NMT 34

திருக்கோட்டியூர்க் கோமானையே ஏத்துவேன்

2415 குறிப்பெனக்குக் கோட்டியூர்மேயானையேத்த *
குறிப்பெனக்கு நன்மைபயக்க * - வெறுப்பனோ?
வேங்கடத்துமேயானை மெய்வினைநோயெய்தாமல் *
தான்கடத்தும்தன்மையான்தாள்.
2415 kuṟippu ĕṉakkuk * koṭṭiyūr meyāṉai etta *
kuṟippu ĕṉakku naṉmai payakka ** - vĕṟuppaṉo?
veṅkaṭattu meyāṉai * mĕy viṉai noy ĕytāmal *
tāṉ kaṭattum taṉmaiyāṉ tāl̤ -34

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2415. My aim is to praise the god of Thirukkottiyur. and receive good life from him. Will I ever hate the lord of Thiruvenkatam? I will worship his feet, for he saves me from any sickness that I may have and removes the results of my bad karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோட்டியூர் திருக்கோட்டியூரில்; மேயானை இருப்பவனையும்; வேங்கடத்து திருமலையிலிருக்கும்; மேயானை பெருமானையும்; ஏத்த துதிப்பதற்கு; எனக்கு குறிப்பு எனக்கு விருப்பம்; நன்மை நல்ல காரியங்களை; பயக்க செய்ய; எனக்கு எனக்கு; குறிப்பு அளவிலாத ஆர்வம்; மெய் சரீர ஸம்பந்தமான; வினை கர்மங்களும்; நோய் எய்தாமல் வியாதிகளும் வராமல்; தான் தானே அவற்றை; கடத்தும் போக்கியருளும்; தன்மையான் பெருமானின்; தாள் திருவடிகளை; வெறுப்பனோ? வெறுப்பேனோ?
kŏttiyūr mĕyānai ĕththa kuṛippu my opinion is to keep praising emperumān who is aptly residing at thirukkŏttiyūr.; enakku nanmai payakka kuṛippu my opinion is that ī should derive some benefit.; vĕngadaththu mĕyānai veṛuppanŏ will ī dislike emperumān who has taken residence at thiruvĕngadam?; mey vinai nŏy eydhāmal thān kadaththum thanmaiyān thāl̤ veṛuppanŏ will ī forget and ignore the divine feet of emperumān who (protects and) prevents diseases and deeds which come about on account of physical form?