Chapter 9

Friend explains the true love of Parānkusa nāyaki to her mother and removes the external interference (Thirup Puliyur) - (கரு மாணிக்க)

தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)

This segment of hymns is expressed from the friend’s (fem.) point of view. parānkusa nāyaki (thalaivi, ladylove) has attained a marriageable age. nāyaki’s father made a widespread declaration inviting all eligible for his daughter’s swayamvaram. nāyaki’s friend came to know about this declaration. She was aware of nāyaki’s involvement with Kuttanādu

+ Read more

தோழி சொல்லும் பாசுரங்களாக அமைந்துள்ளது இப்பகுதி. தலைவிக்குத் திருமணம் வயது வந்தது. தந்தையர் சுயம்வரத்திற்காக மணமுரசு அறைவித்தனர். இதனைத் தோழி அறிந்தாள். குட்டநாட்டுத் திருப்புலியூர்ப் பெருமானோடு இவளுக்கு (தலைவிக்கு) ஏற்பட்டிருக்கும் தொடர்பையும் அவள் அறிந்திருந்தாள்; தந்தையரின் முயற்சி

+ Read more
Verses: 3651 to 3661
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: will have the fortune of becoming the slaves of Nedumal
  • TVM 8.9.1
    3651 ## கரு மாணிக்க மலைமேல் * மணித் தடம்
    தாமரைக் காடுகள் போல் *
    திருமார்வு வாய் கண் கை * உந்தி கால் உடை
    ஆடைகள் செய்ய பிரான் **
    திருமால் எம்மான் செழு நீர் வயல் * குட்ட
    நாட்டுத் திருப்புலியூர் *
    அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் * அன்னைமீர்!
    இதற்கு என் செய்கேனோ? (1)
  • TVM 8.9.2
    3652 அன்னைமீர் இதற்கு என் * செய்கேன்? அணி
    மேருவின் * மீது உலவும்
    துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் *
    பல் சுடர்களும் போல் **
    மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் * தான்
    உடை எம்பெருமான் *
    புன்னை அம் பொழில் சூழ் * திருப்புலியூர்
    புகழும் இவளே (2)
  • TVM 8.9.3
    3653 புகழும் இவள் நின்று இராப்பகல் * பொரு நீர்க்
    கடல் தீப் பட்டு * எங்கும்
    திகழும் எரியொடு செல்வது ஒப்பச் *
    செழும் கதிர் ஆழி முதல் **
    புகழும் பொரு படை ஏந்தி * போர் புக்கு
    அசுரரைப் பொன்றுவித்தான் *
    திகழும் மணி நெடு மாடம் நீடு *
    திருப்புலியூர் வளமே (3)
  • TVM 8.9.4
    3654 ஊர் வளம் கிளர் சோலையும் * கரும்பும்
    பெரும் செந்நெலும் சூழ்ந்து *
    ஏர் வளம் கிளர் தண் பணைக் * குட்ட
    நாட்டுத் திருப்புலியூர் **
    சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் *
    தேவ பிரான் *
    பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள் *
    இன்று இப் புனை இழையே (4)
  • TVM 8.9.5
    3655 புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் *
    புதுக்கணிப்பும் *
    நினையும் நீர்மையது அன்று இவட்கு இது * நின்று
    நினைக்கப்புக்கால் **
    சுனையினுள் தடம் தாமரை மலரும் *
    தண் திருப்புலியூர் *
    முனைவன் மூவுலகு * ஆளி அப்பன்
    திரு அருள் மூழ்கினளே. (5)
  • TVM 8.9.6
    3656 திரு அருள் மூழ்கி வைகலும் * செழு நீர்
    நிறக் கண்ண பிரான் *
    திரு அருள்களும் சேர்ந்தமைக்கு * அடை
    யாளம் திருந்த உள **
    திரு அருள் அருளால் அவன் * சென்று
    சேர் தண் திருப்புலியூர் *
    திரு அருள் கமுகு ஒண் பழத்தது *
    மெல்லியல் செவ்விதழே (6)
  • TVM 8.9.7
    3657 மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க *
    வீங்கு இளம் தாள் கமுகின் *
    மல் இலை மடல் வாழை * ஈன் கனி சூழ்ந்து
    மணம் கமழ்ந்து **
    புல் இலைத் தெங்கினூடு * கால் உலவும்
    தண் திருப்புலியூர் *
    மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் *
    இம் மடவரலே (7)
  • TVM 8.9.8
    3658 மடவரல் அன்னைமீர்கட்கு * என் சொல்லிச் சொல்லுகேன்?
    மல்லைச் செல்வ *
    வடமொழி மறைவாணர் * வேள்வியுள் நெய் அழல்
    வான் புகை போய் **
    திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் *
    தண் திருப்புலியூர் *
    பட அரவு அணையான் தன் நாமம் அல்லால் *
    பரவாள் இவளே (8)
  • TVM 8.9.9
    3659 பரவாள் இவள் நின்று இராப்பகல் * பனி நீர்
    நிறக் கண்ண பிரான் *
    விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி * வேலையின்
    நின்று ஒலிப்ப **
    கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம் *
    தீவிகை நின்று அலரும் *
    புரவு ஆர் கழனிகள் சூழ் * திருப்புலியூர்ப்
    புகழ் அன்றி மற்றே (9)
  • TVM 8.9.10
    3660 அன்றி மற்றோர் உபாயம் என் * இவள் அம்
    தண் துழாய் கமழ்தல் *
    குன்ற மா மணி மாட மாளிகைக் * கோலக்
    குழாங்கள் மல்கி **
    தென் திசைத் திலதம் புரை * குட்ட
    நாட்டுத் திருப்புலியூர் *
    நின்ற மாயப் பிரான் திருவருளாம் *
    இவள் நேர்பட்டதே? (10)
  • TVM 8.9.11
    3661 ## நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் *
    நாயகன் தன் அடிமை *
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் *
    தொண்டன் சடகோபன் சொல் **
    நேர்பட்ட தமிழ் மாலை *
    ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் * அவர் நேர்பட்டார்
    நெடுமாற்கு அடிமை செய்யவே (11)