Chapter 10

Āzhvār beseeches the Lord to join him in his state of bliss - (பிறந்த ஆறும்)

ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்
“emperumAnE! Even when I suffer from being separated from you, grant that your auspicious traits are always in my utterances” so saying, Āzhvār surrenders at His divine feet.
“எம்பெருமானே! உன்னை விட்டுப் பிரிந்து நான் வருந்தினாலும் உன் குணங்களையே நான் கூறும்படி அருளவேண்டும்” என்று அவன் திருவடிகளில் ஆழ்வார் சரணம் புகுகிறார்.
Verses: 3332 to 3342
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: காந்தாரம்
Timing: 7.13 - 8.24 AM
Recital benefits: will reach Vaikuntam and be happy always
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.10.1

3332 பிறந்தவாறும்வளர்ந்தவாறும் பெரியபாரதம் கைசெய்து * ஐவர்க்குத்
திறங்கள்காட்டியிட்டுச் செய்துபோனமாயங்களும் *
நிறந்தனூடுபுக்குஎனதாவியை நின்றுநின்றுஉருக்கி யுண்கின்ற * இச்
சிறந்தவான்சுடரே! உன்னையென்றுகொல்? சேர்வதுவே. (2)
3332 ## பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் * பெரிய பாரதம் கைசெய்து * ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் * செய்து போன மாயங்களும் **
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை * நின்று நின்று உருக்கி உண்கின்ற * இச்
சிறந்த வான் சுடரே! * உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)
3332 ## piṟanta āṟum val̤arnta āṟum * pĕriya pāratam kaicĕytu * aivarkkut
tiṟaṅkal̤ kāṭṭiyiṭṭuc * cĕytu poṉa māyaṅkal̤um **
niṟam taṉ ūṭu pukku ĕṉatu āviyai * niṉṟu niṉṟu urukki uṇkiṉṟa * ic
ciṟanta vāṉ cuṭare! * uṉṉai ĕṉṟukŏl cervatuve? (1)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, Lord of boundless radiance, the tale of Your birth, Your upbringing, and Your remarkable military strategy in the great battle of Bhārata, leading the five to victory, followed by Your return to SriVaikuntam, all leave one breathless, penetrating deep into the core of my heart and draining my soul continually. When will I, Your humble servant, be united with You?

Explanatory Notes

After briefly touching upon the Lord’s Avatāra as Śrī Kṛṣṇa, the Āzhvār deplores his inability to remain steady and recount His wonderful deeds, as they send him into a trance, touching as they do the inner core of his being. As a matter of fact, even as he contemplated the manner of the Lord’s birth as Kṛṣṇa, entering the mother’s womb as we, bound souls do, he fell into + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறந்த ஆறும் உலகத்தவர் போல் பிறந்தபடியும்; வளர்ந்த ஆறும் தன்னை மறைத்துக் கொண்டு வளர்ந்தபடியும்; பெரிய பாரதம் மஹாபாரத யுத்தத்தில்; கைசெய்த படைகளை அணிவகுத்து; ஐவர்க்கு பஞ்சபாண்டவர்களுக்கு; திறங்கள் வெற்றி வழிகளை; காட்டியிட்டு காட்டிக் கொடுத்து; செய்து போன இப்படி நீ செய்த; மாயங்களும் மாயச்செயல்கள்; நிறம் தன் மர்மமான இதயத்து; ஊடு புக்கு உள்ளே புகுந்து; எனது ஆவியை என் ஆத்மாவை; நின்று நின்று உருக்கி நிமிடம் தோறும் உருக்கி; உண்கின்ற சிதிலமாக்குகின்றன; இச்சிறந்த இத்தகைய சிறந்த; வான் சுடரே! எல்லையற்ற ஒளிமயமானவனே!; உன்னை என்றுகொல் உன்னை நான் என்று வந்து; சேர்வதுவே அடைவேன்
val̤arndha grew (to have his enemies destroyed and to sustain himself with the materials which are dear to his devotees); āṛum way; periya bāradham in mahābhāratha [war]; kai seydhu arranging the armies; aivarkku for the five pāṇdavas; thiṛangal̤ the means for victory; kātti ittu revealing; seydhu completing the purpose of his incarnation (by favouring his devotees and destroying the others); pŏna returning to his own radiant abode; māyangal̤aum amaśing ways; niṛandhan for the inner region of my heart; ūdu inside; pukku entered; enadhu my; āviyai āthmā; ninṛu ninṛu moment after moment; urukki melting to be fluid; uṇginṛa consuming;; i being present for me always; siṛandha matching; vān infinite; sudarĕ ŏh one who is having radiance!; unnai you; enṛu kol when; sĕrvadhu will ī reach?; vadhuvai vārththaiyul̤ when the marriage plan [for nappinnaip pirātti] came up; ĕṛu bulls

