PT 9.10.1

தேவர்கட்கு நாயகன் திருக்கோட்டியூரான்

1838 எங்கள்எம்மிறைஎம்பிரான் இமையோர்க்குநாயகன் * ஏத்தடியவர்
தங்கள்தம்மனத்துப்பிரியாதுஅருள்புரிவான் *
பொங்குதண்ணருவிபுதம்செய்யப் பொன்களேசிதறும், இலங்கொளி *
செங்கமலம்மலரும் திருக்கோட்டியூரானே. (2)
1838 ## ĕṅkal̤ ĕm iṟai ĕm pirāṉ * imaiyorkku nāyakaṉ * ettu aṭiyavar-
taṅkal̤ tam maṉattup * piriyātu arul̤ purivāṉ- **
pŏṅku taṇ aruvi putam cĕyyap * pŏṉkal̤e citaṟa ilaṅku ŏl̤i *
cĕṅkamalam malarum- * tirukkoṭṭiyūrāṉe-1

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1838. Our dear god, our king, chief of the gods in the sky, who stays in the minds of the devotees who praise him and gives them his grace, stays in Thirukkottiyur where a cool, tall waterfall makes a cloud of golden drops and lovely lotuses bloom and shine.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் எம் இறை எங்களுக்கே இறைவன்; எம் பிரான் எம் பெருமான்; இமையோர்க்கு நித்யஸூரிகளுக்கு; நாயகன் தலைவனும்; ஏத்து துதிக்கின்ற; அடியவர் பக்தர்களின்; தங்கள் தம் மனத்து மனதிலிருந்து; பிரியாது பிரியாமல்; அருள்புரிவான் அருள்புரிபவனும்; பொங்கு தண் பொங்கி ஓடும்; அருவி அருவி போல்; புதம் செய்ய மேகம்; பொன்களே பொன்னை; சிதற சிந்துவதால்; இலங்கு ஒளி மிக்க ஒளியையுடையதாய்; செங்கமலம் சிவந்த தாமரைப்பூக்கள்; மலரும் மலரும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!