TVM 5.6.4

கண்ணன் தன்மைகளைத் தன் தன்மைகளாகக் கூறுகின்றாளே!

3291 செய்கின்றகிதியெல்லாம்யானேயென்னும்
செய்வானின்றனகளும்யானேயென்னும் *
செய்துமுன்னிறந்தனவும்யானேயென்னும்
செய்கைப்பயனுண்பேனும்யானேயென்னும் *
செய்வார்களைச்செய்வேனும்யானேயென்னும்
செய்யகமலக்கண்ணனேறக் கொலோ?
செய்யவுலகத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
செய்யகனிவாயிளமான்திறத்தே.
3291 cĕykiṉṟa kiti ĕllām yāṉe ĕṉṉum *
cĕyvāṉ niṉṟaṉakal̤um yāṉe ĕṉṉum *
cĕytu muṉ iṟantavum yāṉe ĕṉṉum *
cĕykaip payaṉ uṇpeṉum yāṉe ĕṉṉum **
cĕyvārkal̤aic cĕyveṉum yāṉe ĕṉṉum *
cĕyya kamalakkaṇṇaṉ eṟakkŏlo? *
cĕyya ulakattīrkku ivai ĕṉ cŏllukeṉ *
cĕyya kaṉi vāy il̤a māṉ tiṟatte? * (4)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Reference Scriptures

BG. 9-24

Simple Translation

This tender girl, with lips like ripe fruit, claims dominion over all deeds—past, present, and future. She asserts responsibility for creating the authors of those deeds and revels in their outcomes. It appears she may be influenced by the Lord of red lotus eyes. What more can I say to you, who are so innocent and unaware, about her?

Explanatory Notes

The Lord is referred to as the enjoyer of the fruits of all actions which He controls, both the performance and the performers, c.f. śloka IX-24, Bhagavad Gītā, where the Lord has said that it is He that is propitiated by the various acts, rites and rituals. The Nāyakī, possessed by God, speaks as though she is God. Not having the faintest idea of this strange malady, the poor, innocent kinsfolk foolishly insist upon having more and more details.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செய்கின்ற கிதி நிகழ்காலச் செய்கைகள்; எல்லாம் யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; செய்வான் எதிர்கால; நின்றனகளும் செய்கைகள் எல்லாம்; யானே என்னும் நானே என்கிறாள்; செய்து முன் இறந்தவும் இறந்தகாலச் செய்கைகள்; யானே என்னும் எல்லாம் நானே என்கிறாள்; செய்கை பயன் செய்கைகளின் பலன்களை; உண்பேனும் அநுபவிப்பதும்; யானே என்னும் நானே என்கிறாள்; செய்வார்களை செய்கின்ற கர்த்தாக்களை; செய்வேனும் படைப்பதும்; யானே என்னும் நானே என்கிறாள்; செய்ய கமல செந்தாமரை; கண்ணன் கண்ணனான எம்பெருமான் வந்து; ஏறக்கொலோ? ஆவேசித்ததனாலோ?; செய்ய உலகத்தீர்க்கு கபடமறியாத உங்களுக்கு; செய்ய கனி சிவந்த கோவைக்கனி போன்ற; வாய் அதரத்தையுடைய; இள மான் இளமையான மான் போன்ற; இவை இவள் விஷயத்தில்; என் சொல்லுகேன் எதைச் சொல்லுவேன்?
ellām all; yānĕ at my disposal; ennum she said;; seyvān to be performed; ninṛanagal̤um actions that are waiting (in future); yānĕ at my disposal; ennum she said;; mun previously; seydhu performed; iṛandhavum actions that were completed (in the past); yānĕ at my disposal; ennum she said;; seygai for these actions; payan results; uṇbĕnum enjoyer; yānĕ ī am; ennum she said;; seyvārgal̤ai for the performers of these actions; seyvĕnum creator; yānĕ ī am; ennum she said;; seyya reddish; kamalam lotus like; kaṇṇan sarvĕṣvaran having eyes; ĕṛak kolŏ is it due to his entering her?; seyya you who are honest/straightforward; ulagaththīrkku for the worldly people; seyya reddish; kani fruit like; vāy having lips; il̤am young; mān doe; thiṛaththu in her matter; ivai these; en what; sollugĕn shall ī say?; thiṛambāmal not violating the norms; maṇ universe

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:

  • Seyginṟa kidhi ... - She articulates that all actions currently underway, those anticipated in the future, and those completed in the past, fall under her sovereign domain.

  • Seygaip payan uṇbēṇum ... - She proclaims, as stated in Śrī Bhagavad Gītā 10.25, "aham hi sarva

+ Read more