TP 1.1

நாராயணனே பறை தருவான்

Verse 1
Assuming her as a Gopika, Āndāl gathers her friends to do service to Kannan
474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! *
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! *
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *
நாராயணனே நமக்கேபறைதருவான் *
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)
474 ## mārkazhit tiṅkal̤ * mati niṟainta naṉṉāl̤āl *
nīrāṭap potuvīr! potumiṉo nerizhaiyīr ! *
cīr malkum āyppāṭic cĕlvac ciṟumīrkāl̤! *
kūr vel kŏṭuntŏzhilaṉ nantakopaṉ kumaraṉ **
er ārnta kaṇṇi yacotai il̤añciṅkam *
kār meṉic cĕṅkaṇ katirmatiyam pol mukattāṉ *
nārāyaṇaṉe namakke paṟai taruvāṉ *
pāror pukazhap paṭintu-elor ĕmpāvāy (1)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-10, 16-19

Divya Desam

Simple Translation

474. On this the auspicious full moon day in the month of Markazhi, Come! let us go and bathe. O young girls adorned with beautiful ornaments, we are the beloved of the flourishing cowherd village. Only Nārāyanan, the son of Nandagopan, who looks after the cows holding a sharp spear, the lovely-eyed Yashodā's young lion with a dark body, beautiful eyes and a face bright as the shining moon will give us the Parai. (the fruits of pāvai nonbu, which is eternal service). Come and let us join the world in His praise.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TP.1.1

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சீர்மல்கும் சீர்மைநிறைந்துள்ள; ஆய்ப்பாடி ஆய்ப்பாடியில்; செல்வ கைங்கர்யமாகிற செல்வத்தையுடைய; சிறுமீர்காள்! சிறுமிகளே!; நேரிழையீர்! சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!; மார்கழி திங்கள் மாதங்களிற் சிறந்த மார்கழி மாதம்; மதி நிறைந்த பூர்ண மதியுடைய; நன் நாளால் நல்ல நாளில்; கூர்வேல் கூர்மையான வேலையுடையவனும்; கொடும் காவலாகிய கடுமையான; தொழிலன் தொழிலைப் புரியும்; நந்தகோபன் நந்தகோபனுடைய; குமரன் குமாரன்; ஏரார்ந்த அழகு நிறைந்த; கண்ணி கண்களையுடையவளான; யசோதை யசோதையின்; இளம் சிங்கம் சிங்கக்குட்டியானவன்; கார்மேனி மேகவண்ண மேனியையும்; செங்கண் சிவந்த கண்களையும்; கதிர் சூரியனையும்; மதியம் போல் சந்திரனையும் போன்ற; முகத்தான் முகமுடையவனுமான; நாராயணனே ஸ்ரீமந் நாராயணனே; நமக்கே நமக்கே; பறை பறையை (பிராப்பியமான புருஷாகாரம்); தருவான் கொடுப்பான் ஆதலால் (ப்ராபகம்); பாரோர் இவ்வுலகினர்; புகழப் படிந்து புகழும்படி நன்றாக; நீராட நீராட; போதுவீர்! விருப்பமுடையவர்களே!; போதுமின் வாருங்கள்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
sīr malgum āyppādi (From the) wealthy place of āyppādi,; selvach chirumīrgāl̤ ŏ, the young gŏpikās who have got the best wealth (which is association with, and kainkaryam to, krishṇan),; nĕr izhaiyīr who are wearing wonderful ornaments (keeping krishṇan in mind),; mārgazhi thingal̤ we got the best of all months the mārgazhi month, and the good full moon day for doing the nŏnbu (ceremony to pray for the rains)).; kūr vĕl (ṣtanding with a) sharp spear,; kodum thozhilan if any enemies come near his dear krishṇan he would be a person doing cruel deeds (to those enemies) that person is; nandhagŏpan nandhagŏpan, whose; kumaran dear son is krishṇan;; ĕr ārndha kaṇṇi yasŏdhai the one who has got beautiful eyes,; il̤am singam her young lion-cub is krishṇan,; kār mĕni, sengaṇ (his) body is the color of dark (kind) clouds, he has got eyes lotus-like,; kadhir madhiyam pŏl mugaththān and his face is the bright light of the moon,; nārāyaṇanĕ and who is none other than srīman nārāyaṇan,; namakkĕ paṛai tharuvān onlysrīman nārāyaṇan can give us (us who depend only on him) the opportunity to do kainkaryam to ḥim.; āl ṣo; padindhĕlŏr those who want to take a good (padindhu) bath (enjoyment with krishṇan), please go with us,; pārŏr pugazha and the people of this world would celebrate that.

Detailed WBW explanation

This first pāśuram briefly indicates that what will be achieved (i.e., prāpakaṃ/upēyaṃ) is parai (kainkaryam to Perumāl).

Here is a more detailed meaning of the first pāśuram of Tiruppāvai, as drawn from parts of vyākhyānams, upanyāsams, and other sources.

mārgazhi thingaḷ:

The celebration begins because they have received the auspicious mārgazhi

+ Read more