TVM 5.10.2

3333 வதுவைவார்த்தையுளேறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்ததும் *
மதுவைவார்குழலார் குரவைபிணைந்தகுழகும் *
அதுவிதுவுதுவென்னலாவனவல்ல என்னைஉன்செய்கை நைவிக்கும் *
முதுவையமுதல்வா! உன்னையென்றுதலைப்பெய்வனே?
3333 வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் * மாய மாவினை வாய் பிளந்ததும் *
மதுவை வார் குழலார் * குரவை பிணைந்த குழகும் **
அது இது உது என்னலாவன அல்ல * என்னை உன் செய்கை நைவிக்கும் *
முது வைய முதல்வா! * உன்னை என்று தலைப்பெய்வனே? (2)
3333 vatuvai vārttaiyul̤ eṟu pāyntatum * māya māviṉai vāy pil̤antatum *
matuvai vār kuzhalār * kuravai piṇainta kuzhakum **
atu itu utu ĕṉṉalāvaṉa alla * ĕṉṉai uṉ cĕykai naivikkum *
mutu vaiya mutalvā! * uṉṉai ĕṉṟu talaippĕyvaṉe? (2)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh Lord, your wondrous deeds leave me speechless and melt my heart. You pounced upon the bulls during the talk of your wedding with Nappiṉṉai. You tore open the mouth of the treacherous fiend, horse-shaped, and danced merrily in the sweet company of those damsels whose locks shed plenty of honey. When can I attain your lovely feet?

Explanatory Notes

The moment the challenging task of taming the seven unruly bulls, all at once, was set up as a pre-condition by the fair Nappiṉṉai’s father for winning her hand, Kṛṣṇa dashed forward and pounced upon the animals, killing them all. Again, when Kṛṣṇa was in the company of the Gopis, a demon in the disguise of a horse came running fiercely to trample upon Him, but, with perfect + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வதுவை திருமண; வார்த்தையுள் பேச்சு ஏற்பட்ட பொழுது; ஏறு எருதுகளை; பாய்ந்ததும் பாய்ந்து கொன்றதுவும்; மாய மாவினை குதிரையாக வந்த அசுரனின்; வாய் பிளந்ததும் வாயைப் பிளந்ததும்; மதுவை வார் தேன் துளிர்க்கும்; குழலார் கூந்தலையுடைய பெண்களோடு; குரவை பிணைந்த இணைந்து குரவைக் கூத்து; குழகும் ஆடினதுவும்; அது இது உது அது இது உது என்று எதையும்; என்னலாவன வல்ல விவரித்து சொல்ல முடியாத; உன் செய்கை உன் செயல்கள்; என்னை நைவிக்கும் என்னை உருக்குகின்றன; முது வைய உலகங்களுக்கெல்லாம்; முதல்வா! முழுமுதற்கடவுளே!; உன்னை என்று தலை உன்னை என்று நான்; பெய்வனே? வந்து அடைவேனோ?
pāyndhadhum jumped on them and killed them; māyam deceptive and being possessed by demoniac qualities; māvinai horse named kĕṣi; vāy mouth; pil̤andhadhum tore; madhuvai honey; vār flowing; kuzhalār with girls who are having hair; kuravai rāsa krīdā; piṇaindha playing together; kuzhagum performing sweet activities; adhu that; idhu this; udhu the other thing; ennalāvana to be specifically said; alla not; ennai me (who is greatly attached to you); un your; seygai activities; naivikkum weakens;; vaiyam for the universe; mudhu mudhalvā oh primordial cause!; unnai you; enṛu when; thalaip peyvan will ī reach?; peyyum wearing; having flower

TVM 5.10.3

3334 பெய்யும்பூங்குழல்பேய்முலையுண்டபிள்ளைத்தேற்றமும் பேர்ந்தோர் * சாடிறச்
செய்யபாதமொன்றால் செய்தநின்சிறுச்சேவகமும் *
நெய்யுண்வார்த்தையுள்அன்னைகோல்கொள்ள நீஉன் தாமரைக்கண்கள் நீர்மல்க *
பையவேநிலையும்வந்து என்னெஞ்சைஉருக்குங்களே.
3334 பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட * பிள்ளைத் தேற்றமும் * பேர்ந்து ஓர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் * செய்த நின் சிறுச் சேவகமும் **
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள * நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க *
பையவே நிலையும் வந்து * என் நெஞ்சை உருக்குங்களே (3)
3334 pĕyyum pūṅ kuzhal pey mulai uṇṭa * pil̤l̤ait teṟṟamum * perntu or cāṭu iṟac
cĕyya pātam ŏṉṟāl * cĕyta niṉ ciṟuc cevakamum **
nĕy uṇ vārttaiyul̤ aṉṉai kol kŏl̤l̤a * nī uṉ tāmaraik kaṇkal̤ nīr malka *
paiyave nilaiyum vantu * ĕṉ nĕñcai urukkuṅkal̤e (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

You looked innocent while sucking the Devil's breast and kicking the demon in the wheel. Envisioning the innocence in Your eyes as Your mother approached, stick in hand, to question You about stealing butter, fills my mind. These tender moments, captured in memory, melt my heart with their sweetness.

Explanatory Notes

(i) The infant looks of the Babe reveal His innocence, the inability to distinguish between the real mother and the Imposter.

