70

Thirukkadithānam

திருக்கடித்தானம்

Thirukkadithānam

ஸ்ரீ கற்பகவல்லீ ஸமேத ஸ்ரீ அற்புதநாராயணாய நமஹ

Thayar: Sri Karpaga Valli
Moolavar: Sri Amruta Nārāyanan, Adbuta Nārāyanan
Utsavar: Adbuta Nārāyanan
Vimaanam: PunyakOdi
Pushkarani: Bhoomi
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thirukadithanam
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.6.1

3618 எல்லியும்காலையும் தன்னைநினைந்தெழ *
நல்லவருள்கள் நமக்கேதந்தருள்செய்வான் *
அல்லியந்தண்ணந்துழாய்முடி அப்பனூர் *
செல்வர்கள்வாழும் திருக்கடித்தானமே. (2)
3618 ## எல்லியும் காலையும் * தன்னை நினைந்து எழ *
நல்ல அருள்கள் * நமக்கே தந்து அருள் செய்வான் **
அல்லி அம் தண் அம் துழாய் * முடி அப்பன் ஊர் *
செல்வர்கள் வாழும் * திருக்கடித்தானமே (1)
3618. ##
elliyum kālaiyum * thannai ninaindheza *
nalla aruLkaL * namakkEthanNthu aruLcheyvān *
alliyanN thaNNanNthuzāy * mudi_appanoor *
chelvargaL vāzum * thirukkadith thānamE. (2) 8.6.1

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Tirukkaṭittāṉam, where the devoted reside, is the place where my Lord, adorned with a cool and lovely tulasi garland on His crown, stays. He showers us with His extraordinary grace, guiding us to meditate on Him always, both day and night.

Explanatory Notes

(i) The Āzhvār is indeed overwhelmed by the Lord’s spontaneous grace. Well, he doesn’t take it on a quid-pro-quo basis, that is, he does not look at this influx of the Lord’s extra-ordinary grace, making him meditate on Him day and night, as compensation for the grief he experienced in the last decad, but as one shed on him for the Lord’s own pleasure and exultation, at + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எல்லியும் காலையும் இரவும் பகலும்; தன்னை நினைந்து எழ தன்னையே நினைத்து வாழ; நல்ல அருள்கள் நல்ல அருள்கள்; நமக்கே தந்து நமக்கே தந்து; அருள் செய்வான் நம்மை உய்விக்கும் பெருமான்; அல்லி அம் தண் மலர்களோடு கூடின அழகிய குளிர்ந்த; துழாய் முடி துளசி மாலை அணிந்த முடியை உடைய; அப்பன் ஊர் நம் ஸ்வாமி இருக்கும் ஊர்; செல்வர்கள் கைங்கர்யச் செல்வம் பெற்றுள்ள; வாழும் அடியார்கள் வாழும்; திருக்கடித்தானமே திருக்கடித்தானமே
ninaindhu remembering; ezha to be uplifted; nalla distinguished; aruLgaL unconditional mercies (for arrival in close proximity, entering in the heart, eliminating hurdles, giving experience etc); namakkE exclusively for us; thandhu granting; aruL mercy; seyvAn bestow; alli having flowers; am attractive; thaNNam cool; thuzhAy being decorated with thiruththuzhAy (thuLasi) garland; mudi having divine crown; appan lord, the benefactor-s; Ur (distinguished) abode; selvargaL bhAgavathas (who have the wealth of kainkaryam to bhagavAn); vAzhum (due to continuous experience, joyfully) living; thirukkadiththAnam thirukkadiththAnam.; seru in war; kaduththu with great pride

