Chapter 8

Quality of the Lord that gives liberation - (அணைவது அரவு)

எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை
Āzhvār dispenses rare and precious tenets to the world at large.
ஆழ்வார், உலகத்தாருக்கு அரிய உபதேசங்களைச் செய்கிறார்.
Verses: 2980 to 2990
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will reach moksha in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.8.1

2980 அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது * இருவரவர்முதலும் தானே *
இணைவனாமெப்பொருட்கும், வீடுமுதலாம் *
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. (2)
2980 ## அணைவது அரவு அணைமேல் * பூம்பாவை ஆகம்
புணர்வது * இருவர் அவர் முதலும் தானே **
இணைவன் ஆம் * எப் பொருட்கும் வீடு முதல் ஆம் *
புணைவன் * பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)
2980 ## aṇaivatu aravu aṇaimel * pūmpāvai ākam
puṇarvatu * iruvar avar mutalum tāṉe **
iṇaivaṉ ām * ĕp pŏruṭkum vīṭu mutal ām *
puṇaivaṉ * piṟavikkaṭal nīntuvārkke (1)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The Supreme Lord, who rests on the serpent bed and holds Lakṣmī (the lotus-born) in His embrace, is the Progenitor of both Brahmā and Śiva. He freely descends among everyone and is the Granter of Mokṣa. He serves as a sure and certain raft to help us navigate and cross the difficult and dreadful ocean of Saṃsāra.

Explanatory Notes

(i) This stanza is an epitome of the contents of this decad.

(ii) The first two lines of the stanza bring out the setting in the Eternal land of absolute bliss (Nitya Vibhūti). So far as the “Līlā Vibhūti (Sportive Universe) is concerned, the Lord is depicted as the originator of one and all, including those two calling for special attention, the exalted Brahmā and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரவு அணைமேல் ஆதிசேஷ படுக்கையின் மீது; அணைவது சேர்வதும்; பூம்பாவை ஆகம் திருமகளோடு; புணர்வது கலப்பதுமான பெருமான்; அவர் இருவர் பிரமன் ருத்ரன் என்கிற இருவருக்கும்; முதலும் முதல்வனும் அப்பெருமான்; தானே தானே காரணமானவன்; ஆம் எப் பொருட்கும் எல்லாப் பொருளுக்கும்; இணைவன் ஒத்த பிறவி உடையவன்; வீடு முதலாம் மோக்ஷத்திற்குக் காரணமானவன்; பிறவிக் கடல் பிறவிக் கடலைக்; நீந்துவார்க்கே கடக்க விரும்புபவர்களுக்கு; புணைவன் தெப்பக்கட்டையாக இருந்து உதவுகிறான்
aravu thiruvananthāzhwān (ādhiṣĕshan); aṇai mĕl on the bed; aṇaivadhu lovingly lie down; most tender person like a budding flower; pāvai pirātti #s (ṣrī mahālakshmi #s); āgam divine body; puṇarvadhu embracing joyfully; avar popularly known (for their controlling ability); iruvar creation and sustenance of brahmā, rudhra; thānĕ himself; mudhalum is the cause; epporutkum all objects (in the universe which is protected); iṇaivanām (through his incarnations) being born in the species; vīdu mŏksham (liberation which is the top-most form of protection); mudhalām is the cause; piṛavi this existence in material realm; kadal ocean; nīndhuvārkku to those who want to cross over; puṇaivan is the boat.

TVM 2.8.2

2981 நீந்தும்துயர்ப்பிறவி உட்படமற்றெவ்வெவையும் *
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம் *
பூந்தண்புனற்பொய்கை யானையிடர்கடிந்த *
பூந்தண்துழாய் என்தனிநாயகன்புணர்ப்பே.
2981 நீந்தும் துயர்ப் பிறவி * உட்பட மற்று எவ் எவையும் *
நீந்தும் துயர் இல்லா * வீடு முதல் ஆம் **
பூந் தண் புனல் பொய்கை * யானை இடர் கடிந்த *
பூந் தண் துழாய் * என் தனி நாயகன் புணர்ப்பே (2)
2981 nīntum tuyarp piṟavi * uṭpaṭa maṟṟu ĕv ĕvaiyum *
nīntum tuyar illā * vīṭu mutal ām **
pūn taṇ puṉal pŏykai * yāṉai iṭar kaṭinta *
pūn taṇ tuzhāy * ĕṉ taṉi nāyakaṉ puṇarppe (2)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Contact with my unique Lord, who wears the cool and pleasant tulacī garland and rescued the distressed elephant in the beautiful pond, will help one cross the dreadful ocean of Saṃsāra, which breeds all ills, and attain the blissful SriVaikuntam.

