Chapter 4

Āzhvār meditating upon His all pervading nature - (புகழும் நல்)

ஆத்மாக்கள் அனைத்தும் அவனே
These divine hymns elaborate on Bhagavān’s presence within all things in this world (omnipresence).
பகவான் உலகிலுள்ள எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பதை இப்பகுதி கூறுகிறது.
Verses: 3046 to 3056
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will enjoy the pleasures of moksha
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.4.1

3046 புகழுநல்லொருவன் என்கோ! பொருவில்சீர்ப் பூமியென்கோ? *
திகழும்தண்பரவையென்கோ? தீயென்கோ வாயுவென்கோ? *
நிகழுமாகாசமென்கோ? நீள்சுடரிரண்டுமென்கோ? *
இகழ்விலிவ்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே. (2)
3046 ## புகழும் நல் ஒருவன் என்கோ? *
பொரு இல் சீர்ப் பூமி என்கோ? *
திகழும் தண் பரவை என்கோ? *
தீ என்கோ? வாயு என்கோ? **
நிகழும் ஆகாசம் என்கோ? *
நீள் சுடர் இரண்டும் என்கோ? *
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ? *
கண்ணனைக் கூவும் ஆறே (1)
3046 ## pukazhum nal ŏruvaṉ ĕṉko? *
pŏru il cīrp pūmi ĕṉko? *
tikazhum taṇ paravai ĕṉko? *
tī ĕṉko? vāyu ĕṉko? **
nikazhum ākācam ĕṉko? *
nīl̤ cuṭar iraṇṭum ĕṉko? *
ikazhvu il iv aṉaittum ĕṉko? *
kaṇṇaṉaik kūvum āṟe (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

How shall I speak of Kaṇṇaṉ, my all-pervading Lord? Shall I say He is the one adored by all sacred texts, or shall I describe Him as the peerless Earth or the bright ocean? Could I say He is fire or air or the space in between, or the Sun and the Moon, or perhaps the sum of all of them?

Explanatory Notes

The Āzhvār looks on, in bewildering amazement, when the Lord presents Himself as an embodiment of the elements that have gone into the making of the universe and its multifarious contents, His auspicious qualities also shining forth, side by side. Unlike others who could see everything in its outer form only, the Āzhvār discerns the Lord in each and everything, and nothing + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணனை கண்ணனை; கூவுமாறு சொல்லியழைக்கும் விதம்; புகழும் வேதங்களால் புகழப்பட்ட; நல் சிறந்த குணங்களையுடையவன்; ஒருவன் ஒப்பற்றவன்; என்கோ? என்று சொல்வேனோ?; பொருவில் ஒப்பில்லாத; சீர்ப் பூமி சிறப்புக்களையுடைய பூமி; என்கோ? என்று சொல்வேனோ?; திகழும் தண் ஒளியுள்ள குளிர்ந்த; பரவை நீர்நிலை; என்கோ? என்று சொல்வேனோ?; தீ என்கோ? அக்னி என்பேனோ?; வாயு என்கோ? காற்று என்பேனோ?; நிகழும் ஆகாசம் எங்குமுள்ள ஆகாசம்; என்கோ? என்று சொல்வேனோ?; நீள் சுடர் ஸூர்யன் சந்திரன் என்ற; இரண்டும் என்கோ? இரண்டு சுடர்கள் என்பேனோ?; இகழ்வு இல் ஒன்று விடாமல்; இ அனைத்தும் இவை அனைத்தும்; என்கோ? என்று சொல்வேனோ?
kaṇṇanai krishṇa; kūvumāṛu the method of explaining him; pugazhum praised by (vĕdhams and vaidhikas); nal having distinguished forms and wealth; oruvan adhvithīya- unparalleled one; enkŏ should ī say?; poru match; il not having; sīr having completeness in all qualities (such as bearing everything etc); bhūmi enkŏ should ī say earth?; thigazhum radiant (due to its purity); thaṇ naturally cool; paravai enkŏ should ī say water forms?; thī enkŏ should ī say fire (that removes coolness)?; vāyu enkŏ should ī say air (which is the cause for prāṇa (vital air) etc)?; nigazhum proximate (surrounding all those that were born out of it); ākāsam enkŏ should ī say ether?; nīl̤ (through the rays) reaching radiantly everywhere; sudar iraṇdum enkŏ should ī say the two luminous objects (moon and sun); igazhvil without leaving out anything; ivai these; anaiththum enkŏ should ī say all?

TVM 3.4.2

3047 கூவுமாறறியமாட்டேன் குன்றங்கள்அனைத்துமென்கோ? *
மேவுசீர்மாரியென்கோ? விளங்குதாரகைகளென்கோ? *
நாவியல்கலைகளென்கோ? ஞானநல்லாவியென்கோ? *
பாவுசீர்க்கண்ணனெம்மான் பங்கயக்கண்ணனையே.
3047 கூவும் ஆறு அறியமாட்டேன் *
குன்றங்கள் அனைத்தும் * என்கோ? *
மேவு சீர் மாரி என்கோ? *
விளங்கு தாரகைகள் என்கோ? **
நா இயல் கலைகள் என்கோ? *
ஞான நல் ஆவி என்கோ? *
பாவு சீர்க் கண்ணன் எம்மான் *
பங்கயக் கண்ணனையே (2)
3047 kūvum āṟu aṟiyamāṭṭeṉ *
kuṉṟaṅkal̤ aṉaittum * ĕṉko? *
mevu cīr māri ĕṉko? *
vil̤aṅku tārakaikal̤ ĕṉko? **
nā iyal kalaikal̤ ĕṉko? *
ñāṉa nal āvi ĕṉko? *
pāvu cīrk kaṇṇaṉ ĕmmāṉ *
paṅkayak kaṇṇaṉaiye (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I know not how to describe Kaṇṇaṉ, my lotus-eyed Lord of vast and great qualities. Could He be called the sum of all mountains or the lovely rains, the bright stars, all the learning cultivated by the tongue, or the sweet sounds carrying profound meanings?

