TP 1.21

போற்றிப் புகழ்ந்து வந்தோம்! துயிலெழாய்

Verse 21
494 ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப *
மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் *
ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய் *
ஊற்றமுடையாய்! பெரியாய்! * உலகினில்
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய் *
மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் *
ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே *
போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.
494 eṟṟa kalaṅkal̤ * ĕtir pŏṅki mītu al̤ippa *
māṟṟāte pāl cŏriyum val̤l̤aṟ pĕrum pacukkal̤ *
āṟṟap paṭaittāṉ makaṉe ! aṟivuṟāy *
ūṟṟam uṭaiyāy ! pĕriyāy ! ** ulakiṉil
toṟṟamāy niṉṟa cuṭare! tuyil ĕḻāy *
māṟṟār uṉakku vali tŏlaintu uṉ vācaṟkaṇ *
āṟṟātu vantu uṉ aṭipaṇiyumā pole *
poṟṟi yām vantom pukaḻntu-elor ĕmpāvāy (21)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-11, BG. 10-1

Simple Translation

494. The girls coming to wake up the God say, “O son of Nandagopan, Lord of fine cows that yield milk generously, making the pots overflow! You are wise, a bright light and our refuge. Get up. Just as the enemies who are unable to fight with you fall at your doorstep in total surrender, we come and worship your feet, praising You whose fame is abundant. Let us worship worship our Pāvai.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TP.1.21

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏற்ற கலங்கள் பாலை ஏற்கும் கலங்கள்; எதிர் பொங்கி பொங்கி மேலே; மீது அளிப்ப வழியும்படியாக; மாற்றாதே தொடர்ந்து; பால்சொரியும் பாலைப் பொழியும்; வள்ளல் பெரும் வள்ளல் போன்ற பெரிய; பசுக்கள் பசுக்களை; ஆற்ற படைத்தான் கொண்ட நந்தகோபன்; மகனே! மகனான கண்ணனே!; அறிவுறாய் எழுந்திருப்பாயாக!; ஊற்றம் அடியாரைக் காப்பதில்; உடையாய்! சிரத்தையுடையவனே!; பெரியாய்! பெருமை பொருந்தியவனே!; உலகினில் இவ்வுலகத்திலே; தோற்றமாய் நின்ற! ஆவிர்பவித்த; சுடரே தேஜஸ் மிக்கவனே!; துயிலெழாய் எழுந்திருப்பாயாக; மாற்றார் உனக்கு சத்ருக்கள் உன்; வலி தொலைந்து வலிமைக்குத் தோற்று; உன் வாசற்கண் உன் மாளிகை வாசலில்; ஆற்றாது வந்து கதியற்று வந்து; உன் அடி உன் திருவடியில்; பணியுமா போலே சரணடைவது போல்; போற்றி யாம் உனக்கு மங்களாசாஸனம்; புகழ்ந்து பண்ணிக்கொண்டு புகழ்ந்து; வந்தோம் நாங்கள் வந்தோம்; ஏலோர் எம்பாவாய் பெண்களே பாவை நோன்பு நோற்க வாரீர்!
val̤l̤al generous; perum pasukkal̤ big cows; pāl soriyum can produce out milk; ĕṝa kalangal̤ (such that) all the containers placed to get the milk (that is produced out automatically); edhir pongi get filled out; mīdhu al̤ippa and pour outside; māṝādhĕ without any break;; āṝap padaiththān maganĕ son of such a person having such cows; aṛivuṛāi please wake up (thiruppal̤l̤i uṇara vĕnum / தி்ருப்பள்ளியுணரவேணும்); ūṝam udaiyāy vĕdhas which are the top most reference/pramānam talks about your having the determination / enthusiasm; periyāy (you) having the greatness (which the vĕdhās are not able to completely determine); thŏṝam āy ninṛa did avathāram (for everyone to see); ulaginil in this world; sudarĕ and are very bright in appearance; thuyil ezhāi please wake up from sleep;; māṝār your enemies; unakku vali tholaindhu lose (their) strength because of you; āṝādhu vandhu came without any other place/person to go to; un vāsal kaṇ to the entrance of your thirumāl̤igai (house); un adi paṇiyum ā pŏlĕ and be praying unto your divine feet, (in the same way),; yām we; vandhŏm have come and reached (your thirumāl̤igai entrance); pugazhndhu praising (you); pŏṝi and doing mangal̤āsāsanam (to you)

Detailed WBW explanation

Ēṟṟa kaḷangaḷ edhir poṅgi mīḍhaḷippa

Ēṟṟa kaḷangaḷ - These refer to the śiṣyas who are amenable and receptive to receiving upadeśam (advice/rahasyams). The qualification to receive such divine knowledge is the acknowledgment that He, the Supreme, is the sole means and path.

edhir poṅgi mīḍhaḷippa - This describes how śiṣyas, having been fully imbued with

+ Read more