TVM 8.6.2

3619 திருக்கடித்தானமும் என்னுடைச்சிந்தையும் *
ஒருக்கடுத்து உள்ளேஉறையும்பிரான்கண்டீர் *
செருக்கடுத்து அன்றுதிகைத்தவரக்கரை *
உருக்கெட வாளிபொழிந்தஒருவனே.
3619 திருக்கடித்தானமும் * என்னுடையச் சிந்தையும் *
ஒருக்கடுத்து உள்ளே * உறையும் பிரான் கண்டீர் **
செருக் கடுத்து அன்று * திகைத்த அரக்கரை *
உருக் கெட வாளி * பொழிந்த ஒருவனே (2)
3619
thirukkadith thānamum * ennutaich chindhaiyum *
orukkaduththu_uLLE * uRaiyumpirān gandeer *
cherukkaduththu_anRu * thigaiththa arakkarai *
urukketavāLi * pozindha oruvanE. 8.6.2

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

The Lord, who lovingly resides in both Tirukkaṭittāṉam and my heart, is the great Warrior who rained arrows on the prideful Asuras, who had grown violent and war-mad, and destroyed them in bulk.

Explanatory Notes

The Āzhvār acknowledges the Lord’s great gesture in quelling the Asuras, symbolic of the clearing up of all the evil forces in him, the impediments that stood in the way of the Lord reclaiming him and thereafter, stepping on to Tirukkaṭittāṉam, the spring-board, whence He was to land right in the Āzhvār’s heart, His ultimate destination. The Lord’s attachment to the Jñāni’s + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன் ஒரு சமயம்; செருக் கடுத்து யுத்தத்திலே கர்வம் மிஞ்சி; திகைத்த அரக்கரை திகைத்து வந்த அரக்கர்களை; உருக்கெட உருவம் கெடும்படியாக; வாளி பொழிந்த அம்புகளைப் பொழிந்த; ஒருவனே கண்டீர் மஹா வீரனன்றோ நம் ராமபிரான்; திருக்கடித்தானமும் திருக்கடித்தானத்தையும்; என்னுடைச் சிந்தையும் என்னுடைச் சிந்தையையும்; ஒருக்கடுத்து ஒருசேரப் பிடித்து; உள்ளே உறையும் இரண்டினுள்ளும் உறைபவன்; பிரான் நம் பெருமானாவான்
anRu that day (when they committed offense to cause anger in SrI rAma like fire rising out of ash); thigaiththa bewildered (thinking who will win); arakkar rAkshasas (demons); uru bodies; keda to become broken and destroyed; vALi rain of arrows; pozhindha poured; oruvan kaNdIr he is the lone warrior; thirukkadiththAnamum in thiurukkadiththAnam thiruppathi (dhivyadhESam (divine abode)); ennudai sindhaiyum my heart; orukkaduththu holding together; uLLE in both of them; uRaiyum living; pirAn great benefactor; oruvar (first) as one; iruvar (subsequently) as two

TVM 8.6.3

3620 ஒருவரிருவர் ஓர்மூவரெனநின்று *
உருவுகரந்து உள்ளுந்தோறும்தித்திப்பான் *
திருவமர்மார்வன் திருக்கடித்தானத்தை *
மருவியுரைகின்ற மாயப்பிரானே.
3620 ஒருவர் இருவர் ஓர் * மூவர் என நின்று *
உருவு கரந்து ** உள்ளும்தோறும் தித்திப்பான் **
திரு அமர் மார்வன் * திருக்கடித்தானத்தை *
மருவி உறைகின்ற * மாயப் பிரானே (3)
3620
oruvar iruvar Or * moovarena nNinRu *
uruvukarandhu * uLLundhORum thiththippān *
thiruvamar mārvan * thirukkadiththānaththai *
maruviyuRaikinRa * māyappirānE. 8.6.3

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

The great Warrior, who rained arrows on the Asuras, appeared first as one, then as two, and later as three, at times becoming hardly visible. This wondrous Benefactor, who bears Tiru (Lakṣmī) on His chest, lovingly resides in Tirukkaṭittāṉam and is indeed very sweet to contemplate.

