85

ThirukKolur

திருக்கோளுர் (நவதிருப்பதி)

ThirukKolur

Navathiruppathi

ஸ்ரீ கோளுர்வல்லீ ஸமேத ஸ்ரீ வைத்தமாநிதி ஸ்வாமிநே நமஹ

The Brahmāṇḍa Purāṇa provides information about this place.

Kubera, the ruler from the city of Alagāpurī and the lord of nine types of Navanidhis and immeasurable wealth, was a great devotee of Shiva. Once, he went to Kailāsa to worship Shiva. At that time, Shiva was conversing affectionately with his consort, Umā. Enchanted by Umā's beauty, Kubera

+ Read more
வரலாறு

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது.

ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். + Read more
Thayar: Sri Kumuda Valli, Sri Koloor Valli Nāchiyār
Moolavar: Sri Vaittha Mānidhi Perumāl, Nikshepavithan
Utsavar: Nachiappa Pavithirar
Vimaanam: Srikara
Pushkarani: Kupera Theertham
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 11:30 a.m. 5:00 p.m. to 7:00 p.m.
Search Keyword: Thirukkolur
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.7.1

3409 உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் * எம்பெருமான்னென்றென்றே கண்கள்நீர்மல்கி *
மண்ணினுளவன்சீர் வளம்மிக்கவனூர்வினவி *
திண்ணம்என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே. (2)
3409 ## உண்ணும் சோறு பருகும் * நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் * எம் பெருமான் என்று என்றே * கண்கள் நீர் மல்கி **
மண்ணினுள் அவன் சீர் * வளம் மிக்கவன் ஊர் வினவி *
திண்ணம் என் இளமான் புகும் ஊர் * திருக்கோளூரே (1)
3409 ## uṇṇum coṟu parukum * nīr tiṉṉum vĕṟṟilaiyum ĕllām
kaṇṇaṉ * ĕm pĕrumāṉ ĕṉṟu ĕṉṟe * kaṇkal̤ nīr malki **
maṇṇiṉul̤ avaṉ cīr * val̤am mikkavaṉ ūr viṉavi *
tiṇṇam ĕṉ il̤amāṉ pukum ūr * tirukkol̤ūre (1)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

It's certain that my daughter, like a young doe, always speaking with tears in her eyes, proclaiming that Kaṇṇaṉ is to her like food for the hungry, drink for the thirsty, and betel for pleasure, has indeed gone to Tirukkōḷūr, where the grand and majestic Lord resides, after a thorough inquiry.

Explanatory Notes

(i) The famous author of ‘Ācārya Hṛdayam’ has succinctly brought out the superior excellence of the Āzhvār vis-a-vis the Ṛṣis. Whereas the Ṛṣis subsisted on the forest produce, such as roots, fruits etc, Lord Kṛṣṇa was the sole Sustainer for Nammāḻvār, the very food needed for appeasing hunger, the water required for quenching thirst and the betels one chews for pleasure, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உண்ணுஞ் சோறு உண்ணும் சோறும்; பருகு நீர் பருகும் நீரும்; தின்னும் வெற்றிலையும் தின்னும் வெற்றிலையும்; எல்லாம் கண்ணன் எல்லாம் கண்ணன்; எம்பெருமான் எம்பெருமான்; என்று என்றே என்று என்றே; கண்கள் நீர் மல்கி கண்களில் நீர் மல்க; மண்ணினுள் பூமியில்; அவன் சீர் அவனுடைய சீரும்; வளம் சிறப்பும் உடைய; மிக்கவன் கல்யாண குணங்களையும்; ஊர் அவனுடைய இருப்பிடமான ஊரையும்; வினவி கேட்டுக்கொண்டு; என் இள மான் என் மான் போன்றை இளம் பெண்; புகும் ஊர் சென்று சேரும் ஊர்; திருக்கோளூரே திருக்கோளூராகவே இருக்கும்; திண்ணம் இது நிச்சயம்
parugum ṭo be drunk to nourish oneself by quenching the thirst; nīr water; thinnum to be consumed for pleasure; veṝilaiyum betel leaves; ellām all objects (which give sustenance, nourishment and enjoyment); kaṇṇan being krishṇa, the son of vasudhĕva as said in ṣrī bhagavath gīthā 7.19 -vāsudhĕva sarvam- (ĕverything is krishṇa); em for me; perumān he who is the lord; enṛu enṛĕ repeating many times; kaṇgal̤ eyes; nīrgal̤ tears; malgi overflow; maṇṇin ul̤ in the earth (where he descended to manifest himself to his devotees); avan his; sīr qualities such as saulabhya (easy approachability), saundharya (beauty), sauṣeelya (simplicity) etc; val̤am due to abundance of consorts; mikkavan one who is complete; ūr town; vinavi [probing about] not just thinking about it herself (due to overwhelming love, asking others as if being ignorant, to have good companion during the journey); en due to being my daughter; il̤am young; mān due to being at the ignorant age, like a deer, she cannot go far;; pugum enter; ūr town; thirukkŏl̤ūrĕ thirukkŏl̤ur only;; thiṇṇam certain.; ūrum the town (where she resides); nādum the country (which encompasses the town)

