Chapter 10

Āzhvār talks about his surrender and servitude to His devotees - (நெடுமாற்கு அடிமை)

பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுதல்
This set of divine hymns elaborates on BhagAvatha Seshattavam and emphasizes BhagAvatha Kainkaryam (surrender and service to devotees) as the highest goal one should pursue. Not only should one be devoted to Bhagavān but also to His servants (BhagAvathas). The pinnacle of devotion to God is devotion to His servants. The tenacity of the former will be reflected in the latter.
இத்திருவாய்மொழி பாகவத சேஷத்வத்தைக் கூறுகிறது. பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதையும் உணர்த்துகிறது. பகவானிடம் பக்தி கொள்வதுடன் அவனடியார்களிடமும்(பாகவதர்களிடமும்) பக்தி கொள்ளவேண்டும். பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. பகவத் பக்தியின் உறுதியை பாகவத பக்தியே வெளிப்படுத்தும்.
Verses: 3662 to 3672
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: will live happily with their wives and children on the earth
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.10.1

3662 நெடுமாற்கடிமைசெய்வேன்போல் அவனைக்கருதவஞ்சித்து *
தடுமாற்றற்றதீக்கதிகள் முற்றும்தவிர்ந்தசதிர்நினைந்தால் *
கொடுமாவினையேன்அவனடியாரடியே கூடுமிதுவல்லால் *
விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறினுமே. (2)
3662 ## நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் *
அவனைக் கருத வஞ்சித்து *
தடுமாற்று அற்ற தீக்கதிகள் * முற்றும்
தவிர்ந்த சதிர் நினைந்தால் **
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே * கூடும் இது அல்லால் *
விடுமாறு என்பது என் அந்தோ! *
வியன் மூவுலகு பெறினுமே? (1)
3662 ## nĕṭumāṟku aṭimai cĕyveṉpol *
avaṉaik karuta vañcittu *
taṭumāṟṟu aṟṟa tīkkatikal̤ * muṟṟum
tavirnta catir niṉaintāl **
kŏṭu mā viṉaiyeṉ avaṉ aṭiyār
aṭiye * kūṭum itu allāl *
viṭumāṟu ĕṉpatu ĕṉ anto! *
viyaṉ mūvulaku pĕṟiṉume? (1)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

If even the mere contemplation of rendering service unto the Lord, who harbors immense love for His devotees, could truly absolve me of all my grievous sins, unbeknownst to me, how could I, this humble sinner, forsake the service at the lovely feet of His devotees? Need I state that apart from this, I would reject outright any other offer, even if it were the gift of all the vast worlds?

Explanatory Notes

If the mere wish of the Āzhvār, with hardly any semblance of sincerity to serve the Lord, could surely blot out all his deadly sins, that very moment, without his being aware of the whole process how much more beneficial could whole-hearted devotion to His apostles be? This is how the Āzhvār revolved, in his mind, seeing that the Lord bears inordinate love for His devotees + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடுமாற்கு எம்பெருமானுக்கு; அடிமை கைங்கர்யம்; செய்வேன் போல் செய்வதைப் போல; அவனைக் கருத அவனை நினைத்தால்; தீக்கதிகள் தீவினைகள்; முற்றும் அனைத்தும்; வஞ்சித்து நான் அறியாதவாறு; தடுமாற்று அற்ற ஓர் அலைச்சலும் இன்றி; தவிர்ந்த என்னை விட்டு நீங்கியதை; சதிர் நினைந்தால் ஆராய்ந்து பார்த்தால்; வியன் மூவுலகு பரந்த மூன்று உலகங்களையும்; பெறினுமே பெற்றாலும்; அவன் அடியார் அவன் அடியார்களின்; அடியே கூடும் திருவடிகளை அடைந்து; இது அல்லால் கைங்கர்யம் செய்வது தவிர; கொடு மா கொடிய பெரும்; வினையேன் என் பாவியான எனக்கு; விடும் ஆறு என்பது? இதைவிடப் பெரும் பேறு உண்டோ?; அந்தோ! அந்தோ!
adimai seyvĕnpŏl as to serve; avanai him; karudha as ī thought; thadumāṝam wavering; aṝa remaining in me, to eliminate; thīkkadhigal̤ the evil ways (which are in the form of avidhyā [ignorance], causing sorrow); muṝum all; vanjiththu deceiving me (without my knowledge); thavirndha left me (as said in -kānŏ orungiṝum kaṇdila māl-);; sadhir apt; ninaindhāl if we see; avan for him (who has motherly affection towards devotees); adiyār bhāgavathas, who are his servitors; adiyĕ divine feet only; kūdum idhu allāl other than attaining; viyan vast; mū ulagu wealth of three worlds; peṛinum even if attained; kodu to highlight the difference between aiswaryam (wealth) and thadhīya ṣĕshathvam (being subservient to devotees); mā vinaiyĕn ī who am having great sin; vidum leaving; āṛu as ways; enbadhu saying; en why?; andhŏ alas!; viyan huge; mū ulagu the wealth of three worlds

TVM 8.10.2

3663 வியன்மூவுலகுபெறினும் போய்த்தானேதானேயானாலும் *
புயல்மேகம்போல்திருமேனியம்மான் புனைபூங்கழலடிக்கீழ் *
சயமேயடிமைதலைநின்றார் திருத்தாள்வணங்கி * இம்மையே
பயனேயின்பம்யான்பெற்றது உறுமோபாவியேனுக்கே?
3663 வியன் மூவுலகு பெறினும் போய்த் *
தானே தானே ஆனாலும் *
புயல் மேகம்போல் திருமேனி
அம்மான் * புனை பூம் கழல் அடிக்கீழ் **
சயமே அடிமை தலைநின்றார் *
திருத்தாள் வணங்கி * இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது *
உறுமோ பாவியேனுக்கே? (2)
3663 viyaṉ mūvulaku pĕṟiṉum poyt *
tāṉe tāṉe āṉālum *
puyal mekampol tirumeṉi
ammāṉ * puṉai pūm kazhal aṭikkīzh **
cayame aṭimai talainiṉṟār *
tiruttāl̤ vaṇaṅki * immaiye
payaṉe iṉpam yāṉ pĕṟṟatu *
uṟumo pāviyeṉukke? (2)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Neither sovereignty over the sprawling worlds nor the bliss of self-enjoyment, freed from bondage, can equal the joy I have found in adoring the lovely feet of the selfless devotees at the forefront of service to the cloud-hued Lord adorned with beautiful flowers and victorious anklets.

