TP 1.3

உத்தமன் பேர்பாட நீங்காத செல்வம் நிறையும்

Verse 3
476 ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து *
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப் *
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்பத் *
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் *
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)
476 ## oṅki ulaku al̤anta * uttamaṉ per pāṭi *
nāṅkal̤ nam pāvaikkuc cāṟṟi nīr āṭiṉāl *
tīṅku iṉṟi nāṭu ĕllām tiṅkal̤ mummāri pĕytu *
ŏṅku pĕruñ cĕnnĕlūṭu kayal ukal̤a **
pūṅkuval̤aip potil * pŏṟivaṇṭu kaṇpaṭuppa *
teṅkāte pukku iruntu cīrtta mulai paṟṟi
vāṅkak * kuṭam niṟaikkum val̤l̤aṟ pĕrum pacukkal̤ *
nīṅkāta cĕlvam niṟaintu-elor ĕmpāvāy (3)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-1

Simple Translation

476. Dear friends! When we sing and praise the name of the virtuous lord, who rose and measured the world in His tall form (ThrivikRāman) and when we bathe and start our intense prayers, there will be rain thrice a month on earth, paddy will grow and flourish. Fish will frolic in the fields, bees will sleep on the buds of the kuvalai blossoms. The cows' udders will overflow benevolently with milk that fill the pots when the cowherds milk them. Abundant riches will be everlasting. Come and let us bathe and worship our Pāvai.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TP.1.3

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓங்கி நெடுதோங்கி வளர்ந்து; உலகு மூவுலகங்களையும்; அளந்த அளந்த; உத்தமன் உத்தமனுடைய; பேர் பாடி திருநாமங்களைப் பாடி; நாங்கள் நாங்கள்; நம் பாவைக்கு நம் நோன்புக்கென்று; சாற்றி சங்கற்பித்துக்கொண்டு; நீர் ஆடினால் நீராடினால்; நாடு எல்லாம் நாடெங்கும்; தீங்கு இன்றி தீங்கு ஏதுமில்லாமல்; திங்கள் மாதம் தோறும்; மும்மாரி மூன்று முறை; பெய்து மழை பெய்து; ஓங்கு பெறும் உயரமாக வளர்ந்துள்ள; செந்நெல் செந்நெற் பயிர்களின்; ஊடு கயல் உகள நடுவே மீன்கள் துள்ள; பூங்குவளை அழகிய நெய்தல்; போதில் மலரில்; பொறி வண்டு அழகிய வண்டுகள்; கண் படுப்ப உறங்க; வள்ளல் வள்ளல் போன்ற; பெரும் பசுக்கள் பெரும் பசுக்கள்; தேங்காதே சலிக்காமல் நின்று; புக்கு இருந்து பசுக்களின்; சீர்த்த முலை பருத்த மடிகளை; பற்றி அணைத்து; வாங்க கறக்க; குடம் நிறைக்கும் குடங்களைபாலாலே நிறைக்கும்; நீங்காத செல்வம் நீங்காத செல்வம்; நிறைந்து நிறைந்திடும்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
nāngal̤ pādi (if) we sing, (we who cannot live without singing ḥis names); pĕr the names; uththaman of purushŏthaman; ŏngi the one who grew tall; al̤andha and measured (with ḥis lotus feet); ulagu all the three worlds,; nīradināl if we bathed; nam pāvaikku chāṝi with the front/pretense of a nŏnbu; nādu ellām the whole country; thīngu inṛi without any bad; mummāri peidhu would properly rain; thingal̤ every month, and; kayal ugal̤a fish would jump around; (so) ŏngu perum sennel ūdu between the tall and healthy grass,; poṛi vaṇdu and beautiful bees; kaṇ paduppa would sleep; pūm-kuval̤ai pŏdhil in beautiful flowers,; thĕngadhĕ without hesitation; pukku irundhu get to and try to; vānga pull; sīrtha mulai paṝi by holding with both the hands the big nipples of; perum pasukkal̤ healthily grown cows; kudam niṛaikkum they would fill the containers; val̤l̤al with generosity; nīngādha selvam (such is the ) wealth that can be sustained; niṛaindhu and stay complete.

Detailed WBW explanation

Oṅgi Uḷagaḷanda

In the preceding pāsurams, they commenced by invoking Nārāyaṇan (Paratvam), subsequently discussing His divine avatāras intended for the redemption of humanity. Mention was made of His resplendent presence as Kṣīrabdhi Nāthan in the milky ocean and the Gopikās' profound adoration for His divine feet (Vyūham). Now, their focus shifts to the lotus

+ Read more