TP 1.29

உனக்கே நாம் ஆட்செய்வோம்

Verse 29
502 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து * உன்
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய் *
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து * நீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது *
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா! *
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் * உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம் *
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2)
502 ## ciṟṟañ ciṟukāle * vantu uṉṉaic cevittu * uṉ
pŏṟṟāmarai aṭiye poṟṟum pŏrul̤ kel̤āy *
pĕṟṟam meyttu uṇṇum kulattiṟ piṟantu * nī
kuṟṟeval ĕṅkal̤aik kŏl̤l̤āmal pokātu **
iṟṟaip paṟaikŏl̤vāṉ * aṉṟu kāṇ kovintā ! *
ĕṟṟaikkum ezh ezh piṟavikkum * uṉtaṉṉoṭu
uṟṟome āvom uṉakke nām āṭcĕyvom *
maṟṟai nam kāmaṅkal̤ māṟṟu-elor ĕmpāvāy (29)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-2

Simple Translation

502. The cowherd girls say, “We come early in the morning and worship you and praise your golden feet. Hear us. Just like you, we were born in the cowherd clan. We want to serve you and receive the Parai from you. Dear Govinda! we want to be with you always and we will serve you in all our fourteen births. Give us your grace and keep us away from anything but your service. We are going to worship our Pāvai. ”

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TP.1.29

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவிந்தா எம்பெருமானே!; சிற்றஞ்சிறு காலே விடியற்காலையிலே; வந்து உன்னை வந்து உன்னை; சேவித்து வணங்கி; உன் உன்; பொற்றாமரை பொன் தாமரை போன்ற; அடியே பாதங்களை; போற்றும் போற்றுவதன்; பொருள் கேளாய் பொருளின் பயன் கேட்டிடுவாய்; பெற்றம் மேய்த்து பசுக்களை மேய்த்து; உண்ணும் வாழும்; குலத்தில் பிறந்து நீ குலத்தில் பிறந்து நீ; குற்றேவல் உனக்குப் பணிவிடை செய்ய; எங்களை எங்களை; கொள்ளாமல் உன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாமல்; போகாது ஒழியாது ஏற்று கொள்ள வேண்டும்; இற்றைப் பறை இன்று கொடுக்கப்படும் இப்பறையை; கொள்வான் பெறுவதற்கு; அன்று காண் நாங்கள் வந்தோமல்லோம்; எற்றைக்கும் எக்காலத்திலும்; ஏழ்ஏழ் பிறவிக்கும் ஈரேழு பிறவிகளிலும்; உன் தன்னோடு உன்னோடு; உற்றோமே ஆவோம் உறவு கொண்டிருப்போமாக ஆவோம்; உனக்கே நாம் உனக்கு மாத்திரமே நாங்கள்; ஆட்செய்வோம் சேவகம் செய்வோம்; மற்றை நம் காமங்கள் மற்ற விஷய விருப்பங்களை; மாற்று தவிர்த்திட அருள வேண்டும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
gŏvindhā! ŏh kaṇṇā!; vandhu (we) came (here),; chiṝam chiṛukālĕ very early in the morning; unnai sĕviththu and prayed you; kĕl̤āi please listen to; un pon thāmarai adi pŏṝum porul̤ the meaning/benefit of doing mangal̤āsāsanam to your golden lotus feet;; peṝam mĕiththu uṇṇum kulaththil piṛandha nī you who has born as cowherds, who herd the cows and then eat; engal̤ai kol̤l̤āmal pŏghādhu cannot be without accepting us in your mind (thiruvul̤l̤am); kuṝĕval (our) very personal kainkaryam (antharanga kainkaryam confidential service);; iṝaip paṛai kol̤vāṇ anṛu kāṇ we did not come here for getting (this) paṛai (drum instrument) given today; eṝaikkum for ever,; ĕzh ĕzh piṛavikkum how many ever births we go through,; uṝŏmĕ āvŏm (we) shall be related; unthannŏdu to you,; nām we; āl̤ seivŏm shall be subservient; unakkĕ to you only; māṝu kindly prevent; nam our; maṝai kāmangal̤ interest in other matters.

Detailed WBW explanation

chiṝanj chiṛu kālĕ
Very early in the morning, in the cold dawn when it’s difficult for little girls to wake up. Despite this, our longing made us disregard the chill.

==> In the brahma muhūrtham, when the sattva guṇam (qualities of purity and tranquility) is high, our minds become clear, which is ideal for performing kainkaryam (service) to Emperumān.

Once,

+ Read more