Chapter 9

Sāthmya bhōga pradhathvam (bestowing bliss in a step-by-step manner) - (இவையும் அவையும்)

ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை
As a mother feeds her child morsel by morsel to nourish her child’s growth, so does Bhagavān allow His devotees to enjoy Him a little at a time (in increments). Bhagavān decides to sit on Nammāzhvār’s head (thirumudi). In order to do so, He initially stands near the rear end of Āzhvār; He comes closer; stands much closer to Āzhvār; sits on Āzhvār’s + Read more
குழந்தைக்குத் தாய் உணவிட்டு வளர்ப்பதுபோல், பகவானும் அடியார்களுக்குத் தன்னை அனுபவிக்கும் இன்பத்தைச் சிறிது சிறிதாகவே தருகிறான். நம்மாழ்வாரின் திருமுடியிலே வந்து அமரவேண்டும் என்று எண்ணிய பகவான், ஆழ்வாரின் சுற்றுப் பக்கத்தில் நின்றான்; அருகில் வந்தான்; கூடி நின்றான்; இடுப்பில் அமர்ந்தான்; + Read more
Verses: 2879 to 2889
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: He will keep them beneath His divine ankleted feet
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 1.9.1

2879 இவையுமவையுமுவையும் இவருமவருமுவரும் *
எவையும்யவரும்தன்னுள்ளே ஆகியுமாக்கியும்காக்கும் *
அவையுள்தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம் *
சுவையன்திருவின்மணாளன் என்னுடைச்சூழலுளானே. (2)
2879 ## இவையும் அவையும் * உவையும் இவரும் அவரும் உவரும் *
எவையும் எவரும் தன்னுள்ளே * ஆகியும் ஆக்கியும் காக்கும் **
அவையுள் தனிமுதல் எம்மான் * கண்ண பிரான் என் அமுதம் *
சுவையன் திருவின் மணாளன் * என்னுடைச் சூழல் உளானே (1)
2879 ## ivaiyum avaiyum * uvaiyum ivarum avarum uvarum *
ĕvaiyum ĕvarum taṉṉul̤l̤e * ākiyum ākkiyum kākkum **
avaiyul̤ taṉimutal ĕmmāṉ * kaṇṇa pirāṉ ĕṉ amutam *
cuvaiyaṉ tiruviṉ maṇāl̤aṉ * ĕṉṉuṭaic cūzhal ul̤āṉe (1)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, my ambrosia, surrounds me. He is the consort of Tiru (Mahālakṣmī), known as Kaṇṇaṉ. He is the sole cause and Internal Controller, pervading all beings, both sentient and non-sentient, and sustaining them all within Himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவையும் அவையும் இவை அவை; உவையும் உவை என்னும் மூவகை அசேதனமான அறிவற்றவைகளும்; இவரும் அவரும் இவர் அவர்; உவரும் உவர் என்னும் மூவகை சேதனர்களான அறிவுஜீவிகளும்; எவையும் எவரும் எல்லா அசேதனங்களும் எல்லா சேதனர்களும்; தன்னுள்ளே ஆகியும் தன்னுள்ளே அடக்கியும்; ஆக்கியும் காக்கும் ஸ்ருஷ்டி சமயத்தில் உண்டாக்கியும் காத்தும்; அவையுள் அவற்றிற்குள் அந்தராத்மாவாகவும் உள்ள; தனி முதல் எம்மான் ஒப்பற்ற எம்பெருமான்; கண்ண பிரான் கண்ணபிரானும்; என் அமுதம் எனக்கு அமுதம் போன்றவனும்; சுவையன் பரம போக்யனும்; திருவின் மணாளன் திருமகளின் மணாளனுமான பெருமான்; என்னுடை என்னுடனேயே; சூழல் உளானே சுற்றிச் சுழல்கிறான்
ivaiyum avaiyum uvaiyum those achĕthana (insentient) entities which are near, far and in-between; ivarum avarum uvarum those chĕthana (sentient) entities which are near, far and in-between; yavaiyum yāvarum everything; thannul̤l̤ĕ within himself (during annihilation); āgiyum being their existence (by sustaining them); ākkiyum creating them (during creation); kākkum protecting (those which/who are created by eliminating the obstacles and fulfilling their desires); avaiyul̤ being the in-dwelling soul in them; thani mudhal being the independent cause (without looking for anyone-s assistance); ammān being the lord; kaṇṇa pirān manifesting easy approachability in krishṇāvathāram; en amudham being my enjoyable entity; suvaiyan being a great enjoyer (due to that); thiruvin maṇāl̤an with srī mahālakshmi; ennudai in my; sūzhal ul̤ān present in the surroundings

TVM 1.9.2

2880 சூழல்பலபலவல்லான் தொல்லையங்காலத்துலகை *
கேழலொன்றாகியிடந்த கேசவனென்னுடையம்மான் *
வேழமருப்பையொசித்தான் விண்ணவர்க்கெண்ண லரியான் *
ஆழநெடுங்கடல்சேர்ந்தான் அவனென்னருகலிலானே.
2880 சூழல் பலபல வல்லான் * தொல்லை அம் காலத்து உலகை *
கேழல் ஒன்று ஆகி இடந்த * கேசவன் என்னுடை அம்மான் **
வேழ மருப்பை ஒசித்தான் * விண்ணவர்க்கு எண்ணல் அரியான் *
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான் * அவன் என் அருகலிலானே (2)
2880 cūzhal palapala vallāṉ * tŏllai am kālattu ulakai *
kezhal ŏṉṟu āki iṭanta * kecavaṉ ĕṉṉuṭai ammāṉ **
vezha maruppai ŏcittāṉ * viṇṇavarkku ĕṇṇal ariyāṉ *
āzha nĕṭuṅ kaṭal cerntāṉ * avaṉ ĕṉ arukalilāṉe (2)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, with many incarnations, is close to me. Once, as a unique Boar, He saved the Earth from the ocean. He defeated a tusker as Kēcavaṉ, breaking its tusks. Far beyond the understanding of the Devās, He is reclined on the deep and vast ocean.

