Chapter 6

Mother's anger on seeing her daughter owned by the Lord - (கடல் ஞாலம்)

தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ஆவேசமோ என்று நொந்து கூறல்
parAnkusa nAyaki’s words ‘I am the creator of the world surrounded by the oceans, I am the world’ reflect that she considers herself as Bhagavān. “What is this??!!” says her astonished and confused mother. Some relatives come by to enquire about her daughter. “It seems like empurumAn has entered her body” says her mother who tries to unravel the mystery that’s her daughter, in these hymns.
பராங்குச நாயகி, ‘கடல் ஞாலம் செய்தேனும் யானே கடல் ஞானம் ஆவேனும் யானே’ என்று பலவாறாகக் கூறி, தன்னை எம்பெருமானாகவே கருதிப் பேசித் தரித்திருக்கப் பார்க்கிறார். தாயோ தன் மகளின் நிலையைக் கண்டு “இது என்ன?” என்று வியந்து கலக்குகிறாள். உறவினர் சிலர் வந்து இம்மகளின் நிலையைப் பற்றிக் கேட்கிறார்கள். “எம்பெருமான் இவளிடம் ஆவேசித்து இருப்பதுபோல் தோன்றுகிறது” என்று(தாய்) விடை கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.
Verses: 3288 to 3298
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will be the devotees of Thirumāl
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.6.1

3288 கடல்ஞாலம்செய்தேனும்யானேயென்னும்
கடல்ஞாலமாவேனும்யானேயென்னும் *
கடல்ஞாலம்கொண்டேனும்யானேயென்னும்
கடல்ஞாலம்கீண்டேனும்யானேயென்னும் *
கடல்ஞாலமுண்டேனும்யானேயென்னும்
கடல்ஞாலத்தீசன்வந்தேறக்கொலோ? *
கடல்ஞாலத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
கடல்ஞாலத்துஎன்மகள்கற்கின்றவே. (2)
3288 ## கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் **
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ? *
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? * (1)
3288 ## kaṭal ñālam cĕyteṉum yāṉe ĕṉṉum *
kaṭal ñālam āveṉum yāṉe ĕṉṉum *
kaṭal ñālam kŏṇṭeṉum yāṉe ĕṉṉum *
kaṭal ñālam kīṇṭeṉum yāṉe ĕṉṉum **
kaṭal ñālam uṇṭeṉum yāṉe ĕṉṉum *
kaṭal ñālam īcaṉ vantu eṟakkŏlo? *
kaṭal ñālattīrkku ivai ĕṉ cŏllukeṉ *
kaṭal ñālattu ĕṉ makal̤ kaṟkiṉṟave? * (1)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My daughter claims dominion over this expansive world, declaring she created it and permeates every corner. She boasts of seizing all realms from Bali and even holding the world within her stomach during the deluge. What can I possibly convey to you, persistent worldlings, about this? Is she perhaps possessed by the Supreme Lord himself?

Explanatory Notes

(i) It is God that created the entire Universe. The relevant expressions in ‘Chāndogya Upaniṣad’ are ‘Sadeva’ ‘Ekameva’ and ‘advitīyam’, indicative of the fact that the Lord combines in Himself all the three causes of creation, namely, the ‘Upādhāna’ (material cause) ‘Sahakāri’ (Operative cause) and ‘Nimitta’ (Instrumental cause). The fact that the Lord is the sole cause + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் ஞாலம் கடல் சூழ்ந்த உலகத்தை; செய்தேனும் படைத்தவளும்; யானே என்னும் நானே என்பாள்; கடல் ஞாலம் கடல் சூழ்ந்த உலகமாக; ஆவேனும் இருப்பவளும்; யானே என்னும் நானே என்பாள்; கடல் ஞாலம் கடல் சூழ்ந்த உலகத்தை; கொண்டேனும் அளந்து கொண்டவளும்; யானே என்னும் நானே என்பாள்; கடல் ஞாலம் கடல் சூழ்ந்த உலகத்தை; கீண்டேனும் வராகமாகக் குத்தி எடுத்தவளும்; யானே என்னும் நானே என்பாள்; கடல் ஞாலம் கடல் சூழ்ந்த உலகத்தை; உண்டேனும் பிரளயத்தில் காத்ததும்; யானே என்னும் நானே என்பாள்; கடல் ஞாலத்து கடல் சூழ்ந்த உலகத்துக்கு; ஈசன் வந்து தலைவனான எம்பெருமான் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ!; கடல் ஞாலத்தீர்க்கு உலகத்திலுள்ளவர்களே!; என் மகள் இங்ஙனம் இவள் பேசுகிற; கற்கின்றவே இப்பேச்சுக்கள்; கடல் ஞாலத்து கடல் சூழ்ந்த உல்கிலுள்ள உங்களுக்கு; இவை என் சொல்லுகேன் என்னவென்று சொல்லுவேன்?; என்கிறாள் பராங்குச நாயகியின் தாயார்
seydhĕnum one who created; yānĕ ī am; ennum she said;; kadal gyālam āvĕnum (after creating, entering into, and as said in thaiththirīya upanishath -sachchathyachchā bhavath-) being the antharyāmi of every entity which is named; yānĕ ī am; ennum she said;; kadal gyālam this earth; koṇdĕnum (when mahābali considers it to be his own, went and begged, ) measured and accepted; yānĕ ī am; ennum she said;; kadal gyālam this earth; kīṇdĕnum dug it out; yānĕ ī am; ennum she said;; kadal gyālam this earth; uṇdĕnum annihilated [and consumed]; yānĕ ī am; ennum she said;; kadal gyālaththu īsan sarvĕṣvaran, the controller of all worlds; vandhu came; ĕṛa entered her; kolŏ is it possible?; kadal gyālaththīrkku you all who are ignorant and engaged in worldly pursuits; kadal gyālaththu being present in this world itself; en magal̤ my daughter (who has a divine nature); kaṛkinṛa practicing; ivai these amaśing aspects; en how; solluvĕn can explain?; kaṛkum learnt (not through books or observation, but through an āchārya); kalvikku knowledge in the form of vĕdham [sacred text]

