PT 9.10.5

கடல் வண்ணன் இங்குதான் உள்ளான்

1842 வங்கமாகடல்வண்ணன் மாமணிவண்ணன்விண்ணவர்கோன் * மதுமலர்த்
தொங்கல்நீண்முடியான் நெடியான்படிகடந்தான் *
மங்குல்தோய்மணிமாடவெண்கொடி மாகமீதுயர்ந்தேறி * வானுயர்
திங்கள்தானணவும் திருக்கோட்டியூரானே.
1842 vaṅka mā kaṭal vaṇṇaṉ * mā maṇi vaṇṇaṉ viṇṇavar-koṉ * matumalart
tŏṅkal nīl̤ muṭiyāṉ * nĕṭiyāṉ paṭi kaṭantāṉ- **
maṅkul toy maṇi māṭa vĕṇ kŏṭi * mākammītu uyarntu eṟi * vāṉ uyar
tiṅkal̤-tāṉ aṇavum- * tirukkoṭṭiyūrāṉe-5

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1842. The ocean-colored Nedumāl, the king of the gods in the sky, beautiful as a precious sapphire, whose crown is adorned with long flower garlands dripping with honey, who measured the world at Mahabali’s sacrifice- stays in Thirukkottiyur where the moon floats in the sky above the white flags flying above the beautiful jewel-studded palaces touching the clouds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்க மா கப்பல்கள் நிறைந்த பெரிய; கடல் கடல் போன்ற; வண்ணன் நிறமுடையவனும்; மா மணி நீலமணி போன்ற; வண்ணன் வடிவழகையுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளுக்கு; கோன் தலைவனும்; மது மலர் தேனோடு கூடின பூ; தொங்கல் மாலையையுடையவனும்; நீள் பெரிய; முடியான் கிரீடமுடையவனும்; நெடியான் அனைத்தையும் அறிந்தவனும்; படி பூமியை; கடந்தான் அளந்தவனுமான பெருமான்; மங்குல் மேகமண்டலத்தை; தோய் அளாவியிருக்கும்; மணி மாட மணிமாடங்களிலிருக்கும்; வெண் கொடி வெள்ளைக் கொடிகள்; மாகம் மீது ஆகாயத்தின் மேல்; உயர்ந்து ஏறி வியாபித்து; வான் உயர் மிக உயரத்திலுள்ள; திங்கள் தான் சந்திரனை; அணவும் தழுவும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!