்திருப்பாயாக; மாற்றார் உனக்கு சத்ருக்கள் உன்; வலி தொலைந்து வலிமைக்குத் தோற்று; உன் வாசற்கண் உன் மாளிகை வாசலில்; ஆற்றாது வந்து கதியற்று வந்து; உன் அடி உன் திருவடியில்; பணியுமா போலே சரணடைவது போல்; போற்றி யாம் உனக்கு மங்களாசாஸனம்; புகழ்ந்து பண்ணிக்கொண்டு புகழ்ந்து; வந்தோம் நாங்கள் வந்தோம்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
val̤l̤al generous; perum pasukkal̤ big cows; pāl soriyum can produce out milk; ĕṝa kalangal̤ (such that) all the containers placed to get the milk (that is produced out automatically); edhir pongi get filled out; mīdhu al̤ippa and pour outside; māṝādhĕ without any break;; āṝap padaiththān maganĕ son of such a person having such cows; aṛivuṛāi please wake up (thiruppal̤l̤i uṇara vĕnum / தி்ருப்பள்ளியுணரவேணும்); ūṝam udaiyāy vĕdhas which are the top most reference/pramānam talks about your having the determination / enthusiasm; periyāy (you) having the greatness (which the vĕdhās are not able to completely determine); thŏṝam āy ninṛa did avathāram (for everyone to see); ulaginil in this world; sudarĕ and are very bright in appearance; thuyil ezhāi please wake up from sleep;; māṝār your enemies; unakku vali tholaindhu lose (their) strength because of you; āṝādhu vandhu came without any other place/person to go to; un vāsal kaṇ to the entrance of your thirumāl̤igai (house); un adi paṇiyum ā pŏlĕ and be praying unto your divine feet, (in the same way),; yām we; vandhŏm have come and reached (your thirumāl̤igai entrance); pugazhndhu praising (you); pŏṝi and doing mangal̤āsāsanam (to you)

TP 1.22

495 அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான
பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே *
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் *
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே *
செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ? *
திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல் *
அங்கணிரண்டும்கொண்டு எங்கல்மேல்நோக்குதியேல் *
எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.
495 அங்கண் மா ஞாலத்து அரசர் * அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே *
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் *
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே **
செங்கண் சிறுச் சிறிதே * எம்மேல் விழியாவோ? *
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் *
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் *
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் (22)
495 aṅkaṇ mā ñālattu aracar * apimāṉa
paṅkamāy vantu niṉ pal̤l̤ikkaṭṭil kīzhe *
caṅkam iruppār pol vantu talaippĕytom *
kiṅkiṇivāyc cĕyta tāmaraip pūp pole **
cĕṅkaṇ ciṟuc ciṟite * ĕmmel vizhiyāvo? *
tiṅkal̤um ātittiyaṉum ĕzhuntāṟpol *
aṅkaṇ iraṇṭum kŏṇṭu ĕṅkal̤mel nokkutiyel *
ĕṅkal̤ mel cāpam izhintu-elor ĕmpāvāy (22)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

495. Like the great emperors who assemble before You with worshipful obedience, shedding their ego, we gather before You. Won't You, with your beautiful lotus eyes that resemble the anklet (kinkini), open your eyes slowly, look at us and shower your grace? If You cast a divine glance with your eyes that glow like the rising sun and the moon, all our sins will get washed away. Come, let us worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் கண் மா அழகிய பரந்த; ஞாலத்து அரசர் உலகாளும் மன்னர்கள்; அபிமான தங்கள் அகங்காரம்; பங்கமாய் வந்து அடங்கி வந்து; நின் பள்ளிக்கட்டில் உன் சிங்காசனத்தின்; கீழே கீழ்; சங்கம் திரளாகக் கூடி; இருப்பார் போல் இருப்பது போலே; வந்து நீ இருக்குமிடம் வந்து; தலைப்பெய்தோம் அணுகினோம்; கிங்கிணி கிண்கிணியின் (கால் கொலுசு - தவளை வாயைப் போன்ற அமைப்பினையுடைய உருண்டைகள் கோக்கப்பட்டிருக்கும்); வாய்ச் செய்த வாய்ப்போல மலர்ந்த; தாமரை தாமரை; பூப் போலே பூப் போன்ற; செங்கண் சிவந்த கண்களைக் கொண்டு; சிறுச் சிறிதே மெல்ல மெல்ல; எம்மேல் எங்கள் மேலே; விழியாவோ? விழிக்க மாட்டாயோ?; திங்களும் சந்திரனும்; ஆதித்தியனும் சூரியனும்; எழுந்தாற் போல் உதித்தாற் போல; அம் கண் அழகிய; இரண்டும் கொண்டு கண்களிரண்டினாலும்; எங்கள்மேல் எங்களை; நோக்குதியேல் பார்த்தாயாகில்; எங்கள் மேல் எங்கள் மீதுள்ள; சாபம் இழிந்து பாபம் கழிந்துவிடும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
am kaṇ mā gyālaththu arasar kings (who rule(d) the) beautiful, spacious, and big world; abhimāna bhangamāi vandhu come after losing their ahankāram; sangam iruppār and assembled in groups; nin pal̤l̤ik kattil kīzhĕ below your throne;; pŏl likewise; vandhu (we) came (to your place); thalaippeidhŏm and approached (you);; thāmaṛai pū pŏlĕ like a lotus; kingiṇi vāich cheidha that is blossomed a little bit, like the opening of kingiṇi (metal ball with openings like a half-open flower, with a metal ball inside it to make noise when shaken),; sem kaṇ (would you open your) reddish eyes; siṛuchchiṛidhĕ little by little; em mĕl vizhyāvŏ and bless us (your devotees)?; thingal̤um ādhiththiyanum ezhundhār pŏl like how the moon and the sun rise; engal̤ mĕl nŏkkudhiyĕl if you would bless us; am kaṇ iraṇdum koṇdu with the two beautiful eyes,; engal̤ mĕl sābham our sadness; izhindhu would get destroyed.

