தனியன் / Taniyan

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்த ம்உ(மு)த்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்த மத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:

nīl̤ā tuṅka stana kiritaṭī supta mutpotya krukṣṇam
pārārtyam svam sruti sata saras sitta matyā payantī
svocciṣṭāyām sraji nikal̤itam yāpalāt krutya puṅkte
kotā tasyai nama itam itam pūya evāstupūya:
பராசர பட்டர் / parācara paṭṭar

Word by word meaning

नीलातुंग நப்பின்னையின் அழகிய; स्तनगिरितटी மலைபோன்ற மார்ப்பின் மீது; सुप्तम् कृष्णं उद्बोद्य உறங்கும் எம்பெருமானை எழுப்பி; श्रुति शत நூற்றுகணக்கான வேதாங்கங்களாலும்; शिरस्सिद्धम् உபநிஷத்துக்களாலும் நிலை நாட்டப்பட்ட; पाराद्यं स्वं தன்னுடைய அடிமைத்தனத்தை, சேஷத்வத்தை; अध्यापयन्ती உணர்த்தும் வகையில்; स्व उच्छिष्टायां தான் முதலில் அணிந்து அழகு பார்த்த; स्रजि निगलितं மாலைகளில் பெருமானைக் கட்டிப்போட்டு; यापलात्कृत्य எவள் அந்த பலத்தைக் கொண்டு கண்ணனை; भुंक्ते அநுபவித்தாளோ; गोदा तस्यै அந்த பூமிபிராட்டியான ஆண்டாளுக்கு; नम इदमिदं இந்த நமஸ்காரங்கள்; भूय एवास्तु भूय: மீண்டும் மீண்டும் உறித்தாகுக

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

அன்னவயற் புதுவை * ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு

aṉṉavayaṟ putuvai * āṇṭāl̤ araṅkaṟkup
paṉṉu tiruppāvaip palpatiyam * - iṉṉicaiyāl
pāṭikkŏṭuttāl̤ naṟpāmālai * pūmālai
cūṭikkŏṭuttāl̤aic cŏllu
உய்யக்கொண்டார் / uyyakkŏṇṭār

Word by word meaning

அன்னம் ஹம்ஸங்கள் ஸஞ்சரிக்கின்ற; வயல் வயலை உடைய; புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த; ஆண்டாள் அரங்கர்க்கு பெரிய பெருமாள் விஷயமாக; பன்னு ஆராய்ந்து அருளிச்செய்த; திருப்பாவை திருப்பாவையாகிற; பல் பதியம் பல பாட்டுக்களை; இன் இசையால் செவிக்கினிய இசையால்; பாடிக் கொடுத்தாள் பாடிக் கொடுத்தவளாய்; நற்பாமாலை நல்ல பாசுரங்களாலான பாமாலையையும்; பூமாலை பூக்களால் தொடுத்த பூமாலையையும்; சூடி தான் சூடி அழகு பார்த்த பின்; கொடுத்தாளை ஸமர்ப்பித்தவளை; சொல்லு அநுஸந்திப்பாய்

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! * தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! * நாடி நீ
வேங்கடவற்கு கென்னை விதியென்றவிம்மாற்றம் *
நாம்கடவா வண்ணமே நல்கு

cūṭikkŏṭutta cuṭarkkŏṭiye! * tŏlpāvai
pāṭi arul̤avalla palval̤aiyāy! * nāṭi nī
veṅkaṭavaṟku kĕṉṉai vitiyĕṉṟavimmāṟṟam *
nāmkaṭavā vaṇṇame nalku
உய்யக்கொண்டார் / uyyakkŏṇṭār

Word by word meaning

பாவை நோன்பை; சூடி பூமாலையை சூடி; கொடுத்த பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்த; சுடர் கொடியே பொற்கொடி போன்ற வடிவழகை உடையவளே!; தொல் பழமையான; பாடி திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தால் பாடி; அருளவல்ல உபகரிக்க வல்லவளாய்; பல் வளையாய் பலவகை வளையல்களை அணிந்தவளே; நீ நாடி மன் மதனான நீ ஆராய்ந்து; வேங்கடவர்க்கு திருவேங்கடவர்க்கு; என்னை வாழ்க்கைப் படுத்தவேண்டும் என்று ஆசைபடுகிற என்னை; விதி அந்தரங்க கைங்கர்யம் பண்ணும்படி விதிக்க வேண்டும்; என்ற நாடி நீ என்று நீ அருளிச்செய்த; இ மாற்றம் இந்த பாசுரத்தை; நாம் உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள்; கடவாவண்ணம் மீராததபடி; நல்கு அருள வேண்டும்