86

ThiruppErai

தென்திருப்பேரை (நவதிருப்பதி)

ThiruppErai

Then ThiruppErai, Navathiruppathi

ஸ்ரீ குழைக்காதுவல்லீ ஸமேத ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதன் ஸ்வாமிநே நமஹ

History

The Brahmāṇḍa Purāṇa also mentions this place. Once, Śrīmannārāyaṇa was deeply attached to Bhūmādevī, leaving behind Lakṣmī, and was absorbed in her in the earthly realm. In the morning, Lakṣmī, who came searching for her Lord, met Sage Durvāsa and expressed her solitary situation, asking him to bless her with Bhūmādevī’s complexion and

+ Read more
வரலாறு.

பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த நிலைமையைத் தெரிவித்து + Read more
Thayar: Sri Kuzhaikkādhu Valli, Sri ThiruppErai Nāchiyār
Moolavar: Sri Makara NeDum Kuzhaikkādhan, Sri Nigaril Mugil Vannan
Utsavar: Sri Nigaril Mugil Vannan
Vimaanam: Pathra
Pushkarani: Sukra Pushkarani, Sanga Thertham
Thirukolam: Amarndha (Sitting)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 7:00 a.m. to 11:00 a.m. 5:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thiruperai
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.3.1

3475 வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தித்
தாமரைக்கண்ணன்என்னெஞ்சினூடே *
புள்ளைக்கடாகின்றவாற்றைக்காணீர்
எஞ்சொல்லிச்சொல்லுகேன்? அன்னைமீர்காள்! *
வெள்ளச்சுகமவன்வீற்றிருந்த
வேதவொலியும்விழாவொலியும் *
பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமறாத்
திருப்பேரையில்சேர்வன்நானே. (2)
3475 ## வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் *
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே *
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர் *
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்? **
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த *
வேத ஒலியும் விழா ஒலியும் *
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும்
அறாத் * திருப்பேரையில் சேர்வன் நானே (1)
3475 ## vĕl̤l̤aic curi caṅkŏṭu āzhi entit *
tāmaraik kaṇṇaṉ ĕṉ nĕñciṉūṭe *
pul̤l̤aik kaṭākiṉṟa āṟṟaik kāṇīr *
ĕṉ cŏllic cŏllukeṉ aṉṉaimīrkāl̤? **
vĕl̤l̤ac cukam avaṉ vīṟṟirunta *
veta ŏliyum vizhā ŏliyum *
pil̤l̤aik kuzhā vil̤aiyāṭṭu ŏliyum
aṟāt * tirupperaiyil cervaṉ nāṉe (1)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh elders, I am truly bound for Tiruppēreyil, where Vedic chants, festivals, and the joyous shouts of children resound incessantly, and the Lord, the epitome of bliss, resides. How can I express the glorious vision that sways my mind, like the lotus-eyed Lord mounting the bird Garuḍa, holding the spiral white conch and the discus in hand, which is beyond your comprehension?

Explanatory Notes

(i) The Nāyakī says, she can’t describe her glorious mental vision adequately. What she has said in this song, touches but a fringe of the subject.

(ii) The undying noise of the children at play, is the unique feature of this pilgrim centre where the children play right in front of the temple. Eager to witness the children at play, the Deity would appear to have asked + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்காள்! தாய்மார்களே!; வெள்ளை வெண்மையான; சுரி சங்கொடு வளைந்த சங்கோடு; ஆழி ஏந்தி சக்கரத்தையும் கையில் ஏந்திக் கொண்டு; தாமரை தாமரை போன்ற கண்களை உடைய; கண்ணன் கண்ணன்; புள்ளைக் கடாகின்ற கருடன் மீது ஏறினவனாய்; என் நெஞ்சினூடே என் நெஞ்சினுள்ளே; ஆற்றை உலாவுகிற விதத்தை; காணீர் பாருங்கள்; என் சொல்லி இந்த அநுபவத்தை என்னவென்று; சொல்லுகேன் நான் உங்களுக்கு விவரிப்பேன்; வெள்ளச் சுகம் பேரின்ப வெள்ளத்தை உடைய; அவன் வீற்றிருந்த எம்பெருமான் இருக்கும்; வேத ஒலியும் வேத ஒலியும்; விழா ஒலியும் திருவிழாக்களின் ஒலியும்; பிள்ளைக் குழா குழந்தைகள் கூடி விளையாடும்; விளையாட்டு ஒலியும் விளையாட்டு ஒலியும்; அறா நீங்காமல் இருக்கும்; திருப்பேரையில் திருப்பேரையில்; சேர்வன் நானே! சென்று சேர்வேன் நான் என்கிறாள்
churi having curliness; sangodu with ṣrī pānchajanya; āzhi divine chakra; ĕndhi holding; thāmaraik kaṇṇan one who is having lotus eyes (which made me fully exist for him); en my; nenjin heart; ūdĕ inside; pul̤l̤ai periya thiruvadi (garudāzhvār); kadāginṛa riding (to his desire); āṝai way; kāṇīr you don-t know!; en solli through which words; sollugĕn Will ī be able to explain?; vel̤l̤ach chugam having the flood of bliss due to experiencing him; avan one who shines in my heart; vīṛu manifesting his greatness; irundha the divine abode where he is; vĕdha oliyum the loud chants of vĕdham by those who enjoy such beautiful sitting posture of emperumān; vizhā due to the ever occurring uthsavams (festivals); oliyum sound of the musical instruments etc; pil̤l̤aik kuzhā group of children; vil̤aiyādu play; oliyum loud noise; aṛā are heard continuously without a break; thiruppĕraiyil in thiruppĕreyil; nān ī; sĕrvan will reach; nānam fragrant due to application of fragrant materials; karu black

