Chapter 5

SausIlya Adhisayam (the auspicious quality to mingle with others ignoring their lowliness) - (வள ஏழ்)

மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்
Āzhvār enumerates his sins and feels inadequate and lowly to praise/desire Him and so, decides to move away from Bhagavān. Bhagavān, unable to bear the separation from Āzhvār, portrays one of His auspicious qualities, sausIlyam, the ability to mingle with others ignoring His greatness and others’ lowliness. These divine hymns elaborate Bhagavān’s sausIlyam.
ஆழ்வார் தம் நிலைமைகளைக் கூறிப் பகவானை விட்டு அகன்றுவிட்டுப் பார்த்தார். அவரது பிரிவைப் பொறுக்கமாட்டாத பகவான் தன் சீல குணங்களைக் காட்டி ஆழ்வாரோடு கலக்கின்றான். இதனைக் கூறுகிறது இப்பகுதி.
Verses: 2835 to 2845
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: செருந்தி
Recital benefits: will not have any trouble in their lives
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 1.5.1

2835 வளவேழுலகின்முதலாய வானோரிறையை * அருவினையேன்
களவேழ்வெண்ணெய்தொடுவுண்ட கள்வா! என்பன்பின்னையும் *
தளவேழ்முறுவற்பின்னைக்காய் வல்லானாயர்தலைவனாய் *
இளவேறேழும்தழுவிய எந்தாய்! என்பன் நினைந்துநைந்தே. (2)
2835 ## வள ஏழ் உலகின் முதலாய * வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட * கள்வா! * என்பன் பின்னையும் **
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய் * வல் ஆன் ஆயர் தலைவனாய் *
இள ஏறு ஏழும் தழுவிய * எந்தாய் ! என்பன் நினைந்து நைந்தே (1)
2835 ## val̤a ezh ulakiṉ mutalāya * vāṉor iṟaiyai aruviṉaiyeṉ
kal̤avezh vĕṇṇĕy tŏṭu uṇṭa * kal̤vā! * ĕṉpaṉ piṉṉaiyum **
tal̤avu ezh muṟuval piṉṉaikku āy * val āṉ āyar talaivaṉāy *
il̤a eṟu ezhum tazhuviya * ĕntāy ! ĕṉpaṉ niṉaintu nainte (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

How dare I, a deep-rooted sinner, meditate On the Lord of all the worlds and SriVaikuntam and narrate The mystery of His stealing butter and taming bulls, As a cow-herd boy for the hand of Piṉṉai. the damsel Of bewitching smile, and (pretend to) thaw down in ecstasy?

Explanatory Notes

The Āzhvār, in his present mood of self-denouncing humility, feels that he has defiled and desecrated the Supreme Lord by word, when he recounted His mysterious deeds and addressed Him as ‘My Sire’, by thought, when he meditated on Him, and by deed, when he melted down, in ecstasy, as it were, a mockery of devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வள வளம்பொருந்திய; ஏழ் உலகின் முதலாய ஏழுலகத்திற்கும் முதலானவனும்; வானோர் நித்யஸூரிகளின் தலைவனுமான; இறையை எம்பெருமானை; அருவினையேன் போக்கமுடியாத பாபங்களையுடைய நான்; நினைந்து நைந்தே நினைத்து நினைத்து வருந்தி இளைத்து; களவேழ் பிறர் அறியும்படி களவு செய்து; வெண்ணெய் வெண்ணெயை; தொடு உண்ட ஒளிந்து நின்று உண்ட; கள்வா! என்பன் கள்வா! என்று சொல்லி அழைக்கின்றேன்; பின்னையும் மேலும்; தளவு ஏழ் முல்லை அரும்புபோலத் தோன்றுகிற; முறுவல் புன்னகையையுடைய; பின்னைக்கு ஆய் நப்பின்னைக்காக; வல் ஆன் ஆயர் சிறந்த ஆயர்குல; தலைவனாய் தலைவனாக வந்து; இள ஏறு ஏழும் இளமையான ஏழு எருதுகளையும்; தழுவிய எந்தாய்! அணைத்த என் ஸ்வாமியே!; என்பன் என்று கூறுவேன்
val̤am big/spacious (great); ĕzhulagin for the seven worlds; mudhalāya etc (and other areas of the material realm); vānŏr residents of paramapadham (spiritual realm)- nithyasūris and mukthāthmās; iṛaiyai that supreme lord who is the master of both spiritual and material realm; aruvinaiyĕn ī who have inexhaustible sins; ninaindhu having meditated upon (with my mind); naindhu (body becoming) depleted; kal̤avĕzh being interested in stealing; veṇṇey butter; thodu uṇda eating secretly; kal̤vā! ŏh thief!; enban will say (the words of mother yasŏdhā); pinnaiyum further; thal̤avu (mullai) jasmine; ĕzh looking like; muṛuval having gentle smile; pinnaikku for nappinnai (neel̤ā dhĕvi who is one of the primary consorts of srīman nārāyaṇan appeared as sathyā/nappinnai, as the daughter of kumba (nagnajith)); āy keeping you at her disposal; val famous; ānāyar of the gŏpas (cowherd persons); thalaivanāy coming as the leader; il̤am youthfully arrogant; ĕṛu bulls; ĕzhum seven of them; thazhuviya embraced and killed them (wanting to engage with nappinnai after winning over the bulls); endhāy ŏh my master!; enban ī will say (the words of those who are dear to you)

