TP 1.23

யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க

Verse 23
496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி! * கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து * யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2)
496 ## மாரி மலை முழைஞ்சில் * மன்னிக் கிடந்து உறங்கும் *
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி *
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமா போலே * நீ பூவைப்பூ வண்ணா ! * உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து * யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய் (23)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

496. The girls coming to wake up the god say, "You are like a lion that has slept in a mountain cave in the rainy season, and opens its fiery eyes and roars, its mane hanging low. The One, colored as dark as a kāyām flower, wake up! Do come out of your beautiful temple and sit on your majestic throne. We beseech You to know the purpose of our visit and give us your grace, and help us. We are going to worship our Pāvai

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TP.1.23

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாரி மழைகாலத்தில்; மலை முழைஞ்சில் மலைக் குகையில்; மன்னிக் கிடந்து பேடையுடன் நெருங்கி; உறங்கும் உறங்கும்; சீரிய சிங்கம் சீர்மைமிக்க சிங்கம்; அறிவுற்று உறக்கதிலிருந்து எழுந்து; தீ விழித்து தீ போன்ற கண்களை விழித்து; வேரி மயிர் மணம் வீசும் பிடரி மயிர்; பொங்க சிலும்ப; எப்பாடும் நாற்புறங்களிலும்; பேர்ந்து உதறி அசைந்து உதறி; மூரி நிமிர்ந்து சோம்பல் முறித்து; முழங்கி கர்ஜித்தபடி; புறப்பட்டு புறப்பட்டு; போதருமா போலே வருவது போல; பூவைப்பூ காயாம்பூவின்; வண்ணா! நிறமுடையவனே!; உன் கோயில் நின்று உனது கோயிலிலிருந்து; இங்ஙனே இவ்விடத்தில்; போந்தருளி எழுந்தருளி; கோப்பு உடைய அழகிய அமைப்பையுடைய; சீரிய மேன்மையான; சிங்காசனத்து இருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து; யாம் வந்த காரியம் நாங்கள் வந்த காரியத்தை; ஆராய்ந்து அருள் விசாரித்து அருள வேண்டும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
māri ḍuring the rainy season; malai muzhainjil in a mountain cave; sīriya singam majestic/angry lion; mannk kidandhu which is deeply set (together with the lioness) and,; uṛangum sleeping,; aṛivuṝu (would) get up after waking up (after that season),; thī vizhiththu open the flaming fiery eyes; pĕrndhu and move; eppādum on all sides; udhaṛi and shake (its body); vĕri mayir (such that its) fragrant mane (hair); ponga (would) rise around,; mūri nimirndhu (then it would) stand erect and straighten up its body, and; muzhangi roar, and; puṛappattu exit (the den); pŏdharum ā pŏlĕ and come out;; pūvaip pū vaṇṇā (likewise,) ŏh you who is of the color like kāyāmpū (flower); you; un koyil ninṛu (exit) from your temple (bed room); inganĕ pŏndharul̤i and come to this place; irundhu and be seated; sīriya singāsanaththu on the majestic throne; kŏppu udaiya that is having nice shape and set up,; ārāyndhu arul̤ (and then) inquire about and fulfill; yām vandha kāriyam the requirements for which we have come.

Detailed WBW explanation

māri malai mul̤anjil

Just as monarchs remain ensconced within their palaces during the rainy season, avoiding the battles that lie beyond their walls, so too does the lion find shelter within the cavern's embrace, refraining from venturing forth. In such a season, akin to how Perumāḷ (Śrī Rāma) sought refuge in the cave of Mālyavān while Sugrīva stayed with his family,

+ Read more