TVM 7.3.2

3476 நானக்கருங்குழல்தோழிமீர்காள்!
அன்னையர்காள்! அயல்சேரியீர்காள்! *
நானித்தனிநெஞ்சம்காக்கமாட்டேன்
என்வசமன்றிது, இராப்பகல்போய் *
தேன்மொய்த்தபூம்பொழில்தண்பணைசூழ்
தெந்திருப்பேரையில்வீற்றிருந்த *
வானப்பிரான்மணிவண்ணன்கண்ணன்
செங்கனிவாயின் திறத்ததுவே.
3476 நானக் கருங் குழல் தோழிமீர்காள் *
அன்னையர்காள் அயல் சேரியீர்காள் *
நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன் *
என் வசம் அன்று இது இராப்பகல் போய் **
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன் *
செங்கனி வாயின் திறத்ததுவே (2)
3476 nāṉak karuṅ kuzhal tozhimīrkāl̤ *
aṉṉaiyarkāl̤ ayal ceriyīrkāl̤ *
nāṉ it taṉi nĕñcam kākkamāṭṭeṉ *
ĕṉ vacam aṉṟu itu irāppakal poy **
teṉ mŏytta pūmpŏzhil taṇ paṇai cūzh
tĕṉ tirupperaiyil vīṟṟirunta *
vāṉap pirāṉ maṇivaṇṇaṉ kaṇṇaṉ *
cĕṅkaṉi vāyiṉ tiṟattatuve (2)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Friends with dark, fragrant hair, elders, and neighbors, my mind has gone out of control. Day and night, it goes ahead of me and lingers on the red fruit-like lips of Kaṇṇaṉ, the spiritual worldly Lord of sapphire hue, who resides in Teṉtiruppēreyil, a place with with fertile lands and flower gardens full of honey bees.

Explanatory Notes

(i) The apparent incongruity of the mates appearing before the disconsolate Nāyakī with their hair nicely tended and perfumed, is reconciled by Nampiḷḷai, as follows:—

When the Nāyakī was in communion with the Lord, the flowers worn and discarded by Him would be picked up by the mates and worn by them even if they be mere shreds. The perfume therefrom is everlasting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நானக் கருங்குழல் மணம் கமழும் கூந்தலை உடைய; தோழிமீர்காள்! தோழிகளே!; அன்னையர்காள்! தாய்மார்களே!; அயல் அருகிலுள்ள; சேரியீர்காள்! சேரியில் வாழ்பவர்களே!; நான் இத் தனி நெஞ்சம் நான் இந்த மனதை; காக்க மாட்டேன் காக்க மாட்டேன்; என் வசம் அன்று இது இது என் வசத்தில் இல்லை; இராப் பகல் போய் இரவும் பகலும் போய்; தேன் மொய்த்த பூக்களில் தேன் பருகும் வண்டுகள்; பூம் பொழில் நிறந்த பூஞ்சோலைகளும்; தண் பணை சூழ் குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த; தென் திருப்பேரையில் தென் திருப்பேரையில்; வீற்றிருந்த வீற்றிருக்கும்; வானப் பிரான் பரமபத நாதனும்; மணிவண்ணன் நீலமணி வண்ணனுமான; செங்கனி சிவந்த கோவைக்கனி போன்ற; வாயின் அதரத்தை உடைய; கண்ணன் கண்ணபிரானிடம்; திறத்ததுவே சென்று சேர்ந்துவிட்டது
kuzhal hair; thŏzhimīrgāl̤ oh friends!; annaiyargāl̤ oh mothers (who control them and me)!; ayaṛ chĕriyīrgāl̤ oh neighbours (who have arrived to enquire about the situation)!; nān ī (who am very attached to emperumān); thani independent (and having more attachment than ī); i this; nenjam heart; kākka māttĕn unable to stop (from leaving me);; en to me; vasam obedient; anṛu not;; idhu irāp pagal night and day; pŏy leaving me; thĕn beetles; moyththa swarming; pūmpozhil having flower gardens; thaṇ cool; paṇai water bodies; sūzh surrounded; then fortified; thiruppĕreyil in thenthiruppĕreyil; vīṝu manifesting his greatness; irundha residing; vānam resident of paramapadham; pirān supreme; maṇi like a radiant gemstone; vaṇṇan one who is having form; kaṇṇan krishṇa (who is obedient towards his devotees); sem reddish; kani like a fruit; vāyil beautiful lips; thiṛaththadhu became attached; sem reddish; kani enjoyable like a fruit

TVM 7.3.3

3477 செங்கனிவாயின் திறத்ததாயும்
செஞ்சுடர்நீண்முடித்தாழ்ந்ததாயும் *
சங்கொடுசக்கரம்கண்டுகந்தும்
தாமரைக்கண்களுக்கற்றுத்தீர்ந்தும் *
திங்களும்நாளும்விழாவறாத
தென்திருப்பேரையில்வீற்றிருந்த *
நங்கள்பிரானுக்குஎன்நெஞ்சம்தோழீ!
நாணும்நிரையுமிழந்ததுவே.
3477 செங்கனி வாயின் திறத்ததாயும் *
செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் *
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் *
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் **
திங்களும் நாளும் விழா அறாத *
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ *
நாணும் நிறையும் இழந்ததுவே (3)
3477 cĕṅkaṉi vāyiṉ tiṟattatāyum *
cĕñ cuṭar nīl̤ muṭi tāzhntatāyum *
caṅkŏṭu cakkaram kaṇṭu ukantum *
tāmaraik kaṇkal̤ukku aṟṟut tīrntum **
tiṅkal̤um nāl̤um vizhā aṟāta *
tĕṉ tirupperaiyil vīṟṟirunta *
naṅkal̤ pirāṉukku ĕṉ nĕñcam tozhī *
nāṇum niṟaiyum izhantatuve (3)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Come, my friend, enchanted by the Lord’s lips like ripe fruit, captivated by His tall radiant crown shining red, charmed by His conch and discus, and enslaved by His lotus eyes. My mind has lost its reserve and refinement, drawn to the Lord enshrined in Teṉtiruppēreyil, amidst the continuous celebrations and festivals.