Explanatory Notes

(i) In this song, the Āzhvār sees the Lord in the several products of the various elements, referred to, in the previous song. Thus, the lotus-eyed Lord is also seen as the mountain range. It is the earth (Pṛtvi [pṛthvī]) that hardens into mountains, providing, in turn, stable support to the former. The rains pertain to the element known as water. Pleasant to behold, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பா சீர் பரந்த குணங்களையுடைய; கண்ணன் எம்மான் கண்ணன் எம்பெருமானை; குன்றங்கள் பர்வதங்கள்; அனைத்தும் அனைத்தும்; என்கோ? என்று சொல்வேனோ?; மேவு சீர் மாரி சிறப்பையுடைய மழை; என்கோ? என்று சொல்வேனோ?; விளங்கு பிரகாசிக்கின்ற; தாரகைகள் நக்ஷத்திரங்கள்; என்கோ? என்று சொல்வேனோ?; நா இயல் நாவினால் ஓதப்படும்; கலைகள் கலைகள்; என்கோ? என்று சொல்வேனோ?; ஞான அர்த்த ஞானத்திற்குக் காரணமான; நல் ஆவி ஆத்மா சரீரம்; என்கோ? என்று சொல்வேனோ?; பங்கய செந்தாமரை மலர்போன்ற; கண்ணனையே கண்களையுடைய கண்ணனை; கூவுமாறு சொல்லும் விதம் நான்; அறியமாட்டேன் அறியவில்லை
kunṛangal̤ anaiththum all mountains (that are effects of earth due to their hard nature); mĕvu sīr having glorifiable qualities (due to helping all living beings) and an effect of water; māri rain; vil̤angu effect of fire (due to its radiance); thāragaigal̤ stars etc; (effect of air) nā in the tongue; iyal being created; kalaigal̤ vidhyāsthānams (fields of knowledge); gyānam for in-depth knowledge; nallāvi being the ṣarīra (body/tool), the sounds which are effects of ākāṣa (ether); enkŏ ṣhould ī say or call him?; pāvu vast; sīr having qualities and wealth; kaṇṇan one who is easily accessible for me; pangayak kaṇṇan emmānai my lord who won over me by the beauty of his lotus eyes; kūvumāṛu method of speaking about him; aṛiya māttĕn ī am not knowing

TVM 3.4.3

3048 பங்கையக்கண்ணனென்கோ? பவளச்செவ்வாயனென்கோ? *
அங்கதிரடியனென்கோ? அஞ்சனவண்ணனென்கோ? *
செங்கதிர்முடியனென்கோ? திருமறுமார்வனென்கோ? *
சங்குசக்கரத்தனென்கோ? சாதிமாணிக்கத்தையே.
3048 பங்கயக் கண்ணன் என்கோ? *
பவளச் செவ்வாயன் என்கோ? *
அம் கதிர் அடியன் என்கோ? *
அஞ்சன வண்ணன் என்கோ? **
செங்கதிர் முடியன் என்கோ? *
திரு மறு மார்பன் என்கோ? *
சங்கு சக்கரத்தன் என்கோ? *
சாதி மாணிக்கத்தையே (3)
3048 paṅkayak kaṇṇaṉ ĕṉko? *
paval̤ac cĕvvāyaṉ ĕṉko? *
am katir aṭiyaṉ ĕṉko? *
añcaṉa vaṇṇaṉ ĕṉko? **
cĕṅkatir muṭiyaṉ ĕṉko? *
tiru maṟu mārpaṉ ĕṉko? *
caṅku cakkarattaṉ ĕṉko? *
cāti māṇikkattaiye (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Shall I refer to the rare blue gem of a Lord as the lotus-eyed, the coral-lipped, or the one with a pair of lovely and bright feet? Should I call Him one dark like a night sky or one who wears a dazzling red crown? Shall I speak of Him as the one on whose chest are 'Tiru' (Lakṣmī) and Maṟu (Śrīvatsa [śrīvatsam], the spiral spot) or as the one who wields the conch and the discus?

Explanatory Notes

(i) In the two preceding stanzas, the Āzhvār described the Lord’s universal aspect and now he describes Him, in His own exclusive form. As a matter of fact, the Āzhvār could discern the Lord in both the Universal and Individual forms with the same ease.