TVM 1.5.2

2836 நினைந்துநைந்துள்கரைந்துருகிஇமையோர்பலரும் முனிவரும் *
புனைந்தகண்ணிநீர்சாந்தம் புகையோடேந்திவணங்கினால் *
நினைந்தவெல்லாப்பொருள்கட்கும் வித்தாய்முதலிற் சிதையாமே *
மனஞ்செய்ஞானத்துன்பெருமை மாசூணாதோ? மாயோனே!
2836 நினைந்து நைந்து உள் கரைந்து உருகி * இமையோர் பலரும் முனிவரும் *
புனைந்த கண்ணி நீர் சாந்தம் * புகையோடு ஏந்தி வணங்கினால் **
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் * வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை * மாசூணாதோ? மாயோனே !(2)
2836 niṉaintu naintu ul̤ karaintu uruki * imaiyor palarum muṉivarum *
puṉainta kaṇṇi nīr cāntam * pukaiyoṭu enti vaṇaṅkiṉāl **
niṉainta ĕllāp pŏrul̤kaṭkum * vittuāy mutalil citaiyāme
maṉam cĕy ñāṉattu uṉ pĕrumai * mācūṇāto? māyoṉe !(2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, wonderful Lord, You are the supreme architect Of all things conceivable and yet immutable you are! Will it not from your glory great detract If (Brahmā and other) Devas, Sages and others (Your creatures all) meditate on you, thaw down and unto You offer Flowers, sandal paste, sacramental water and incense burn?

Explanatory Notes

(i) In this stanza, the Āzhvār realises that he is unfit even to say that he has defiled the Lord, What is his title, cither way, to dabble in God-head? It is something like a person, who, by reason of his birth, is precluded from learning the Vedas, saying that he has not learnt the Vedas, as if he has failed to learn a thing he is entitled to learn. This feeling of the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயோனே! மாயோனே!; இமையோர் பிரமன் முதலிய தேவர்களும்; முனிவரும பலரும் முனிவர்களுமான பலரும்; நினைந்து உனது குணங்களைச் சிந்தித்து; நைந்து அதனால் உடல் மெலிந்து; உள் கரைந்து உருகி மனம் கரைந்து நெகிழ்ந்து; புனைந்த கண்ணி தொடுக்கப்பட்ட மாலைகளையும்; நீர் சாந்தம் தீர்த்தத்தையும் சந்தனத்தையும்; புகையோடு ஏந்தி தூப தீபங்களையும் கையிலேந்தி; வணங்கினால் வணங்கினால்; நினைந்த எல்லா நினைத்த எல்லா; பொருள்கட்கும் பொருள்களுக்கும்; வித்து ஆய் உபாதான காரணமாய்; முதலில் சிதையாமே ஸ்வரூபவிகாரம் அடையாதபடி; மனம் செய் மனத்தினால் செய்யப்பட்ட; ஞானத்து ஸங்கல்பரூபமான ஞனாத்தையுடைய; உன் பெருமை உன் பெருமையானது; மாசூணாதோ? அழுக்கடையாதோ?
imaiyŏr dhĕvas starting with brahmā, who don-t blink their eyes (ever); munivarum those great sages who are constantly meditating on you- such as sanaka kumāras; palarum many more; ninaindhu thinking (about your auspicious qualities in their hearts/minds); naindhu body becoming weak/depleted due to such constant meditation; ul̤ karaindhu being heart-broken; urugi becoming melted; punaindha prepared/made (with such great love); kaṇṇi garland; nīr water for arghyam (washing hands), etc-; sāndham sandalwood paste; pugaiyŏdu with fragrant incense sticks; ĕndhi holding them (for your acceptance); vaṇangināl when they worship (you for having accepted their offerings); māyŏnĕ ŏh the one who is always present together with the magnificent and distinct realm!; ninaindha (out of mercy during creation) thought upon; ellāp porul̤gatkum for all entities; viththāy being the upādhāna kāraṇa (raw-material cause); mudhalil sidhaiyāmĕ without any change in your true nature; manam in heart/mind; sey performed; gyānaththu having knowledge in the form of sankalpam (vow); un your; perumai glories; māsūṇādhŏ? would they not be tarnished?

TVM 1.5.3

2837 மாயோனிகளாய்நடைகற்ற வானோர்பலரும்முனிவரும் *
நீயோனிகளைப்படையென்று நிறைநான்முகனைப் படைத்தவன் *
சேயோனெல்லாவறிவுக்கும் திசைகளெல்லாம்திருவடியால்
தாயோன் * எல்லாவெவ்வுயிர்க்கும்தாயோன் தானோருருவனே.
2837 மா யோனிகளாய் நடை கற்ற * வானோர் பலரும் முனிவரும் *
நீ யோனிகளைப் படை என்று * நிறை நான்முகனைப் படைத்தவன் **
சேயோன் எல்லா அறிவுக்கும் * திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் * எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் * தான் ஓர் உருவனே (3)
2837 mā yoṉikal̤āy naṭai kaṟṟa * vāṉor palarum muṉivarum *
nī yoṉikal̤aip paṭai ĕṉṟu * niṟai nāṉmukaṉaip paṭaittavaṉ **
ceyoṉ ĕllā aṟivukkum * ticaikal̤ ĕllām tiruvaṭiyāl
tāyoṉ * ĕllā ĕv uyirkkum tāyoṉ * tāṉ or uruvaṉe (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

He who created the profound Nāṉmukaṉ (Brahmā) and bade him create The exalted Vānōr (Devas), Sages and several others. He who is beyond comprehension, whose lovely feet Spanned the worlds, who unto all is like a Mother, Is our unique Lord (as approachable as He is great).