Explanatory Notes

(i) The elders and neighbours having retreated from the scene, giving up the task of reclaiming the Nāyakī as hopeless, only the mate stays on, for further counselling. When she points out how unbecoming of the feminine rank and position the conduct of the Nāyakī is, the latter indicates in this song what indeed brought her to this pass. Actually, the Nāyakī’s mind is + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழி! தோழியே!; என் நெஞ்சம் என் மனம்; செங்கனி சிவந்த கோவைக்கனி போன்ற; வாயின் அதரத்தின்; திறத்ததாயும் அழகிலும்; செஞ்சுடர் நீள் முடி சிவந்த நீண்ட முடியிலும்; தாழ்ந்ததாயும் ஈடுபட்டு; சங்கொடு சக்கரம் சங்கையும் சக்கரத்தையும்; கண்டு உகந்தும் கண்டு மகிழ்ந்தும்; தாமரைக் கண்களுக்கு தாமரைக் கண்களுக்கு; அற்றுத் தீர்ந்தும் அற்றுத் தீர்ந்தும்; திங்களும் மாதந்தோறும்; நாளும் நாள்தோறும்; விழா அறாத இடைவிடாது திருவிழாக்கள் நடக்கும்; தென் திருப்பேரையில் தென் திருப்பேரையில்; வீற்றிருந்த வீற்றிருக்கின்ற; நங்கள் பிரானுக்கு எம்பெருமானிடம்; நாணும் நிறையும் வெட்கத்தையும் அடக்கத்தையும்; இழந்ததுவே இழந்து விட்டது
in attractive due to the sweetness etc; vāy divine lips; thiṛaththadhāyum plunged into; sem reddish; sudar radiant; nīl̤ tall; mudi in the divine crown; thāzhndhadhāyum residing humbly matching the supremacy; sangodu chakkaram the divine ornaments which confirm such supremacy; kaṇdu ugandhum becoming joyful; thāmarai like a greatly enjoyable lotus; kaṇgal̤ukku for the divine eyes; aṝu without attachment to anything else; thīrndhum existing exclusively; en nenjam my heart; thŏzhī ŏh friend who helped our union previously!; thingal̤um every month; nāl̤um every day; vizhā festivals; aṛādha happening continuously without a break; thenthiruppĕreyil in thenthiruppĕreyil; vīṝu highlighting his distinguished nature; irundha one who is mercifully residing; nangal̤ manifesting himself to people like us; pirānukku benefactor who is easily approachable in this archāvathāram (deity form); nāṇum natural shyness; niṛaiyum obedience; izhandhadhu lost; izhandha previously lost; em my

TVM 7.3.4

3478 இழந்தவெம்மாமைதிறத்துப்போன
என்நெஞ்சினாருமங்கேயொழிந்தார் *
உழந்தினியாரைக்கொண்டு? என்உசாகோ?
ஓதக்கடலொலிபோல * எங்கும்
எழுந்தநல்வேதத்தொலிநின்றோங்கு
தென்திருப்பேரையில்வீற்றிருந்த *
முழங்குசங்கக்கையன்மாயத்தாழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னைஎன்முனிந்தே?
3478 இழந்த எம் மாமைத்திறத்துப் போன *
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் *
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ? *
ஓதக் கடல் ஒலி போல ** எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு *
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் *
அன்னையர்காள் என்னை என் முனிந்தே? (4)
3478 izhanta ĕm māmaittiṟattup poṉa *
ĕṉ nĕñciṉārum aṅke ŏzhintār *
uzhantu iṉi yāraikkŏṇṭu ĕṉ ucāko? *
otak kaṭal ŏli pola ** ĕṅkum
ĕzhunta nal vetattu ŏli niṉṟu oṅku *
tĕṉ tirupperaiyil vīṟṟirunta *
muzhaṅku caṅkak kaiyaṉ māyattu āzhnteṉ *
aṉṉaiyarkāl̤ ĕṉṉai ĕṉ muṉinte? (4)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Elders, my mind tried to bring back the lost brightness but got stuck. With my mind lost, who will be my companion, and what will I say? Can you be angry with me, seeing me absorbed in the amazing Lord who holds the conch and lives in Teṉtiruppēreyil, echoing like the roaring sea?

Explanatory Notes

(i) The mind is accorded an exalted position by the Nāyakī and referred to, with great respect, by reasons of its being God-bent and competitive in its exuberance for God-enjoyment. Discoloration set in because of the Nāyakī’s extreme dejection, in her state of separation from the Lord. In a bold bid to restore to the Nāyakī her lost lustre, the mind went up to the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னையர்காள்! தாய்மார்களே!; இழந்த எம் ஏற்கனவே இழந்த என்; மாமை மேனி நிறத்தை; திறத்துப் போன மீட்டு வருவதற்காகச் சென்ற; என் நெஞ்சினாரும் என் மனமும்; அங்கே ஒழிந்தார் அங்கேயே தங்கி விட்டது; உழந்து இனி யாரை யாரிடம் இத்துன்பத்தைக் கூறி; கொண்டு யாரைத் துணையாக; என் உசாகோ? கொண்டு காலத்தைக் கழிப்பேன்?; ஓதக் கடல் ஒலி அலைகளை உடைய கடல் ஒலி; போல எங்கும் எழுந்த போல் எங்கும் உண்டான; நல் வேதத்து நல்ல வேதங்களின்; ஒலி நின்று ஓங்கு ஒலி முழங்கும்; தென் திருப்பேரையில் தென் திருப்பேரையில்; வீற்றிருந்த வீற்றிருக்கும்; முழங்கு முழங்குகின்ற; சங்கக் கையன் சங்கைக் கையில் வைத்திருக்கும்; மாயத்து எம்பெருமானின் மாயச் செயல்களில்; ஆழ்ந்தேன் ஆழ்ந்துவிட்ட என்னை நீங்கள்; என்னை என் முனிந்தே? கோபித்து என்ன பயன்?
māmaith thiṛaththu for the complexion; en my; nenjinārum heart; angĕ in close proximity there; ozhindhār due to the connection with emperumān, he remained with him;; ini now; uzhandhu being anguished; ārai those who are ignorant about my state; koṇdu with; en what principles (which are beyond them); usāgŏ will discuss?; ŏdham having rising waves; kadal oli pŏla like the sound of the ocean; engum everywhere; ezhundha rose; nal vĕdhaththoli the loud sounds of sāma vĕdham recital; ninṛu present (always); ŏngu rising; thenthiruppĕrĕyil in thenthiruppĕrĕyil; vīṝirundha one who is mercifully seated; muzhangu blowing (along with the vĕdham recital); sangam ṣrī pānchajanya; kaiyan who holds it in his divine hand; māyaththu in amaśing activities which reveal his simplicity, beauty etc; āzhndhĕn immersed;; annaiyargāl̤ ŏh mothers (who consider themselves having the experience and relationship to stop her)!; ennai you (who is engaged in him, without any companion); munindhu being angry; en what is the benefit?; munindhu showing his anger due to the delay in getting mother-s milk; sagadam the wheel