Explanatory Notes

(i) This song does not stand by itself, being but a follow-up of the preceding song. The warrior, referred to, is Śrī Rāma. When Rāvaṇa unleashed his special Reserve forces (Mūlabala [Mūlabalam]), after the valiant Rākṣasas had vanished, one by one, into the jaws of death, the manner in which this extra-ordinary situation, which struck unspeakable terror in the minds of + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருவர் முதலில் ஒருவனாயும்; இருவர் பின்பு இருவராயும்; ஓர் மூவர் பின்னையும் மூவராய்; என நின்று தோன்றி நின்று; உருவு உருவம் கண்ணுக்குத் தெரியாதபடி; கரந்து நின்று யுத்தம் செய்தான்; திரு அமர் மார்வன் திருமகளை மார்பிலுடையவன்; திருக்கடித்தானத்தை திருக்கடித்தானத்தில்; மருவி உறைகின்ற பொருந்தி உறைகின்ற; மாயப் பிரானே சீலனான எம்பெருமான்; உள்ளும்தோறும் நினைக்க நினைக்க; தித்திப்பான் இனியவனாக இருப்பான்
mUvar ena (further) to be said as three; ninRu standing; Or distinguished; uruvu form; karandhu being beyond sense perception (to not take aim at); thiru lakshmi; amar mArvan having in his divine chest; thirukkadiththAnaththai thirukkadiththAnam; maruvi fitting well; uRaiginRa one who resides eternally; mAyap pirAn being amazing benefactor; uLLum thORum everytime he is thought about; thiththippAn he feels sweet; thEsam those who have (unsurpassed) thEjas (glow); amarar destination for the nithyasUris (eternal residents of paramapadham)

TVM 8.6.4

3621 மாயப்பிரான் எனவல்வினைமாய்ந்தற *
நேயத்தினால் நெஞ்சம்நாடுகுடிகொண்டான் *
தேசத்தமரர் திருக்கடித்தானத்தை *
வாசப்பொழில் மன்னுகோயில்கொண்டானே.
3621 மாயப் பிரான் * என வல்வினை மாய்ந்து அற *
நேசத்தினால் நெஞ்சம் * நாடு குடிகொண்டான் **
தேசத்து அமரர் * திருக்கடித்தானத்தை *
வாசப் பொழில் மன்னு * கோயில் கொண்டானே (4)
3621
māyappirān * enavalvinai māyndhaRa *
nEsaththiNnāl nNeNYcham * nādu kudikondān *
thEchaththamarar * thirukkadiththānaththai *
vāchappozilmannu * kOyilkoNtānE. 8.6.4

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

The amazing Lord, enshrined in Tirukkaṭittāṉam, rich with orchards exuding sweet fragrances, and revered even by the radiant Nithyasuris, has graciously chosen to dwell within the kingdom of my heart, to vanquish my dire sins.

Explanatory Notes

Whereas the Lord gives ‘dharśan [darśana]’ to the votaries in the pilgrim centres only during stated hours, mostly by day, He stays for ever, in the heart of the Āzhvār, coveted by Him a great deal. This very thought, coupled with the realisation of the fact that the Lord has chosen to grace Tirukkaṭittāṇam, only to please him, has heightened the Āzhvār’s joy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேசத்து அமரர் நித்யசூரிகள் வணங்கும்படி; வாசப் பொழில் மன்னு மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த; திருக்கடித்தானத்தை திருக்கடித்தானத்தை; கோயில் கோயிலாக; கொண்டானே கொண்ட எம்பெருமான்; மாயப் பிரான் மாயப் பிரானானவன்; என வல்வினை என்னுடைய வலிய பாபங்கள்; மாய்ந்து அற மாய்ந்து போக; நேசத்தினால் அன்புடனே; நெஞ்சம் நாடு என் நெஞ்சத்தையே; குடிகொண்டான் தனக்கு இருப்பிடமாகக் கொண்டான்
vAsam very fragrant; pozhil mannu having garden; thirukkadiththAnaththai thirukkadiththAnam; kOyil as temple/abode; koNdAn one who had; mAyap pirAn amazing benefactor; ena my; val strong; vinai sins; mAyndhu aRa to destroy; nEsaththinAl due to great attachment towards me; nenjam my heart; nAdu the vast place; kudi as residence (for him); koNdAn acquired; kOyil koL having distinguished tower; dheyvam ellAm nithyasUris