TP 1.23

496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி! * கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து * யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2)
496 ## மாரி மலை முழைஞ்சில் * மன்னிக் கிடந்து உறங்கும் *
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி *
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமா போலே * நீ பூவைப்பூ வண்ணா ! * உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து * யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் (23)
496 ## māri malai muḻaiñcil * maṉṉik kiṭantu uṟaṅkum *
cīriya ciṅkam aṟivuṟṟut tī viḻittu *
veri mayir pŏṅka ĕppāṭum perntu utaṟi *
mūri nimirntu muḻaṅkip puṟappaṭṭu *
potarumā pole * nī pūvaippū vaṇṇā ! * uṉ
koyil niṉṟu iṅṅaṉe pontarul̤i * koppu uṭaiya
cīriya ciṅkācaṉattu iruntu * yām vanta
kāriyam ārāyntu arul̤-elor ĕmpāvāy (23)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

496. The girls coming to wake up the god say, "You are like a lion that has slept in a mountain cave in the rainy season, and opens its fiery eyes and roars, its mane hanging low. The One, colored as dark as a kāyām flower, wake up! Do come out of your beautiful temple and sit on your majestic throne. We beseech You to know the purpose of our visit and give us your grace, and help us. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாரி மழைகாலத்தில்; மலை முழைஞ்சில் மலைக் குகையில்; மன்னிக் கிடந்து பேடையுடன் நெருங்கி; உறங்கும் உறங்கும்; சீரிய சிங்கம் சீர்மைமிக்க சிங்கம்; அறிவுற்று உறக்கதிலிருந்து எழுந்து; தீ விழித்து தீ போன்ற கண்களை விழித்து; வேரி மயிர் மணம் வீசும் பிடரி மயிர்; பொங்க சிலும்ப; எப்பாடும் நாற்புறங்களிலும்; பேர்ந்து உதறி அசைந்து உதறி; மூரி நிமிர்ந்து சோம்பல் முறித்து; முழங்கி கர்ஜித்தபடி; புறப்பட்டு புறப்பட்டு; போதருமா போலே வருவது போல; பூவைப்பூ காயாம்பூவின்; வண்ணா! நிறமுடையவனே!; உன் கோயில் நின்று உனது கோயிலிலிருந்து; இங்ஙனே இவ்விடத்தில்; போந்தருளி எழுந்தருளி; கோப்பு உடைய அழகிய அமைப்பையுடைய; சீரிய மேன்மையான; சிங்காசனத்து இருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து; யாம் வந்த காரியம் நாங்கள் வந்த காரியத்தை; ஆராய்ந்து அருள் விசாரித்து அருள வேண்டும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
māri ḍuring the rainy season; malai muzhainjil in a mountain cave; sīriya singam majestic/angry lion; mannk kidandhu which is deeply set (together with the lioness) and,; uṛangum sleeping,; aṛivuṝu (would) get up after waking up (after that season),; thī vizhiththu open the flaming fiery eyes; pĕrndhu and move; eppādum on all sides; udhaṛi and shake (its body); vĕri mayir (such that its) fragrant mane (hair); ponga (would) rise around,; mūri nimirndhu (then it would) stand erect and straighten up its body, and; muzhangi roar, and; puṛappattu exit (the den); pŏdharum ā pŏlĕ and come out;; pūvaip pū vaṇṇā (likewise,) ŏh you who is of the color like kāyāmpū (flower); you; un koyil ninṛu (exit) from your temple (bed room); inganĕ pŏndharul̤i and come to this place; irundhu and be seated; sīriya singāsanaththu on the majestic throne; kŏppu udaiya that is having nice shape and set up,; ārāyndhu arul̤ (and then) inquire about and fulfill; yām vandha kāriyam the requirements for which we have come.