Explanatory Notes

(i) Even the combined gift of vast wealth and the ‘Kaivalya’ state of perennial freedom from bodily ties, cannot equalise the bliss of service at the holy feet of the self-less apostles of the Lord, His hot favourites.

(ii) The self-enjoyment, referred to, in the second line, is the ‘Kaivalya’ state, denoted by the phrase in the first line of the original text of this + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வியன் மூவுலகு பரந்த மூன்று உலகங்களையும்; பெறினும் பெற்றாலும்; போய் அதற்கும் மேலான; தானே தானே தன்னைத் தானே அநுபவிக்கும்; ஆனாலும் கைவல்ய மோக்ஷம் பெற்றாலும்; புயல் மேகம்போல் மழைகாலத்து மேகம் போன்ற; திருமேனி திருமேனி உடைய; அம்மான் பெருமானின்; புனை பூங் கழல் மலர்களும் வீரகழலும் அணிந்த; அடிக்கீழ் திருவடிகளின் கீழே; சயமே அடிமை கைங்கர்யம் செய்வதையே; தலை நின்றார் தொண்டாக உடைய அடியார்களின்; திருத்தாள் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்து; வணங்கி வணங்கி வாழ்வதை விட; பாவியேனுக்கே பாவியேனான எனக்கு; இம்மையே இந்த உலகத்தில்; யான் பெற்றது நான் பெற்ற பெரும் பேறு என்ற; பயனே இன்பம் பயனான இன்பம்; உறுமோ? வேறு உண்டோ?
peṛinum even if attained; pŏy going (without attachment in that); thānĕ being self; thānĕ exclusively being self (without enjoying īṣvara); ānālum if enjoyed; puyal ready to rain; mĕgam pŏl like cloud (having the quality of being generous towards devotees); thirumĕni having divine form; ammān sarvĕṣvara-s; punai worn; flower; kazhal having anklets of bravery; adik kīzh under the divine feet; sayamĕ without any other expectation; adimai servitude; thalai in ultimate state; ninṛār those who remained; thiru distinguished; thāl̤ divine feet; vaṇangi offering praṇāmams (matching that servitude); immaiyĕ in this world itself; payanĕ as result; yān ī; peṝadhu attained; inbam for the bliss; pāviyĕnukku for me who has committed sins (of having to highlight the greatness of bhāgavatha ṣĕshathvam over other results); uṛumŏ would those aiṣvarya and kaivalya results fit me?; i these (not aware of itself); ulagam mūnṛum three worlds

TVM 8.10.3

3664 உறுமோபாவியேனுக்கு? இவ்வுலகம்மூன்றும்உடன்நிறைய *
சிறுமாமேனிநிமிர்த்த என்செந்தாமரைக்கண் திருக்குறளன் *
நறுமாவிரைநாள்மலரடிக்கீழ்ப் புகுதலன்றிஅவனடியார் *
சிறுமாமனிசராய்என்னையாண்டார் இங்கேதிரியவே.
3664 உறுமோ பாவியேனுக்கு * இவ்
உலகம் மூன்றும் உடன் நிறைய *
சிறு மா மேனி நிமிர்த்த * என்
செந்தாமரைக்கண் திருக்குறளன் **
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப் *
புகுதல் அன்றி அவன் அடியார் *
சிறு மா மனிசராய் என்னை
ஆண்டார் * இங்கே திரியவே? (3)
3664 uṟumo pāviyeṉukku * iv
ulakam mūṉṟum uṭaṉ niṟaiya *
ciṟu mā meṉi nimirtta * ĕṉ
cĕntāmaraikkaṇ tirukkuṟal̤aṉ **
naṟu mā virai nāl̤ malar aṭikkīzhp *
pukutal aṉṟi avaṉ aṭiyār *
ciṟu mā maṉicarāy ĕṉṉai
āṇṭār * iṅke tiriyave? (3)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Simple Translation

Attaining the fragrant lotus feet of the lotus-eyed Lord, who expanded His divine form to encompass the three worlds at once, would indeed be sublime. However, it would also be fitting to continue serving His devoted followers, the great souls who have uplifted me and whose service occupies my mind incessantly.