TVM 7.3.5

3479 முனிந்துசகடமுதைத்து மாயப்
பேய்முலையுண்டுமருதிடைபோய் *
கனிந்தவிளவுக்குக்கன்றெறிந்த
கண்ணபிரானுக்குஎன்பெண்மைதோற்றேன் *
முனிந்தினியென்செய்தீர்? அன்னைமீர்காள்!
முன்னியவன்வந்துவீற்றிருந்த *
கனிந்தபொழில்திருப்பேரையிற்கே
காலம்பெறஎன்னைக்காட்டுமினே.
3479 முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு * மருது இடை போய் *
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த *
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் **
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்? *
முன்னி அவன் வந்து வீற்றிருந்த *
கனிந்த பொழில் திருப்பேரையிற்கே *
காலம்பெற என்னைக் காட்டுமினே (5)
3479 muṉintu cakaṭam utaittu māyap
pey mulai uṇṭu * marutu iṭai poy *
kaṉinta vil̤avukkuk kaṉṟu ĕṟinta *
kaṇṇa pirāṉukku ĕṉ pĕṇmai toṟṟeṉ **
muṉintu iṉi ĕṉ cĕytīr aṉṉaimīrkāl̤? *
muṉṉi avaṉ vantu vīṟṟirunta *
kaṉinta pŏzhil tirupperaiyiṟke *
kālampĕṟa ĕṉṉaik kāṭṭumiṉe (5)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh elders, what would you gain by rebuking me? My femininity is lost unto Kaṇṇaṉ, who kicked the demon in the cart-wheel in fury, sucked the devil's breast unto death, crawled between the twin trees, smote a calf against the wood-apple tree, and slew both the demons. Take me, with no more delay, to Tiruppēreyil, full of nice gardens where my Lord stays.

Explanatory Notes

The Nāyakī is lost unto Kaṇṇaṉ (Lord Kṛṣṇa), in the sense that the bonds of feminine reserve and refinement have burst in the face of her overwhelming, rather overpowering Godlove. She advises the elders not to attempt the senseless task of putting up the bund after all the water has escaped down the sluices but to take her to Tiruppēreyil and leave her there where the

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்காள்! தாய்மார்களே!; முனிந்து சகடம் சீறிச் சகடாசுரனை; உதைத்து உதைத்துக் கொன்றவனும்; மாய பேய் வஞ்சகப் பேய் வடிவாக வந்த; முலை உண்டு பூதனையின் பாலைப் பருகினவனும்; மருது இடை மருத மரங்களிடையே; போய் தவழ்ந்து சென்றவனும்; கனிந்த விளவுக்கு விளாங்கனியின் மீது; கன்று எறிந்த வத்ஸாஸூரனை வீசியெறிந்தவனுமான; கண்ண பிரானுக்கு கண்ணபிரானுக்கு; என் பெண்மை தோற்றேன் என் பெண்மை தோற்றேன்; இனி இப்படி ஆன பின்பு; முனிந்து என்னைச் சீறுவதனால்; என் செய்தீர்? என்ன லாபம்?; முன்னி வந்து நீர் சென்ற பின் அணை கட்டப் பாராமல்; அவன் வீற்றிருந்த அந்த பெருமான் வீற்றிருக்கும்; கனிந்த பழங்கள் நிறைந்த; பொழில் சோலைகள் சூழ்ந்த; திருப்பேரையிற்கே திருப்பேரையிற்கு; காலம் பெற காலம் தாழ்த்தாமல்; என்னை என்னை அழைத்துச் சென்று; காட்டுமினே காண்பியுங்கள்
udhaiththu kicked; māyam came in the form of mother; pĕy demoniac woman; mulai uṇdu drank from the bosom; marudhu idai between the [twin] arjuna trees; pŏy (finding the route and) went; kanindha ripened; vil̤avukku on the demon who stood as a wood apple fruit; kanṛu the demon who came as a calf; eṛindha threw; kaṇṇan krishṇa; pirānukku great benefactor; en my; peṇmai femininity; thŏṝĕn lost;; ini now; annaimīrgāl̤ oh mothers!; munindhu controlling me; en what; seydhīr did you accomplish;; avan him; munni taking the initiative; vandhu arrived; vīṝirundha mercifully seated; kanindha well blossomed; pozhil having garden; thiruppĕreyiṛkĕ to thiruppĕreyil; ennai me (who cannot wait to attain the goal); kālampeṛa without any delay; kāttumin take me there and show me; neela mugil like a dark cloud; vaṇṇam manifesting the beautiful form which is magnanimous by nature

TVM 7.3.6

3480 காலம்பெறஎன்னைக்காட்டுமின்கள்
காதல்கடலின்மிகப்பெரிதால் *
நீலமுகில்வண்ணத்தெம்பெருமான்
நிற்குமுன்னேவந்தென்கைக்குமெய்தான் *
ஞாலத்தவன்வந்துவீற்றிருந்த
நான்மறையாளரும்வேள்வியோவா *
கோலச்செந்நெற்கள்கவரிவீசும்
கூடுபுனல்திருப்பேரையிற்கே.
3480 காலம்பெற என்னைக் காட்டுமின்கள் *
காதல் கடலின் மிகப் பெரிதால் *
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் *
நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் **
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த *
நான்மறையாளரும் வேள்வி ஓவா *
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் *
கூடு புனல் திருப்பேரையிற்கே. (6)
3480 kālampĕṟa ĕṉṉaik kāṭṭumiṉkal̤ *
kātal kaṭaliṉ mikap pĕritāl *
nīla mukil vaṇṇattu ĕm pĕrumāṉ *
niṟkum muṉṉe vantu ĕṉ kaikkum ĕytāṉ **
ñālattu avaṉ vantu vīṟṟirunta *
nāṉmaṟaiyāl̤arum vel̤vi ovā *
kolac cĕnnĕṟkal̤ kavari vīcum *
kūṭu puṉal tirupperaiyiṟke. (6)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh elders, it seems the cloud-hued Lord is in front of me and yet beyond my reach; alas! my love is bigger than the sea. Better take me quickly to Tiruppēreyil, the place on Earth where the Lord has come to stay, full of mirth, with plenty of water and lovely paddy crops, the great center where Vedic scholars zealously perform sacred rites.