TVM 5.6.2

3289 கற்குங்கல்விக்கெல்லையிலனேயென்னும்
கற்குங்கல்வியாவேனும்யானேயென்னும் *
கற்குங்கல்விசெய்வேனும்யானேயென்னும்
கற்குங்கல்விதீர்ப்பேனும்யானேயென்னும் *
கற்குங்கல்விச்சாரமும்யானேயென்னும்
கற்குங்கல்விநாதன்வந்தேறக்கொலோ? *
கற்குங்கல்வியீர்க்கிவையென்சொல்லுகேன்?
கற்குங்கல்விஎன்மகள்காண்கின்றனவே.
3289 கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் *
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் *
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் *
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் **
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் *
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ? *
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் *
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? * (2)
3289 kaṟkum kalvikku ĕllai ilaṉe ĕṉṉum *
kaṟkum kalvi āveṉum yāṉe ĕṉṉum *
kaṟkum kalvi cĕyveṉum yāṉe ĕṉṉum *
kaṟkum kalvi tīrppeṉum yāṉe ĕṉṉum **
kaṟkum kalvic cāramum yāṉe ĕṉṉum *
kaṟkum kalvi nātaṉ vantu eṟakkŏlo? *
kaṟkum kalviyīrkku ivai ĕṉ cŏllukeṉ *
kaṟkum kalvi ĕṉ makal̤ kāṇkiṉṟave? * (2)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My daughter stands at the threshold of knowledge, claiming she has mastered all branches of learning and embodies the essence of it all within herself. It seems she is possessed by the Lord, from whom all knowledge emanates. What more can I say about the depths of learning?

Explanatory Notes

(i) The Lord is the embodiment of all learning, the aggregate of the Vedas; He disseminates particular branches of learning at the appropriate moments; He is the final arbiter of the true meanings of the texts and at the time of dissolution of the worlds, He stores up all learning in His mind. Indeed, the object of all learning is to know Him.

(ii) Mastered all learning: + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கற்கும் கல்விக்கு கற்கப்படும் கல்விக்கு; எல்லை இலனே எல்லை இல்லாதவள் நான்; என்னும் என்கிறாள்; கற்கும் கல்வி கற்கப்படும் கல்விகளெல்லாம்; ஆவேனும் யானே என்னும் நானே என்கிறாள்; கற்கும் கல்வி கற்கப்படும் கல்விகளை; செய்வேனும் உண்டாக்கியவள்; யானே என்னும் நானே என்கிறாள்; கற்கும் கல்வி கற்கப்படும் கல்வியின்; தீர்ப்பேனும் ஸம்ஹார காலத்தில் முடித்து; யானே என் மனதில் வைப்பவளும் நானே; என்னும் என்கிறாள்; கற்கும் கல்வி கற்கப்படும் கல்வியின்; சாரமும் மூல மந்திரங்களின் சாரமும்; யானே என்னும் நானே என்கிறாள்; கற்கும் கல்வி கற்கப்படும் கல்வியால் சொல்லப்படும்; நாதன் வந்து எம்பெருமான் வந்து இவளை; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; கற்கும் கல்வியீர்க்கு கல்வி கற்கும்படியான உங்களுக்கு; கற்கும் கல்வி இன்று வார்த்தை கற்கும்படியான; என் மகள் பருவத்தையுடைய என் மகள்; காண்கின்றவே? கண்டு சொல்லுவதை என்னவென்று; இவை என் சொல்லுகேன் சொல்லுவேன்? என்கிறாள் தாயார்
ellai boundary; ilan not having; ennum she said;; kaṛkum kalvi āvĕnum Being the soul of ṣabdha (vĕdham), to have that knowledge as my prakāra (attributes); yānĕ ī am; ennum she said;; kaṛkum kalvi this knowledge; seyvĕnum creator (ḍuring srushti (creation), ī create them as they existed before according to supthaprabudhdha nyāyam (the logic of recollecting everything after waking up)).; yānĕ ī am; ennum she said;; kaṛkum kalvi thīrppĕnum during deluge, finishing it and preserving it in my heart; yānĕ ī am; ennum she said;; kaṛkum kalvich chāramum mūla manthram etc which are the essence of that knowledge; yānĕ at my disposal; ennum she said;; kaṛkum kalvi the propounder of all of vĕdham; nāthan sarvĕṣvaran; vandhĕṛa entered her; kolŏ is it possible?; kaṛkum kalviyīrkku you who are ready to learn these from me; kaṛkum kalvi now in learning age; en magal̤ my daughter; kāṇginṛa the vision she had and speaking; ivai these; en what; sollugĕn shall ī say?; kāṇginṛa seen (through pramāṇam); nilam ellām all the pruthvi (land/earth, which is the last of the five elements)

TVM 5.6.3

3290 காண்கின்றநிலமெல்லாம்யானேயென்னும்
காண்கின்றவிசும்பெல்லாம்யானேயென்னும் *
காண்கின்றவெந்தீயெல்லாம்யானேயென்னும்
காண்கின்றஇக்காற்றெல்லாம்யானேயென்னும் *
காண்கின்றகடலெல்லாம்யானேயென்னும்
காண்கின்றகடல்வண்ணனேறக்கொலோ?
காண்கின்றவுலகத்தீர்க்கென்சொல்லுகேன்?
காண்கின்றஎன்காரிகைசெய்கின்றவே.
3290 காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் *
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் *
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் *
காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும் **
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் *
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ? *
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? * (3)
3290 kāṇkiṉṟa nilam ĕllām yāṉe ĕṉṉum *
kāṇkiṉṟa vicumpu ĕllām yāṉe ĕṉṉum *
kāṇkiṉṟa vĕm tī ĕllām yāṉe ĕṉṉum *
kāṇkiṉṟa ik kāṟṟu ĕllām yāṉe ĕṉṉum **
kāṇkiṉṟa kaṭal ĕllām yāṉe ĕṉṉum *
kāṇkiṉṟa kaṭalvaṇṇaṉ eṟakkŏlo? *
kāṇkiṉṟa ulakattīrkku ĕṉ cŏllukeṉ *
kāṇkiṉṟa ĕṉ kārikai cĕykiṉṟave? * (3)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My daughter speaks with clarity, claiming to embody the visible elements—Earth, Wind, Water, Sky, and Fire. It seems she is indeed possessed by the sea-hued Lord. What more can I say about this world?