Explanatory Notes

(i) Having abjured wealth and ‘Kaivalya Mokṣa’ in the two preceding songs, the Āzhvār now asserts that even service unto the Supreme Lord has to be given the go-by, overwhelmed, as he is, by service unto the ‘little-big’ men (as in the original text), over here, which is virtually an enlargement of service unto God. The ‘little-big men’, an apparent contradiction in terms, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறு மா வடிவில் சிறுத்து அறிவில் பெருத்த; மனிசர் ஆய் மனிதர்களாய்; என்னை என்னைத் தங்களுடன்; ஆண்டார் ஈடுபடுத்திக் கொண்டவர்களான; அவன் அடியார் அவன் அடியார்கள்; இங்கே திரியவே இந்த லோகத்தில் இருக்கும்; அன்றி அவர்களுக்கு அடிமை செய்வது தவிர; இவ் உலகம் மூன்றும் இம்மூவுலகங்களும்; உடன்நிறைய ஒரே சமயத்தில்; சிறு வாமனனாக வந்து; மா மேனி திருவிக்கிரமனாக; நிமிர்த்த என் வளரச் செய்த என்; செந்தாமரை செந்தாமரை போன்ற; கண் கண்களை உடைய; திருக்குறளன் வாமனனின்; நறு மா விரை தேன் பெருகும் மணம் கமழும்; நாள் மலர் செவ்விப்பூ போல் இருக்கும்; அடிக்கீழ் திருவடிகளின் கீழ்; புகுதல் புகுதல்; பாவியேனுக்கு பாவியேனான எனக்கு; உறுமோ? தகுமோ?
udan in a single effort; niṛaiya to fill; siṛu being small (to become small and enjoy him); attractive, having distinguished greatness; mĕni divine form; nimirththa one who made it grow; en being perfectly enjoyable for me; sem reddish; thāmarai lotus like; kaṇ having eye; thirukkuṛal̤an ṣrī vāmana-s; naṛu fragrant; best; virai having honey; nāṇ(l̤) malar like a fresh flower; adik kīzh (serving) under the divine feet; pugudhal attaining;; avan for such vāmana; adiyār servitors; siṛu though they appear to be small due to having human form; mā manisarāy being great personalities (of having greatness beyond that of nithyasūris); ennai me; āṇdār those who enslaved me; ingĕ in this world itself; thiriya visibly remaining; anṛi other than this; pāviyĕnukku for me who is having the sin (to distinguish between thadhīya ṣĕshathvam (servitude towards bhāgavathas) which is the ultimate state and thath ṣĕshathvam (servitude towards bhagavān) which is the initial state); uṛumŏ does it fit?; iru expansive; praiseworthy

TVM 8.10.4

3665 இங்கேதிரிந்தேற்இழுக்குற்றென்? இருமாநிலம் முன்னுண்டுமிழ்ந்த *
செங்கோலத்தபவளவாய்ச் செந்தாமரைக்கணென்னம் மான் *
பொங்கேழ்புகழ்கள்வாயவாய்ப் புலன்கொள்வடிவு என்மனத்ததாய் *
அங்கேய்மலர்கள்கையவாய் வழிபட்டோடஅருளிலே.
3665 இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் *
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த *
செங்கோலத்த பவளவாய்ச் *
செந்தாமரைக்கண் என் அம்மான் **
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்ப் *
புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய் *
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் *
வழிபட்டு ஓட அருளிலே? (4)
3665 iṅke tirinteṟku izhukku uṟṟu ĕṉ *
iru mā nilam muṉ uṇṭu umizhnta *
cĕṅkolatta paval̤avāyc *
cĕntāmaraikkaṇ ĕṉ ammāṉ **
pŏṅku ezh pukazhkal̤ vāya āyp *
pulaṉkŏl̤ vaṭivu ĕṉ maṉattatu āy *
aṅku ey malarkal̤ kaiya āy *
vazhipaṭṭu oṭa arul̤ile? (4)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Indeed, what would be wrong if I forsook SriVaikuntam and remained here, expressing the radiant glory of the lotus-eyed Lord with lovely lips, who once swallowed all the worlds and then spat them out? I have embedded His exquisite form in my heart and worshipped Him with choice flowers, following in the footsteps of His devoted followers with great fervor.

Explanatory Notes

It is but meet that the ‘carama parva niṣṭā’, that is, one who adores the Lord’s devotees much to the delight of the Lord, should adore Him also for the gratification of the devotees. Matura Kavi Āzhvār, who knew no God other than Parāṅkuśa (Nammāḻvār), said, in the third stanza of ‘Kaṇṇiṇuṇ Ciṟuttāmpu,’, that there was nothing wrong in his adoring the cloud-hued Lord, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பொரு காலத்தில்; இரு மா நிலம் மிகப்பெரிய இந்த பூமியை; உண்டு உண்டு வற்றிலே வைத்துக் காத்து; உமிழ்ந்த வெளிப்படுத்திய; செங்கோலத்த சிவந்த அழகை உடைய; பவள பவழம் போன்ற; வாய் அதரத்தையுடைய; செந்தாமரை சிவந்த தாமரை போன்ற; கண் கண்களை உடைய; என் அம்மான் எம்பெருமானின்; பொங்கு ஏழ் பொங்கிக் கிளர்ந்து எழும்; புகழ்கள் குணங்களானவை; வாய ஆய் என் வாக்குக்கு விஷயமாகவும்; புலன் கொள் வடிவு புலன்களின் வடிவழகு; என் மனத்தது ஆய் என் மனத்திலுள்ளதாகவும்; அங்கு ஏய் அவைகளுக்கு ஏற்ற; மலர்கள் மலர்கள்; கைய ஆய் என் கையிலுள்ளனவாகவும் பெற்று; வழி பட்டு பாகவதர்கள் செய்யும் கைங்கர்ய வழியில்; ஓட நானும் உடன்பட்டு நடக்கும்படியாக; அருளிலே அருளுமாகில்; இங்கே திரிந்தேற்கு இங்கே திரியும் எனக்கு; இழக்கு உற்று என்? என்ன தாழ்வு?
nilam universe; mun during the danger of deluge; uṇdu consumed; umizhndha while spitting it out (subsequently); sem reddish; kŏlaththa having beauty; paval̤am like coral; vāy divine lip; sem reddish; thāmarai like lotus; kaṇ having divine eye; en my; ammān lord; pongu actively; ĕzh rising; pugazhgal̤ his qualities; vāyavāy to be the target of my speech; pulan kol̤ captivating all the senses; vadivu form; en my; manaththadhāy to be in my heart; angu there; ĕy matching; malargal̤ flowers; kaiyavāy to be in hands; vazhi in the path (of service done by bhāgavathas with the three faculties); pattu being aligned; ŏda and act; arul̤il if he blesses; ingĕ in this world; thirindhĕṛku for me who is moving around; en what; izhukkuṝu is the insult?; vazhipattu being engaged properly; ŏda to go on