TVM 6.7.2

3410 ஊரும்நாடுமுலகும் தன்னைப்போல் * அவனுடைய
பேரும்தார்களுமேபிதற்றக் கற்புவானிடறி *
சேருநல்வளஞ்சேர் பழனத்திருகோளூர்க்கே *
போருங்கொல்? உரையீர் கொடியேன்கொடிபூவைகளே!
3410 ஊரும் நாடும் உலகமும் * தன்னைப்போல் அவனுடைய *
பேரும் தார்களுமே பிதற்ற * கற்பு வான் இடறி **
சேரும் நல் வளம் சேர் * பழனத் திருக்கோளூர்க்கே *
போரும் கொல் உரையீர் * கொடியேன் கொடி பூவைகளே? (2)
3410 ūrum nāṭum ulakamum * taṉṉaippol avaṉuṭaiya *
perum tārkal̤ume pitaṟṟa * kaṟpu vāṉ iṭaṟi **
cerum nal val̤am cer * pazhaṉat tirukkol̤ūrkke *
porum kŏl uraiyīr * kŏṭiyeṉ kŏṭi pūvaikal̤e? (2)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

O, Pūvai birds, this sinner's daughter, who makes the whole world prattle the Lord's names and insignia like herself, breaking the bounds of modesty, has seemingly reached the rich and fertile Tirukkōḷūr,. Will you tell me if she would at least come back here for your sake?

Explanatory Notes

(i) The mother enquiries of the little pūvai birds, the playmates of Parāṅkuśa Nāyakī, whether she would come back, at least for their sake. She is so dazed that she is not conscious of the fact that she can’t expect a reply from the speechless birds.

(ii) The mother is at a loss to understand why her daughter should at all go elsewhere, in search of the Godly, having + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூவைகளே! பூவைப் பறவைகளே!; ஊரும் நாடும் தானிருந்த ஊரும் நாடும்; உலகமும் உலகமும் எல்லாம்; தன்னைப்போல் தன்னைப் போலவே; அவனுடைய அவனுடைய; பேரும் நாமங்களையும்; தார்களுமே சின்னங்களையுமே; பிதற்ற பிதற்றும்படி செய்த; கொடியேன் பாவியான என்னுடைய; கொடி பூங்கொடிபோன்ற என் மகள்; கற்பு பெண்மையின்; வான் இடறி மரியாதையைக் கடந்து; வளம் சேர் வளம் பொருந்திய; சேரும் நல் பழன நீர்நிலைகளையுடைய; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; போரும் கொல் போய்ச் சேர்ந்து விடுவாளோ; உரையீர் திரும்பி வருவாளோ சொல்லுங்கள் என்கிறாள்
ulagamum the world (which encompasses the country); thannaip pŏl like herself; avanudaiya his; pĕrum name; thārgal̤um garland; pidhaṝa blabbering (in many ways); vān boundless like the sky; kaṛpu feminine modesty; idaṛi crossing over; nal distinguished; val̤am with opulence; sĕr having; pazhanam having water bodies; thirukkŏl̤ūrkkĕ to thirukkŏl̤ūr; sĕrum reaching; kodiyĕn my daughter who has given the suffering of separation to me; kodi my daughter who cannot sustain herself without him like a creeper which requires support; pŏrum kol would she return?; pūvaigal̤ĕ ŏh mynās! (birds belonging to the ṣtarling family); uraiyīr please tell.; puvai mynās; pai green

TVM 6.7.3

3411 பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்புட்டில்கள் *
யாவையும்திருமால் திருநாமங்களேகூவியெழும் * என்
பாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே *
கோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ?
3411 பூவை பைங்கிளிகள் * பந்து தூதை பூம் புட்டில்கள் *
யாவையும் திருமால் * திருநாமங்களே கூவி எழும் ** என்
பாவை போய் இனித் * தண் பழனத் திருக்கோளூர்க்கே *
கோவை வாய் துடிப்ப * மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3)
3411 pūvai paiṅkil̤ikal̤ * pantu tūtai pūm puṭṭilkal̤ *
yāvaiyum tirumāl * tirunāmaṅkal̤e kūvi ĕzhum ** ĕṉ
pāvai poy iṉit * taṇ pazhaṉat tirukkol̤ūrkke *
kovai vāy tuṭippa * mazhaikkaṇṇŏṭu ĕṉ cĕyyumkŏlo? (3)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

It seems my daughter has found all the joy she used to have with playthings like balls, flower baskets, cooking pots, little birds, and parrots, in singing the Lord's holy names. Yet, I'm unsure how she'll actually fare in the cool and fertile Tirukkōḷūr, with trembling red lips and tearful eyes.

