Chapter 4

Āzhvār meditating upon His all pervading nature - (புகழும் நல்)

ஆத்மாக்கள் அனைத்தும் அவனே
These divine hymns elaborate on Bhagavān’s presence within all things in this world (omnipresence).
பகவான் உலகிலுள்ள எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பதை இப்பகுதி கூறுகிறது.

மூன்றாம் பத்து -நான்காம் திருவாய்மொழி – புகழும்நல் ஒருவன்’-பிரவேசம்

கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்; இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் + Read more
Verses: 3046 to 3056
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will enjoy the pleasures of moksha
  • TVM 3.4.1
    3046 ## புகழும் நல் ஒருவன் என்கோ? *
    பொரு இல் சீர்ப் பூமி என்கோ? *
    திகழும் தண் பரவை என்கோ? *
    தீ என்கோ? வாயு என்கோ? **
    நிகழும் ஆகாசம் என்கோ? *
    நீள் சுடர் இரண்டும் என்கோ? *
    இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ? *
    கண்ணனைக் கூவும் ஆறே (1)
  • TVM 3.4.2
    3047 கூவும் ஆறு அறியமாட்டேன் *
    குன்றங்கள் அனைத்தும் * என்கோ? *
    மேவு சீர் மாரி என்கோ? *
    விளங்கு தாரகைகள் என்கோ? **
    நா இயல் கலைகள் என்கோ? *
    ஞான நல் ஆவி என்கோ? *
    பாவு சீர்க் கண்ணன் எம்மான் *
    பங்கயக் கண்ணனையே (2)
  • TVM 3.4.3
    3048 பங்கயக் கண்ணன் என்கோ? *
    பவளச் செவ்வாயன் என்கோ? *
    அம் கதிர் அடியன் என்கோ? *
    அஞ்சன வண்ணன் என்கோ? **
    செங்கதிர் முடியன் என்கோ? *
    திரு மறு மார்பன் என்கோ? *
    சங்கு சக்கரத்தன் என்கோ? *
    சாதி மாணிக்கத்தையே (3)
  • TVM 3.4.4
    3049 சாதி மாணிக்கம் என்கோ? *
    சவி கொள் பொன் முத்தம் என்கோ? *
    சாதி நல் வயிரம் என்கோ? *
    தவிவு இல் சீர் விளக்கம் என்கோ? **
    ஆதி அம் சோதி என்கோ? *
    ஆதி அம் புருடன் என்கோ? *
    ஆதும் இல் காலத்து எந்தை *
    அச்சுதன் அமலனையே (4)
  • TVM 3.4.5
    3050 அச்சுதன் அமலன் என்கோ? *
    அடியவர் வினை கெடுக்கும் *
    நச்சும் மா மருந்தம் என்கோ? *
    நலங் கடல் அமுதம் என்கோ? **
    அச் சுவைக் கட்டி என்கோ? *
    அறுசுவை அடிசில் என்கோ? *
    நெய்ச் சுவைத் தேறல் என்கோ? *
    கனி என்கோ? பால் என்கேனோ? (5)
  • TVM 3.4.6
    3051 பால் என்கோ? *
    நான்கு வேதப் பயன் என்கோ? *
    சமய நீதி நூல் என்கோ? *
    நுடங்கு கேள்வி இசை என்கோ? **
    இவற்றுள் நல்ல மேல் என்கோ? *
    வினையின் மிக்க பயன் என்கோ? *
    கண்ணன் என்கோ?
    மால் என்கோ? மாயன் என்கோ? *
    வானவர் ஆதியையே (6)
  • TVM 3.4.7
    3052 வானவர் ஆதி என்கோ? *
    வானவர் தெய்வம் என்கோ? *
    வானவர் போகம் என்கோ? *
    வானவர் முற்றும் என்கோ? **
    ஊனம் இல் செல்வம் என்கோ? *
    ஊனம் இல் சுவர்க்கம் என்கோ? *
    ஊனம் இல் மோக்கம் என்கோ? *
    ஒளி மணி வண்ணனையே (7)
  • TVM 3.4.8
    3053 ஒளி மணி வண்ணன் என்கோ? *
    ஒருவன் என்று ஏத்த நின்ற *
    நளிர் மதிச் சடையன் என்கோ? *
    நான்முகக் கடவுள் என்கோ? **
    அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் *
    படைத்து அவை ஏத்த நின்ற *
    களி மலர்த் துளவன் எம்மான் *
    கண்ணனை மாயனையே (8)
  • TVM 3.4.9
    3054 கண்ணனை மாயன் தன்னைக் *
    கடல் கடைந்து அமுதம் கொண்ட *
    அண்ணலை அச்சுதனை *
    அனந்தனை அனந்தன் தன்மேல் **
    நண்ணி நன்கு உறைகின்றானை *
    ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை *
    எண்ணும் ஆறு அறியமாட்டேன் *
    யாவையும் எவரும் தானே (9)
  • TVM 3.4.10
    3055 யாவையும் எவரும் தானாய் *
    அவரவர் சமயம் தோறும் *
    தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் *
    சொலப்படான் உணர்வின் மூர்த்தி **
    ஆவி சேர் உயிரின் உள்ளால் *
    ஆதும் ஓர் பற்று இலாத *
    பாவனை அதனைக் கூடில் *
    அவனையும் கூடலாமே (10)
  • TVM 3.4.11
    3056 ## கூடி வண்டு அறையும் தண் தார்க் *
    கொண்டல் போல் வண்ணன் தன்னை *
    மாடு அலர் பொழில் * குருகூர்
    வண் சடகோபன் சொன்ன **
    பாடல் ஓர் ஆயிரத்துள் *
    இவையும் ஓர் பத்தும் வல்லார் *
    வீடு இல போகம் எய்தி *
    விரும்புவர் அமரர் மொய்த்தே (11)