TVM 8.6.5

3622 கோயில்கொண்டான் தன்திருக்கடித்தானத்தை *
கோயில்கொண்டான் அதனோடுமென்னெஞ்சகம் *
கோயில்கொள் தெய்வமெல்லாம்தொழ * வைகுந்தம்
கோயில்கொண்ட குடக்கூத்தவம்மானே.
3622 கோயில் கொண்டான் தன் * திருக்கடித்தானத்தை *
கோயில் கொண்டான் * அதனோடும் என் நெஞ்சகம்; **
கோயில்கொள் * தெய்வம் எல்லாம் தொழ * வைகுந்தம்
கோயில் கொண்ட * குடக்கூத்த அம்மானே (5)
3622
kOyil koNtān_dhan * thirukkadith thānaththai *
kOyilkoNtān * athanOtum en_NneNYchagam *
kOyilkoL * theyvamellām thoza *
vaikundham kOyilkoNta * gutakkooththa ammānE. 8.6.5

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

The Lord, revered by the Nithyasuris who reside in SriVaikuntam, and who, as Kṛṣṇa, performed the enchanting pot-dance, has chosen Tirukkaṭittāṉam as His dwelling place. Now, He has also made my heart His abode, along with that sacred city.

Explanatory Notes

(i) As already elucidated, Tirukkaṭittāṉam was but the stepping stone, the spring-board whence the Lord could get into the Āzhvār‘s heart. The Lord initially thought of entering the Āzhvār’s heart, all alone, without His retinue and all that. But then, He changed His mind and entered the Āzhvār’s heart along with that pilgrim centre itself c.f. Periyāḻvār Tirumoḻi V-2-10, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோயில் கொள் தங்களுக்கென்று விமானங்களையுடைய; எல்லாம் நித்ய ஸூரிகள் எல்லாம்; தெய்வம் விலக்ஷணமான தெய்வங்களை; தொழ தொழும்படியாக; வைகுந்தம் வைகுந்தத்தில்; கோயில் கொண்ட இருக்கும்; குடக் கூத்த அம்மானே குடக் கூத்த அம்மானானவன்; திருக்கடித்தானத்தை திருக்கடித்தானத்தை; கோயில் கொண்டான் கோயில் கொண்டான்; அதனோடும் அதனோடு; என் நெஞ்சகம் என் நெஞ்சகத்தையும்; தன் தனக்கு இருப்பிடமாக; கோயில் கொண்டான் கோயில் கொண்டான்
thozha to worship; vaigundham paramapadham (the ultimate destination); kOyil as abode; koNda one who has; kudak kUththa (having the heart-captivating activity) of kUdak kUththu (dancing with pots); ammAn (krishNa, the) swAmy (lord); thirukkadiththAnaththai thirukkadiththAnam; than kOyil as his distinguished abode; koNdAn accepting it; adhanOdum along with that; en my; nenjam heart too; kOyil as (his) abode; koNdAn accepted; kUththa with heart-captivating activities; ammAn being the lord (of the universe)

TVM 8.6.6

3623 கூத்தவம்மான் கொடியேனிடர்முற்றவும் *
மாய்த்தவம்மான் மதுசூதவம்மானுறை *
பூத்தபொழில் தண்திருக்கடித்தானத்தை *
ஏத்தநில்லா குறிக்கொண்மின்இடரே.
3623 கூத்த அம்மான் * கொடியேன் இடர் முற்றவும் *
மாய்த்த அம்மான் * மதுசூத அம்மான் உறை **
பூத்த பொழில் தண் * திருக்கடித்தானத்தை *
ஏத்த நில்லா * குறிக்கொள்மின் இடரே (6)
3623
kooththa_ammān * gotiyEnidar muRRavum *
māyththa_ammān * mathuchootha vammānuRai *
pooththapozilthaN * thirukkadith thānaththai *
EththanNillā * guRikkondamin idarE. 8.6.6

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Tirukkaṭittāṉam, the cool and pleasant holy center amidst blooming orchards, is where my Lord of wondrous deeds, Matucūtaṉ, resides. He, who has completely destroyed the dire miseries of this sinner, will surely set at naught all our miseries the moment we adore this place with supreme love.

