Chapter 7
Āzhvār talks of the fact that he has no other refuge and surrenders to Vānamāmalai Perumāl - (நோற்ற நோன்பு)
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)
Āzhvār surrenders at the divine feet of emperumAn residing in Vānamāmalai divyadesam also known as ‘chIrivara manGgalaNagar’. Bhagavān residing in this divyadesam goes by the same name as Vānamāmalai. This divyadesam is located in Pandiya Nādu.
‘சீரிவர மங்கலநகர்’ எனப்படும் வானமாமலை திவ்யதேசத்திலுள்ள எம்பெருமானை ஆழ்வார் சரணம் புகுகிறார். வானமாமலையிலுள்ள பெருமாளுக்கும் வானமாமலை என்றே பெயர். இவ்வூர் பாண்டிய நாட்டில் இருக்கிறது.
ஐந்தாம் பத்து -ஏழாம் திருவாய்மொழி – “நோற்ற நோன்பு”-பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் அநுகரித்துத் + Read more
Verses: 3299 to 3309
Grammar: Āsiriyaththuṟai / ஆசிரியத்துறை
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will become sweet nectar for the gods in the sky
- TVM 5.7.1
3299 ## நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் * ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் * அரவின் அணை அம்மானே **
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் * சிரீவரமங்கல நகர் *
வீற்றிருந்த எந்தாய் * உனக்கு மிகை அல்லேன் அங்கே * (1) - TVM 5.7.2
3300 அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் * உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து * நான்
எங்குற்றேனும் அல்லேன் * இலங்கை செற்ற அம்மானே **
திங்கள் சேர் மணி மாட நீடு * சிரீவரமங்கலநகர் உறை *
சங்கு சக்கரத்தாய் * தமியேனுக்கு அருளாயே * (2) - TVM 5.7.3
3301 கருளப் புள் கொடி சக்கரப் படை * வான நாட என் கார்முகில் வண்ணா *
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி * அடிமைகொண்டாய் **
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் * சிரீவரமங்கலநகர்க்கு *
அருள்செய்து அங்கு இருந்தாய் * அறியேன் ஒரு கைம்மாறே * (3) - TVM 5.7.4
3302 மாறு சேர் படை நூற்றுவர் மங்க * ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி *
நீறு செய்த எந்தாய் * நிலம் கீண்ட அம்மானே **
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் * சிரீவரமங்கலநகர் *
ஏறி வீற்றிருந்தாய் * உன்னை எங்கு எய்தக் கூவுவனே? * (4) - TVM 5.7.5
3303 எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? * எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று *
கைதவங்கள் செய்யும் * கரு மேனி அம்மானே **
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் * சிரீவரமங்கலநகர் *
கைதொழ இருந்தாய் * அது நானும் கண்டேனே (5) - TVM 5.7.6
3304 ## ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா * என்றும் என்னை ஆளுடை *
வான நாயகனே * மணி மாணிக்கச்சுடரே **
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் * கைதொழ உறை *
வானமாமலையே * அடியேன் தொழ வந்தருளே (6) - TVM 5.7.7
3305 வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட * வானவர் கொழுந்தே * உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே * முழு ஏழ் உலகும் உண்டாய் **
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் * சிரீவரமங்கலநகர் *
அந்தம் இல் புகழாய் * அடியேனை அகற்றேலே * (7) - TVM 5.7.8
3306 அகற்ற நீ வைத்த மாய வல்லை * ஐம்புலன்களாம் அவை * நன்கு அறிந்தனன் *
அகற்றி என்னையும் நீ * அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் **
பகல் கதிர் மணி மாட நீடு * சிரீவரமங்கை வாணனே * என்றும்
புகற்கு அரிய எந்தாய் * புள்ளின் வாய் பிளந்தானே * (8) - TVM 5.7.9
3307 புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய் * எருது ஏழ் அடர்த்த * என்
கள்ள மாயவனே! * கருமாணிக்கச் சுடரே **
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் * மலி தண் சிரீவரமங்கை *
உள் இருந்த எந்தாய் * அருளாய் உய்யுமாறு எனக்கே * (9) - TVM 5.7.10
3308 ஆறு எனக்கு நின் பாதமே * சரண் ஆகத் தந்தொழிந்தாய் * உனக்கு ஓர் கைம்
மாறு நான் ஒன்று இலேன் * எனது ஆவியும் உனதே **
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் * மலி தண் சிரீவரமங்கை *
நாறு பூந் தண் துழாய் முடியாய் * தெய்வ நாயகனே * (10) - TVM 5.7.11
3309 ## தெய்வ நாயகன் நாரணன் * திரிவிக்கிரமன் அடி இணைமிசை *
கொய் கொள் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் **
செய்த ஆயிரத்துள் இவை * தண் சிரீவரமங்கை மேய பத்துடன் *
வைகல் பாட வல்லார் * வானோர்க்கு ஆரா அமுதே * (11)