Explanatory Notes

Finding the Āzhvār in a state of unparalleled humility, shrinking back, the Lord draws his attention to the other mellowing aspect, namely, His loving approachability. Did He not span the entire universe with utter impartiality and set His tender feet over hill and dale, and one and all, without distinction of high and low? Contemplating this episode, the Āzhvār got into + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா பெருமையுள்ள; யோனிகளாய் பிறப்பையுடையவர்களாய்; நடை ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளை; கற்ற அறிந்திருக்கிறவர்களாய்; வானோர் பலரும் பலவகைப்பட்ட தேவர்களும்; முனிவரும் முனிவர்களுமாகிய; யோனிகளை உயிரினங்களை; நீ படை என்று நீ படை என்று; நிறை நான்முகனை ஞான சக்திகள் நிறைந்த பிரமனை; படைத்தவன் படைத்த எம்பெருமான்; எல்லா அறிவுக்கும் யாருடைய அறிவிற்கும்; சேயோன் எட்டாதவன்; திசைகள் எல்லாம் எல்லா உலகங்களையும்; திருவடியால் தாயோன் திருவடியினால் அளந்தவன்; எல்லா எவ் வுயிர்க்கும் எல்லா உயிரினங்களுக்கும்; தாயோன் தான் தாய் போன்றவனுமான பெருமானின்; ஓர் உருவனே மேன்மைக்கு எல்லை இல்லாதது போல் எளிமைக்கும் எல்லை இல்லை
māyŏnigal̤āy having distinguished birth; nadai suitable actions; kaṝa learned; palarum many different; vānŏr dhĕvathās (celestial beings); munivarum rishis (sages); yŏnigal̤ai living beings; nī padai enṛu saying -you create-; niṛai having completeness (in gyānām (knowledge) etc-, that is required for vyashti srushti (variegated creation)); nānmuganai chathur muka brahmā; padaiththavan one who created; ellā aṛivukkum the knowledge of all jīvāthmās starting with brahmā; sĕyŏn having greatness which is beyond the reach of; thisaigal̤ ellām all worlds indicated by dhik (directions); thiruvadiyāl with the tender divine feet; thāyŏn who touched; ellā evvuyirkkum all beings of different species; thāyŏn having motherly affection; thān him (bhagavān); ŏr uruvanĕ his qualities are so enjoyable!

TVM 1.5.4

2838 தானோருருவேதனிவித்தாய்த் தன்னில்மூவர்முதலாய *
வானோர்பலரும்முனிவரும் மற்றும்மற்றும்முற்றுமாய் *
தானோர்பெருநீர்தன்னுள்ளேதோற்றி அதனுள் கண்வளரும் *
வானோர்பெருமான்மாமாயன்வைகுந்தன் எம்பெருமானே.
2838 தான் ஓர் உருவே தனி வித்து ஆய்த் * தன்னில் மூவர் முதலாய *
வானோர் பலரும் முனிவரும் * மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி * அதனுள் கண்வளரும் *
வானோர் பெருமான் மா மாயன் * வைகுந்தன் எம் பெருமானே (4) **
2838 tāṉ or uruve taṉi vittu āyt * taṉṉil mūvar mutalāya *
vāṉor palarum muṉivarum * maṟṟum maṟṟum muṟṟum āy **
tāṉ or pĕrunīr taṉṉul̤l̤e toṟṟi * ataṉul̤ kaṇval̤arum *
vāṉor pĕrumāṉ mā māyaṉ * vaikuntaṉ ĕm pĕrumāṉe (4) **

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Supreme Lord beside whom there was none. Created the first three (Brahmā, Śiva and Indra), this, that and the other, (Devas, Sages, men, birds, beasts and all) with no external aid (i) whatever And reposed (in Yoga nidra) on the vast expanse of water, He had raised; the wondrous Lord, Chief of celestials, Vaikuntaṉ, is also my Master (ii).

Explanatory Notes

(i) The Lord is at once the Material (Upādāna) cause, Operative (nimitta) cause and Instrumental or efficient (Sahakāri) cause of Creation.

(ii) This is the key word for this stanza. The Master has come to reclaim His property (the Āzhvār) and He shall not be a party to its slipping through the fingers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தான் பிரம்ம ருத்ராதிகளொருவருமின்றி தான்; ஓர் உருவே ஒருவனேயாகி நின்ற தான் ஸஹகாரி காரணம்; தான் தனி தானே நிமித்த காரணம்; வித்து ஆய் வித்து ஆய் உபாதான காரணம்; தன்னில் இப்படி மூவகைக் காரணமான தன் ஸங்கல்பரூப ஞானத்திலே; மூவர் முதலாய பிரம்மன் சிவன் இந்திரனாகிய மூவர்; வானோர் முதலான தேவர்களும்; முனிவரும் முனிவர்களும்; பலரும் பல சேதனர்களும்; மற்றும் மனுஷ்யர்களும்; மற்றும் விலங்கினங்களும் பறவைகளும் ஆகிய; முற்றும் ஆய் எல்லாமும் தானேயாய்; தன்னுள்ளே தனக்குள்ளே; ஓர் பெரு நீர் ஒப்பற்ற ஒரு கடலை; தோற்றி அதனுள் தோற்றுவித்துக் கொண்டு அதனுள்; கண் வளரும் சயனித்திருக்கும்; வைகுந்தன் பரமபதநாதனும்; வானோர் பெருமான் நித்யஸூரிகளின் தலைவனும்; மா மாயன் மாமாயனுமானவன்; எம் பெருமானே எனக்கு ஸ்வாமியே
thān ḥe (who is indicated by the word -sath-); ŏr uruvĕ ḥaving single form/substratum (sahakāri nirapĕkshathvam- since he does not expect any assistance from any one- he is the ancillary cause); thani singular (nimiththānthara rahithan- one who does not depend on the desire of any one else- he is the efficient cause); viththu āy being the seed (upādhāna- seeking no other raw-material- since he is the material cause); thannil (thus being the all three types of causes) his own inherent nature having sankalpam (vow); mūvar the three (brahmā, rudhra, indhra); mudhalāya et al, starting with,; vānŏr dhĕvathās (celestial beings); munivarum rishis (sages); palarum many forms of jīvāthmās; maṝum other human forms; maṝum other animal forms and plant forms; muṝumāy all; thān ḥe (who has the sankalpam/vow); thannul̤l̤ĕ as part of his inherent nature (within himself); ŏr without second entity (since there is no other entity); peru nīr ṣingular causal ocean; thŏṝi created; adhan ul̤ (to create brahmā et al) inside that; kaṇ val̤arum lying down; vaikundhan resident of paramapadham; vānŏr perumān controller of nithyasūris; māmāyan (being without any expectation) with his amaśing qualities and actions, having unlimited simplicity; em perumānĕ my master-

