Chapter 10

Surrendering to Thiruvenkatamudaiyān through the mother - (உலகம் உண்ட)

திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திருவேங்கடம்)
Āzhvār contemplates, “For the sole purpose that everyone should come and pay obeisance to receive His blessings, emprumAn has descended from Vaikuntam to stand on the ThiruvEnkatam hill.” With this thought, Āzhvār approaches pirātti first and then surrenders at the divine feet of ThiruvEnkatamudaiyān.
“எம்பெருமான், தன்னை எல்லோரும் வந்தடைந்து ஸேவித்துப் பயன் பெறவேண்டும் என்பதற்காகவே வைகுந்தத்திலிருந்து வந்து திருவேங்கடமலையில் நிற்கிறான்” என்பதை நினைத்து, பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு, ஆழ்வார் திருவேங்கடமுடையானைச் சரணடைகிறார்.
Verses: 3442 to 3452
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழஞ்சுரம்
Timing: AFTERNOON
Recital benefits: will become the devotees of his devotees and reach and abide in moksha in the wide sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.10.1

3442 உலகமுண்டபெருவாயா! உலப்பில்கீர்த்தியம்மானே! *
நிலவுஞ்சுடர்சூழொளிமூர்த்தி! நெடியாய்! அடியேனாருயிரே! *
திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே! *
குலதொல்லடியேன்உனபாதம் கூடுமாறுகூறாயே. (2)
3442 ## உலகம் உண்ட பெருவாயா *
உலப்பு இல் கீர்த்தி அம்மானே *
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி *
நெடியாய் அடியேன் ஆர் உயிரே **
திலதம் உலகுக்கு ஆய் நின்ற *
திருவேங்கடத்து எம் பெருமானே *
குல தொல் அடியேன் உன பாதம் *
கூடும் ஆறு கூறாயே (1)
3442 ## ulakam uṇṭa pĕruvāyā *
ulappu il kīrtti ammāṉe *
nilavum cuṭar cūzh ŏl̤i mūrtti *
nĕṭiyāy aṭiyeṉ ār uyire **
tilatam ulakukku āy niṉṟa *
tiruveṅkaṭattu ĕm pĕrumāṉe *
kula tŏl aṭiyeṉ uṉa pātam *
kūṭum āṟu kūṟāye (1)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Reference Scriptures

BG. 9-14.

Divya Desam

Simple Translation

My Lord at Tiruvēṅkaṭam, with the bright vermilion mark adorning the face of the cosmos! Your mammoth mouth once swallowed the entire Universe, gaining unparalleled fame upon its retrieval. Your supernal form, resplendent and supreme, is dearest to me, Your humble vassal from generations. I invoke Your grace with utmost veneration to attain Your divine feet.

Explanatory Notes

(i) The Āzhvār prays that he should be enabled to enjoy the beatific bliss, in close proximity to the Lord at Tiruvēṅkaṭam. The Āzhvār’s grief, in not being able to get at the Lord’s feet, calls for the same attention on His part, as the great deluge when He did sustain all the worlds, with their contents, inside His stomach. All that fame, He derived by that great gesture, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகம் பிரளயத்தில் உலகங்களை எல்லாம்; உண்ட வயிற்றில் வைத்து காப்பாற்றிய; பெருவாயா! பெரிய வாயை உடையவனே!; உலப்பு இல் எல்லையில்லாத; கீர்த்தி கீர்த்தியை உடைய; அம்மானே பெருமானே!; நிலவும் சுடர் சூழ் நிலைபெற்ற சுடர் சூழ்ந்த; ஒளி மூர்த்தி! ஒளி மூர்த்தியே!; நெடியாய்! நெடியோனே!; அடியேன் அடியேனின்; ஆருயிரே! ஆருயிரே!; திலதம் உலகுக்கு ஆய் உலகுக்கு திலகம் போன்று; நின்ற திருவேங்கடத்து திருமலையில் நிற்கும்; எம் பெருமானே! எம் பெருமானே!; குல தொல் தொண்டு செய்யும் குலத்தில் பிறந்த; அடியேன் அடியேன்; உன்பாதம் கூடும் உன் திருவடிகளை அடையும்; ஆறு கூறாயே வழியைக் கூறி அருளவேண்டும்
peru having great eagerness (more than the world which is to be protected); vāyā having divine lips/mouth which is the tool to protect; ulappu end; il not having; kīrththi glory (of all auspicious qualities such as gyāna, ṣakthi etc); ammānĕ being the one with natural lordship; nilavum sudar sūzh revealing the complete radiance of natural beauty etc; ol̤i filled with divine splendour; mūrththi being with divine form; nediyāy having unbounded glory (for the aforementioned nature, form, qualities and activities); adiyĕn for me (who is at your disposal); ār uyirĕ being my perfectly complete vital air; ulagukku for the whole world; thiladham like a thilak which is applied on the forehead in the form of ūrdhvapuṇdram (upwards pointing symbol); āy being; ninṛa (firmly) stood; thiruvĕngadaththu on thirumalā; em to me; perumānĕ ŏh one who stood revealing your lordship!; kulam coming in famous lineage; thol ancient; adiyĕn ī (servitor); un (lord, protector and enjoyable) your; pādham divine feet; kūdum attaining; āṛu means; kūṛāy mercifully tell!; kodu being cruel; val very strong

