Chapter 9

Parānkusa Nāyaki responds to her friends who are stopping her from going to Thiruvallavāzh - (மான் ஏய்)

திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)
Even though Āzhvār became frail in ThirukkudaNthai, he decided to travel to ‘Thiruvalla vāzh’ divyadesam located in Malai Nādu. But, obstacles such as several groves, the breeze, the buzzing of the bees and vaidIga (Vedic) celebrations prevented him from reaching ‘Thiruvalla vāzh’ causing distress for Āzhvār. These hymns are based on a girl venting her misery and despondency to her friend.
திருக்குடந்தையிலே தளர்ந்த ஆழ்வார், ‘திருவல்ல வாழ்’ என்ற மலைநாட்டுத் திருப்பதிக்குச் செல்ல நினைத்தார். ஆனால், அவ்வூருக்குப் போகமுடியாமல் சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதிகச் செயல்களின் ஆரவாரமும் அவரைத் தடுத்துயர் விளைவித்தன. அவற்றால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் ஈண்டுப் + Read more
Verses: 3321 to 3331
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பஞ்சமம்
Timing: 4.49-6.00 PM
Recital benefits: will have happy lives
  • TVM 5.9.1
    3321 ## மான் ஏய் நோக்கு நல்லீர் * வைகலும் வினையேன் மெலிய *
    வான் ஆர் வண் கமுகும் * மது மல்லிகை கமழும் **
    தேன் ஆர் சோலைகள் சூழ் * திருவல்லவாழ் உறையும்
    கோனாரை * அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? * (1)
  • TVM 5.9.2
    3322 என்று கொல் தோழிமீர்காள் * எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? *
    பொன்திகழ் புன்னை மகிழ் * புது மாதவி மீது அணவி **
    தென்றல் மணம் கமழும் * திருவல்லவாழ் நகருள்
    நின்ற பிரான் * அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)
  • TVM 5.9.3
    3323 சூடு மலர்க்குழலீர்! துயராட்டியேன் மெலிய *
    பாடும் நல் வேத ஒலி * பரவைத் திரை போல் முழங்க **
    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் * தண் திருவல்லவாழ் *
    நீடு உறைகின்ற பிரான் * கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)
  • TVM 5.9.4
    3324 நிச்சலும் தோழிமீர்காள் * எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? *
    பச்சிலை நீள் கமுகும் * பலவும் தெங்கும் வாழைகளும் **
    மச்சு அணி மாடங்கள் மீது அணவும் * தண் திருவல்லவாழ் *
    நச்சு அரவின் அணைமேல் * நம்பிரானது நல் நலமே (4)
  • TVM 5.9.5
    3325 நல் நலத் தோழிமீர்காள் * நல்ல அந்தணர் வேள்விப் புகை *
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் * தண் திருவல்லவாழ் **
    கன்னல் அம் கட்டி தன்னைக் * கனியை இன் அமுதம் தன்னை *
    என் நலம் கொள் சுடரை * என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)
  • TVM 5.9.6
    3326 காண்பது எஞ்ஞான்றுகொலோ * வினையேன் கனிவாய் மடவீர் *
    பாண் குரல் வண்டினொடு * பசுந் தென்றலும் ஆகி எங்கும் **
    சேண் சினை ஓங்கு மரச் * செழுங் கானல் திருவல்லவாழ் *
    மாண் குறள் கோலப் பிரான் * மலர்த் தாமரைப் பாதங்களே? (6)
  • TVM 5.9.7
    3327 பாதங்கள்மேல் அணி * பூந் தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர் *
    ஓத நெடுந் தடத்துள் * உயர் தாமரை செங்கழுநீர் **
    மாதர்கள் வாள் முகமும் * கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ் *
    நாதன் இஞ் ஞாலம் உண்ட * நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)
  • TVM 5.9.8
    3328 நாள்தொறும் வீடு இன்றியே * தொழக் கூடுங்கொல் நல் நுதலீர் *
    ஆடு உறு தீங் கரும்பும் * விளை செந்நெலும் ஆகி எங்கும் **
    மாடு உறு பூந் தடம் சேர் * வயல் சூழ் தண் திருவல்லவாழ் *
    நீடு உறைகின்ற பிரான் * நிலம் தாவிய நீள் கழலே? (8)
  • TVM 5.9.9
    3329 கழல் வளை பூரிப்ப யாம் கண்டு * கைதொழக் கூடுங்கொலோ *
    குழல் என்ன யாழும் என்னக் * குளிர் சோலையுள் தேன் அருந்தி **
    மழலை வரி வண்டுகள் இசை பாடும் * திருவல்லவாழ் *
    சுழலின் மலி சக்கரப் பெருமானது * தொல் அருளே? (9)
  • TVM 5.9.10
    3330 தொல் அருள் நல் வினையால் * சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள் *
    தொல் அருள் மண்ணும் விண்ணும் * தொழ நின்ற திருநகரம் **
    நல் அருள் ஆயிரவர் * நலன் ஏந்தும் திருவல்லவாழ் *
    நல் அருள் நம் பெருமான் * நாராயணன் நாமங்களே? (10)
  • TVM 5.9.11
    3331 ## நாமங்கள் ஆயிரம் உடைய * நம் பெருமான் அடிமேல் *
    சேமம் கொள் தென் குருகூர்ச் * சடகோபன் தெரிந்து உரைத்த **
    நாமங்கள் ஆயிரத்துள் * இவை பத்தும் திருவல்லவாழ் *
    சேமம் கொள் தென் நகர்மேல் * செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)