Explanatory Notes

Lest the preceding song should give some the impression that the pilgrim centre, known as Tirukkaṭittāṉam, has ceased to exist as such, having entered the Āzhvār’s heart, en masse the Āzhvār now calls upon his fellow-beings to worship the holy centre. As already elaborated upon in the notes below the second song of this decad, the pilgrim centres acquire importance, firstly, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூத்த வினோதச் செயல்களை உடைய; அம்மான் பெருமான்; கொடியேன் பாவியான என்; இடர் முற்றவும் துக்கங்களை எல்லாம்; மாய்த்த அம்மான் போக்கின ஸ்வாமியாய்; மதுசூத அம்மான் மதுஸூதனப் பெருமானானவன்; உறை உறையுமிடம்; பூத்த தண் மலர்கள் மலர்ந்து குளிர்ந்த; பொழில் சோலைகள் சூழ்ந்த; திருக்கடித்தானத்தை திருக்கடித்தானத்தை; ஏத்த வணங்கினால்; இடரே நில்லா துக்கங்கள் நிலை குலைந்து போகும்; குறிக்கொள்மின் இதைத் திண்ணமாக அறிவீர்கள்
kodiyEn me who is having cruelty (of calling him repeatedly saying -kANa vENum-); idar sorrow in heart; mAyththa eliminated; ammAn one who enslaved; madhusUdhan eliminated just as he eliminated madhu [demon]; ammAn lord; uRai abode where he resides; pUththa with abundance of flowers; pozhil having garden; thaN cool; thirukkadiththAnaththai thirukkadiththAnam; Eththa as we praise; idar sorrows; muRRavum fully; nillA destroyed;; kuRik koNmin keep (this) in your mind.; gOvindhan emperumAn who is having the radiance of being sarvasulabha (easily approachable by all), his; maN earth

TVM 8.6.7

3624 கொண்மின்இடர்கெட உள்ளத்துக்கோவிந்தன் *
மண்விண்முழுதும்அளந்த ஒண்தாமரை *
மண்ணவர்தாம்தொழ வானவர்தாம்வந்து *
நண்ணு திருக்கடித்தானநகரே.
3624 கொள்மின் இடர் கெட * உள்ளத்துக் கோவிந்தன் *
மண் விண் முழுதும் * அளந்த ஒண் தாமரை **
மண்ணவர் தாம் தொழ * வானவர் தாம் வந்து *
நண்ணு திருக்கடித்தான நகரே (7)
3624
kondamin idar_keta * uLLaththuk kOvindhan *
maNviN muzuthum * aLandha_oNthāmarai *
maNNavar thāmthoza * vānavar thāmvandhu *
naNNu thirukkadiththāna nagarE. 8.6.7

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Focus your thoughts on Tirukkaṭittāṉam, the sacred city, where the inhabitants venerate the beautiful lotus feet of Kōvintaṇ, the One who measured the entire earth and heavens. Even the celestial beings descend to worship there, ensuring all your sorrows vanish instantly.

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār exhorted the worldlings to worship this pilgrim centre but here he says it would suffice if they just think of the place.