(ii) The Babe had pinching hunger and cried for the mother’s breast-milk, casually kicking the cart-wheel. But then, what a mighty kick it was and, that too, just from one foot of the tender Babe! The wheel broke into bits and with it, the demon who had taken possession of it-Juvenile valour indeed!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெய்யும் பூங் குழல் மலரணிந்த கூந்தலை உடைய; பேய் முலை உண்ட பேய் பூதனையின் பாலைப் பருகிய; பிள்ளைத் தேற்றமும் சிறுபிள்ளைத்தனத் தோற்றமும்; ஓர் சாடு ஒரு சகடமாக வந்த அசுரனை; பேர்ந்து இற பேர்ந்து முறிந்து போகும்படி; செய்ய பாதம் உன் சிவந்த பாதம்; ஒன்றால் செய்த ஒன்றால் செய்த; நின் சிறுச் சேவகமும் உன்னுடைய இளவீரமும்; நெய் உண் நெய்யை உண்ட; வார்த்தையுள் பேச்சு வந்தபோது; அன்னை உன் அன்னை; கோல் கொள்ள கோல் கையில் எடுக்க; நீ உன் தாமரைக் கண்கள் நீ உன் தாமரைக் கண்களில்; நீர் மல்க நீர் ததும்ப; பையவே நிலையும் அஞ்சி நடுங்கி நின்ற நிலை; வந்து என் நெஞ்சை இப்போதும் என்னெஞ்சை வந்து; உருக்குங்களே உருக்குகின்றன
kuzhal having hair; pĕy demon; mulai bosom; uṇda consumed [milk]; pil̤l̤ai in childish act; thĕṝamum clearly knowing it is not his mother-s bosom;; ŏr being possessed by demon; sādu wheel; pĕrndhu to be thrown; iṛa and be finished; seyya reddish; pādham divine foot; onṛāl by one; seydha mercifully done [kicked]; nin your; siṛuch chĕvagamum childish yet valourous act;; ney ghee [clarified butter]; uṇ ate; vārththaiyul̤ when such discussion came up; annai mother yaṣŏdhā; kŏl stick; kol̤l̤a having; you (the omnipotent who controls everything under your sceptre); un matching your stature; thāmarai lotus like; kaṇgal̤ eyes; nīr tears; malga to flow; paiya standing with fear; nilaiyum that state; vandhu coming (from those days up to me); en my; nenjai desirous heart; urukkungal̤ melting.; kal̤l̤a vĕdaththai deceptive form (of budhdha who is outside the tenets of vĕdham); koṇdu assuming

TVM 5.10.4

3335 கள்ளவேடத்தைக்கொண்டுபோய்ப் புரம்புக்கவாறும் * கலந்தசுரரை
உள்ளம்பேதஞ்செய்திட்டு உயிருண்டவுபாயங்களும் *
வெள்ளநீர்ச்சடையானும் நின்னிடைவேறலாமைவிளங்க நின்றதும் *
உள்ளமுள்குடைந்து என்னுயிரையுருக்கியுண்ணுமே.
3335 கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் * புரம் புக்க ஆறும் * கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு * உயிர் உண்ட உபாயங்களும் **
வெள்ள நீர்ச் சடையானும் * நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் *
உள்ளம் உள் குடைந்து * என் உயிரை உருக்கி உண்ணுமே (4)
3335 kal̤l̤a veṭattaik kŏṇṭu poyp * puram pukka āṟum * kalantu acurarai
ul̤l̤am petam cĕytiṭṭu * uyir uṇṭa upāyaṅkal̤um **
vĕl̤l̤a nīrc caṭaiyāṉum * niṉṉiṭai veṟu alāmai vil̤aṅka niṉṟatum *
ul̤l̤am ul̤ kuṭaintu * ĕṉ uyirai urukki uṇṇume (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

The form You assumed, oh Lord, as Buddha, and your entry into the three citadels, mingling freely with the Asuras and altering their outlook, resulting in their annihilation. (Śiva), with Gangā on matted locks, in close unison with You, I behold, and all these are locked in my mind, making my soul just melt down.

Explanatory Notes

(i) The Āzhvār characterises the advent of Buddha as a mask put on by Lord Viṣṇu, in order to sow the seeds of doubt, dissension and heresy among the Asuras (who were very powerful, by dint of their rigorous rituals, but most unscrupulous and destructive), with a view to reducing their prowess and strength and getting them annihilated thereby. The story of Buddha, as recorded + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ள வேடத்தை வேதத்தை எதிர்த்த புத்தனாக; கொண்டுபோய் வஞ்சக வடிவம் கொண்டு தோன்றி; புரம் புக்க வாறும் திரிபுரத்தில் புகுந்து; கலந்து அசுரரை அசுரர்களோடு கலந்து; உள்ளம் பேதம் அவர்கள் மனம் மாறும்படி; செய்திட்டு செய்து; உயிருண்ட அவர்கள் உயிரைக் கவர்ந்த; உபாயங்களும் உபாயங்களும்; வெள்ள நீர் கங்கையை; சடையானும் சடையில் கொண்டுள்ள சிவனும்; நின்னிடை உன் உடலின் பகுதியாகி; வேறு அலாமை வேறு ஆகாதவாறு; விளங்க நின்றதும் அவனுள்ளே நின்ற ஆகிய இவை; உள்ளம் உள் என் என் உள்ளத்துக்குள்ளே சென்று; குடைந்து என்னைக் குடைந்து; என் உயிரை என் ஆத்மாவை; உருக்கி உண்ணுமே உருக்குகின்றனவே
pŏy going (to become trustworthy by his beauty and maturity); puram in thripura; pukka enter; āṛum way;; asurarai the demoniac residents there; kalandhu mingling inside; ul̤l̤am bĕdham confusion in mind; seydhittu created; uyir their life; uṇda taking away; upāyangal̤um ways; vel̤l̤am abundant; nīr gangā water; sadaiyānum rudhra who is having in his matted hair; ninnidai in you; vĕṛalāmai being inseparable (by ṣarīra ṣarīri bhāvam- body soul relationship); vil̤anga well known through ṣāsthram; ninṛadhum stood; ul̤l̤am in my heart; ul̤ all my intellectual acts (thoughts); kudaindhu engrossed; en my; uyirai āthmā; urukki melting it into fluid state; uṇṇum consumed.; vānavar kŏnukku for indhra who is with his assistants; uṇṇa to eat

