Chapter 6

Mother's anger on seeing her daughter owned by the Lord - (கடல் ஞாலம்)

தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ஆவேசமோ என்று நொந்து கூறல்
parAnkusa nAyaki’s words ‘I am the creator of the world surrounded by the oceans, I am the world’ reflect that she considers herself as Bhagavān. “What is this??!!” says her astonished and confused mother. Some relatives come by to enquire about her daughter. “It seems like empurumAn has entered her body” says her mother who tries to unravel the mystery that’s her daughter, in these hymns.
பராங்குச நாயகி, ‘கடல் ஞாலம் செய்தேனும் யானே கடல் ஞானம் ஆவேனும் யானே’ என்று பலவாறாகக் கூறி, தன்னை எம்பெருமானாகவே கருதிப் பேசித் தரித்திருக்கப் பார்க்கிறார். தாயோ தன் மகளின் நிலையைக் கண்டு “இது என்ன?” என்று வியந்து கலக்குகிறாள். உறவினர் சிலர் வந்து இம்மகளின் நிலையைப் பற்றிக் கேட்கிறார்கள். + Read more
Verses: 3288 to 3298
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will be the devotees of Thirumāl
  • TVM 5.6.1
    3288 ## கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் **
    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ? *
    கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
    கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? * (1)
  • TVM 5.6.2
    3289 கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் *
    கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் *
    கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் *
    கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் **
    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் *
    கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ? *
    கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் *
    கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? * (2)
  • TVM 5.6.3
    3290 காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் *
    காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் *
    காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் *
    காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும் **
    காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் *
    காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ? *
    காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
    காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? * (3)
  • TVM 5.6.4
    3291 செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் *
    செய்வான் நின்றனகளும் யானே என்னும் *
    செய்து முன் இறந்தவும் யானே என்னும் *
    செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் **
    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் *
    செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ? *
    செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
    செய்ய கனி வாய் இள மான் திறத்தே? * (4)
  • TVM 5.6.5
    3292 திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் *
    திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் *
    திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் *
    திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் **
    திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் *
    திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ? *
    திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
    திறம்பாது என் திருமகள் எய்தினவே? * (5)
  • TVM 5.6.6
    3293 இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் *
    இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் *
    இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் *
    இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும் **
    இன ஆயர் தலைவனும் யானே என்னும் *
    இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? *
    இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் *
    இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே? * (6)
  • TVM 5.6.7
    3294 உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் *
    உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் *
    உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் *
    உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் **
    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் *
    உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ? *
    உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் *
    உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே? * (7)
  • TVM 5.6.8
    3295 உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் *
    உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் *
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும் *
    உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் **
    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் *
    உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ? *
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
    உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே? * (8)
  • TVM 5.6.9
    3296 கொடிய வினை யாதும் இலனே என்னும் *
    கொடிய வினை ஆவேனும் யானே என்னும் *
    கொடிய வினை செய்வேனும் யானே என்னும் *
    கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் **
    கொடியான் இலங்கை செற்றேனே என்னும் *
    கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ? *
    கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் *
    கொடியேன் கொடி என் மகள் கோலங்களே? * (9)
  • TVM 5.6.10
    3297 கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் *
    கோலம் இல் நரகமும் யானே என்னும் *
    கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் *
    கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் **
    கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் *
    கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ? *
    கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் *
    கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? * (10)
  • TVM 5.6.11
    3298 ## கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் *
    குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை *
    வாய்ந்த வழுதி வள நாடன் * மன்னு
    குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து **
    ஆய்ந்த தமிழ் மாலை * ஆயிரத்துள்
    இவையும் ஓர் பத்தும் வல்லார் * உலகில்
    ஏந்து பெரும் செல்வத்தராய்த் * திருமால்
    அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே * (11)