Chapter 4

Āsritha aparādha sahathvam (tolerating the defects of the ones who approach Him) - (அஞ் சிறைய)

தலைமகள் தூதுவிடல்
Nammāzhvār is also known as parānkusan, meaning the one who controls the mighty elephant. There are times when Āzhvār's hymns on Sriman Narayanan takes a female personification (bhavam); Āzhvār is then called parānkusa nāyaki. In these hymns, Āzhvār as parānkusa nāyaki, sends a stork/crane, bees and birds as messengers to emperumān. The birds and the + Read more
நம்மாழ்வாருக்குப் பராங்குசன் என்றும் பெயர். இவர் தலைவியாய் இருந்து பாடும்போது பராங்குச நாயகி என்று இவரைக் கூறுவார்கள். எம்பெருமானாகிற தலைவனைக் குறித்து, நாரை, வண்டு, பூவை முதலியவற்றைத் தூது விடுகிறார். ஞான அனுட்டானங்களைக் கொண்ட ஆசாரியர்களையே பறவைகளாகக் கொள்ள வேண்டும். எம்பெருமானை + Read more
Verses: 2824 to 2834
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will have the good fortune of going to heaven and joining the gods
  • TVM 1.4.1
    2824 ## அம்(ஞ்) சிறைய மட நாராய் * அளியத்தாய் * நீயும் நின்
    அம்(ஞ்) சிறைய சேவலுமாய் * ஆஆ என்று எனக்கு அருளி **
    வெம்(ஞ்) சிறைப் புள் உயர்த்தார்க்கு * என் விடு தூதாய்ச் சென்றக்கால் *
    வன் சிறையில் அவன் வைக்கில் * வைப்புண்டால் என் செய்யுமோ? (1)
  • TVM 1.4.2
    2825 என் செய்ய தாமரைக்கண் * பெருமானார்க்கு என் தூதாய் *
    என் செய்யும் உரைத்தக்கால்? * இனக் குயில்காள் நீர் அலிரே? **
    முன் செய்த முழுவினையால் * திருவடிக்கீழ்க் குற்றேவல் *
    முன் செய்ய முயலாதேன் * அகல்வதுவோ? விதியினமே (2)
  • TVM 1.4.3
    2826 விதியினால் பெடை மணக்கும் * மென்நடைய அன்னங்காள் *
    மதியினால் குறள் மாணாய் * உலகு இரந்த கள்வர்க்கு **
    மதியிலேன் வல் வினையே * மாளாதோ? என்று * ஒருத்தி
    மதி எல்லாம் உள் கலங்கி * மயங்குமால் என்னீரே (3)
  • TVM 1.4.4
    2827 என் நீர்மை கண்டு இரங்கி * இது தகாது என்னாத
    என் நீல முகில் வண்ணற்கு * என் சொல்லி யான் சொல்லுகேனோ? **
    நன் நீர்மை இனி * அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
    நன் நீல மகன்றில்காள் * நல்குதிரோ? நல்கீரோ? (4)
  • TVM 1.4.5
    2828 நல்கித் தான் காத்து அளிக்கும் * பொழில் ஏழும் வினையேற்கே
    நல்கத் தான் ஆகாதோ? * நாரணனைக் கண்டக்கால் **
    மல்கு நீர்ப் புனல் படப்பை * இரை தேர் வண் சிறு குருகே! *
    மல்கு நீர்க் கண்ணேற்கு * ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5)
  • TVM 1.4.6
    2829 அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
    அருள் ஆழிப் புட்கடவீர் * அவர் வீதி ஒருநாள் என்று **
    அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி
    அருள் ஆழி வரி வண்டே * யாமும் என் பிழைத்தோமே? (6)
  • TVM 1.4.7
    2830 என்பு இழை கோப்பது போலப் * பனிவாடை யீர்கின்ற *
    என் பிழையே நினைந்தருளி * அருளாத திருமாலார்க்கு **
    என் பிழைத்தாள் திருவடியின் * தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் *
    என்பிழைக்கும்? இளங் கிளியே ! * யான் வளர்த்த நீ அலையே? (7)
  • TVM 1.4.8
    2831 நீ அலையே? சிறு பூவாய் * நெடுமாலார்க்கு என் தூதாய்
    நோய் எனது நுவல் என்ன * நுவலாதே இருந்தொழிந்தாய் **
    சாயலொடு மணிமாமை * தளர்ந்தேன் நான் * இனி உனது
    வாய் அலகில் இன் அடிசில் * வைப்பாரை நாடாயே (8)
  • TVM 1.4.9
    2832 நாடாத மலர் நாடி * நாள்தோறும் நாரணன் தன்
    வாடாத மலர் அடிக்கீழ் * வைக்கவே வகுக்கின்று **
    வீடாடி வீற்றிருத்தல் * வினை அற்றது என் செய்வதோ? *
    ஊடாடு பனி வாடாய் * உரைத்து ஈராய் எனது உடலே (9)
  • TVM 1.4.10
    2833 உடல் ஆழிப் பிறப்பு வீடு * உயிர் முதலா முற்றுமாய் *
    கடல் ஆழி நீர் தோற்றி * அதனுள்ளே கண்வளரும் **
    அடல் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி *
    விடல் ஆழி மட நெஞ்சே * வினையோம் ஒன்றாம் அளவே (10)
  • TVM 1.4.11
    2834 ## அளவு இயன்ற ஏழ் உலகத்து அவர் * பெருமான் கண்ணனை *
    வள வயல் சூழ் வண் குருகூர்ச் * சடகோபன் வாய்ந்து உரைத்த **
    அளவு இயன்ற அந்தாதி * ஆயிரத்துள் இப் பத்தின் *
    வள உரையால் பெறலாகும் * வான் ஓங்கு பெரு வளமே (11)