(ii) It is indeed interesting to study the sequence set out in the above stanza. The Āzhvār begins with the Lord’s + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சாதி நல்ல தேர்ந்த ஜாதி; மாணிக்கத்தையே கருமாணிக்கம் போன்றவனை; பங்கைய கண்ணன் செந்தாமரைக் கண்ணன்; என்கோ? என்று சொல்வேனோ?; பவள பவளம்போன்ற சிவந்த; செவ்வாயன் வாயை உடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?; அம் கதிர் அழகிய ஒளியுடைய; அடியன் திருவடிகளை உடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?; அஞ்சன மை போன்ற; வண்ணன் கருத்த நிறமுடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?; செங் கதிர் சிவந்த ஒளி உடைய; முடியன் கிரீடத்தையுடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?; திரு பிராட்டியையும்; மறு ஸ்ரீவத்ஸமென்னும் மறுவையும்; மார்வன் மார்பிலுடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?; சங்கு சக்கரத்தன் சங்குசக்கரங்களை உடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?
sādhi produced from a mine; māṇikkaththai having a precious-gem like (very radiant) form; pangayam like a lotus; kaṇṇan having eye; paval̤am like a coral; sem reddish; vāyan one who is having lips/mouth; am beautiful; kadhir radiant; adiyan having divine feet; anjana(m) like black pigment; vaṇṇan one who is having complexion; sem reddish; kadhir having rays; mudiyan one who is having divine crown; thiru in the abode of lakshmī; maṛu scar (caused by ṣrīvathsa mole); mārban one who is having divine chest; sangu chakkaraththan having completeness in weapons (to protect the private quarters of his divine consort); enkŏ should ī call him?

TVM 3.4.4

3049 சாதிமாணிக்கமென்கோ? சவிகொள்பொன் முத்தமென்கோ? *
சாதிநல்வயிரமென்கோ? தவிவில்சீர்விளக்கமென்கோ? *
ஆதியஞ்சோதியென்கோ? ஆதியம்புருடனென்கோ? *
ஆதுமில்காலத்தெந்தை அச்சுதனமலனையே.
3049 சாதி மாணிக்கம் என்கோ? *
சவி கொள் பொன் முத்தம் என்கோ? *
சாதி நல் வயிரம் என்கோ? *
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ? **
ஆதி அம் சோதி என்கோ? *
ஆதி அம் புருடன் என்கோ? *
ஆதும் இல் காலத்து எந்தை *
அச்சுதன் அமலனையே (4)
3049 cāti māṇikkam ĕṉko? *
cavi kŏl̤ pŏṉ muttam ĕṉko? *
cāti nal vayiram ĕṉko? *
tavivu il cīr vil̤akkam ĕṉko? **
āti am coti ĕṉko? *
āti am puruṭaṉ ĕṉko? *
ātum il kālattu ĕntai *
accutaṉ amalaṉaiye (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Shall I say that ‘Accutan’ is my immaculate Lord, who fathered me when I was lost and has held on to me ever since? Is He the pure gem or the shining gold, the flashy ruby or the choice diamond, the eternal lamp or the One of resplendent form, or the blissful Primate?

Explanatory Notes

(i) Asked by a worldling for tips as to how to remember the Supreme Lord, a knowledgeable elder queried back, “Pray, tell me how to forget God”. The Lord is everywhere, stays in all things having name and form and hence the wise men always perceive the Lord’s intimate contact and presence in each and everything. That is why the Lord has said in His ‘Song Celestial’ (10-41) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆதும் இல் காலத்து ஒன்றுமில்லாத காலத்தில்; எந்தை என் தந்தை போல் பாதுகாத்த; அச்சுதன் அமலனையே! அச்சுதனான பெருமானை; சாதி மாணிக்கம் ஜாதி மாணிக்கம்; என்கோ? என்று சொல்வேனோ?; சவி கொள் ஒளியையுடைய; பொன் முத்தம் பொன் முத்து; என்கோ? என்று சொல்வேனோ?; சாதி நல் வயிரம் சிறந்த நல்ல வயிரம்; என்கோ? என்று சொல்வேனோ?; தவிவு இல் சீர் அழிதலில்லாத ஒளியையுடைய; விளக்கம் விளக்கு; என்கோ? என்று சொல்வேனோ?; ஆதி அம் சோதி முழுமுதல் கடவுள்; என்கோ? என்று சொல்வேனோ?; ஆதி அம் புருடன் பரமபுருஷன்; என்கோ? என்று சொல்வேனோ?
ādhum anything; il not there; kālaththu during the time of deluge; endhai due to the causeless/eternal relationship, being the āthmā of chith and achith that are in unmanifested state; achchudhan not having any loss/decay (in his nature, qualities etc); amalanai one who is the opposite of all defects (i.e., not being affected by the defects of chith and achith, though he pervades them all); sādhi having the distinguished quality of being born/found in a mine; māṇikkam precious gem; savi radiance; kol̤ having; pon golden; muththam pearls; sādhi found in mines; nal distinguished in comparison to other rathnams (gems); vayiram diamond; thavi(r)vil indestructible; sīr having shining qualities; vil̤akkam lamp; ādhi being the primordial; am having qualities such as beauty etc; sŏdhi having a radiant divine form; ādhi being the primary person; am having qualities such as ānandham (bliss) etc; purudan supreme lord; enkŏ ṣhould ī say/call?

