Chapter 9

Āzhvār calls out to the Lord with heart melting devotion - (நீர் ஆய்)

கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்

Bhagavān doesn’t grace Āzhvār with His presence even after the emissaries were sent to deliver the messages. Āzhvār cries out, “Please come! When you do, it will be a day when both this material realm (maNNum) and your spiritual realm (viNNum) will rejoice.”


Insights from the avatārikai of Tirukkurukaippirāṉ Piḷḷāṉ The commentary of this esteemed

+ Read more

தூது விட்டனுப்பியும் எம்பெருமான் வரவில்லை. “வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே!” என்று ஆழ்வார் கூவியழைக்கிறார்.

ஆறாம் பத்து -ஒன்பதாம் திருவாய் மொழி -நீராய் -பிரவேசம்

எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், வானவர் கோனைக் கண்டு” என்றும் தூது போகச் சொன்னார்; அவை போக மாட்டாதபடி

+ Read more
Verses: 3431 to 3441
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: காந்தாரம்
Timing: 7.13 - 8.24 AM
Recital benefits: will become his devotees
  • TVM 6.9.1
    3431 ## நீர் ஆய் நிலன் ஆய்த் * தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்க் *
    சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்ச் * சிவன் ஆய் அயன் ஆனாய் **
    கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்திக் * கொடியேன்பால்
    வாராய் * ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)
  • TVM 6.9.2
    3432 மண்ணும் விண்ணும் மகிழக் * குறள் ஆய் வலம் காட்டி *
    மண்ணும் விண்ணும் கொண்ட * மாய அம்மானே **
    நண்ணி உனை நான் * கண்டு உகந்து கூத்தாட *
    நண்ணி ஒருநாள் * ஞாலத்தூடே நடவாயே (2)
  • TVM 6.9.3
    3433 ஞாலத்தூடே நடந்தும் நின்றும் * கிடந்து இருந்தும் *
    சாலப் பல நாள் * உகம்தோறு உயிர்கள் காப்பானே **
    கோலத் திரு மா மகளோடு * உன்னைக் கூடாதே *
    சாலப் பல நாள் * அடியேன் இன்னம் தளர்வேனோ? (3)
  • TVM 6.9.4
    3434 தளர்ந்தும் முறிந்தும் * சகட அசுரர் உடல் வேறா *
    பிளந்து வீயத் * திருக்கால் ஆண்ட பெருமானே **
    கிளர்ந்து பிரமன் சிவன் * இந்திரன் விண்ணவர் சூழ *
    விளங்க ஒருநாள் * காண வாராய் விண்மீதே (4)
  • TVM 6.9.5
    3435 விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் * கடல் சேர்ப்பாய் *
    மண்மீது உழல்வாய் * இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் **
    எண்மீது இயன்ற புற அண்டத்தாய் * எனது ஆவி *
    உள் மீது ஆடி * உருக் காட்டாதே ஒளிப்பாயோ? (5)
  • TVM 6.9.6
    3436 பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் * பரவை நிலம் எல்லாம்
    தாய் * ஓர் அடியால் * எல்லா உலகும் தடவந்த
    மாயோன் ** உன்னைக் காண்பான் * வருந்தி எனைநாளும் *
    தீயோடு உடன்சேர் மெழுகாய் * உலகில் திரிவேனோ? (6)
  • TVM 6.9.7
    3437 உலகில் திரியும் கரும கதி ஆய் * உலகம் ஆய் *
    உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் * புற அண்டத்து **
    அலகில் பொலிந்த * திசை பத்து ஆய அருவேயோ *
    அலகில் பொலிந்த * அறிவிலேனுக்கு அருளாயே (7)
  • TVM 6.9.8
    3438 அறிவிலேனுக்கு அருளாய் * அறிவார் உயிர் ஆனாய் *
    வெறி கொள் சோதி மூர்த்தி * அடியேன் நெடுமாலே **
    கிறிசெய்து என்னைப் புறத்திட்டு * இன்னம் கெடுப்பாயோ *
    பிறிது ஒன்று அறியா அடியேன் * ஆவி திகைக்கவே? (8)
  • TVM 6.9.9
    3439 ஆவி திகைக்க * ஐவர் குமைக்கும் சிற்றின்பம் *
    பாவியேனைப் * பல நீ காட்டிப் படுப்பாயோ? **
    தாவி வையம் கொண்ட * தடம் தாமரை கட்கே *
    கூவிக் கொள்ளும் காலம் * இன்னம் குறுகாதோ? (9)
  • TVM 6.9.10
    3440 குறுகா நீளா * இறுதிகூடா எனை ஊழி *
    சிறுகா பெருகா * அளவு இல் இன்பம் சேர்ந்தாலும் **
    மறு கால் இன்றி மாயோன் * உனக்கே ஆளாகும் *
    சிறு காலத்தை உறுமோ * அந்தோ தெரியிலே? (10)
  • TVM 6.9.11
    3441 ## தெரிதல் நினைதல் * எண்ணல் ஆகாத் திருமாலுக்கு *
    உரிய தொண்டர் தொண்டர் * தொண்டன் சடகோபன் **
    தெரியச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    உரிய தொண்டர் ஆக்கும் * உலகம் உண்டாற்கே (11)