Explanatory Notes

The mother tells the kinsmen that, unlike them all, with a narrow vision, confined to the things seen around, her daughter (Parāṅkuśa Nāyakī) has a cosmic vision. New visions of beauty shine before the eyes of a Saint. He alone can see and enjoy the viśvarūpa (Universal form) of the Lord. He hears the unheard melodies and enjoys divine scents, unfelt on the Earth, and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காண்கின்ற பகவத் விஷயத்தை உள்ளபடி கண்டு; என் காரிகை பேசுகிற என் மகள்; காண்கின்ற நிலம் காணப்படுகிற பூமி; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; காண்கின்ற விசும்பு காணப்படுகிற ஆகாசம்; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; காண்கின்ற வெம் தீ காணப்படுகிற அக்னி; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; காண்கின்ற இக் காற்று காணப்படுகிற இக் காற்று; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; காண்கின்ற கடல் காணப்படுகிற கடல்; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; காண்கின்ற கடல் அழகிய கடல்போன்ற வடிவையுடைய; வண்ணன் எம்பெருமான் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; காண்கின்ற இவ்வுலகம் தவிர மற்றொன்று காணாத; உலகத்தீர்க்கு உங்களுக்கு; செய்கின்றவே என் மகள் செய்வதை; என் சொல்லுகேன்? என்னவென்று சொல்லுவேன்?
yānĕ ī am; ennum she said;; kāṇginṛa seen, in the same manner; visumbu ākāṣam (ĕther, which is the first of the five elements); ellām all; yānĕ ī am; ennum she said;; kāṇginṛa main among the luminous objects; vem hot; thī agni (fire); ellām all; yānĕ ī am; ennum she said;; kāṇginṛa the previous element [to fire, in sequence of creation]; i these- being in close proximity, due to sustaining; kāṝu ellām vāyus (airs); yānĕ ī am; ennum she said;; kāṇginṛa the next element [to air, in sequence of creation]; kadal water; ellām all; yānĕ ī am; ennum she said;; kāṇginṛa attractive; kadal (infinite) ocean like; vaṇṇan sarvĕṣvaran who is having such form; ĕṛak kolŏ has entered?; kāṇginṛa seeing; ulagaththīrkku you who don-t know anything beyond this world; kāṇginṛa my very beautiful daughter who can see what is not seen by any one; kārigai daughter; seyginṛa actions; en in what way; sollugĕn ī can explain; seyginṛa being performed; kidhi (present) karma/kriyā (actions)

TVM 5.6.4

3291 செய்கின்றகிதியெல்லாம்யானேயென்னும்
செய்வானின்றனகளும்யானேயென்னும் *
செய்துமுன்னிறந்தனவும்யானேயென்னும்
செய்கைப்பயனுண்பேனும்யானேயென்னும் *
செய்வார்களைச்செய்வேனும்யானேயென்னும்
செய்யகமலக்கண்ணனேறக் கொலோ?
செய்யவுலகத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
செய்யகனிவாயிளமான்திறத்தே.
3291 செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் *
செய்வான் நின்றனகளும் யானே என்னும் *
செய்து முன் இறந்தவும் யானே என்னும் *
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் **
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் *
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ? *
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
செய்ய கனி வாய் இள மான் திறத்தே? * (4)
3291 cĕykiṉṟa kiti ĕllām yāṉe ĕṉṉum *
cĕyvāṉ niṉṟaṉakal̤um yāṉe ĕṉṉum *
cĕytu muṉ iṟantavum yāṉe ĕṉṉum *
cĕykaip payaṉ uṇpeṉum yāṉe ĕṉṉum **
cĕyvārkal̤aic cĕyveṉum yāṉe ĕṉṉum *
cĕyya kamalakkaṇṇaṉ eṟakkŏlo? *
cĕyya ulakattīrkku ivai ĕṉ cŏllukeṉ *
cĕyya kaṉi vāy il̤a māṉ tiṟatte? * (4)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Reference Scriptures

BG. 9-24

Simple Translation

This tender girl, with lips like ripe fruit, claims dominion over all deeds—past, present, and future. She asserts responsibility for creating the authors of those deeds and revels in their outcomes. It appears she may be influenced by the Lord of red lotus eyes. What more can I say to you, who are so innocent and unaware, about her?

Explanatory Notes

The Lord is referred to as the enjoyer of the fruits of all actions which He controls, both the performance and the performers, c.f. śloka IX-24, Bhagavad Gītā, where the Lord has said that it is He that is propitiated by the various acts, rites and rituals. The Nāyakī, possessed by God, speaks as though she is God. Not having the faintest idea of this strange malady, the poor, innocent kinsfolk foolishly insist upon having more and more details.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செய்கின்ற கிதி நிகழ்காலச் செய்கைகள்; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; செய்வான் எதிர்கால; நின்றனகளும் செய்கைகள் எல்லாம்; யானே என்னும் நானே என்கிறாள்; செய்து முன் இறந்தவும் இறந்தகாலச் செய்கைகள்; யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; செய்கை பயன் செய்கைகளின் பலன்களை; உண்பேனும் அநுபவிப்பதும்; யானே என்னும் நானே என்கிறாள்; செய்வார்களை செய்கின்ற கர்த்தாக்களை; செய்வேனும் படைப்பதும்; யானே என்னும் நானே என்கிறாள்; செய்ய கமல செந்தாமரை; கண்ணன் கண்ணனான எம்பெருமான் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; செய்ய உலகத்தீர்க்கு கபடமறியாத உங்களுக்கு; செய்ய கனி சிவந்த கோவைக்கனி போன்ற; வாய் அதரத்தையுடைய; இள மான் இளமையான மான் போன்ற; இவை இவள் விஷயத்தில்; என் சொல்லுகேன் எதைச் சொல்லுவேன்?
ellām all; yānĕ at my disposal; ennum she said;; seyvān to be performed; ninṛanagal̤um actions that are waiting (in future); yānĕ at my disposal; ennum she said;; mun previously; seydhu performed; iṛandhavum actions that were completed (in the past); yānĕ at my disposal; ennum she said;; seygai for these actions; payan results; uṇbĕnum enjoyer; yānĕ ī am; ennum she said;; seyvārgal̤ai for the performers of these actions; seyvĕnum creator; yānĕ ī am; ennum she said;; seyya reddish; kamalam lotus like; kaṇṇan sarvĕṣvaran having eyes; ĕṛak kolŏ is it due to his entering her?; seyya you who are honest/straightforward; ulagaththīrkku for the worldly people; seyya reddish; kani fruit like; vāy having lips; il̤am young; mān doe; thiṛaththu in her matter; ivai these; en what; sollugĕn shall ī say?; thiṛambāmal not violating the norms; maṇ universe