TVM 8.10.5

3666 வழிபட்டோடஅருள்பெற்று மாயன்கோலமலரடிக்கீழ் *
சுழிபட்டோடும்சுடர்ச்சோதிவெள்ளத்து இன்புற்றிருந்தாலும் *
இழிபட்டோடும் உடலினிற்பிறந்து தன்சீர்யான்கற்று *
மொழிபட்டோடும்கவியமுதம் நுகர்ச்சியுறுமோ? முழுதுமே.
3666 வழிபட்டு ஓட அருள் பெற்று *
மாயன் கோல மலர் அடிக்கீழ் *
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
வெள்ளத்து * இன்புற்று இருந்தாலும் **
இழிபட்டு ஓடும் உடலினில்
பிறந்து * தன் சீர் யான் கற்று *
மொழிபட்டு ஓடும் கவிஅமுதம் *
நுகர்ச்சி உறுமோ முழுதுமே? (5)
3666 vazhipaṭṭu oṭa arul̤ pĕṟṟu *
māyaṉ kola malar aṭikkīzh *
cuzhipaṭṭu oṭum cuṭarccoti
vĕl̤l̤attu * iṉpuṟṟu iruntālum **
izhipaṭṭu oṭum uṭaliṉil
piṟantu * taṉ cīr yāṉ kaṟṟu *
mŏzhipaṭṭu oṭum kaviamutam *
nukarcci uṟumo muzhutume? (5)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

If the wondrous Lord blessed me to render eternal service at His lovely lotus feet in SriVaikuntam, amidst its swirling splendor, would it ever equal the rapturous camaraderie with the devout, singing in their holy company the nectarous songs that sprout from sweet contemplation of the Lord's great qualities, even if I possess the meanest of bodies?

Explanatory Notes

The Āzhvār is gradually working up the unique bliss of service unto the Lord’s apostles and Saints and holding a rapport with them, before which even the bliss of eternal service in the yonder spiritual world, resplendent with the stream of whirling radiance at the lotus feet of the Lord of transcendent glory, pales into insignificance. In the earlier songs, possession + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வழிபட்டு நித்ய கைங்கரியம் செய்ய; ஓட அருள் பெற்று அவன் அருள் பெற்று; மாயன் மாயனின்; கோல மலர் அழகிய தாமரை போன்ற; அடிக்கீழ் திருவடிகளின் கீழே; சுழிபட்டு ஓடும் சுழித்து ஓடும்; சுடர்ச் சோதி சுடர் ஒளி; வெள்ளத்து வெள்ளம் போன்ற பரமபதத்தில்; இன்புற்று ஆனந்தமாக; இருந்தாலும் இருந்தாலும்; முழுதுமே அவை அனைத்தும்; இழிபட்டு ஓடும் தாழ்ச்சியின் எல்லையில்; உடலினில் நிற்பதான சரீரத்திலே; பிறந்து பிறந்து; தன் சீர் அவன் குணங்களை; யான் கற்று நான் கற்று; மொழிபட்டு அதனால் ஏற்படும்; ஓடும் ஆனந்தத்தால்; கவி அமுதம் பெருகும் கவியாகிற அமுதத்தை; நுகர்ச்சி பாகவதர்களோடு கூடியநுபவிப்பதற்கு; உறுமோ? ஒப்பாகுமோ?
arul̤ his mercy; peṝu attained; māyan sarvĕṣvara who has amaśing nature, form, qualities and wealth, his; kŏlam malar ultimately enjoyable; adik kīzh under the divine feet; suzhipattu whirling; ŏdum continuously running; sudar having radiance; sŏdhi vel̤l̤aththu in paramapadham which is in the form of clusters of splendour; inbuṝu being very blissful; irundhālum even if ī remained; muzhudhum even if ī acquired previously explained aiṣwaryam, kaivalyam etc; izhipattu in inferiority; ŏdum very lowly; udalinil in body; piṛandhu taking birth; than (most enjoyable) his; sīr qualities; yān ī (who am very distant for them); kaṝu learn; mozhipattu as words (caused by the joy of such experience); ŏdum flowing; kavi poem; amudham amrutham (nectar); nugarchchi to enjoy (along with the devotees); uṛumŏ will it match?; than for him; kĕzh match

TVM 8.10.6

3667 நுகர்ச்சியுறுமோ? மூவுலகின் வீடுபேறுதன்கேழில் *
புகர்ச்செம்முகத்தகளிறட்ட பொன்னாழிக்கை யென்னம்மான் *
நிகர்ச்செம்பங்கியெரிவிழிகள் நீண்டஅசுரருயிரெல்லாம் *
தகர்த்துண்டுழலும்புட்பாகன் பெரியதனிமாப்புகழே.
3667 நுகர்ச்சி உறுமோ மூவுலகின் *
வீடு பேறு தன் கேழ் இல் *
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட *
பொன் ஆழிக்கை என் அம்மான் **
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள் *
நீண்ட அசுரர் உயிர் எல்லாம் *
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் *
பெரிய தனி மாப் புகழே? (6)
3667 nukarcci uṟumo mūvulakiṉ *
vīṭu peṟu taṉ kezh il *
pukarc cĕm mukatta kal̤iṟu aṭṭa *
pŏṉ āzhikkai ĕṉ ammāṉ **
nikarc cĕm paṅki ĕri vizhikal̤ *
nīṇṭa acurar uyir ĕllām *
takarttu uṇṭu uzhalum pul̤ pākaṉ *
pĕriya taṉi māp pukazhe? (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The incomparable might, vast cosmic riches, and sovereignty of my Lord, adorned with a beautiful ring and riding Garuḍa, the swift and vibrant bird, who defeated the mighty, enraged elephant and vanquished the fierce red-haired Asuras with fiery eyes, cannot be compared to the supreme joy of contemplating His unmatched attributes.