Explanatory Notes

(i) In this stanza, the Āzhvār says that the Lord, as such, is not necessary for the attainment of Mokṣa and some kind of contact with Him will suffice. Such a contact will help one both ways, namely, obtaining relief from the otherwise incurable maladies of birth etc, and attaining the ‘Eternal Land’ of absolute bliss without the slightest tinge of sorrow.

(ii) Swimming + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூந் தண் புனல் பூவோடு அழகிய குளிர்ந்த நீரையுடைய; பொய்கை தடாகத்தில்; யானை முதலையால் ஏற்பட்ட யானையின்; இடர் கடிந்த துயரை போக்கின; பூந் தண் துழாய் துளசி மாலை அணிந்த; என் தனி நாயகன் என் ஒப்பற்ற பெருமானின்; புணர்ப்பே ஸம்பந்தமானது; நீந்தும் நீந்தி கடத்தற்கு அரிதான; துயர்ப் பிறவி பிறவித் துயர் முதலான; உட்பட மற்று எல்லாத் துன்பங்களையும்; எவ் எவையும் துயரையும் போக்கும்; நீந்தும் துயர் இல்லா நீந்திக் கடக்கும் துயர் இல்லாத; வீடு முதலாம் மோக்ஷத்திற்கும் காரணமாகும்
having flower; thaṇ cool; punal having water; poygai in the pond; yānai for the elephant (gajĕndhrāzhwān); idar trouble (caused by the crocodile); kadindha one who eliminated; pūm fresh; thaṇ cool; thuzhāy wearing thiruththuzhāy (thul̤asi); en for me; thani nāyagan unique/singular lord; puṇarppu relationship; nīndhum for the jīvāthmā who is finding it difficult to cross-over; thuyar sorrowful; piṛavai birth; utpada including; maṝu other; nīndhum to cross over; evvevai all types of aspects (such as old-age, death etc); thuyarum sorrows; illā untouched by; vīdu liberation; mudhalām cause

TVM 2.8.3

2982 புணர்க்குமயனாம் அழிக்குமரனாம் *
புணர்த்ததன்னுந்தியோடு ஆகத்துமன்னி *
புணர்த்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர் *
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும்புலனே.
2982 புணர்க்கும் அயன் ஆம் * அழிக்கும் அரன் ஆம் *
புணர்த்த தன் உந்தியோடு * ஆகத்து மன்னி **
புணர்த்த திருஆகித் * தன் மார்வில் தான் சேர் *
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு * எங்கும் புலனே (3)
2982 puṇarkkum ayaṉ ām * azhikkum araṉ ām *
puṇartta taṉ untiyoṭu * ākattu maṉṉi **
puṇartta tiruākit * taṉ mārvil tāṉ cer *
puṇarppaṉ pĕrum puṇarppu * ĕṅkum pulaṉe (3)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The Lord is also known as 'Ayaṉ', who emerged from His navel and created the worlds that resided within Him. He is also 'Araṉ', the destroyer. On His beautiful chest rests Tiru (Lakṣmī). His herculean tasks are indeed many.

Explanatory Notes

The Supreme Lord not only discharges the functions of ‘Ayaṉ’ (Brahmā), the Creator and ‘Araṉ’ (Śiva), the destroyer, standing within them as their Internal Controller but also assigns specific portions of His body for their occupation. And then, there is ‘Tiru’ (Lakṣmī), inseparably lodged on His winsome chest. And then, He reposes on the vast expanse of water, contemplating the ensuing creation of the universe. The herculean deeds performed by Him through

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் புணர்த்த தன்னை உண்டாக்கிய; உந்தியோடு நாபியோடு கூட; ஆகத்து மன்னி திருமேனியிலொரு பக்கத்தில்; புணர்க்கும் இருந்து உலகத்தை படைக்கும்; அயன் ஆம் பிரமனும் தானே ஆவான்; அழிக்கும் அழிக்கும்; அரன் ஆம் ருத்ரனும் தானேயாக இருப்பவன்; தன் மார்வில் தன் மார்பில்; புணர்த்த சேர்ந்திருக்கும்; திரு ஆகி திருமகளையுடையவனும் அவனே; தான் சேர் தனக்குத் தகுதியான; புணர்ப்பன் செயலை உடையனான அப்பெருமானின்; பெரும் புணர்ப்பு பெரும் வியாபாரங்கள்; எங்கும் எங்கும்; புலனே கண்டு அநுபவிக்கலாம்படி பிரசித்தம்
than him; puṇarththa created; undhiyŏdu with the navel; āgaththu in one portion of his divine body; manni eternally residing; puṇarkkum one who creates the universe; ayanām being aja (brahmā); azhikkum one who annihilates; aranām being hara (rudhra); than mārvil in his chest; puṇarththa kept together (to be identity); thiruvāgi having ṣrī mahālakshmi; thān he himself; sĕr matching for his stature; puṇarppan being the one with naturally beautiful activities; perum boundless; puṇarppu divine activities; engum everywhere; pulan popular as seen and enjoyed