Explanatory Notes

There are two different episodes about the Earth having been picked out of the ocean.

(a) Hiraṇyākṣa, the demon with golden eyes, had rolled up the Earth like a mat, tucked under his arm-pit and then hid himself inside the oceanic waters. Lord Viṣṇu, at the request of the Devas, incarnated as a Boar with a gigantic tusk, bent and protruding, chased the demon under the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூழல் அடியார்களை வசீகரிக்கக்கூடிய; பலபல வல்லான் பல பல அவதாரங்கள் எடுக்க வல்லவனும்; தொல்லையங் காலத்து பழைய அழகிய வராக கல்பத்தில்; உலகை உலகத்தை; கேழல் ஒன்று ஆகி ஒப்பற்ற வராகமாகி; இடந்த தன் கோரைப்பல்லால் குத்தி எடுத்த; கேசவன் கேசவனும்; என்னுடை அம்மான் என்னுடைய ஸ்வாமியும்; வேழ கண்ணனாக வந்து குவலயாபீட யானையின்; மருப்பை ஒசித்தான் கொம்பை முறித்தவனும்; விண்ணவர்க்கு தேவர்களாலும்; எண்ணல் அரியான் நினைக்க முடியாதவனாய்; ஆழ நெடுங் கடல் ஆழமான நீண்ட பாற்கடலில்; சேர்ந்தான் அவன் கண்வளர்ந்தருள்பவனுமான பெருமான்; என் அருகல் இலானே என்னருகில் உள்ளான்
sūzhal deceitful incarnations (for the purpose of attracting his devotees); pala pala many; vallān capable of assuming (out of his will); thollai ancient; am beautiful (due to its assisting in incarnations); kālaththu in the beginning of varāha kalpam; ulagai the universe (submerged in the causal ocean); kĕzhal onṛu āgi becoming a unique boar; idandha dug out; kĕsavan having beautiful kĕsam (hair) (that has become wet due to contact with the causal water); ennudai ammān being my master; vĕzham (having incarnated as krishṇa), elephant named kuvalayāpīdam (which was an obstacle); maruppai osiththān one who broke its tusks; viṇṇavarkku dhĕvathās (who are most knowledgeable); eṇṇil to comprehend; ariyān being very difficult; āzham (again to help his devotees) being very deep; nedum wide; kadal kshīrārṇavam- ocean of milk; sĕrndhān avan lying down there mercifully; en arugalilān arrived at a place which is close to me

TVM 1.9.3

2881 அருகலிலாயபெருஞ்சீர் அமரர்களாதிமுதல்வன் *
கருகியநீலநன்மேனிவண்ணன் செந்தாமரைக்கண்ணன் *
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன் *
ஒருகதியின்சுவைதந்திட்டு ஒழிவிலனென்னோடுடனே.
2881 அருகல் இலாய பெரும் சீர் * அமரர்கள் ஆதி முதல்வன் *
கருகிய நீல நன் மேனி வண்ணன் * செந்தாமரைக் கண்ணன் **
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் * பூமகளார் தனிக் கேள்வன் *
ஒருகதியின் சுவை தந்திட்டு * ஒழிவு இலன் என்னோடு உடனே (3)
2881 arukal ilāya pĕrum cīr * amararkal̤ āti mutalvaṉ *
karukiya nīla naṉ meṉi vaṇṇaṉ * cĕntāmaraik kaṇṇaṉ **
pŏru ciṟaip pul̤ uvantu eṟum * pūmakal̤ār taṉik kel̤vaṉ *
ŏrukatiyiṉ cuvai tantiṭṭu * ŏzhivu ilaṉ ĕṉṉoṭu uṭaṉe (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Primal Lord of the Celestials, with auspicious, undiminishing, and eternal qualities, has a sapphire hue and red-lotus eyes. He rides the bird Garuḍā, known for its hefty wings, and is the peerless consort of lotus-born Lakṣmī. This Lord resides within me, delighting me in many ways.

Explanatory Notes

It is a rich and varied fare that the Lord serves to the Āzhvār, having taken possession of him and shifted unto his body which now constitutes the seat of His entire cosmic activities.