TVM 5.10.5

3336 உண்ணவானவர்கோனுக்கு ஆயரொருப்படுத்த வடிசிலுண்டதும் *
வண்ணமால்வரையையெடுத்து மழைகாத்ததும் *
மண்ணைமுன்படைத்துண்டுமிழ்ந்து கடந்திடந்துமணந்த மாயங்கள் *
எண்ணுந்தோறுமென்னெஞ்சு எரிவாய்மெழுகொக்கும் நின்றே.
3336 உண்ண வானவர் கோனுக்கு * ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் *
வண்ண மால் வரையை எடுத்து * மழை காத்தலும் **
மண்ணை முன் படைத்து உண்டு * உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் *
எண்ணும்தோறும் என் நெஞ்சு * எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே (5)
3336 uṇṇa vāṉavar koṉukku * āyar ŏruppaṭutta aṭicil uṇṭatum *
vaṇṇa māl varaiyai ĕṭuttu * mazhai kāttalum **
maṇṇai muṉ paṭaittu uṇṭu * umizhntu kaṭantu iṭantu maṇanta māyaṅkal̤ *
ĕṇṇumtoṟum ĕṉ nĕñcu * ĕrivāy mĕzhuku ŏkkum niṉṟe (5)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Meditating on the Lord's wondrous deeds makes my mind melt like wax set on fire. How He consumed all the food set by the cowherds unto Devas' chief, repelled the rains, held the lovely mount aloft, created the worlds, ate and spat, spanned and pulled them out of the waters deep, and wed Mother Earth.

Explanatory Notes

The Āzhvār says that his mind thaws down in contemplation of the Lord’s wondrous deeds, those performed for the general weal of the Universe, as well as specially directed towards the amelioration of His ardent devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயர் ஆயர்கள்; வானவர் கோனுக்கு தேவேந்திரனுக்கு; உண்ண அடிசில் படைக்க தயாரித்த உணவை; ஒருப்படுத்த முழுவழுதையும் ஒருசேர; உண்டதும் உண்டதும்; வண்ணமால் பலவித வண்ணங்களுடைய அழகிய; வரையை பெருமலையைக் குடையாக; எடுத்து மழை எடுத்து மழையை; காத்ததும் தடுத்து காத்ததும்; முன் ஆதி காலத்தில்; மண்ணை பூமியை; படைத்து படைத்ததும் பின்பு; உண்டு உமிழ்ந்து உண்டதும் உமிழ்ந்ததும்; கடந்து இடந்து அளந்ததும் குத்தி எடுத்ததும்; மணந்த மணந்ததும் ஆகிய; மாயங்கள் உன் மாயச் செயல்களை; எண்ணும் தோறும் எண்ணும் தோறும்; என் நெஞ்சு என் நெஞ்சு; எரிவாய் மெழுகு நெருப்பிலிட்ட மெழுகு போல்; ஒக்கும் நின்றே உருகுகின்றதே
āyar cowherd people (who are engaged in herding cows); oruppaduththa prepared with intent; adisil food; uṇdadhum consuming it (assuming the form of gŏvardhana hill); vaṇṇam colourful due to the presence of different minerals; māl huge; varaiyai hill; eduththu lift; mazhai rain (caused by indhra having lost his worship); kāththadhum protected; maṇṇai universe (which is indicated by earth); mun initially; padaiththu created; uṇdu protecting it by placing it in his stomach during deluge; umizhndhu (subsequently) spitting it out; kadandhu scaling it (to eliminate the ownership claim by others); idhandhu rescuing it (during intermediary deluge, with the form of varāha); maṇandha united with mother earth who was rescued from the deluge; māyangal̤ these amaśing qualities and activities; eṇṇum thŏṛum every time ī meditate upon; en my; nenju heart; ninṛu in a singular manner; erivāy in fire; mezhugokkum melting like wax; ninṛa āṛum his standing ways; irundha āṛum his sitting ways

TVM 5.10.6

3337 நின்றவாறும்இருந்தவாறும் கிடந்தவாறும்நினைப்பரியன *
ஒன்றலாஉருவாய் அருவாயநின்மாயங்கள் *
நின்றுநின்றுநினைகின்றேன் உன்னையெங்ஙனம் நினைகிற்பன்? * பாவியேற்கு
ஒன்றுநன்குரையாய் உலகமுண்டவொண்சுடரே!
3337 நின்ற ஆறும் இருந்த ஆறும் * கிடந்த ஆறும் நினைப்பு அரியன *
ஒன்று அலா உருவு ஆய் * அருவு ஆய நின் மாயங்கள் **
நின்று நின்று நினைக்கின்றேன் * உன்னை எங்ஙனம் நினைகிற்பன்? * பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் * உலகம் உண்ட ஒண் சுடரே (6)
3337 niṉṟa āṟum irunta āṟum * kiṭanta āṟum niṉaippu ariyaṉa *
ŏṉṟu alā uruvu āy * aruvu āya niṉ māyaṅkal̤ **
niṉṟu niṉṟu niṉaikkiṉṟeṉ * uṉṉai ĕṅṅaṉam niṉaikiṟpaṉ? * pāviyeṟku
ŏṉṟu naṉku uraiyāy * ulakam uṇṭa ŏṇ cuṭare (6)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