TVM 2.8.4

2983 புலனைந்துமேயும் பொறியைந்தும்நீக்கி *
நலமந்தமில்லது ஓர்நாடுபுகுவீர் *
அலமந்துவீய அசுரரைச் செற்றான் *
பலமுந்துசீரில் படிமினோவாதே.
2983 புலன் ஐந்து மேயும் * பொறி ஐந்தும் நீங்கி *
நலம் அந்தம் இல்லது ஓர் * நாடு புகுவீர் **
அலமந்து வீய * அசுரரைச் செற்றான் *
பலம் முந்து சீரில் * படிமின் ஓவாதே (4)
2983 pulaṉ aintu meyum * pŏṟi aintum nīṅki *
nalam antam illatu or * nāṭu pukuvīr **
alamantu vīya * acuraraic cĕṟṟāṉ *
palam muntu cīril * paṭimiṉ ovāte (4)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-28, , 9-2, SVP-16-38

Divya Desam

Simple Translation

Those who want to put an end to the constant play between the senses and sense-objects in order to enter the Eternal Land of perfect bliss would do well to enjoy the auspicious traits of the Lord forever. Reflect on how He tormented and killed the Asuras.

Explanatory Notes

(i) Here is the Āzhvār’s recipe for discarding the sensual pleasures, petty and transient, and entering the Eternal Land of perfect bliss;

“Be steeped in the enjoyment of His auspicious traits for ever”,

(ii) Unlike several other processes which are difficult and tiresome in the initial stages and are pleasurable only in the final stages of fruition, contemplation + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புலன் ஐந்து சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகிய; மேயும் ஐந்து புலன்களிலும் பொருந்தி; பொறி ஐந்தும் ஐந்து இந்திரியங்களின் வசத்திலிருந்து; நீங்கி விடுபட்டு; நலம் அந்தம் இல்லது ஆனந்தமயமான மோக்ஷத்தை; ஓர் நாடு புகுவீர் அடைய விரும்புவீர்களாகில்; அசுரரை அசுரர்களை; அலமந்து வீய தடுமாறி முடியும்படி; செற்றான் அவர்களை அழித்தவனான பெருமானின்; பலம் முந்து சீரில் பலம் முற்பட்டிருக்கிற நற்குணங்களில்; ஓவாதே படிமின் இடைவிடாது ஈடுபட்டு வணங்குங்கள்
pulan visible matters; aindhum in those five; mĕyum well-fitting; poṛi like a trap which catches him; aindhum from the five senses; nīngi detaching; nalam bliss; andhamilladhu being unlimited; ŏr distinct/unique; nādu in the abode; puguvīr ŏh the ones who desire to enter!; alamandhu toiling; vīya be destroyed; asurarai demons; seṝān of the one who killed; mundhu from the beginning; palam being the result (due to its sweetness); sīril in the auspicious qualities; ŏvādhĕ always; padimin be immersed

TVM 2.8.5

2984 ஒவாத்துயர்ப்பிறவி உட்பட மற்றெவ்வெவையும் *
மூவாத்தனிமுதலாய் மூவுலகும் காவலோன் *
மாவாகி ஆமையாய் மீனாகிமானிடமாம் *
தேவாதிதேவபெருமான் என்தீர்த்தனே.
2984 ஓவாத் துயர்ப் பிறவி * உட்பட மற்று எவ் எவையும் *
மூவாத் தனி முதலாய் * மூவுலகும் காவலோன் **
மா ஆகி ஆமை ஆய் * மீன் ஆகி மானிடம் ஆம் *
தேவாதி தேவ பெருமான் * என் தீர்த்தனே (5)
2984 ovāt tuyarp piṟavi * uṭpaṭa maṟṟu ĕv ĕvaiyum *
mūvāt taṉi mutalāy * mūvulakum kāvaloṉ **
mā āki āmai āy * mīṉ āki māṉiṭam ām *
tevāti teva pĕrumāṉ * ĕṉ tīrttaṉe (5)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The Supreme Lord is the causeless cause of the flowing universe, responsible for its creation, sustentation, and destruction. He is the Chief of the Celestials and my Tīrttaṉ (Who sanctified me). He descended as a Horse, Tortoise, Fish, and Man to protect the worlds, one and all.