The Lord exhibits:

(a) His auspicious qualities, eternal and unlimited;
(b) His Overlordship of the Celestials in spiritual world;
(c) His exquisite form of sapphire hue;
(d) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருகல் இலாய குற்றம் குறையில்லாத; பெரும் சீர் சிறந்த குணங்களையுடையவனும்; அமரர்கள் நித்யஸூரிகளுக்கு; ஆதி முதல்வன் தலைவனும்; கருகிய நீல கருத்த நீலமணி போன்ற; நன் மேனி வண்ணன் அழகான நிறத்தையுடையவனும்; செந்தாமரை சிவந்த தாமரை போன்ற; கண்ணன் கண்களையுடையவனும்; பொரு சிறைப் புள் செறிந்த சிறகையுடைய கருடன் மீது; உவந்து ஏறும் உவந்து ஏறி வலம் வருபவனும்; பூமகளார் ஒப்பற்ற திருமகளின்; தனிக் கேள்வன் நாதனுமான எம்பெருமான்; என்னோடு உடனே என்னோடு கூடவே நின்று; ஒருகதியின் அனைத்து அநுபவங்களையும்; சுவை தந்திட்டு ஒழிவு இலன் இனிய சுவையையும் தருகிறான்
arugal il not having defects such as apaksha (decline), etc; āya ĕternal, ḍue to permanent existence; perum unlimited; sīr one who is having auspicious qualities; amarargal̤ for the nithyasūris; ādhi one who is the cause for their existence etc.,; mudhalvan leader; karugiya very blackish; neelam like a blue gem; nal good; mĕni vaṇṇan one who is having bodily complexion; sem reddish (being contrary to such bodily complexion); thāmarai lotus like; kaṇṇan having divine eyes; poru abundant; siṛai having feathers; pul̤ periya thiruvadi (garudhāzhvār); uvandhu with great desire; ĕṛum one who climbs on; pū magal̤ār most enjoyable srī mahālakshmi who is like the embodiment of flower-s fragrance; thanik kĕl̤van singular enjoyer; ennŏdu udanĕ being together with me; oru gathiyin in one aspect; suvai taste; thandhittu giving; ozhivu ilan does not leave

TVM 1.9.4

2882 உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகளாயர்
மடமகள் * என்றிவர்மூவராளும் உலகமும்மூன்றே *
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான் *
கடல்மலிமாயப்பெருமான் கண்ணன்என்ஒக்கலையானே.
2882 உடன் அமர் காதல் மகளிர் * திருமகள் மண்மகள் ஆயர் *
மட மகள் * என்று இவர் மூவர் ஆளும் * உலகமும் மூன்றே **
உடன் அவை ஒக்க விழுங்கி * ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான் *
கடல் மலி மாயப் பெருமான் * கண்ணன் என் ஒக்கலையானே (4)
2882 uṭaṉ amar kātal makal̤ir * tirumakal̤ maṇmakal̤ āyar *
maṭa makal̤ * ĕṉṟu ivar mūvar āl̤um * ulakamum mūṉṟe **
uṭaṉ avai ŏkka vizhuṅki * āl ilaic cerntavaṉ ĕmmāṉ *
kaṭal mali māyap pĕrumāṉ * kaṇṇaṉ ĕṉ ŏkkalaiyāṉe (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord's three favorite spouses are Tirumakaḷ, Maṇmakaḷ, and Āyarmaṭamakaḷ. He rules over the three worlds, which He consumed all at once and then rested on a fig-leaf during the deluge. Known for His amazing deeds and vast glory greater than the ocean, Kaṇṇaṉ, my Liege-Lord, now sits on my hip.

Explanatory Notes

Notes

(i) The Universal Lord sits on the hip of the Āzhvār even as He sat on the hip of Yaśōda, during His Avatāra, as Śrī Kṛṣṇa.

(ii) The three worlds referred to are the Svarga, up above, the Underworld, down below (Pāthāla) and the Earth, in between. The three Spouses of the Lord in His transcendental setting are: Śrī (Tirumakaḷ), Bhū (Maṇmakaḷ) and Nīla (Āyar maṭa makaḷ).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடன் அமர் கூடவே இருக்கும்; காதல் மகளிர் பெரும் காதலையுடைய தேவிமார்; திருமகள் மண்மகள் திருமகள் பூமாதேவி; ஆயர் மடமகள் ஆயர்மகளான நப்பின்னை; என்று இவர் மூவர் என்று புகழ்பெற்ற இம்மூவராவர்; ஆளும் உலகமும் தன்னால் ஆளப்படுகின்ற உலகங்களும்; மூன்றே மூன்றேயாய் இருக்கும்; உடன் அவை ஒக்க அவ்வுலகங்களை ஒன்று விடாமல்; விழுங்கி ஒரே சமயத்தில் விழுங்கினவனும்; ஆலிலைச் சேர்ந்தவன் ஆலிலையில் கண்வளர்ந்தவனும்; எம்மான் எம்பெருமானும்; கடல் மலி மாய கடலைக் காட்டிலும் மிகப் பெரிய; பெருமான் மாயச்செயல்களால் பெருமைபெற்றவனுமான; கண்ணன் என் கண்ணபிரான் அவனே இப்போது; ஒக்கலையானே என் இடுப்பிலே வந்தமர்ந்தான்
udan being together; amar having; kādhal love; magal̤ir his consorts; thirumagal̤ lakshmi (who has amaśing rich form); maṇmagal̤ bhūmi dhĕvi (who is embodiment of forbearance); āyar mada magal̤ (most-suitable) nappinnai who is having great family heritage and great qualities; enṛu being the main and well known; ivar these divine consorts; mūvar three; āl̤um ruling over (protecting); ulagamum universe/world; mūnṛĕ three layers- 1) from pāthāl̤a lŏka to svarga lŏkam, 2) jana lŏkam, thapa lŏkam, sathya lŏkam, 3) mahar lŏkam; avai (during pral̤ayam/annihilation) those; udan without any distinction; okka evenly; vizhungi consumed; ālilai on banyan leaf; sĕrndhavan lying down; emmān (by doing this) being my lord and master; kadal in kshīrārṇavam (milk ocean); mali having the glories of resting; māyam with amaśing qualities/activities; perumān one with naturally unlimited qualities; kaṇṇan krishṇa; en okkalaiyān (like on yasŏdhā) sat on my hip