Explanatory Notes

The mother says: “Even in her childhood days, when one could expect her to play with toys, my daughter revelled in singing the Lord’s holy names. It is not as if she was devoid of the means of sustenance and had to go elsewhere, in search of it. I don’t know why she has at all gone to Tiruk kōḷūr”,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூவை பைங்கிளிகள் பூவைகள் பசுங்கிளிகள்; பந்து தூதை பந்து பானை; பூம் புட்டில்கள் அழகிய பூக்கூடைகள் ஆகிய; யாவையும் இவைகளால் உண்டாகும் இன்பம்; திருமால் எம்பெருமானின்; திருநாமங்களே எழும் திருநாமங்களாலேயே வரும்; கூவி என்று கூவி அழைத்து மகிழ்ந்து; என் பாவை என் பெண்ணானவள்; போய் இனி இங்கிருந்து போய்; தண் பழன குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே சென்று; கோவைவாய் கோவைக்கனி போன்ற அதரம்; துடிப்ப துடிக்கும்படியாக; மழை மழை என நீர் பெருகப் பெற்ற; கண்ணொடு என் கண்களோடே நின்று என் பெண்; செய்யுங்கொலோ? என்ன செய்கிறாளோ? என்கிறாள்
kil̤igal̤ parrots; pandhu ball; thūdhai small wooden pot; to place the flowers; yāvaiyum (to acquire the same joy which is acquired from) all these; thirumāl ṣrīman nārāyaṇan-s; thirunāmangal̤ĕ divine names only; kūvi reciting; ezhum uplifting oneself through that; en my; pāvai daughter; ini even after this joy of reciting the divine names is available [here]; thaṇ cool; pazhanam having water bodies; thirukkŏzhūrkkĕ to thirukkŏl̤ūr only; pŏy went; kŏvai like kŏvai (a reddish) fruit; vāy lips; thudippa to tremble; mazhai have lots of tears like rain; kaṇṇŏdu standing with eyes; en seyyum kolŏ what will she do?; selvam malgi being the one who is having great wealth; avan emperumān

TVM 6.7.4

3412 கொல்லையென்பர்கொலோ? குணம்மிக்கன ளென்பர்கொலோ? *
சில்லைவாய்ப்பெண்டுகள் அயற்சேரியுள்ளாருமெல்லே! *
செல்வம்மல்கியவன்கிடந்த திருக்கோளூர்க்கே *
மெல்லிடை நுடங்க இளமான்செல்லமேவினளே.
3412 கொல்லை என்பர்கொலோ * குணம் மிக்கனள் என்பர்கொலோ *
சில்லை வாய்ப் பெண்டுகள் * அயல் சேரி உள்ளாரும்? எல்லே **
செல்வம் மல்கி அவன்கிடந்த * திருக்கோளூர்க்கே *
மேல் இடை நுடங்க * இளமான் செல்ல மேவினளே (4)
3412 kŏllai ĕṉparkŏlo * kuṇam mikkaṉal̤ ĕṉparkŏlo *
cillai vāyp pĕṇṭukal̤ * ayal ceri ul̤l̤ārum? ĕlle **
cĕlvam malki avaṉkiṭanta * tirukkol̤ūrkke *
mel iṭai nuṭaṅka * il̤amāṉ cĕlla meviṉal̤e (4)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

My daughter, like a young doe, has her mind made up to go to plentiful Tirukkōḷūr where the Lord reclines, straining her thin waist. I know not whether the local gossips and neighboring women will praise her as godly or condemn her as immodest and unruly.

Explanatory Notes

There are two ways of looking at the Nāyakī’s behaviour. Those who have unflinching faith in salvation through the Lord’s redemptive grace and await the descent of such grace on them, in due course, would certainly not countenance the Nāyakī running about, courting the Lord, while those, who are all agog for the quick consummation, the acceleration of the union with the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இளமான் இளமான் போன்ற என் மகள்; செல்வம் நித்திய செல்வமான; மல்கி அவன் வைத்தமாநிதி பெருமான்; கிடந்த கண்வளர்ந்தருளும்; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; மெல் இடை நுடங்க மெல்லிய இடை நோகும்படி; செல்ல புறம்பட்டுச் செல்ல; மேவினளே! துணிந்துவிட்டாளே!; சில்லை வாய் பலவாறு பேசுகின்ற வாயையுடைய; பெண்டுகள் பெண்களும்; அயல் சேரி அயல் ஊரிலுள்ள; உள்ளாரும் பெண்களும்; கொல்லை இவள் வரம்பு கடந்து; என்பர்கொலோ நடந்தவள் என்று பழிப்பர்களோ?; குணம் மிக்கனள் அல்லது குணம் மிக்கவள்; என்பர்கொலோ என்பர்களோ?; எல்லே! என்னாகுமோ! தெரியவில்லையே என்கிறாள்
kidandha mercifully resting; thiukkŏl̤ūrkkĕ to thirukkŏl̤ūr; mel slender; idai waist; nudanga to sway; il̤a young; mān my daughter who appears like a deer; sella to go; mĕvinal̤ has her heart fixated;; sillai being naturally quarrel-mouthed; vāy having mouth; peṇdugal̤ women who are in close proximity; ayaṛchĕri in the near-by town; ul̤l̤ārum the residents; kollai crossed the limits; enbarkolŏ would they condemn?; guṇam mikkanal̤ having great qualities (which induce us to greatly like her); enbarkolŏ would they praise?; ellĕ alas!; mĕvi thinking (about his beauty, easy approachability etc) with mind; naindhu naindhu weakening every moment