TVM 1.5.5

2839 மானேய் நோக்கிமடவாளை மார்விற்கொண்டாய்! மாதவா! *
கூனேசிதையவுண்டைவில் நிறத்தில்தெறித்தாய்! கோவிந்தா! *
வானார்சோதிமணிவண்ணா! மதுசூதா! நீயருளாய் * உன்
தேனே மலரும்திருப்பாதம் சேருமாறுவினையேனே.
2839 மான் ஏய் நோக்கி மடவாளை * மார்பில் கொண்டாய் ! மாதவா ! *
கூனே சிதைய உண்டை வில் * நிறத்தில் தெறித்தாய் * கோவிந்தா ! **
வான் ஆர் சோதி மணிவண்ணா ! மதுசூதா ! நீ அருளாய் * உன்
தேனே மலரும் திருப்பாதம் * சேருமாறு வினையேனே (5)
2839 māṉ ey nokki maṭavāl̤ai * mārpil kŏṇṭāy ! mātavā ! *
kūṉe citaiya uṇṭai vil * niṟattil tĕṟittāy * kovintā ! **
vāṉ ār coti maṇivaṇṇā ! matucūtā !nī arul̤āy * uṉ
teṉe malarum tiruppātam * cerumāṟu viṉaiyeṉe (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

On your winsome chest, you hold doe-eyed Mother, Oh, Mādhava, With perfect ease, you remove the hunch (i) off a damsel, oh, Gōvindā, Your sapphire hue radiates the entire spiritual world, oh, Matusūthā (ii) Your grace (iii), this sinner invokes to reach your lotus feet, shedding honey.

Explanatory Notes

(i) The underlying episode could be either the one stated here, pertaining to Kṛṣṇāvatāra or yet another pertaining to Rāmāvatāra. The former is: As Kṛṣṇa was wending His way through the main road of Mathura along with Balarāma, Tṛvakrā, the hump-backed young woman with handsome features, was passing along with a vessel containing sweet-smelling sandal paste, specially + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் ஏய் நோக்கி மானை ஒத்த பார்வையையுடய; மடவாளை திருமகளை; மார்வில் கொண்டாய் மார்பில் உடையவனே!; மாதவா! கோவிந்தா! மாதவனே! கோவிந்தனே!; கூனே சிதைய கூனியின் கூன் மட்டும் சிதையும்படி; உண்டைவில் உண்டைவில்லை; நிறத்தில் சிரமமின்றி பிரயோகித்து; தெறித்தாய் நிமிர்த்தினவனே!; வான் ஓர் வானுலகத்தை நிறைக்கும்; சோதி ஒளியையுடைய; மணிவண்ணா! மாணிக்கம் போன்ற நிறமுடையவனே!; மதுசூதா! மது என்னும் அசுரனைக் அழித்தவனே!; நீ உன் தேனே மலரும் நீ உன்னுடைய தேனாகவே மலரும்; திருப்பாதம் திருவடித் தாமரைகளை; வினையேனே பாபியான நான்; சேருமாறு வந்து பற்றி கைங்கர்யம் பண்ணும்படி; அருளாய் அருள் புரிய வேண்டும்
mānĕy similar to deer; nŏkkin having eyes; madavāl̤ai the greatest lady who is an embodiment of humility; mārbil in your chest; koṇdāy you who are keeping/having; mādhava and thus being called as mādhava; kūnĕ hunch-back; sidhaiya breaking; uṇdai vil niṛaththil in the form of a bow (which is used to shoot clay-balls); theṛiththāy straightened it (effortlessly); gŏvindhā one who protected the ignorant cows (with great joy); vān the land of the wise persons; ār filled; sŏdhi having radiance; maṇivaṇṇā having form of carbuncle; madhusūdhā the destroyer of madhu (who is an enemy of devotees); you; un your; thĕnĕ honey; malarum blossoming; thiruppādham divine feet; vinaiyĕn ī who have sins (which make me wait even after your accepting me); sĕrumāṛu to approach/surrender; arul̤āy bless me

TVM 1.5.6

2840 வினையேன்வினைதீர்மருந்தானாய்! விண்ணோர்தலைவா! கேசவா! *
மனைசேராயர்குலமுதலே! மாமாயனே! மாதவா! *
சினையேய்தழையமராமரங்கள் ஏழுமெய்தாய்! சிரீதரா! *
இனையாய்! இனையபெயரினாய்! என்றுநைவனடியேனே.
2840 வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் ! * விண்ணோர் தலைவா ! கேசவா ! *
மனை சேர் ஆயர் குலமுதலே ! * மா மாயனே ! மாதவா ! **
சினை ஏய் தழைய மராமரங்கள் ! * ஏழும் எய்தாய் சிரீதரா! *
இனையாய் ! இனைய பெயரினாய் ! * என்று நைவன் அடியேனே (6)
2840 viṉaiyeṉ viṉai tīr maruntu āṉāy ! * viṇṇor talaivā ! kecavā ! *
maṉai cer āyar kulamutale ! * mā māyaṉe ! mātavā ! **
ciṉai ey tazhaiya marāmaraṅkal̤ ! * ezhum ĕytāy cirītarā! *
iṉaiyāy ! iṉaiya pĕyariṉāy ! * ĕṉṟu naivaṉ aṭiyeṉe (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Kēshava, reigning supreme in the high SriVaikuntam Thou art the antidote for this sinner’s (dire) sins. Oh, Mādhavā, of mysterious deeds! Chief of cowherds, The seven trees with branches many! oh, Shirīdharā, Thine arrow pierced. Dissolve do I, recounting such other deeds of yours And the relative names You are pleased to bear.