TVM 1.9.5

2883 ஒக்கலைவைத்துமுலைப்பாலுண்ணென்று தந்திடவாங்கி *
செக்கஞ்செகஅன்று அவள்பால்உயிர்செகவுண்ட பெருமான் *
நக்கபிரானோடு அயனுமிந்திரனும்முதலாக *
ஒக்கவும்தோற்றியவீசன் மாயனென்னெஞ்சினுளானே.
2883 ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று * தந்திட வாங்கி *
செக்கம் செக அன்று அவள்பால் * உயிர் செக உண்ட பெருமான் **
நக்க பிரானோடு * அயனும் இந்திரனும் முதலாக *
ஒக்கவும் தோற்றிய ஈசன் * மாயன் என் நெஞ்சின் உளானே (5)
2883 ŏkkalai vaittu mulaip pāl uṇ ĕṉṟu * tantiṭa vāṅki *
cĕkkam cĕka aṉṟu aval̤pāl * uyir cĕka uṇṭa pĕrumāṉ **
nakka pirāṉoṭu * ayaṉum intiraṉum mutalāka *
ŏkkavum toṟṟiya īcaṉ * māyaṉ ĕṉ nĕñciṉ ul̤āṉe (5)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Supreme Lord, who created everyone—Brahmā, Rudrā, Indrā, and others with extraordinary traits and deeds—sucked the breast and life of the demoness Pūtanā as He sat on her hip. He now resides in my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நக்க பிரானோடு அயனும் ருத்ரனும் பிரமனும்; இந்திரனும் இந்திரனும் முதலானவர்களையும் மேலும்; முதலாக ஒக்கவும் அனைத்துப் பதார்த்தங்களையும்; தோற்றிய படைத்த; ஈசன் எம்பெருமான்; ஒக்கலை யசோதையைப் போல் வந்த பூதனை; வைத்து கண்ணனை இடுப்பிலெடுத்துக் கொண்டு; முலைப் பால் உண் என்று தந்திட பாலைப் பருகு என்று தர; வாங்கி அந்த மார்பகங்களை ஏற்று; செக்கம் அந்தப் பூதனையின் நினைவு கண்ணனை; செக முடிக்க வேண்டும் என்ற எண்ணம்; அன்று அவள் அன்று அவள்கொடுத்த; பால் உயிர் பால் அவள் உயிர்; செக உண்ட இரண்டையும் சேர்த்து உண்ட; மாயன் பெருமான் மாயனான எம்பெருமான்; என் நெஞ்சின் உளானே என் நெஞ்சிலும் இடம் பெறுகிறான்
nakka pirānŏdu one who wears ākāsam (space/ether) as clothes (i.e., nagna- being naked), who is popularly known as īsvara; ayanum brahmā who is popularly known as aja (unborn) since he is not born from a woman-s uterus (he was directly born from bhagavān out of bhagavān-s will/desire); indhiranum indhra who considers himself as the most wealthy entity; mudhalāgavum and all such beings; okka at once; thŏṝiya created; īṣanum being the sarvĕṣvaran; okkalai vaiththu (during krishṇāvathāram) placing him on her hip (like mother yasŏdhā does); mulaip pāl uṇ enṛu (with loving intentions) saying drink my breast-milk; thandhida (exclusively) gave; vāngi (without any doubt) accepting it; sekkam the thought of killing krishṇa; sega to be destroyed (within her, without anyone else knowing); anṛu that day (when she came to kill him); aval̤ pāl in her; uyir vital-air; sega to be finished; uṇda consumed (the milk she gave); perumān sarvādhika (who is greater than all and who retained himself as the master of the universe); māyan most amaśing person; en my; nenjin ul̤ān became contained in my heart (which is a part in my body

TVM 1.9.6

2884 மாயனென்னெஞ்சினுள்ளான் மற்றும்யவர்க்கும்அதுவே *
காயமும்சீவனும்தானே காலுமெரியுமவனே *
சேயனணியன்யவர்க்கும் சிந்தைக்கும்கோசரமல்லன் *
தூயன்துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
2884 மாயன் என் நெஞ்சின் உள்ளான் * மற்றும் எவர்க்கும் அதுவே *
காயமும் சீவனும் தானே * காலும் எரியும் அவனே **
சேயன் அணியன் எவர்க்கும் * சிந்தைக்கும் கோசரம் அல்லன் *
தூயன் துயக்கன் மயக்கன் * என்னுடைத் தோளிணையானே (6)
2884 māyaṉ ĕṉ nĕñciṉ ul̤l̤āṉ * maṟṟum ĕvarkkum atuve *
kāyamum cīvaṉum tāṉe * kālum ĕriyum avaṉe **
ceyaṉ aṇiyaṉ ĕvarkkum * cintaikkum kocaram allaṉ *
tūyaṉ tuyakkaṉ mayakkaṉ * ĕṉṉuṭait tol̤iṇaiyāṉe (6)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The wonderful Lord, Māyaṉ, is right in my heart like no one else. He is at once body, soul, wind, and fire; close to some, yet distant to others. My flawless Lord is beyond everyone's mental grasp. For the unfortunate skeptics, He remains elusive and confounding. Now, He is firmly seated upon my shoulders.

