PT 9.10.4

சிவனுக்குத் தன் உடம்பில் பங்கு தந்தவன்

1841 ஏறுமேறிஇலங்குமொண்மழுப்பற்றும் ஈசற்குஇசைந்து * உடம்பிலோர்
கூறுதான்கொடுத்தான் குலமாமகட்கினியான் *
நாறுசண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு * நல்நறும்
தேறல்வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே.
1841 eṟum eṟi ilaṅkum ŏṇ mazhup paṟṟum * īcaṟku icaintu * uṭampil or
kūṟu-tāṉ kŏṭuttāṉ * kula mā makaṭku iṉiyāṉ- **
nāṟu cĕṇpakam mallikai malar pulki * iṉ il̤a vaṇṭu * nal naṟum
teṟal vāymaṭukkum- * tirukkoṭṭiyūrāṉe-4

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1841. He, the beloved of Lakshmi, the goddess who nurtures good families, gave a part of himself to Shivā who carries a sharp shining axe and rides a bull, stays in Thirukkottiyur where lovely young bees embrace the fragrant jasmine and shanbaga flowers and drink good sweet-smelling honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏறும் ரிஷபத்தை வாஹனமாக உடைய; ஏறி ரிஷபத்தில் ஏறி; இலங்கும் ஒளியுள்ள; ஒண் மழு அழகிய மழுவை; பற்றும கையிலேந்திய; ஈசற்கு சிவனுக்கு; இசைந்து தன்னுடைய; உடம்பில் ஓர் உடலின் ஒரு; கூறு தான் பாகத்தை; கொடுத்தான் கொடுத்தவனும்; குல மா மகட்கு திருமகளின்; இனியான் நாயகனுமான பெருமான்; இன் இனிய; இள வண்டு இளம் வண்டுகள்; நாறு மிக்க மணம் கமழும்; செண்பகம் செண்பகம்; மல்லிகை மலர் மல்லிகை மலர்; புல்கி ஆகியவற்றில் தழுவி; நல் நறும் நல்ல மணமுள்ள; தேறல் தேனில்; வாய் வாய்வைத்து; மடுக்கும் பருகுமிடமான; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!