Explanatory Notes

This is a song sung in the same mood as the immediately preceding song.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வினையேன் பாபியான என்னுடைய; வினை தீர் பாபத்தைப் போக்கும்; மருந்து ஆனாய்! மருந்தாய் இருப்பவனே!; விண்ணோர் தலைவா! நித்யஸூரிகளின் தலைவனே!; கேசவா! கேசவனே!; மனை சேர் குடிசைகள் சேர்ந்த; ஆயர் குல முதலே! ஆயர் குலத் தலைவனே!; மா மாயனே! மாதவா! மா மாயனே! மாதவனே!; சினை ஏய் கிளைகளோடு சேர்ந்து; தழைய தழைகள் பொருந்திய; மராமரங்கள் மராமரங்கள்; ஏழும் ஏழையும் ஒரே அம்பினால்; எய்தாய்! துளைத்தவனே!; சிரீதரா! சிரீதரனே!; இனையாய்! இப்படிப்பட்ட ஸ்வபாவமுடையவனே!; இனைய இப்படிப்பட்ட; பெயரினாய்! பெயர்களையுடையவனே!; என்று நைவன் என்று உருகிப்போகும்; அடியேனே அடியேனுக்கு அருள் புரிவாய்
vinaiyĕn most qualified to be called as -most sinful-; vinai for the sins (which make me shy away from emperumān though having great love towards him, seeing my lowly nature); thīr that will rid; marundhu ānāy being the medicine (that is in the form of simplicity/auspicious qualities); viṇṇŏr sūris- the residents of paramapadham (where there are no such obstacles to enjoy you); thalaivā ŏh controller/leader!; kĕsavā ŏh one who is having the name kĕsava (which means- not only is he the leader of the residents of parampadham, he is also the leader of brahmā, rudhra et al who seek him for worldly benefits- for he is the one who sustains them); manai sĕr land which is attached to; āyar cowherd; kula for the clan; mudhalĕ ŏh the primary one!; māmāyanĕ having amaśing activities (stealing butter etc); mādhavā ḥaving the name mādhava! (as said in popular pramāṇam -ĕsha nārāyaṇa ṣrīmān- (nārāyaṇan who is the husband of srī mahālakshmi) which is the cause for the amaśing activities); sinai with branches; ĕy joined; thazhaiya having well-sprouted leaves as well; marāmarangal̤ ĕzhum 7 peepal trees; eydhāy ŏh one who shot; siridharā ŏh one who is having the name ṣrīdhara (after attaining vīraṣri #bravery due to shooting down those trees); inaiyāy ŏh one having such qualities!; inaiya peyarināy enṛu ŏh one who is having such auspicious names!; adiyĕn ī who have (unconditional/eternal) relationship (with you); naivan becoming emaciated

TVM 1.5.7

2841 அடியேன்சிறியஞானத்தன்அறிதலார்க்குமரியானை *
கடிசேர்தண்ணந்துழாய்க் கண்ணிபுனைந்தான்தன்னைக் கண்ணனை *
செடியாராக்கையடியாரைச் சேர்தல்தீர்க்கும்திருமாலை *
அடியேன்காண்பானலற்றுவன்இதனில்மிக்கோரயர்வுண்டே?
2841 அடியேன் சிறிய ஞானத்தன் * அறிதல் ஆர்க்கும் அரியானை *
கடி சேர் தண் அம் துழாய்க் * கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை **
செடி ஆர் ஆக்கை அடியாரைச் * சேர்தல் தீர்க்கும் திருமாலை *
அடியேன் காண்பான் அலற்றுவன் * இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? (7)
2841 aṭiyeṉ ciṟiya ñāṉattaṉ * aṟital ārkkum ariyāṉai *
kaṭi cer taṇ am tuzhāyk * kaṇṇi puṉaintāṉ taṉṉaik kaṇṇaṉai **
cĕṭi ār ākkai aṭiyāraic * certal tīrkkum tirumālai *
aṭiyeṉ kāṇpāṉ alaṟṟuvaṉ * itaṉiṉ mikku or ayarvu uṇṭe? (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

This humble self of meagre intellect pines to meet Kaṇṇaṉ, sporting tulasī garland, cool and lovely, of fragrance sweet. Beyond the Comprehension of one and all (however great), ‘Tirumāl’, who, unto those that seek Him, does cut out Their bondage dense; is there anything more indiscreet?