(ii) Even as spiritual world is the land of the Nityas (Eternal Heroes), the pilgrim centres on Earth belong to us, the earthlings, as Nampiḷḷai would put it. It should indeed be a matter of deep wonder to the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவிந்தன் எளியவனான கோவிந்தனின்; மண் மண்ணுலகையும்; விண் விண்ணுலகையும்; முழுதும் அனைத்தையும்; அளந்த அளந்து கொண்ட; ஒண் தாமரை அழகிய திருவடித்தாமரைகளை; மண்ணவர் பூமியிலுள்ளோர்; தாம் தொழ அனைவரும் வணங்க; வானவர் தாம் பரமபதத்திலுள்ளவர்களும்; வந்து நண்ணு வணங்க வந்து சேருமிடமான; திருக்கடித்தான நகரே திருக்கடித்தான நகராகும்; இடர் கெட அதைத் துக்கமெல்லாம் தொலைய; உள்ளத்து உள்ளத்தில் நிறுத்தி; கொள்மின் வணங்குவீர்களாக
viN higher world; muzhudhum without leaving anything; aLandha measured and accepted; oN greatly enjoyable; thAmarai divine lotus feet; maNNavar residents of earth; thAm considering to be exclusively enjoyable for them; thozha as they worship; vAnavar the residents of paramapadham (who eternally enjoy emperumAn); thAm them too; vandhu arriving here (to enjoy his great simplicity); naNNu to attain him; thirukkadiththAnam thirukkadiththAnam; nagarai town; idar sorrows; keda to eliminate; uLLaththu in the heart; koNmin try to keep; vAn paramapadham; i this

TVM 8.6.8

3625 தானநகர்கள் தலைச்சிறந்தெங்கெங்கும் *
வானிந்நிலம்கடல் முற்றும்எம்மாயற்கே *
ஆனவிடத்தும் என்நெஞ்சும் திருக்கடித்
தானநகரும் * தனதாயப்பதியே.
3625 தான நகர்கள் * தலைச்சிறந்து எங்கெங்கும் *
வான் இந் நிலம் கடல் * முற்றும் எம் மாயற்கே **
ஆனவிடத்தும் என் நெஞ்சும் * திருக்கடித்
தான நகரும் * தன தாயப் பதியே (8)
3625
thāna nagargaL * thalaichchiRanNthu engengum *
vānin nilamkadal * muRRum emmāyaRkE *
ānavidaththum en neNYchum *
thirukkadiththāna nagarum * thanathāyap pathiyE. 8.6.8

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

The Earth, the SriVaikuntam beyond, the Milk Ocean, and other abodes are indeed magnificent and uplifting, suited for my Lord's presence. However, it is Tirukkaṭittāṉam, the sacred city, and my own heart that the Lord has chosen as His cherished abodes.

Explanatory Notes

There are innumerable delectable centres here, there (spiritual world) and elsewhere, which could regale the Lord. Still, Tirukkaṭittāṉam and the Āzhvār’s heart are the only two regions, which the Lord feels compelled to enjoy and esteem, as devolving on Him as a matter of right.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் இன் நிலம் பரமபதம் இவ்வுலகம்; கடல் முற்றும் பாற்கடல் ஆகிய எல்லாவிடத்திலும்; தான வாஸஸ்தானமான; நகர்கள் எங்கெங்கும் நகரங்கள் அனைத்தும்; தலைச் சிறந்து மிக்க சிறந்தவைகளாக; எம் மாயற்கே எம்பெருமானுக்கே; ஆனவிடத்தும் ஆகி இருக்கச் செய்தேயும்; என் நெஞ்சும் எனது நெஞ்சமும்; திருக்கடித்தான திருக்கடித்தானம் என்னும்; நகரும் நகரமும்; தன தாயப் பதியே தனக்கே உரிய இடமாகக் கொள்கிறான்
nilam earth; kadal kshIrArNava (milk ocean); engengum in all places; thAnam residing place; nagargaL towns; muRRum all; thalai great; siRandhu having glories; em mAyaRkE for my amazing lord; Ana idaththum though they are there; en my; nenjum heart; thirukkadiththAnam nagarum this town thirukkadiththAnam (where he first came before arriving in my heart); thana for him; thAyam hereditary; padhiyE remain as distinguished abodes; thEsam radiant; amarar ultimate destination for nithyasUris