Explanatory Notes

(i) The elders point out that the Lord had just left on a hunting expedition with her consent and that the Nāyakī should not be so very impatient and that too, so soon. But then the Nāyakī’s consuming passion is such that she can’t brook separation from her Lord even for a short while. Her love is even more expansive than the ocean. That it is fast gathering momentum can + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீல முகில்வண்ணத்து நீலமேக நிறத்தனான; எம் பெருமான் எம்பெருமான்; முன்னே வந்து என் கண்முன்னே வந்து; நிற்கும் நிற்பதாக நான் காண்கிறேன்; என் கைக்கும் ஆனால் கையால் அணைக்க; எய்தான் அகப்படமாட்டான்; காதல் கடலின் காதல் கடலைக்காட்டிலும்; மிகப் பெரிதால் மிகப் பெரியதாக உள்ளது; ஞாலத்து அவன் அப்பெருமான் இந்த உலகத்தில்; வந்து வீற்றிருந்த வந்து வீற்றிருக்கும்; நான் மறை நான்கு வேதங்களையும்; ஆளரும் அறிந்தவர்கள்; வேள்வி அவர்கள் செய்யும் யாகங்கள்; ஓவா குறையாமல் இருக்கும் இடமான; கோலச் செந்நெற்கள் அழகிய நெற்பயிர்கள்; கவரி வீசும் சாமரை போல் வீசும்; கூடு புனல் நீர் நிறைந்த; திருப்பேரையிற்கே திருப்பேரையிற்கே; காலம் பெற காலம் தாழ்த்தாமல்; என்னை என்னை அழைத்துச் சென்று; காட்டுமின்கள் காண்பியுங்கள்
em one who enslaved me; perumān lord; munnĕ in front of me; vandhu arrived; niṛkum stood as visualised [by me];; en my; kaikkum for hand; eydhān beyond my reach (like such cloud);; kādhal love; kadalil more than the ocean; miga much; peridhu became larger;; gyālaththu in the world; vandhu arriving (with that physical beauty); avan he; vīṝu manifesting his generosity; irundha abode; nān maṛaiyāl̤arum distinguished persons who are experts in four vĕdhams; vĕl̤vi in vaidhika practices which are a form of worship of emperumān; ŏvā occurring continuously; kŏlam beautiful; senneṛkal̤ paddy crops; kavari like fan; vīsum swaying; kūdu matching that; punal having abundance of water bodies; thiruppĕreyiṛkĕ to thiruppĕreyil; ennai me (who cannot tolerate any further delay); kālampeṛa at once; kāttumingal̤ take me and show me; pĕr big; eyil by the fort

TVM 7.3.7

3481 பேரெயில்சூழ்கடல்தென்னிலங்கை
செற்றபிரான்வந்துவீற்றிருந்த *
பேரையிற்கேபுக்கென்னெஞ்சம்நாடிப்
பேர்த்துவரவெங்கும்காணமாட்டேன் *
ஆரையினிங்குடையம்? தோழீ!
என்னெஞ்சம்கூவவல்லாருமில்லை *
ஆரை? இனிக்கொண்டுஎன்சாதிக்கின்றது?
என்னெஞ்சம்கண்டதுவேகண்டேனே.
3481 பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை *
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த *
பேரையிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் *
பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் **
ஆரை இனி இங்கு உடையம் தோழீ? *
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை *
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது? *
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே (7)
3481 per ĕyil cūzh kaṭal tĕṉ ilaṅkai *
cĕṟṟa pirāṉ vantu vīṟṟirunta *
peraiyiṟke pukku ĕṉ nĕñcam nāṭip *
perttu vara ĕṅkum kāṇamāṭṭeṉ **
ārai iṉi iṅku uṭaiyam tozhī? *
ĕṉ nĕñcam kūva vallārum illai *
ārai iṉikkŏṇṭu ĕṉ cātikkiṉṟatu? *
ĕṉ nĕñcam kaṇṭatuve kaṇṭeṉe (7)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My mind, which went in search of the Lord who burnt down Laṅkā across the sea, surrounded by gigantic walls, and now resides in Tiruppēreyil, hasn't returned. Nobody else can keep me company, nor is there anyone to restore my mind to me. There is none who can perhaps do me a good turn, so I shall follow my mind hence.