Explanatory Notes

The preceding song ended on a despondent note, showing the Āzhvār sinking down, due to the poignance of separation from the Lord. The merciful Lord would not run the risk of testing him anymore, and was about to oblige him with His presence. Sensing this, however, the Āzhvār was once more weighed down by inferiority complex, egging him on to retreat again. The Āzhvār has + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறிய ஞானத்தன் அடியேன் அற்ப ஞானத்தையுடைய நான் (நைச்யாநுசந்தானம்); அரியானை ஞானிகளாலும் அறிய முடியாதவனாய்; கடி சேர் தண் அம் மணம் மிக்க குளிர்ந்த அழகிய; துழாய்க் கண்ணி துளசிமாலை; புனைந்தான் தன்னை அணிந்த; கண்ணனை கண்ணனாய் வந்து அவதரித்து; அடியாரை அடியவர்களுக்கு; செடியார் சம்சாரம் என்னும் நோய் பொருந்திய; ஆக்கை சரீர சம்பந்தத்தை நீக்கி; சேர்தல் தீர்க்கும் தன்னிடம் அணுகும்படி ரக்ஷிக்கும்; திருமாலை திருமாலை (தாயாருடன் கூடி இருக்கும் மால்); அடியேன் காண்பான் அடியேன் காணும் பொருட்டு; அலற்றுவன் கூவுகின்றேனே; இதனில் மிக்கு ஓர் இதனிலும் மேம்பட்ட ஒரு; அயர்வு உண்டே? அவிவேகமுண்டோ? (பகுத்தறிவு இன்மை / முட்டாள்தனம்)
siṛiya gyānaththan having a little knowledge; adiyĕn me; ārkkum aṛidhal ariyānai emperumān who is difficult to know even for the wisest; kadi fragrance; sĕr abundant; thaṇ cool; am thuzhāyk kaṇṇi punaindhān thannai the one who is having the attribute of wearing beautiful thul̤asi garland; kaṇṇanai Being born as krishṇa (who is shining with greatness, being most enjoyable); sediyār filled with sins (in this samsāram which is like a dense forest); ākkai relationship with the body; adiyārai for his inseparable devotees; sĕrdhal thīrkkum stopping them from engulfing and protecting; thirumālai srīya:pathi (divine consort of ṣrī mahālakshmi); adiyĕn being his servitor; kāṇbān to see him; alaṝuvan long for it (so it will cause disrepute for him); idhanil than this; mikku greater; ŏr ayarvu foolishness; uṇdĕ is it there?

TVM 1.5.8

2842 உண்டாயுலகேழ்முன்னமேஉமிழ்ந்துமாயையாற்புக்கு *
உண்டாய்வெண்ணெய்சிறுமனிசர் உவலையாக்கைநிலையெய்தி *
மண்தான்சோர்ந்ததுண்டேலும் மனிசர்க்காகும்பீர் * சிறிதும்
அண்டாவண்ணம்மண்கரைய நெய்யூண்மருந்தோ? மாயோனே!
2842 உண்டாய் உலகு ஏழ் முன்னமே * உமிழ்ந்து மாயையால் புக்கு *
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் * உவலை ஆக்கை நிலை எய்தி **
மண் தான் சோர்ந்தது உண்டேலும் * மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் *
அண்டாவண்ணம் மண் கரைய * நெய் ஊண் மருந்தோ? மாயோனே (8)
2842 uṇṭāy ulaku ezh muṉṉame * umizhntu māyaiyāl pukku *
uṇṭāy vĕṇṇĕy ciṟu maṉicar * uvalai ākkai nilai ĕyti **
maṇ tāṉ corntatu uṇṭelum * maṉicarkku ākum pīr ciṟitum *
aṇṭāvaṇṇam maṇ karaiya * nĕy ūṇ marunto? māyoṉe (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Wondrous Lord, Once you ate up all the worlds seven And then spat them out, You then came at your volition Into this world, assuming the frail form of a human And ate all the butter (in Gokul) leaving no remnant; Could it be that you thus sought to dissolve the remnants Of mud still sticking inside and keep off indigestion. The fell sickness that befalls humans? (I think it wasn’t that).

Explanatory Notes

We are indeed under a deep debt of gratitude to those intellectual stalwarts, our great Pūrvācāryas, which we can hardly repay. Look at how they have delved in and unfolded the genesis of this song, from the way it has been worded. The Lord was bent upon having a rapport with the Āzhvār and hit upon a plan which would work well and bring round the Āzhvār, shaking off his + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயோனே! ஆச்சரியபூதனே!; உலகு ஏழ் ஏழுலகங்களையும்; முன்னமே உண்டாய் முற்காலத்தில் உண்டாய்; உமிழ்ந்து அவற்றை வெளிப்படுத்தினாய்; சிறு மனிசர் சிறிய மனிதருடைய; உவலை ஆக்கை அருவருப்பான உடல் நிலையை; நிலை எய்தி அடைந்து; மாயையால் மாயையினால் இவ்வுலகில்; புக்கு வந்து அவதரித்து; வெண்ணெய் உண்டாய் வெண்ணெய் உண்டாய்; மண் தான் சோர்ந்தது மண் மிகுதியாக சேர்ந்து; உண்டேலும் இருப்பினும்; மனிசர்க்கு மனிதர்களுக்கு; ஆகும் பீர் உண்டாகக்கூடிய நோய் உனக்கு; சிறிதும் அண்டா வண்ணம் சிறிதும் வராதபடி; மண் கரைய மண் கரைய; நெய் ஊண் மருந்தோ? நெய் மருந்தாகுமோ?
māyŏnĕ ŏh amaśing person (who does not get impacted negatively even while mixing with everyone in all aspects); munnamĕ once upon a time; ulagĕzh the seven worlds (which is a sample of all creation); uṇdāy you consumed; umizhndhu (without any residue) spat them out; siṛu manisar insignificant humans; uvalai to be avoided/abandoned; ākkai body; nilai position/situation; eydhi descended/took; māyaiyāl in cunning ways; pukku entered; veṇṇey butter; uṇdāy ate; maṇdhān some residue from the earth that was consumed before; sŏrndhu adhu uṇdĕlum remaining that is present; manisarkku for the humans; āgum that occur; bīr indigestion; siṛidhum even a little; aṇdā vaṇṇam kept away; maṇ that soil; karaiya to dissolve; ney ūṇ (in a different incarnation) eating ghee; marundhŏ is that a medicine? no

