Chapter 8

Not having got what he sought, Āzhvār puts forth his incapacity to seek another refuge and speaks with Ārāvamudhan about his endless love - (ஆரா அமுதே)

ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமைபேசி அலமருதல் (திருக்குடந்தை)
Vānamāmalai Perumāl too chose not to grace Āzhvār with His presence. “Maybe Bhagavān thought to grace me with His presence in ThirukkudaNthai…” so speculating Āzhvār reached ThirukkudaNthai divyadesam. “Just like how Krishna conversed with Akroorar, Bhagavān will come to me”, Āzhvār thinks with certainty. Bhagavān did not come; heartbroken Āzhvār laments, + Read more
வானமாமலைப் பெருமாளும் ஆழ்வாருக்கு முகம் காட்டவில்லை. “ஒரு வேளை திருக்குடந்தையிலே ஸேவை ஸாதிக்கலாம் என்று பகவான் நினைத்திருக்கக்கூடும்” என்று எண்ணிய ஆழ்வார் திருக்குடந்தையிலே சென்று புகுந்தார்; “கண்ணன் அக்ரூரரோடு உரையாடியதுபோல், பகவானும் நம்மிடம் வருவான்” என்று நினைத்தார். வரவில்லை; + Read more
Verses: 3310 to 3320
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: காந்தாரம்
Timing: 7.13 - 8.24 AM
Recital benefits: will be like Kama, the god of love, for women with lovely doe-like eyes
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.8.1

3310 ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே *
நீராயலைந்துகரைய உருக்குகின்றநெடுமாலே! *
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருகுடந்தை *
ஏரார்கோலந்திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! (2)
3310 ## ஆரா அமுதே அடியேன் உடலம் * நின்பால் அன்பாயே *
நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே **
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் * செழு நீர்த் திருக்குடந்தை *
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்! * கண்டேன் எம்மானே * (1)
3310 ## ārā amute aṭiyeṉ uṭalam * niṉpāl aṉpāye *
nīrāy alaintu karaiya * urukkukiṉṟa nĕṭumāle **
cīr ār cĕnnĕl kavari vīcum * cĕzhu nīrt tirukkuṭantai *
er ār kolam tikazhak kiṭantāy! * kaṇṭeṉ ĕmmāṉe * (1)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, inexhaustible Nectar, Your captivating form mesmerizes me and melts my being. In Tirukkuṭantai, the lush land with its invigorating climate, abundant paddy fields, and ample water, I have beheld You reclining, my Lord, surpassing all sweetness.

Explanatory Notes

(i) This decad which opens by addressing the Lord as ‘non-satiate Nectar’, has always had a special fascination for the great Ācāryas of yore. The Supreme Lord is an inexhaustible fountain of bliss and it was but meet that Nammāḻvār addressed the Lord at Tirukkuṭantai as above. All the same, this appellation sounded unique unto one Lōkaśāraṅga mahāmuni who lived in North + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆரா எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தி பிறவாத; அமுதே! அமுதமாகிய; எம்மானே! எம்பெருமானே!; அடியேன் உடலம் அடியேனுடைய சரீரமானது; நின்பால் உன் விஷயத்தில்; அன்பாயே அன்பு தானே வடிவெடுத்து; நீராய் தண்ணீராகி; அலைந்து ஒரு நிலையில் நில்லாமல்; கரைய கரையும்படியாக; உருக்குகின்ற உருக்குகின்ற; நெடுமாலே! எம்பெருமானே!; சீரார் சிறப்புப் பொருந்திய; செந்நெல் செந்நெற்பயிர்கள்; கவரி வீசும் சாமரம்போல் வீசுகின்ற; செழுநீர் செழுமையான நீரையுடைய; திருக்குடந்தை திருக்குடந்தையில்; ஏரார் அழகு பொருந்திய; கோலம் ஒப்பனை விளங்க; திகழக் கிடந்தாய்! சயனித்திருப்பவனே!; கண்டேன் கண்களால் கண்டு அநுபவிக்கப்பெற்றேன்
amudhĕ being eternally enjoyable; adiyĕn my (me who were captivated by such enjoyability); udalam body; ninpāl towards you; anbāyĕ having love as the mood/form; nīrāy losing firmness to become watery; alaindhu agitated (and not being steady); karaiya to dissolve; urukkuginṛa making it melt; nedumālĕ ŏh one who is having infinitely enjoyable greatness!; sīr by weight; ār abundance; sennel paddy crops; kavari vīsum appearing like fans swaying; sezhu rich; nīr having water; thirukkudandhai in thirukkudandhai; ĕr beauty; ār abundance; kŏlam decoration; thigazha shining; kidandhāy resting;; kaṇdĕn enjoyed by seeing with my own eyes.; emmānĕ being my lord (to have my activities at your disposal); en for me to acquire sathva guṇam (goodness)

TVM 5.8.2

3311 எம்மானே! என்வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே! *
எம்மாவுருவும்வேண்டுமாற்றால் ஆவாய்! எழிலேறே! *
செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும் திருக்குடந்தை *
அம்மாமலர்க்கண்வளர்கின்றானே! என்நான் செய்கேனே?!
3311 எம்மானே! என் வெள்ளை மூர்த்தி * என்னை ஆள்வானே *
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் * ஆவாய் எழில் ஏறே **
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் * திருக்குடந்தை *
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே * என் நான் செய்கேனே * (2)
3311 ĕmmāṉe! ĕṉ vĕl̤l̤ai mūrtti * ĕṉṉai āl̤vāṉe *
ĕm mā uruvum veṇṭum āṟṟāl * āvāy ĕzhil eṟe **
cĕm mā kamalam cĕzhu nīrmicaikkaṇ malarum * tirukkuṭantai *
am mā malarkkaṇ val̤arkiṉṟāṉe * ĕṉ nāṉ cĕykeṉe * (2)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

You, the faultless One, made me Your servant, oh, delightful Lord, assuming any form as You wish. In Tirukkuṭantai, large red lotus flowers bloom everywhere, yet You lie with Your lotus eyes closed. How can I bear this?