Explanatory Notes

This song is but a follow-up of the immediately preceding song, amplifying the idea conveyed therein. The bliss of contemplation of the Lord’s peerless glory, finding expression through such scintillating hymns, is indeed an experience so great that, before it, even the Lord’s own happiness resulting from His Sovereignty and might, cosmic wealth etc., pales into insignificance.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் கேழ் இல் தனக்கு ஒப்பில்லாத; புகர் ஒளியுள்ள; செம் முகத்த சீற்றத்தால் சிவந்த; களிறு அட்ட குவலயாபீட யானையைக் கொன்ற; பொன் ஆழி மோதிரம் அணிந்த; கை கையை உடைய; என் அம்மான் எம்பெருமான்; நிகர்ச் செம் பங்கி செம் பட்டை தலைமுடியும்; எரி விழிகள் நெருப்புப் போன்ற விழியும் உடைய; நீண்ட அசுரர் பருத்த அசுரர்களின்; உயிர் எல்லாம் உயிர் எல்லாம்; தகர்த்து மாய்த்து; உண்டு உழலும் உண்டு உழலும்; புள் கருடனை; பாகன் பாகனாக உடைய; பெரிய தனி மா பெரிய ஒப்பற்ற; புகழே கல்யாண குணங்களை அடியார்கள்; நுகர்ச்சி உகக்கும்படி பாடிக் கலந்து பெரும்; உறுமோ? அநுபவத்திற்கு ஈடாகுமோ?; மூவுலகின் மூன்று உலகங்களுக்கும் ஈடான; வீடு பேறு செல்வத்தால் வரும் இன்பம்
il not having; pugar having radiance; sem become red (due to anger); mugaththa having face; ānai elephant; atta destroyed; pon attractive; āzhi having divine ring; kai one who is having divine hands; en my; ammān being the lord; nigar matching its species; sem reddish; pangi (hanging) hairs; eri like fire disc; vizhigal̤ having eyes; nīṇda having well built bodies; asurar asuras- (demons-); uyir ellām all their vital airs; thagarththu attacked; uṇdu consumed; uzhalum roaming; pul̤ for periya thiruvadi (garudāzhvār); pāgan controller, his; periya unlimited; thani distinguished; greatly enjoyable; pugazh collections of auspicious qualities; nugarchchi enjoying through thiruvāimozhi which is pleasing to bhāgavathas; mū ulagin of the three worlds; vīdu ability to create; pĕṛu lordship which has; uṛumŏ is it a match?; thani distinguished; great

TVM 8.10.7

3668 தனிமாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாத்தான் தோன்றி *
முனிமாப்பிரமமுதல்வித்தாய் உலகம்மூன்றும்முளைப்பித்த *
தனிமாத்தெய்வத்தளிரடிக்கீழ்ப் புகுதலன்றிஅவனடியார் *
நனிமாக்கலவியின்பமே நாளும்வாய்க்கநங்கட்கே.
3668 தனி மாப் புகழே எஞ்ஞான்றும் *
நிற்கும் படியாத் தான் தோன்றி *
முனி மாப் பிரம முதல் வித்தாய் *
உலகம் மூன்றும் முளைப்பித்த **
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப் *
புகுதல் அன்றி அவன் அடியார் *
நனி மாக் கலவி இன்பமே *
நாளும் வாய்க்க நங்கட்கே (7)
3668 taṉi māp pukazhe ĕññāṉṟum *
niṟkum paṭiyāt tāṉ toṉṟi *
muṉi māp pirama mutal vittāy *
ulakam mūṉṟum mul̤aippitta **
taṉi māt tĕyvat tal̤ir aṭikkīzhp *
pukutal aṉṟi avaṉ aṭiyār *
naṉi māk kalavi iṉpame *
nāl̤um vāykka naṅkaṭke (7)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

May we forever revel in the supreme bliss of communion with the devout, setting aside even the rapport with the Lord Supreme, whose glory is peerless, the first cause of all, who by mere resolve ushered forth all the worlds of incomparable fame, enduring the test of time, true to Vedic dictum!

Explanatory Notes

(i) Here is a case of the Āzhvār wanting to reach the farthest limit of God-enjoyment, culminating in rapturous rapport with His devotees (these virtually taking the place of God) and abiding in it, for all time.