Explanatory Notes

The routine of the Universe falling under the three major compartments of creation, preservation and dissolution, goes on uninterruptedly because of the ever-alert and omnipotent Lord who directs and controls them all. No doubt, He dowered on all of us, limbs and sense-organs to put us on a career of gainful activity with a view to attaining Him, but even if we stray away + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓவாத் துயர் இடைவிடாத துக்கத்தை விளைவிக்கிற; பிறவி உட்பட பிறப்பு முதலான; மற்று எவ் எவையும் மற்றுமுள்ள அனைத்துக்கும்; மூவாத் தனி சோம்பல் இல்லாத; முதலாய் தனித்த காரணபூதனாக இருந்து கொண்டு; மூவுலகும் மூன்று உலகங்களையும்; காவலோன் பாதுகாக்கும் பொறுப்பையுடைய; தேவாதி தேவர்களுக்கும்; தேவ பெருமான் நித்ய ஸூரிகளுக்கும் அதிபதியாய்; என் தீர்த்தனே என்னைப் பரிசுத்தனாக்கும் தீர்த்தன்; மா ஆகி ஹயக்ரீவனாக அவதரித்தும்; ஆமையாய் ஆமையாய் அவதரித்தும்; மீனாகி மீனாக அவதரித்தும்; மானிடமாம் மநுஷ்யனாகவும் அவதரித்தவன் அவன்
ŏvā continuous (without break); thuyar one that gives distress; piṛavi creation which binds āthmā to birth; utpada including; maṝu others such as sustenance, annihilation etc; evvevaiyum all other activities; mūvā effortlessly; thani mudhalāy being the singular cause who does not expect anyone-s help; mūvulagum of the (created) universe; kāvalŏn being the protector; dhĕva for the dhĕvas (celestial beings) starting with brahmā et al; ādhi dhĕvar for those nithyasūris who are beyond the reach (of such dhĕvathās); perumān being the lord; en for me; thīrththan like a river bank, that is easily approachable; māvāgi incarnating as hayagrīva (horse-headed form, who is the propagator of vĕdham); āmaiyāy mīnāgi incarnating as kūrma (tortoise) and mathsya (fish) (who are propagators of purāṇas); mānidamām and also incarnated as human form (who is the propagator of gīthŏpanishath- bhagavath gīthā)

TVM 2.8.6

2985 தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்
சேர்த்தியவையே * சிவன்முடிமேல்தான்கண்டு *
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை *
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே?
2985 தீர்த்தன் உலகு அளந்த * சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே * சிவன் முடிமேல் தான் கண்டு **
பார்த்தன் தெளிந்தொழிந்த * பைந்துழாயான் பெருமை *
பேர்த்தும் ஒருவரால் * பேசக் கிடந்ததே? (6)
2985 tīrttaṉ ulaku al̤anta * cevaṭimel pūntāmam
certti avaiye * civaṉ muṭimel tāṉ kaṇṭu **
pārttaṉ tĕl̤intŏzhinta * paintuzhāyāṉ pĕrumai *
perttum ŏruvarāl * pecak kiṭantate? (6)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Is there any need for others to ponder the glory of Lord Kṛṣṇa, who wears the tulacī garland and is known as Tīrttaṉ (The Immaculate)? Pārttaṉ placed a garland at His lovely feet, which spanned the universe, and later saw it on Śiva's head, gaining clarity of mind in the process.

Explanatory Notes

In the battle against the “Kauravas Arjuṉa needed the weapon known as ‘Pāśupada astra’ which could be had from Śiva after due propitiation. The compassionate Kṛṣṇa, however, told Arjuṉa the short-cut whereby he could offer at the former’s feet the garland intended for Paśupati (Śiva). Arjuṉa did accordingly and that very night, Śiva appeared in Arjuṉa’s dream, wearing + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீர்த்தன் பரம பவித்திரனான கண்ணனுடைய; உலகளந்த சேவடிமேல் உலகமளந்த திருவடிகளிலே; பூந்தாமம் பூ மாலையை; பார்த்தன் அர்ஜுனன்; சேர்த்தி ஸமர்ப்பித்து; அவையே அந்த பூ மாலையையே; சிவன் முடிமேல் சிவனுடைய தலைமேல்; தான் கண்டு இருப்பதை தானே நேரில் பார்த்து; தெளிந்து ஒழிந்த கண்ணனே இறைவன் என்று தெளிந்து; பைந் துழாயான் பசுமையான துளசி மாலை அணிந்த; பெருமை கண்ணனின் பெருமை; பேர்த்தும் ஒருவரால் இப்பொழுது மீண்டு ஒருவரால்; பேசக் கிடந்ததே? ஆராயப்படும்படி இருக்கிறதோ?
thīrththan īn the previous incarnation of pure krishṇa; ulagu the three worlds; al̤andha measured; having freshness; adimĕl on the divine feet; pūm beautiful; dhāmam garlands; sĕrththi offered; avaiyĕ the same garlands; sivan ṣiva-s; mudimĕl on matted hair; thān he himself; kaṇdu seen; pārththan arjuna; thel̤indhu ozhindha established; paim fresh/green; thuzhāyān of the one who is having thul̤asi; perumai supremacy; pĕrththum other than arjuna; oruvarāl anyone else; pĕsa to narrate; kidandhadhĕ is there any aspect that remains to be clarified?