Explanatory Notes

The Āzhvār sees the red lotus flowers in full bloom in the ponds of Tirukkuṭantai. But the lotus-eyed Lord doesn’t open His eyes yet and greet the Āzhvār with sweet glances. This is more than the Āzhvār can bear. The Saint would expect quite a lot of favours from the Lord besides those already heaped on him. Although the Lord, in His iconic Form, does not, as a rule, open + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்மானே! எனக்கு ஸ்வாமியானவனே!; என் வெள்ளை பரிசுத்தமான வடிவுடைய; மூர்த்தி! பெருமானே!; என்னை ஆள்வானே என்னை அடிமை கொண்டவனே!; எம்மா எத்தனை பெருமை பொருந்திய; உருவும் உருவங்களையும் அவதாரங்களையும்; வேண்டும் அடியார்களை காக்க உன் விருப்பப்படி; ஆற்றால் ஆவாய் மேற்கொள்கின்றவனே!; எழில் ஏறே அழகிய காளை போன்றவனே!; செம்மா கமலம் சிவந்த பெரிய தாமரைகள்; செழுநீர் மிசைக் கண் செழுமை பொருந்திய நீரில்; மலரும் திருக்குடந்தை மலரும் திருக்குடந்தையில்; அம்மா மலர்க் கண் தாமரை போன்ற கண்களை; வளர்கின்றானே! மூடிக்கொண்டு உறங்குபவனே!; என் நான் செய்கேனே? உன் அழகு கண்டு எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தி பிறவாத நான் என் செய்வேன்
vel̤l̤ai very pure; mūrththi having a form; ennai to ensure that ī don-t lose my existence; āl̤vānĕ one who lets me enjoy him; e in all species (such as dhĕva (celestial), manushya (human), thiryak (animal) and sthāvara (plant), for the sake of his devotees); great; uruvum incarnations; vĕṇdum āṝāl out of desire; āvāy one who assumes; ezhil with the beauty in those forms, capturing the hearts as said in -pumsām dhrushti chiththāpahāriṇām-; ĕṛĕ appears majestic; sem reddish; big; kamalam lotus flowers; sezhu abundance; nīrmisai on the water; kaṇ everywhere; malarum blossoming; thirukkudandhai in thirukkudandhai; a that; distinguished; malar lotus flower like; kaṇ divine eyes; val̤argiṇrānĕ oh one who is resting [with your closed eyes]!; nān ī; en what; seygĕn shall ī do?; nān ī (who have no control over my doership); en what activity

TVM 5.8.3

3312 என்நான்செய்கேன்? யாரேகளைகண்? என்னையென் செய்கின்றாய்? *
உன்னாலல்லால்யாவராலும் ஒன்றும்குறைவேண்டேன் *
கன்னார்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்! அடியேனரு வாணாள் *
சென்னாளெந்நாள்? அந்நாள் உன்தாள்பிடித்தே செலக்காணே.
3312 என் நான் செய்கேன்? * யாரே களைகண்? * என்னை என் செய்கின்றாய்? *
உன்னால் அல்லால் யாவராலும் * ஒன்றும் குறை வேண்டேன் **
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் * அடியேன் அரு வாழ்நாள் *
செல் நாள் எந் நாள்? அந் நாள் * உன தாள் பிடித்தே செலக்காணே (3)
3312 ĕṉ nāṉ cĕykeṉ? * yāre kal̤aikaṇ? * ĕṉṉai ĕṉ cĕykiṉṟāy? *
uṉṉāl allāl yāvarālum * ŏṉṟum kuṟai veṇṭeṉ **
kaṉ ār matil̤ cūzh kuṭantaik kiṭantāy * aṭiyeṉ aru vāzhnāl̤ *
cĕl nāl̤ ĕn nāl̤? an nāl̤ * uṉa tāl̤ piṭitte cĕlakkāṇe (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Reference Scriptures

BG. 9-34, 18-66

Divya Desam

Simple Translation

Oh, Lord, who rests in Kuṭantai, surrounded by skillfully crafted walls, what can I do and who shall be my protector? What plans do You have for me? I desire nothing but to cling to Your feet for as long as I live.

