Chapter 5

SausIlya Adhisayam (the auspicious quality to mingle with others ignoring their lowliness) - (வள ஏழ்)

மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்
Āzhvār enumerates his sins and feels inadequate and lowly to praise/desire Him and so, decides to move away from Bhagavān. Bhagavān, unable to bear the separation from Āzhvār, portrays one of His auspicious qualities, sausIlyam, the ability to mingle with others ignoring His greatness and others’ lowliness. These divine hymns elaborate Bhagavān’s sausIlyam.
ஆழ்வார் தம் நிலைமைகளைக் கூறிப் பகவானை விட்டு அகன்றுவிட்டுப் பார்த்தார். அவரது பிரிவைப் பொறுக்கமாட்டாத பகவான் தன் சீல குணங்களைக் காட்டி ஆழ்வாரோடு கலக்கின்றான். இதனைக் கூறுகிறது இப்பகுதி.

முதல் பத்து -ஐந்தாம் -திருவாய்மொழி–வளவேழ் உலகின் – பிரவேசம்-

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் + Read more
Verses: 2835 to 2845
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: செருந்தி
Recital benefits: will not have any trouble in their lives
  • TVM 1.5.1
    2835 ## வள ஏழ் உலகின் முதலாய * வானோர் இறையை அருவினையேன்
    களவேழ் வெண்ணெய் தொடு உண்ட * கள்வா! * என்பன் பின்னையும் **
    தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய் * வல் ஆன் ஆயர் தலைவனாய் *
    இள ஏறு ஏழும் தழுவிய * எந்தாய் ! என்பன் நினைந்து நைந்தே (1)
  • TVM 1.5.2
    2836 நினைந்து நைந்து உள் கரைந்து உருகி * இமையோர் பலரும் முனிவரும் *
    புனைந்த கண்ணி நீர் சாந்தம் * புகையோடு ஏந்தி வணங்கினால் **
    நினைந்த எல்லாப் பொருள்கட்கும் * வித்துஆய் முதலில் சிதையாமே
    மனம் செய் ஞானத்து உன் பெருமை * மாசூணாதோ? மாயோனே !(2)
  • TVM 1.5.3
    2837 மா யோனிகளாய் நடை கற்ற * வானோர் பலரும் முனிவரும் *
    நீ யோனிகளைப் படை என்று * நிறை நான்முகனைப் படைத்தவன் **
    சேயோன் எல்லா அறிவுக்கும் * திசைகள் எல்லாம் திருவடியால்
    தாயோன் * எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் * தான் ஓர் உருவனே (3)
  • TVM 1.5.4
    2838 தான் ஓர் உருவே தனி வித்து ஆய்த் * தன்னில் மூவர் முதலாய *
    வானோர் பலரும் முனிவரும் * மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
    தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி * அதனுள் கண்வளரும் *
    வானோர் பெருமான் மா மாயன் * வைகுந்தன் எம் பெருமானே (4) **
  • TVM 1.5.5
    2839 மான் ஏய் நோக்கி மடவாளை * மார்பில் கொண்டாய் ! மாதவா ! *
    கூனே சிதைய உண்டை வில் * நிறத்தில் தெறித்தாய் * கோவிந்தா ! **
    வான் ஆர் சோதி மணிவண்ணா ! மதுசூதா ! நீ அருளாய் * உன்
    தேனே மலரும் திருப்பாதம் * சேருமாறு வினையேனே (5)
  • TVM 1.5.6
    2840 வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் ! * விண்ணோர் தலைவா ! கேசவா ! *
    மனை சேர் ஆயர் குலமுதலே ! * மா மாயனே ! மாதவா ! **
    சினை ஏய் தழைய மராமரங்கள் ! * ஏழும் எய்தாய் சிரீதரா! *
    இனையாய் ! இனைய பெயரினாய் ! * என்று நைவன் அடியேனே (6)
  • TVM 1.5.7
    2841 அடியேன் சிறிய ஞானத்தன் * அறிதல் ஆர்க்கும் அரியானை *
    கடி சேர் தண் அம் துழாய்க் * கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை **
    செடி ஆர் ஆக்கை அடியாரைச் * சேர்தல் தீர்க்கும் திருமாலை *
    அடியேன் காண்பான் அலற்றுவன் * இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? (7)
  • TVM 1.5.8
    2842 உண்டாய் உலகு ஏழ் முன்னமே * உமிழ்ந்து மாயையால் புக்கு *
    உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் * உவலை ஆக்கை நிலை எய்தி **
    மண் தான் சோர்ந்தது உண்டேலும் * மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் *
    அண்டாவண்ணம் மண் கரைய * நெய் ஊண் மருந்தோ? மாயோனே (8)
  • TVM 1.5.9
    2843 மாயோம் தீய அலவலைப் * பெரு மா வஞ்சப் பேய் வீயத் *
    தூய குழவியாய் விடப் பால் அமுதா * அமுது செய்திட்ட
    மாயன் ** வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் * எவ் உயிர்க்கும்
    தாயோன் * தம்மான் என் அம்மான் * அம்மா மூர்த்தியைச் சார்ந்தே (9)
  • TVM 1.5.10
    2844 சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து * மாயப் பற்று அறுத்து *
    தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு * திருத்துவான் **
    ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி * அகலம் கீழ் மேல் அளவு இறந்து *
    நேர்ந்த உருவாய் அருவாகும் * இவற்றின் உயிராம் நெடுமாலே !(10)
  • TVM 1.5.11
    2845 ## மாலே ! மாயப் பெருமானே ! * மா மாயனே ! என்று என்று *
    மாலே ஏறி மால் அருளால் * மன்னு குருகூர்ச் சடகோபன் **
    பால் ஏய் தமிழர் இசைகாரர் * பத்தர் பரவும் ஆயிரத்தின்
    பாலே * பட்ட இவை பத்தும் * வல்லார்க்கு இல்லை பரிவதே (11)