TVM 5.6.5

3292 திறம்பாமல்மண்காக்கின்றேன்யானேயென்னும்
திறம்பாமல்மலையெடுத்தேனேயென்னும் *
திறம்பாமலசுரரைக்கொன்றேனேயென்னும்
திறங்காட்டியன்றைவரைக்காத்தேனேயென்னும் *
திறம்பாமல்கடல்கடைந்தேனேயென்னும்
திறம்பாதகடல்வண்ணனேறக்கொலோ?
திறம்பாதவுலகத்தீர்க்கென்சொல்லுகேன்?
திறம்பாதென்திருமகளெய்தினவே.
3292 திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் *
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் *
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் *
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் **
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் *
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ? *
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
திறம்பாது என் திருமகள் எய்தினவே? * (5)
3292 tiṟampāmal maṇ kākkiṉṟeṉ yāṉe ĕṉṉum *
tiṟampāmal malai ĕṭutteṉe ĕṉṉum *
tiṟampāmal acuraraik kŏṉṟeṉe ĕṉṉum *
tiṟam kāṭṭi aṉṟu aivaraik kātteṉe ĕṉṉum **
tiṟampāmal kaṭal kaṭainteṉe ĕṉṉum *
tiṟampāta kaṭalvaṇṇaṉ eṟakkŏlo? *
tiṟampāta ulakattīrkku ĕṉ cŏllukeṉ *
tiṟampātu ĕṉ tirumakal̤ ĕytiṉave? * (5)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My beloved daughter boldly proclaims her governance over the worlds. She claims to have effortlessly lifted Mount Govardhan, defeated numerous demons, safely churned the milk ocean, and secured victory for the Pandavas. It appears she is possessed by the sea-hued Lord, always attentive to His devotees. Oh, people of the world, what more can I say about her, beyond any hope of correction?

Explanatory Notes

All these deeds performed by the Supreme Lord, from time to time, the Nāyakī, possessed by Him, attributes to herself. How can the worldlings standing ashore comprehend the mysticism of the Nāyakī (Āzhvār), sunk deep in the ocean of Divine consciousness?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் திரு மகள் என் செல்வமகளான பராங்குசநாயகி; திறம்பாமல் மண் நீதி தவறாமல் இந்நிலவுலகத்தை; காக்கின்றேன் காக்கிறவள்; யானே என்னும் நானே என்கிறாள்; திறம்பாமல் அநாயாசமாக; மலை கோவர்த்தன மலையை; எடுத்தேனே என்னும் எடுத்தேனே என்கிறாள்; திறம்பாமல் தப்பாதபடி; அசுரரைக் கொன்றேனே அசுரரைக் கொன்றேனே; என்னும் என்கிறாள்; திறம் காட்டி திறமையைக் காட்டி; அன்று ஐவரை பஞ்சபாண்டவர்களை; காத்தேனே காப்பாற்றினேனே; என்னும் என்கிறாள்; திறம்பாமல் ஆபத்து நேராமல்; கடல் கடைந்தேனே கடல் கடைந்தேனே; என்னும் என்கிறாள்; திறம்பாத அடியார்களை காப்பதில் தப்பாதிருக்கும்; கடல்வண்ணன் கடல் நிற வண்ணன் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; திறம்பாத பகவத் குணங்களிலிருந்து மீளாதவாறு; திறம்பாது உலகத்தீர்க்கு என் மகள்; எய்தினவே அடைந்தவற்றைக் கேட்டு; என் சொல்லுகேன் என்னவென்று சொல்லுவேன்
kākkinṛĕn protecting; yānĕ ī am; ennum she said;; thiṛambāmal to hold it still [ [to avoid any disturbance to those who have taken shelter underneath]; malai [gŏvardhana] hill; eduththĕnĕ ī lifted; ennum she said; thiṛambāmal without letting anyone escape; asurarai demons (such arishta, dhĕnu et al); konĕnĕ ī killed; ennum she said;; thiṛam strengths (which highlight his ability to be victorious); kātti manifested; anṛu long ago (when dhuryŏdhana et al were fighting them); aivarai the five pāṇdavas; kāththĕnĕ ī protected; ennum she said;; thiṛambāmal without forgetting [the purpose]; kadal ocean; kadaindhĕnĕ churned; ennum she said;; thiṛambādha one who does not falter (in protecting his devotees); kadal vaṇṇan one who has ocean like form/colour; ĕṛak kolŏ is this how emperumān entered her?; thiṛambādha fixated on knowing [about parānguṣa nāyaki]; ulagaththīrkku for the worldly people; en my; thiru comparable to lakshmī; magal̤ daughter; thirambādhu without missing; eydhina the qualities that are attained; en in what way; sollogĕn shall ī explain?; inam abundant; vĕy having bamboos

TVM 5.6.6

3293 இனவேய்மலையேந்தினேன்யானேயென்னும்
இனவேறுகள்செற்றேனும்யானேயென்னும் *
இனவான்கன்றுமேய்த்தேனும்யானேயென்னும்
இனவாநிரைகாத்தேனும்யானேயென்னும் *
இனவாயர்தலைவனும்யானேயென்னும்
இனத்தேவர்தலைவன்வந்தேறக்கொலோ? *
இனவேற்கண்நல்லீர்க்கிவையென்சொல்லுகேன்?
இனவேற்கண்ணிஎன்மகளுற்றனவே.
3293 இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் *
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் *
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் *
இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும் **
இன ஆயர் தலைவனும் யானே என்னும் *
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? *
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் *
இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே? * (6)
3293 iṉa vey malai entiṉeṉ yāṉe ĕṉṉum *
iṉa eṟukal̤ cĕṟṟeṉum yāṉe ĕṉṉum *
iṉa āṉ kaṉṟu meytteṉum yāṉe ĕṉṉum *
iṉa ā nirai kātteṉum yāṉe ĕṉṉum **
iṉa āyar talaivaṉum yāṉe ĕṉṉum *
iṉat tevar talaivaṉ vantu eṟakkŏlo? *
iṉa vel kaṇ nallīrkku ivai ĕṉ cŏllukeṉ *
iṉa vel kaṇṇi ĕṉ makal̤ uṟṟaṉave? * (6)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My daughter, with eyes sharp as a spear, claims that she lifted Mount Govardhana with abundant bamboos, defeated the seven bulls, and tended to numerous calves and cows like the Cowherd-Chief. It appears she is imbued with the qualities of the Lord, the Chief of Nithyasuris. What can I express about my daughter's remarkable transformation to you, the spear-eyed ladies?