TVM 8.6.9

3626 தாயப்பதிகள் தலைச்சிறந்தெங்கெங்கும் *
மாயத்தினால் மன்னிவீற்றிருந்தானுறை *
தேயத்தமரர் திருக்கடித்தானத்துள் *
ஆயர்க்கதிபதி அற்புதன்தானே.
3626 தாயப் பதிகள் * தலைச்சிறந்து எங்கெங்கும் *
மாயத்தினால் மன்னி * வீற்றிருந்தான் உறை **
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே (9)
3626
thāyappathigaL * thalaichchiRanNthu engengum *
māyaththiNnāl manni * veeRRirunNthānuRai *
thEsaththamarar * thirukkadiththānaththuL *
āyarkkathipathi * aRputhan_thānE. 8.6.9

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

Tirukkaṭittāṉam, the beloved resort of even the brightest Nithyasuris, is where the wondrous Chief of cowherds, Kaṇṇaṉ, joyfully resides. He considers it the best of all pilgrim centers that exist.

Explanatory Notes

All pilgrim centers, without distinction of big and small are sacred indeed, and yet, the Lord covets Tirukkaṭittāṉam most, being the centre which enabled Him to gain access to the Āzhvār by exhibiting to the latter His grandeur as well as grace galore, His amazing simplicity.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேசத்து அமரர் ஒளிமயமான நித்யசூரிகள் வணங்கும்; திருக்கடித்தானத்துள் திருக்கடித்தானத்தில்; ஆயர்க்கு அதிபதி ஆயர்களுக்குத் தலைவனான; அற்புதன் தானே கண்ணன் தானே; தாயப் பதிகள் தனக்கு அஸாதாரணமான; தலை சிறந்து தலை சிறந்த கோயில்கள்; எங்கெங்கும் எல்லா இடங்களிலும் இருந்தும்; மாயத்தினால் தன்னுடைய விருப்பத்தினால்; மன்னி பொருந்தி இங்கு; வீற்றிருந்தான் உறை எழுந்தருளி இருக்கிறான்
thirukkadiththAnaththuL in thirukkadiththAnam; uRai residing; Ayarkku for cowherd boys; adhipadhi ultimate lord; aRupudhan thAn one who has amazing qualities and activities; thAyam distinguished; padhigaL archAvathara sthalams (many dhivya dhESams / divine abodes); engu engum everywhere; thalai great; siRandhu having qualities such as Seelam (simplicity) etc; mAyaththinAl with amazing physical qualities such as beauty etc,; manni fitting well; vIRRu in a distinguished manner (different from other forms such as para (paramapadham), vyUha (milk ocean) etc); irundhAn remains; aRpudhan being with (enjoyable) amazing activities; nArAyaNan having the relationship (matching that)

TVM 8.6.10

3627 அற்புதன்நாராயணன் அரிவாமனன் *
நிற்பதுமேவி இருப்பதென்னெஞ்சகம் *
நற்புகழ்வேதியர் நான்மறைநின்றதிர் *
கற்பகச்சோலைத் திருக்கடித்தானமே.
3627 அற்புதன் நாராயணன் * அரி வாமனன் *
நிற்பது மேவி * இருப்பது என் நெஞ்சகம் **
நல் புகழ் வேதியர் * நான்மறை நின்று அதிர் *
கற்பகச் சோலைத் * திருக்கடித்தானமே (10)
3627. ##
aRputhan nārāyaNan * ari vāmanan *
niRpathu mEvi * iruppathu en_neNYchagam *
naRpukaz vEthiyar * nānmaRai ninRathir *
kaRpagach chOlaith * thirukkadith thānamE. 8.6.10

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

The wondrous Lord, known as Nārāyaṇan, Ari, and Vāmaṉaṉ, has chosen my heart as His ultimate abode. Yet, He also stands in Tirukkaṭittāṉam, adorned with beautiful orchards, where renowned brahmins reside, chanting the sacred Vedas eternally and resoundingly.