TVM 6.10.2

3443 கூறாய்நீறாய்நிலனாகிக் கொடுவல்லசுரர்குலமெல்லாம் *
சீறாவெறியுந்திருநேமிவலவா! தெய்வக்கோமானே! *
சேறார்சுனைத்தாமரைசெந்தீமலரும் திருவேங்கடத்தானே! *
ஆறாவன்பிலடியேன் உன்னடிசேர்வண்ணம்அருளாயே.
3443 கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகித் *
கொடு வல் அசுரர் குலம் எல்லாம் *
சீறா எரியும் திரு நேமி
வலவா * தெய்வக் கோமானே **
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
மலரும் * திருவேங்கடத்தானே *
ஆறா அன்பில் அடியேன் * உன்
அடிசேர் வண்ணம் அருளாயே (2)
3443 kūṟu āy nīṟu āy nilaṉ ākit *
kŏṭu val acurar kulam ĕllām *
cīṟā ĕriyum tiru nemi
valavā * tĕyvak komāṉe **
ceṟu ār cuṉait tāmarai cĕntī
malarum * tiruveṅkaṭattāṉe *
āṟā aṉpil aṭiyeṉ * uṉ
aṭicer vaṇṇam arul̤āye (2)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, Supreme Lord, dwelling in Tiruvēṅkaṭam, where fiery-red lotus blooms adorn the cloddy ponds! With Your effulgent discus held high in Your right hand, You vanquished hordes of monstrous Rākṣasas, cutting, burning, and razing them to the ground. I beseech Your sweet grace, O boundless in love, to enable me to attain Your divine feet.

Explanatory Notes

(i) The Āzhvār prays unto the Lord holding the discus, the great destroyer of all enemies, to destroy his enemies also and take him unto His lovely feet, so that His stay on mount Tiruvēṅkaṭam could indeed be fruitful.

(ii) The Āzhvār’s God-love is an inexhaustible fountain which won’t dry up even if the ponds in Tiruvēṅkaṭam went dry; that is because all that knowledge, which blossomed into intellectual love of God, was dowered on him by the Lord Himself. (1-1-1).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடு வல் அசுரர் கொடிய வலிய அசுரர்; குலம் எல்லாம் கூட்டங்களை எல்லாம்; கூறு ஆய் துண்டு துண்டாக்கி; நீறு ஆய் சாம்பலாக்கி; நிலன் ஆகி மண்ணோடு மண்ணாகும்படிசெய்து; சீறா எறியும் சீற்றமுடைய எறிகின்ற; திருநேமி சக்கரத்தை; வலவா! வலக்கையில் உடைய; தெய்வக் கோமானே! தேவர்களுக்குத் தலைவனே!; சேறார் சுனை சேற்றுடன் கூடிய நீர்ச் சுனையில்; தாமரை செந்தாமரை மலர்கள்; செந் தீ மலரும் சிவந்த தீபம் போன்று மலரும்; திருவேங்கடத்தானே! திருமலையில் உள்ளவனே!; ஆறா அன்பில் அளவில்லாத அன்பை உடைய; அடியேன் உன் அடியேன் உன்; அடிசேர் வண்ணம் திருவடிகளைச் சேரும்படி; அருளாயே அருள் புரிய வேண்டும்
asurar demons; kulam group; ellām all; kūṛu āy to be cut into many pieces; nīṛu āy to turn into dust; nilan āgi while being flattened; sīṛā showing anger; eriyum shining; thiru having the wealth of valour; nĕmi thiruvāzhi, divine chakra (divine disc); valavā being the omnipotent who can control; dheyvam for nithyasūris; kŏmānĕ being the lord; sĕṛu by mud (for the lotus to stay in); ār filled; sunai pond; thāmarai reddish lotus; sem reddish; thī acquiring the complexion of fire; malarum blossoming; thiruvĕngdaththānĕ ŏh one who is residing in thirumalā!; āṛā ever endless; anbu love; il having; adiyĕn ī, who am a servitor; un your; adi divine feet; sĕr vaṇṇam to reach; arul̤āy kindly bless; vaṇṇam complexion; marul̤ madness

TVM 6.10.3

3444 வண்ணமருள்கொளணிமேகவண்ணா! மாயவம்மானே! *
எண்ணம்புகுந்துதித்திக்குமமுதே! இமையோரதிபதியே! *
தெண்ணலருவிமணிபொன்முத்தலைக்கும் திருவேங்கடத்தானே! *
அண்ணலே! உன்னடிசேரஅடியேற்குஆவாவென்னாயே.
3444 வண்ணம் அருள் கொள் அணி மேக
வண்ணா * மாய அம்மானே *
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே * இமையோர் அதிபதியே **
தெள் நல் அருவி மணி பொன் முத்து
அலைக்கும் * திருவேங்கடத்தானே *
அண்ணலே உன் அடி சேர *
அடியேற்கு ஆஆ என்னாயே (3)
3444 vaṇṇam arul̤ kŏl̤ aṇi meka
vaṇṇā * māya ammāṉe *
ĕṇṇam pukuntu tittikkum
amute * imaiyor atipatiye **
tĕl̤ nal aruvi maṇi pŏṉ muttu
alaikkum * tiruveṅkaṭattāṉe *
aṇṇale uṉ aṭi cera *
aṭiyeṟku āā ĕṉṉāye (3)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, Lord of Celestials, radiant in Tiruvēṅkaṭam, where the cascades flow clear and lovely, bringing forth rubies, gold, and pearls in abundance. You, my cloud-hued Sire, are the embodiment of grace and wondrous traits. As You enter, You sweeten my heart. Have mercy on me and grant me the attainment of Your feet, my Master!