Explanatory Notes

Finding the Lord unmoved by his ardent entreaties, the Āzhvār apprehends that the Lord expects him to fall back on other means and, therefore, puts the Lord the triple questions spelt out in lines 2 and 3 of this stanza. In essence, the Āzhvār asks the Lord whether He expects him to fend for himself or run after some one else seeking protection, or He would do the job + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான் அடியேன் உன் திருவடிகளைப் பெற; என் செய்கேன்? என்ன செய்வேன்?; யாரே களைகண்? என்னைக் காப்பார் யார்?; என்னை என்னை என்ன; என்செய்கின்றாய்? செய்வதாக நினைத்திருக்கிறாய்?; உன்னால் அல்லால் உன்னைத் தவிர்த்து; யாவராலும் வேறு எவெராலும்; ஒன்றும் குறை ஒரு உபாயத்தையும்; வேண்டேன் வேண்டேன்; கன் ஆர் வேலைப்பாடு அமைந்த; மதிள்சூழ் மதிள்களால் சூழ்ந்த; குடந்தை திருக்குடந்தையில்; கிடந்தாய்! சயனித்திருப்பவனே!; அடியேன் அரு அடியேனுடைய ஆத்மா; வாழ்நாள் வாழும் நாட்கள்; செல் நாள் கழிகின்ற நாட்கள்; எந்நாள் எத்தனை நாளோ; அந்நாள் அந்த நாள்களெல்லாம்; உன் தாள் உன் திருவடிகளை; பிடித்தே பற்றிக் கொண்டே; செலக் காணே நடக்கும்படி அருள வேண்டும்
seygĕn shall do;; kal̤aikaṇ protector; yār who?; ennai me (who am incapable); en seyginṛāy what are you planning to do? (are you planning to engage me in difficult upāyams (means)? or are you considering to accept responsibility for me?); unnāl allāl other than you (who are protector of all, apt and capable); yāvarālum anyone else (who is not a protector, inapt and incapable); onṛu anything; kuṛaiyum desire; vĕṇdĕn ī will not pray;; kan firmness; ār abundant; madhil̤ fort; sūzh surrounded; kudandhai in thirukkudandhai; kidandhāy ŏh one who is mercifully resting!; adiyĕn ī who am your servitor; aru āthmā; vāzh uplifting; nāl̤ time; sel happening; nāl̤ day; e how many; nāl̤ days; annāl̤ those days; una your; thāl̤ divine feet; pidiththĕ holding on; sela to be; kāṇ kindly see to it.; sela to go further; kāṇgiṛpār those who have the ability to see

TVM 5.8.4

3313 செலக்காண்கிற்பார்காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்! *
உலப்பிலானே! எல்லாவுலகுமுடையஒருமூர்த்தி! *
நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் * ஆகாசத்தைநோக்கி அழுவன்தொழுவனே.
3313 செலக் காண்கிற்பார் காணும் அளவும் * செல்லும் கீர்த்தியாய் *
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய * ஒரு மூர்த்தி **
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் * உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் * ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே * (4)
3313 cĕlak kāṇkiṟpār kāṇum al̤avum * cĕllum kīrttiyāy *
ulappu ilāṉe ĕllā ulakum uṭaiya * ŏru mūrtti **
nalattāl mikkār kuṭantaik kiṭantāy * uṉṉaik kāṇpāṉ nāṉ
alappu āy * ākācattai nokki azhuvaṉ tŏzhuvaṉe * (4)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Reference Scriptures

BG. 9-30

Divya Desam

Simple Translation

You, unmatched Lord of all realms, possess auspicious qualities that reach beyond sight and comprehension. To gaze upon You lying in Kuṭantai, where devout souls reside, I raise my eyes to the heavens, shedding tears, and bowing in reverence.

Explanatory Notes

The Āzhvār does not seek out the Lord in spiritual world or in the Milky-ocean but the One in nearby Tirukkuṭantai. Seeing the Lord connotes not merely seeing His Form, as others do, but conversing with and embracing Him. The Āzhvār is gazing at the sky, hoping that the Lord would drop down, from above, as He did, to rescue Gajendra, the elephant in distress. The Āzhvār weeps like a child and worships like elders.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செலக் காண்கிற்பார் மேன்மேலும் காணவல்லவர்கள்; காணும் அளவும் காணும் அளவும் அதற்கும்; செல்லும் அப்பாலும் போகும்படியான; கீர்த்தியாய்! கீர்த்தியை உடையவனே!; உலப்பு இலானே! முடிவு இல்லாதவனே!; எல்லா உலகும் எல்லா உலகங்களையும்; உடைய ஒரு மூர்த்தி உடைய ஒப்பற்ற மூர்த்தியே!; நலத்தா மிக்கார் பக்தி மிகுந்தவர்கள் வாழும்; குடந்தை திருக்குடந்தையில்; கிடந்தாய்! கண்வளர்பவனே!; உன்னை காண்பான் நான் உன்னை காண; அலப்பு ஆய் அலைந்து திரிந்து; ஆகாசத்தை நோக்கி ஆகாசத்தை நோக்கி; அழுவன் அழுவதும்; தொழுவன் தொழுவதுமாக இருக்கிறேன்
kāṇum al̤avum as far as they can see; sellum having greatness of going beyond the reach; kīrththiyāy one who is having qualities, wealth etc; ulappu end; ilānĕ one without having; ellā ulagum all of the world; udaiya having at his service; oru distinguished; mūrththi having a form, which is the goal; nalaththār mikkār of those who have great love towards you; kudandhai in thirukkudandhai; kidandhāy ŏh one who is resting (for their enjoyment)!; unnai you (who is greater than all, yet easily accessible for all); nān ī (who am very determined); kāṇbān to see and enjoy as desired; alappāy grieved; ākāsaththai the sky (from where you can descend); nŏkki looking at; azhuvan crying out like those who have great devotion; thozhuvan worshipping you (like those who have surrendered to you).; azhuvan (due to being bewildered) cry; thozhuvan (due to having clarity) worship

