Chapter 6

Svārādhathai - The One who is easy to worship - (பரிவது இல்)

ஆராதனைக்கு எளியவன்
A devout offering of a leaf (pathram), flower (pushpam), fruit (palam) or water (thOyam) or anything offered with bhakthi will be whole-heartedly accepted by Bhagavān. Thirumāl is easy to worship, portrayed by his auspicious trait, svārādhathai.
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பக்தியோடு எதைக்கொடுத்தாலும், அதைப்பெற்று மனநிறைவு கொள்பவன் பகவான். திருமால் பூசைக்கு எளியவன்.

முதல் பத்து -ஆறாம்-திருவாய்மொழி-பரிவதில் ஈசனை’-பிரவேசம்-

முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை + Read more
Verses: 2846 to 2856
Grammar: Vaṉjiviruththam / வஞ்சிவிருத்தம்
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will not be born again on this earth
  • TVM 1.6.1
    2846 ## பரிவது இல் ஈசனைப் பாடி * விரிவது மேவல் உறுவீர் **
    பிரிவகை இன்றி நல் நீர் தூய் * புரிவதுவும் புகை பூவே (1)
  • TVM 1.6.2
    2847 மதுவார் தண் அம் துழாயான் * முது வேத முதல்வனுக்கு **
    எது ஏது ? என் பணி ? என்னாது * அதுவே ஆள் செய்யும் ஈடே (2)
  • TVM 1.6.3
    2848 ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே **
    பாடும் என் நா அவன் பாடல் * ஆடும் என் அங்கம் அணங்கே (3)
  • TVM 1.6.4
    2849 அணங்கு என ஆடும் என் அங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் **
    பிணங்கி அமரர் பிதற்றும் * குணங்கெழு கொள்கையினானே (4)
  • TVM 1.6.5
    2850 கொள்கை கொளாமை * இலாதான் எள்கல் இராகம் இலாதான் **
    விள்கை விள்ளாமை விரும்பி * உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)
  • TVM 1.6.6
    2851 அமுதம் அமரர்கட்கு ஈந்த * நிமிர் சுடர் ஆழி நெடுமால் **
    அமுதிலும் ஆற்ற இனியன் * நிமிர் திரை நீள் கடலானே (6)
  • TVM 1.6.7
    2852 நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் * தோள்கள் தலை துணிசெய்தான் **
    தாள்கள் தலையில் வணங்கி * நாள்கள் தலைக்கழிமினே (7)
  • TVM 1.6.8
    2853 கழிமின் தொண்டீர்கள் ! கழித்து * தொழுமின் அவனைத் தொழுதால் **
    வழி நின்ற வல்வினை மாள்வித்து * அழிவின்றி ஆக்கம் தருமே (8)
  • TVM 1.6.9
    2854 தருமம் அரும் பயன் ஆய * திருமகளார் தனிக் கேள்வன் **
    பெருமை உடைய பிரானார் * இருமை வினை கடிவாரே (9)
  • TVM 1.6.10
    2855 கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் **
    கொடியா அடு புள் உயர்த்த * வடிவு ஆர் மாதவனாரே (10)
  • TVM 1.6.11
    2856 ## மாதவன்பால் சடகோபன் * தீது அவம் இன்றி உரைத்த **
    ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து * ஓத வல்லார் பிறவாரே (11)