Explanatory Notes

In order to gain access to the Āzhvār, the Lord came down to Tirukkaṭittāṉam and stood there. Once He got on to His destination, the Āzhvār’s heart-centre, He would stay there only all the time.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அற்புதன் நாராயணன் அற்புதனான நாராயணனாய்; அரி வாமனன் நிற்பது ஹரியாய் வாமனனாய்; மேவி இருப்பது பொருந்தியிருப்பது; என் நெஞ்சகம் என் நெஞ்சினுள்ளேயும்; நற் புகழ் வேதியர் புகழ்மிக்க வைதிகர்களின்; நான்மறை நான்கு வேதங்களும்; நின்று அதிர் நிலைநின்று முழங்கும்படியாய்; கற்பக கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்த; சோலை சோலைகளை உடைய; திருக்கடித்தானமே திருக்கடித்தானத்திலுமே
ari being the one who eliminates the hurdles to experience him; vAmanan one who comes as a seeker and gives enjoyment; mEvi fitting well; iruppadhu residing; en my; nenjagam in heart;; niRpadhu (coming as a part of that and) standing; nal pugazh having the greatness of being ananya prayOjana (not seeking any other benefits); vEdhiyar vaidhikas (followers of vEdhas); nAl four; maRai vEdhams; ninRu stand; adhir chanting loudly; kaRpagam filled with kalpaka (celestial wish fulfilling) trees; sOlai having garden; thirukkadiththAnam thirukkadiththAnam; sOlai having gardens; thirukkadiththAnaththu in thirukkadiththAnam

TVM 8.6.11

3628 சோலைத்திருக்கடித்தானத்து உறைதிரு
மாலை * மதிள்குருகூர்ச் சடகோபன்சொல் *
பாலோடமுதன்ன ஆயிரத்துஇப்பத்தும் *
மேலைவைகுந்தத்து இருத்தும்வியந்தே. (2)
3628 ## சோலைத் திருக்கடித்தானத்து * உறை திரு
மாலை * மதிள் குருகூர்ச் சடகோபன் சொல் **
பாலோடு அமுது அன்ன * ஆயிரத்து இப் பத்தும் *
மேலை வைகுந்தத்து * இருத்தும் வியந்தே (11)
3628. ##
chOlai thirukkadiththānaththu * uRaithirumālai *
mathiLkurukoorch * chadakOpaN_sol *
pālOtu amuthanna * āyiraththu ippaththum *
mElai vaikundhaththu * iruththum viyandhE. (2) 8.6.11

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Simple Translation

These ten songs, among the thousand delightful verses composed by Kurukūr Caṭakōpaṉ, praising the Lord who dwells in Tirukkaṭittāṉam with its abundant orchards, will uplift their singers to the blissful spiritual realm with great joy.

Explanatory Notes

(i) These ten songs will, by themselves, elevate their chanters to the high spiritual worlds, on the ground that the Lord shall not brook separation from them even for a trice. This, of course, means that the Lord will be greatly delighted to hear these songs and, in the exuberance of His joy, instantly lift the chanters up to His spiritual worldly abode.

(ii) The + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோலை சோலைகளால் சூழ்ந்த; திருக்கடித்தானத்து திருக்கடித்தானத்தில்; உறை திருமாலை உறையும் திருமாலைக் குறித்து; மதிள் மதிள்களை உடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; பாலோடு பாலும்; அமுது அன்ன அமுதும் கலந்தாற் போல் இனிமையான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும் ஓதுபவர்; மேலை வைகுந்தத்து வைகுந்தத்தை; இருத்தும் வியந்தே அடைந்து மகிழ்வார்கள்
uRai eternally residing; thirumAlai to surrender unto Sriya:pathi (divine consort of SrI mahAlakshmi); madhiL having fort (which is a protection); kurugUr leader of AzhwArthirunagari; satakOpan nammAzhwAr-s; sol word; pAlOdu amudhu anna resembling a mixture of milk and nectar; Ayiraththu among thousand pAsurams; ippaththum this decad; mElai high abode; vaigundhaththu in paramapadham; viyandhu being pleased; iruththum will make them stay put.; ennai me (who cannot survive without him); viyandhu being astonished