Explanatory Notes

The Lord at Tiruvēṅkaṭam is the very embodiment of grace; He, who imparted unalloyed knowledge to the Āzhvār, resulting in his single-minded devotion to the Lord, should also help him to attain His feet. This is the humble submission of the Āzhvār.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருள் கொள் அருளே வடிவெடுத்த; வண்ணம் வடிவழகை உடைய; அணி மேக வண்ணா! அழகிய மேகம் போன்றவனே!; மாய அம்மானே! மாய அம்மானே!; எண்ணம் புகுந்து மனதில் புகுந்து; தித்திக்கும் அமுதே! தித்திக்கும் அமுதே!; இமையோர் அதிபதியே! தேவாதிதேவனே!; தெள் நல் அருவி தெளிந்த நல்ல அருவிகள்; மணி பொன் மணிகளையும் பொன்னையும்; முத்து முத்துக்களையும்; அலைக்கும் கொழித்துக் கொண்டு வரும்; திருவேங்கடத்தானே! திருவேங்கடத்திலிருப்பவனே!; அண்ணலே! ஸ்வாமியே!; உன் அடி சேர உன் திருவடிகளில் வந்து சேரும்படி; அடியேற்கு அடிமைப்பட்ட அடியேனுக்கு; ஆ ஆ! என்னாயே! ஆவாவென்று இரங்கி அருள வேண்டும்
kol̤ to cause; aṇi having beauty; mĕgam like cloud; vaṇṇā having form; māyam with amaśing qualities; ammānĕ being greater than all; eṇṇam in the heart; pugundhu entered; thiththikkum being sweet; amudhĕ being nectar; imaiyŏr letting nithyasūris enjoy; adhipadhiyĕ [adhipathi] having supremacy; thel̤ having clarity; nal attractive; aruvi waterfalls; maṇi gemstones; pon gold; muththu pearl; alaikkum toss around; thiruvĕngadaththānĕ being present in thirumalā; aṇṇalĕ ŏh one who effortlessly manifesting your lordship!; un your; adi apt, divine feet; sĕra to reach; adiyŏrkku for us, the servitors; ā ā alas! alas! [taking pity on us]; ennāy you should manifest your mercy; ulagaththai world; ā ā alas! alas! [taking pity]

TVM 6.10.4

3445 ஆவா! என்னாதுஉலகத்தையலைக்கும் அசுரர்வாணாள்மேல் *
தீவாய்வாளிமழைபொழிந்தசிலையா! திருமாமகள்கேள்வா!
தேவா! * சுரர்கள்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *
பூவார்கழல்கள்அருவினையேன் பொருந்துமாறு புணராயே.
3445 ஆஆ என்னாது உலகத்தை
அலைக்கும் * அசுரர் வாழ் நாள்மேல் *
தீ வாய் வாளி மழை பொழிந்த
சிலையா * திரு மா மகள் கேள்வா **
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
விரும்பும் * திருவேங்கடத்தானே *
பூ ஆர் கழல்கள் அருவினையேன் *
பொருந்துமாறு புணராயே (4)
3445 āā ĕṉṉātu ulakattai
alaikkum * acurar vāzh nāl̤mel *
tī vāy vāl̤i mazhai pŏzhinta
cilaiyā * tiru mā makal̤ kel̤vā **
tevā curarkal̤ muṉikkaṇaṅkal̤
virumpum * tiruveṅkaṭattāṉe *
pū ār kazhalkal̤ aruviṉaiyeṉ *
pŏruntumāṟu puṇarāye (4)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, Divine Spouse of Tirumāmakaḻ, dwelling in Tiruvēṅkaṭam, revered by sages and Nithyasuris. In Your strength, arrows spit fire. You, the great Archer, showered upon the unrelenting Acurar. Teach this humble sinner how to attain Your radiant feet, my Sanctum.

Explanatory Notes

(i) The Āzhvār tells the Lord that none of the means, outlined in the Śāstras for attaining His feet, has been of any avail to him and that He should, therefore, teach him yet another way, implying thereby that, for him, the Lord should at once be the ‘Means’ and the ‘End’, the path and the goal.

A disciple of Nañcīyar caused him great mental pain by questioning the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆஆ! என்னாது ஆவாவென்று இரக்கம் கொள்ளாமல்; உலகத்தை உலகத்தவர்களை; அலைக்கும் துன்புறுத்தும்; அசுரர் அசுரர்களின்; வாழ் நாள் மேல் ஆயுளை முடிப்பதற்காக; தீ வாய் வாளி நெருப்பை உமிழும் அம்புகளை; மழை பொழிந்த மழைபோல் பொழியும்; சிலையா! வில்லை உடையவனே!; திருமா மகள் கேள்வா! திருமகள் நாதனே!; தேவா! தேவனே!; சுரர்கள் தேவர்களும்; முனிக் கணங்கள் முனிவர்களும்; விரும்பும் விரும்பும்; திருவேங்கடத்தானே திருமலையில் இருப்பவனே!; பூ ஆர் கழல்கள் புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை; அருவினையேன் மிகுந்த பாபியான நான்; பொருந்துமாறு அடையும்படி; புணராயே கற்பித்து அருள வேண்டும்
ennādhu not showing mercy; alaikkum those who torment; asurar demons; vāṇāl̤ mĕl on life; thīvāy fire-faced; vāl̤i arrows; mazhai like rain; pozhindha shooting; silaiyā oh one who is having ṣrī ṣārnga bow; thiru mā magal̤ for lakshmi who is being the valourous consort and who is pleased after his eliminating such enemies; kĕl̤vā being the aptly beautiful consort; dhĕvā shining due to that; surargal̤ dhĕvas (celestial beings); muni rishis (sages); kaṇangal̤ groups; virumbum to be desired; thiruvĕngadaththānĕ ŏh one who resides in thirumalā!; by flowers (offered by groups of celestial beings and sages); ār filled; kazhalgal̤ divine feet; aru unconquerable; vinaiyĕn ī, who am having sins; porundhum to reach; āṛu means; puṇarāy mercifully teach me.; puṇarā ninṛa standing as a collection; maram marāmarams (ebony trees)