TVM 5.8.5

3314 அழுவன்தொழுவன்ஆடிக்காண்பன் பாடியலற்றுவன் *
தழுவல்வினையால்பக்கம்நோக்கி நாணிக்கவிழ்ந்திருப்பன் *
செழுவொண்பழனக்குடந்தைக்கிடந்தாய்! செந்தாமரைக்கண்ணா! *
தொழுவனேனைஉனதாள் சேரும்வகையேசூழ்கண்டாய்.
3314 அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் * பாடி அலற்றுவன் *
தழு வல்வினையால் பக்கம் நோக்கி * நாணிக் கவிழ்ந்திருப்பன் **
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் * செந்தாமரைக் கண்ணா *
தொழுவனேனை உன தாள் * சேரும் வகையே சூழ்கண்டாய் (5)
3314 azhuvaṉ tŏzhuvaṉ āṭik kāṇpaṉ * pāṭi alaṟṟuvaṉ *
tazhu valviṉaiyāl pakkam nokki * nāṇik kavizhntiruppaṉ **
cĕzhu ŏṇ pazhaṉak kuṭantaik kiṭantāy * cĕntāmaraik kaṇṇā *
tŏzhuvaṉeṉai uṉa tāl̤ * cerum vakaiye cūzhkaṇṭāy (5)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

My Lord, with red lotus-eyes, you rest in Kuṭantai, lush and fertile. I cry, worship, sing, dance, and talk shyly, burdened by heavy sins. I search for You in all directions, longing to reach Your feet. Please orchestrate the means for me to attain You.

Explanatory Notes

(i) The Āzhvār says that he has tried all methods at his disposal to induce the Lord’s response, but in vain. The young ones cry out their needs and get them while the knowledgeable elders achieve their purpose through worship; the Āzhvār has tried both these methods. It is now up to the Lord to take him on to His feet.

(ii) The sins, referred to here, connote the Āzhvār’s God-love remaining unreciprocated by the Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அழுவன் கலக்கத்தாலே அழுவது; தொழுவன் தெளிவாலே தொழுவது; ஆடிக் காண்பன் மயக்கத்தாலே ஆடுவது; பாடி குணங்களுக்குப் பரவசப்பட்டு பாடுவது; அலற்றுவன் துன்பத்தால் அலற்றுவது போன்று; தழு என்னைத் தழுவி நிற்கும்; வல் வினையால் வலிய பாவத்தால்; பக்கம் வருவானோ என்று அங்குமிங்கும்; நோக்கி பார்த்து; நாணிக் கவிழ்ந்து வெட்கப்பட்டுத் தலை குனிந்து; இருப்பன் இருப்பேன்; செழு ஒண் பழன செழுமையான நிலங்களையுடைய; குடந்தை திருக்குடந்தையில்; கிடந்தாய்! கண்வளர்பவனே!; செந்தாமரை சிவந்த தாமரை போன்ற; கண்ணா கண்களையுடைய கண்ணனே!; தொழுவனேனை வேறு கதியில்லாமல் தொழும் என்னை; உன் தாள் சேரும் உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ளும்; வகையே வகையை; சூழ்கண்டாய் ஒரு வழியை நீயே காட்டவேண்டும்
ādi dance; kāṇban see; pādi (being overwhelmed with [emperumān-s] qualities) sing; alaṝuvan (due to grief) blabber; thazhu embracing me; val vinaiyāl this powerful sin of love; pakkam directions (from where he can arrive); nŏkki look; nāṇi feeling ashamed (due to not retaining the true nature [having done all of these] and not attaining the desire [of emperumān-s arrival]); kavizhndhiruppan hang my head down;; sezhu abundant; oṇ attractive; pazhanam having water rich fields; kudandhai in thirukkudandhai; kidandhāy resting there (for the sake of your devotees); sem reddish; thāmarai lotus flower like; kaṇṇā oh one who is having divine eyes!; thozhuvanĕnai (due to lacking any other refuge) ī who am very needy [of your protection]; un (you who are apt) your; thāl̤ (enjoyable) divine feet; sĕrum vagai to reach; (nīyĕ) sūzh kaṇdāy find out the appropriate means.; vāzh due to enriched living (of experiencing bhagavān); thol natural

TVM 5.8.6

3315 சூழ்கண்டாய்என்தொல்லைவினையையறுத்து உன்னடிசேரும்
ஊழ்கண்டிருந்தே * தூராக்குழிதூர்த்து எனைநாள கன்றிருப்பன்? *
வாழ்தொல்புகழார்குடந்தைக்கிடந்தாய்! வானோர் கோமானே! *
யாழினிசையே! அமுதே! அறிவின்பயனே அரியேறே!
3315 சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து * உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே * தூராக்குழி தூர்த்து * எனை நாள் அகன்று இருப்பன்? **
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் * வானோர் கோமானே *
யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே அரிஏறே! (6)
3315 cūzhkaṇṭāy ĕṉ tŏllai viṉaiyai aṟuttu * uṉ aṭicerum
ūzh kaṇṭirunte * tūrākkuzhi tūrttu * ĕṉai nāl̤ akaṉṟu iruppaṉ? **
vāzh tŏl pukazhār kuṭantaik kiṭantāy * vāṉor komāṉe *
yāzhiṉ icaiye! amute! aṟiviṉ payaṉe arieṟe! (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

In Kuṭantai, renowned since ancient times, oh Chief of Nithyasuris, you are like the sweet melody from a lyre, delightful as nectar, the ultimate destination of all knowledge, majestic like a lion and a bull combined. Though I am aware of this, I find myself buried in worldly concerns. How long can I remain separated from You? I implore You to remove my ancient sins and graciously welcome me into your divine abode.