TVM 6.7.5

3413 மேவிநைந்து நைந்துவிளையாடலுறாள் என்சிறுத்
தேவிபோய் * இனித்தன்திருமால் திருக்கோளூரில் *
பூவியல்பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு *
ஆவியுள்குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
3413 மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் * என் சிறுத்
தேவி போய் * இனித் தன் திருமால் * திருக்கோளூரில் **
பூ இயல் பொழிலும் * தடமும் அவன் கோயிலும் கண்டு *
ஆவி உள் குளிர * எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5)
3413 mevi naintu naintu vil̤aiyāṭaluṟāl̤ * ĕṉ ciṟut
tevi poy * iṉit taṉ tirumāl * tirukkol̤ūril **
pū iyal pŏzhilum * taṭamum avaṉ koyilum kaṇṭu *
āvi ul̤ kul̤ira * ĕṅṅaṉe ukakkumkŏl iṉṟe? (5)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

It's a pity I can't witness how my little angelic daughter, absorbed in God-head, has thinned down and refrains from recreation. She has gone to her unique Lord in Tirukkōḷūr, where she will enjoy the orchids, the tanks, and the temple to her heart's fill.

Explanatory Notes

Even during childhood, the Nāyakī’s sole pastime was to sing the holy names of the Lord while her playmates would want to indulge in routine recreation. And now, she has gone to the famous pilgrim centre, Tirukkōḷūr, abounding in lovely scenery, warming up her heart. The manner of her enjoyment will indeed be unique but the mother feels that she is not by the side of her

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் சிறுத் தேவி என்னுடைய இளம் பெண்; மேவி பகவத் குணங்களிலே ஈடுபட்டு; நைந்து அதனாலே மனம் உருகி; நைந்து இளைத்து; விளையாடலுறாள் விளையாடுவதை விட்டாள்; போய் இனித் தன் இங்கிருந்து போய் தனக்கு; திருமால் அஸாதாரணானான எம்பெருமானின்; திருக்கோளூரில் திருக்கோளூரில்; பூ இயல் பூக்களை இயல்பாகவுடைய; பொழிலும் சோலைகளையும்; தடமும் தடாகங்களையும்; அவன் கோயிலுங்கண்டு அவன் கோயிலையும் கண்டு; ஆவியுள் குளிர மனம் குளிர; இன்றே எங்ஙனே இன்று எப்படி; உகக்கும்கொல்? மகிழ்கிறாளோ?
vil̤aiyādal in play; uṛāl̤ being not interested; en siṛuth thĕvi my daughter who is adolescent yet having distinguished nature; pŏy leaving from here; than one who is specially existing for her; thirumāl ṣrīmān-s (one who has ṣrī mahālakshmi as his divine consort); thirukkŏl̤ūr in thirukkŏl̤ūr; flower; iyal naturally having; pozhilum gardens; thadamum the ponds (which give freshness to the gardens); avan his (along with lakshmi) residence; kŏyilum the temple which is the abode of enjoyment; ini now; kaṇdu on seeing; āvi the abode of prāṇa (life); ul̤ heart; kul̤ira to cool down; inṛu today (which is a good dawn for me); enganĕ how; ugakkum kol enjoying?; enakku to me (who is suffering in separation from her); inṛu now

TVM 6.7.6

3414 இன்று எனக்கு உதவாதகன்ற இளமான் இனிப்போய் *
தென்திசைத்திலதமனைய திருக்கோளூர்க்கே
சென்று * தன்திருமால் திருக்கண்ணும்செவ்வாயும் கண்டு *
நின்றுநின்றுநையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.
3414 இன்று எனக்கு உதவாது அகன்ற * இளமான் இனிப் போய் *
தென் திசைத் திலதம் அனைய * திருக்கோளூர்க்கே
சென்று ** தன் திருமால் திருக்கண்ணும் * செவ்வாயும் கண்டு *
நின்று நின்று நையும் * நெடும் கண்கள் பனி மல்கவே (6)
3414 iṉṟu ĕṉakku utavātu akaṉṟa * il̤amāṉ iṉip poy *
tĕṉ ticait tilatam aṉaiya * tirukkol̤ūrkke
cĕṉṟu ** taṉ tirumāl tirukkaṇṇum * cĕvvāyum kaṇṭu *
niṉṟu niṉṟu naiyum * nĕṭum kaṇkal̤ paṉi malkave (6)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

My daughter, like a doe, is of no avail to me; she has left and gone to Tirukkōḷūr, the jewel of the South, where she would just dwell, gazing at the Lord's lovely eyes and red lips, with tears of joy swelling up her eyes.