TVM 6.10.5

3446 புணராநின்றமரமேழ் அன்றெய்தஒருவில்வலவாவோ! *
புணரேய்நின்றமரமிரண்டின் நடுவேபோனமுதல்வாவோ! *
திணரார்மேகமெனக்களிறுசேரும் திருவேங்கடத்தானே! *
திணரார்சார்ங்கத்துஉனபாதம் சேர்வதடியேனெந் நாளே?
3446 புணரா நின்ற மரம் ஏழ் * அன்று
எய்த ஒரு வில் வலவா ஓ *
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் *
நடுவே போன முதல்வா ஓ **
திணர் ஆர் மேகம் எனக் களிறு
சேரும் * திருவேங்கடத்தானே *
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் *
சேர்வது அடியேன் எந்நாளே? (5)
3446 puṇarā niṉṟa maram ezh * aṉṟu
ĕyta ŏru vil valavā o *
puṇar ey niṉṟa maram iraṇṭiṉ *
naṭuve poṉa mutalvā o **
tiṇar ār mekam ĕṉak kal̤iṟu
cerum * tiruveṅkaṭattāṉe *
tiṇar ār cārṅkattu uṉa pātam *
cervatu aṭiyeṉ ĕnnāl̤e? (5)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

You're the special Archer, shooting arrows through clustered Sal trees. The Primate Who crawled between twin trees, now in Tiruvēṅkaṭam where elephants gather like clouds. My Lord, strong with the bow. When will I reach Your feet?

Explanatory Notes

(i) The Lord would appear to have told the Āzhvār that He was surely taking him to His abode in spiritual world; the expectant Āzhvār is, however, not satisfied with a general assurance of this kind and insists that a date be set for the consummation.

(ii) It can be both ways, namely, elephants gathering like clouds and clouds gathering like elephants, in that holy + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புணரா நின்ற சேர்ந்து ஒன்றுபட்டிருந்த; மரம் ஏழ் ஏழு சாலமரங்களையும்; அன்று அன்று சுக்ரீவன் பொருட்டு; எய்த ஒரு ஒரே ஒரு அம்பு எய்து துளைத்த; வில் வலவா! ஓ! வில் வலிமை உடையவனே!; புணர் ஏய் நின்ற சேர்ந்து பொருத்தி நின்ற; மரம் இரண்டின் இரட்டை மருதமரங்களின்; நடுவே போன நடுவே தவழ்ந்த; முதல்வா! ஓ! முதல்வனே!; திணர் ஆர் மேகம் திண்மை மிக்க மேகமோ; எனக் களிறு சேரும் என்று யானைகள் சேருமிடமான; திருவேங்கடத்தானே! திருவேங்கடத்தானே!; திணர் ஆர் பெருமையை உடைய அழகிய; சார்ங்கத்து சார்ங்கமென்னும் வில்லை உடைய; உன பாதம் உன் திருவடிகளை; சேர்வது அடியேன் அடியேன் அடைவது; எந்நாளே? என்றைக்கோ?
ĕzh seven; anṛu on that day (when sugrīva mahārāja doubted ṣrī rāmas ability); eydha shot (to instill faith in him); oru vil valavā being the unique archer; puṇar togetherness; ĕy to fit well; ninṛa standing; maram iraṇdin two trees; naduvĕ in between; pŏna crawled; mudhalvā being the primary cause of the universe; thiṇar density; ār abundance; mĕgam clouds; ena to say; kal̤iṛu elephants; sĕrum residing together; thiruvĕngadaththānĕ one who is present in thirumalā!; thiṇar greatness (of filling the hands which hold on); ār having; sārngam ṣrī sārnga bow; una your; pādham divine feet; adiyĕn ī who am a servitor (being captivated by your valorous history); sĕrvadhu reaching; ennāl̤ when?; ŏ revealing the agony of not uniting yet.; maṇ all worlds indicated by earth; al̤andha measured and mingled with everyone, having overwhelming simplicity

TVM 6.10.6

3447 எந்நாளே? நாம்மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று *
எந்நாளும்நின்றிமையோர்களேத்தி இறைஞ்சி யினமினமாய் *
மெய்ந்நாமனத்தால்வழிபாடுசெய்யும் திருவேங்கடத்தானே! *
மெய்ந்நானெய்தியெந்நாள் உன்னடிக்கணடியேன் மேவுவதே?
3447 எந்நாளே நாம் மண் அளந்த *
இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று *
எந்நாளும் நின்று இமையோர்கள்
ஏத்தி * இறைஞ்சி இனம் இனமாய் **
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
செய்யும் * திருவேங்கடத்தானே *
மெய்ந் நான் எய்தி எந் நாள் * உன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? (6)
3447 ĕnnāl̤e nām maṇ al̤anta *
iṇait tāmaraikal̤ kāṇpataṟku ĕṉṟu *
ĕnnāl̤um niṉṟu imaiyorkal̤
etti * iṟaiñci iṉam iṉamāy **
mĕyn nā maṉattāl vazhipāṭu
cĕyyum * tiruveṅkaṭattāṉe *
mĕyn nāṉ ĕyti ĕn nāl̤ * uṉ
aṭikkaṇ aṭiyeṉ mevuvate? (6)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Enshrined in Tiruvēṅkaṭam, where groups of Nithyasuris wait reverently, day after day, to worship Your lotus feet, the pair that spanned the Universe. They meditate on You by word, deed, and thought. Oh, Lord! When will this humble servant truly attain Your feet?