TP 1.24

497 அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி *
சென்றங்குத்தென்லிங்கைசெற்றாய்! திறல்போற்றி *
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி *
கன்றுகுணிலாஎறிந்தாய்! கழல்போற்றி *
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி *
வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி *
என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறைகொள்வான் *
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய். (2)
497 ## அன்று இவ் உலகம் அளந்தாய் ! * அடி போற்றி *
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி *
பொன்றச் சகடம் உதைத்தாய் ! புகழ் போற்றி *
கன்று குணிலா எறிந்தாய் ! கழல் போற்றி **
குன்று குடையா எடுத்தாய் ! * குணம் போற்றி *
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி *
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் *
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் (24)
497 ## aṉṟu iv ulakam al̤antāy ! * aṭi poṟṟi *
cĕṉṟu aṅkut tĕṉṉilaṅkai cĕṟṟāy tiṟal poṟṟi *
pŏṉṟac cakaṭam utaittāy ! pukaḻ poṟṟi *
kaṉṟu kuṇilā ĕṟintāy ! kaḻal poṟṟi **
kuṉṟu kuṭaiyā ĕṭuttāy ! * kuṇam poṟṟi *
vĕṉṟu pakai kĕṭukkum niṉkaiyil vel poṟṟi *
ĕṉṟu ĕṉṟu uṉ cevakame ettip paṟai kŏl̤vāṉ *
iṉṟu yām vantom iraṅku-elor ĕmpāvāy (24)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

497. O! ThrvikRaman!“ Once You rose high and measured the world. We praise your feet. You went to southern Lankā as Rāma and killed the Rakshasās. We praise your strength. You destroyed Sakatāsuran when he came as a cart. We praise your fame. When Vathsāsuran came as a calf you threw him at Kabithāsuran who had taken the form of a wood apple tree and killed them both. We worship your ankleted feet. You carried Govardhanā mountain to save the cows. We praise your compassion. We praise the spear in Your hands that conquers Your enemies. We want to serve You always and have come today to receive the Parai. Give us your grace. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று இவ்வுலகம் முன்னொரு சமயம் இவ்வுலகங்களை; அளந்தாய்! அளந்தவனே!; அடிபோற்றி நின் திருவடிகள் வாழ்க!; சென்று அங்கு அங்கு சென்று; தென்னிலங்கை இலங்கையை; செற்றாய்! அழித்தவனே!; திறல் போற்றி! உன் பலம் வாழ்க!; பொன்ற சகடம் சகடாசுரன் அழிந்திட; உதைத்தாய் உதைத்தாய்!; புகழ் போற்றி! உன் புகழ் வாழ்க!; கன்று கன்றுருவில் வந்த அசுரனை; குணிலா தடி மாதிரி; எறிந்தாய்! வீசி அழித்தாய்!; கழல் போற்றி! நின் திருவடி வாழ்க!; குன்று கோவர்த்தனகிரியை; குடையாய் குடையாக; எடுத்தாய்! தூக்கினாய்; குணம் போற்றி! உன் குணம் வாழ்க!; வென்று பகை பகைவர்களை ஜெயித்து; கெடுக்கும் அவர்களை அழிக்கும்; நின்கையில் உன் கையிலுள்ள; வேல்போற்றி! வேல் வாழ்க; என்று என்று என்றிப்படிப் பலவாறாக; உன் சேவகமே உன்னுடைய வீர்யங்களையே; ஏத்தி புகழ்ந்து பாடி; பறை கொள்வான் பறை பெறுவதற்காக; இன்று யாம் வந்தோம் இன்று நாங்கள் வந்தோம்; இரங்கு கிருபை செய்வாயாக!; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
anṛu long ago that time (when indhiran and others suffered due to mahābali); al̤andhāi ivvulagam ŏh you who measured these worlds! (with two steps); adi (those) divine feet (of yours); pŏṝi shall live for many years and more years (pallāṇdu pallāṇdu);; angu in the place where rāvaṇan lived; senṛu (you) went (எழுந்தருளி); cheṝāi then ilangai ŏh you who destroyed the lanka of the south! (which is his country); thiṛal (your) strength; pŏṝi shall live for many years;; chakatam chakatāsuran; udhaiththāi chakatam ponṛa ŏh you, who kicked that chakatam (chakatāsuran) and destroyed!; pugazh (your) valor; pŏṝi shall live for a long time;; kanṛu vathsāsuran who stood as a calf; kuṇilā was used as a throwing staff (pole),; eṛindhāi ŏh you who threw (at the asura who took the form of a fruit (vil̤ānkani / விளாங்கனி) (எறிந்தருளியவனே!); kazhal your thiruvadi (lotus feet which stood ground); pŏṝi shall live for a long time;; eduththāi ŏh you who lifted; kunṛu gŏvardhana mountain; kudaiyā as an umbrella / shelter!; guṇam your characteristics (like sauseelyam, etc.,); pŏṝi should stay for years together;; nin kaiyil vĕl the spear in your hands; venṛu that won (the enemies); pagai kedukkum and destroyed them (the opposition); pŏṝi should live for a long time;; enṛu enṛu ṣo doing such mangal̤āsāsanam several times,; ĕththi to praise / sthŏthram; un sĕvagamĕ about only your strength/valor,; yām we; vandhŏm came and reached; ingu/inṛu this place / today; paṛai kol̤vān to get paṛai (instrument (mŏksham)); irangu please show compassion (to help us).