TVM 1.5.9

2843 மாயோம்தீயவலவலைப் பெருமாவஞ்சப்பேய்வீய *
தூயகுழவியாய்விடப்பாலமுதா அமுதுசெய்திட்ட
மாயன் * வானோர்தனித்தலைவன்மலராள்மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் * தம்மானென்னம்மான் அம்மாமூர்த்தியைச்சார்ந்தே.
2843 மாயோம் தீய அலவலைப் * பெரு மா வஞ்சப் பேய் வீயத் *
தூய குழவியாய் விடப் பால் அமுதா * அமுது செய்திட்ட
மாயன் ** வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் * எவ் உயிர்க்கும்
தாயோன் * தம்மான் என் அம்மான் * அம்மா மூர்த்தியைச் சார்ந்தே (9)
2843 māyom tīya alavalaip * pĕru mā vañcap pey vīyat *
tūya kuzhaviyāy viṭap pāl amutā * amutu cĕytiṭṭa
māyaṉ ** vāṉor taṉit talaivaṉ malarāl̤ maintaṉ * ĕv uyirkkum
tāyoṉ * tammāṉ ĕṉ ammāṉ * ammā mūrttiyaic cārnte (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The unique Lord of celestials, Malarāḷ’s (the lotus-born Lakṣmī’s) Consort, A veritable Mother (unto all) who His own Sovereign is, As well as mine, the typical (but wondrous) young infant that killed outright The highly treacherous and loquacious demoness Whose poisonous milk He sucked as if it were nectar (amṛt [amṛta]) Close unto the exalted one am I; may we never again be apart.

Explanatory Notes

Here is the continuation of the dialogue referred to in the preceding stanza. The Āzhvār observed that unlike the palatable butter, mixing with him, a terrible sinner, will be bitter like poison. But the Lord had a ready reply for this also. He pointed out that even the milk of the poisonous breast of Pūtaṉā, the evil-minded imposter of a mother, was sucked by Him, with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீய அலவலை கொடியவளாய் வீண் பேச்சு பேசுபவளாய்; பெரு மா வஞ்ச மிகப்பெரிய வஞ்சனை எண்ணத்துடன்; பேய் வீய வந்த பூதனை மாள; தூய குழவியாய் ஒன்றுமறியாத இளம் பிள்ளையாய்; விடப் பால் அமுதா விஷப்பாலை அமுதமென; அமுது செய்திட்ட பருகிய; மாயன் மாயனான கண்ணன்; வானோர் தனி நித்ய ஸூரிகளின் ஒப்பற்ற; தலைவன் தலைவன்; மலராள் மைந்தன் திருமகள் நாதன்; எவ் உயிர்க்கும் எல்லா உயிர்களுக்கும்; தாயோன் தாயைப் போன்றவன்; தம்மான் தனக்குத் தானே ஈச்வரனானவன்; என் அம்மான் எனக்கு ஸ்வாமி; அம்மா மூர்த்தியை அப்படிப்பட்ட பெருமானை; சார்ந்தே அடைந்துவிட்டதால்; மாயோம் இனி பிரியமாட்டோம்
thīya having ill-intentions; alavalai one who is a constant chatter; peru beyond measurement; big; vanjam deceitful; pĕy devil; vīya to finish her; thūya unblemished; kuzhviyāy being a child; vidappāl poisonous milk; amudhā accepting it as nectar; amudhu seydhitta ate; māyan one with amaśing nature; vānŏr for the nithyasūris; thanith thalaivan singular controller; malarāl̤ to ṣrī mahālakshmi who resides in the lotus flower; maindhan one who has most enjoyable youth; evvuyirkkum for all jīvāthmās; thāyŏn having motherly affection; thammān being the controller of himself; en ammān my master who is not letting me leave him; ammā mūrththiyai one who has that distinct and beautiful form; sārnthu approached; māyŏm cannot finish both emperumān and myself- īf not separated, both perumāl̤ andāzhvār can sustain themselves-

TVM 1.5.10

2844 சார்ந்தவிருவல்வினைகளும்சரித்து மாயப்பற்றறுத்து *
தீர்ந்துதன்பால்மனம்வைக்கத்திருத்தி வீடுதிருத்துவான் *
ஆர்ந்தஞானச்சுடராகி அகலம்கீழ்மேலளவிறந்து *
நேர்ந்தவுருவாயருவாகும் இவற்றினுயிராம் நெடுமாலே.
2844 சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து * மாயப் பற்று அறுத்து *
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு * திருத்துவான் **
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி * அகலம் கீழ் மேல் அளவு இறந்து *
நேர்ந்த உருவாய் அருவாகும் * இவற்றின் உயிராம் நெடுமாலே !(10)
2844 cārnta iru val viṉaikal̤um carittu * māyap paṟṟu aṟuttu *
tīrntu taṉpāl maṉam vaikkat tirutti vīṭu * tiruttuvāṉ **
ārnta ñāṉac cuṭar āki * akalam kīzh mel al̤avu iṟantu *
nernta uruvāy aruvākum * ivaṟṟiṉ uyirām nĕṭumāle !(10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Of resplendent knowledge, full and flooding, All things, with or without form, He is pervading Up and down and all around; Nedumāl (of love supreme) Rid me of my age-long sins of commission and omission and in Him Rooted my mind firmly, freed from ignorance and attachments And is now intent upon giving spiritual world a face-lift(to put me in).