Explanatory Notes

(i) “Having seen in Tiruppēreyil, the victorious Lord who vanquished that felon, Rāvaṇa”, says the Nāyakī unto the mate, “it is no wonder, my mind doesn’t come back to me. Having lost such a great companion, there is hardly any point in my staying behind, as there is none who can take his place. Even you are in a state of extreme debility. It is, therefore, but meet that + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் எயில் பெரிய மதில்களால்; சூழ் கடல் சூழந்த கடலுக்கு நடுவில் இருக்கும்; தென் இலங்கை தென் இலங்கையை; செற்ற பிரான் அழித்த எம்பெருமான்; வந்து வீற்றிருந்த வந்து வீற்றிருக்கும்; பேரையிற்கே திருப்பேரையிற்கே சென்று; புக்கு என் நெஞ்சம் புகுந்த என் மனம்; நாடி பேர்த்து வர அங்கிருந்து மீண்டும்; எங்கும் வேறு ஒரிடத்திற்கும்; காண மாட்டேன் வரக்காணேன்; ஆரை இனி இங்கு இனி யாரைக் துணையாக; உடையம் தோழி! உடையோம்? தோழி!; என் நெஞ்சம் கூவ சென்ற என் நெஞ்சைக் கூவி; வல்லாரும் இல்லை அழைத்துத் தரவல்லாருமில்லை; ஆரை இனிக் கொண்டு இனி யாரைத் துணைகொண்டு; என் சாதிக்கின்றது? என் காரியத்தை சாதிப்பேன்?; என் நெஞ்சம் என் மனம் போன; கண்டதுவே வழியே நானும்; கண்டேனே போகிறேன் என்கிறாள்
sūzh being surrounded; kadal having the ocean (as a moat surrounding the fort); then well organiśed; ilangai lankā; seṝa one who destroyed; pirān benefactor; vandhu arrived (to rest); vīṛu irundha mercifully seated manifesting that valour; pĕreyiṛkĕ to thenthiruppĕreyil; pukku went and reached; en my; nenjam heart; nādi seeking him; pĕrththu return; engum anywhere; vara to come; kāṇamāttĕn ī am not seeing;; ini now; thŏzhī oh friend (who shares my grief)!; ingu in this state; ārai whom; udaiyam are we having?; (pŏna went); en my; nenjam heart; kūva to bring back; vallārum capable ones; illai not present;; ini now (after the heart is not helping, and you have given up); ārai whom; koṇdu with; en what benefit; sādhikkinṛadhu can accomplish?; en my; nenjam heart; kaṇdadhuvĕ whatever seen; kaṇdĕn ī have also seen.; kaṇdadhuvĕ the external changes only; koṇdu with

TVM 7.3.8

3482 கண்டதுவேகொண்டெல்லாரும்கூடிக்
கார்க்கடல்வண்ணனோடெந்திறத்துக்
கொண்டு * அலர்தூற்றிற்றதுமுதலாக்
கொண்டஎன்காதலுரைக்கில்தோழீ! *
மண்திணிஞாலமுமேழ்கடலும்
நீள்விசும்பும்கழியப்பெரிதால் *
தெண்திரைசூழ்ந்தவன்வீற்றிருந்த
தெந்திருப்பேரையில்சேர்வன்சென்றே.
3482 கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் *
கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு * அலர் தூற்றிற்று அது முதலாக் *
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ **
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் *
நீள் விசும்பும் கழியப் பெரிதால் *
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த *
தென் திருப்பேரையில் சேர்வன் சென்றே (8)
3482 kaṇṭatuve kŏṇṭu ĕllārum kūṭik *
kārk kaṭal vaṇṇaṉoṭu ĕṉ tiṟattuk
kŏṇṭu * alar tūṟṟiṟṟu atu mutalāk *
kŏṇṭa ĕṉ kātal uraikkil tozhī **
maṇ tiṇi ñālamum ezh kaṭalum *
nīl̤ vicumpum kazhiyap pĕritāl *
tĕṇ tirai cūzhntu avaṉ vīṟṟirunta *
tĕṉ tirupperaiyil cervaṉ cĕṉṟe (8)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My mate, ever since the elders began to complain, seeing the outer change in me regarding my union with the Lord of oceanic hue, my love for Him has swelled beyond the Earth, its peripheral oceans seven, and the ultramundane regions afar. So then, I have to go and join my Lord at Tiruppēreyil.

Explanatory Notes

The people around could hardly know the depth of the Godlove swelling up the Nāyakī’s bosom but they could, in a way, notice it from the words she uttered, her lamentation and other external changes in her complexion, behaviour etc. Then, they started rebuking her but their remonstration produced the opposite effect, virtually serving as the rich manure for the speedy + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்டதுவே என் மேனி நிற மாறுதலை; கொண்டு எல்லாரும் கொண்டு எல்லாரும்; கூடி கூடி ஒன்று சேர்ந்து; கார்க் கடல் கருங்கடல்; வண்ணனோடு பெருமானோடு; என் திறத்துக்கொண்டு கூடியதால் என் மீது; அலர் தூற்றிற்று பழி சுமத்தித் தூற்றுகிறார்கள்; அது முதலா அதையே காரணமாக; கொண்ட என் காதல் கொண்ட என் காதலை; உரைக்கில் சொல்லப் போனால்; தோழி! தோழியே! என் காதலானது; மண் திணி ஞாலமும் மண் செறிந்த பூமியும்; ஏழ் கடலும் அதனைச் சூழ்ந்த ஏழு கடல்களும்; நீள் இவற்றை அடக்கிக் கொண்டிருக்கும் நீண்ட; விசும்பும் கழிய ஆகாசத்தைக் காட்டிலும்; பெரிதால் மிக மிகப் பெரியதாகும்; தெண் திரை சூழ்ந்து தெளிந்த அலைகளால் சூழ்ந்த; அவன் அப்பெருமான் வீற்றிருக்கும் இடமான; தென் திருப்பேரையில் திருப்பேரையிற்கே; சேர்வன் சென்றே சென்று சேர்வேன்
ellārum everyone (mothers and townspeople); kūdi together; kār dark; kadal invigorating like ocean; vaṇṇanŏdu being with the one who is having the form; en thiṛaththu my weakness; koṇdu considering; alar accusations; thūṝiṝadhu throwing; mudhalā as reason; koṇda present; en my; kādhal love; thŏzhī oh friend (who first caused)!; uraikkil if ī see (to explain it through words); maṇ land; thiṇi abundant; gyālam earth; kadal ĕzhum seven oceans; visumbum ether; kazhiya beyond them, having consumed them; peridhu remained huge;; thel̤ clear; thirai invigorating due to having waves; sūzhndhavan one nurtured the great love; vīṝirundha residing; thenthiruppĕreyil thenthiruppĕreyil; senṛu go there (to pacify my suffering); sĕrvan will reach there; ennudai while sharing my grief, setting out to advice me; thŏzhimīrgāl̤ friends!