Explanatory Notes

(i) The Supreme Lord controls the bodies of the different species of beings and the Souls inside them, the elements and all. Easily accessible to the devout who depend solely on His voluntary grace, He is beyond the comprehension of those who seek to know Him through their own efforts. Of easy grasp by the recipients of His grace, He is elusive unto others, who, by dint + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சின் உள்ளான் எனது நெஞ்சில் இருப்பது போல்; மாயன் ஆச்சர்யமனான எம்பெருமான்; மற்றும் எவர்க்கும் வேறு யாரிடமாவது; அதுவே அப்படியிருப்பதுண்டோ? இல்லை; காயமும் சீவனும் தானே உடலும் உயிரும் தானேயாய்; காலும் எரியும் அவனே காற்றும் அனலும் தானேயாய்; அணியன் அடியார்களுக்குக் காண எளியவனாகவும்; சேயன் அடியவரல்லாதார்க்கு காணமுடியாதவனாகவும்; எவர்க்கும் எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் தன் முயற்சியால்; சிந்தைக்கும் காண விரும்பும் அநாச்ரிதர்களுக்கு நினைக்கவும்; கோசரம் அல்லன் விஷயமல்லாதவனாய்; தூயன் ஆச்ரிதர்களுக்கு எளியவனாய்; துயக்கன் மயக்கன் அடியரல்லாதவர்களுக்கு எட்டாதவன்; என்னுடைதோள் எனது இரண்டு தோள்களிலும்; இணையானே உள்ளவன் ஆனான்
en my; nenjin ul̤l̤ān one who resides in (my) heart; māyan amaśing person; maṝum yavarkkum for others; adhuvĕ can he do that?; kāyamum sarīram/body; seevanum āthmā/soul; thānĕ having everything as his prakāram (form) and thus being seemingly identical to them; kālum wind; eriyum fire; avanĕ having them as prakāram (form); sĕyan being distant (for those who are not his devotees); aṇiyan being close (for his devotees); yavarkkum even for those great persons; sindhaikkum to meditate upon (trying on their own efforts); gŏcharam allan not within the grasp; thūyan having purity (to be approachable by his devotees); thuyakkan mayakkan one who creates doubts/errors in the minds (of those non-devotees); ennudai my (like how he climbs garudāzhvār); thŏl̤iṇaiyān stayed on my two shoulders

TVM 1.9.7

2885 தோளிணைமேலும்நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் *
தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் *
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி *
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.
2885 தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் * சுடர் முடி மேலும் *
தாள் இணை மேலும் புனைந்த * தண் அம் துழாய் உடை அம்மான் **
கேள் இணை ஒன்றும் இலாதான் * கிளரும் சுடர் ஒளி மூர்த்தி *
நாள் அணைந்து ஒன்றும் அகலான் * என்னுடை நாவின் உளானே (7)
2885 tol̤ iṇai melum naṉ mārpiṉ melum * cuṭar muṭi melum *
tāl̤ iṇai melum puṉainta * taṇ am tuzhāy uṭai ammāṉ **
kel̤ iṇai ŏṉṟum ilātāṉ * kil̤arum cuṭar ŏl̤i mūrtti *
nāl̤ aṇaintu ŏṉṟum akalāṉ * ĕṉṉuṭai nāviṉ ul̤āṉe (7)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The peerless Lord, with His beautiful shoulders, chest, lustrous crown, and feet adorned with fragrant tulacī, grips me more each day. His mounting radiance and glowing fame now rest in my tongue.

Explanatory Notes

(i) Even as the wife bedecks and beautifies herself to excite the special fascination of her husband, the Lord bedecks Himself with tulacī, which holds out special fascination for the Āzhvār and mingles with him.

(ii) The sequence of decoration indicated in the stanza is appreciated by Śrī Parāśara Bhaṭṭar in his own inimitable way, as follows:

It is but meet, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோள் இணை மேலும் இரண்டு தோள்களிலும்; நன் மார்பின் மேலும் நல்ல மார்பின் மேலும்; சுடர் முடி மேலும் ஒளிபொருந்திய திருமுடியிலும்; தாள் இணை மேலும் இரண்டு திருவடிகளிலும்; புனைந்த தண்ணம் அணிந்துள்ள குளிர்ந்த; துழாய் உடை அம்மான் துளசிமாலையுடைய பெருமானாய்; கேள் இணை பொருத்தமான உபமானம்; ஒன்றும் இலாதான் ஒன்றுமில்லாதவனாய்; கிளரும் சுடர் ஒளி சிறந்த ஒளி வடிவம் பெற்ற; மூர்த்தி எம்பெருமான்; நாள் அணைந்து நாள்தோறும் அணைந்து; ஒன்றும் அகலான் என்னைவிட்டு அகலாமல்; என்னுடை நாவின் உளானே என் நாவிலேயே உள்ளான்
thŏl̤iṇai mĕlum ŏn the divine shoulders (which) give protection); nal that which is desirable for the beloved; mārbin mĕlum on the divine chest; sudar having radiance indicating the lordship; mudi mĕlum on the divine head; thāl̤iṇai mĕlum on the divine, lotus feet which are held by the servitors; punaindha worn; thaṇ am thuzhāy udai having cool/beautiful thul̤asi; ammān being the master; kĕl̤ matching (such decoration); iṇai comparable example; onṛum even in a single aspect; ilādhān having none; kil̤arum sudar having abundant radiance (natural radiance and the radiance of thul̤asi added); ol̤i mūrththy having a resplendent divine form; nāl̤ everyday; aṇaindhu approached; onṛum even a little; agalān being inseparable; en udai nāvinul̤ān entered my tongue