TVM 2.8.7

2986 கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் *
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை * மால்செய்கின்றமால் ஆர்காண்பாரே?
2986 கிடந்து இருந்து நின்று அளந்து * கேழல் ஆய் கீழ்ப் புக்கு *
இடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் **
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் * பார் என்னும் *
மடந்தையை * மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)
2986 kiṭantu iruntu niṉṟu al̤antu * kezhal āy kīzhp pukku *
iṭantiṭum * taṉṉul̤ karakkum umizhum **
taṭam pĕrun tol̤ ārat tazhuvum * pār ĕṉṉum *
maṭantaiyai * māl cĕykiṉṟa māl ār kāṇpāre? (7)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Lying, sitting, and standing, measuring the worlds, entering the deep waters and lifting the Earth as a gigantic Boar, holding all the worlds with Him and then spitting them out, embracing Mother Earth on His broad shoulders, who can comprehend His love for Mother Earth?

Explanatory Notes

(i) Many indeed are the wondrous deeds of the Lord, done out of His great love for Mother Earth, the Sportive universe (Līlā vibhūti).

(ii) Lying, sitting and standing:

There are several ways of appreciating these postures of the Lord. These are set out below:

(a) Reclining on the Milk-ocean, the centre of creative activity, surrounded by the band of celestials; + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிடந்து கடற்கரையில் வழி வேண்டிக் கிடந்தும்; இருந்து சித்திரகூட மலையில் இருந்தும்; நின்று ராவணனை முடித்த பின் வீர ஸ்ரீயோடே நின்றும்; அளந்து திருவிக்கிரமனாக அளந்தும்; கேழல் ஆய் வராகமாக; கீழ் புக்கு கீழே புகுந்து; இடந்திடும் இடந்து பூமியை மேலே கொண்டு வந்தும்; தன்னுள் பிரளய காலத்தில் தன்னுள்ளே; கரக்கும் மூன்று உலகங்களையும் மறைத்தும்; உமிழும் பிறகு வெளிப்படுத்தி காத்தும்; தடம் பெருந் தோள் வலிய பெரிய தோள்கள்; ஆரத் தழுவும் இன்பத்தால் பூரிக்கும்படி தழுவியும்; பார் என்னும் பூமி என்று சொல்லப்படுகிற; மடந்தையை மடந்தையை பூமிப் பிராட்டியை; மால் எம்பெருமான்; செய்கின்ற செய்யும் சேஷ்டிதங்களை; மால் ஆர் திருமாலை யார் தான்; காண்பாரே? அறியவல்லார்
kidandhu lay down (on the seashore, praying to [samudhrarāja, the ḵing of oceans to] give way (to protect) as said in ṣrī rāmāyaṇam -prathiṣishyĕ mahŏdhadhim-); irundhu sat (in chithrakūta as said in ṣrī rāmāyaṇam -utajĕ rāmamāsīnam-); ninṛu stood (amidst the celestial deities holding his bow after killing rāvaṇa); al̤andhu measured [as thrivikrama to win over the universe]; kĕzhalāy in the form of a wild boar; kīzh underneath the causal water; pukku entered; idandhidum separated from the walls of the universe and rescued; thannul̤ during mahāpral̤ayam (total annihilation in the form of a baby lying down on a leaf and holding the universe) in his stomach; than ul̤ inside him; karakkum hide it inside (so no one can see); umizhum spit it out to let them see outside; thadam spacious; perum big; thŏl̤ divine shoulders; āra to fulfil; thazhuvum embrace (with his divine form); pār ennum known as bhūmi; madandhaiyai girl; māl īswara who is greater than all; seyginṛa performing; māl affection; kāṇbār can see/know; ār who?