(ii) The Lord’s peerless glory referred to here, is His extraordinary grace in thinking of resuscitation of the Universe, lying dormant in a subtle state, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனி மாப் புகழே ஒப்பில்லாத சிறந்த புகழே; எஞ்ஞான்றும் எக்காலத்திலும்; நிற்கும் படியா நிலைபெற்று நிற்கும்படியாக; தான் தானே; தோன்றி படைப்புக் கடவுளாகத் தோன்றி; முனி மா பிரம ஸ்ருஷ்டி செய்ய ஸங்கல்பிக்கும்; முதல் வித்தாய் முதல் உபாதான காரணமாய்; உலகம் மூன்றும் மூன்று உலகங்களையும்; முளைப்பித்த உண்டாக்கின; தனி மாத் தெய்வ அந்த ஒப்பற்ற தெய்வத்தின்; தளிர் தளிர் போன்ற; அடிக்கீழ் திருவடிகளின் கீழ்; புகுதல் அன்றி புகுதலைத் தவிர்த்து; அவன் அடியார் அவன் அடியார்களின்; நனி மாக் கலவி மிகச் சிறந்த சேர்க்கையான; இன்பமே இன்பமே; நங்கட்கே நமக்கு; நாளும் வாய்க்க எப்போதும் வாய்க்க வேண்டும்
pugazhĕ his qualities which highlight his kāraṇathva (being the cause); engyānṛum always; niṛkumpadiyā to firmly remain (as highlighted popularly in vĕdhāntham); thān himself; thŏnṛi incarnating with the intent to engage in creation (as said in -prārthurāsīththamŏnutha:-); muni to meditate upon creation (as said in the vow -bahusyām-); māp piramam being explained by the term -para brahmam-; mudhal primary; viththāy material cause; ulaga mūnṛum the three worlds; mul̤aippiththa created; thani māth theyvam the distinguished supreme lord-s; thal̤ir very tender; adik kīzh under the divine feet; pugudhal anṛi instead of attaining; avan adiyār for the bhāgavathas who were enslaved by his such qualities; nani very; best; kalavi inbamĕ the joy of being united with them; nangatku for us; nāl̤um always; vāykka should occur.; nal̤ir naturally cool; nīr having water

TVM 8.10.8

3669 நாளும்வாய்க்கநங்கட்கு நளிர்நீர்க்கடலைப்படைத்து * தன்
தாளும்தோளும்முடிகளும் சமனிலாதபலபரப்பி *
நீளும்படர்பூங்கற்பகக்காவும் நிறைபன்னாயிற்றின் *
கோளுமுடையமணிமலைபோல் கிடந்தான்தமர்கள் கூட்டமே.
3669 நாளும் வாய்க்க நங்கட்கு *
நளிர் நீர்க் கடலைப் படைத்து * தன்
தாளும் தோளும் முடிகளும் *
சமன் இலாத பல பரப்பி **
நீளும் படர் பூங் கற்பகக்
காவும் * நிறை பல் நாயிற்றின் *
கோளும் உடைய மணி மலைபோல் *
கிடந்தான் தமர்கள் கூட்டமே. (8)
3669 nāl̤um vāykka naṅkaṭku *
nal̤ir nīrk kaṭalaip paṭaittu * taṉ
tāl̤um tol̤um muṭikal̤um *
camaṉ ilāta pala parappi **
nīl̤um paṭar pūṅ kaṟpakak
kāvum * niṟai pal nāyiṟṟiṉ *
kol̤um uṭaiya maṇi malaipol *
kiṭantāṉ tamarkal̤ kūṭṭame. (8)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

May we forever gaze upon the majestic gathering of the noble disciples of the Lord, who reclined upon the cool, vast oceanic waters He himself formed, with His extended feet, numerous shoulders, and crowns unmatched, resembling an emerald mountain adorned with blooming orchids and splendid gardens glowing with the brilliance of countless suns.

Explanatory Notes

Nothing more is needed, the Āzhvār now says, than even the mere sight of the grand congregation of the Lord’s self-less devotees, steeped in the enjoyment of His enchanting Form, as described herein. Creating, first of all, the vast expanse of water, the Lord lay on it with perfect ease, stretching out His numerous feet, shoulders and crowns, like unto an emerald mount abounding in lovely orchards in repose.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நளிர் நீர்க் கடலை குளிர்ந்த நீரையுடைய கடலை; படைத்து படைத்து; சமன் இலாத ஒப்பில்லாமல் இருப்பதான; தன் தாளும் தன்னுடைய திருவடிகளையும்; தோளும் தோள்களையும்; முடிகளும் திருமுடிகளையும்; பல பரப்பி விளங்கச் செய்து; நீளும் படர் பூ நீண்டு படர்ந்த புஷ்பங்களையும்; கற்பகக்காவும் கற்பகச் சோலையையும்; நாயிற்றின் கோளும் சூரிய ஒளி; நிறை பல் நிறைந்த பல; உடைய மணி மாணிக்கங்களை உடைய; மலைபோல் மலை போல்; கிடந்தான் கண்வளர்ந்து அருளும் பெருமானின்; தமர்கள் அடியார்களின்; கூட்டமே குழுமங்களோடு உண்டான சேர்த்தி; நங்கட்கு எமக்கு; நாளும் வாய்க்க எப்போதும் உண்டாக வேண்டும்
kadalai causal ocean; padaiththu created (as said in -apa ĕva sasarjāthau-); than (that itself) being distinguished as revealed in vĕdham; saman match; ilādha without having; thāl̤um divine feet; thŏl̤um divine shoulders; mudigal̤um divine crowns/heads; pala as many (to be in count of thousands); parappi spreading out; nīl̤um rising; padar grown; beautiful; kaṛpagak kāvum garden of kaṛpaka (kalpa- celestial) trees; niṛai dense; pal many (rays); nāyiṝin kŏl̤um the radiance of the sun; udaiya having; maṇi malai pŏl like a carbuncle hill; kidandhān one who is resting, his; thamargal̤ of the servitors; kūttam union; nangatku for us; nāl̤um forever; vāykka should occur.; thamargal̤ devotees; kūttam occurring for the group