Explanatory Notes

The Supreme Lord, Chief of the ‘Nitya Sūrīs’ in spiritual world, having taken possession of the Nāyakī, she identifies herself with His incarnation as Śrī Kṛṣṇa, as set out above. As a little lad, Kṛṣṇa tended the calves, literally played with them, as one of them and when He came of age, He grazed the cows, a vast multitude, like unto the change-over from, ‘Brahmacarya’ (bachelorhood) to the next stage of ‘Grahasta’ (householder).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன வேற் கண்ணி வேலை ஒத்த கண்களையுடைய; என் மகள் என் மகள்; இன வேய் மலை திரள் திரளான மூங்கில்களையுடைய; ஏந்தினேன் கோவர்த்தன மலையைத் தூக்கினவள்; யானே என்னும் நானே என்கிறாள்; இன ஏறுகள் திரளாக வந்த ஏழு எருதுகளையும்; செற்றேனும் கொன்றதும்; யானே என்னும் நானே என்கிறாள்; இன ஆன் கன்று கூட்டங் கூட்டமான கன்றுகளை; மேய்த்தேனும் மேய்த்ததும்; யானே என்னும் நானே என்கிறாள்; இன ஆ நிரை திரளான பசுங் கூட்டங்களை; காத்தேனும் காத்ததும்; யானே என்னும் நானே என்கிறாள்; இனஆயர் ஆயர்களின் கூட்டங்களுக்குத்; தலைவனும் தலைவனும்; யானே என்னும் நானே என்கிறாள்; இனஆயர் ஆயர்களின் கூட்டங்களுக்கு; தலைவனும் தலைவனும்; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; இன வேல் கண் வேல் போன்ற கண்ணழகையுடைய; நல்லீர்க்கு நல்லவர்களான உங்களுக்கு; உற்றனவே இவள் அடைந்தவற்றை; இவை என் சொல்லுகேன் என்னெவென்று சொல்லுவேன்
malai gŏvardhana hill; ĕndhinĕn lifted; yānĕ ī; ennum she said;; inam surrounded; ĕṛugal̤ seven bulls; seṝĕnum killed; yānĕ ī; ennum she said;; inam as a single herd; ān kanṛu calves; mĕyththunum shepherded; yānĕ ī; ennum she said;; inam groups of; ānirai cows; kāththĕnum protected; yānĕ ī; ennum she said;; inam having similar qualities; āyar for the cowherd boys; thalaivanum leader; yānĕ ī am; ennum she said;; inam assembled; dhĕvar nithyasūris; thalaivan sarvĕṣvaran, who is the controller; vandhĕṛak kolŏ did he enter?; inam enriched; vĕl like a spear; kaṇ having beautiful eyes; nalleerkku for you all; vĕl spear; inam matching; kaṇṇi having eye; en my; magal̤ daughter; uṝana acquired; ivai these aspects; en how; sollugĕn shall ī explain?; uṝārgal̤ relatives (who approach me due to a particular reason [seeking something] or who approach me knowing me truly well); enakku for me

TVM 5.6.7

3294 உற்றார்களெனக்கில்லையாருமென்னும்
உற்றார்களெனக்கிங்கெல்லாருமென்னும் *
உற்றார்களைச்செய்வேனும்யானேயென்னும்
உற்றார்களையழிப்பேனும்யானேயென்னும் *
உற்றார்களுக்குற்றேனும்யானேயென்னும்
உற்றாரிலிமாயன்வந்தேறக்கொலோ? *
உற்றீர்கட்கென்சொல்லிச்சொல்லுகேன்யான்
உற்றுஎன்னுடைப்பேதையுரைக்கின்றவே.
3294 உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் *
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் *
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் *
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் **
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் *
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ? *
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் *
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே? * (7)
3294 uṟṟārkal̤ ĕṉakku illai yārum ĕṉṉum *
uṟṟārkal̤ ĕṉakku iṅku ĕllārum ĕṉṉum *
uṟṟārkal̤aic cĕyveṉum yāṉe ĕṉṉum *
uṟṟārkal̤ai azhippeṉum yāṉe ĕṉṉum **
uṟṟārkal̤ukku uṟṟeṉum yāṉe ĕṉṉum *
uṟṟār ili māyaṉ vantu eṟakkŏlo? *
uṟṟīrkaṭku ĕṉ cŏllic cŏllukeṉ yāṉ *
uṟṟu ĕṉṉuṭaip petai uraikkiṉṟave? * (7)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

What can I possibly explain to you, my kin? My daughter asserts with clarity that she has no relatives, yet everyone is connected to her. She creates and destroys relationships effortlessly, embodying all roles for those who seek her wholeheartedly. It appears she is captivated by the marvelous Lord, whom no one can attain through mere self-effort.

Explanatory Notes

(i) The Lord can be said to have no relations, in the sense that the individual souls either stray away from Him and run after minor deities or those that seek Him are not quite conscious of their true inter-relationship. In any case, none has ever attained Him through self-effort alone, without His co-operative grace.

(ii) All are related to the Lord, as they are + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுடை பேதை என்னுடைய பேதைப் பெண்; உற்றார்கள் எனக்கு எனக்கு உறவினர்; யாரும் இல்லை என்னும் யாரும் இல்லை என்கிறாள்; உற்றார்கள் எனக்கு இங்கு எனக்கு உறவினர் இங்கு; எல்லாரும் என்னும் இருக்கும் அனைவரும் என்கிறாள்; உற்றார்களை உறவினர்களை; செய்வேனும் உண்டாக்குவதும்; யானே என்னும் நானே என்கிறாள்; உற்றார்களை உறவினர்களை; அழிப்பேனும் அழிப்பதும்; யானே என்னும் நானே என்கிறாள்; உற்றார்களுக்கு உறவினர்களுக்கு; உற்றேனும் எல்லா உறவு முறைகளும்; யானே என்னும் நானே என்கிறாள்; உற்றார் இலி முயற்சியால் தன்னை அடைய முடியாத; மாயன் வந்து ஆச்சர்ய சக்தி உடையவன் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; உற்றீர்கட்கு உறவினரான உங்களுக்கு; உற்று உள்ளதை உள்ளபடி கண்டு; உரைக்கின்ற சொல்லும் வார்த்தைகளை; யான் என் சொல்லி எதைச் சொல்லி; சொல்லுகேன்? சொல்லுவேன்?
yārum any one; illai not present; ennum she said;; ingu in this world; ellārum everyone; enakku for me; uṝārgal̤ relatives; ennum she said;; uṝārgal̤ai to be my relative; seyvĕnum will make; yānĕ ī; ennum she said;; uṝārgal̤ai those who approached me with ulterior motives; azhippĕnum cut off my relationship (by bestowing what they ask for [and pushing them away]); yānĕ ī; ennum she said;; uṝārgal̤ukku those who approached me without any ulterior motives; uṝĕnum all types of relationships; yānĕ ī am; ennum she said;; uṝār no matter how intelligent one is, one who saw him [by his own effort]; ili not present; māyan amaśing lord; vandhĕṛak kolŏ is this how he entered her?; uṝirgatku for you all who are my relatives; ennudaip pĕdhai very young daughter of mine; uṝu seen through her inner vision; uraikkinṛa the words which are spoken; en how; solli tell; soluugĕn will explain?; uraikkinṛa explained (as a form of bhagavān in -saṣiva:-); mukkaṇ three-eyed