Explanatory Notes

This song is but a follow-up of the preceding song, describing the manner of the Nāyakī’s rejoicing, at the other end.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்று எனக்கு இன்று எனக்கு; உதவாது அகன்ற உதவாமல் என்னைவிட்டு நீங்கிய; இளமான் இள மான் போன்ற என் மகள்; இனிப் போய் இங்கிருந்து போய்; தென் திசை தென் திசைக்கு; திலதம் அனைய திலகம் போன்ற; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; சென்று தன் திருமால் சென்று தன் திருமாலின்; திருக்கண்ணும் அழகிய கண்களும்; செவ்வாயும் கண்டு சிவந்த வாயையும் கண்டு; நெடுங் கண்கள் நீண்ட கண்களில்; பனிமல்கவே கண்ணீர் ததும்ப; நின்று நின்று நையும் சிதிலையாகி நின்று வருந்துவாள்
udhavādhu without helping; aganṛa left; il̤a mān my little daughter; pŏy went with anguish; then thisai for the southern direction; thiladham anaiya decoration like a thilak (a beautiful symbol on the forehead); thirukkŏl̤ūrkkĕ in thirukkŏl̤ūr; senṛu entered; ini now (after entering); than one who eliminated her relationship with her relatives (by bestowing union with him which is dear to her); thirumāl ṣrīmān-s (consort of ṣrī mahālakshmi); thiru glancing lovingly; kaṇṇum divine eyes; sem shining radiantly due to the welcoming words; vāyum lips; kaṇdu after seeing; nedu wide; kaṇgal̤ eyes; pani malga filled with happy tears due to great bliss; ninṛu ninṛu every moment; naiyum weakens.; malgu overflowing (due to separation); nīr having tears

TVM 6.7.7

3415 மல்குநீர்கண்ணொடு மையலுற்றமனத்தனளாய் *
அல்லுநன்பகலும் நெடுமாலென்றழைத்து, இனிப்போய் *
செல்வம்மல்கியவன்கிடந்த திருக்கோளூர்க்கே *
ஒல்கியொல்கிநடந்து எங்ஙனேபுகுங்கொல்ஒசிந்தே?
3415 மல்கு நீர்க் கண்ணொடு * மையல் உற்ற மனத்தினளாய் *
அல்லும் நன் பகலும் * நெடுமால் என்று அழைத்து இனிப் போய் **
செல்வம் மல்கி அவன் கிடந்த * திருக்கோளுர்க்கே *
ஒல்கி ஒல்கி நடந்து * எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7)
3415 malku nīrk kaṇṇŏṭu * maiyal uṟṟa maṉattiṉal̤āy *
allum naṉ pakalum * nĕṭumāl ĕṉṟu azhaittu iṉip poy **
cĕlvam malki avaṉ kiṭanta * tirukkol̤urkke *
ŏlki ŏlki naṭantu * ĕṅṅaṉe pukumkŏl ŏcinte? (7)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

It's a wonder how my daughter, weak and tired, with tears brimming in her eyes and fueled by deep love for the Lord of her heart, could manage to make her way to Tirukōḷūr.

Explanatory Notes

The mother has now begun to suspect whether her daughter, weighed down by God-love, could have at all trudged along, to Tirukkōḷūr without getting bogged down on the way.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்கு நீர் நீர் நிரம்பிய; கண்ணோடு கண்களை உடையவளாயும்; மையல் உற்ற மயங்கிய; மனத்தனளாய் மனதை உடையவளாயும்; அல்லும் நன் பகலும் இரவும் பகலும்; நெடுமால் என்று நெடுமால் என்று; அழைத்து அழைத்து; இனி இப்போது இங்கிருந்து; ஒல்கி ஒல்கி ஒசிந்தே தளர்ந்து துவண்டு வருந்தி; அவன் கிடந்த அவன் சயனித்திருக்கும்; செல்வம் மல்கி செல்வம் மிகுந்த; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; எங்ஙனே எப்படித்தான்; நடந்து போய் நடந்து போய்; புகுங்கொல்? சேர்ந்து விடுவாளோ?
kaṇṇodu with the eyes; maiyal confusion; uṝa attained; manaththanal̤ āy one who is having the heart; nan having goodness (to speak about him); allum night; pagalum day; nedumāl ŏh one who has great love!; enṛu saying that; azhaiththu calling out; ini further to such longing; olgi contracting; olgi swaying; nadandhu walking; osindhu weakening; pŏy left; selvam malgi having abundance of wealth; avan he; kidandha resting; thirukkŏl̤ūrkkĕ to thirukkŏl̤ūr only; enganĕ how; pugum kol will she reach there?; osindha being weakened (like a flower which withered due to being sucked out of its honey); oṇ being distinguished

TVM 6.7.8

3416 ஒசிந்தநுண்ணிடைமேல் கையைவைத்துநொந்துநொந்து *
கசிந்தநெஞ்சினளாய்க் கண்ணநீர்துளும்பச்செல்லுங்கொல் *
ஒசிந்தவொண்மலராள்கொழுநன் திருக்கோளூர்க்கே *
கசிந்தநெஞ்சினளாய் எம்மைநீத்தஎம்காரிகையே.
3416 ஒசிந்த நுண் இடைமேல் * கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் * கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்? **
ஒசிந்த ஒண் மலராள் * கொழுநன் திருக்கோளூர்க்கே *
கசிந்த நெஞ்சினளாய் * எம்மை நீத்த எம் காரிகையே? (8)
3416 ŏcinta nuṇ iṭaimel * kaiyai vaittu nŏntu nŏntu
kacinta nĕñciṉal̤āyk * kaṇṇa nīr tul̤umpac cĕllumkŏl? **
ŏcinta ŏṇ malarāl̤ * kŏzhunaṉ tirukkol̤ūrkke *
kacinta nĕñciṉal̤āy * ĕmmai nītta ĕm kārikaiye? (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

With a mind soaked in love, drawn unto Tirukkōḷūr, where resides the Spouse of Lakṣmī, the lotus-born, my pretty daughter has forsaken me and gone. Holding her thin and emaciated waist in great pain, with tearful eyes, could she have reached her destination?