Explanatory Notes

The Lord is unto the Āzhvār, the sum total of all things delicious, and he prays that the Lord should cut out the sins of one so deeply absorbed in Him, even as He did in the case of the chaste ones worshipping Him in Tirukkuṭantai. The ultimate aim of knowledge is to secure happiness and; the Lord is happiness itself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொல் புகழார் தொன்மையான புகழையுடைய; வாழ் அடியார்கள் வாழும்; குடந்தை திருக்குடந்தையில்; கிடந்தாய்! கண்வளர்பவனே!; வானோர் நித்யஸூரிகளின்; கோமானே! தலைவனே!; யாழின் இசையே! யாழின் இசையே!; அமுதே! அமுதம் போன்றவனே!; அறிவின் பயனே! அறிவின் பயனே!; அரிஏறே! அரிய காளை போன்றவனே!; ஊழ்கண்டு இருந்தே பழமையான; தூராக்குழி கெட்ட ஆசைகளாகிற குழியை; தூர்த்து நிறைத்துக்கொண்டு; எனை நாள் எத்தனை நாள் நான் உன்னை; அகன்று இருப்பன் பிரிந்து இருப்பேன்; என் என்னுடைய; தொல்லைவினையை அநாதியான பாபங்களை; அறுத்து அறுத்து; உன் அடி சேரும் உன் திருவடிகளை அடையும்; சூழ்கண்டாய் ஒரு உபாயத்தைச் செய்தருள வேண்டும்
pugazhār of those who are having glories; kudandhai in thirukkudandhai; kidandhāy mercifully resting (to be enjoyed by them); vānŏr for nithyasūris; kŏmānĕ being the controller (and enjoyed by them); yāzhin the musical instrument yāzh (an ancient string instrument, which is unlike the throat which may not function well at times); isaiyĕ like the tune (enjoyable to the ears); amudhĕ like the eternally enjoyable nectar, one who is enjoyable to the tongue through sthuthis (praising songs) etc.; aṛivin payanĕ being enjoyable to the mind, since you are the result of knowledge; ariyĕṛĕ like the best among the lions, one who is great and hence cannot be comprehended; (nān) un (ī) your; adi divine feet; sĕrum to reach and exist exclusively for you; ūzh ancient aspect; kaṇdirundhĕ having seen; thūrā difficult to fill; kuzhi the pit of inappropriate desires; thūrththu dug (through inappropriate pleasures); enai how many; nāl̤ days; aganṛu being separate; iruppan can ī exist; en my; thol vinaiyai ancient sins; aṛuththu sever; unnadi sĕrumpadi to reach your divine feet which is apt for my true nature; sūzhkaṇdāy mercifully do it.; ariyĕṛĕ one who is appearing majestic due to his uncontrollable independence; am attractive

TVM 5.8.7

3316 அரியேறே என்னம்பொற்சுடரே! செங்கட்கருமுகிலே! *
எரியே! பவளக்குன்றே! நாள்தோளெந்தாய்! உனதருளே! *
பிரியாவடிமையென்னைக்கொண்டாய்! குடந்தைத் திருமாலே! *
தரியேனினிஉன்சரணந்தந்து என் சன்மம்களையாயே.
3316 அரிஏறே என் அம் பொன் சுடரே * செங்கண் கரு முகிலே! *
எரி ஏய் பவளக் குன்றே! * நால் தோள் எந்தாய் உனது அருளே **
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் * குடந்தைத் திருமாலே *
தரியேன் இனி உன் சரணம் தந்து * என் சன்மம் களையாயே (7)
3316 arieṟe ĕṉ am pŏṉ cuṭare * cĕṅkaṇ karu mukile! *
ĕri ey paval̤ak kuṉṟe! * nāl tol̤ ĕntāy uṉatu arul̤e **
piriyā aṭimai ĕṉṉaik kŏṇṭāy * kuṭantait tirumāle *
tariyeṉ iṉi uṉ caraṇam tantu * ĕṉ caṉmam kal̤aiyāye (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, my Lord with broad shoulders, resembling a radiant coral mountain, adorned with a golden beam, and possessing captivating red eyes, like a majestic blue mountain. By Your grace, You have welcomed me into Your service. Oh, revered Sire, residing in Kuṭantai, I can no longer bear to be apart from You. I beseech You to sever this mortal frame and bless me with the proximity of Your divine feet.