The miracles of Your presence in one place, sitting in another, and resting elsewhere, along with numerous other unfathomable wonders, surpass my comprehension. I contemplate them gradually, pleading with You, the radiant Lord who once engulfed the worlds, to grant this humble sinner the stamina to meditate without faltering.

Explanatory Notes

(i) The places where the Lord stood, sat and reposed, not having been specified in this Song, the Ācāryas take delight in interpreting this in a number of ways, as elucidated below:

I Standing

(Incarnate Forms)

Śrī Rāma standing at the entrance to Laṅka with bow in hand;
The victorious Rāma standing with bow in hand after slaying Vāli;
Śrī Kṛṣṇa standing, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்ற ஆறும் நிற்கிறபடியும்; இருந்த ஆறும் வீற்றிருக்கிறபடியும்; கிடந்த ஆறும் சயனித்திருக்கிறபடியும்; நினைப்பு நினைப்பதற்கு; அறியன அறியனவாய் உள்ளன; ஒன்ற அலா இப்படிப் பலபடியாய்; உருவாய் நான் அநுபவிக்க உருவாகவும்; அருவாய நின் அருவாகவும்; மாயங்கள் உன் அற்புதச் செயல்களை; நின்று நின்று சிறுகச் சிறுக; நினைக்கின்றேன் நினைக்கிறேனே தவிர உன்னை; நினைகிற்பன் முழுவதுமாக அறிய முடியவில்லை; உலகம் உண்ட உலகம் உண்ட; ஒண்சுடரே! ஒளிமயமான பெருமானே!; பாவியேற்கு பாவியான எனக்கு; உன்னை எங்ஙனம் உன்னை அறிந்து கொள்ள; ஒன்று நன்கு ஒரு நல்ல உபாயம்; உரையாய் அருளிச் செய்ய வேண்டும்
kidandha āṛum his resting ways; ninaippu to think about; ariyana difficult;; onṛu any single; alā not restricted to; uruvāy having form; aruvāya not seen for me to experience; nin your; māyangal̤ amaśing activities; ninṛu ninṛu tormenting the already weakened heart at every stage; ninaiginṛĕn trying to fully think about;; unnai you (who are performing the activities which weaken me); enganam how; ninaigiṛpan can think about in a focussed manner?; pāviyĕṛku for me who am having sin (which stops me from meditating in a focussed manner); ulagam universe which was getting destroyed in the deluge; uṇda consumed and protected; oṇ sudarĕ ŏh one who became radiant!; onṛu unique; nangu distinguished means; uraiyāy you should mercifully indicate.; uṇmaiyŏdu being present with the form which is shining in my heart; inmaiyāy non-existing due to not being seen physically in a shining manner

TVM 5.10.7

3338 ஒண்சுடரோடிருளுமாய்நின்றவாறும்உண்மையோடின்மையாய்வந்து * என்
கண்கொளாவகை நீகரந்தென்னைச்செய்கின்றன *
எண்கொள்சிந்தையுள்நைகின்றேன் என்கரியமாணிக்கமே! * என்கண்கட்குத்
திண்கொள்ளஒருநாள் அருளாய்உன்திருவுருவே.
3338 ஒண் சுடரோடு இருளுமாய் * நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து * என்
கண் கொளாவகை * நீ கரந்து என்னைச் செய்கின்றன **
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் * என் கரிய மாணிக்கமே * என் கண்கட்குத்
திண் கொள்ள ஒரு நாள் * அருளாய் உன் திரு உருவே (7)
3338 ŏṇ cuṭaroṭu irul̤umāy * niṉṟa āṟum uṇmaiyoṭu iṉmaiyāy vantu * ĕṉ
kaṇ kŏl̤āvakai * nī karantu ĕṉṉaic cĕykiṉṟaṉa **
ĕṇ kŏl̤ cintaiyul̤ naikiṉṟeṉ * ĕṉ kariya māṇikkame * ĕṉ kaṇkaṭkut
tiṇ kŏl̤l̤a ŏru nāl̤ * arul̤āy uṉ tiru uruve (7)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

In my heart, my Lord of sapphire hue, You shine with all radiance, but outside, You aren't seen, and it's darkness indeed. Torn between such contradictions, I ponder which is true and which is false and dwindle. Once in a while, let me see Your tangible form.