TVM 5.6.8

3295 உரைக்கின்றமுக்கட்பிரான்யானேயென்னும்
உரைக்கின்றதிசைமுகன்யானேயென்னும் *
உரைக்கின்றஅமரரும்யானேயென்னும்
உரைக்கின்றஅமரர்கோன்யானேயென்னும் *
உரைக்கின்றமுனிவரும்யானேயென்னும்
உரைக்கின்றமுகில்வண்ணனேறக்கொலோ? *
உரைக்கின்றவுலகத்தீர்க்கென்சொல்லுகேன்?
உரைக்கின்றஎன்கோமளவொண்கொடிக்கே.
3295 உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் *
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் *
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் *
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் **
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் *
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ? *
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே? * (8)
3295 uraikkiṉṟa mukkaṇ pirāṉ yāṉe ĕṉṉum *
uraikkiṉṟa ticaimukaṉ yāṉe ĕṉṉum *
uraikkiṉṟa amararum yāṉe ĕṉṉum *
uraikkiṉṟa amarar koṉ yāṉe ĕṉṉum **
uraikkiṉṟa muṉivarum yāṉe ĕṉṉum *
uraikkiṉṟa mukilvaṇṇaṉ eṟakkŏlo? *
uraikkiṉṟa ulakattīrkku ĕṉ cŏllukeṉ *
uraikkiṉṟa ĕṉ komal̤a ŏṇ kŏṭikke? * (8)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My darling speaks so gracefully, likening herself to Mukkaṭpirāṉ (Śiva), who some believe to be the Supreme Lord, Ticaimukaṉ of great renown, the revered devas, their head Indra, along with the renowned sages. Could it be that she is influenced by the illustrious Lord, whose hue resembles the color of clouds?

Explanatory Notes

What the Nāyakī brings out here is that the Supreme Lord is the Internal Controller of all, including Śiva, Ticaimukaṉ (Brahmā), Indra and other celebrities. They just constitute His bodies, in the same way as all other beings and things.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரைக்கின்ற புராணங்களில் கூறப்படும்; முக்கண் பிரான் முக்கண்ணபிரானான சிவனும்; யானே என்னும் நானே என்கிறாள்; உரைக்கின்ற சிவனுக்கும் தகப்பனாகக் கூறப்படும்; திசை முகன் நான்முகனான பிரமனும்; யானே என்னும் நானே என்கிறாள்; உரைக்கின்ற சொல்லப்படுகின்ற; அமரரும் தேவர்களும்; யானே என்னும் நானே என்கிறாள்; உரைக்கின்ற அனைவரும் அறிந்த; அமரர் கோன் தேவர்களின் தலைவன் இந்திரனும்; யானே என்னும் நானே என்கிறாள்; உரைக்கின்ற புகழ்ந்து கூறப்படும்; முனிவரும் முனிவர்களும்; யானே என்னும் நானே என்கிறாள்; உரைக்கின்ற இப்படிச் சொல்லப்படும்; முகில் வண்ண காளமேகப்பெருமான்; ஏறக்கொலோ? வந்து ஆவேசித்ததனாலோ?; உரைக்கின்ற சொல்லு சொல்லு என்று கேட்கும்; உலகத்தீர்க்கு உங்களுக்கு; உரைக்கின்ற அழகாகப் பேசுகின்ற; என் கோமள என் அழகிய கோமள; ஒண் கொடிக்கே? சிறு பெண்ணைப் பற்றி; என் சொல்லுகேன்? என்னவென்று சொல்லுவேன்?
pirān rudhran who is famously known as īṣvaran; yānĕ is my prakāram (form); ennum she said;; uraikkinṛa explained (as in -sabrahmā-); thisai mugan chathurmukha (four-faced); yānĕ is my form; ennum she said;; uraikkinṛa explained (as bhagavān-s wealth, as in -dhakshādhaya:-); amararum dhĕvas who are the ten prajāpathis (progenitors); yānĕ are my forms; ennum she said;; uraikkinṛa explained (as in -sĕndhra:-); amarar kŏn indhra (who is the lord of thirty three crore dhĕvathās); yānĕ is my form; ennum she said;; uraikkinṛa explained (as in -dhĕvarishīṇām cha nāradha:-); munivarum rishis (sages); yānĕ are at my disposal; ennum she said;; uraikkinṛa explained (in vĕdhānthams as in -neela thŏyatha madhyasthā-); mugil dark like a black cloud; vaṇṇan one who is having a form; ĕṛak kolŏ is this how he has entered her?; uraikkinṛa who are telling (-tell us- repeatedly); ulagaththīrkku you who are part of this world; uraikkinṛa who is not speaking according to the limits of this world; en my; kŏmal̤am tender; oṇ attractive; kodikku for my daughter who is like a creeper which falls on the ground, when there is no support; ivai these qualities; en what; sollugĕn shall ī say?; kodiya having cruelty (to torture the badhdha chĕthanas (bound souls) who are bound by their karma); vinai karma (action- virtue/vice)

TVM 5.6.9

3296 கொடியவினையாதுமிலனேயென்னும்
கொடியவினையாவேனும்யானேயென்னும் *
கொடியவினைசெய்வேனும்யானேயென்னும்
கொடியவினைதீர்ப்பேனும்யானேயென்னும் *
கொடியானிலங்கைசெற்றேனேயென்னும்
கொடியபுள்ளுடையவனேறக்கொலோ? *
கொடியவுலகத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
கொடியேன்கொடிஎன்மகள்கோலங்களே.
3296 கொடிய வினை யாதும் இலனே என்னும் *
கொடிய வினை ஆவேனும் யானே என்னும் *
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் *
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் **
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் *
கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ? *
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே? * (9)
3296 kŏṭiya viṉai yātum ilaṉe ĕṉṉum *
kŏṭiya viṉai āveṉum yāṉe ĕṉṉum *
kŏṭiya viṉai cĕyveṉum yāṉe ĕṉṉum *
kŏṭiya viṉai tīrppeṉum yāṉe ĕṉṉum **
kŏṭiyāṉ ilaṅkai cĕṟṟeṉe ĕṉṉum *
kŏṭiya pul̤ uṭaiyavaṉ eṟakkŏlo? *
kŏṭiya ulakattīrkku ivai ĕṉ cŏllukeṉ *
kŏṭiyeṉ kŏṭi ĕṉ makal̤ kolaṅkal̤e? * (9)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

What can I possibly tell you, persistent worldlings, about the charming behavior of my daughter, akin to a vine? She claims to distance herself from evil deeds, while those who displease her persist in them. Yet, she is also the one who absolves devotees of their grave sins and transfers them to others. She even reduced the felon's Lanka to ashes. Is she perhaps possessed by the One who carries the formidable bird on His banner?