Explanatory Notes

There was indeed no need for the Lord to set a date for His union with the Āzhvār, as desired by him, in the preceding song; he could very well enjoy that bliss, right here, at Tiruvēṅkaṭam, where even ‘Nitya Sūrīs’ come down from spiritual world and worship. And so, he would not like to miss that bliss, near at hand.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் அளந்த உலகமளந்த; இணைத் தாமரைகள் தாமரை போன்ற திருவடிகளை; நாம் காண்பதற்கு என்று நாம் காணும் நாள்; எந்நாளே எந்நாள் என்று; இமையோர்கள் நித்யஸூரிகள்; எந்நாளும் நின்று எப்போதும் நின்று; ஏத்தி இறைஞ்சி நிரந்தரமாக வணங்கி; இனம் இனமாய் திரள் திரளாக; மெய்ந் நா மெய் நாக்கு; மனத்தால் மனம் மூன்றாலும்; வழிபாடு செய்யும் வாழ்த்தி வணங்கி துதிக்கும்; திருவேங்கடத்தானே! திருவேங்கடத்தானே!; அடியேன் நான் அடியேனான நான்; மெய் எய்தி உன் உண்மையாகவே உன்னை அடைந்து; அடிக்கண் மேவுவதே உன் திருவடிகளிலே பொருந்துவது; எந்நாளே எந் நாள் என்றைக்கோ?
thāmaraigal̤ divine lotus feet; iṇai both; nām we (who enjoy his supremacy); kāṇbadhaṛku to see; e that; nāl̤ĕm having the day; enṛu that; imaiyŏrgal̤ nithyasūris who have unfailing knowledge; en nāl̤um always; ninṛu standing; ĕththi praising in this manner; iṛainji worshipping; inam inamāy in groups; meyn nā manaththāl with the body, speech and mind; vazhipādu serve; seyyum to perform; thiruvĕngadaththānĕ ŏh one who is present in thirumalā!; adiyĕn being an exclusive servitor; nān ī (who am desirous); mey seen in dream; eydhi attain; un your; adikkaṇ at the divine feet; mĕvuvadhu fit properly; en nāl̤ when!; adiyĕn ī (who have natural servitude towards you); mĕvi approach

TVM 6.10.7

3448 அடியேன்மேவியமர்கின்றஅமுதே! இமையோரதிபதியே! *
கொடியாவடுபுள்ளுடையானே! கோலக்கனிவாய்ப் பெருமானே! *
செடியார்வினைகள்தீர்மருந்தே! திருவேங்கடத்தெம் பெருமானே! *
நொடியார்பொழுதும்உன்பாதம் காணநோலாதாற்றேனே.
3448 அடியேன் மேவி அமர்கின்ற
அமுதே * இமையோர் அதிபதியே *
கொடியா அடு புள் உடையானே *
கோலக் கனிவாய்ப் பெருமானே **
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே *
திருவேங்கடத்து எம் பெருமானே *
நொடி ஆர் பொழுதும் உன பாதம் *
காண நோலாது ஆற்றேனே (7)
3448 aṭiyeṉ mevi amarkiṉṟa
amute * imaiyor atipatiye *
kŏṭiyā aṭu pul̤ uṭaiyāṉe *
kolak kaṉivāyp pĕrumāṉe **
cĕṭi ār viṉaikal̤ tīr marunte *
tiruveṅkaṭattu ĕm pĕrumāṉe *
nŏṭi ār pŏzhutum uṉa pātam *
kāṇa nolātu āṟṟeṉe (7)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

You are the Nectar, enjoyed by this humble servant. Oh, Lord of Nithyasuris. On Your banner, Garuḍa burns the enemies' troubles, for deep woes, You are the remedy. Oh, Lord of Tiruvēṅkaṭam, Your lips so enticing like ripe fruit, I eagerly await; my impatience is rising. With no delay, not a moment to tolerate, in worshipping Your feet, though I lack any special rites to complete.

Explanatory Notes

(i) It is the insatiable Nectar, deeply imbedded in the mind of the Āzhvār, that he hastens to behold physically. All this flutter, on his part, is not because of any misgiving regarding the attainment of the goal but because of his inability to brook the delay in getting at it, overwhelmed by its grandeur.

(ii) ‘The Nectar by this vassal enjoyed’, is yet another addition + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியேன் மேவி அடியேன் உன்னை அடைந்து; அமர்கின்ற அமுதே! அநுபவிக்கும் அமுதே!; இமையோர் நித்யஸூரிகளின்; அதிபதியே! தலைவனே!; கொடியா அடு பகைவர்களைக் கொல்லும்; புள் கருடனைக் கொடியாக; உடையானே! உடையவனே!; கோலக் கனி கோவைக்கனி போன்ற; வாய் அதரத்தை உடைய; பெருமானே! பெருமானே!; செடியார் தூறுபோல் மண்டிக் கிடக்கும்; வினைகள் பாபங்களை; தீர் மருந்தே! போக்கும் மருந்தானவனே!; திருவேங்கடத்து திருவேங்கடத்திலிருக்கும்; எம் பெருமானே! எம் பெருமானே!; நொடியார் பொழுதும் ஒரு க்ஷண நேரமும்; உன பாதம் உன் திருவடிகளை; காண நோலாது காணாமல்; ஆற்றேனே தரித்து இருக்கமாட்டேன்
amarginṛa to experience eternally; amudhĕ eternally enjoyable; imaiyŏr for them (nithyasūris); adhipadhiyĕ [adhipathi] having the supremacy to control them; adu being the one who eliminates the enemies of devotees; pul̤ periya thiruvadi (garudāzhwān); kodiyā as flag; udaiyānĕ one who is having; kŏlam having beauty etc which increase such enjoyability; kani reddish like a ripened fruit; vāy having beautiful lips; perumānĕ having greatness of unlimited enjoyability; sedi like bush; ār dense; vinaigal̤ sins; thīr to eliminate; marundhĕ being the best medicine; thiruvĕngadaththu residing on thirumalā; em me; perumānĕ oh one who accepted as servitor!; una your; pādham divine feet; kāṇa to see; nŏlādhu without any effort; nodi a fraction; ār of; pozhudhu moment; āṝĕn cannot bear.; una your; pādham divine feet