TVM 1.9.8

2886 நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம் *
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே *
பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும் *
காவிநன்மேனிக்கமலக்கண்ணன் என்கண்ணினுளானே.
2886 நாவினுள் நின்று மலரும் * ஞானக் கலைகளுக்கு எல்லாம் *
ஆவியும் ஆக்கையும் தானே * அழிப்போடு அளிப்பவன் தானே **
பூ இயல் நால் தடம் தோளன் * பொரு படை ஆழி சங்கு ஏந்தும் *
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் * என் கண்ணின் உளானே (8)
2886 nāviṉul̤ niṉṟu malarum * ñāṉak kalaikal̤ukku ĕllām *
āviyum ākkaiyum tāṉe * azhippoṭu al̤ippavaṉ tāṉe **
pū iyal nāl taṭam tol̤aṉ * pŏru paṭai āzhi caṅku entum *
kāvi naṉ meṉik kamalak kaṇṇaṉ * ĕṉ kaṇṇiṉ ul̤āṉe (8)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

All arts that emerge from the tongue, including their form (sound) and essence (meaning), are guided by Him. The Lord, whose four lovely shoulders hold the conch and discus, has entered my eyes with His captivating, lotus-eyed charm.

Explanatory Notes

(i) Certain branches of knowledge become extinct due to lack of propagation, due again to lack of interest or adequate intelligence to grasp them and various other causes; the Lord allows them to die out and gets them resuscitated, as and when He deems it necessary.

(ii) Cf. IV-2 and 3 of Bhagavad Gītā where Lord Kṛṣṇa says that the Karma Yoga, explained by Him long + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாவினுள் நின்று மலரும் நாவால் கூறப்படும்; ஞான கலைகளுக்கு எல்லாம் ஞான கலைகளுக்கு எல்லாம்; ஆவியும் ஆக்கையும் உயிரும் உடலும் சொல்லும் பொருளும்; தானே தானே ஆவான்; அழிப்போடு அவற்றினுடைய அழிவும்; அளிப்பவன் தானே உத்பத்தியும் தானே ஆவான்; பூவியல் நால் பூப்போன்ற நான்கு; தடம் தோளன் பெரிய தோள்களையுடையவனும்; பொரு படை ஆஸ்ரித விரோதிகளை அழிக்க; ஆழி சங்கு ஏந்தும் சங்கு சக்கரங்களையுடையவனாய்; காவி கருநெய்தல் போன்று; நன் மேனி அழகிய நிறமுடையவனும்; கமலம் கமலம் போன்ற கண்களையுடையனுமாகிய; கண்ணன் கண்ணன்; என் கண்ணின் உளானே என் கண்களுகுள்ளேயே உள்ளான்
nāvinul̤ ninṛu from the tongue; malarum permeate/spread; gyānam tools for knowledge; kalaigal̤ukku ellām for all those abodes (pramāṇams/ṣāsthram/scriptures); āviyum essential meaning which is the soul; ākkaiyum the word which is the body; thānĕ having them under his disposal; azhippŏdu al̤ippavan thānĕ having their creation and annihilation at his full disposal; pūviyal fresh like a flower; nāl thadam thŏl̤an one who is having four wide shoulders; poru to destroy the enemies of devotees; padai weapons; āzhi sudharsana chakram- disc; sangu pānchajanyam- conch; ĕndhum holding them; kāvi a dark-coloured flower; nal good-looking; mĕni divine bodily complexion; kamalam lotus like; kaṇṇan having the eyes; en kaṇṇin ul̤l̤ān (with this beauty) entered my eyes

TVM 1.9.9

2887 கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பனவன் கண்களாலே *
அமலங்களாகவிழிக்கும் ஐம்புலனும்அவன்மூர்த்தி *
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி *
அமலத்தெய்வத்தோடுலகமாக்கி என்நெற்றியுளானே.
2887 கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் * காண்பன் அவன் கண்களாலே *
அமலங்கள் ஆக விழிக்கும் * ஐம்புலனும் அவன் மூர்த்தி **
கமலத்து அயன் நம்பி தன்னைக் * கண்ணுதலானொடும் தோற்றி *
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி * என் நெற்றி உளானே (9)
2887 kamalak kaṇṇaṉ ĕṉ kaṇṇiṉ ul̤l̤āṉ * kāṇpaṉ avaṉ kaṇkal̤āle *
amalaṅkal̤ āka vizhikkum * aimpulaṉum avaṉ mūrtti **
kamalattu ayaṉ nampi taṉṉaik * kaṇṇutalāṉŏṭum toṟṟi *
amalat tĕyvattoṭu ulakam ākki * ĕṉ nĕṟṟi ul̤āṉe (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The lotus-eyed Lord could be seen through my eyes. His gaze destroyed my ignorance and made all my five senses serve Him. He created Brahmā, who sits on a lotus, Rudrā, who has an extra eye on his forehead, other Devās, and the rest of the worlds. This Lord of such eminence now resides on my forehead.

