PT 9.10.6

தேவர்கள் வந்து வணங்கும் இடம் இது

1843 காவலனிலங்கைக்கிறைகலங்கச் சரம்செலவுய்த்து * மற்றவன்
ஏவலம்தவிர்த்தான் என்னையாளுடையம்பிரான் *
நாவலம்புவிமன்னர்வந்துவணங்க மாலுறைகின்றதுஇங்கென *
தேவர்வந்திறைஞ்சும் திருக்கோட்டியூரானே.
1843 kāvalaṉ ilaṅkaikku iṟai kalaṅkac * caram cĕla uyttu * maṟṟu avaṉ
evalam tavirttāṉ * ĕṉṉai āl̤uṭai ĕm pirāṉ- **
nā valam puvi maṉṉar vantu vaṇaṅka * māl uṟaikiṉṟatu iṅku ĕṉa *
tevar vantu iṟaiñcum- * tirukkoṭṭiyūrāṉe-6

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1843. The dear god, my ruler, who shot his arrows at the king of Lankā, destroyed his valor and defeated him stays in Thirukkottiyur where all the rulers of the world and the gods come to worship him knowing that it is there that he stays.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கைக்கு இலங்கையை; காவலன் காக்கும்; இறை அதிபதி இராவணன்; கலங்க கலங்கும்படியும்; மற்று சரம் மேலும் அம்புகளை; செல தொடுக்கும்; உய்த்து அவன் மிடுக்கையும்; அவன் ஏ வலம் சாம்ர்த்தியத்தையும்; தவிர்த்தான் அழித்த இராமபிரான்; என்னை என்னை; ஆளுடை ஆளும் அடிமைகொண்ட; எம் பிரான் பிரான்; நா வலம் புவி நாவலத் தீவிலுள்ள [ஜம்பூ]; மன்னர் மன்னர்கள்; இங்கு மால் என எம்பெருமான் இங்கு; உறைகின்றது உள்ளான் என்று அறிந்து; வந்து வணங்க வந்து வணங்க; தேவர் வந்து தேவர்களும் வந்து; இறைஞ்சும் வணங்கும் இடமான; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!