Explanatory Notes

The sentient and non-sentient beings are the Lord’s bodies. He is thus the ‘Viśeṣya’ or Substance present in all these bodies, known as the ‘Viśeṣaṇa’, the attributes or modes of the Lord. While the attributes undergo transformations, such as growth and decay, enjoyment and misery, the ‘Viśeṣya’ undergoes no changes and is ‘nirvikāra’. While the ‘Jīva’ or the individual + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடிய வினை கொடிய கர்மங்கள்; யாதும் இலனே ஒரு சிறிதும் எனக்கு இல்லை; என்னும் என்கிறாள்; கொடிய வினை கொடிய கர்மங்களாக; ஆவேனும் ஆகிறவளும்; யானே என்னும் நானே என்கிறாள்; கொடியவினை கொடிய கர்மங்களை; செய்வேனும் செய்விப்பவளும்; யானே என்னும் நானே என்கிறாள்; கொடியவினை கொடியவினைகளை; தீர்ப்பேனும் போக்குபவளும்; யானே என்னும் நானே என்கிறாள்; கொடியான் கொடியவனான ராவணனின்; இலங்கை இலங்கையை; செற்றேனே அழித்தவளும் நானே; என்னும் என்கிறாள்; கொடிய பகைவர்களுக்குக் கொடியவனான; புள் உடையவன் கருடனை உடைய பெருமான் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; கொடிய கொடுமையையுடைய; உலகத்தீர்க்கு உலகத்தவர்களுக்கு; கொடியேன் பாவியான நான்; கொடி என் மகள் கொடி போன்ற என் பெண்ணின்; கோலங்களே காரியங்களைப்பற்றி; இவை என் சொல்லுகேன்? என்னவென்று சொல்லுவேன்?
yādhum any; ilan ī don-t have; ennum she said;; kodiya vinai that; āvĕnum one who becomes; yānĕ ī am; ennum she said;; kodiya vinai engaging them in those karmas; seyvĕnum make them perform; yānĕ ī am; ennum she said;; kodiya vinai that karma; thīrppĕnum one who removes for the devotees; yānĕ ī am; ennum she said;; kodiyān the cruel person, rāvaṇa- his; ilangai lankā; seṝĕn ī destroyed; ennum she said;; kodiya cruel like death (for the enemies of devotees); pul̤ periya thiruvadi (garudāzhvār); udaiyavan one who has as vehicle; ĕṛak kolŏ is this how he entered her?; kodiya having cruelty (of very much forcing instead of remaining -this cannot be understood by us-); ulagaththīrkku people of this world; kodiyĕn experiencing cruelty (of the sins which made me witness my disturbed daughter); en my; kodi creeper like very slim girl; magal̤ daughter-s; kŏlangal̤ attractive pastimes; ivai these; en what; sollugĕn shall ī say?; kŏlam enjoyability (in being attractive); kol̤ having

TVM 5.6.10

3297 கோலங்கொள்சுவர்க்கமும்யானேயென்னும்
கோலமில்நரகமும்யானேயென்னும் *
கோலம்திகழ்மோக்கமும்யானேயென்னும்
கோலங்கொளுயிர்களும்யானேயென்னும் *
கோலங்கொள்தனிமுதல்யானேயென்னும்
கோலங்கொள்முகில்வண்ணனேறக்கொலோ?
கோலங்கொளுலகத்தீர்க்கென்சொல்லுகேன்?
கோலந்திகழ்கோதைஎன்கூந்தலுக்கே.
3297 கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் *
கோலம் இல் நரகமும் யானே என்னும் *
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் *
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் **
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் *
கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ? *
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? * (10)
3297 kolam kŏl̤ cuvarkkamum yāṉe ĕṉṉum *
kolam il narakamum yāṉe ĕṉṉum *
kolam tikazh mokkamum yāṉe ĕṉṉum *
kolam kŏl̤ uyirkal̤um yāṉe ĕṉṉum **
kolam kŏl̤ taṉimutal yāṉe ĕṉṉum *
kolam kŏl̤ mukilvaṇṇaṉ eṟakkŏlo? *
kolam kŏl̤ ulakattīrkku ĕṉ cŏllukeṉ *
kolam tikazh kotai ĕṉ kūntalukke? * (10)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

My daughter claims to embody both the enchanting cuvarkkam and the dreary hell, as well as the spiritual bliss (mōkkam) of the worldly and spiritual realms. She asserts authority over souls inhabiting various bodies and identifies with the Primordial Force, showcasing its extraordinary potential. It seems she might be influenced by the charming cloud-hued Lord. What more can I say to you all gathered here about my daughter, adorned with a beautiful garland in her locks?