TVM 3.4.5

3050 அச்சுதனமலனென்கோ? அடியவர்வினைகெடுக்கும் *
நச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ? *
அச்சுவைக்கட்டியென்கோ? அறுசுவையடிசிலென்கோ? *
நெய்ச்சுவைத்தேறலென்கோ? கனியென்கோ? பாலென்கேனோ.
3050 அச்சுதன் அமலன் என்கோ? *
அடியவர் வினை கெடுக்கும் *
நச்சும் மா மருந்தம் என்கோ? *
நலங் கடல் அமுதம் என்கோ? **
அச் சுவைக் கட்டி என்கோ? *
அறுசுவை அடிசில் என்கோ? *
நெய்ச் சுவைத் தேறல் என்கோ? *
கனி என்கோ? பால் என்கேனோ? (5)
3050 accutaṉ amalaṉ ĕṉko? *
aṭiyavar viṉai kĕṭukkum *
naccum mā maruntam ĕṉko? *
nalaṅ kaṭal amutam ĕṉko? **
ac cuvaik kaṭṭi ĕṉko? *
aṟucuvai aṭicil ĕṉko? *
nĕyc cuvait teṟal ĕṉko? *
kaṉi ĕṉko? pāl ĕṉkeṉo? (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Shall I call my Lord Accutaṉ (the steadfast) or the Immaculate? Perhaps He is the delightful, high-class medicine that removes devotees' ills and evils, or the nectar from the fine milk ocean. Is He the delicious cream, a meal with six tastes, or honey as flavorful as fruit, ghee, or milk?

Explanatory Notes

(i) True to the Upaniṣadik text, depicting the Lord as very delicious, the Āzhvār presents the Lord here as all those things that are juicy and appetising.

(ii) Cutting out the devotees’ ills and evils: The expression ‘Ills and evils’ is used in a comprehensive sense, covering the effective operation of both ‘Puṇya’ and ‘Pāpa’, as the former is a golden fetter and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அச்சுதன் அமலன் அச்சுதன் அமலன்; என்கோ? என்று சொல்வேனோ?; அடியவர் அடியவர்களின்; வினை பாப புண்ணியங்களை; கெடுக்கும் போக்கும்; நச்சும் மா மருந்தம் இனிமையான ஔஷதம்; என்கோ? என்று சொல்வேனோ?; நலங் கடல் நல்ல பாற்கடலில் தோன்றிய; அமுதம் அம்ருதம்; என்கோ? என்று சொல்வேனோ?; அச் சுவை அமிருதத்தின் ருசியையுடைய; கட்டி கற்கண்டு; என்கோ? என்று சொல்வேனோ?; அறு சுவை அடிசில் அறு சுவை அடிசில்; என்கோ? என்று சொல்வேனோ?; நெய்ச் சுவை தேறல் நெய்போல் சுவையுள்ள தேன்; என்கோ? என்று சொல்வேனோ?; கனி என்கோ? பழம்; பால் என்கேனோ? பால் என்று சொல்வேனோ?
achchudhan one who is having sweetness that never lets go of those who enjoy him; amalan having purity (of letting us enjoy him, as a fortune for him); adiyavar those who are related to him; vinai suffering of not attaining the desired results; kedukkum that which eliminates; nachchum that which is desired (due to its taste); mā marundham medicine acquired from cow; nal (due to the connection of milk) being distinguished; am (due to connection with bhagavān) being pleasant to the eyes; kadal in the ocean; amudham nectar (which was churned and fetched by him); a that nectar-s; suvai having taste; katti sugar (cane) block; aṛusuvai having six types of tastes (madhura (sweet), amla (sour), lavaṇa (salty), katu (pungent), kashāya (astringent), thiktha (bitter)); adisil rice; ney of ghee; suvai having taste; thĕṛal honey; kani fruit (which cannot be left unconsumed due to its ripened state); pāl milk (which has natural taste); enkŏ (enkĕnŏ) should ī say/call?

TVM 3.4.6

3051 பாலென்கோ? நான்குவேதப்பயனென்கோ? சமயநீதி *
நூலென்கோ? நுடங்குகேள்வியிசையென்கோ? * இவற்றுள்நல்ல
மேலென்கோ? வினையின்மிக்கபயனென்கோ? * கண்ணனென்கோ?
மாலென்கோ? மாயனென்கோ? வானவராதியையே.
3051 பால் என்கோ? *
நான்கு வேதப் பயன் என்கோ? *
சமய நீதி நூல் என்கோ? *
நுடங்கு கேள்வி இசை என்கோ? **
இவற்றுள் நல்ல மேல் என்கோ? *
வினையின் மிக்க பயன் என்கோ? *
கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ? *
வானவர் ஆதியையே (6)
3051 pāl ĕṉko? * nāṉku vetap payaṉ ĕṉko? * camaya nīti
nūl ĕṉko? * nuṭaṅku kel̤vi icai ĕṉko? ** ivaṟṟul̤ nalla
mel ĕṉko? * viṉaiyiṉ mikka payaṉ ĕṉko? * kaṇṇaṉ ĕṉko?
māl ĕṉko? māyaṉ ĕṉko? * vāṉavar ātiyaiye (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-1, 18-67

Simple Translation

Should I refer to the Lord, chief among Nithyasuris, as the nourishing milk or as the supreme embodiment of the four Vedas and the Śāstras that illuminate the Vedic path? Perhaps as the captivating music, the one beyond all, or the fruits of noble efforts? Or shall I simply call Him Kaṇṇaṉ, Māl (Tirumāl), or Māyaṉ, the Lord of wondrous deeds and qualities?

Explanatory Notes

(i) The Lord is the quintessence of the vedās, the supreme authority revealing Him. The Lord has Himself declared, in XV-15 of Bhagavad Gītā, that He alone is denoted by the Vedās, in their entirety.

