PT 9.10.3

உலகம் உண்டவனே திருக்கோட்டியூரான்

1840 வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணன் விண்ணவர்தமக்கிறை * எமக்கு
ஒள்ளியானுயர்ந்தான் உலகேழும்உண்டுமிழ்ந்தான் *
துள்ளுநீர்மொண்டுகொண்டு சாமரைக்கற்றைச்சந்தனமுந்திவந்தசை *
தெள்ளுநீர்ப்புறவில் திருக்கோட்டியூரானே.
1840 vĕl̤l̤iyāṉ kariyāṉ * maṇi niṟa vaṇṇaṉ viṇṇavar-tamakku iṟai * ĕmakku
ŏl̤l̤iyāṉ uyarntāṉ * ulaku ezhum uṇṭu umizhntāṉ- **
tul̤l̤u nīr mŏṇṭu kŏṇṭu * cāmaraik kaṟṟaic cantaṉam unti vantu acai *
tĕl̤l̤u nīrp puṟavil- * tirukkoṭṭiyūrāṉe-3

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1840. The faultless sapphire-colored lord, the god of gods in the sky, the light of our lives, who swallowed all the seven worlds and spit them out stays in Thirukkottiyur surrounded with fields where the abundant wave-filled water of the rivers flows carrying sandalwood and samarai stones making the fields flourish.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளியான் கிருதயுகத்தில் வெளுத்தவனும்; கரியான் கலியுகத்தில் கறுத்தவனும்; மணி த்வாபரயுகத்தில்; நிற வண்ணன் பசுமை நிறமுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளின்; தமக்கு இறை தலைவன்; உயர்ந்தான் உயர்ந்தவன்; எமக்கு எனக்கு; ஒள்ளியான் காட்டியவன்; உலகு பிரளயத்தில்; ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டு உண்டு காத்து; உமிழ்ந்தான் பின் ஸ்ருஷ்டித்தான்; துள்ளு நீர் துள்ளி ஓடும் நீர்; சாமரை சாமர; கற்றை திரள்களையும்; சந்தனம் சந்தனமரங்களையும்; மொண்டு இழுத்து; கொண்டு கொண்டு வந்து; உந்தி வந்து தள்ளிக் கொண்டு வந்து; அசை பிரவஹிக்கும்; தெள்ளு நீர் தெளிந்த நீரையுடைய; புறவில் சுற்றுப்பக்கங்களோடு கூடின; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!