Explanatory Notes

The mother thinks that the Nāyakī should have forsaken the former and gone to the Lord at Tirukkōḷūr, to worship the holy conjunction of the Lord and the Divine Mother (Lakṣmī), banking on Her support, sure and sweet. At the same time, the mother also apprehends whether the frail daughter could at all stand the strain of the journey to that place and make it all right

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒசிந்த ஒண் துவண்ட திருமேனியுடைய; மலராள் திருமகளின்; கொழுநன் நாதனான எம்பெருமான் இருக்கும்; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; எம்மை நீத்த என்னைத் தவிர்த்த; எம் காரிகையே அழகிய என் பெண்; ஒசிந்த நுண் துவண்ட மெல்லிய; இடைமேல் இடுப்பின் மீது; கையை வைத்து கையை வைத்துக் கொண்டு; நொந்து நொந்து வருந்தித் துவண்டு; கசிந்த கசிந்த ஈரமுடைய; நெஞ்சிளாய் மனதை உடையவளாய்; கண்ண நீர்த் துளும்ப கண்களில் நீர் தளும்ப; செல்லும்கொல் போய் சேர்ந்து விடுவாளோ?
malarāl̤ of the one who resides in lotus flower; kozhunan lord (who is greatly desirable); thirukkŏl̤ūrkkĕ to thirukkŏl̤ūr; kasindha nenjinal̤āy having dampened heart; emmai me; nīththa who left; em kārigai my beautiful daughter; osindha previously weakened; nuṇ slender; idai mĕl on the waist; kaiyai hand; vaiththu placed; nondhu nondhu feeling grief more and more; kasindha nenjinal̤āy having such dampness [indicating melted heart] as companion; kaṇṇa nīr tears; thul̤umba to overflow; sellum kol will she go there?; nallanagal̤ good; kāriyam that which is known [having form, name]

TVM 6.7.9

3417 காரியம்நல்லனகளவைகாணில் என்கண்ணனுக்கென்று *
ஈரியாயிருப்பாள் இதெல்லாம்கிடக்க, இனிப்போய் *
சேரிபல்பழிதூயிரைப்பத் திருக்கோளூர்க்கே *
நேரிழைநடந்தாள் எம்மையொன்றும்நினைத்திலளே.
3417 காரியம் நல்லனகள் * அவை காணில் என் கண்ணனுக்கு என்று *
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் * கிடக்க இனிப் போய் **
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் * திருக்கோளூர்க்கே *
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே (9)
3417 kāriyam nallaṉakal̤ * avai kāṇil ĕṉ kaṇṇaṉukku ĕṉṟu *
īriyāy iruppāl̤ itu ĕllām * kiṭakka iṉip poy **
ceri pal pazhi tūuy iraippat * tirukkol̤ūrkke *
nerizhai naṭantāl̤ ĕmmai ŏṉṟum niṉaintilal̤e (9)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

My bejeweled daughter, with her love-laden heart, would leave all things aside for her Kaṇṇaṉ. Leaving all the wealth here, she has set out towards Tirukkōḷūr. The people here may spread all sorts of scandals against her, but she minds not, for none of that truly matters to her.

Explanatory Notes

Whereas the worldlings would want all good things for themselves and their sons and daughters, Parāṅkuśa Nāyakī would, in the exuberance of her love for Lord Kṛṣṇa, insist that all good things be earmarked for His use. With such great wealth of God-love in her, where was the need for her to go anywhere else? This is what agitates the mind of the mother; rather, she feels + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்லனகள் நல்ல நல்ல; காரியம் பொருள்களை எல்லாம்; அவை காணில் கண்டால் இவை; என் கண்ணனுக்கு என்று என் கண்ணனுக்கே என்று; அவனுக்கே காணிக்கை என்று; ஈரியாய் ஈர நெஞ்சையுடையவளாக; இருப்பாள் அர்ப்பணிப்பாள்; இது எல்லாம் இவைகளெல்லாம் இப்படியே; கிடக்க கிடக்க; நேரிழை மெல்லிய ஆபரணங்களை உடைய இவள்; இனிப் போய் இங்கிருந்து போய்; சேரி பல் சேரியிலுள்ளார் பலர்; பழி தூ உய் இரைப்ப பழித்து இரைந்து பேச; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; நடந்தாள் நடந்து சென்றாள்; எம்மை ஒன்றும் என்னைச் சிறிதும்; நினைத்திலளே! நினைக்கவில்லையே
avai objects; kāṇil when seen; en one who is obedient to me; kaṇṇanukku for krishṇa; enṛu saying that; īriyāy kind-hearted; iruppāl̤ one who is; nĕr thin; izhai she who is wearing ornaments; idhu this material realm which is created for that; ellām all; kidakka while they exist; ini now; pŏy leaving me; sĕri the residents of the town; pal in many ways; pazhi accusations; thūuy saying; iraippa shouting loudly; thirukkŏl̤ūrkkĕ certainly to thirukkŏl̤ūr; nadandhāl̤ walked;; emmai me; onṛum in any manner; ninaiththilal̤ did not think about.; dheyvangāl̤ ŏh ṅods!; ninaikkilĕn ī cannot comprehend (her out of bound activities)