The Śāstras, referred to, are the sacred texts, such as Itihāsas, Purāṇas etc, which elucidate the moot points in the Vedas and serve as an effective key or guide to the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தேவாதி தேவனான; ஆதியையே எம்பெருமானை; பால் என்கோ? பால் என்று சொல்வேனோ?; நான்கு வேத பயன் சிறந்த நான்கு வேதங்கள்; என்கோ? என்று சொல்வேனோ?; சமய நீதி நூல் தர்ம சாஸ்த்திர நீதி நூல்கள்; என்கோ? என்று சொல்வேனோ?; நுடங்கு கேள்வி கேட்பவர்களை மயங்கச்செய்யும்; என்கோ? இசை என்று சொல்வேனோ?; இவற்றுள் நல்ல மேல் இவற்றுள் நல்ல மேன்மையுடையது; என்கோ? என்று சொல்வேனோ?; வினையின் முயற்சியைக் காட்டிலும்; மிக்க பயன் அதற்குண்டான பலன்; என்கோ? என்று சொல்வேனோ?; கண்ணன் என்கோ கண்ணன் என்று சொல்வேனோ?; மால் என்கோ? திருமால் என்று சொல்வேனோ?; மாயன் என்கோ? மாயன் என்று சொல்வேனோ?
vānavar for all dhĕvas; ādhiyai one who is the cause for their existence etc; nāngu vĕdham vĕdhams-; pāl classifications such as ṣākā (branch) etc; nāngu vĕdham such four vĕdhams-; payan result; samayam establishing the meanings; nīdhi explaining logic; nūl mīmāmsā ṣāsthram; nudangu engaging (the listeners); kĕl̤vi having sounds; isai songs/tunes; ivaṝul̤ in these (which have been discussed); nalla distinguished; mĕl unlimited, wondrous enjoyment; vinaiyil not matching the effort; mikka great; payan result; kaṇṇan krishṇa (who is blissful, in the form of such result); māl who enjoys (those who enjoy him) with great love; māyan having matching amaśing activities; enkŏ should ī call?

TVM 3.4.7

3052 வானவராதியென்கோ? வானவர்தெய்வமென்கோ? *
வானவர்போகமென்கோ? வானவர்முற்றுமென்கோ? *
ஊனமில்செல்வமென்கோ? ஊனமில்சுவர்க்கமென்கோ? *
ஊனமில்மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே.
3052 வானவர் ஆதி என்கோ? *
வானவர் தெய்வம் என்கோ? *
வானவர் போகம் என்கோ? *
வானவர் முற்றும் என்கோ? **
ஊனம் இல் செல்வம் என்கோ? *
ஊனம் இல் சுவர்க்கம் என்கோ? *
ஊனம் இல் மோக்கம் என்கோ? *
ஒளி மணி வண்ணனையே (7)
3052 vāṉavar āti ĕṉko? *
vāṉavar tĕyvam ĕṉko? *
vāṉavar pokam ĕṉko? *
vāṉavar muṟṟum ĕṉko? **
ūṉam il cĕlvam ĕṉko? *
ūṉam il cuvarkkam ĕṉko? *
ūṉam il mokkam ĕṉko? *
ŏl̤i maṇi vaṇṇaṉaiye (7)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Shall I call the lustrous, gem-hued Sire the Overlord of Nithyasuris or the Supreme God they adore? Should I describe Him as the one they enjoy and their everything, or the inexhaustible treasure and undying pleasures of Svarga or mokṣa, the eternal bliss?

Explanatory Notes

(i) ‘Celestials’: This denotes, in particular, the ‘Nitya Sūris’ in spiritual world to whom the Lord is the ‘Be-all’ and ‘End-all’, the Sole Sustainer.

(ii) Bliss eternal: spiritual world, the Eternal Land, with its perennial scope for eternal service unto the Lord, as distinguished from the ‘Kaivalya’ type of Mokṣa or emancipation where the liberated (dis-embodied) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒளி மணி ஒளியுள்ள மாணிக்கம் போன்ற; வண்ணனையே வடிவையுடைய பெருமானை; வானவர் ஆதி நித்யஸூரிகளின் தலைவன்; என்கோ? என்று சொல்வேனோ?; வானவர் தெய்வம் நித்யஸூரிகளின் தெய்வம்; என்கோ? என்று சொல்வேனோ?; வானவர் போகம் நித்யஸூரிகளின் போகப் பொருள்; என்கோ? என்று சொல்வேனோ?; வானவர் நித்யஸூரிகளின்; முற்றும் அனைத்து ரக்ஷணமும் நீயே; என்கோ? என்று சொல்வேனோ?; ஊனம் இல் செல்வம் ஒருநாளும் அழியாத செல்வம்; என்கோ? என்று சொல்வேனோ?; ஊனம் இல் சுவர்க்கம் ஒழிவில்லாத ஸ்வர்க்கம்; என்கோ? என்று சொல்வேனோ?; ஊனம் இல் மோக்கம் விலக்ஷணமான மோக்ஷம்; என்கோ? என்று சொல்வேனோ?
ol̤i radiant; maṇi like a ruby; vaṇṇanai having form; vānavar dhĕvas (who are engaged in enjoyment); ādhi creator; vānavar their; dheyvam worshippable god; vānavar their; bŏgam enjoyment (which is the result of their worship); vānavar their; muṝum all types of protection; ūnamil perennial; selvam wealth; ūnamil that which lasts till the end of world; suvarggam heavenly abode; ūnamil vast (unlike kaivalyam which is limited); mŏkkam blissful mŏksham (liberation); enkŏ should ī say/call?