TVM 8.10.9

3670 தமர்கள்கூட்டவல்வினையை நாசஞ்செய்யும் சதிர்மூர்த்தி *
அமர்கொளாழி சங்குவாள் வில்தண்டாதிபல்படையன் *
குமரன்கோலவைங்கணைவேள்தாதை கோதிலடியார்தம் *
தமர்கள் தமர்கள்தமர்களாம் சதிரேவாய்க்கதமியேற்கே.
3670 தமர்கள் கூட்ட வல்வினையை *
நாசம் செய்யும் சது மூர்த்தி *
அமர் கொள் ஆழி சங்கு வாள் *
வில் தண்டு ஆதி பல் படையன் **
குமரன் கோல ஐங்கணை வேள்
தாதை * கோது இல் அடியார் தம் *
தமர்கள் தமர்கள் தமர்களாம் *
சதிரே வாய்க்க தமியேற்கே (9)
3670 tamarkal̤ kūṭṭa valviṉaiyai *
nācam cĕyyum catu mūrtti *
amar kŏl̤ āzhi caṅku vāl̤ *
vil taṇṭu āti pal paṭaiyaṉ **
kumaraṉ kola aiṅkaṇai vel̤
tātai * kotu il aṭiyār tam *
tamarkal̤ tamarkal̤ tamarkal̤ām *
catire vāykka tamiyeṟke (9)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

May this humble servant, amidst the worldlings, be blessed with the bliss of serving the devotees who stand last in the grand chain of the Lord's flawless devotees. He who bestowed perennial youth and exquisite charm upon Manmata, and wields militant weapons such as the conch, discus, sword, and bow, with His unparalleled might, vanquishing the formidable foes of His sacred retinue.

Explanatory Notes

(i) The Lord destroys en masse the entire band of those tough enemies of His devotees. It could also mean destruction of the obstacles confronting the band of devotees as a group or the destruction of the cluster of evils, as and when they crop up.

(ii) Even the proverbial youth and handsomeness of Manmata, the deity reputed to be a paragon of beauty, are imparted + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தமர்கள் கூட்ட அடியார்களின் கூட்டங்களுக்கு; வல்வினையை வரும் வலிய விரோதிகளை; நாசம் செய்யும் நாசம் செய்யும்; சது மூர்த்தி சாமர்த்யமுடைய பெருமானாய்; அமர் கொள் போர் செய்யத் தகுந்த; ஆழி சங்கு வாள் சக்கரம் சங்கு வாள்; வில் தண்டு வில் கதை ஆகிய; ஆதி பல் பலவித ஆயுதங்களை; படையன் உடைய பெருமானானவனும்; குமரன் இளம் பிராயனானவனும்; கோல ஐங்கணை வேள் மன்மதனனுக்கு; தாதை தந்தையும்; கோதில் குற்றமற்ற; அடியார் தம் அடியார்களுக்கு; தமர்கள் அடியார்கள் ஆனவர்க்கு; தமர்கள் அடியார்களைப் பற்ற; தமர்களாம் அடியார்கள் சம்பந்தத்தை உடைய; சதிரே தமியேற்கே அடிமையே அடியேனுக்கு; வாய்க்க வாய்க்க வேண்டும்
val strong; vainaiyai sins; nāsam (total) destruction; seyyum to do; sadhir having ability; mūrththi being the lord; amar engaging in battle to eliminate the enemies; kol̤ having; āzhi sangu vāl̤ vil thaṇdu ādhi starting with ṣrī panchāyudham (disc, conch, sword, bow and mace); palpadaiyan being the one with many types of innumerable weapons; kumaran being youthful (which highlights his ability to eliminate the enemies); kŏlam having great physical beauty; aingaṇai one who has five arrows; vĕl̤ for kāmadhĕva (cupid); thādhai having the greatness of being the father; kŏdhu blemish (of seeking benefits other than kainkaryam); il not having; adiyār tham for the devotees; thamargal̤ for servitors; thamargal̤ for servitors; thamargal̤ām having the wealth of servitude; sadhir mercy; thamiyĕṛku for us who are helpless in samsāra; vāykka should occur.; having greatness of being attractive; kāyām pū the complexion of kāyām (a dark purple coloured) flower

TVM 8.10.10

3671 வாய்க்கதமியேற்கு ஊழிதோறூழியூழி * மாகாயாம்
பூக்கொள்மேனிநான்குதோள் பொன்னாழிக்கை யென்னம்மான் *
நீக்கமில்லாவடியார்தம் அடியாரடியாரடியாரெங்
கோக்கள் * அவர்க்கேகுடிகளாய்ச்செல்லும் நல்ல கோட்பாடே.
3671 வாய்க்க தமியேற்கு * ஊழிதோறு
ஊழி ஊழி * மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் *
பொன் ஆழிக் கை என் அம்மான் **
நீக்கம் இல்லா அடியார் தம் *
அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் * அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் * நல்ல கோட்பாடே (10)
3671 vāykka tamiyeṟku * ūzhitoṟu
ūzhi ūzhi * mā kāyām
pūk kŏl̤ meṉi nāṉku tol̤ *
pŏṉ āzhik kai ĕṉ ammāṉ **
nīkkam illā aṭiyār tam *
aṭiyār aṭiyār aṭiyār ĕm
kokkal̤ * avarkke kuṭikal̤āyc
cĕllum * nalla koṭpāṭe (10)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Simple Translation

The devotees who stand at the end of the chain, inseparable from the Lord with the lovely hue of a blue lily, bearing four shoulders and wielding the radiant discus, are indeed my true Masters. May the keen desire to serve them completely and eternally be bestowed upon me and passed down to my entire lineage.