TVM 2.8.8

2987 காண்பாரார்? எம்மீசன் கண்ணனையென்காணுமாறு? *
ஊண்பேசில் எல்லாவுலகுமோர்துற்றாற்றா *
சேண்பாலவீடோ உயிரோமற்றெப்பொருட்கும் *
ஏண்பாலும்சோரான்பரந்துளனாமெங்குமே.
2987 காண்பார் ஆர் எம் ஈசன் * கண்ணனை? என் காணுமாறு? *
ஊண் பேசில் * எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா **
சேண் பால வீடோ * உயிரோ மற்று எப் பொருட்கும் *
ஏண் பாலும் சோரான் * பரந்து உளன் ஆம் எங்குமே (8)
2987 kāṇpār ār ĕm īcaṉ * kaṇṇaṉai? ĕṉ kāṇumāṟu? *
ūṇ pecil * ĕllā ulakum or tuṟṟu āṟṟā **
ceṇ pāla vīṭo * uyiro maṟṟu ĕp pŏruṭkum *
eṇ pālum corāṉ * parantu ul̤aṉ ām ĕṅkume (8)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Who can truly comprehend Kaṇṇaṉ, my Lord, or grasp His know-how? All the worlds can barely make up a morsel of His food. His abode is SriVaikuntam, and He is the Inner Controller of all. He pervades everything, without exception.

Explanatory Notes

(i) It is indeed impossible for any one to gauge the full extent of the Lord’s glory; even the exalted ones who are endowed with the capacity to delve into it, are not equal to the task. They too could touch only a fringe of it, just a peep, and no more.

(ii) All along, reference was made to the Lord containing within His stomach, eating up all the worlds, during the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் ஈசன் எமக்கு ஸ்வாமியான; கண்ணனை கண்ணனை; காண்பார் ஆர்? அறியவல்லார் யார்?; என் காணுமாறு? அறியும் விதந்தான் யாது?; ஊண் உணவு இன்னதென்று; பேசில் சொல்லப் புகுந்தால்; எல்லா உலகும் எல்லா உலகங்களும்; ஓர் துற்று ஆற்றா ஒரு கபளத்திற்கும் போதாது; வீடோ மோக்ஷம் எல்லா; சேண் பால உலகங்களுக்கும் அப்பாற்பட்டது; மற்று எப்பொருட்கும் மற்ற எல்லா பொருள்களுக்கும்; உயிரோ அந்தர்யாமியாய் இருந்து கொண்டு; ஏண் பாலும் எல்லாத் திக்குகளிலும்; சோரான் ஒன்றையும் விடாதவனாய்; எங்குமே பரந்து எங்கும் வியாபித்து; உளன் ஆம் இருக்கிறான்
em my; īsan being lord; kaṇṇanai krishṇa who is easily approachable; kāṇbār one who can know; ār who?; kāṇumāṛu to know; en how?; ūṇ food; pĕsil if we try to say,; ellā ulagum all worlds (which are filled with movable/immovable objects); ŏr thuṝu even for a handful; āṝā not sufficient;; vīdŏ his residence (where he lives); sĕṇpāla ās explained in chāndhŏgya upanishadh -viṣvatha: prushtĕshu sarvatha: prushtĕshu- (beyond everything else in this material world), in the paramapadham (spiritual realm) that is much beyond all of the material realm; avanŏ him; maṝu other than him; epporutkum all objects; uyir antharāthmā (in-dwelling super soul); ĕṇpālum even a small place; sŏrān without losing; engum in all places; parandhu pervaded; ul̤anām exists

TVM 2.8.9

2988 எங்கும்முளன் கண்ணனென்றமகனைக்காய்ந்து *
இங்கில்லையாலென்று இரணியன் தூண்புடைப்ப *
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய * என்
சிங்கப்பிரான் பெருமை ஆராயும்சீர்மைத்தே?
2988 ## எங்கும் உளன் கண்ணன் என்ற * மகனைக் காய்ந்து *
இங்கு இல்லையால் என்று * இரணியன் தூண் புடைப்ப **
அங்கு அப்பொழுதே * அவன் வீயத் தோன்றிய * என்
சிங்கப் பிரான் பெருமை * ஆராயும் சீர்மைத்தே? (9)
2988 ## ĕṅkum ul̤aṉ kaṇṇaṉ ĕṉṟa * makaṉaik kāyntu *
iṅku illaiyāl ĕṉṟu * iraṇiyaṉ tūṇ puṭaippa **
aṅku appŏzhute * avaṉ vīyat toṉṟiya * ĕṉ
ciṅkap pirāṉ pĕrumai * ārāyum cīrmaitte? (9)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-4, 10-39

Simple Translation

The son affirmed, "Kaṇṇaṉ is everywhere." Furious, Iraṇiyaṉ shouted back, "What if he's not here?" and struck the pillar hard. At that moment, the Lord appeared and killed the demon. Truly, my Naraciṅka's glory is beyond contemplation.