TVM 6.7.10

3418 நினைக்கிலேன்தெய்வங்காள்! நெடுங்கணிளமான் இனிப்போய் *
அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனை *
தினைத்தனையும்விடாள் அவன்சேர்திருக்கோளூர்க்கே *
மனைக்குவான்பழியும்நினையாள் செல்லவைத்தனளே.
3418 நினைக்கிலேன் தெய்வங்காள் * நெடும் கண் இளமான் இனிப் போய் *
அனைத்து உலகும் உடைய * அரவிந்தலோசனனை **
தினைத்தனையும் விடாள் * அவன் சேர் திருக்கோளூர்க்கே *
மனைக்கு வான் பழியும் நினையாள் * செல்ல வைத்தனளே (10)
3418 niṉaikkileṉ tĕyvaṅkāl̤ * nĕṭum kaṇ il̤amāṉ iṉip poy *
aṉaittu ulakum uṭaiya * aravintalocaṉaṉai **
tiṉaittaṉaiyum viṭāl̤ * avaṉ cer tirukkol̤ūrkke *
maṉaikku vāṉ pazhiyum niṉaiyāl̤ * cĕlla vaittaṉal̤e (10)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

My daughter, like a young doe, has suddenly gone to the lotus-eyed Lord Supreme in Tirukkōḷūr. She cares not for the infamy heaped upon her family and gazes at Him there all the time. I am truly puzzled by her actions.

Explanatory Notes

Unable to brook separation from her daughter, the mother feels that the Nāyakī has been away from her, for quite a long time. It was indeed high time, she had come back but then the mother visualises the possibility of the Nāyakī getting absorbed in the exquisite charm of the lotus-eyed Lord (Aravintalōcaṉa) standing in front of the Deity, all the time, with no intermission. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெய்வங்காள்! தெய்வங்களே!; நினைக்கிலேன் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை; நெடுங்கண் நீண்ட கண்களையுடைய; இளமான் இளமான் போன்ற என் மகள்; இனிப் போய் இங்கிருந்து போய்; அனைத்து அனைத்து; உலகும் உடைய உலகங்களுக்கும் ஸ்வாமியான; அரவிந்த லோசனனை அரவிந்த லோசனனை; தினை தினை அளவும்; தனையும் விடாள் சிறிது போதும் விடாதவளாய்; அவன் சேர் அவன் இருக்கும்; திருக்கோளூர்க்கே திருக்கோளூர்க்கே; மனைக்கு வான் குலத்துக்கு உண்டாகும்; பழியும் பெரும் பழி என்றுகூட; நினையாள் நினைக்காமல்; செல்ல வைத்தனளே சென்று விட்டாளே
nedu huge (to behold all his greatness in it); kaṇ having eyes; il̤am young; mān she who appears like a deer; ini now (though she is having beautiful eyes herself); pŏy go; anaiththulagum for all worlds; udaiya to be the apt lord; aravindhalŏchananai aravindhalŏchanan; thinaiththanaiyum even for a moment; vidāl̤ not leaving; avan his; sĕr residence; thirukkŏl̤ūrkkĕ to thirukkŏl̤ūr only; sella vaiththanal̤ left at once;; manaikku for the family; vān big; pazhi blame; ninaiyāl̤ did not consider.; vaiththa preserved; mā nidhiyām like great wealth

TVM 6.7.11

3419 வைத்தமாநிதியாம் மதுசூதனையேயலற்றி *
கொத்தலர்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
பத்துநூற்றுள்இப்பத்து அவன்சேர்திருக்கோளூர்க்கே *
சித்தம்வைத்துரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே. (2)
3419 ## வைத்த மா நிதியாம் * மதுசூதனையே அலற்றி *
கொத்து அலர் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன *
பத்து நூற்றுள் இப் பத்து ** அவன் சேர் திருக்கோளூர்க்கே *
சித்தம் வைத்து உரைப்பார் * திகழ் பொன் உலகு ஆள்வாரே (11)
3419 ## vaitta mā nitiyām * matucūtaṉaiye alaṟṟi *
kŏttu alar pŏzhil cūzh * kurukūrc caṭakopaṉ cŏṉṉa
pattu nūṟṟul̤ ip pattu ** avaṉ cer tirukkol̤ūrkke
cittam vaittu uraippār * tikazh pŏṉ ulaku āl̤vāre (11)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

Those who sing these ten songs with devotion to Tirukkōḷūr, among the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, adorned with flower gardens, in reverence to Matucūtaṉ, the Supreme Treasure, will reign over SriVaikuntam.