TVM 3.4.8

3053 ஒளிமணிவண்ணனென்கோ? ஒருவனென்றேத்தநின்ற *
நளிர்மதிச்சடையனென்கோ? நான்முகக்கடவுளென்கோ? *
அளிமகிழ்ந்துலகமெல்லாம் படைத்தவையேத்தநின்ற *
களிமலர்த்துளவனெம்மான் கண்ணனைமாயனையே.
3053 ஒளி மணி வண்ணன் என்கோ? *
ஒருவன் என்று ஏத்த நின்ற *
நளிர் மதிச் சடையன் என்கோ? *
நான்முகக் கடவுள் என்கோ? **
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் *
படைத்து அவை ஏத்த நின்ற *
களி மலர்த் துளவன் எம்மான் *
கண்ணனை மாயனையே (8)
3053 ŏl̤i maṇi vaṇṇaṉ ĕṉko? *
ŏruvaṉ ĕṉṟu etta niṉṟa *
nal̤ir matic caṭaiyaṉ ĕṉko? *
nāṉmukak kaṭavul̤ ĕṉko? **
al̤i makizhntu ulakam ĕllām *
paṭaittu avai etta niṉṟa *
kal̤i malart tul̤avaṉ ĕmmāṉ *
kaṇṇaṉai māyaṉaiye (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Could I refer to Kaṇṇaṉ, my Liege-Lord known for wondrous traits and deeds, who sports a tuḷacī garland shedding honey and who delightedly created and is adored by the worlds, as the lustrous one of sapphire hue? Or should I liken Him to Śiva, who wears the cool crescent moon on his matted locks and is revered by his followers as the supreme God, or to Nāṉmukaṉ (Brahmā, the four-headed)?

Explanatory Notes

(i) The Āzhvār points out here that Śiva, sporting the cool, crescent Moon on his matted locks, mistakenly revered by some as the Supreme and Brahmā, the four-headed Demi-urge, also form part of Lord Viṣṇu’s possessions.

(ii) ‘Liege-Lord’: Viṣṇu, who put the Āzhvār on the right track and thereby made him solely worship Him, without straying into the domain of worship of the lesser deities.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அளி மகிழ்ந்து உயிர்களை காப்பாற்ற விரும்பி; உலகம் எல்லாம் எல்லா உலகங்களையும்; படைத்த படைத்து; அவை அந்த உலகத்தவர்கள்; ஏத்த நின்ற தன்னைத் துதிக்கும்படி நிற்கின்றவனும்; களி மலர் தேனையும் பூவையுமுடைய; துளவன் துளசி மாலை அணிந்த; எம்மான் பெருமான்; கண்ணனை கண்ணனை; மாயனையே மாயனை; ஒளி மணி ஒளியுள்ள மாணிக்கம்போன்ற; வண்ணன் வடிவையுடையவன்; என்கோ? என்று சொல்வேனோ?; ஒருவன் என்று ஒப்பற்ற ஒருவன் என்றும்; ஏத்த நின்ற அடியவர்கள் துதிக்கும்படி நின்றவன்; நளிர் மதி குளிர்ந்த பிறைச்சந்திரனை; சடையன் சடையில் தரித்த ருத்ரன்; என்கோ? என்று சொல்வேனோ?; நான்முக கடவுள் நான்முக கடவுளான பிரமன்; என்கோ? என்று சொல்வேனோ?
al̤i for the favour of protecting; magizhndhu having joy; ulagam ellām all the worlds; padaiththu created; avai those [worlds]; ĕththa praise; ninṛa standing (feeling accomplished); kal̤i with flowing honey; malar blossomed flower; thul̤avan due to the beauty of the thul̤asi garland; emmān one who completely won over me; māyanai one who carried out amaśing activities such as stealing butter etc; kaṇṇanai krishṇa; maṇi like a ruby (which is polished well); ol̤i best due to its radiance; vaṇṇan having complexion; oruvan enṛu that he is the one; ĕththa being praised; ninṛa one who is standing; thal̤ir cool; madhi due to having crescent moon; sadaiyan due to having matted hair, rudhra who is engaged in enjoyment (having cool crescent moon) as well as penance (having matted hair); nānmugan four headed brahmā (who is worshipped by all dhĕvathās); enkŏ ṣhould ī call him?

TVM 3.4.9

3054 கண்ணனைமாயன்தன்னைக் கடல்கடைந்தமுதங்கொண்ட *
அண்ணலைஅச்சுதனை அனந்தனை அனந்தன்தன்மேல் *
நண்ணிநன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்தமாலை *
எண்ணுமாறறியமாட்டேன்யாவையும்யவரும்தானே.
3054 கண்ணனை மாயன் தன்னைக் *
கடல் கடைந்து அமுதம் கொண்ட *
அண்ணலை அச்சுதனை *
அனந்தனை அனந்தன் தன்மேல் **
நண்ணி நன்கு உறைகின்றானை *
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை *
எண்ணும் ஆறு அறியமாட்டேன் *
யாவையும் எவரும் தானே (9)
3054 kaṇṇaṉai māyaṉ taṉṉaik *
kaṭal kaṭaintu amutam kŏṇṭa *
aṇṇalai accutaṉai *
aṉantaṉai aṉantaṉ taṉmel **
naṇṇi naṉku uṟaikiṉṟāṉai *
ñālam uṇṭu umizhnta mālai *
ĕṇṇum āṟu aṟiyamāṭṭeṉ *
yāvaiyum ĕvarum tāṉe (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I know not how to comprehend Kaṇṇaṉ, the wondrous Lord, the glorious Sire who churned the ocean and delivered ambrosia. Accutaṉ (the steadfast Protector) possesses unlimited glory and safely rests on Aṉantaṉ (the Serpent). Tirumāl (with tender care) sustained all the worlds in His stomach during the deluge and later released them. Indeed, He constitutes all things and beings.