TP 1.25

498 ஒருத்திமகனாய்ப்பிறந்து * ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளர *
தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த *
கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் *
நெருப்பென்னநின்ற நெடுமாலே! * உன்னை
அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில் *
திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி *
வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
498 ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர *
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த *
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் **
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே ! * உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில் *
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி *
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (25)
498 ŏrutti makaṉāyp piṟantu * or iravil
ŏrutti makaṉāy ŏl̤ittu val̤ara *
tarikkilāṉ ākit tāṉ tīṅku niṉainta *
karuttaip piḻaippittuk kañcaṉ vayiṟṟil **
nĕruppu ĕṉṉa niṉṟa nĕṭumāle ! * uṉṉai
aruttittu vantom paṟai taruti yākil *
tirut takka cĕlvamum cevakamum yām pāṭi *
varuttamum tīrntu makiḻntu-elor ĕmpāvāy (25)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

498. You were born to Devaki on a divine night and raised by Yashodā quite secretively. O! great God! You were like a burning fire in Kamsan’s stomach who always thought of giving You trouble. Kamsan always wanted to hurt You but You fought with him and killed him. O Nedumāl! We worship You and have come here to You. If You give us the Parai, we will sing and praise your wealth and grace and our sorrows will go away and we will be happy. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருத்தி மகனாய் தேவகிக்கு மகனாக; பிறந்து பிறந்து; ஓர் இரவில் அந்த ஒப்பற்ற இரவிலேயே; ஒருத்தி யசோதையினுடைய; மகனாய் பிள்ளையாய்; ஒளித்து ஒளிந்திருந்து; வளர வளர துவங்கிய அதிசயத்தை; தரிக்கிலான் ஆகி பொறுக்காதவனாய்; தான் தானே; தீங்கு நினைந்த கெடுதலை நினைத்த; கஞ்சன் கம்சனுடைய; கருத்தை எண்ணத்தை; பிழைப்பித்து வீணாக்கி; வயிற்றில் அவன் வயிற்றில் நெருப்பாக நின்ற; நெடுமாலே! எம்பெருமானே!; உன்னை உன்னிடத்தில்; அருத்தித்து வந்தோம் யாசித்து வந்தோம்; பறை எங்கள் விருப்பத்தை; தருதியாகில் தருவாயாகில்; திருத்தக்க பிராட்டிக்கு உகந்த; செல்வமும் செல்வத்தையும்; சேவகமும் உன் வீர்ய குணத்தையும்; யாம் பாடி நாங்கள் பாடி; வருத்தமும் உன்னைப் பிரிந்திருக்கிற துயரம்; தீர்ந்து நீங்கி; மகிழ்ந்து மகிழ்ந்திடுவோம்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
oruththi for the one woman who is dhĕvaki pirātti,; piṛandhu (you were) born; magan āi as a son;; ŏr iravil on the same unmatched night itself; magan āi (you) become a son; oruththi for the one mother who is yasŏdhai pirātti; ol̤iththu val̤ara (and as you were) growing in hiding,; thān (kamsan) himself; dharikkilān āgi could not tolerate (even your growing in hiding); thīngu ninaindha (his) thoughts of bad deed (of killing); pizhaippiththu (you) wasted/nullified; kanjan kamsans; karuththai thoughts; neruppu enna ninṛa (and you) bothered (him) like a fire; vayiṝil (in his) stomach;; nedumālĕ ŏh you who loves his devotees; aruththiththu vandhŏm came begging; unnai from you (for our needs);; paṛai tharudhi āgil if you would satisfy our wishes; yām pādi we would be able to sing; thiruththakka selvamum (about) your wealth (which pirātti also would love); sĕvagamum and about your valor; varuththamum thīrndhu (and our) sorrows (of separation from you) would end; magizhndhu (and we) would become joyous.

TP 1.26

499 மாலே! மணிவண்ணா! மார்கழிநீராடுவான் *
மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல் *
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன *
பாலன்னவண்ணத்து உன்பாஞ்சசன்னியமே *
போல்வனசங்கங்கள் போய்ப்பாடுடையனவே *
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே *
கோலவிளக்கே கொடியேவிதானமே *
ஆலினிலையாய்! அருளேலோரெம்பாவாய்.
499 மாலே மணிவண்ணா ! * மார்கழி நீர் ஆடுவான் *
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் *
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன *
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே **
போல்வன சங்கங்கள் * போய்ப்பாடு உடையனவே *
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே *
கோல விளக்கே கொடியே விதானமே *
ஆலின் இலையாய் ! அருள் ஏலோர் எம்பாவாய் (26)
499 māle maṇivaṇṇā ! * mārkaḻi nīr āṭuvāṉ *
melaiyār cĕyvaṉakal̤ veṇṭuvaṉa keṭṭiyel *
ñālattai ĕllām naṭuṅka muralvaṉa *
pāl aṉṉa vaṇṇattu uṉ pāñcacaṉṉiyame **
polvaṉa caṅkaṅkal̤ * poyppāṭu uṭaiyaṉave *
cālap pĕrum paṟaiye pallāṇṭu icaippāre *
kola vil̤akke kŏṭiye vitāṉame *
āliṉ ilaiyāy ! arul̤-elor ĕmpāvāy (26)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

