Chapter 8

Quality of the Lord that gives liberation - (அணைவது அரவு)

எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

Āzhvār dispenses rare and precious tenets to the world at large.


Excerpts from the Vyākhyāna Avatārikās for the Eighth Chapter of the Tiruvāymozhi


Insights from the Introduction of Tirukkurukaippirān Piḷḷān

Drawing from the profound sentiment of the pāśuram "Dāmōdaranai" (Tiruvāymozhi 2.7.12), our Āzhvār, overflowing with

+ Read more

ஆழ்வார், உலகத்தாருக்கு அரிய உபதேசங்களைச் செய்கிறார்.

இரண்டாம் பத்து -எட்டாம் திருவாய்மொழி-அணைவதரவணை’–பிரவேசம்

ஸ்ரீ சர்வேஸ்வரன் தம் பக்கல் செய்த வியாமோகம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே, தம்மோடு சம்பந்தம் உடையாரளவிலும் வெள்ளம் இட்டபடியைச் சொன்னார் கீழ் திருவாய்மொழியில்; ‘நம்முடைய

+ Read more
Verses: 2980 to 2990
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will reach moksha in the sky
  • TVM 2.8.1
    2980 ## அணைவது அரவு அணைமேல் * பூம்பாவை ஆகம்
    புணர்வது * இருவர் அவர் முதலும் தானே **
    இணைவன் ஆம் * எப் பொருட்கும் வீடு முதல் ஆம் *
    புணைவன் * பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)
  • TVM 2.8.2
    2981 நீந்தும் துயர்ப் பிறவி * உட்பட மற்று எவ் எவையும் *
    நீந்தும் துயர் இல்லா * வீடு முதல் ஆம் **
    பூந் தண் புனல் பொய்கை * யானை இடர் கடிந்த *
    பூந் தண் துழாய் * என் தனி நாயகன் புணர்ப்பே (2)
  • TVM 2.8.3
    2982 புணர்க்கும் அயன் ஆம் * அழிக்கும் அரன் ஆம் *
    புணர்த்த தன் உந்தியோடு * ஆகத்து மன்னி **
    புணர்த்த திருஆகித் * தன் மார்வில் தான் சேர் *
    புணர்ப்பன் பெரும் புணர்ப்பு * எங்கும் புலனே (3)
  • TVM 2.8.4
    2983 புலன் ஐந்து மேயும் * பொறி ஐந்தும் நீங்கி *
    நலம் அந்தம் இல்லது ஓர் * நாடு புகுவீர் **
    அலமந்து வீய * அசுரரைச் செற்றான் *
    பலம் முந்து சீரில் * படிமின் ஓவாதே (4)
  • TVM 2.8.5
    2984 ஓவாத் துயர்ப் பிறவி * உட்பட மற்று எவ் எவையும் *
    மூவாத் தனி முதலாய் * மூவுலகும் காவலோன் **
    மா ஆகி ஆமை ஆய் * மீன் ஆகி மானிடம் ஆம் *
    தேவாதி தேவ பெருமான் * என் தீர்த்தனே (5)
  • TVM 2.8.6
    2985 தீர்த்தன் உலகு அளந்த * சேவடிமேல் பூந்தாமம்
    சேர்த்தி அவையே * சிவன் முடிமேல் தான் கண்டு **
    பார்த்தன் தெளிந்தொழிந்த * பைந்துழாயான் பெருமை *
    பேர்த்தும் ஒருவரால் * பேசக் கிடந்ததே? (6)
  • TVM 2.8.7
    2986 கிடந்து இருந்து நின்று அளந்து * கேழல் ஆய் கீழ்ப் புக்கு *
    இடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் **
    தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் * பார் என்னும் *
    மடந்தையை * மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)
  • TVM 2.8.8
    2987 காண்பார் ஆர் எம் ஈசன் * கண்ணனை? என் காணுமாறு? *
    ஊண் பேசில் * எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா **
    சேண் பால வீடோ * உயிரோ மற்று எப் பொருட்கும் *
    ஏண் பாலும் சோரான் * பரந்து உளன் ஆம் எங்குமே (8)
  • TVM 2.8.9
    2988 ## எங்கும் உளன் கண்ணன் என்ற * மகனைக் காய்ந்து *
    இங்கு இல்லையால் என்று * இரணியன் தூண் புடைப்ப **
    அங்கு அப்பொழுதே * அவன் வீயத் தோன்றிய * என்
    சிங்கப் பிரான் பெருமை * ஆராயும் சீர்மைத்தே? (9)
  • TVM 2.8.10
    2989 சீர்மை கொள் வீடு * சுவர்க்கம் நரகு ஈறா *
    ஈர்மை கொள் தேவர் * நடுவா மற்று எப் பொருட்கும் **
    வேர் முதல் ஆய் வித்து * ஆய்ப் பரந்து தனி நின்ற *
    கார் முகில் போல் வண்ணன் * என் கண்ணனை நான் கண்டேனே (10)
  • TVM 2.8.11
    2990 ## கண் தலங்கள் செய்ய * கரு மேனி அம்மானை *
    வண்டு அலம்பும் சோலை * வழுதி வள நாடன் **
    பண் தலையில் சொன்ன தமிழ் * ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
    விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் * எம் மா வீடே (11)