TVM 6.10.8

3449 நோலாதாற்றேன்உனபாதம் காணவென்று நுண்ணுணர்வின் *
நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனுமிந்திரனும் *
சேலேய்கண்ணார்பலர்சூழவிரும்பும் திருவேங்கடத்தானே! *
மாலாய்மயக்கிஅடியேன்பால் வந்தாய்போலவாராயே.
3449 நோலாது ஆற்றேன் உன பாதம் *
காண என்று நுண் உணர்வின் *
நீல் ஆர் கண்டத்து அம்மானும் *
நிறை நான்முகனும் இந்திரனும் **
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் * திருவேங்கடத்தானே *
மாலாய் மயக்கி அடியேன்பால் *
வந்தாய் போலே வாராயே (8)
3449 nolātu āṟṟeṉ uṉa pātam *
kāṇa ĕṉṟu nuṇ uṇarviṉ *
nīl ār kaṇṭattu ammāṉum *
niṟai nāṉmukaṉum intiraṉum **
cel ey kaṇṇār palar cūzha
virumpum * tiruveṅkaṭattāṉe *
mālāy mayakki aṭiyeṉpāl *
vantāy pole vārāye (8)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

My Lord, residing in Tiruvēṅkaṭam, the revered blue-necked Sire (Śiva) of acute intelligence, and Nāṉmukaṉ, with consummate knowledge, along with Intiraṉ, declare the inadequacy of their equipment to worship Your feet. With their enchanting consorts, they eagerly serve You. I pray for Your appearance before this dependent, as Kaṇṇaṉ did before His dear parents.

Explanatory Notes

Apprehending the possibility of the Lord keeping aloof, in view of the inadequacy, rather, absence of any equipment, worth the name, in the Āzhvār, referred to by him already, in the preceding song, he now claims parity, in this regard, with those in the higher echelons. Even the Celestials, at the top, suffer from inadequacy in this respect, despite their massive learning, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன பாதம் உன் திருவடிகளை; காண என்று காண்பதற்க்குரிய; நோலாது சாதனம் ஒன்றும் செய்யாமல்; ஆற்றேன் இருந்துவிட்டேன்; நுண் உணர்வின் நுண்ணிய அறிவையும்; நீல் ஆர் கண்டத்து விஷமுள்ள கழுத்தையும்; அம்மானும் உடைய சிவனும்; நிறை நான்முகனும் குணங்கள் நிறைந்த பிரமனும்; இந்திரனும் இந்திரனும்; சேல் ஏய் மீன் போன்ற; கண்ணார் கண்களை உடைய பெண்கள்; பலர் சூழ விரும்பும் பலர் சூழ வழிபாடு செய்யும்; திருவேங்கடத்தானே! திருவேங்கடத்தானே!; மாலாய் மயக்கி எல்லோரையும் மயக்கி; வந்தாய் போலே கண்ணனாக வந்தது போல்; அடியேன் பால் அடியேன் பக்கலிலும்; வாராயே வரவேண்டும்
kāṇa to see; nŏlādhu without pursuing any means; āṝĕn ī am not able to bear; enṛu saying this; nuṇ uṇarvil since he is omniscient, being able to see subtle things; neela black colour; ār fully; kaṇdam having throat; ammānum rudhra, who became important one in the universe due to that; niṛai being the father of such rudhra, and having complete knowledge to create etc; nānmuganum four-headed brahmā; indhiranum indhra who has the wealth of three worlds (bhū:, bhuva: and svarga worlds); sĕl ĕy like a fish; kaṇṇār having eyes; sūzha being in their proximity; virumbum surrender with desire; thiruvĕngadaththānĕ ŏh one who is residing in thirumalā!; māl āy having dark complexion; mayakki mesmerising everyone with the qualities and activities; vandhāy pŏlĕ like you came; adiyĕnpāl towards me who is exclusively devoted to you and cannot sustain without you; vārāy you should come!; vandhāy pŏlĕ as if arrived and being within reach; vārādhāy being unreachable

TVM 6.10.9

3450 வந்தாய்போலேவாராதாய் வாராதாய்போல்வருவானே! *
செந்தாமரைக்கண்செங்கனிவாய் நால்தோளமுதே! எனதுயிரே! *
சிந்தாமணிகள்பகரல்லைப்பகல்செய் திருவேங்கடத்தானே! *
அந்தோ! அடியேன்உனபாதம் அகலகில்லேனிறையுமே.
3450 வந்தாய் போலே வாராதாய் *
வாராதாய் போல் வருவானே *
செந்தாமரைக் கண் செங்கனி வாய் *
நால் தோள் அமுதே எனது உயிரே **
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
பகல் செய் * திருவேங்கடத்தானே *
அந்தோ அடியேன் உன பாதம் *
அகலகில்லேன் இறையுமே (9)
3450 vantāy pole vārātāy *
vārātāy pol varuvāṉe *
cĕntāmaraik kaṇ cĕṅkaṉi vāy *
nāl tol̤ amute ĕṉatu uyire **
cintāmaṇikal̤ pakar allaip
pakal cĕy * tiruveṅkaṭattāṉe *
anto aṭiyeṉ uṉa pātam *
akalakilleṉ iṟaiyume (9)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, Lord of Tiruvēṅkaṭam, where the unique sheen of gems makes night shine like day. You appear seemingly near yet far, but in despair, when You seem afar, You draw near. Your Form, with lotus eyes red, lips like ripe fruit, and shoulders four, is most dear to me. From Your feet, alas! this humble lover cannot, for a moment, be apart.