499. The girls ask God for the things that they need for their nombu and say, “O Lord beautiful as a sapphire, We shall tell You the principles our ancestors followed for nonbu. Hear us! Give us the things we need for our nombu. We want You to give us white, milk-colored conches that will roar and shake the earth like your conch, the Pānchajanyam big drums(Parais) and devotees who hail You and sing Your praise. Give us beautiful lamps, flags and roofed places O Krishna! You sleep on the banyan leaf as an infant during deluge. Give us your grace. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலே! பக்தர்களுக்கு அன்பனே; மணிவண்ணா! நீலமணி போன்றவனே!; ஆலின் இலையாய்! ஆலந்தளிரில் பள்ளி கொண்டவனே!; மார்கழி மார்கழி; நீராடுவான் நீராட்டத்திற்காக; மேலையார் முன்னோர்கள்; செய்வனகள் அநுஷ்டிக்கும் முறைகளில்; வேண்டுவன உபகரணங்களை; கேட்டியேல் கேட்டால் அவைகளைச் சொல்லுகிறோம்; ஞாலத்தை எல்லாம் பூமி முழுதும்; நடுங்க நடுங்கும்படி; முரல்வன ஒலிக்கக்கூடிய; பால் அன்ன பால் போன்ற; வண்ணத்து நிறமுடையதான; பாஞ்சசன்னியமே பாஞ்சசன்னியம் போன்ற; போல்வன சங்கங்களையும்; போய்ப்பாடு உடையனவே மிகவும் அகன்ற பெரிய; சாலப் பெரும் பறையே பறைகளையும்; பல்லாண்டு திருப்பல்லாண்டு; இசைப்பாரே பாடுபவர்களையும்; கோல விளக்கே மங்கள தீபங்களையும்; கொடியே துவஜங்களையும்; விதானமே விதானமும் மேற் கூறைகளும்; அருள் அருள வேண்டும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
mālĕ ŏh you who is loving (of your devotees)!; maṇi vaṇṇā having color like a blue diamond!; ālin ilaiyāy (during pral̤ayam) slept in a new banyan leaf!; kĕttiyĕl if you inquire about the; vĕṇduvana needed items; seivanagal̤ for actions done; mĕlaiyār by preceptors / earlier generations; mārgazhi nīrāduvān for bathing/nŏnbu of mārgazhi; (we list those items) .; sangangal̤ conches; pāl anna vaṇṇaththu un pāncha channiyamĕ pŏlvana like your pāncha janyam (conch) that is white in color like milk; muralvana which can sound (such that); gyālaththai ellām whole of the world; nadunga (would) vibrate/be scared;; paṛai paṛai instrument (drum); pŏi pādu udaiyana with enough space; sāla peru (and) very big;; pallāṇdu isaippār people who sing thiruppallāṇdu;; kŏlam vil̤akku (lamps) auspicious mangal̤a dhīpam,; kodi dhvajams (flags),; vidhānam clothes (covering us) above;; arul̤ kindly give them.

TP 1.27

500 கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! * உன்தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம் *
நாடுபுகழும் பரிசினால்நன்றாக *
சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே *
பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம் *
ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு *
மூடநெய்பெய்து முழங்கைவழிவார *
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2)
500 ## கூடாரை வெல்லும் சீர்க் * கோவிந்தா ! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் *
நாடு புகழும் பரிசினால் நன்றாக *
சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே **
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் *
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு *
மூட நெய் பெய்து முழங்கை வழிவார *
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் (27)
500 ## kūṭārai vĕllum cīrk * kovintā ! uṉtaṉṉaip
pāṭip paṟaikŏṇṭu yām pĕṟu cammāṉam *
nāṭu pukaḻum pariciṉāl naṉṟāka *
cūṭakame tol̤val̤aiye toṭe cĕvip pūve **
pāṭakame ĕṉṟu aṉaiya pal kalaṉum yām aṇivom *
āṭai uṭuppom ataṉ piṉṉe pāl coṟu *
mūṭa nĕy pĕytu muḻaṅkai vaḻivāra *
kūṭiyiruntu kul̤irntu-elor ĕmpāvāy (27)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