Explanatory Notes

The Āzhvār who attempted earlier an enumeration of the Lord’s cosmic wealth, has now given it up as impossible and rests contented with a summary statement that He is the aggregate of all non-sentient things and sentient beings.

Cf. the Lord’s own declaration, in Bhagavad Gītā X-19, that there is no end to the details of things and beings under His control (the vibhūtīs).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணனை கண்ணனும்; மாயன் தன்னை மாயவனும்; கடல் கடைந்து கடல் கடைந்து; அமுதங் கொண்ட அமுதம் கொடுத்த; அண்ணலை பெருமையையுடையவனும்; அச்சுதனை அனந்தனை அச்சுதனும் அனந்தனும்; அனந்தன் தன்மேல் ஆதிசேஷன் மேல்; நண்ணி நன்கு பொருந்தி நன்றாக; உறைகின்றானை கண்வளர்பவனும்; ஞாலம் உண்டு உலகை பிரளயகாலத்தில் உண்டு; உமிழ்ந்த மாலை பின் ஸ்ருஷ்டித்த திருமாலை; எண்ணும் ஆறு இப்படிப்பட்டவன் என்று; அறியமாட்டேன் துதிக்கும் வழி அறியேன்; யாவையும் அனைத்து சேதனங்களும்; எவரும் அசேதனங்களும்; தானே எம்பெருமானே ஆவான்
yāvaiyum all achĕthana (insentient objects); yavarum all chĕthana (sentient entities); thān being himself; kaṇṇanai being easily approachable for his devotees; māyan thannai one who is identified by his amaśing qualities and activities; kadal ocean; kadaindhu churned; amudham koṇda work for them; aṇṇalai being sarvaswāmy (lord of all); achchudhanai being the one who never leaves his devotees; ananthanai being the one with unlimited glories in his true nature etc; ananthan thanmĕl on thiruvananthāzhwān (ādhiṣĕshan) (who is capable of securing everything inside him); naṇṇi fitting well; nangu happily; uṛaiginṛānai one who is resting; gyālam when there is danger for the world that is protected by him; uṇdu protecting by placing it in his stomach; umizhndha and then let it out free [when safe to do so]; mālai one who is having vāthsalyam (motherly affection); eṇṇumāṛu to (comprehensively) think; aṛiya māttĕn ī don-t know

TVM 3.4.10

3055 யாவையும்யவரும்தானாய் அவரவர்சமயந்தோறும் *
தோய்விலன்புலனைந்துக்கும் சொலப்படான்உணர்வின் மூர்த்தி *
ஆவிசேருயிரினுள்ளால் ஆதுமோர்பற்றிலாத *
பாவனையதனைக்கூடில் அவனையுங்கூடலாமே.
3055 யாவையும் எவரும் தானாய் *
அவரவர் சமயம் தோறும் *
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் *
சொலப்படான் உணர்வின் மூர்த்தி **
ஆவி சேர் உயிரின் உள்ளால் *
ஆதும் ஓர் பற்று இலாத *
பாவனை அதனைக் கூடில் *
அவனையும் கூடலாமே (10)
3055 yāvaiyum ĕvarum tāṉāy *
avaravar camayam toṟum *
toyvu ilaṉ pulaṉ aintukkum *
cŏlappaṭāṉ uṇarviṉ mūrtti **
āvi cer uyiriṉ ul̤l̤āl *
ātum or paṟṟu ilāta *
pāvaṉai ataṉaik kūṭil *
avaṉaiyum kūṭalāme (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, the embodiment of knowledge, resides within all things and beings but remains apart from their joys and sorrows, far beyond the comprehension of the five senses. Understand that growth and decay pertain to the body, not the soul within. Likewise, the Lord remains within the soul, detached from its joys and sorrows.