Explanatory Notes

(i) The gems could refer either to those in the sacred Mount or those embedded in the Jewels on the Lord’s person.

(ii) The Āzhvār’s mental vision of the Lord was so full and complete that he could easily mistake it for physical perception, in three dimensions; when, out of deep yearning, he held out his arms for embracing the Lord, he would be disillusioned, rather + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வந்தாய் போலே வந்தவனைப் போல் இருந்து; வாராதாய்! வராதவனே!; வாராதாய் போல் வராதவனைப் போல் இருந்து; வருவானே! வருபவனே!; செந்தாமரை செந்தாமரைப் போன்ற; கண் கண்களை உடையவனும்; செங்கனி கோவைக்கனி போன்ற; வாய் அதரத்தை உடையவனும்; நால்தோள் நான்கு தோள்களை உடையவனுமான; அமுதே! அமுதம் போன்றவனே!; எனது உயிரே! என் உயிரானவனே!; சிந்தாமணிகள் சிந்தாமணி என்னும் ரத்தினங்கள்; பகர் அல்லை பகல் செய் இருளைப் பகலாக்குவது போல; திருவேங்கடத்தானே திருமலையில் எழுந்தருளி இருப்பவனே!; அந்தோ! அடியேன் அந்தோ! அடியேன்; உன பாதம் உன் திருவடிகளை; இறையுமே ஒரு க்ஷண காலமும்; அகலகில்லேன் பிரிந்திருக்க மாட்டேன்
vārādhāy pŏl due to ākinchanyam (lack of anything) in self, while thinking there is no possibility of his arrival; varuvānĕ arriving and being fully subservient; sem reddish; thāmarai attractive like lotus (will make one say jitham (victory)); kaṇ divine eyes; sem reddish; kani enjoyable like fruit; vāy the divine lips which say māmĕkam ṣaraṇam vraja; nāl four; thŏl̤ having divine shoulders; amudhĕ being eternally enjoyable for the devotees; enadhu manifesting to me; uyirĕ became my sustaining force; sindhā [chinthā] wish fulfilling; maṇigal̤ valuable gemstones; pagar radiance; allai night; pagal day; sey making; thiruvĕngadaththānĕ ŏh one who resides in thirumalā!; andhŏ alas!; una your; pādham divine feet; adiyĕn the totally subservient me, who has no other refuge; iṛaiyum not even a moment; agala to leave; killĕn unable to do.; iṛaiyum not even a moment; agala to separate

TVM 6.10.10

3451 அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா! *
நிகரில்புகழாய்! உலகமூன்றுடையாய்! என்னையாள்வானே! *
நிகரிலமரர்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *
புகலொன்றில்லாஅடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. (2)
3451 அகலகில்லேன் இறையும் என்று *
அலர்மேல் மங்கை உறை மார்பா *
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
உடையாய் * என்னை ஆள்வானே **
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் * திருவேங்கடத்தானே *
புகல் ஒன்று இல்லா அடியேன் * உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (10)
3451 akalakilleṉ iṟaiyum ĕṉṟu *
alarmel maṅkai uṟai mārpā *
nikar il pukazhāy ulakam mūṉṟu
uṭaiyāy * ĕṉṉai āl̤vāṉe **
nikar il amarar muṉikkaṇaṅkal̤
virumpum * tiruveṅkaṭattāṉe *
pukal ŏṉṟu illā aṭiyeṉ * uṉ
aṭikkīzh amarntu pukunteṉe. (10)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Reference Scriptures

BG. 9-30, 34

Divya Desam

Simple Translation

Oh, Dweller of Tiruvēṅkaṭam, sought after with reverence by the matchless Amarars and gathered sages, the Divine Mother resides on Your enchanting chest, professing eternal union with You. In Your unparalleled glory, You reign as the Lord of all three worlds, and it is at Your beautiful feet that this humble servant seeks refuge, with no other support.

Explanatory Notes

(i) In the preceding nine songs, the Āzhvār described the Lord’s greatness and grandeur and also gave vent to his deep yearning to get at Him. And now, he takes refuge at the Lord’s feet, seeking the good offices of the Divine Mother, ever present on the Lord’s chest, so as to accelerate his union with the Lord. While doing so, he gives expression to his abject destitution + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலர் மேல் மங்கை திருமகளானவள்; இறையும் ஒரு க்ஷணமும்; அகலகில்லேன் பிரிய மாட்டேன் என்று; உறை மார்பா வாசம் செய்யும் மார்பை உடையவனே!; நிகரில் புகழாய்! ஒப்பில்லாத புகழை உடையவனே!; உலகம் மூன்று மூன்று உலகங்களை; உடையாய்! உடையவனே!; என்னை ஆள்வானே என்னை ஆள்பவனே!; நிகரில் அமரர் ஒப்பற்ற அமரர்களும்; முனிக் கணங்கள் முனிவர்களும்; விரும்பும் விரும்பும்; திருவேங்கடத்தானே! திருவேங்கடத்தானே!; புகல் ஒன்று இல்லா வேறு ஒரு கதி இல்லாத; அடியேன் உன் அடியேன் உன்; அடிக்கீழ் திருவடிகளின் கீழ்; அமர்ந்து புகுந்தேனே புகுந்து அமர்ந்து விட்டேன்
killĕn not ready to; enṛu saying; alarmĕl one who is having softness, enjoyability etc due to being born in the flower,; mangai lakshmi who is very dear to emperumān due to her adolescent age; uṛai (in a special portion of emperumāns divine form, while her high family lineage, qualities of self and beautiful form are there) being greatly enjoyable due to eternally residing in; mārbā one who is having the divine chest; nigar il matchless (the quality which cannot be simply counted along with the other qualities, due to ignoring the faults of the devotees); pugazhāy having great vāthsalyam (motherly forbearance); mūnṛu ulagam the three types of chĕthanas (souls) and achĕthana (matter) which are well known from pramāṇams (authentic scriptures); udaiyāy having svāmithvam (lordship) of owning; ennai me too who has many faults; āl̤vānĕ having sauṣeelyam (superior person mingling freely with inferior persons) which makes you acknowledge/accept me; nigar match; il not having; amarar amaras (nithyasūris) who are focussed on service; muni (being engaged in meditating upon his qualities) sages who meditate; kaṇangal̤ groups; virumbum residing with great desire (due to his vāthsalyam etc); thiruvĕngadaththānĕ one who is present in thirumalā with perfect saulabhyam (simplicity)!; pugal refuges such as upāyāntharam (other means such as karma yŏga etc) and other saviours (such as other dhĕvathās, self et al); onṛu any; illā ī who am an ananyaṣaraṇan (not having any other refuge); adiyĕn ī (who have pārathanthriyam (total dependence)); un your (who are with purushakāram (of pirātti) and the qualities); adi divine feet; kīzh beneath; amarndhu being seated with exclusive focus on kainkaryam and no other expectation; pugundhĕn ī have surrendered.; adiyīr ŏh servitors!; adik kīzh under my divine feet

