PT 9.10.8

என் மனத்தில் புகுந்தவன் திருக்கோட்டியூரான்

1845 பூங்குருந்தொசித்து ஆனைகாய்ந்துஅரிமாச்செகுத்து * அடியேனையாளுகந்து
ஈங்கென்னுள்புகுந்தான் இமையோர்கள்தம்பெருமான் *
தூங்குதண்பலவின்கனி தொகுவாழையின்கனியொடு மாங்கனி *
தேங்குதண்புனல்சூழ் திருக்கோட்டியூரானே.
1845 pūṅ kuruntu ŏcittu āṉai kāyntu * ari māc cĕkuttu * aṭiyeṉai āl̤ ukantu
īṅku ĕṉṉul̤ pukuntāṉ * imaiyorkal̤-tam pĕrumāṉ- **
tūṅku taṇ palaviṉ kaṉi * tŏku vāzhaiyiṉ kaṉiyŏṭu māṅkaṉi *
teṅku taṇ puṉal cūzh- * tirukkoṭṭiyūrāṉe-8

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1845. The god of the gods who broke the kurundu trees when the Asurans came in the form of those trees, killed the elephant Kuvalayābeedam and destroyed the Asuran Kesi when he came as a horse made me his devotee and slave and entered my heart. He stays in Thirukkottiyur surrounded with cool water and groves where sweet jackfruits rest on the ground, bunches of bananas ripen on their branches and mangoes grow on their trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூம் பூத்திருந்த; குருந்து குருந்தை மரத்தை; ஒசித்து முறித்தவனும்; ஆனை குவலாயாபீட யானையை; காய்ந்து அழித்தவனும்; அரி மா கேசி என்ற குதிரையை; செகுத்து கொன்றவனும்; அடியேனை அடியேனை; ஆள் ஆட்கொண்டவனும்; உகந்து ஈங்கு உகந்து இங்கு வந்து; இமையோர்கள் நித்யஸூரிகளின்; தம் தலைவனான; பெருமான் பெருமான்; என்னுள் என்னுள்; புகுந்தான் புகுந்தான்; தூங்கு பழுத்துத் தொங்கும்; தண் அழகிய; பலவின் கனி பலாப் பழங்களும்; தொகு வாழையின் திரண்ட வாழை; கனியொடு பழங்களோடு; மாங்கனி மாம்பழங்களும்; தேங்கு தேங்காய்களும்; தண் குளிர்ந்த; புனல் சூழ் ஆறுகளால் சூழ்ந்த; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!