Explanatory Notes

The Lord, as the Treasure supreme, can be freely drawn upon, by one and all, without any fear of extinction, being an inexhaustible fountain of bliss. The chanters of this decad will have none of the difficulties the Āzhvār faced, such as the confrontation between Mother and daughter; on the other hand, they can hold perfect sway over spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வைத்த மா நிதியாம் வைத்த மா நிதி என்று; மதுசூதனையே மதுசூதனையே; அலற்றி போற்றி; கொத்து அலர் பூங்கொத்து அலருகிற; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; குருகூரவர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; பத்து நூற்றுள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்து இந்தப் பத்துப் பாசுரங்களையும்; அவன் சேர் அவன் சேர்ந்திருக்கும்; திருக்கோளூர்க்கே திருக்கோளூரிலேயே; சித்தம் வைத்து மனதைப் பதிய வைத்து; உரைப்பார் ஓத வல்லவர்கள்; திகழ் பகவதநுபவம் பொருந்திய; பொன் உலகு பரமபதத்தை; ஆள்வாரே ஆளப்பெறுவார்கள்
madhusūdhanai one who eliminates the hurdles of enjoyment; alaṝi blabbering due to sorrow (of not attaining); koththu flower bunch; alar blossoming; pozhil by garden; sūzh surrounded; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoken; paththu (revealing different meanings) ten; nūṝul̤ centums; ippaththu this decad which highlights the great urge to attain the goal; avan he; sĕr residing; thirukkŏl̤ūrkkĕ to thirukkŏl̤ūr; chiththam heart; vaiththu placing; uraippār those who can recite; thigazh having the radiance of bhagavath anubhavam; pon laudable; ulagu paramapadham (spiritual realm); āl̤vār will rule over to their full desire.; nal nalam having distinguished friendship etc towards those who pray [to you]; pul̤ inangāl̤ ŏh flocks of birds (who have wings which help in your acts)!

TVM 8.3.5

3589 கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும் *
மடியாதின்னே நீதுயில்மேவிமகிழ்ந்ததுதான் *
அடியாரல்லல்தவிர்த்தஅசைவோ? அன்றேல்இப்
படிதான் * நீண்டுதாவிய அசைவோ? பணியாயே. (2)
3589 கொடியார் மாடக் * கோளூர் அகத்தும் புளியங்குடியும் *
மடியாது இன்னே * நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் **
அடியார் அல்லல் தவிர்த்த * அசைவோ? அன்றேல் * இப்
படி தான் நீண்டு தாவிய * அசைவோ? பணியாயே (5)
3589 kŏṭiyār māṭak * kol̤ūr akattum pul̤iyaṅkuṭiyum *
maṭiyātu iṉṉe * nī tuyil mevi makizhntatu tāṉ **
aṭiyār allal tavirtta * acaivo? aṉṟel * ip
paṭi tāṉ nīṇṭu tāviya * acaivo? paṇiyāye (5)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord, how is it that You lovingly repose without turning, neither to this side nor that, in Kōḷūr and Puḷiṅkuṭi, where banners play on smart castles? Is it due to the fatigue caused during Your avatars, when You performed many feats to alleviate Your devotees' sufferings? Or is it the result of the long strides You took to span the immense world? Please disclose it to me.

Explanatory Notes

(i) Seeing the Āzhvār’s disquietitude over His lying alone on a tender leaf during the deluge, the Lord hastens to reveal unto him a different setting altogether, pertaining to His Iconic Form where He is attended upon by the votaries in their full complement. Mention of just two pilgrim centres, in this song, should be taken as covering the numerous other pilgrim centres + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடியார் கொடிகள் நிறைந்த; மாட மாடங்களையுடைய; கோளுர் அகத்தும் திருக்கோளூரிலும்; புளிங்குடியும் திருப்புளிங்குடியிலும்; மடியாது உடலை அங்கும் இங்கும் அசைக்காமல்; இன்னே இன்று காணும் விதமாக; நீ மேவி மகிழ்ந்தது நீ விரும்பி மகிழ்ந்து; துயில் தான் சயனித்துக் கண்வளர்வதானது; அடியார் அவதாரங்கள் செய்து; அல்லல் அடியார்களின் துன்பங்களை; தவிர்த்த அசைவோ? போக்கின சிரமத்தினாலோ?; அன்றேல் இப்படி அல்லது இப் பூமியை; நீண்டு தாவிய தான் நீண்டு தாவி அளந்த; அசைவோ? ஆயாஸமோ?; பணியாயே என்று கூறி அருள வேண்டும்
mādam having mansions; kŏl̤ūr thirukkŏl̤ūr; agaththu inside; pul̤ingudiyum in thiruppul̤ingudi; madiyādhu to not leave; innĕ in this (composed) manner; thuyil mĕvi due to mercifully resting; you; magizhndhadhudhān being pleased in this manner; adiyār devotees; allal sorrow; thavirththa eliminated; asaivŏ due to the fatigue?; anṛĕl otherwise; i this; padithān earth; nīṇdu growing that day; thāviya measured and accepted; asaivŏ fatigue?; anṛĕl if it is not due to that; i this; padidhān earth; nīṇdu growing one day; thāviya measured; asaivŏ fatigue?; paṇiyāy mercifully tell.; paṇiyā not to bow to (anyone-s foot for any reason); amarar nithyasūris- (who are not ruled by anyone [other than emperumān])