Explanatory Notes

(i) In the preceding Song, the Lord’s immanence was referred to. Perhaps, it didn’t carry conviction with quite a few persons who doubted whether the Lord could pervade all over, in and out. This song is evidently addressed to those persons, warning them not to follow in the foot-steps of Hiraṇya and come to grief.

(ii) Hiraṇya slapped, with his own hand, a pillar + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணன் எங்கும் எம்பெருமான் எங்கும்; உளன் என்ற இருக்கிறான் என்று சொன்ன; மகனை மகனை பிரகலாதனை; இரணியன் காய்ந்து இரணியன் கோபித்து; இங்கு இல்லையால் இவ்விடத்தில் இல்லையா; என்று தூண் புடைப்ப என்று தூணைத் தட்ட; அங்கு அந்தத் தூணிலிருந்து; அப் பொழுதே அப்பொழுதே; அவன் வீய இரணியன் முடியும்படி; தோன்றிய தோன்றிய; என் சிங்க நரசிம்ம மூர்த்தியான; பிரான் எம்பெருமானின்; பெருமை பெருமை; ஆராயும் சீர்மைத்தே ஆராய்தற்குரிய தன்மையதோ?
kaṇṇan as said in -sarvam vyāpya sthitha:- (everywhere pervaded and well situated), sarvĕṣvaran who is the controller of all; engum everywhere; ul̤an one who is present; enṛa thus said; maganai son; kāyndhu shunned or showing anger; ingu here; illai not present; enṛu saying so; thūṇ pillar (which was declared by himself as the place devoid of emperumān); iraṇiyan hiraṇya kaṣipu; pudaippa hit; angu in that pillar itself; appozhudhĕ instantaneously; avan hiraṇya kaṣipu; vīya to be destroyed; thŏnṛiya presented his form; en my; singam half human and half lion form; pirān great saviour-s; perumai greatness (of being partial towards his devotees); ārāyum analysing (through the heart); sīrmaiththĕ is it of that nature?

TVM 2.8.10

2989 சீர்மைகொள்வீடு சுவர்க்கம்நரகீறா *
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும் *
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற *
கார்முகில்போல்வண்ணன் என்கண்ணனைநான் கண்டேனே.
2989 சீர்மை கொள் வீடு * சுவர்க்கம் நரகு ஈறா *
ஈர்மை கொள் தேவர் * நடுவா மற்று எப் பொருட்கும் **
வேர் முதல் ஆய் வித்து * ஆய்ப் பரந்து தனி நின்ற *
கார் முகில் போல் வண்ணன் * என் கண்ணனை நான் கண்டேனே (10)
2989 cīrmai kŏl̤ vīṭu * cuvarkkam naraku īṟā *
īrmai kŏl̤ tevar * naṭuvā maṟṟu ĕp pŏruṭkum **
ver mutal āy vittu * āyp parantu taṉi niṉṟa *
kār mukil pol vaṇṇaṉ * ĕṉ kaṇṇaṉai nāṉ kaṇṭeṉe (10)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

I have seen Kaṇṇaṉ, my cloud-hued Lord of unique excellence. He pervades all and is the triple cause of all existence, bringing about the exalted SriVaikuntam, Svarg, and hell, along with their respective denizens, the kind-hearted Devas, and everything else.

Explanatory Notes

(i) As already mentioned in the preamble to this decad, the Āzhvār finds, at this stage, the people around, most unresponsive, all his advice having fallen on deaf ears. Frustrated though, he is still happy that he didn’t get contaminated by them and become one of them, very much like clearing a dacoit-infested area without getting robbed or molested.