Explanatory Notes

(i) The Lord dominates every thing, the Svarga, the Hell and the spiritual world. The gnostic, whose goal is God, attaches little importance to the Svarga, as, in his eyes, it is no better than hell, the one being a golden fetter and the other, an iron fetter. And yet, the worldlings are enamoured of the pleasures of Svarga and perform austere penances for gaining access + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோலம் கொள் அழகு பொருந்திய; சுவர்க்கமும் சுவர்க்கலோகமும்; யானே என்னும் நானே என்கிறாள்; கோலம் இல் அழகற்ற; நரகமும் நரகமும்; யானே என்னும் நானே என்கிறாள்; கோலம் திகழ் அழகு மிகுந்த; மோக்கமும் மோக்ஷமும்; யானே என்னும் நானே என்கிறாள்; கோலம் கொள் அழகிய; உயிர்களும் ஜீவராசிகளும்; யானே என்னும் நானே என்கிறாள்; கோலம் கொள் அழகுடைய அனைத்துக்கும்; தனி முதல் காரணமான மூலப்பிரகிருதியும்; யானே என்னும் நானே என்கிறாள்; கோலம் கொள் அழகிய; முகில் வண்ணன் காள மேகவண்ணப்பெருமான் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; கோலம் கொள் அழகாக வந்து உட்கார்ந்திருக்கும்; உலகத்தீர்க்கு உங்களுக்கு; கோலம் திகழ் கோதை அழகிய மாலையையும்; கூந்தலுக்கே! கூந்தலையும் உடைய; என் என் பெண்ணைப் பற்றி; சொல்லுகேன்? எதைச் சொல்லுவேன்?
suvarggamum svargam (heaven); yānĕ at my disposal; ennum she said;; kŏlam having special features; il not; naragamum narakam (hell, which has great sorrow); yānĕ at my disposal; ennum she said;; kŏlam due to distinguished form (of unlimited bliss); thigazh shining; mŏkkamum mŏksham [paramapadham, the spiritual realm]; yānĕ at my disposal; ennum she said;; kŏlam these results; kol̤ putting efforts to attain; uyirgal̤um creatures; yānĕ at my disposal; ennum she said;; kŏlam controlling all of these through his mind; kol̤ having; thani not expecting help from anyone else; mudhal the supreme causal entity; yānĕ ī am; ennum she said;; kŏlam fresh form, shining lightning and multi #coloured rainbow; kol̤ having; mugil cloud like; vaṇṇan one who is having a form; ĕṛak kolŏ is this how he entered her?; kŏlam kol̤ being fixed on -we will not leave until we hear-; ulagaththīrkku for you all; kŏlam beauty; thigazh shining; kŏdhai having garland; en kūndhalukku for my daughter who is having locks of hair; en in what manner it was; sollugĕn how can ī say?; kūndhal having distinguished hair (as said in thiruvāimozhi 10.10.2 -vāsam sey pūm kuzhalāl̤-); malar being infinitely enjoyable due to having been born in the lotus flower

TVM 5.6.11

3298 கூந்தல்மலர்மங்கைக்கும்மண்மடந்தைக்கும்
குலவாயர்கொழுந்துக்கும்கேள்வன்தன்னை *
வாய்ந்தவழுதிநாடன் மன்னு
குருகூர்ச்சடகோபன்குற்றேவல்செய்து *
ஆய்ந்ததமிழ்மாலையாயிரத்துள்
இவையுமோர்பத்தும்வல்லார் * உலகில்
ஏந்துபெருஞ்செல்வந்தாராய்த் திருமா
லடியார்களைப்பூசிக்கநோற்றார்களே. (2)
3298 ## கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் *
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை *
வாய்ந்த வழுதி வள நாடன் * மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து **
ஆய்ந்த தமிழ் மாலை * ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் * உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்த் * திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே * (11)
3298 ## kūntal malar maṅkaikkum maṇ maṭantaikkum *
kula āyar kŏzhuntukkum kel̤vaṉ taṉṉai *
vāynta vazhuti val̤a nāṭaṉ * maṉṉu
kurukūrc caṭakopaṉ kuṟṟeval cĕytu **
āynta tamizh mālai * āyirattul̤
ivaiyum or pattum vallār * ulakil
entu pĕrum cĕlvattarāyt * tirumāl
aṭiyārkal̤aip pūcikka noṟṟārkal̤e * (11)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

Those who deeply understand these ten verses, among the thousand composed by Kurukur Catakopan, honoring the Consort of the lotus-born Lakshmi and the cream of the shepherd clan, will be blessed in this world with immense devotion towards the devotees of Lord Tirumal, ensuring their rightful reverence.

Explanatory Notes

(i) Worship of the Lord’s devotees is even more meritorious than worship of the Lord and it is rendered possible only through the Lord’s special grace. The influx of the Lord’s grace in this regard, is assured to the chanters of this decad.

(ii) Lakṣmī, the unfailing intercessor between Man and God, unleashes her irresistible physical charms on the Lord, when, in His + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூந்தல் மலர் அழகிய பூச்சூடிய கூந்தலுடைய; மங்கைக்கும் திருமகளுக்கும்; மண் மடந்தைக்கும் பூமிப்பிராட்டிக்கும்; குல ஆயர் ஆயர்குலத்தில் தோன்றிய; கொழுந்துக்கும் நப்பின்னைக்கும்; கேள்வன் நாதனான பெருமானை; தன்னை குறித்து; வாய்ந்த பொருந்திய வளமுடைய; வழுதி வளநாடன் திருவழுதி நாட்டவரும்; மன்னு குருகூர் நிலைபெற்ற திருக்குருகூரில்; சடகோபன் அவதரித்தவருமான நம்மாழ்வார்; குற்றேவல் செய்து அந்தரங்க அடிமை செய்தபடி; ஆய்ந்த ஆராய்ந்து அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ் மாலையான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் ஓர் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும்; வல்லார் ஓத வல்லார்; உலகில் உலகில்; ஏந்து பெரும் பெரும் செல்வம்; செல்வத்தராய் படைத்தவர்களாக; திருமால் அடியார்களை திருமால் அடியார்களை; பூசிக்க நோற்றார்களே வணங்குபவர்களாக ஆவார்கள்
mangaikkum for lakshmi (who is ever youthful); maṇ madandhaikkum for ṣrī bhūmip pirātti (who is as distinguished in her beauty etc as ṣrī mahālakshmi); kulam having high family heritage; āyar for cowherd clan; kozhundhukkum for nappinnaip pirātti (who is like a crown jewel); kĕl̤van thannai towards sarvĕṣvaran who is very dear; vāyndha due to overwhelming emotions, having attained the mood of bhagavān; vazhudhi val̤a nādan leader of vazhudhi val̤a nādu (region covering āzhvārthirunagari); mannu firmly placed; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; kuṝĕval as confidential service; seydhu performed; āyndha spoken after analysis; thamizh mālai garland in thamizh; āyiraththul̤ among the thousand pāsurams; ivaiyum oru paththum this distinguished decad which is hailed as -what a decad is this!-; vallār those who can meditate upon (with the same emotions); ulagil in this world; ĕndhu to be held high; perum selvaththarāy having the great wealth of ṣrīvaishṇavaṣrī; thirumāl for sarvĕṣvaran who is ṣriya:pathi (lord of ṣrī mahālakshmi); adiyārgal̤ai bhāgavathas who are servitors; pūsikka to worship; nŏṝārgal̤ fortunate to do.; nŏṝa performed to attain the result; nŏnbu karma yŏgam