Explanatory Notes

Immensely pleased with the assurance given by the Āzhvār in the previous song not to get parted from Him any more, the Lord now contemplates putting the Āzhvār in SriVaikuntam, so as to eliminate the possible risk of further separation from Him. And for this purpose, the Lord, in His unbounded love for the Āzhvār, wants to renovate even that Eternal Land, ever fresh and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆர்ந்த ஞான நிறைந்த அறிவின்; சுடர் ஆகி ஒளியாகி; அகலம் கீழ் மேல் பத்து திசைகளின்; அளவு இறந்து அளவைக்கடந்து; நேர்ந்த நுட்பமான மூலப் பிரக்ருதியும்; உருவாய் உயிர்களுமாகிய உருவம்; அருவாகும் அருவம் ஆகிய; இவற்றின் உயிராம் இவற்றிற்கு அந்தராத்மாவாய்; நெடுமாலே! இருக்கும் நெடுமாலே!; சார்ந்த இரு பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கும் இருவகை; வல் வினைகளும் பாப புண்ணியங்களையும்; சரித்து தொலைத்து; மாயப் பற்று அஜ்ஞாநம் ருசி வாசனை இவைகளையும்; அறுத்து போக்கி; தீர்ந்து தன்பால் தன்னிடத்திலே உறுதி கொண்டு; மனம் வைக்க மனதை தன்பால் பொருந்த வைக்கும்படி; திருத்தி நன்னெறியில் என்னைத் செலுத்தி; வீடு மேலும் மோக்ஷமாகிற வீட்டையும்; திருத்துவான் அலங்கரிக்கத்தொடங்கினான்
ārndha complete; gyānach chudarāgi (one who is) having naturally shining knowledge; agalam around; kīzh below; mĕl above (all ten directions); al̤avu iṛandhu being naturally unlimited; nĕrndha very subtle; uruvāy aruvāgum chith and achith; ivaṝin for these; uyirām being the antharāthmā (in-dwelling super soul); nedumāl one who has boundless vāthsalyam (motherly affection) towards me; sārndha being together (with me); iru two types (virtues and vices); val strong- irremovable; vinaigal̤um karmas; sariththu pushed over (completely without any remainder); māyam done out of ignorance; paṝu attachment with material pleasures; aṛuththu cut off; thīrndhu having full faith (existing for his pleasure only); thanpāl towards him; manam mind/heart; vaikka to be situated; thiruththi reformed (me); vīdu in the mŏkshasthalam (paramapadham- the residence of freed persons); thiruththuvān will freshen it up

TVM 1.5.11

2845 மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றென்று *
மாலேயேறிமாலருளால் மன்னுகுருகூர்ச்சடகோபன் *
பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரத்தின்
பாலேபட்ட * இவைபத்தும்வல்லார்க்கு இல்லைபரிவதே. (2)
2845 ## மாலே ! மாயப் பெருமானே ! * மா மாயனே ! என்று என்று *
மாலே ஏறி மால் அருளால் * மன்னு குருகூர்ச் சடகோபன் **
பால் ஏய் தமிழர் இசைகாரர் * பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே * பட்ட இவை பத்தும் * வல்லார்க்கு இல்லை பரிவதே (11)
2845 ## māle ! māyap pĕrumāṉe ! * mā māyaṉe ! ĕṉṟu ĕṉṟu *
māle eṟi māl arul̤āl * maṉṉu kurukūrc caṭakopaṉ **
pāl ey tamizhar icaikārar * pattar paravum āyirattiṉ
pāle * paṭṭa ivai pattum * vallārkku illai parivate (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those conversant with these songs ten, Out of the thousand sung by Kurukūr Caṭakōpaṉ, Firm recipient of the Lord’s grace, in ecstatic adoration Of His wondrous deeds and glorious traits, evoking the admiration Alike of the ‘Sweet-as-milk’ Tamil-Scholars, devotees and musicians, Shall for ever be free from affliction.

Explanatory Notes

(i) The accent here is on the redemptive grace of the Lord, Who, by His condescending love, reclaimed the Āzhvār, thwarting his attempt to run away from Him in a frightfully unsettled state of mind.

(ii) These songs are of matchless grandeur and inestimable value for those who want to revel in singing sweet songs of a high order. And again, for those who want to delve into their meanings and eke out their time usefully, these songs afford unlimited scope.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலே! திருமாலே!; மாயப் பெருமானே! மாயப் பெருமானே!; மா மாயனே! மா மாயனே!; என்று என்று என்று இங்ஙனம் பல திருநாமங்களைச் சொல்லி; மாலே ஏறி பித்துப் பிடித்தவன் போல் பிரமித்து; மால் அருளால் இறைவனின் அருளால்; மன்னு குருகூர் நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; பால் ஏய் தமிழர் பால் போன்ற இனிய இயல் தமிழ்வாணரும்; இசைகாரர் இசைத் தமிழ்வாணருமான இவர் அருளிச்செய்த; பத்தர் பரவும் பொருளறிந்த பக்தர்களும் கொண்டாடும்; ஆயிரத்தின் பாலே ஆயிரம் பாசுரங்களுள்; பட்ட கடலில் முத்து உண்டாவது போல் உண்டான; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்க்கு கற்று ஓத வல்லவர்களுக்கு; இல்லை பரிவதே நான் தாழ்ந்தவன் என்னும் துன்பம் நேராது
mālĕ ŏh the one who has natural greatness due to being superior to everyone!; māyap perumānĕ! ŏh the one who has unlimited amaśing qualities (which are capable of placing an eternally materialistic person amidst the eternally liberated souls)!; mā māyanĕ! ŏh the one who has unlimited wealth, forms and activities!; enṛu enṛu thus meditating (the greatness of being the master, being the means and being the goal); mālĕ ĕṛi being bewildered (that we will leave meditating upon one-s own lowly nature); māl of the sarvĕsvaran who has unsurpassed motherly affection; arul̤āl out of infinite mercy; mannu approaching after being convinced; kurukūrch chatakŏpan nammāzhvār-s; pālĕy sweet like milk; thamizhar ones who are learned in thamizh prose; isaikārar ones who are learned in music and can sing; paththar ones who are devotees who understand and relish the meanings; paravum celebrating; āyiraththin pālĕ in these 1000 pāsurams of thiruvāimozhi; patta in (like -kadalilĕ muththup pattadhu- [pearls are in the ocean]); ivai paththum this decad which explains emperumān-s auspicious qualities; vallārkku those can recite it with the appropriate mood; parivathu sorrow (out of separation due to considering oneself as lowly and shying away from perumāl̤); illai not there