500. The girls, coming to ask for Parais, ornaments and clothes, say, “O Govindā, conqueror of Your enemies, we wish to receive a Parai from You and praise You. We want many gifts — bracelets, earrings, anklets and other ornaments that everyone desires and we will be happy to wear them. Wearing beautiful clothes, we will join together and eat rice with milk, pouring ghee in it, and as we eat, the ghee will drip from our elbows. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூடாரை அடிபணியாதவரை; வெல்லும் வெல்கின்ற; சீர்க் கோவிந்தா! குணமுடைய கோவிந்தா!; உந்தன்னைப் பாடிப் உன்னைப் பாடி; பறை உன்னிடத்திலிருந்து பறையை; கொண்டு பெற்று; யாம் பெறும் நாங்கள் பெறும்; சம்மானம் பரிசானது; நாடு புகழும் நாட்டார் புகழும்படியாக இருக்கவேண்டும்; பரிசினால் பரிசுப்பொருள்களான; நன்றாகச் சூடகமே நல்ல அணிகலனான சூடகம்; தோள் வளையே தோள்வளை; தோடே செவிப் பூவே தோடு காதணி; பாடகமே என்றனைய பாத கடகம் என; பல்கலனும் பல ஆபரணங்களையும்; யாம் நாங்கள் நன்றாக; அணிவோம் அணிவோம்; ஆடை நல்ல ஆடைகளை; உடுப்போம் அணிவோம்; அதன் பின்னே அதற்குப் பின்பு; பாற் சோறு பாற் சோறு; மூட மறையும்படியாக; நெய் பெய்து நெய் சேர்த்து; முழங்கை வழிவாரக் அது முழங்கையில் வழிய; கூடி இருந்து நாம் கூடி உண்டு; குளிர்ந்து குளிர வேண்டும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
vellum sīr having the guṇam of winning; kūdārai those who are opposed,; gŏvindhā ŏh gŏvindha!; pādi (we would) sing (till we are content); un thannai about you,; paṛai koṇdu and receive paṛai (instrument); yām peru sammānam and the price we are going to get is; nādu pugazhum parisināl that the villagers would appreciate/celebrate us,; yām nanṛāga aṇivŏm we would wear (the ornaments) very well (as we are decorated with them by you and nappinnai pirātti), (ornaments such as); chūdagam ornament for the arms; thŏl̤ val̤ai ornament for the shoulders; thŏdu ornament for the ears; sevip pū ornament for the upper part of ears; pādagam (pādha kadagam) ornament for the legs; enṛu anaiya pal kalanum and more such ornaments;; adhan pinnĕ after that,; pāl sŏṛu rice (in the) food made with milk; mūda (which) would not be visible (due to); nei peidhu (lots of) ghee added,; muzhangai vazhi vāra such that it would drip through the elbows,; kūdi irundhu (we would) be together (and eat that); kul̤irndhu and be happy.

TP 1.28

501 கறவைகள்பின்சென்று கானம்சேர்ந்துண்போம் *
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து * உன்தன்னைப்
பிறவிபெறுந்தனைப் புண்ணியம்யாமுடையோம் *
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! * உன்தன்னோடு
உறவேல்நமக்கு இங்கொழிக்கவொழியாது *
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் * உன்தன்னை
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே *
இறைவா! நீதாராய் பறையேலோரெம்பாவாய். (2)
501 ## கறவைகள் பின் சென்று * கானம் சேர்ந்து உண்போம் *
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து * உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் *
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா ! ** உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது *
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் * உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே *
இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் (28)
501 ## kaṟavaikal̤ piṉ cĕṉṟu * kāṉam cerntu uṇpom *
aṟivu ŏṉṟum illāta āyk kulattu * uṉ taṉṉaip
piṟavi pĕṟuntaṉai puṇṇiyam yām uṭaiyom *
kuṟaivu ŏṉṟum illāta kovintā ! ** uṉ taṉṉoṭu
uṟavel namakku iṅku ŏzhikka ŏzhiyātu *
aṟiyāta pil̤l̤aikal̤om aṉpiṉāl * uṉ taṉṉai
ciṟuper azhaittaṉavum cīṟiyarul̤āte *
iṟaivā! nī tārāy paṟai-elor ĕmpāvāy (28)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

501. We go behind the cattle to the forest and eat there. We are simple, innocent cowherds lacking intelligence We are fortunate to be born in the same place as You O flawless Govindan, we cannot give up our closeness to You. We, innocent children, call you with simple names because we love You. Do not get upset with us. Give us the Parai and give us Your grace. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கறவைகள் பசுக்களின்; பின் சென்று பின்னே போய்; கானம் சேர்ந்து வனத்திற்குச் சென்று; உண்போம் உண்போம்; ஒன்றும் இல்லாத சிறிதளவும்; அறிவு அறிவில்லாத; ஆய் குலத்து ஆயர்குலத்தில் பிறந்த நாங்கள்; உந்தன்னை உன்னை; பிறவி பிறக்க; பெறுந்தனை பெறுவதற்குத் தக்க; புண்ணியம் புண்ணியம்; யாம் பெற்றவர்களாக; உடையோம் இருக்கிறோம்; குறை ஒன்றும் ஒரு குறையும்; இல்லாத இல்லாத; கோவிந்தா கோவிந்தனே!; உன் தன்னோடு உன்னோடு ஏற்பட்ட; உறவேல் உறவை; நமக்கு இங்கு இங்கு நம்மால்; ஒழிக்க ஒழிக்க நினைத்தாலும்; ஒழியாது ஒழியாது; அறியாத ஒன்றும் அறியாத; பிள்ளைகளோம் சிறு பிள்ளைகளான நாங்கள்; அன்பினால் அன்பினால்; உன் தன்னை உன்னை; சிறுபேர் சிறிய பேரால்; அழைத்தனவும் அழைத்தது குறித்து; சீறி அருளாதே கோபித்திடாதே; இறைவா! பிரானே!; நீ தாராய் பறை பறை தந்தருளவேணும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
kuṛai onṛum illādha gŏvindhā ŏh gŏvindha! who does not have any shortcomings!; yām we; kaṛavaigal̤ pin chenṛu go behind the cows,; kānam sĕrndhu reach the forest/fields,; uṇbŏm (we walk around while) eating;; aṛivu onṛum illādha (we are) not having any gyānam; āykkulaththu (belonging to) the cowherd clan; un thannaip piṛavi peṛum thanaip puṇṇiyam udaiyŏm we are blessed (have good karmā) to have you born;; iṛaivā ŏh the almighty!; unthannŏdu uṛavu (our) relationship with you; ingu namakku ozhikka ozhiyādhu cannot be removed here by you or by us;; aṛiyādha pil̤l̤aigal̤ŏm we, the innocent little girls (who dont know the norms of the world),; unṛannaich chiṛu pĕr azhaiththanavum called you with an insignificant name; anbināl due to affection;; you (who loves your adiyārs),; sīṛi arul̤ādhĕ without blessing us your anger,; paṛai thārāi give (us what we) required.