Explanatory Notes

The Lord, hitherto not visible, could now be seen in all His grandeur and enjoyed by the Āzhvār, not only through his eyes but all his other senses as well. This was possible only due to the Lord’s redemptive grace, shed in super-abundance through His benevolent looks. Finding that the Āzhvār could assimilate this grand experience, the Lord next passed on to the Āzhvār’s forehead on the penultimate lap of His Journey to the Āzhvār’s crown.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கமலக் கண்ணன் கமலக் கண்ணன்; என் கண்ணின் உள்ளான் என் கண்ணுக்குள் தோன்றினான்; காண்பன் நானும் அவனைக் கண்டேன் எப்படி என்றால்; அவன் கண்களாலே அவன் தன் கண்களாலே; அமலங்களாக அஞ்ஞானமாகிய மலங்கள் தொலையும்படி; விழிக்கும் கடாக்ஷித்தருளினான்; ஐம்புலனும் ஐந்து இந்திரியங்களும்; அவன் மூர்த்தி அவனுக்கு அடிமை ஆகிவிட்டன; கமலத்து கமலத்தில்; அயன் நம்பி தன்னை தோன்றிய பிரமனையும்; தோற்றி தோற்றுவித்து; கண்ணுதலானொடும் நெற்றிக்கண்ணனாகிய ருத்ரனையும்; அமலத் தெய்வத்தோடு ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின; உலகம் ஆக்கி உலகங்களையும் படத்த பெருமான் இப்பொழுது; என் நெற்றி உளானே எனது நெற்றியிலே உள்ளான்
kamalak kaṇṇan one who is lotus-eyed; en kaṇṇin ul̤l̤ān becomes the object of my vision; kāṇban (With that, after eliminating the state of -na chakshushā pasyathi #(cannot be seen by the eyes),) ī saw him; avan (that is because) that lotus-eyed emperumān; than kaṇgal̤ālĕ with his eyes; amalangal̤āga eliminating the dirt such as ignorance etc; vizhikkum glance at me; aim pulanum (with that,) eyes and all other senses (totally five- eyes, ears nose, skin, tongue); avan mūrththi became forms of his (he is the substratum) and his servitors; kamalaththu (Who is the one who did this to me?) being born in lotus flower; ayan brahmā who is known as aja; nambi thannai Being complete to fulfil his tasks such as creation etc; kaṇ nudhalānŏdum along with visibly powerful rudhra due to having the third eye in his forehead; thŏṝi creating them; amalam (starting with them) having abundant goodness; theyvaththŏdu along with the dhĕvathās; ulagam universes; ākki one who naturally creates; en (preserving these qualities,) in one of my body parts; neṝi ul̤ān became placed in my forehead

TVM 1.9.10

2888 நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி *
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத் தொழுவார் *
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனுமிந்திரனும் *
மற்றையமரருமெல்லாம்வந்து எனதுச்சியுளானே.
2888 நெற்றியுள் நின்று என்னை ஆளும் * நிரை மலர்ப் பாதங்கள் சூடி *
கற்றைத் துழாய் முடிக் கோலக் * கண்ண பிரானைத் தொழுவார் **
ஒற்றைப் பிறை அணிந்தானும் * நான்முகனும் இந்திரனும் *
மற்றை அமரரும் எல்லாம் வந்து * எனது உச்சியுளானே (10)
2888 nĕṟṟiyul̤ niṉṟu ĕṉṉai āl̤um * nirai malarp pātaṅkal̤ cūṭi *
kaṟṟait tuzhāy muṭik kolak * kaṇṇa pirāṉait tŏzhuvār **
ŏṟṟaip piṟai aṇintāṉum * nāṉmukaṉum intiraṉum *
maṟṟai amararum ĕllām vantu * ĕṉatu ucciyul̤āṉe (10)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The lotus feet of the Lord, wearing round bands of tuḷacī dense, Resting on my forehead, are worshipped and worn on their heads, By the wearer of crescent Moon (Śiva), Nānmukaṉ (Brahmā), Intiraṉ (Indra) And all other Amarar (Devas); Such an eminent One Shot up from my forehead, right into my head. Updated: The Lord's lotus feet, wrapped in dense tuḷacī bands, rest on my forehead. They are worshipped and carried on the heads of Śivā, who wears the crescent moon, Brahmā, Indrā, and all the other Devās. This eminent Lord then rose from my forehead and entered my mind.

Explanatory Notes

(i) Even the exalted Śiva, Brahmā, Indra and other Devas have to queue up, seeking the appropriate time for the propitiation of the Lord. But He, in turn, has got into the Āzhvār’s head, seeking the most appropriate time for it.