Explanatory Notes

This stanza clearly brings out the fact that the Lord who has stationed Himself inside all things and beings, is not affected by their changing fortunes, weal or woe, even as the Individual Soul occupying a particular body is not affected by the biological changes of growth and decay undergone by the body. But then, it might be argued that the Individual Soul partakes + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உணர்வின் ஸ்வயம் பிரகாசனாயிருக்கும்; மூர்த்தி எம்பெருமான்; யாவையும் எல்லா அசேதனப் பொருள்களும்; எவரும் எல்லாச் சேதனர்களும்; தானாய் அவர்களின் ஆத்மாவாக உட்புகுந்திருந்தும்; சமயம் அவர்களின் சுகம் துக்கம் முதலிய; தோறும் நிலைமைகளில் அவர்களைப் போல்; தோய்வு தனக்கு யாதொரு தோஷமும்; இலன் இல்லாதவன்; புலன் ஐந்துக்கும் பஞ்சேந்திரியங்களின் அறிவுக்கும்; சொலப்படான் விஷயமாகச் சொல்லப்படாதவன்; ஆவி சேர் சரீரத்தோடு சேர்ந்து; உயிரின் உள்ளால் ஆத்மாவின் ஸ்வரூபத்தில்; ஆதும் ஓர் சரீரத்தைச் சார்ந்த தன்மைகளில் ஒரு; பற்றிலாத பற்றுமில்லாத இளமை மூப்பு போன்ற; பாவனை எண்ணமானது; அதனை அந்த ஆத்மாவுக்கு; கூடில் தகுமென்று தோன்றினால்; அவனையும் அந்த எம்பெருமானுக்கும்; கூடலாமே தகும்
yāvaiyum all achĕthana (insentient objects); yavarum all chĕthana (sentient entities); thānāy being himself; avar avar those sentient entity-s; samayam thŏṛum in their various situations [bodies] such as being dhĕva (celestial) et al (when united with achith (matter)); thŏyvilan has no binding unlike them; pulan aindhukkum through the five sensory organs; solappadān is not spoken [understood]; uṇarvin mūrththi one who is naturally self-illuminating;; āvi body which is the abode of prāṇa (vital air); sĕr together with; uyirin āthmā-s; ul̤ in the nature; ādhum qualities such as jadathva (being inanimate), pariṇāmithva (changes) etc; ŏr in any one; paṝu attachment; ilādha not applicable; bāvanai aspect; adhanai that true nature,; kūdil if affected; ādhumŏr paṝilādha the aspect of not being affected (in the attributes of all chĕthana and achĕthana); avanaiyum īswara (who was spoken about previously and is explained as self-illuminating); kūdalām will be applicable; ĕ certainly

TVM 3.4.11

3056 கூடிவண்டறையும்தண்தார்க் கொண்டல்போல் வண்ணன்தன்னை *
மாடலர்பொழில்குருகூர் வண்சடகோபன்சொன்ன *
பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும்வல்லார் *
வீடிலபோகமெய்தி விரும்புவரமரர்மொய்த்தே (2)
3056 ## கூடி வண்டு அறையும் தண் தார்க் *
கொண்டல் போல் வண்ணன் தன்னை *
மாடு அலர் பொழில் * குருகூர்
வண் சடகோபன் சொன்ன **
பாடல் ஓர் ஆயிரத்துள் *
இவையும் ஓர் பத்தும் வல்லார் *
வீடு இல போகம் எய்தி *
விரும்புவர் அமரர் மொய்த்தே (11)
3056 ## kūṭi vaṇṭu aṟaiyum taṇ tārk *
kŏṇṭal pol vaṇṇaṉ taṉṉai *
māṭu alar pŏzhil * kurukūr
vaṇ caṭakopaṉ cŏṉṉa **
pāṭal or āyirattul̤ *
ivaiyum or pattum vallār *
vīṭu ila pokam ĕyti *
virumpuvar amarar mŏytte (11)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who are well-versed in these ten songs from the peerless thousand sung by the gracious Caṭakōpaṉ of Kurukūr, amid many blooming orchards, and who adore the cloud-hued Lord adorned with a cool tuḷaci garland frequented by honey bees, will ascend to SriVaikuntam and enjoy eternal service, becoming the Celestials' favorites.

Explanatory Notes

(i) Gracious caṭakōpaṉ: The Āzhvār’s grace lies not in his seeing the Lord, in all things and beings, but in his making us also realise it, through these songs.

(ii) The Nitya Sūris (Celestials in SriVaikuntam) love those that recite these ten songs. This is because of their great love and regard for the Āzhvār who possesses Divine knowledge on a par with them, despite his location down below in this land of darkness and nescience.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூடி வண்டு வண்டுகள் கூடி; அறையும் ரீங்காரம் செய்கின்ற; தண் தார் குளிர்ந்த மாலையையுடைய; கொண்டல் போல் காளமேகம் போன்ற; வண்ணன் நிறத்தை; தன்னை உடையவனைக் குறித்து; மாடு அலர் சுற்றும் மலர்ந்த; பொழில் சோலைகளையுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; வண் சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; பாடல் ஓர் ஒப்பற்ற பாடல்களான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் ஓர் பத்தும் இந்தப் பத்துப்பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்கள்; வீடு இல இடைவிடாத; போகம் எய்தி பகவதநுபவத்தைப் பெற்று; அமரர் நித்யஸூரிகளால்; விரும்புவர் மொய்த்தே விரும்பப்படுவர்கள் ஆவர்
vaṇdu bumble bees; kūdi grouped; aṛaiyum buśśing (due to the joy of drinking honey); thaṇ cool; thār wearing divine garland; koṇdal pŏl like a black cloud; vaṇṇan thannai being the one with such complexion; mādu on all sides; alar blossomed; pozhil having gardens; kurugūr leader of āzhvārthirunagari; vaṇ ṣatakŏpan nammāzhvār; sonna mercifully spoke; pādal with music; ŏr distinguished; āyiraththul̤ in the thousand pāsurams; oru distinguished; ivaiyum paththum this decad also (which explained bhagavān having all worlds as his wealth like having distinguished form); vallār those who can practice; vīdila uninterrupted; bŏgam experience of bhagavān; eydhi attain; amarar nithyasūris; moyththu surround; virumbuvar be desired