Chapter 8

Āsritha vishaya ārjavam (being sincere and honest towards those who approach Him) - (ஓடும் புள்)

ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்
Bhagavān always says what He thinks; always does what He says. Āzhvār celebrates Bhagavān’s auspicious trait, fairness and being just/unbiased, in these hymns.
பகவான் என்ன நினைக்கிறானோ அதையே சொல்லுவான்; சொன்னதையே செய்வான் என்று அவனது நேர்மையின்(செம்மைப் பண்பின்) சிறப்பை ஆழ்வார் ஈண்டுக் கூறுகிறார்.

முதல் பத்து -எட்டாந்திருவாய்மொழி – ‘ஓடும் புள்’பிரவேசம்-

கீழில் திருவாய்மொழியில் நிரதிசய போக்யன் என்றார்; அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் + Read more
Verses: 2868 to 2878
Grammar: Vaṉjiththuṟai** / வஞ்சித்துறை
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will become His matchless devotees
  • TVM 1.8.1
    2868 ஓடும் புள் * ஏறி சூடும் தண் துழாய் **
    நீடு நின்றவை * ஆடும் அம்மானே (1)
  • TVM 1.8.2
    2869 அம்மானாய்ப் பின்னும் * எம் மாண்பும் ஆனான் **
    வெம் மா வாய் கீண்ட * செம் மா கண்ணனே (2)
  • TVM 1.8.3
    2870 கண் ஆவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்கு **
    தண் ஆர் வேங்கட * விண்ணோர் வெற்பனே (3)
  • TVM 1.8.4
    2871 வெற்பை ஒன்று * எடுத்து ஒற்கம் இன்றியே **
    நிற்கும் அம்மான் சீர் * கற்பன் வைகலே (4)
  • TVM 1.8.5
    2872 வைகலும் வெண்ணெய் * கைகலந்து உண்டான் **
    பொய் கலவாது * என் மெய் கலந்தானே (5)
  • TVM 1.8.6
    2873 கலந்து என் ஆவி * நலம் கொள் நாதன் **
    புலன் கொள் மாணாய் * நிலம் கொண்டானே (6)
  • TVM 1.8.7
    2874 கொண்டான் ஏழ் விடை * உண்டான் ஏழ் வையம் **
    தண் தாமம் செய்து * என் எண் தான் ஆனானே (7)
  • TVM 1.8.8
    2875 ஆனான் ஆன் ஆயன் * மீனோடு ஏனமும் **
    தான் ஆனான் என்னில் * தான் ஆய சங்கே (8)
  • TVM 1.8.9
    2876 சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
    எங்கும் தானாய * நங்கள் நாதனே (9)
  • TVM 1.8.10
    2877 நாதன் ஞாலம் கொள் * பாதன் என் அம்மான் **
    ஓதம் போல் கிளர் * வேத நீரனே (10)
  • TVM 1.8.11
    2878 ## நீர்புரை வண்ணன் * சீர் சடகோபன் **
    நேர்தல் ஆயிரத்து * ஓர்தல் இவையே (11)