(ii) The Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர்மை கொள் வீடு மேன்மை பொருந்திய மோக்ஷமும்; சுவர்க்க ஸ்வர்க்கமும்; நரகு ஈறா நரகமும் மேல் எல்லையாகவும்; ஈர்மை கொள் ஈர நெஞ்சுடையரான; தேவர் நடுவா தேவர்கள் நடுவாகவும்; மற்று எப் பொருட்கும் மற்ற எல்லாப் பொருள்களுக்கும்; வேர் சஹகாரியுமாயும்; முதல் ஆய் நிமித்தமுமாயும்; வித்து ஆய் உபாதான காரணமுமாயும்; பரந்து தனி நின்ற எல்லா இடங்களிலும் வியாபித்து; கார்முகில் போல் கார்காலத்து மேகம் போன்ற; வண்ணன் வடிவுடையவனாய் இருக்கும்; என் கண்ணனை என் கண்ணனை; நான் கண்டேனே நான் கண்டேன் அநுபவித்தேன்
sīrmai kol̤ having greatness (of being accomplished by bhagavān-s mercy instead of being achievable by one-s own virtues/vices); vīdu mŏksham- liberation (paramapadham- spiritual realm); suvargga naragu svarga (heaven) and naraka (hell) (which are resulting from virtues and vices); īṛā having as upper boundary; īrmai kol̤ kind-hearted; dhĕvar celestial beings; naduvā being the intermediary (between the means and the result); maṝu [other] primary forms; epporutkum all entities/aspects such as sādhanam (means) etc; vĕr being the sahakāri kāraṇa (ancillary cause); mudhalāy being the nimiththa kāraṇa (instrumental cause); viththāy being the upādhāna kāraṇa (material cause); parandhu pervading everywhere; thani being different (from all objects he pervades); ninṛa being situated; kār in the rainy season; mugil pŏl like a cloud; vaṇṇan having the form; en being easily approachable by me; kaṇṇanai krishṇa; nān ī; kaṇdĕnĕ enjoyed him- saying this he becomes delighted.

TVM 2.8.11

2990 கண்தலங்கள் செய்ய கருமேனியம்மானை *
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன் *
பண்தலையிற்சொன்னதமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *
விண்தலையில்வீற்றிருந்தாள்வர் எம்மாவீடே. (2)
2990 ## கண் தலங்கள் செய்ய * கரு மேனி அம்மானை *
வண்டு அலம்பும் சோலை * வழுதி வள நாடன் **
பண் தலையில் சொன்ன தமிழ் * ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் * எம் மா வீடே (11)
2990 ## kaṇ talaṅkal̤ cĕyya * karu meṉi ammāṉai *
vaṇṭu alampum colai * vazhuti val̤a nāṭaṉ **
paṇ talaiyil cŏṉṉa tamizh * āyirattu ip pattum vallār *
viṇ talaiyil vīṟṟiruntu āl̤var * ĕm mā vīṭe (11)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Those who learn these ten songs from the thousand composed in melodious tunes by Caṭakōpaṉ, Chief of Vaḻutināṭu, known for its fertile orchards swarming with cheerful honey bees,. Those who adore the black-hued, large lotus-eyed Lord, will thrive in SriVaikuntam and enjoy supreme bliss.

Explanatory Notes

The chanters of this decad will shoot up from the harrowing depths of worldly existence to an exalted position in SriVaikuntam, keeping at their beck and call, the denizens over there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண் தலங்கள் செய்ய சிவந்த கண்களையும்; கரு மேனி கருத்த திருமேனியையும் உடைய; அம்மானை இறைவனைக் குறித்து; வண்டு அலம்பும் வண்டுகள் ஒலிக்கின்ற; சோலை சோலைகள் சூழ்ந்த; வழுதி திருவழுதி; வள நாடன் வளநாட்டவரான நம்மாழ்வார்; பண் தலையில் சிறந்த பண்ணோடு அமைத்து; சொன்ன அருளிச்செய்த; தமிழ் ஆயிரத்து தமிழ்ப் பாசுரங்களான ஆயிரத்தில்; இப் பத்தும் இந்த பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்கள்; விண் தலையில் பரமாகாசத்தில்; வீற்றிருந்து ஆள்வர் சிறப்போடு வீற்றிருந்து; எம் மா மிகப் பெரிய போக்யமான; வீடே மோக்ஷானந்தத்தை அநுபவிப்பார்கள்
kaṇ in the eye; thalangal̤ fully; seyya reddish; karu (contrasting it) blackish; mĕni having divine form; ammānai lord of all; vaṇdu beetles; alambum moving around in the flood of honey; sŏlai having gardens; vazhudhi val̤a nādan āzhvār who owns thiruvazhudhi val̤anādu; paṇ thalaiyil keeping the tune as the foundation; sonna mercifully sang; thamizh āyiraththu thousand pāsurams of thiruvāimozhi; ippaththum this decad; vallār those who are well-versed; viṇ thalaiyil on top of the paramākāṣam (spiritual sky); vīṝu irundhu ās said in -sa svarātbhavathi #(he has become the emperor), being seated distinctly; e (em) being together in all manner; having unlimited joy; vīdu the bliss of mŏksham (liberation); āl̤var will experience with full control