Chapter 5
Classification of devās (saintly persons) and asurās (demoniac persons) - (மொய்ம் மாம்)
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்
This set of divine hymns are in praise of those who are constantly immersed in Bhagavān’s auspicious qualities experiencing blissful exuberance overflowing out of them in the form of song and dance; but chastises those who are yet to attain this state of bliss. These hymns embrace and support those in servitude to Bhagavān and debases those who aren’t.
பகவானின் குணானுபவத்தால் பேரன்பு விஞ்சி ஆடிப்பாடிப் பரவசமடையும் மெய்யன்பர்களை வாழ்த்தியும், இப்படிப்பட்ட அனுபவத்தை (நிலையை)ப் பெறாதவர்களைத் தாழ்த்தியும் இப்பகுதி கூறுகிறது. திருமாலின் அன்பர்களை ஆதரித்தலும் அல்லாதவர்களை நிந்தித்தலும்.
மூன்றாம் பத்து -ஐந்தாம் திருவாய்மொழி – ‘மொய்ம் + Read more
Verses: 3057 to 3067
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: bad karma will go away
- TVM 3.5.1
3057 ## மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை *
முதலைச் சிறைப்பட்டு நின்ற *
கைம்மாவுக்கு அருள் செய்த *
கார் முகில் போல் வண்ணன் கண்ணன் **
எம்மானைச் சொல்லிப் பாடி *
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் *
தம்மால் கருமம் என்? சொல்லீர் *
தண் கடல் வட்டத்து உள்ளீரே (1) - TVM 3.5.2
3058 தண் கடல் வட்டத்து உள்ளாரைத் *
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும் *
திண் கழல் கால் அசுரர்க்குத் *
தீங்கு இழைக்கும் திருமாலை **
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப் *
பறந்தும் குனித்து உழலாதார் *
மண் கொள் உலகில் பிறப்பார் *
வல்வினை மோத மலைந்தே (2) - TVM 3.5.3
3059 மலையை எடுத்து கல் மாரி
காத்து * பசுநிரை தன்னை *
தொலைவு தவிர்த்த பிரானைச் *
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும் **
தலையினோடு ஆதனம் தட்டத் *
தடுகுட்டமாய்ப் பறவாதார் *
அலை கொள் நரகத்து அழுந்திக் *
கிடந்து உழைக்கின்ற வம்பரே (3) - TVM 3.5.4
3060 வம்பு அவிழ் கோதைபொருட்டா *
மால் விடை ஏழும் அடர்த்த *
செம்பவளத் திரள் வாயன் *
சிரீதரன் தொல் புகழ் பாடி **
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் *
கோகு உகட்டுண்டு உழலாதார் *
தம் பிறப்பால் பயன் என்னே *
சாது சனங்களிடையே? (4) - TVM 3.5.5
3061 சாது சனத்தை நலியும் *
கஞ்சனைச் சாதிப்பதற்கு *
ஆதி அம் சோதி உருவை *
அங்கு வைத்து இங்குப் பிறந்த **
வேத முதல்வனைப் பாடி *
வீதிகள் தோறும் துள்ளாதார் *
ஓதி உணர்ந்தவர் முன்னா *
என் சவிப்பார் மனிசரே? (5) - TVM 3.5.6
3062 மனிசரும் மற்றும் முற்றும் ஆய் *
மாயப் பிறவி பிறந்த *
தனியன் பிறப்பிலி தன்னைத் *
தடங் கடல் சேர்ந்த பிரானை **
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் *
கட்டியைத் தேனை அமுதை *
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் *
முழுது உணர் நீர்மையினாரே (6) - TVM 3.5.7
3063 நீர்மை இல் நூற்றுவர் வீய *
ஐவர்க்கு அருள்செய்து நின்று *
பார் மல்கு சேனை அவித்த *
பரஞ்சுடரை நினைந்து ஆடி **
நீர் மல்கு கண்ணினர் ஆகி *
நெஞ்சம் குழைந்து நையாதே *
ஊன் மல்கி மோடு பருப்பார் *
உத்தமர்கட்கு என் செய்வாரே? (7) - TVM 3.5.8
3064 வார் புனல் அம் தண் அருவி *
வட திருவேங்கடத்து எந்தை *
பேர் பல சொல்லிப் பிதற்றிப் *
பித்தர் என்றே பிறர் கூற **
ஊர் பல புக்கும் புகாதும் *
உலோகர் சிரிக்க நின்று ஆடி *
ஆர்வம் பெருகிக் குனிப்பார் *
அமரர் தொழப்படுவாரே (8) - TVM 3.5.9
3065 அமரர் தொழப்படுவானை *
அனைத்து உலகுக்கும் பிரானை *
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து *
அவன் தன்னோடு ஒன்று ஆக **
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய *
அல்லாதவர் எல்லாம் *
அமர நினைந்து எழுந்து ஆடி *
அலற்றுவதே கருமமே (9) - TVM 3.5.10
3066 கருமமும் கரும பலனும் ஆகிய *
காரணன் தன்னை *
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் *
தேவபிரானை **
ஒருமை மனத்தினுள் வைத்து *
உள்ளம் குழைந்து எழுந்து ஆடி *
பெருமையும் நாணும் தவிர்ந்து *
பிதற்றுமின் பேதமை தீர்ந்தே (10) - TVM 3.5.11
3067 ## தீர்ந்த அடியவர் தம்மைத் *
திருத்திப் பணிகொள்ள வல்ல *
ஆர்ந்த புகழ் அச்சுதனை *
அமரர் பிரானை எம்மானை **
வாய்ந்த வள வயல் சூழ் *
தண் வளங் குருகூர்ச் சடகோபன் *
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்து *
அருவினை நீறு செய்யுமே (11)