PT 10.1.9

திருக்கோட்டியூரும் திருநாவாயும்

1856 கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே.
1856
kamba mAkaLiRu * ancik kalanga, * Or-
kombu koNda * kuraikazhal kooththanai *
kombulAm pozhil * kOttiyUrk kaNdupOy *
n^ambaNnais senRu kāNdum * n^āvAyuLE 10.1.9

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1856. The dancing one with sounding anklets on his feet frightened the strong elephant and broke its tusks. I will go and see him in Thirukkottiyur where the groves bloom with flowers and I will go see my friend in Thirunāvāy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கம்ப மா நடுக்கம் விளைவித்த பெரிய; களிறு அஞ்சி யானை அஞ்சி; கலங்க ஓர் கலங்கும்படி; கொம்பு அதன் கொம்பை; கொண்ட முறித்தவனும்; குரை ஒலிக்கின்ற; கழல் வீரக்கழல் உடையவனும்; கூத்தனை விசித்திரமான நடையுடையவனை; கொம்பு உலாம் தாழ்ந்த கிளைகளோடு கூடின; பொழில் சோலைகளையுடைய; கோட்டியூர் திருக்கோட்டியூர்; கண்டு போய் சென்று வணங்கினோம்; நம்பனை நம்புவதற்குரியவனான பெருமானை; நாவாயுளே திருநாவாயில் சென்று; கண்டும் வணங்குவோம்