Chapter 10
Āzhvār talks about his surrender and servitude to His devotees - (நெடுமாற்கு அடிமை)*
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுதல்
This set of divine hymns elaborates on BhagAvatha Seshattavam and emphasizes BhagAvatha Kainkaryam (surrender and service to devotees) as the highest goal one should pursue. Not only should one be devoted to Bhagavān but also to His servants (BhagAvathas). The pinnacle of devotion to God is devotion to His servants. The tenacity of the former will be reflected in the latter.
இத்திருவாய்மொழி பாகவத சேஷத்வத்தைக் கூறுகிறது. பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதையும் உணர்த்துகிறது. பகவானிடம் பக்தி கொள்வதுடன் அவனடியார்களிடமும்(பாகவதர்களிடமும்) பக்தி கொள்ளவேண்டும். பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. பகவத் பக்தியின் உறுதியை பாகவத பக்தியே வெளிப்படுத்தும்.
எட்டாம் + Read more
Verses: 3662 to 3672
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: will live happily with their wives and children on the earth
- TVM 8.10.1
3662 ## நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் *
அவனைக் கருத வஞ்சித்து *
தடுமாற்று அற்ற தீக்கதிகள் * முற்றும்
தவிர்ந்த சதிர் நினைந்தால் **
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே * கூடும் இது அல்லால் *
விடுமாறு என்பது என் அந்தோ! *
வியன் மூவுலகு பெறினுமே? (1) - TVM 8.10.2
3663 வியன் மூவுலகு பெறினும் போய்த் *
தானே தானே ஆனாலும் *
புயல் மேகம்போல் திருமேனி
அம்மான் * புனை பூம் கழல் அடிக்கீழ் **
சயமே அடிமை தலைநின்றார் *
திருத்தாள் வணங்கி * இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது *
உறுமோ பாவியேனுக்கே? (2) - TVM 8.10.3
3664 உறுமோ பாவியேனுக்கு * இவ்
உலகம் மூன்றும் உடன் நிறைய *
சிறு மா மேனி நிமிர்த்த * என்
செந்தாமரைக்கண் திருக்குறளன் **
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப் *
புகுதல் அன்றி அவன் அடியார் *
சிறு மா மனிசராய் என்னை
ஆண்டார் * இங்கே திரியவே? (3) - TVM 8.10.4
3665 இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் *
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த *
செங்கோலத்த பவளவாய்ச் *
செந்தாமரைக்கண் என் அம்மான் **
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய்ப் *
புலன்கொள் வடிவு என் மனத்தாய் *
அங்கேய் மலர்கள் கையவாய் *
வழிபட்டு ஓட அருளிலே? (4) - TVM 8.10.5
3666 வழிபட்டு ஓட அருள் பெற்று *
மாயன் கோல மலர் அடிக்கீழ் *
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
வெள்ளத்து * இன்புற்று இருந்தாலும் **
இழிபட்டு ஓடும் உடலினில்
பிறந்து * தன் சீர் யான் கற்று *
மொழிபட்டு ஓடும் கவிஅமுதம் *
நுகர்ச்சி உறுமோ முழுதுமே? (5) - TVM 8.10.6
3667 நுகர்ச்சி உறுமோ மூவுலகின் *
வீடு பேறு தன் கேழ் இல் *
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட *
பொன் ஆழிக்கை என் அம்மான் **
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள் *
நீண்ட அசுரர் உயிர் எல்லாம் *
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் *
பெரிய தனி மாப் புகழே? (6) - TVM 8.10.7
3668 தனி மாப் புகழே எஞ்ஞான்றும் *
நிற்கும் படியாத் தான் தோன்றி *
முனி மாப் பிரம முதல் வித்தாய் *
உலகம் மூன்றும் முளைப்பித்த **
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப் *
புகுதல் அன்றி அவன் அடியார் *
நனி மாக் கலவி இன்பமே *
நாளும் வாய்க்க நங்கட்கே (7) - TVM 8.10.8
3669 நாளும் வாய்க்க நங்கட்கு *
நளிர் நீர்க் கடலைப் படைத்து * தன்
தாளும் தோளும் முடிகளும் *
சமன் இலாத பல பரப்பி **
நீளும் படர் பூங் கற்பகக்
காவும் * நிறை பல் நாயிற்றின் *
கோளும் உடைய மணி மலைபோல் *
கிடந்தான் தமர்கள் கூட்டமே. (8) - TVM 8.10.9
3670 தமர்கள் கூட்ட வல்வினையை *
நாசம் செய்யும் சது மூர்த்தி *
அமர் கொள் ஆழி சங்கு வாள் *
வில் தண்டு ஆதி பல் படையன் **
குமரன் கோல ஐங்கணை வேள்
தாதை * கோது இல் அடியார் தம் *
தமர்கள் தமர்கள் தமர்களாம் *
சதிரே வாய்க்க தமியேற்கே (9) - TVM 8.10.10
3671 வாய்க்க தமியேற்கு * ஊழிதோறு
ஊழி ஊழி * மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் *
பொன் ஆழிக் கை என் அம்மான் **
நீக்கம் இல்லா அடியார் தம் *
அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் * அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் * நல்ல கோட்பாடே (10) - TVM 8.10.11
3672 ## நல்ல கோட்பாட்டு உலகங்கள் *
மூன்றினுள்ளும் தான் நிறைந்த *
அல்லிக் கமலக் கண்ணனை *
அம் தண் குருகூர்ச் சடகோபன் **
சொல்லப்பட்ட ஆயிரத்துள் *
இவையும் பத்தும் வல்லார்கள் *
நல்ல பதத்தால் மனை வாழ்வர் *
கொண்ட பெண்டீர் மக்களே 11