Explanatory Notes

The Āzhvār prays unto the Lord who has blest him with perpetual light inside, the glorious mental vision of the Divine, to make Himself perceptible to the external senses as well, at least once in a way. The Lord does exist for the devout and sheds light on them while He does not exist so far as the sceptical unbelievers are concerned and nonexistence of God is but synonymous with darkness or blindness. For the conflicting individuals these contradictions do exist.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உண்மையோடு என் மனதின் உள்ளே உண்மையாக; ஒண்சுடரோடு ஒளிமயமாகத் தெரிகிறபடியையும்; இன்மையாய் வெளியே நீ பொய்யன் என்னும்படி; இருளுமாய் இருள்மயமாய்; நின்ற ஆறும் நிற்கிறபடியையும்; வந்து என் வந்து என்; கண் கண்கள்; கொளாவகை உன்னை அநுபவிக்க முடியாதபடி; நீ கரந்து நீ உள்ளே மறைந்து நின்று; என்னை என்னை; செய்கின்றன படுத்தும் பாட்டை; எண் கொள் சிந்தையுள் நினைத்து; நைகின்றேன் உருகிப் போகிறேன்; என் கரிய என் கருத்த நீலமணி போன்ற; மாணிக்கமே! வடிவழகை உடையவனே!; உன் திரு உருவே உன் திரு உருவத்தை; ஒருநாள் என் ஒரு நாளாவது; கண்கட்கு திண் கொள்ள என் கண்கள் காணும்படி; அருளாய் நீ அருள் புரியவேண்டும்
vandhu came; oṇ shining; sudarŏdu with radiance; irul̤umāy as darkness; ninṛa stood; āṛum ways; en my; kaṇ eyes; kol̤ā vagai to not enjoy you; karandhu hiding inside; you; ennai me; seyginṛana these actions which you perform; eṇ to think; kol̤ having; sindhaiyul̤ with heart; naiginṛĕn becoming weak;; en being the cause for my such weakened state; kariya māṇikkamĕ ŏh one who is having a form which resembles a blue gem!; un your; thiru apt and enjoyable; uru form; en my; kaṇgatku for the eyes; thiṇ having firmness; kol̤l̤a to see; oru nāl̤ once; arul̤āy kindly bless me.; thiru beautiful; uruvu divine form

TVM 5.10.8

3339 திருவுருவுகிடந்தவாறும் கொப்பூழ்ச்செந்தாமரைமேல் * திசைமுகன்
கருவுள்வீற்றிருந்து படைத்திட்டகருமங்களும் *
பொருவிலுந்தனிநாயகமவை கேட்குந்தோறும் என்னெஞ்சம்நின்று நெக்கு *
அருவிசோரும்கண்ணீர் என்செய்கேன்? அடியேனே.
3339 திரு உருவு கிடந்த ஆறும் * கொப்பூழ்ச் செந்தாமரைமேல் * திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து * படைத்திட்ட கருமங்களும் **
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும் * என் நெஞ்சம் நின்று நெக்கு *
அருவி சோரும் கண்ணீர் * என் செய்கேன் அடியேனே? (8)
3339 tiru uruvu kiṭanta āṟum * kŏppūzhc cĕntāmaraimel * ticaimukaṉ
karuvul̤ vīṟṟiruntu * paṭaittiṭṭa karumaṅkal̤um **
pŏru il uṉ taṉi nāyakam avai keṭkumtoṟum * ĕṉ nĕñcam niṉṟu nĕkku *
aruvi corum kaṇṇīr * ĕṉ cĕykeṉ aṭiyeṉe? (8)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

The sight of Your exquisite form reclining on the Milk Ocean, accompanied by the emergence of Brahma from the lotus stalk on Your navel for the creation of the worlds, speaks volumes of Your unparalleled glory. As I hear the Vedantins recount these marvels, my heart overflows with ecstasy, and tears stream down my cheeks uncontrollably. How can this humble servant endure such divine splendor?

Explanatory Notes

The Āzhvār is simply overwhelmed by the Lord’s transcendent glory and, in an unsteady frame of mind charged with great emotion, he is unable to do any sustained thinking, clear and cogent.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு உருவு அழகிய உன் திருமேனி; கிடந்தவாறும் சயனித்தபடியையும்; கொப்பூழ் நாபி; செந்தாமரை மேல் கமலத்தின் மேல்; திசை முகன் கரு உள் பிரமனின் கருவுக்குள்; வீற்றிருந்து வீற்றிருந்து; படைத்திட்ட படைத்த; கருமங்களும் செயல்களும்; பொரு இல் உன் ஒப்பற்ற உன்; தனி நாயகம் தனித் தன்மையான; அவை இவற்றை; கேட்கும் தோறும் கேட்கும் தோறும்; என் நெஞ்சம் என் மனம்; நின்று நெக்கு நெகிழ்ந்து உருகி; கண்ணீர் கண்ணீர்; அருவி சோரும் அருவியாகப் பெருகுகின்றது; அடியேனே என் செய்கேன்? அடியேன் என் செய்கேன்?
kidandha āṛum the way he reclines; koppūzh in the navel in such form; sem reddish; thāmarai mĕl on lotus flower; thisai mugan four headed brahmā; karu ul̤ inside the womb; vīṝu being seated as the distinguished antharāthmā (super-soul); irundhu present; padaiththitta (you) created (the universe to make it appear as -brahmā created it-); karumangal̤um activities; poru opponent; il not having; un your; thani nāyagam highlighting your distinct supremacy; avai those; kĕtkum thŏṛum every time ī hear (through pramāṇam (authentic texts)); en my; nenjam heart; ninṛu remaining focussed; nekku loosened up; kaṇṇīr tears; aruvi like waterfall; sŏrum falling;; adiyĕn ī (who am totally subservient to you); en what; seygĕn shall do?; mūnṛu three; adiyai feet