TP 1.29

502 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து * உன்
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய் *
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து * நீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது *
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா! *
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் * உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம் *
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2)
502 ## சிற்றம் சிறுகாலே * வந்து உன்னைச் சேவித்து * உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் *
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து * நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது **
இற்றைப் பறைகொள்வான் * அன்று காண் கோவிந்தா ! *
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் * உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் *
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் (29)
502 ## ciṟṟam ciṟukāle * vantu uṉṉaic cevittu * uṉ
pŏṟṟāmarai aṭiye poṟṟum pŏrul̤ kel̤āy *
pĕṟṟam meyttu uṇṇum kulattil piṟantu * nī
kuṟṟeval ĕṅkal̤aik kŏl̤l̤āmal pokātu **
iṟṟaip paṟaikŏl̤vāṉ * aṉṟu kāṇ kovintā ! *
ĕṟṟaikkum ezh ezh piṟavikkum * uṉ taṉṉoṭu
uṟṟome āvom uṉakke nām āṭcĕyvom *
maṟṟai nam kāmaṅkal̤ māṟṟu-elor ĕmpāvāy (29)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-2

Simple Translation

502. The cowherd girls say, “We come early in the morning and worship You and praise Your golden feet. Hear us. Just like You, we were born in the cowherd clan. We want to serve You and receive the Parai from You. Dear Govinda! we want to be with You always and we will serve You in all our fourteen births. Give us Your grace and keep us away from anything but Your service. We are going to worship our Pāvai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவிந்தா எம்பெருமானே!; சிற்றஞ்சிறு காலே விடியற்காலையிலே; வந்து உன்னை வந்து உன்னை; சேவித்து வணங்கி; உன் உன்; பொற்றாமரை பொன் தாமரை போன்ற; அடியே பாதங்களை; போற்றும் போற்றுவதன்; பொருள் கேளாய் பொருளின் பயன் கேட்டிடுவாய்; பெற்றம் மேய்த்து பசுக்களை மேய்த்து; உண்ணும் வாழும்; குலத்தில் பிறந்து நீ குலத்தில் பிறந்து நீ; குற்றேவல் உனக்குப் பணிவிடை செய்ய; எங்களை எங்களை; கொள்ளாமல் உன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாமல்; போகாது ஒழியாது ஏற்று கொள்ள வேண்டும்; இற்றைப் பறை இன்று கொடுக்கப்படும் இப்பறையை; கொள்வான் பெறுவதற்கு; அன்று காண் நாங்கள் வந்தோமல்லோம்; எற்றைக்கும் எக்காலத்திலும்; ஏழ்ஏழ் பிறவிக்கும் ஈரேழு பிறவிகளிலும்; உன் தன்னோடு உன்னோடு; உற்றோமே ஆவோம் உறவு கொண்டிருப்போமாக ஆவோம்; உனக்கே நாம் உனக்கு மாத்திரமே நாங்கள்; ஆட்செய்வோம் சேவகம் செய்வோம்; மற்றை நம் காமங்கள் மற்ற விஷய விருப்பங்களை; மாற்று தவிர்த்திட அருள வேண்டும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
gŏvindhā! ŏh kaṇṇā!; vandhu (we) came (here),; chiṝam chiṛukālĕ very early in the morning; unnai sĕviththu and prayed you; kĕl̤āi please listen to; un pon thāmarai adi pŏṝum porul̤ the meaning/benefit of doing mangal̤āsāsanam to your golden lotus feet;; peṝam mĕiththu uṇṇum kulaththil piṛandha nī you who has born as cowherds, who herd the cows and then eat; engal̤ai kol̤l̤āmal pŏghādhu cannot be without accepting us in your mind (thiruvul̤l̤am); kuṝĕval (our) very personal kainkaryam (antharanga kainkaryam confidential service);; iṝaip paṛai kol̤vāṇ anṛu kāṇ we did not come here for getting (this) paṛai (drum instrument) given today; eṝaikkum for ever,; ĕzh ĕzh piṛavikkum how many ever births we go through,; uṝŏmĕ āvŏm (we) shall be related; unthannŏdu to you,; nām we; āl̤ seivŏm shall be subservient; unakkĕ to you only; māṝu kindly prevent; nam our; maṝai kāmangal̤ interest in other matters.