TVM 6.10.11

3452 அடிக்கீழமர்ந்துபுகுந்து அடியீர்! வாழ்மினென்றென்றருள்கொடுக்கும் *
படிக்கேழில்லாப்பெருமானைப்பழனக்குருகூர்ச்சடகோபன் *
முடிப்பான்சொன்னவாயிரத்துத் திருவேங்கடத்துக்கிவைபத்தும் *
பிடித்தார்பிடித்தார்வீற்றிருந்து பெரியவானுள்நிலாவுவரே. (2)
3452 ## அடிக்கீழ் அமர்ந்து புகுந்து * அடியீர்
வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும் *
படிக் கேழ் இல்லாப் பெருமானைப் *
பழனக் குருகூர்ச் சடகோபன் **
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் *
திருவேங்கடத்துக்கு இவை பத்தும் *
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து *
பெரிய வானுள் நிலாவுவரே. (11)
3452 ## aṭikkīzh amarntu pukuntu * aṭiyīr
vāzhmiṉ ĕṉṟu ĕṉṟu arul̤kŏṭukkum *
paṭik kezh illāp pĕrumāṉaip *
pazhaṉak kurukūrc caṭakopaṉ **
muṭippāṉ cŏṉṉa āyirattut *
tiruveṅkaṭattukku ivai pattum *
piṭittār piṭittār vīṟṟiruntu *
pĕriya vāṉul̤ nilāvuvare. (11)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Those who recite or listen to these ten songs, dedicated to the sacred Tiruvēṅkaṭam, out of the thousand sung by Kurukūr Caṭakōpaṉ, will be liberated from worldly attachments. Through sweet adoration of the unparalleled Lord, who forever displays His divine feet, urging devotees to seek refuge therein, they shall dwell eternally in the exalted SriVaikuntam.

Explanatory Notes

(i) The thousand songs were sung by Saint Nammāḻvār, stung by the severe fright of the worldly distractions and the mischief of the unruly senses, in order to cut out the worldly ties, vide also VI-9-9.

(ii) These ten songs are made over to Tiruvēṅkaṭam, out of the thousand, meant, as a whole, to adore Lord Raṅganātha, enshrined in the walled city of Śrīraṅgam.

(iii) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியீர்! அடியவர்களே!; அடிக்கீழ் நம்முடைய திருவடிகளின் கீழே; அமர்ந்து புகுந்து புகுந்திருந்து; வாழ்மின் வாழுங்கள்; என்றென்று என்று எப்போதும்; அருள் கொடுக்கும் அருள் புரியும்; படிக் கேழ் இல்லா ஒப்பற்ற; பெருமானை பெருமானைக் குறித்து; பழன வயல்கள் சூழ்ந்த; குருகூரவர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; முடிப்பான் சொன்ன முடிப்பதாக அருளிச்செய்த; திருவேங்கடத்துக்கு திருவேங்கடத்தைப் பற்றிய; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்த பத்துப்பசுரங்களையும்; பிடித்தார் கற்றவர்களை; பிடித்தார் பற்றியவர்கள்; பெரிய வானுள் பரமபதத்தில்; நிலாவுவரே நிலைத்து நின்று; வீற்றிருந்து பேரின்பத்தை அடைவார்கள்
amarndhu being ananya sādhanar (not pursuing any means other than emperumān) and ananya prayŏjanar (not desiring for anything other than kainkaryam); pugundhu enter; vāzhmin eternally enjoy!; enṛu enṛu saying so; arul̤ his mercy; kodukkum bestowing; padi the manner in which; kĕzh match; illā not having; perumānai towards emperumān who is greater than all; pazhanam having invigorating water bodies; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; mudippān to fulfil all his desires; sonna mercifully spoke; āyiraththu among the thousand pāsurams; thiruvĕngadaththukku focussed on thirumalā; ivai these; paththum ten pāsurams; pidiththār those who hold on to the pāsurams; pidiththār those who hold on to the meanings of the pāsurams (all of them); periya having infinite greatness; vānul̤ paramapadham which is indicated by the term parmavyŏma (great sky); vīṝirundhu being present in a distinguished manner (to highlight their connection with this decad); nilāvuvar live there with eternal enjoyment.; ul̤ inside; nilāviya being the internal enemy due to residing permanently