Explanatory Notes

The Āzhvār‘s complaint is that, even after having induced in him God-love of such a high order, the Lord has kept him in this material body, instead of lifting him up to His feet. In nearby Kuṭantai, the Lord and His Divine Consort are gracing the votaries, enlisting them in Divine Service. Is it not odd that the Āzhvār should languish like a child, dying of hunger, right + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரி ஏறே! அழகிய காளை போன்றவனே!; என் அம் பொன் அழகிய பொன்போன்ற; சுடரே! ஒளியுடையவனே!; செங்கண் சிவந்த கண்களையுடைய; கருமுகிலே! காளமேகம் போன்றவனே!; எரியே! அக்னி போன்றவனே!; பவளக் குன்றே! சிவந்த பவளமலை போன்றவனே!; நால்தோள் நான்கு தோள்களையுடைய; எந்தாய்! என் தந்தையே!; உனதருளே உன் அருளை; என்னைப் பிரியா ஒருக்காலும் பிரியாதபடி; அடிமை கைங்கர்யங்களை; கொண்டாய் கொண்டவனாய்; குடந்தை திருக்குடந்தையில்; திருமாலே! வாழும் திருமாலே!; தரியேன் இனி இனி ஆறி இருக்கமாட்டேன்; உன் சரணம் உன் திருவடிகளை; தந்து என் தந்து என்னுடைய; சன்மம் சரீரத் தொடர்பை; களையாயே தவிர்த்தருள வேணும்
pon like gold; sudar radiance in his form; en one who let me enjoy; sem reddish; kaṇ having divine eyes; karu mugilĕ having dark cloud like form which is the abode for previously explained radiance; eriyĕ reddish like fire; paval̤ak kunṛĕ having a tall firm form like that of a pearl mountain; nāl thŏl̤ manifesting four shoulders along with that form; endhāy being my lord who accepted me as his servant; unadhu your; arul̤ mercy; piriyā to never separate; adimai services through speech etc; (ennai) koṇdāy accepted (me), and as the recipient of such service; kudandhai in thirukkudandhai; thirumālĕ oh one who appeared along with lakshmī!; ini after (you being the benefactor along with pirātti); thariyĕn will not remain relaxed.; un your; saraṇam charaṇam, the divine feet; thandhu bestow; en my; sanmam connection with this body; kal̤aivāy eliminate with the traces.; thunbam sorrow (of not enjoying you); kal̤aivāy eliminate

TVM 5.8.8

3317 களைவாய்துன்பம்களையாதொழிவாய் களைகண்மற்றிலேன் *
வளைவாய்நேமிப்படையாய்! குடந்தைக்கிடந்தமாமாயா! *
தளராவுடலமெனதாவி சரிந்துபோம்போது *
இளையாதுனதாள்ஒருங்கப்பிடித்துப் போதஇசைநீயே.
3317 களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் * களைகண் மற்று இலேன் *
வளை வாய் நேமிப் படையாய் * குடந்தைக் கிடந்த மா மாயா **
தளரா உடலம் எனது ஆவி * சரிந்து போம்போது *
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் * போத இசை நீயே * (8)
3317 kal̤aivāy tuṉpam kal̤aiyātu ŏzhivāy * kal̤aikaṇ maṟṟu ileṉ *
val̤ai vāy nemip paṭaiyāy * kuṭantaik kiṭanta mā māyā **
tal̤arā uṭalam ĕṉatu āvi * carintu pompotu *
il̤aiyātu uṉa tāl̤ ŏruṅkap piṭittup * pota icai nīye * (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

My marvelous Lord, resting in Kuṭantai, as my weary body reaches its end, bless me to remain steadfast at Your feet, oh wielder of the lovely discus with its curved mouth! Let me not loosen my grip on Your feet; whether or not You alleviate my sorrows, there is no refuge for me other than You.

Explanatory Notes

(i) The ‘Prapanna’, pursuing the path of loving surrender to the Lord’s spontaneous grace, has to invoke the Lord’s grace as the sole saviour, for deliverance from all ills and evils; he shall not knock at any door other than His, whatever be the provocation. Whether the Lord fulfils His part of the obligation or not. the Āzhvār will not budge from his avowed stand.

(ii) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வளைவாய் வளைந்த வாயையுடைய; நேமி சக்கரத்தை; படையாய்! ஆயுதமாகவுடையவனே!; குடந்தைக் கிடந்த திருக்குடந்தையிலிருக்கும்; மா மாயா! மா மாயனே!; துன்பம் எனது துன்பங்களை; களைவாய் நீ களைந்தாலும் சரி; களையாது ஒழிவாய் களையாவிட்டாலும் சரி; களை கண் துன்பங்களைப் போக்கும்; மற்று சரண் எனக்கு; இலேன் வேறு ஒருவரும் இல்லை; தளரா உடலம் சரீரம் தளர்ந்து; எனது ஆவி என் உயிரும்; சரிந்து சரீரத்தை விட்டு; போம்போது போகும் காலம் ஆயிற்று; இளையாது தளராமல்; உன் தாள் உன் திருவடிகளை; ஒருங்க பிடித்து ஒருமிக்கப் பிடித்து; போத கொண்டு போக; இசை நீயே நீயே அநுமதி அருளவேண்டும்
kal̤iyādhozhivāy not eliminate; kal̤aikaṇ eliminator of sorrows; maṝu any other; ilĕn not having;; val̤ai round; vāy having mouth; nĕmi divine chakra; padaiyāy one who is having as weapon; kudandhai in thirukkudandhai; kidandha mercifully resting; māmāyā oh one who is very amaśingly beautiful!; udalam body; thal̤arā weakened; enadhu my; āvi prāṇa (life); sarindhu becomes shaken; pŏm pŏdhu the final stage of leaving the body arrives; il̤aiyādhu without losing the mental strength; una your; thāl̤ divine feet; orunga in a singular manner (as upāyam (means) and upĕyam (goal)); pidiththu holding on; pŏdha to conduct; nīyĕ you only; isai allow.; ennai me (who have turned away from you since time immemorial); isaiviththu to accept (my true nature of being your servitor)