Explanatory Notes

The Āzhvār is very keen that such an ardent desire to serve the one that stands last in the long chain of the Lord’s ardent devotees, should not stop with him alone but trickle down to those connected with him, generation after generation. The inseparable devotees, referred to, are those like Lakṣmaṇa, who longed to serve Lord Rāma, day and night, without respite, in all possible ways. (See also notes under VIII-10-9).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா காயாம் பூ அழகிய காயாம்பூ போன்ற; கொள் மேனி நிறமுடையவனும்; நான்கு தோள் நான்கு தோள்களை உடையவனும்; பொன் ஆழி தங்க மோதிரம் அணிந்த; கை கையை உடையவனுமான; என் அம்மான் எம்பெருமான்; நீக்கம் இல்லா ஓய்வில்லாமல் அடிமை செய்யும் பேறு; அடியார் தம் பெற்ற அடியார்களுக்கு; அடியார் அடியார்கள் ஆவார்கள் அவர்கள்; அடியார் அடியார்களாக தொடக்கமா வரும் அடியார்கள்; அடியார் அப்படிப்பட்ட யாவரும்; எம் கோக்கள் எமக்கு ஸ்வாமிகளான; அவர்க்கே அவர்களுக்கே; குடிகளாய் கைங்கர்யம் செய்ய; செல்லும் விரும்பும்; நல்ல கோட்பாடே திடமான கொள்கையுடைய; தமியேற்கு எனக்கு; ஊழிதோறு எக்காலத்திலும்; ஊழி ஊழி அடியார்களின் அடியார்களுக்கு செய்யும்; வாய்க்க கைங்கர்யமே வாய்க்க வேண்டும்
kol̤ having; mĕni divine form; nāngu thŏl̤ the four divine shoulders (which are the resting place for the devotees); pon attractive; āzhi and thiruvāzhi (divine chakra); kai having divine hand; en one who enslaved me showing this physical beauty; ammān lord; nīkkam separation; illā enjoying without; adiyār tham for the servitors; adiyār adiyār adiyār in the distinguished lineage of servitors; em for my associates and ī; kŏkkal̤ lords;; avarkkĕ for them only; kudigal̤āy being the clan which engage in service; sellum to be; nalla praiseworthy; kŏtpādu act of pursuing; ūzhi thŏṛūzhi occuring in every mahā kalpa (brahmā-s one day which is made of thousand four yuga cycles); ūzhi even in the intermediary kalpas; thamiyĕṛku for me (who has no match for being devoted towards devotees); vāykka should occur.; nalla distinguished; kŏtpādu having space

TVM 8.10.11

3672 நல்லகோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும்தான் நிறைந்த *
அல்லிக்கமலக்கண்ணனை அந்தண்குருகூர்ச்சடகோபன் *
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள் *
நல்லபதத்தால்மனைவாழ்வர் கொண்டபெண்டிர் மக்களே. (2)
3672 ## நல்ல கோட்பாட்டு உலகங்கள் *
மூன்றினுள்ளும் தான் நிறைந்த *
அல்லிக் கமலக் கண்ணனை *
அம் தண் குருகூர்ச் சடகோபன் **
சொல்லப்பட்ட ஆயிரத்துள் *
இவையும் பத்தும் வல்லார்கள் *
நல்ல பதத்தால் மனை வாழ்வர் *
கொண்ட பெண்டீர் மக்களே 11
3672 ## nalla koṭpāṭṭu ulakaṅkal̤ *
mūṉṟiṉul̤l̤um tāṉ niṟainta *
allik kamalak kaṇṇaṉai *
am taṇ kurukūrc caṭakopaṉ **
cŏllappaṭṭa āyirattul̤ *
ivaiyum pattum vallārkal̤ *
nalla patattāl maṉai vāzhvar *
kŏṇṭa pĕṇṭīr makkal̤e 11

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Those who are familiar with these ten songs, selected from the thousand composed by Kurukūr Caṭakōpaṉ, praising the Lord with his beautiful and expansive lotus-like eyes, who spreads wholesome teachings throughout the three worlds, will thrive as householders with great enthusiasm, serving the Lord's devotees faithfully.

Explanatory Notes

(i) The Āzhvār invests all the three worlds with his remarkable fervour to serve the Lord’s devotees, which has become,as it were, a creed with him. This is the wholesome creed with which he invests all the worlds also. As Śrī Nampiḷḷai puts it, the worlds settled down to orderly thinking, good conduct and behaviour, only after the Āzhvār sang this decad (Tiruvāymoḻi). + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்ல கோட்பாட்டு நல்ல கொள்கைகளை உடைய; உலகங்கள் உலகங்கள்; மூன்றினுள்ளும் மூன்றினுள்ளும்; தான் நிறைந்த தான் வியாபித்த; அல்லிக் கமல தாமரைப் பூப்போன்ற; கண்ணனை கண்களை உடைய கண்ணனைக் குறித்து; அம் தண் அழகிய குளிர்ந்த; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல்லப்பட்ட அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்கள் ஓத வல்லார்கள்; நல்ல பதத்தால் அடியார்க்கு ஆட்பட்டு; கொண்ட பெண்டிர் தம் குடும்பத்தோடு; மக்களே அடிமை செய்து; மனை வாழ்வர் இல்லறத்தில் நன்றாக வாழ்வார்கள்
ulagangal̤ mūnṛin ul̤l̤um in the three worlds; thān he; niṛaindha pervading; alli blossomed; kamalam lotus flower like; kaṇṇanai on krishṇa; am attractive; thaṇ invigorating; kurugūr controller of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; solla by the merciful words; patta created; āyiraththul̤ among the thousand pāsurams; ivaiyum paththum this decad; vallārgal̤ those who can practice; koṇda accepted; peṇdir makkal̤ĕ being with wife, children et al; nalla distinguished; padhaththāl in the state of thadhīya ṣĕshathvam (servitude towards devotees); manai in gruhasthāṣramam (married life); vāzhvar will live.; koṇda those who consider us as relative in their heart; peṇdir wife