TVM 5.10.9

3340 அடியைமூன்றையிரந்தவாறும் அங்கேநின்றாழ்கடலும் மண்ணும்விண்ணும்
முடிய * ஈரடியால் முடித்துக்கொண்டமுக்கியமும் *
நொடியுமாறவைகேட்குந்தோறும் என்னெஞ்சம் நின்தனக்கேகரைந்துகும் *
கொடியவல்வினையேன் உன்னையென்றுகொல்கூடுவதே?
3340 அடியை மூன்றை இரந்த ஆறும் * அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய * ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும் **
நொடியுமாறு அவை கேட்கும்தோறும் * என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் *
கொடிய வல்வினையேன் * உன்னை என்றுகொல் கூடுவதே? (9)
3340 aṭiyai mūṉṟai iranta āṟum * aṅke niṉṟu āzh kaṭalum maṇṇum viṇṇum
muṭiya * īr aṭiyāl muṭittukkŏṇṭa mukkiyamum **
nŏṭiyumāṟu avai keṭkumtoṟum * ĕṉ nĕñcam niṉ taṉakke karaintu ukum *
kŏṭiya valviṉaiyeṉ * uṉṉai ĕṉṟukŏl kūṭuvate? (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

I hear of Your great glory recounted by the devout, how You sought land with three strides and covered the Earth, the deep ocean, and the spiritual world in two strides. My mind, absorbed in You, melts down, heavy with sin as I am. When will I meditate on You, calm and steady?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியை மூன்றை மாவலியிடம் மூவடி நிலத்தை; இரந்தவாறும் யாசித்தபடியையும்; அங்கே நின்று அங்கே நின்று; ஆழ்கடலும் ஆழ்கடலையும்; மண்ணும் பூ உலகத்தையும்; விண்ணும் விண்ணுலகத்தையும்; ஈர் அடியால் இரண்டடியாலே; முடிய முடித்து முடியும்படி அளந்து; கொண்ட முக்கியமும் கொண்ட உன் சாகச; நொடியுமாறு செயல்களைச் சொல்லும் போது; அவை கேட்கும்தோறும் அவைகளைக் கேட்கும் தோறும்; என் நெஞ்சம் என் நெஞ்சம் உனக்கே; நின் தனக்கே ஆட்பட்டு; கரைந்து உகும் கரைந்து உருகுகிறது; கொடிய கொடிய; வல்வினையேன் பாபத்தைப் பண்ணின நான்; உன்னை என்றுகொல் உன்னை என்று வந்து; கூடுவதே? அடைவேனோ?
irandha humbly requested so that he [mahābali] cannot refuse; āṛum way; angu in that yagyavātam (the place of fire sacrifice) where he agreed and promised on water; ninṛĕ standing; āzh deep; kadalum oceans; maṇṇum the earth which has seven islands; viṇṇum the sky going up to brahma lŏkam (the abode of brahmā); īradiyāl with two feet; mudiya to cover; mudiththuk koṇda fulfilled his desire; mukkiyamum predominance; avai those; nodiyum to say; āṛu way; kĕtkum thŏṛum every time ī hear; en my; nenjam heart; nin thanakkĕ Being avāptha samastha kāma (one how is having no unfulfilled desires), you became a seeker for the sake of your devotee- your qualities such as simplicity; karaindhu melt; ugum flowing away;; val too strong to be atoned; kodiya which cannot be wished away other than by experiencing; vinaiyĕn me who am having sin in the form of love (to not become broken), to steady myself and enjoy you; unnai you; enṛu kol when; kūduvadhu will ī reach?; kūdi being together with dhĕvas (celestial persons) and asuras (demoniac persons); nīrai making arrangements such as mortar, rope and base to churn the fluid in the milky ocean

TVM 5.10.10

3341 கூடிநீரைக்கடைந்தவாறும் அமுதம்தேவருண்ண * அசுரரை
வீடும்வண்ணங்களே செய்துபோனவித்தகமும் *
ஊடுபுக்கெனதாவியை உருக்கியுண்டிடுகின்ற * நின்தன்னை
நாடும்வண்ணஞ்சொல்லாய் நச்சுநாகணையானே!
3341 கூடி நீரைக் கடைந்த ஆறும் * அமுதம் தேவர் உண்ண * அசுரரை
வீடும் வண்ணங்களே * செய்து போன வித்தகமும் **
ஊடு புக்கு எனது ஆவியை * உருக்கி உண்டிடுகின்ற * நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் * நச்சு நாகு அணையானே (10)
3341 kūṭi nīraik kaṭainta āṟum * amutam tevar uṇṇa * acurarai
vīṭum vaṇṇaṅkal̤e * cĕytu poṉa vittakamum **
ūṭu pukku ĕṉatu āviyai * urukki uṇṭiṭukiṉṟa * niṉ taṉṉai
nāṭum vaṇṇam cŏllāy * naccu nāku aṇaiyāṉe (10)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Your act of churning the Milky Ocean, collaborating with Devas and Asuras yet bestowing the nectar solely upon the Devas, profoundly impacts my soul. The intricacies of this divine plan leave me in awe and reflection. How can I possibly contemplate Your glory without being overwhelmed?