TVM 5.8.9

3318 இசைவித்தென்னையுன்தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே! *
அசைவிலமரர்தலைவர்தலைவா! ஆதிப்பெருமூர்த்தி! *
திசைவில்வீசுஞ்செழுமாமணிகள்சேரும் திருக்குடந்தை *
அசைவிலுலகம்பரவக்கிடந்தாய்! காணவாராயே.
3318 இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் * இருத்தும் அம்மானே *
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா * ஆதிப் பெரு மூர்த்தி **
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் * திருக்குடந்தை *
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் * காண வாராயே (9)
3318 icaivittu ĕṉṉai uṉ tāl̤ iṇaikkīzh * iruttum ammāṉe *
acaivu il amarar talaivar talaivā * ātip pĕru mūrtti **
ticai vil vīcum cĕzhu mā maṇikal̤ cerum * tirukkuṭantai *
acaivu il ulakam paravak kiṭantāy * kāṇa vārāye (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Oh, Supreme Chief of the eternal Nithyasuris in SriVaikuntam! Oh, primordial Lord, I wandered far from Your presence, but You, as my Father, instilled in me the longing for Your divine feet. You abide incessantly in Tirukkuṭantai, where precious gems gather, and You are revered by the entire world. Please descend, my Lord, so that I may behold You.

Explanatory Notes

(i) It is all due to the Lord’s grace and age-long effort that the straying individual is brought round and made to submit to the Lord’s protection, giving up all notions of self-ownership and self-protection. Having generated in the Āzhvār God-love of such great magnitude, the Lord should naturally follow it up by obliging Him with His presence. Having seen the Lord in + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை என்னை; இசைவித்து இசையும்படி செய்து; உன் தாள் இணைக்கீழ் உன் திருவடிக்கீழ்; இருத்தும் கைங்கர்யம் பண்ணும்படி அருளின; அம்மானே! அம்மானே!; அசைவு இல் அசைவு இல்லாத; அமரர் தலைவர் நித்யஸூரிகளுக்குள் தலைவரான; தலைவா! விஷ்வக்ஸேனருக்கும் தலைவனே!; ஆதிப் பெருமூர்த்தி! முழுமுதற்கடவுளே!; திசை வில் எல்லா இடங்களிலும்; வீசும் செழுமா ஒளி வீசும் செழுமையான; மணிகள் சேரும் ரத்தினங்கள் சேருமிடமான; திருக்குடந்தை திருக்குடந்தையில்; அசைவு இல் ஓய்வில்லாமல்; உலகம் பரவ உலகம் எல்லாம் வணங்கி; கிடந்தாய்! துதிக்கும்படி சயனித்தருள்பவனே!; காண நான் கண்டு அநுபவிக்கும்படி; வாராயே நீ வரவேண்டும்
un your; thāl̤ iṇaik kīzh at divine feet, with the knowledge of them being both the means and the goal; iruththum placing (me to exist exclusively for you); ammānĕ being the lord; asaivu disturbance; il not having; amarar nithyasūris [eternal residents of paramapadham]; thalaivar leaders such as anantha [ādhiṣĕshan] , garuda, vishvaksĕna et al; thalaivā being the leader; ādhi being the cause for everything; peru greater than all; mūrththi having a form; thisai in all directions; vil radiance; vīsum spreading; sezhu attractive; most expensive; maṇigal̤ precious gems; sĕrum reaching; thirukkudandhai in thirukkudandhai; asaivu shakiness due to doubt of difficulty [in attaining him]; il being removed; ulagam world; parava to praise; kidandhāy oh one who is mercifully resting; kāṇa to see (your beauty in walking posture); vārāy should come.; vārā instead of walking towards us with your beautiful form to be seen by the eyes and enjoyed; aruvāy without a [physical] form

TVM 5.8.10

3319 வாராவருவாய்வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்! *
ஆராவமுதாய் அடியேனாவி அகமேதித்திப்பாய் *
தீராவினைகள்தீரஎன்னையாண்டாய்! திருக்குடந்தை
ஊரா! * உனக்காட்பட்டும் அடியேன்இன்னமுழல்வேனோ? (2)
3319 ## வாரா அருவாய் வரும் என் மாயா! * மாயா மூர்த்தியாய் *
ஆரா அமுதாய் அடியேன் ஆவி * அகமே தித்திப்பாய் **
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் * திருக்குடந்தை *
ஊராய் * உனக்கு ஆள் பட்டும் * அடியேன் இன்னம் உழல்வேனோ? (10)
3319 ## vārā aruvāy varum ĕṉ māyā! * māyā mūrttiyāy *
ārā amutāy aṭiyeṉ āvi * akame tittippāy **
tīrā viṉaikal̤ tīra ĕṉṉai āṇṭāy * tirukkuṭantai *
ūrāy * uṉakku āl̤ paṭṭum * aṭiyeṉ iṉṉam uzhalveṉo? (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

My wondrous Lord, Your celestial form resides formless in my mind, sweetening it, but Your irresistible and insatiable form, You refuse to reveal to me; sins beyond remedy, You have destroyed, binding me as Your vassal. Oh Lord, reigning over Tirukkuṭantai, should I still suffer even as Your loyal servant?

Explanatory Notes

(i) The Āzhvār who was fondly hoping to enjoy the resplendent form of the Lord enshrined at Tirukkuṭantai, feels frustrated, as the Lord didn’t come up to him and reveal His alluring Form, insatiable. The Āzhvār, therefore, asks the Lord whether He intends that he should knock at many more pilgrim centres.