TVM 7.3.9

3483 சேர்வன்சென்றென்னுடைத்தோழிமீர்காள்!
அன்னையர்காள்! என்னைத்தேற்றவேண்டா *
நீர்களுரைக்கின்றதென்னிதற்கு?
நெஞ்சும்நிறைவும்எனக்கிங்கில்லை *
கார்வண்ணன்கார்க்கடல்ஞாலமுண்ட
கண்ணபிரான்வந்துவீற்றிருந்த *
ஏர்வளவொண்கழனிப்பழனத்
தென்திருப்பேரையில்மாநகரே.
3483 சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் *
அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா *
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு? *
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை **
கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட *
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த *
ஏர் வள ஒண் கழனிப் பழனத் *
தென் திருப்பேரையில் மாநகரே. (9)
3483 cervaṉ cĕṉṟu ĕṉṉuṭait tozhimīrkāl̤ *
aṉṉaiyarkāl̤ ĕṉṉait teṟṟa veṇṭā *
nīrkal̤ uraikkiṉṟatu ĕṉ itaṟku? *
nĕñcum niṟaivum ĕṉakku iṅku illai **
kārvaṇṇaṉ kārk kaṭal ñālam uṇṭa *
kaṇṇa pirāṉ vantu vīṟṟirunta *
er val̤a ŏṇ kazhaṉip pazhaṉat *
tĕṉ tirupperaiyil mānakare. (9)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Ye, mates and elders, make no attempt to reclaim me, There’s hardly anything you can say, gone is my mind And my modesty too, and now for Tiruppēreyil am I bound, With its fields fertile, fed with water in plenty, Where resides Kaṇṇaṉ, my Lord of blue tint, Who the Sea-bound worlds did gulp.

Explanatory Notes

The Nāyakī insists on going to Tiruppēreyil, despite counsel from her mates and elders to be patient and hopeful for the early return of her Beloved Lord. She is not receptive to their hollow inducements, as her mind has already flown to the Lord, leaving her stripped of receptivity to their words. Moreover, she does not have the type of mind that would respond to their

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுடைத் தோழிமீர்காள்! என்னுடைய தோழிகளே!; அன்னையர்காள்! தாய்மார்களே!; என்னை என்னை; தேற்ற வேண்டா தேற்ற வேண்டாம்; என் இதற்கு என்னுடைய இந்த நிலைமைக்கு; நீர்கள் நீங்கள் சொல்லக் கூடிய; உரைக்கின்றது வார்த்தை என்ன இருக்கிறது?; நெஞ்சம் நிறைவும் என் நெஞ்சமும் நிறைவும்; எனக்கு இங்கு இல்லை என்னிடம் இல்லை; கார் வண்ணன் நீல நிற வண்ணனான; கார்க் கடல் ஞாலம் கருங்கடல் சூழ்ந்த பூமியை; உண்ட கண்ண பிரான் உண்ட கண்ண பிரான்; வந்து வீற்றிருந்த வந்து வீற்றிருக்கும்; ஏர் வள ஏர் வளம் கொண்ட; ஒண் கழனி அழகிய கழனிகளையும்; பழன நீர் நிலைகளையுமுடைய; தென் திருப்பேரையில் தென்திருப்பேரை என்னும்; மாநகரே மா நகரை; சேர்வன் சென்று சென்று சேர்வேன் என்னைத் தடுக்காதீர்
annaiyargāl̤ oh mothers (who always advice me)!; ennai me; thĕṝa vĕṇdā need not console me;; idhaṛku for this state; nīngal̤ you; en what words; uraikkinṛadhu can you speak?; nenjum heart (which will remain pacified); niṛaivum completeness; enakku for me; ingu illai not present;; kār dark; vaṇṇam form; kārk kadal consumed by deluge; gyālam world; uṇda his quality of protecting in danger, of consuming; pirān who has the obedience of being the benefactor for his followers; kaṇṇan krishṇa; vandhu arrived; vīṝirundha having as residence; ĕr plough-s; val̤am having abundance; oṇ beautiful; kazhani fields; pazhanam having water bodies; thenthiruppĕreyil thenthiruppĕreyil; mā nagar big city; senṛu sĕrvan will reach; enakku for me; thŏzhimīrgāl̤ in the name of friends, you are giving advice

TVM 7.3.10

3484 நகரமும்நாடும்பிறவும்தேர்வேன்
நாணெனக்கில்லையென்தோழிமீர்காள் *
சிகரமணிநெடுமாடநீடு
தென்திருப்பேரையில்வீற்றிருந்த *
மகரநெடுங்குழைக்காதன்மாயன்
நூற்றுவரையன்றுமங்கநூற்ற *
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என்
னெஞ்சம்கவர்ந்தெனையூழியானே. (2)
3484 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் *
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் *
சிகர மணி நெடு மாடம் நீடு *
தென் திருப்பேரையில் வீற்றிருந்த **
மகர நெடுங்குழைக் காதன் மாயன் *
நூற்றுவரை அன்று மங்க நூற்ற *
நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் * என்
நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே? (10)
3484 nakaramum nāṭum piṟavum terveṉ *
nāṇ ĕṉakku illai ĕṉ tozhimīrkāl̤ *
cikara maṇi nĕṭu māṭam nīṭu *
tĕṉ tirupperaiyil vīṟṟirunta **
makara nĕṭuṅkuzhaik kātaṉ māyaṉ *
nūṟṟuvarai aṉṟu maṅka nūṟṟa *
nikar il mukilvaṇṇaṉ nemiyāṉ * ĕṉ
nĕñcam kavarntu ĕṉai ūzhiyāṉe? (10)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My friends, I am not in the least shy to go forward to cities and villages in search of those who look down upon my love for Makaraneṭuṅkuḻaikkātaṉ, the peerless Lord, cloud-hued, with discus in hand, of wondrous deeds, who slew the hundred Kaurav brothers and now resides in Tiruppēreyil, the ancient city with its tall turrets and stately castles, who has stolen my heart since ages long.

