Chapter 10

nirhEthuka mahOpakArithvam (bestowing great favours out of unconditional grace) - (பொரு மா)

ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்
It is in His nature for Bhagavān to show His love, mercy and bestow His blessings on us. Āzhvār says, these actions by Bhagavān are not reciprocated based on our actions.
பகவான் நம் மீது கொண்டிருக்கும் அன்பு, இரக்கம், அனுக்ரஹம் ஆகியவை இயற்கை. இவை நம் செயலால் ஏற்படுபவை அல்ல என்கிறார் ஆழ்வார்.

முதல் பத்து -பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமா நீள்’பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – தமது எல்லா அவயவங்களிலும் ஸ்ரீ இறைவன் + Read more
Verses: 2890 to 2900
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will become good scholars
  • TVM 1.10.1
    2890 ## பொரு மா நீள் படை * ஆழி சங்கத்தொடு *
    திரு மா நீள் கழல் * ஏழ் உலகும் தொழ **
    ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த * அக்
    கரு மாணிக்கம் * என் கண்ணுளது ஆகுமே (1)
  • TVM 1.10.2
    2891 கண்ணுள்ளே நிற்கும் * காதன்மையால் தொழில் *
    எண்ணிலும் வரும் * என் இனி வேண்டுவம் ? **
    மண்ணும் நீரும் * எரியும் நல் வாயுவும் *
    விண்ணும் ஆய் விரியும் * எம் பிரானையே? (2)
  • TVM 1.10.3
    2892 எம்பிரானை * எந்தை தந்தை தந்தைக்கும்
    தம்பிரானை * தாமரைக் கண்ணனை **
    கொம்பு அராவு * நுண் நேர் இடை மார்பனை *
    எம்பிரானைத் தொழாய் * மட நெஞ்சமே (3)
  • TVM 1.10.4
    2893 நெஞ்சமே நல்லை நல்லை * உன்னைப் பெற்றால்
    என் செய்யோம்? * இனி என்ன குறைவினம்? **
    மைந்தனை * மலராள் மணவாளனை *
    துஞ்சும்போதும் * விடாது தொடர்கண்டாய் (4)
  • TVM 1.10.5
    2894 கண்டாயே நெஞ்சே ! * கருமங்கள் வாய்க்கின்று * ஓர்
    எண் தானும் இன்றியே * வந்து இயலுமாறு **
    உண்டானை * உலகு ஏழும் ஓர் மூவடி
    கொண்டானை * கண்டுகொண்டனை நீயுமே (5)
  • TVM 1.10.6
    2895 நீயும் நானும் * இந் நேர்நிற்கில் * மேல் மற்றோர்
    நோயும் சார்கொடான் * நெஞ்சமே சொன்னேன் **
    தாயும் தந்தையும் ஆய் * இவ் உலகினில்
    வாயும் ஈசன் * மணிவண்ணன் எந்தையே (6)
  • TVM 1.10.7
    2896 எந்தையே என்றும் * எம் பெருமான் என்றும் *
    சிந்தையுள் வைப்பன் * சொல்லுவன் பாவியேன் **
    எந்தை! எம் பெருமான் ! என்று * வானவர்
    சிந்தையுள் வைத்துச் * சொல்லும் செல்வனையே (7)
  • TVM 1.10.8
    2897 செல்வ நாரணன் * என்ற சொல் கேட்டலும் *
    மல்கும் கண் பனி * நாடுவன் மாயமே **
    அல்லும் நன் பகலும் * இடைவீடு இன்றி *
    நல்கி என்னை விடான் * நம்பி நம்பியே (8)
  • TVM 1.10.9
    2898 நம்பியை * தென் குறுங்குடி நின்ற * அச்
    செம்பொனே திகழும் * திரு மூர்த்தியை **
    உம்பர் வானவர் * ஆதி அம் சோதியை *
    எம் பிரானை * என் சொல்லி மறப்பனோ? (9)
  • TVM 1.10.10
    2899 மறப்பும் ஞானமும் * நான் ஒன்று உணர்ந்திலன் *
    மறக்கும் என்று * செந்தாமரைக் கண்ணொடு **
    மறப்பு அற என் உள்ளே * மன்னினான் தன்னை *
    மறப்பனோ ? * இனி யான் என் மணியையே? (10)
  • TVM 1.10.11
    2900 ## மணியை * வானவர் கண்ணனை தன்னது ஓர்
    அணியை * தென் குருகூர்ச் சடகோபன் ** சொல்
    பணிசெய் ஆயிரத்துள் * இவை பத்துடன் *
    தணிவிலர் கற்பரேல் * கல்வி வாயுமே (11)