(ii) When the Āzhvār addressed the Lord as ‘Insatiable Nectar’, it is not a mere vocal exercise; it goes right to the interior of his heart and sweetens it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாரா திருவுருவத்தோடு வராமல்; அருவாய் அருவமாய்; வரும் என் மனக்கண் முன் தோன்றுபவனே!; என் மாயா! என் மாயனே!; மாயா மூர்த்தியாய்! மாய மூர்த்தியாய்த் தோன்றுபவனே!; ஆரா எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத; அமுதாய்! அமுதம் போன்றவனே!; அடியேன் ஆவி என் மனதுக்குள்ளே; அகமே தித்திப்பாய்! தித்தித்திருக்குமவனே!; தீரா வினைகள் தீராத வினைகளை; தீர என்னை தீரும்படியாக அடியேனை; ஆண்டாய்! ஆட்கொண்டு அருளினவனே!; திருக்குடந்தை திருக்குடந்தையை; ஊராய்! ஒப்பற்ற ஊராய்க் கொண்டவனே!; அடியேன் உனக்கு அடியேன் உனக்கு; ஆட்பட்டும் அடிமைப்பட்டும்; இன்னம் இன்னமும் இங்கு; உழல்வேனோ? அலைந்து திரிவேனோ?
varum appearing inside me; en māyā revealing your amaśing qualities; māyā free from decay and destruction; mūrththiyāy having eternal auspicious form; ārā unsatiated even after enjoying; amudhāy being enjoyable like nectar; adiyĕn me who am your servitor, my; āvi the abode of my soul; agam inside the heart; thiththippāy one who triggers great taste; thīrā inexhaustible; vinaigal̤ sins; thīra to destroy; ennai me; āṇdāy who accepted my service by speech; thirukkudandhai thirukkudandhai; ūrāy one who is having it as your distinguished abode and being present there; unakku for you (who has such saulabhyam (easy accessibility) and saundharyam (beauty)); āl̤ pattum though being your servant; adiyĕn ī who am existing exclusively for you and have no other refuge; innam still, in future; uzhalvĕnŏ should ī suffer with no interaction with you as desired?; uzhalai resembling collection of wooden bars; enbu having bones

TVM 5.8.11

3320 உழலையென்பின்பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான் *
கழல்களவையேசரணாக்கொண்ட குருகூர்ச்சடகோபன் *
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைதீரவல்லார் காமர்மானேய்நோக்கியர்க்கே. (2)
3320 ## உழலை என்பில் பேய்ச்சி முலையூடு * அவளை உயிர் உண்டான் *
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட * குருகூர்ச் சடகோபன் **
குழலின் மலியச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
மழலை தீர வல்லார் * காமர் மான் ஏய் நோக்கியர்க்கே (11)
3320 ## uzhalai ĕṉpil peycci mulaiyūṭu * aval̤ai uyir uṇṭāṉ *
kazhalkal̤ avaiye caraṇ ākak kŏṇṭa * kurukūrc caṭakopaṉ **
kuzhaliṉ maliyac cŏṉṉa * or āyirattul̤ ip pattum *
mazhalai tīra vallār * kāmar māṉ ey nokkiyarkke (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Those who deeply understand these ten songs, among the thousand melodious verses crafted by Kurukur Catakopan, who sought refuge at the feet of the Lord who sucked the life out of the demoness Putana's breast, will be adored as the doe-eyed maidens adore their beloved ones.

Explanatory Notes

This end-stanza reveals that those who learn this decad throughly, will unto the Lord’s devotees be as dear as the erotic lovers are unto their suitors. The doe-eyed damsels, obviously, refer to the Apsarās in spiritual world, beyond the mischief of sensuality. The Āzhvār’s intention could only be as explained above, as he is not the one to hark back to the domain of sensual + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உழலை என்பின் தடிபோன்ற எலும்புகளையுடைய; பேய்ச்சி முலையூடு பூதனையின் பாலோடு; அவளை உயிர் அவள் உயிரையும்; உண்டான் உண்டவனான கண்ணனின்; கழல்கள் அவையே திருவடிகளையே; சரணாகக் கொண்ட சரணமாகப் பற்றின; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; குழலின் மலிய குழலோசையைக் காட்டிலும் இனிதாக; சொன்ன அருளிச் செய்த; ஓர் ஆயிரத்துள் ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப்பாசுரங்களும்; மழலை தீர இவர் சொன்ன ஆற்றாமையோடே; வல்லார் ஓத வல்லவர்கள்; மான் ஏய் மான்போன்ற பார்வையுடைய; காமர் பெண்களால்; நோக்கியர்க்கே ஆதரிக்கத் தக்கவர் ஆவர்
pĕychchi demoniac lady; mulaiyūdu through her bosom; aval̤ai her; uyir uṇdān krishṇa sucked her life and eliminated the enemy/hurdle, his; avai those which were revealed to āzhvār as means; kazhalgal̤ĕ divine feet only; saraṇāga means to fulfil the desire; koṇda considered; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; kuzhalil more than the flute which is the source for the sound and tune; maliya having more sweetness; sonna mercifully spoken; ŏr distinguished; āyiraththul̤ among the thousand pāsurams; ip paththum this decad; mazhalai their childishness, ignorance; thīra to be rid of; vallār those who can recite with the same emotion as āzhvār; mānĕy like a deer; nŏkkiyarkku those having eyes, i.e., divine celestial damsels who have beautiful moon like face; kāmar will be cared by, while doing brahmālankāram [when the liberated soul reaches paramapadham, many beautiful divine damsels will decorate the liberated soul before bringing that soul to bhagavān]. ṭhis is also explained as- just as damsels would desire for their beloved, such devotees who recite this decad will be desired by ṣrīvaishṇavas.; mān deer-s eyes; ĕy matching