Explanatory Notes

The fickle-minded Asuras gave up their bid for the nectar that came from the Milky ocean, when they beheld Lord Viṣṇu’s Mohinī Avatāra of ravishing feminine charm and ran after the strange Visitor. Contemplating this wonderful sequence of events, the Āzhvār thaws down in wonderment and prays that he should be enabled to meditate on Him with that steadiness with which Ādiśeṣa serves Him. Reference to the Lord’s serpent-bed is thus quite significant.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நச்சு நாகு விஷத்தைக் கக்கும் பாம்பின் மீது; அணையானே! சயனித்திருப்பவனே!; கடைந்த ஆறும் பாற்கடலைக் கடைந்ததையும்; அமுதம் அமுதத்தை; தேவர் உண்ண தேவர்கள் உண்ண; அசுரரை வீடும் அசுரரை விடுவிக்கும்; வண்ணங்களே செய்து போன மாயங்கள் செய்த; வித்தகமும் யுக்திகளும்; ஊடு புக்கு என்னுள்ளே புகுந்து; எனது ஆவியை என் ஆத்மாவை; உருக்கி உண்டு இடுகின்ற உருக்கி உண்ணும்; நின் தன்னை உன்னை; நாடும் வண்ணம் நான் அடையும் உபாயத்தை; சொல்லாய் எனக்குச் சொல்லி அருளவேண்டும்
kadaindha churned; āṛum way; amudham the amrutham (nectar) which appeared there; dhĕvar dhĕvas; uṇṇa to drink; asurarai demons; vīdum driving away; vaṇṇangal̤ assuming the beautiful form of a damsel etc; seydhu pŏna performed; viththagamum amaśing aspects; ūdu inside; pukku entered; enadhu my; āviyai āthmā; urukki melting to become fluid; uṇdiduginṛa consumed;; nanju hurdles for the experience; nāgam with thiruvananthāzhwān (ādhiṣĕshan); aṇaiyānĕ one who is eternally together; nin thannai you; nādum enjoying eternally; vaṇṇam way; sollāy mercifully tell; nāgaṇai misai resting on [the lap of] thiruvananthāzhwān (ādhiṣĕshan); nam our

TVM 5.10.11

3342 நாகணைமிசைநம்பிரான்சரணே சரண்நமக்கென்று * நாள்தொறும்
ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்மாறன் *
ஆகநூற்றவந்தாதி ஆயிரத்துள்இவையுமோர்பத்தும் வல்லார் *
மாகவைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. (2)
3342 ## நாகு அணைமிசை நம் பிரான் * சரணே சரண்
நமக்கு என்று * நாள்தொறும் ஏக சிந்தையனாய்க் ** குருகூர்ச்
சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி * ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் * மாக வைகுந்தத்து *
மகிழ்வு எய்துவர் வைகலுமே (11)
3342 ## nāku aṇaimicai nam pirāṉ * caraṇe caraṇ
namakku ĕṉṟu * nāl̤tŏṟum eka cintaiyaṉāyk ** kurukūrc
caṭakopaṉ māṟaṉ āka nūṟṟa antāti * āyirattul̤
ivaiyum or pattum vallār * māka vaikuntattu *
makizhvu ĕytuvar vaikalume (11)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

Those who devoutly recite these ten songs, among the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr for his own spiritual enlightenment, dedicated solely to the Lord resting on the Serpent-bed, whom he regarded as his sole sanctuary, will experience everlasting bliss in SriVaikuntam.

Explanatory Notes

Ādiśeṣa, the Lord's couch cum bed will not allow the Lord to give up the supplicants and therefore it is that the Āzhvār seeks to take advantage of this favourable combination.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாகணைமிசை ஆதிசேஷன் மீது பள்ளிகொள்ளும்; நம்பிரான் நம் ஸ்வாமியின்; சரணே சரண் திருவடிகளே உபாயம்; நமக்கு என்று நமக்கு என்று; நாள் தொறும் ஏக எப்போதும் மாறாத; சிந்தையனாய் பக்தி உடையவராய்; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; மாறன் சடகோபன் மாறனான நம்மாழ்வார்; ஆக நூற்ற அந்தாதி அருளிச்செய்த அந்தாதி; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் ஓர் இந்த ஒப்பற்ற; பத்து பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; வைகலுமே காலமுள்ளவரை; மாக வைகுந்தத்து வைகுந்தம்; மகிழ்வு எய்துவர் சென்று மகிழ்வர்
pirān lord; saraṇĕ charaṇ (divine feet) only; saraṇ ṣaraṇam, upāyam (means); namakku for us; enṛu that; nāl̤ thoṛum always; ĕka sindhaiyanāy having the desire in his mind; kurugūrch chatakŏpan māṛan nammāzhvār [the leader of āzhvārthirunagari]; āga to survive; nūṝa mercifully spoke; andhādhi in the [poetic] form of anthādhi [ending of one pāsuram connecting with the beginning of the next pāsuram]; āyiraththul̤ among the thousand pāsurams; ŏr distinguished; ivai these; paththum ten pāsurams; vallār those who can practice; māgam the great spiritual sky; vaigundhaththu in ṣrīvaikuṇtam; vaigalum forever; magizhvu eydhuvar will remain blissfully.; vaigal always; beautiful