(ii) In the first line of this stanza (original text) reference has been made to the Lord‘s pair of lotus feet, planted on the Āzhvār’s forehead, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெற்றியுள் நின்று நெற்றியுள் நின்று; என்னை ஆளும் என்னை அடிமை கொள்ளும்; நிரை மலர் துளசிமாலை அணிந்த பெருமானின்; பாதங்கள் சூடி திருவடிகளைத் தலையிலே சூடிக்கொண்டு; கற்றைத் துழாய் செறிந்த துளசியை; முடிக் கோலக் கண்ணபிரானை முடியிலணிந்துள்ள கண்ணனை; தொழுவார் வணங்குபவர்கள்; ஒற்றைப் பிறை சந்திரப் பிறையை; அணிந்தானும் அணிந்த ருத்ரனும்; நான்முகனும் இந்திரனும் பிரமனும் இந்திரனும்; மற்றை அமரரும் மற்றுமுள்ள தேவர்கள்; எல்லாம் எல்லோராலும் தொழப்பட்ட பெருமான்; வந்து எனது உச்சி என் உச்சியில் வந்து; உளானே நின்ற எளிமைதான் என்னே!
neṝiyul̤ ninṛu being friendly; ennai me; āl̤um accepting service; nirai malar having rows of flowers submitted by devotees; pādhangal̤ divine feet; sūdi wearing (on their heads); kaṝai abundant/bunch of; thuzhāy thul̤asi; mudik kŏlam having decorated head/crown; kaṇṇa pirānai krishṇa who has favoured me (and most humble towards his devotees); thozhuvār (by joining palms etc) worshipers; oṝaip piṛai moon which is just a day into waxing; aṇindhānum rudhra who is decorated with; nānmuganum four headed brahmā; indhiranum indhra; maṝai other; amararum ellām all dhĕvathās; vandhu (such emperumān who was worshipped by all) arrived (from that forehead); en uchchi ul̤ān seated on my head

TVM 1.9.11

2889 உச்சியுள்ளேநிற்கும்தேவதேவற்குக் கண்ணபிராற்கு *
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன் *
இச்சொன்னவாயிரத்துள் இவையுமோர்பத்து எம்பிராற்கு *
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னி பொருமே. (2)
2889 ## உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் * கண்ண பிராற்கு *
இச்சையுள் செல்ல உணர்த்தி * வண் குருகூர்ச் சடகோபன் **
இச் சொன்ன ஆயிரத்துள் * இவையும் ஓர் பத்து எம்பிராற்கு *
நிச்சலும் விண்ணப்பம் செய்ய * நீள் கழல் சென்னி பொருமே (11)
2889 ## ucciyul̤l̤e niṟkum teva tevaṟkuk * kaṇṇa pirāṟku *
iccaiyul̤ cĕlla uṇartti * vaṇ kurukūrc caṭakopaṉ **
ic cŏṉṉa āyirattul̤ * ivaiyum or pattu ĕmpirāṟku *
niccalum viṇṇappam cĕyya * nīl̤ kazhal cĕṉṉi pŏrume (11)

Ragam

Mohana / மோஹன

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord's long feet will forever bless the heads of those who recite these ten songs, out of the thousand sung by Caṭakōpaṉ of Kurukūr. The songs describe his experience of how the Supreme Lord Kaṇṇapirāṉ moved from one part of his body to another and settled on his crown.

Explanatory Notes

The Supreme Lord, adorning the heads of the exalted Devas, coveted the Āzhvār’s head so much that He got into it by stages, and there being no higher place to step into, the Lord stays on there. In other words, the Āzhvār’s head is the new abode of the Lord. This is indeed the limit for the Lord’s loving condescension (Sauśīlya)! Here then is the mystic realisation that God loves His Subjects in the same way they pine for union with Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உச்சியுள்ளே என் தலை மீது சிந்தையில்; நிற்கும் நிற்பவனும்; தேவ தேவற்கு தேவாதிதேவனும்; கண்ண பிராற்கு கண்ணனான பெருமானுக்கு; இச்சையுள் தன் பக்கலிலே அவன் பண்ணின; செல்ல உபகாரத்தை; உணர்த்தி தாம் அறிந்தபடி அவனுக்கு அறிவித்து; வண் குருகூர்ச் சடகோபன் நம்மாழ்வார்; இச்சொன்ன அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுக்குள்; இவையும் ஓர் பத்து இந்த ஒப்பற்ற பத்துப்பாசுரங்களையும்; எம்பிராற்கு எம்பெருமானுக்கு; விண்ணப்பம் செய்ய விண்ணப்பம் செய்ய; நிச்சலும் நாள்தோறும்; நீள் கழல் நீண்ட அவனது திருவடிகள்; சென்னி பொருமே கூறுபவர் தலையில் வந்து சேரும் என்கிறார்
uchchi ul̤l̤ĕ niṛkum (thus) staying on my head; dhĕva dhĕvaṛku for the god of gods; kaṇṇa pirāṛku maganimous krishṇa who has both supremacy (pirān) and simplicity (krishṇa); ichchai (his) affection (towards āzhvār); ul̤ inside (āzhvār); sella occur, having realised; uṇarththi informing that (to him); vaṇ kurukūrch chatakŏpan nammāzhvār (who is the most liberal leader of the place named āzhvārthirunagari); ichchonna āyiraththul̤ īn the thousand pāsurams mercifully given by him; ivai these (which talk about emperumān-s union with āzhvār); ŏr distinct, incomparable; paththu ten pāsurams; em pirāṛku to emperumān; viṇṇappam seyya recite to him; nīl̤ those which are so long that they reach up to his devotees; kazhal his divine, lotus feet; senni in the heads of those (who recite); nichchalum every day, always; porum will be fixed.