491 ## உந்து மத களிற்றன் * ஓடாத தோள்-வலியன் *
நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் ! *
கந்தம் கமழும் குழலீ ! கடை திறவாய் *
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் ** மாதவிப்
பந்தர்மேல் * பல்கால் குயில்-இனங்கள் கூவின காண் *
பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாடச் *
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப *
வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (18)
Simple Translation
491. The girls coming to wake up Nappinnai say,
“O, Nappinnai, daughter-in-law of the strong-armed
Nandagopan, who is valiant like an elephant, open the door.
O! the fragrant haired one!
Listen! The roosters are calling to wake everyone and
the flock of cuckoo birds sitting on the vines blooming
with mādhavi flowers call out.
Come, you hold flower balls in your beautiful and soft fingers!
Come and join us to sing and praise the name of your husband.
Open the door as the lovely bracelets on your beautiful
lotus hands jingle.
We are going to worship our Pāvai