TP 1.30

503 வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத் *
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *
அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2)
503 ## வங்கக் கடல் கடைந்த * மாதவனைக் கேசவனைத் *
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி *
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை * அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன **
சங்கத் தமிழ் மாலை * முப்பதும் தப்பாமே *
இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் *
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் *
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் (30)
503 ## vaṅkak kaṭal kaṭainta * mātavaṉaik kecavaṉai *
tiṅkal̤-tirumukattuc ceyizhaiyār cĕṉṟu iṟaiñci *
aṅku appaṟai kŏṇṭa-āṟṟai * aṇi putuvaip
paiṅkamalat taṇ tĕriyal paṭṭarpirāṉ kotai cŏṉṉa **
caṅkat tamizh mālai * muppatum tappāme *
iṅku ip paricu uraippār īriraṇṭu māl varait tol̤ *
cĕṅkaṇ-tirumukattuc cĕlvat tirumālāl *
ĕṅkum tiruvarul̤ pĕṟṟu iṉpuṟuvar ĕmpāvāy (30)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

503. Pattarpirān Kodai from Puduvai (Srivilliputhur) adorned with a beautiful lotus garland composed thirty Tamil pāsurams about how the girls with lovely moon-like faces, decorated with beautiful ornaments, went to Mādhavan, Kesavan who churned the wavy ocean of milk and asked for the Parai. Those who recite these pāsurams without mistakes will receive the eternal grace of divine Thirumāl, with a lovely face, beautiful eyes and twelve strong mountain-like arms and be happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்க கப்பல்களையுடைய; கடல் கடலை; கடைந்த கடைந்த; மாதவனை மாதவனை; கேசவனை கேசவனை; திங்கள் சந்திரன் போன்ற அழகிய; திருமுகத்து முகத்தையும்; சேய் சீர்மையான அணிகளையுமுடைய; இழையார் ஆய்ச்சியர்; சென்று இறைஞ்சி சென்று வணங்கி; அங்கு ஆய்ப்பாடியில் தாம்; பறை கொண்ட புருஷார்த்தம் பெற்றதை; அணி அழகிய; புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய; பைங்கமல அன்றலர்ந்த தாமரை மலராலான; தண் தெரியல் குளிர்ந்த மாலையணிந்த; பட்டர்பிரான் பெரியாழ்வாருடைய; கோதை மகள் ஆண்டாள்; சொன்ன அருளிச்செய்த; சங்க கூட்டம் கூட்டமாக அநுபவிக்க வேண்டிய; தமிழ்மாலை தமிழ் மாலையாகிய; முப்பதும் முப்பது பாசுரங்களையும்; தப்பாமே தப்பாமல்; இங்கு இங்கு இவ்வாறு; இப்பரிசுரைப்பார் அனுசந்திப்பவர்கள்; மால் வரைத் தோள் பெரிய மலை போன்ற; ஈர் இரண்டு நான்கு தோள்களை உடையவனும்; செங்கண் சிவந்த கண்களை உடையவனும்; திருமுகத்து திருமுகத்தையுடையவனும்; செல்வத் திருமாலால் செல்வனுமான எம்பெருமானால்; எங்கும் எல்லா இடத்திலும்; திருவருள் பெற்று அவனுடைய கிருபையைப் பெற்று; இன்புறுவர் எம்பாவாய் ஆனந்தமடைவர்
thingal̤ thiru mughaththu chĕ izhaiyār gŏpikās having beautiful face like the moon, and wearing rich glittering ornaments; chenṛu reached; iṛainji prayed/prostrated; mādhavanai sriya:pathi (thāyārs husband); kĕsavanai kaṇṇan; kadaindha who churned (for dhĕvas); vangam kadal the thiruppārkadal with ships in them (milky ocean),; angu in thiruvāippādi; ap paṛai koṇda āṝai and about the way in which they got the (their) well known goal (purushārththam), (as explained by); pai kamalam thaṇ theriyal pattarpirān (the daughter of) periyāzhwar with freshly blossomed lotus flowers,; kŏdhai (who is) āṇdāl̤; aṇi pudhuvai (who) rose in the lovely place of srīvillipuththūr; sonna (arul̤ich cheidha) and gifted; sangam thamizh mālai muppadhum these thirty pāsurams, which are to be immersed in by groups of groups; thappāmĕ without fail;; uraippār those who recite; ingu in this world; ipparisu in this way,; thiru arul̤ peṝu would get the blessings of; īr iraṇdu māl varai thŏl̤ one having four big mountain-like shoulders; selvam one having all the wealth; thirumālāl (that is) emperumān who is srīmān; engum and everywhere (in all the worlds); inbuṛuvar (they would) be joyous.