Nāchiyār Koil

1499 கொழுங்கயலாய்நெடுவெள்ளங்கொண்டகாலம்
குலவரையின்மீதோடி அண்டத்தப்பால் *
எழுந்துஇனிதுவிளையாடும்ஈசன்எந்தை
இணையடிக்கீழ்இனிதிருப்பீர்! இனவண்டாலும் *
உழும்செறுவில்மணிகொணர்ந்துகரைமேல்சிந்தி
உலகெல்லாம்சந்தனமும்அகிலும்கொள்ள *
செழும்பொன்னிவளங்கொடுக்கும்சோழன்சேர்ந்த
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
1502 அன்றுலகமூன்றினையும்அளந்து வேறோர்
அரியுருவாய்இரணியனதாகம்கீண்டு *
வென்றவனைவிண்ணுலகில்செலவுய்த்தாற்கு
விருந்தாவீர்! மேலெழுந்து விலங்கல்பாய்ந்து *
பொன்சிதறிமணிகொணர்ந்துகரைமேல்சிந்திப்
புலம்பரந்துநிலம்பரக்கும்பொன்னிநாடன் *
தென்தமிழன்வடபுலக்கோன்சோழன்சேர்ந்த
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
1505 முருக்கிலங்குகனித்துவர்வாய்ப்பின்னைகேள்வன்
மன்னெல்லாம்முன்னவியச்சென்று * வென்றிச்
செருக்களத்துத்திறலழியச்செற்றவேந்தன்
சிரந்துணிந்தான்திருவடிநும்சென்னிவைப்பீர்! *
இருக்கிலங்குதிருமொழிவாயெண்தோளீசற்கு
எழில்மாடம்எழுபதுசெய்துஉலகமாண்ட *
திருக்குலத்துவளச்சோழன்சேர்ந்தகோயில்
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
1507 செம்மொழிவாய்நால்வேதவாணர்வாழும்
திருநறையூர்மணிமாடச்செங்கண்மாலை *
பொய்ம்மொழியொன்றில்லாதமெய்ம்மையாளன்
புலமங்கைக்குலவேந்தன், புலமையார்ந்த *
அம்மொழிவாய்க்கலிகன்றிஇன்பப்பாடல்
பாடுவார், வியனுலகில்நமனார்பாடி *
வெம்மொழிகேட்டுஅஞ்சாதேமெய்ம்மைசொல்லில்
விண்ணவர்க்குவிருந்தாகும்பெருந்தக்கோரே. (2)
2067 கன்றுமேய்த்துஇனிதுகந்தகாளாய்! என்றும் *
கடிபொழில்சூழ்கணபுரத்துஎன்கனியே! என்றும் *
மன்றமரக்கூத்தாடிமகிழ்ந்தாய்! என்றும் *
வடதிருவேங்கடம்மேயமைந்தா! என்றும் *
வென்றசுரர்குலங்களைந்தவேந்தே! என்றும் *
விரிபொழில்சூழ்திருநறையூர்நின்றாய்! என்றும் *
துன்றுகுழல்கருநிறத்தென்துணையே! என்றும்
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே. (2)