Explanatory Notes

(i) The mates pointed out that the Nāyakī would, by darting forth in the manner repeatedly proposed by her, only invite public ridicule and criticism of her conduct. The Nāyakī, however, retorts that she would go forward in search of these very persons, in hall and hamlet, as it would indeed gladden her heart to be told about her union with Lord, Makarabhūṣaṇa (whose ears + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் தோழிமீர்காள் என்னுடைய தோழிகளே!; சிகர சிகரங்களை உடைய; நெடு மணி மாடம் உயர்ந்த மணி மாடங்கள்; நீடு நிறைந்த; தென் திருப்பேரையில் தென் திருப்பேரையில்; வீற்றிருந்த வீற்றிருக்கும்; மகர நெடுங் குழை மகர குண்டலங்களை; காதன் அணிந்திருக்கும் காதுகளை உடைய; மாயன் மாயன்; நூற்றுவரை அன்று துரியோதனாதிகளை அன்று; மங்க நூற்ற அழியும்படி ஸங்கல்பித்தவனும்; நிகர் இல் ஒப்பற்ற; முகில் வண்ணன் முகில் வண்ணனும்; நேமியான் சக்கரத்தைக் கையில் உடையவன்; என் நெஞ்சம் கவர்ந்து என் நெஞ்சம் கவர்ந்தது; எனை என்னை இன்றா? நேற்றா?; ஊழியானே? ஊழி ஊழி காலமாக; நகரமும் அவனை நகரங்களிலும்; நாடும் நாடுகளிலும்; பிறவும் தேர்வேன் பிற இடங்களிலும் தேடுவேன்; நாண் எனக்கு இல்லை எனக்கு வெட்கம் இல்லை
sigaram having peaks; maṇi having abundance of gemstones; nedu tall; mādam having mansions; nīdu present for long time; thenthiruppĕreyil in thenthiruppĕreyil; vīṝirundha mercifully seated; makaram in the form of a fish; nedu huge; kuzhai having ornament; kādhan one who is having ears; māyan just as the beauty with the ornaments, one who has amaśing activities; nūṝuvarai dhuryŏdhana et al, who are the enemies of his followers; anṛu back then (during mahābhāradha war); manga to be finished; nūṝa wove his magic; nigar il matchless; mugil like a dark cloud; vaṇṇan having radiance in his form; nĕmiyān one who is having the divine chakra (which is protective towards followers); en nenjam my heart; kavarndhu stole; enai ūzhiyān one who did long ago;; nagaramum the town (where he resides); nādum the region (which is along that town); piṛavum other cities; thĕrvĕn will go and search;; nāṇ shyness (which is apt for women, i.e. thinking -why am ī doing this in the presence of these people who are blaming me?-); enakku illai ī don-t have; ūzhi ūzhi thŏṛu every kalpa (a day of brahmā); pĕrum uruvum seygaiyum activities relating to name and form

TVM 7.3.11

3485 ஊழிதோறூழியுருவும்பேரும்
செய்கையும்வேறவன்வையங்காக்கும் *
ஆழிநீர்வண்ணனைஅச்சுதனை
அணிகுருகூர்ச்சடகோபன்சொன்ன *
கேழிலந்தாதியோராயிரத்துள்இவை
திருப்பேரையில்மேயபத்தும் *
ஆழியங்கையனையேத்தவல்லாரவர்
அடிமைத்திறத்தாழியாரே. (2)
3485 ## ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் * வேறவன் வையம் காக்கும் *
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை *
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன **
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் * இவை
திருப்பேரையில் மேய பத்தும் *
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் *
அவர் அடிமைத்திறத்து ஆழியாரே. (11)
3485 ## ūzhitoṟu ūzhi uruvum perum
cĕykaiyum * veṟavaṉ vaiyam kākkum *
āzhi nīr vaṇṇaṉai accutaṉai *
aṇi kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
kezh il antāti or āyirattul̤ * ivai
tirupperaiyil meya pattum *
āzhi aṅkaiyaṉai etta vallār *
avar aṭimaittiṟattu āzhiyāre. (11)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Those who adore the Lord with the fine conch and discus, by chanting this decad belonging to the Deity at Tiruppēreyil, out of the thousand peerless songs composed by Caṭakōpaṉ of lovely Kurukūr, extolling Accutan, the sea-hued Lord, who takes on different names and forms in different ages to carry on his steadfast work of universal protection, will be blessed to remain in His eternal service.

Explanatory Notes

The end-stanza brings out that those well-versed in these ten songs, will be blessed with the great good fortune of rendering eternal service unto the Lord, like unto His discus, ever alert and dutiful.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழிதோறு ஊழி யுகங்கள் தோறும்; உருவம் பேரும் வடிவும் பேரும்; செய்கையும் செயலும்; வேறவன் வெவ்வேறாக உடையவனும்; வையம் காக்கும் உலகங்களைக் காப்பவனும்; ஆழி நீர் கடல் நீர் போன்ற; வண்ணனை வடிவழகை உடையவனுமான; அச்சுதனை அச்சுதனைக் குறித்து; அணி குருகூர் அழகிய குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; கேழ் இல் அந்தாதி ஒப்பில்லாத அந்தாதி; ஓர் ஆயிரத்துள் ஓர் ஆயிரம் பாசுரங்களுள்; திருப்பேரையில் மேய திருப்பேரையைப் பற்றிய; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; ஆழி சக்கரத்தை; அங்கையனை அழகிய கையிலுடையவனை; ஏத்த வல்லார் துதிக்க வல்லார்; அவர் அடிமைத்திறத்து நித்ய கைங்கர்யத்திலே; ஆழியாரே சக்கரத்தின் தன்மையை அடைவர்
vĕṛavan being the origin; vaiyam universe; kākkum being the protector; āzhi nīr greenish colour like that of the ocean water; vaṇṇanai being the one who has distinguished form; achchudhanai achyutha, who never abandons those who are to be protected; aṇi as an ornament for the universe; kurugūr controller of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; kĕzh match; il not having; ŏr andhādhi āyiraththul̤ the thousand distinguished pāsurams in the form of andhādhi (having connection between the ending of one pāsuram and the beginning of the next pāsuram); thiruppĕreyil thenthiruppĕreyil; mĕya for; ivai paththum this decad; koṇdu having; āzhi am kaiyanai sarvĕṣvara who has beautiful chakra in his hands; ĕththa praise; vallār avar experts; adimaith thiṛaththu in activities related to servitude [towards him]; āzhiyārĕ immersed in.; āzhi the divine chakra, who is the chief [among the weapons]; ezha appearing to rise to the front